Everything posted by vanangaamudi
-
ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை மரபணு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?
DNA மூலம் ஒருவருக்கு யூத பின்னணி இருக்கிறதா என்பதை உறுதியாக அடையாளம் காண முடியாது. ஏனெனில் யூத மதம் என்பது ஒரு மதம் மற்றும் கலாச்சார அடையாளம் ஒரு மரபணு பண்பு அல்ல.
-
யாழ் . மாநகர சபையின் சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது
யாழ் மா நகரசபைக்குள் ஒரு கறுப்பாடு இல்லாமல் சபையின் பதிவேடுகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்க முடியாது. அது போக சிவஞானம் அவர்கள் உண்மையில் நடந்தது என்ன என்பதை விளக்கி இந்த விடயத்தில் தான் அறிந்தவற்றை தெட்ட தெளிவாக பொதுவெளியில் சொல்லவேண்டும். ஆதனத்தின் விலாசம், அந்த இடத்தில் இப்போது இருக்கும் வியாபார இஸ்தாபனத்தின் பெயர், கட்டிடத்தை கொள்வனவுசெய்த காலத்தில் நகரசபையில் யார் யார் பொறுப்பில் இருந்தார்கள் என்ற விபரம் துல்லியமாக குறிப்பிட வேண்டும். அதை விடுத்து கிழக்கு மேற்கு என்று குறிப்பிடுவது வேலைக்கு ஆகாது.
-
அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு
எதிரி நாட்டின் எல்லையில் ஒன்று அல்லது பல நட்பு நாடுகள் இருந்தால் எதிரியை அணு ஆயுதம் கொண்டு தாக்குவது சாத்தியமா என்பதும் சிந்திக்கவேண்டிய ஒரு விடயம். முந்திகொண்டால் ஓரளவுக்கு எதிரியை வெல்லலாம் ஆனாலும் மொத்தத்தில் சிக்கல்தான். எதிர்காலத்தில் அணு ஆயுத போர் வந்தால் அதில் பாதிக்கப்படுவோர் பலர் அந்த போரில் சம்பந்தப்படாத நாடுகளை சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். உலகின் மொத்த அணு ஆயுத கையிருப்பு அனைத்தும் பயன்படுத்தப்பட்டால் நாடுகளை மட்டுமல்ல இந்த உலகத்தையும் சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களையும் கூட அழிக்கலாம்.
-
வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!
திரும்பவும் கற்காலத்துக்கே போறமா? கடைகாரர்களுக்கு சாப்பாட்டுக் கோப்பையை ஒழுங்கா சுத்தமா கழுவி பயன்படுத்தணும் என்று அறிவுறுத்தலுடன் அதை செய்ய கற்றுகுடுங்கப்பா. வாழை இலையை அறுத்து எடுத்துவந்து சுத்தம் பண்ணும் செலவுக்கு ஒரு சாப்பாட்டுக் கோப்பையை சுகாதராமான முறையில் இலகுவாக சுத்தம்பண்ணி மீண்டும் பயன்படுத்தலாம். இந்த லஞ்ச் சீற் ஒரே கோப்பையை திரும்ப திரும்ப பலர் பாவிக்கும் போது சுகாதார பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவதாக எண்ணுகிறேன். நான் படித்த காலத்தில் வாழை இலையைப் பயன்படுத்தி சாப்பிட்டதாக ஞாபகம்.
-
பொலிஸுக்குள் நுழைந்த திருடர்கள்; கொழும்பில் சம்பவம்!
அண்ணே நல்லா தேடி பாருங்க. ஏதாவது கோப்பு புத்தகங்கள், அத்தாட்சி கடிதங்கள், புலனாய்வு குறிப்புகள் மற்றும் குற்றவியல் தடையங்களைத்தான் இந்த கள்வர்கள் எடுத்து சென்றிருப்பார்கள். ராசபக்சாக்கள், பாதல் உலக கோஸ்டிகள் இப்படி செய்திகளில் போய்க்கிட்டு இருக்கிற இந்த நேரத்தில மின்சார கம்பியை திருட என்று திருடன் போலிஸ் நிலையத்தில், அதுவும் போலிஸ் மா அதிபரின் காரியாலத்தில் கதைவை உடைத்து ஒருபோதும் நுழைய மாட்டான்.
