-
யாழ் இணயத்தின் லோகோ(LOGO) சின்னம்
இணையத்தளங்கள் உருவாக்கும்போது ஒரு பொதுவான நடைமுறை என்னவென்றால் ஒரு பயனாளர் ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தின் உள்ளே எங்கிருந்தாலும் அதன் தலைப்பில் உள்ள லோகோவில்(logo) சொடுக்கும்போது மீண்டும் அதே இணையத்தளத்தின் முகப் பக்கத்திற்கு செல்வதுதான் . இதை Express way to home அல்லது Clickable logo linking to home page என்று அழைப்பார்கள். பாதை மாறி போகும் பயனாளர் ஒருவர் ஒரே கிளிக்கில் இணையத்தளத்தின் முகப்பைச் சென்றடையும் இந்தப் பயன்பாடு யாழ் இணயத்தில் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. இங்கே ஒவ்வொரு முறையும் முகப்பு பக்கத்தைக் கடந்து உள்ளே சென்றபின் யாழ் லோகோவில் கிளிக் செய்யும்போது மீண்டும் முகப்புப் பக்கத்துக்குச் (front page / first page / Landing page) செல்லாமல் யாழ் இணையத்தின் உப பக்கங்களின் தலைப்பு விபரங்கள் அடங்கிய பட்டியலுள்ள forum3 என்று குறியிடப்பட்டுள்ள ஒரு பக்கத்திற்கே செல்கிறது.
-
ஹோர்மஸ் நீரிணை: சீன எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி
ஈரானின் கடற்படை கப்பல் மூழ்கியபோது அதிலிருந்த சிலரை காப்பாற்றிய ஶ்ரீ லங்காவையும் நன்றியுணர்வுடன் இந்த பட்டியலில் சேர்த்துக்கொள்ளும்படி ஈரானின் புதிய ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
இந்த இடத்தில தான் கிளைமாக்ஸ் வருது.
-
டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை!
அல்பிரேட் நோபல் தனது சொந்த விருப்படி எழுதிவைத்த மரண சாசனத்தில் சொல்லப்பட்ட பரிசுகள் 5 (Physics, Chemistry, Physiology or Medicine, Literature, Peace) ஆனால் பின்நாளில் வந்தது அல்பிரேட் நோபல் நினைவுப்பரிசு எனப்படும் பொருளாதார(Economic Sciences) பரிசு. இதையும் நோபல் கமிட்டியே பொறுப்பேற்று வழங்குகிறது ஆனால் அதற்கான செலவை சுவீடன் நாட்டின் மத்திய வங்கி ஏற்றுக் கொள்கிறது. ஏனைய 5 பரிசுகளுக்கான செலவுகளுக்கு மறைந்த நோபலின் சொத்துக்களால் கிடைக்கும் வருமானம் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்துக்கான பரிசை நோபலின் நினைவுப்பரிசாக அவரின் உண்மையான 5 மரண சாசன பரிசுகளுடன் இணைத்துக்கொண்டதற்கு நோபலின் சந்ததியினர் கடும் விசனம் தெரிவித்து அதை மத்திய வங்கியின் ஒரு விளம்பர உத்தி என தமது அதிருப்தியை வெளியிட்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
-
தகுமோ… இது முறையோ! - கிரீன்லாந்து விவகாரம்
இந்த போர்மூலாவின்படி பார்த்தால் உலக ஒழுங்கு பிழைத்துவிடும்.
-
தகுமோ… இது முறையோ! - கிரீன்லாந்து விவகாரம்
கிரீன்லாந்தை டென்மார்க் நேரடியாக தனது காலனி ஆதிக்கத்துக்குள் வலிந்து கொண்டுவரவில்லை. நோர்வேயிலிருந்து புறப்பட்டு ஐஸ்லாந்து வழியாக சென்ற எரிக் ரௌட என்ற வீக்கிங் கொள்ளைக்காரத் தலைவன் 980-ஆண்டளவில் வேறும் பல நோர்வே குடியேறிகளுடன் கிரின்லாந்து நாட்டை முதன்முதலாக சென்றடைந்து ஆக்கிரமிப்பு செய்தான். அதற்கு முன்னர் அந்த நாட்டில் பூர்வீககுடிமக்களாக எஸ்கிமோவர்கள் என்று இன்று அழைக்கப்படும் இனுட் இனத்தை சேர்ந்த ஆதிவாசிகளே காணப்பட்டார்கள். சில நுற்றாண்டளவில் இஸ்கண்டிநேவியன் நாடுகள் தமக்குள் ஒப்பந்தங்கள் செய்து ஒரு டேனிஷ் நாட்டு அரசனின் தலைமையில் இணைந்தன. அந்த காலகட்டத்தில் நோர்வே நாட்டின் வீக்கிங் கொள்ளைகாரர்கள் Greenland, Iceland, Faroe island, Hebrides, Isle of Man, Orkney, Shetland ஆகிய பிரதேசங்களை படிப்படியாக கையகப்படுத்திவர அவற்றை நோர்வே நாடும் பல்வேறு காலங்களில் காலனிகளாக வைத்திருந்தது. ஐக்கிய நாடாக மாறிய டென்மார்க், நோர்வே மற்றும் சுவிடன் சில நூற்றாண்டுகள் (1536-1814) அதை நீடித்து பின் முரண்பட்டு சுவீடனும் நோர்வேயும் கூட்டாக பிரிந்தன. அப்போது டென்மார்க் நோர்வேக்கு சொந்தமான காலனிகள் சிலவற்றை பிரிந்து செல்லும் நோர்வே நாட்டுக்கே திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்தும் தனது கைவசமே வைத்துக்கொண்டது. டென்மார்க்குக்கு அப்படி கிடைத்ததுதான் கிரீன்லாந்து. இப்படி காலனியாக உள்வாங்கப்பட்ட கிரீன்லாந்து படிப்படியாக டென்மார்க்கின் முடியரசுக்கு கீழ் உள்ள ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய ஒரு சுயாதீன பிரதேசமாகவும் பின்னர் படிப்படியாக மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்பட்ட சுயாட்சியுள்ள டேனிஷ் முடியுரிமை கொண்ட நாடாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. இன்று நோர்வே நாட்டு மன்னரின் முடியாட்சிக்கு உட்பட்டு வடதுருவம் தொடக்கம் தென்துருவம் வரை அமைந்துள்ள Svalbard, Jan Mayen, Bouvet Island, Bouvet Island, Peter I Island, Queen Maud Land(South pole) ஆகிய பிரதேசங்கள் உள்ளன.
-
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
டக்கி ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துவிட்டார் என்று நம்பவைத்து பாதாள சாக்கடையில் குதித்துவிட்டார் என்பதுதான் உண்மை. அரசியலில் இருந்தபோது எஜமானர்களின் ஏவல்நாயாகவும் சேவை செய்து தனக்காகவும் சிங்கள எஜமானருக்காகவும் அரங்கேற்றிய அராஜகங்களிலும் கொலை கடத்தல்கலிலும் சுமார் 60% வீதமான வேலையை பாதாள மாபியாக்களை வைத்தே முடித்துக்கொண்டார்.
-
ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை மரபணு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?
DNA மூலம் ஒருவருக்கு யூத பின்னணி இருக்கிறதா என்பதை உறுதியாக அடையாளம் காண முடியாது. ஏனெனில் யூத மதம் என்பது ஒரு மதம் மற்றும் கலாச்சார அடையாளம் ஒரு மரபணு பண்பு அல்ல.
-
யாழ் . மாநகர சபையின் சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது
யாழ் மா நகரசபைக்குள் ஒரு கறுப்பாடு இல்லாமல் சபையின் பதிவேடுகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்க முடியாது. அது போக சிவஞானம் அவர்கள் உண்மையில் நடந்தது என்ன என்பதை விளக்கி இந்த விடயத்தில் தான் அறிந்தவற்றை தெட்ட தெளிவாக பொதுவெளியில் சொல்லவேண்டும். ஆதனத்தின் விலாசம், அந்த இடத்தில் இப்போது இருக்கும் வியாபார இஸ்தாபனத்தின் பெயர், கட்டிடத்தை கொள்வனவுசெய்த காலத்தில் நகரசபையில் யார் யார் பொறுப்பில் இருந்தார்கள் என்ற விபரம் துல்லியமாக குறிப்பிட வேண்டும். அதை விடுத்து கிழக்கு மேற்கு என்று குறிப்பிடுவது வேலைக்கு ஆகாது.
-
அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு
எதிரி நாட்டின் எல்லையில் ஒன்று அல்லது பல நட்பு நாடுகள் இருந்தால் எதிரியை அணு ஆயுதம் கொண்டு தாக்குவது சாத்தியமா என்பதும் சிந்திக்கவேண்டிய ஒரு விடயம். முந்திகொண்டால் ஓரளவுக்கு எதிரியை வெல்லலாம் ஆனாலும் மொத்தத்தில் சிக்கல்தான். எதிர்காலத்தில் அணு ஆயுத போர் வந்தால் அதில் பாதிக்கப்படுவோர் பலர் அந்த போரில் சம்பந்தப்படாத நாடுகளை சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். உலகின் மொத்த அணு ஆயுத கையிருப்பு அனைத்தும் பயன்படுத்தப்பட்டால் நாடுகளை மட்டுமல்ல இந்த உலகத்தையும் சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களையும் கூட அழிக்கலாம்.
-
வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!
திரும்பவும் கற்காலத்துக்கே போறமா? கடைகாரர்களுக்கு சாப்பாட்டுக் கோப்பையை ஒழுங்கா சுத்தமா கழுவி பயன்படுத்தணும் என்று அறிவுறுத்தலுடன் அதை செய்ய கற்றுகுடுங்கப்பா. வாழை இலையை அறுத்து எடுத்துவந்து சுத்தம் பண்ணும் செலவுக்கு ஒரு சாப்பாட்டுக் கோப்பையை சுகாதராமான முறையில் இலகுவாக சுத்தம்பண்ணி மீண்டும் பயன்படுத்தலாம். இந்த லஞ்ச் சீற் ஒரே கோப்பையை திரும்ப திரும்ப பலர் பாவிக்கும் போது சுகாதார பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவதாக எண்ணுகிறேன். நான் படித்த காலத்தில் வாழை இலையைப் பயன்படுத்தி சாப்பிட்டதாக ஞாபகம்.