-
சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாமியர்களா, மூர்களா, சுன்னியா அல்லது சியா இனத்தவர்களா. அரேபிய குடியேறிகளின் வழித்தோன்றலா, தமிழரா அல்லது சிங்களவர்களா? இல்லை இந்திய கண்டத்திலிருந்து வந்த குடியேறிகளா? இவர்கள் தனி தனியான தமக்குள் ஒன்றுசேரமுடியாத குழுக்கள் என்றால் எப்படி ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்வது? எப்படி இவர்களை அடையாளப்படுத்துவது?
-
தமிழீழத்தில் பாவிக்கப்பட்ட கொடிகளும் அவற்றின் வரலாறுகளும் | ஆவணம்
பல நாடுகள் தமது கொடிகளில் வாள், ஈட்டி, கோடரி, கேடயம் மற்றும் சூலம் போன்ற பழங்காலத்து ஆயுதங்களை கொண்டிருந்தாலும் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள மொசாம்பிக் நாடு மட்டுமே உலகத்திலேயே தனது தேசியக்கொடியில் துப்பாக்கியின் படத்தை பயன்படுத்தி அமைத்துள்ளது. தமிழ் ஈழத்தின் புலிகொடி ஒரு விடுதலை இயக்கத்தின் அடையாளக்கொடி. காலப்போக்கில் அதுவே தேசியக்கொடியாக மாற்றப்பட்டது குறித்தும் அக்கொடி எதிர்கால நடைமுறைகளுக்கு சாத்தியப்படுமா என்பதிலும் பல சாராரால் சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்பட்டது. தமிழீழக் கொடி ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் கொடியாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் கொடி முன்மொழியப்பட்ட தமிழீழ அரசின் விருப்பத்தின் அடையாளமாகவும், பிற நாடுகளில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோரால் பரவலாகப் பயன்படுத்தப்படும் அதே வேளையில், அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசைஅன்றி, அரசியல் இலக்கைக்கை மட்டுமே குறிக்கிறது. இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படாததற்கான காரணம்: தமிழ் ஈழம் ஒரு இறையாண்மை கொண்ட அரசு இல்லை தமிழ் ஈழம் ஒரு இயற்பியல் அரசாக இல்லை, மேலும் அந்தக் கொடி அதற்கான அரசியல் விருப்பத்தை மட்டுமே குறிக்கிறது. அது ஒரு அரசியல் இயக்கத்தின் சின்னம். கொடி என்பது உலகளவில் தமிழர்களுக்கான கலாச்சார மற்றும் அடையாள சின்னமாகும், இது பெரும்பாலும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் அரசியல் பேரணிகளில் காட்டப்படும், ஆனால் அது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கொடியின் அந்தஸ்தைப் பெறவில்லை. கொடி 1990 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்மொழியப்பட்ட அரசின் தேசியக் கொடியாக நியமிக்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளால் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது, இது அதன் பரந்த சர்வதேச ஏற்றுக்கொள்ளலை சிக்கலாக்குகிறது. சுருக்கமாக, தமிழீழக் கொடி புலம்பெயர்ந்தோருக்கு ஒரு குறிப்பிடத்தக்க சின்னமாகவும் அவர்களின் அரசியல் அபிலாஷைகளின் காட்சி பிரதிநிதித்துவமாகவும் உள்ளது, ஆனால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசின் கொடியாக அதற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை.
-
வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்!
நாட்டின் புராதன சைவ சமய சின்னங்களை பராமரிக்கவும் அதில் புனரமைப்பு கட்டுமானம் என்பவற்றை மேற்கொள்ளவும் உரிய முறையில் அரச மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதிகளை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் பணிகள் நடைபெற என் வாழ்த்துக்கள்.
-
இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள்.... விபத்துக்கு உள்ளாகுவது ஏன்.
அனைவருக்கும் புரியும்படியாக இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது. இந்திய கார்களுக்கு மட்டுமல்ல அனைத்து சிறிய மலிவான வாகனங்களுக்கும் இது பொருந்தும். ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில் வாகன உற்பத்தியாளர்கள் புதிய கார்களை உருவாக்கும்போது அவற்றின் வடிவமைப்பில் aerodynamics (காற்றியக்கவியல்) என்னென்ன தாக்கங்களை உருவாக்கும் என்பதை பல்வேறு கட்டங்களாக ஆய்வுகூடங்களில் வைத்து பரிசோதித்து பார்த்தபின் உரிய மாற்றங்களை செய்வார்கள். இந்திய தயாரிப்புகளில் இந்த பரிசோதனைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு நம்பிக்கையான சான்றுகள் உண்டா என்பது தெரியவில்லை. காற்றியக்கவியலுக்கு இசைவாக வடிவமைக்காப்படாத வாகனங்கள்வேகமாக செலுத்தப்படும்போது அதை ஒரு விமானம் ஓடுபாதையில் ஓடி வேகமெடுத்து தரையைவிட்டு உயர்ந்து கிளம்ப தயாராவதை ஒப்பிடலாம். வேகமாக செலுத்தப்படும் மேற்சொன்ன வாகனங்களின் சக்கரங்கள் காற்றியக்கவியல் காரணமாக படிப்படியாக உயர்த்தப்பட்டு தரையில் முட்டாமல் அந்தரத்தில் செல்லவேண்டி ஏற்படலாம். இதனால் வேகமாக செல்லும் இந்த வாகனங்களில் உள்ள பிரேக் இயங்காமல்போக வாகனம் விபத்துக்குள்ளாவதையும் சாரதியால் தவிர்க்கமுடியாமல் போகலாம். வாகனங்களில் உள்ள பிரேக் சிறப்பாக இயங்குவதற்கு சில்லுகள் எப்போதும் தரையை இறுக்கமாக தொட்டு நிற்கவேண்டியது அவசியம்.
-
நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறம் முருகனுக்கு வந்தமைந்த வரலாறு.
செய்தியில் தெளிவில்லை, இங்கு சொல்ல வந்தது இலண்டன் அருங்காட்சியகமா (London museum) அல்லது இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமா(British museum)
-
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
வைத்தியர் சுதர்சன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது உறவினர் நண்பர்கள் பயனாளிகள் அனவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். வைத்தியர் சுதர்சன் பல காலம் இலைமறை காயாய் இருந்து சேவை செய்துள்ளார் போல் தெரிகிறது. எமது கலச்சாரத்தில் மனிதர்களை வாழும்போதே போற்றுவதற்கு பழக்கப்பட்டவர்களுமில்லை. இப்படி எத்தனை நல்ல மனிதர்கள் எங்கள் சமூகத்தில் இன்னும் எமது இனத்துக்காக சேவைசெய்கிறார்களோ தெரியவில்லை.
-
பத்தோடு பதினோன்றாக மாறிய இலங்கை விவகாரம்.
முழு அறிக்கை
-
சிறீதரன் எம். பி. சட்டவிரோத சொத்து குவிப்பு குற்றச்சாட்டு - பெரிய தலைகள் தோற்றுப்போகும் நிலை
ஶ்ரீதரன் தனதும் தனது மனைவியினதும் சொத்து/வருமான விபரத்தை 3 ஆண்டுகள் மட்டும் சமர்ப்பித்துள்ளார். அதில் கடைசியாக வழங்கப்பட்ட அறிக்கையில் 31 மார்ச் 2024 திகதி வரைக்கும் உள்ள விபரங்கள் அரைகுறையாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் இரண்டாம் பகுதி (Part B) யில் எந்த ஒரு கேள்விக்கும் பதில் வழங்கப்படவில்லை. பினாமிகள் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் முதலீடுகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலாக "None" என்று பதிலளித்துவிட்டு அல்லது வெறும் கோடுகளை மட்டும் போட்டுவிட்டு கடந்து சென்றுள்ளார். இங்கே கதைகள் அடிபடுவது போல வைன்ஷொப் அல்லது சுப்பர் மார்க்கெட் பற்றிய விபரம் எதுவும் அங்கு கொடுக்கப்படவில்லை. இலங்கையில் 4 இடங்களில் காணி/வீடு மற்றும் ஒரு விவசாய நிலம் என்பவற்றுடன் வங்கிகளிலும் தனியாரிடமும் பெற்று நிலுவையில் உள்ள கடன் தொகை மட்டும் ஏறக்குறைய 45 மில்லியன் ரூபாய்கள். கணவன் மனைவி இருவரினதும் மொத்த மாதவருமானம் சுமார் 5 இலட்சம் ரூபாய்கள்.