-
பொலிஸுக்குள் நுழைந்த திருடர்கள்; கொழும்பில் சம்பவம்!
அண்ணே நல்லா தேடி பாருங்க. ஏதாவது கோப்பு புத்தகங்கள், அத்தாட்சி கடிதங்கள், புலனாய்வு குறிப்புகள் மற்றும் குற்றவியல் தடையங்களைத்தான் இந்த கள்வர்கள் எடுத்து சென்றிருப்பார்கள். ராசபக்சாக்கள், பாதல் உலக கோஸ்டிகள் இப்படி செய்திகளில் போய்க்கிட்டு இருக்கிற இந்த நேரத்தில மின்சார கம்பியை திருட என்று திருடன் போலிஸ் நிலையத்தில், அதுவும் போலிஸ் மா அதிபரின் காரியாலத்தில் கதைவை உடைத்து ஒருபோதும் நுழைய மாட்டான்.
-
சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாமியர்களா, மூர்களா, சுன்னியா அல்லது சியா இனத்தவர்களா. அரேபிய குடியேறிகளின் வழித்தோன்றலா, தமிழரா அல்லது சிங்களவர்களா? இல்லை இந்திய கண்டத்திலிருந்து வந்த குடியேறிகளா? இவர்கள் தனி தனியான தமக்குள் ஒன்றுசேரமுடியாத குழுக்கள் என்றால் எப்படி ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்வது? எப்படி இவர்களை அடையாளப்படுத்துவது?
-
தமிழீழத்தில் பாவிக்கப்பட்ட கொடிகளும் அவற்றின் வரலாறுகளும் | ஆவணம்
பல நாடுகள் தமது கொடிகளில் வாள், ஈட்டி, கோடரி, கேடயம் மற்றும் சூலம் போன்ற பழங்காலத்து ஆயுதங்களை கொண்டிருந்தாலும் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள மொசாம்பிக் நாடு மட்டுமே உலகத்திலேயே தனது தேசியக்கொடியில் துப்பாக்கியின் படத்தை பயன்படுத்தி அமைத்துள்ளது. தமிழ் ஈழத்தின் புலிகொடி ஒரு விடுதலை இயக்கத்தின் அடையாளக்கொடி. காலப்போக்கில் அதுவே தேசியக்கொடியாக மாற்றப்பட்டது குறித்தும் அக்கொடி எதிர்கால நடைமுறைகளுக்கு சாத்தியப்படுமா என்பதிலும் பல சாராரால் சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்பட்டது. தமிழீழக் கொடி ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் கொடியாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் கொடி முன்மொழியப்பட்ட தமிழீழ அரசின் விருப்பத்தின் அடையாளமாகவும், பிற நாடுகளில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோரால் பரவலாகப் பயன்படுத்தப்படும் அதே வேளையில், அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசைஅன்றி, அரசியல் இலக்கைக்கை மட்டுமே குறிக்கிறது. இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படாததற்கான காரணம்: தமிழ் ஈழம் ஒரு இறையாண்மை கொண்ட அரசு இல்லை தமிழ் ஈழம் ஒரு இயற்பியல் அரசாக இல்லை, மேலும் அந்தக் கொடி அதற்கான அரசியல் விருப்பத்தை மட்டுமே குறிக்கிறது. அது ஒரு அரசியல் இயக்கத்தின் சின்னம். கொடி என்பது உலகளவில் தமிழர்களுக்கான கலாச்சார மற்றும் அடையாள சின்னமாகும், இது பெரும்பாலும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் அரசியல் பேரணிகளில் காட்டப்படும், ஆனால் அது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கொடியின் அந்தஸ்தைப் பெறவில்லை. கொடி 1990 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்மொழியப்பட்ட அரசின் தேசியக் கொடியாக நியமிக்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளால் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது, இது அதன் பரந்த சர்வதேச ஏற்றுக்கொள்ளலை சிக்கலாக்குகிறது. சுருக்கமாக, தமிழீழக் கொடி புலம்பெயர்ந்தோருக்கு ஒரு குறிப்பிடத்தக்க சின்னமாகவும் அவர்களின் அரசியல் அபிலாஷைகளின் காட்சி பிரதிநிதித்துவமாகவும் உள்ளது, ஆனால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசின் கொடியாக அதற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை.
-
வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்!
நாட்டின் புராதன சைவ சமய சின்னங்களை பராமரிக்கவும் அதில் புனரமைப்பு கட்டுமானம் என்பவற்றை மேற்கொள்ளவும் உரிய முறையில் அரச மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதிகளை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் பணிகள் நடைபெற என் வாழ்த்துக்கள்.