-
மன்னார் கடற்கரையில் ஒதுங்கும் பிளாஸ்டிக் தூவல்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்
மே 25 ஆம் தேதி இந்தியாவின் கேரள கடற்கரையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் MSC ELSA 3 என்ற கொள்கலன் கப்பல் மூழ்கியது. அந்தக் கப்பல் அபாயகரமான பொருட்கள் மற்றும் கப்பல் எந்திர டீசல் எரிபொருள் உட்பட 640 கொள்கலன்களை ஏற்றிச் சென்றது, மேலும் அதன் பாலாஸ்ட் அமைப்பின் செயலிழப்பே இதற்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடல் நீரில் கசிந்த எரிபொருள் மற்றும் ஆபத்தான சரக்குகளால் ஏற்படும் மாசுபாடு காரணமாக இந்த மூழ்குதல் பெரும் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் விவரங்கள்: கப்பல்: MSC ELSA 3, 28 ஆண்டுகள் பழமையான கொள்கலன் கப்பல். இடம்: கேரள கடற்கரையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் மூழ்கியது. சரக்கு: அபாயகரமான பொருட்களுடன் கூடிய 13 கொள்கலன்கள் மற்றும் கால்சியம் கார்பைடு கொண்ட 12 கொள்கலன்கள் உட்பட 640 கொள்கலன்கள். காரணம்: பாலாஸ்ட் அமைப்பின் செயலிழப்பு சந்தேகிக்கப்படுகிறது. விளைவுகள்: பிளாஸ்டிக் துகள்கள் (நுர்டில்ஸ்) உள்ளிட்ட கொள்கலன்கள் மற்றும் குப்பைகள் கேரள கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. கப்பல் முழ்கிய கடற்பிரதேசத்தில் எண்ணெய் படலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தான பொருட்களின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக கேரள அரசு அவசரகால நிலையை அறிவித்து, கரையில் கரையொதுங்கும் கொள்கலன்களைத் தவிர்க்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படை மீட்பு மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. MSC மற்றும் கப்பல் பணியாளர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு: சிந்தப்பட்ட எரிபொருள், பிளாஸ்டிக் மற்றும் அபாயகரமான பொருட்களால் நீண்டகால சுற்றுச்சூழல் சேதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கவலைக்குரிய விடயம். பொது சுகாதாரம்: கால்சியம் கார்பைடு போன்ற அபாயகரமான பொருட்களின் இருப்பு, அவற்றுடன் தொடர்பு கொள்ளக்கூடிய மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. சுத்தம் செய்தல்: குப்பைகள் மற்றும் மாசுபடுத்திகளை சுத்தம் செய்வது ஒரு சவாலான பணியாகும், குறிப்பாக நீரோட்டங்களால் மேலும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும் தகவல்: இந்த சம்பவம் இந்தியாவில் குறிப்பிடத்தக்க ஊடக கவனத்தையும் பொதுமக்களின் கவலையையும் உருவாக்கியுள்ளது. இலங்கை கடற்கரைகளிலும் பரவலான மாசுபாட்டிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து Mongabay தெரிவித்துள்ளது. இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. https://news.mongabay.com/2025/06/twin-ship-disasters-in-india-threaten-widespread-pollution-on-sri-lankan-coasts/
-
அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து பிரிட்டன் கொண்டு செல்ல திட்டம் - பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர்
காசாவில் இஸ்ரேலின் தொடர் குண்டுதாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட அல்லது தற்காலிகமாக செயலிழந்திருக்கும் வைத்தியசாலைகளை மீண்டும் புனரமைத்து அல்லது அதற்குப்பதிலாக தற்காலிக வைத்திய முகாம்களை நிறுவி அதன் மூலம் காசாவில் உள்ள சிறுவர்களுக்கு வேண்டிய உடனடி வைத்திய சேவைகளை மேலை நாடுகள் வழங்க வேண்டும். அதை விடுத்து அங்குள்ள குழந்தைகளையும் சிறுவர்களையும் தங்கள் தங்கள் நாடுகளுக்கு அழைத்து சென்று மருத்துவ உதவி வழங்க முன்வருவது காசாவில் இருந்து பலஸ்தீனியர்களை முற்றாக வெளியேற்றவேண்டும் என்ற இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் நோக்கத்தை விரைந்து செயல்படுத்தும் திட்டத்துக்கு மறைமுகமாக முண்டு கொடுப்பதாகும். இப்படி பார்த்தால் காசாவில் உள்ள அனைத்து குழந்தைகளையும் தான் பிரிட்டனுக்கு கொண்டுசெல்லவேண்டிவரும். சிகிச்சை முடிந்தவுடன் அந்த குழந்தைகளை எங்கே கொண்டு சென்று விடுவார்கள். பிரிட்டனின் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இன்னும் சில மாதங்களில் காசா பிரதேசம் சன நடமாட்டம் அற்ற ஒரு நிலமாக மாறப்போவது உறுதி. குழந்தைகளை வெளியேற்றும்போது அவர்களுடன் அவர்களது தாய்மார்கள் அல்லது முழு குடும்பமோ கூட வெழியேறுவது தடுக்கமுடியாது. பாலஸ்தீன மக்களை கொன்றுகுவித்து அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையை சீரழிக்கும் போர் நடவடிக்கைகளை இருதரப்பும் முதலில் கைவிட வேண்டும். அதற்கு சர்வதேச நாடுகள் ஒற்றுமையுடன் முன்வந்து ஒரு தீர்வினை முன்வைத்து செயலாற்றவேண்டும்.
-
பிள்ளையானின் அலுவலகத்தில் கடும்சோதனை
செம்மணி ஆய்வுக்காக வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஜி.பி.ஆர் (Ground Penetrating Radar)என்ற நவீன கருவியை பிள்ளையானின் அலுவலக காணிக்குள்ளும் கொஞ்சம் ஓட்டிபார்த்தால் உண்மை தெரிந்துவிடும்.
-
தீர்மானத்தை மீறி நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
நல்லூர் திருவிழா முடிவடைந்ததும் செய்தியில் குறித்தபடி மணலை விற்பனை செய்துவிடாமல் எடுத்த இடத்தில் திரும்பவும் கொண்டுபோய் கொட்டிவிட்டால் இந்த மண் பிரச்சினை இப்போதைக்கு தற்காலிகமாக தீர்ந்துவிடும். ஆக மொத்தம் மணலை ஏற்றி இறக்கும் செலவை மட்டும் கோவில் ஏற்றுக்கொண்டால் நல்லது. மேலே குறிப்பிட்ட மண் அகழ்வுக்கான அனுமதியை வைத்திருக்கும் அம்பனில் உள்ள தனி நபர்தான் இங்கு ஏதோ சுத்துமாத்து செய்கிறார் போல் தெரிகிறது. கோவில் விவகாரங்களில் அனைவரும் வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றவேண்டும் என்றுதான் அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கமுடியும். இப்போது நடந்து முடிந்ததை விட்டு அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு தேவையான மண்ணை பெற்றுக்கொள்ள கோவில் நிர்வாகமும் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சபையும் இணைந்து சுமுகமான தீர்வொன்றை காணவேண்டியது மிக அவசியம்.
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
ATPL = Airline Transport Pilot Licence என்பதுதான் சரி என்று எண்ணுகிறேன். (Airline transport என்பது Air Transport இல் ஒரு பகுதியை மட்டும் குறிப்பது) ஆம் குறைந்தது 1500 மணித்தியாலங்கள்.
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
படத்துக்கு போஸ் கொடுக்கும்போது எதேச்சையாக பக்கத்தில் நின்ற சிறிய ரக விமானம் (Cessna 172N-Skyhawk) ஒன்றின் அருகில் நின்றுவிட்டார் போல் தெரிகிறது. அல்லது அது அவர் முன்னர் விமான ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் படித்தபோது எடுத்த பழைய படமாககூட இருக்கலாம். அதற்காக அதைத்தான் அவர் ஓட்டுவார் என்று கணிப்பது முற்றிலும் தவறு. அவர் பெற்ற விமானிகளுக்கான தகமை ATPL என்றால் அது பெரிய ரக பயணிகளுக்கான அதி உயர் தர விமான ஓட்டுனருக்கான காப்டன் மற்றும் முதல் விமானிக்குரிய தராதரம் என்பதில் என்ன சந்தேகம்?
-
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை
சென்னை ஆப்பலோ மருத்துவமனியில் எங்கள் முதல்வர் தங்கிஇருந்து சிகிச்சைபெறும் இடத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கமேராக்களையும் இயக்கநிலையில் வைக்கும்படி கேட்டுகொள்கிறேன்.
-
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
இராசாத்தி அம்மாள் பிறப்பு - 1945, கலைஞருடன் திருமணம் - 1966, கனிமொழி பிறப்பு - 1968 மு.க.முத்து பிறப்பு - 14.01.1948 ஆகவே சித்தியைவிட 2+ வருடங்கள் இளையவர்.
-
பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்
கழிவுப்பொருட்களை கொட்டும் இடத்தை எல்லையிட்டு அடைத்து உடனடியாக மூடவேண்டும். உள்ளே கழிவு கொட்டப்படும் இடங்கள் இன்னென்ன என்று வேறுபடுத்தி தரம்பிரிக்கப்பட்டு (மரப்பொருட்கள், பிளாஸ்டிக், இரசாயன பொருட்கள், சூழலைத் தாக்கும் கழிவுகள், பார உலோகங்கள், இயற்கை உரமாக உதவக்கூடிய கழிவுகள், வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள், உணவு கழிவுகள், இறந்த மிருகங்கள் இப்படி பல) குறியீடுகள் செய்தபின் அங்கு குப்பைகொட்ட வரும் வாகனங்கள் கட்டுபாடாக உள்ளே செல்லவும் வெளியேறவும் தனிப்பட்ட பாதை அமைக்கப்பட்டு காவலர் ஒருவரால் வண்டி இலக்கம், ஓட்டுனர் பெயர் போன்ற விபரங்கள் அனைத்தும் மா நகரசபை நியமிக்கும் காவலரால் பதிவுசெய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். கழிவுப் பொருள் கொட்டுவதற்கு கட்டணம் அறவிடலாம். கொட்டப்படும் கழிவுகளை மீள்சுழற்ச்சி செய்வது அல்லது அதை பாதுகாப்பான முறையில் அழிப்பதற்கான பொறுப்பு மாநகர சபையை சார்ந்தது. இதை மீறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். எமது அரசியல்வாதிகளை சந்திக்க வடக்கிற்கு வரும் வெளி நாட்டு பிரதிநிதிகளிடம் இந்த விடயம் கொண்டுசெல்லப்பட்டு உதவிக்கான வேண்டுகோள் விடுக்கப்படுவதும் நன்மை தரும். சூழலை பாதுகாக்கும் முற்சியாக இது போன்ற விடயங்களில் பல நாடுகள் முன்வந்து உதவ அதிக சந்தர்ப்பங்கள் உண்டு.
-
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!
ஈரானை அமெரிக்கா விமானங்களால் தாக்கும் நிலைமைக்கு இஸ்ரேல்-இரான் போர் விரிவடைந்தால் ஐரோப்பாவை தளமாக வைத்தே அந்த விமானங்கள் இயக்கப்படும். மாறாக அமெரிக்காவின் கட்டார் விமானத்தளம் பயன்படுத்தப்பட்டால் கட்டாரை இரான் பதிலுக்கு தாக்க முற்படும். இதனால் எண்ணை விநியோகம் தடைப்படுவதுடன் அமெரிக்காவின் இதர முஸ்லிம் கூட்டு நாடுகளும் இந்தப் போருக்குள் இழுத்து விடப்படும் அபாயம் உண்டு. போரை இரானுக்குள் மட்டும் நடத்தி அதை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு நாடுகளுக்கு பரவிவிடாமல் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதிலும் இஸ்ரேல் அமெரிக்க அணி ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
உள் நாட்டில் புகையிலை சாகுபடிக்கு போடப்பட்டுள்ள தடைக்கான முக்கிய காரணம் மக்களின் சுகாதார நலன் மீதுள்ள கரிசனை மட்டும் தான் என்று கொள்வது தவறு. பணப்பயிராக புகையிலை சாகுபடியில் விவசாய நிலங்களை பயன்படுத்தும்போது அத்தியாவசிய உணவுப்பயிர் உற்பத்தி செய்வதற்கான விவசாய நிலங்களுக்கு உள் நாட்டில் பற்றாக்குறை ஏற்படும். இதனால் உணவுத் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு, அன்னிய செலாவணி வீணடிப்பு மற்றும் உணவுக்காக வெளி நாடுகளை தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
இலண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியாவின் AI 171 என்ற விமானம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானதை இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்துகிறன. விமானத்தில் குறைந்தது 242 பேர் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். வியாழக்கிழமை மாலை, உள்ளூர் காவல்துறையின் தகவலின்படி பயணி ஒருவர் விபத்தில் இருந்து தப்பியதாக தெரிவித்துள்ளது. உயிர் பிழைத்தவர் பிரிட்டிஷ் குடிமகன் என்று பிபிசி தெரிவித்துள்ளது. விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன், "காயமடைந்த பயணிகள் உள்ளூர் அதிகாரிகளால் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்" என்று கூறினார். விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக முதலில் உள்ளூர் காவல்துறை இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தது. ஏர் இந்தியாவின் கூற்றுப்படி, விமானத்தில் 217 பயணிகள் மற்றும் பதினொரு குழந்தைகள் இருந்தனர். அவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ், ஒரு கனடியன் மற்றும் ஏழு போர்த்துகீசிய பயணிகள் இருந்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. விமானத்திலிருந்து குறைந்தது 204 பேர் வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் காவல்துறை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது. விமானம் ஒரு குடியிருப்பு பகுதியில் மோதியது என்று முதலில் தெரிவிக்கப்பட்டபோதும், பிந்திக்கிடைத செய்திகளில் மருத்துவ மாணவர்களுக்கான விடுதி வளாகத்தில் மோதியதாகவே ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இடிந்த கட்டிடத்திலிருந்து குறைந்தது 30 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்தவர்களா அல்லது விபத்து நடந்தபோது கட்டிடத்தில் இருந்தார்களா என்பது தற்போது தெரியவில்லை. இந்த விபத்து தனக்கு விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை வருத்துவதாக அனுதாபத்தை பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது அனுதாபங்களை கூறுகிறார். அகமதாபாத்தில் நடந்த சோகம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது மற்றும் வருத்தப்படுத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது விபத்து ஏற்பட்டது, மேலும் விமான நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்திலிருந்து ஒரு மேடே செய்தி அனுப்பப்பட்டது, ஆனால் பின்னர் அதில் இருந்து எந்த தொடர்பும் வரவில்லை. அகமதாபாத் மேற்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது, அங்கு 5.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியின் செயற்கைக்கோள் படங்கள் அடர்த்தியான கட்டிடங்கள் நிறைந்த குடியிருப்புப் பகுதிகளைக் காட்டுகின்றன. சம்பவ இடத்திலிருந்து வியத்தகு படங்கள், பல தொகுதிகள் கொண்ட ஒரு குடியிருப்புப் பகுதியில் இருந்து எழும் மகத்தான புகையை அணைக்க மீட்புப் பணியாளர்கள் முயற்சிப்பதைக் காட்டுகின்றன. விபத்து நடந்த இடத்திற்கு பல பொதுமக்கள் குவிந்துள்ளனர். பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டிலும் அவசர உதவிக்குழுக்களை அமைத்துள்ளதாகக் கூறுகிறது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரும் ஒரு அறிக்கையில், மன்னர் சார்லஸுக்குத் தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது லண்டனுக்குச் சென்ற அவர்களின் விமானம்தான் என்பதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது. விபத்தில் அவசர சேவைகளுக்கு உதவ தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக ஏர் இந்தியாவின் தலைவர் கூறுகிறார். விமானம் புறப்பட்ட சில நொடிகளில், விமானத்திலிருந்து சிக்னலை இழந்ததாக ஃபிளைட்ரேடார் கூறுகிறது. அந்த நேரத்தில், விமானம் தரையிலிருந்து சுமார் 190 மீட்டர் உயரத்தில் 625 அடி உயரத்தில் இருந்தது. விமானத்தின் இயந்திரங்களை போயிங் நிறுவனத்துக்கு வழங்கும் GE ஏரோஸ்பேஸ், அவர்கள் தங்கள் அவசர குழுவைத் இந்தியாவுக்கு அனுப்புவதாக கூறுகிறது. எங்கள் வாடிக்கையாளருக்கும் விசாரணைக்கும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 6:25 மணிக்கு விமானம் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்ததாக லண்டனின் கேட்விக் விமான நிலையம் தெரிவித்துள்ளது. விமானம் புறப்பட்டவுடன் விபத்துக்குள்ளாகி விமான நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியில் விலுந்து நொருங்கியதாக இந்திய விமான அதிகாரிகள் தெரிவித்தனர். ஃபிளைட்ராடரின் கூற்றுப்படி, விமானம் டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு அதிகாலையில் பயணித்தது. விமானப் பாதுகாப்பு வலையமைப்பு தரவுத்தளத்தின்படி, போயிங் 787 விமானம் சம்பந்தப்பட்ட முதல் விபத்து இதுவாகும். இந்த மாடல் அதன் முதல் பயணிகள் விமானப் பயணத்திற்குப் பிறகு 14 ஆண்டுகளில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பயணங்களை மேற்கொண்டுள்ளது. போயிங் ஒரு அறிக்கையில், விபத்து குறித்து அறிந்திருப்பதாகவும், மேலும் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.