Everything posted by vanangaamudi
-
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : முதல் கட்ட நட்டஈடாக 10.2 மில்லியன் டொலர் கிடைத்தது !
இது நம்ப மச்சகாரன் டக்கி மாமாவின்றை அமைச்சு தானே. இன்னும் வழக்கே முடியல அதுக்குள்ள காசு செலவழிஞ்சுட்டுதா ? காசை ஆராரு ஆட்டையை போண்டாங்களோ.
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
இது M.A. சுமந்திரனின் தனிப்பட்ட சந்திப்பு. நீங்களே சந்தித்து நீங்களே இணக்கம் கண்டு ஏற்பாடுகளும் செய்தயிற்றா. சொல்லவேஇல்ல. சிரிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றுவார்களா, அப்ப சரிதான். அட நாங்கல்லாம் அடி முட்டாளுங்களா. நம்பிட்டம். ஆமா ஆமா அரச தரப்பில் ஆதரவு கிட்டினால் ..... அப்புறம் பார்க்கலாம். பாயும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னே நீந்துவதால் பயனேது. சாவது நிஜமே நீ ஏன் வீணாய் சஞ்சலதின் வசம் ஆனாய், துணிந்தபின் மனமே துயரம்கொள்ளாதே, சோகம் கொள்ளாதே. தீர்மானம் எடுத்தாயிற்றா. யாராவது சொல்லுங்கப்பா? ஆமா. உறுதி கூறினார், இருக்கட்டும். திரும்பவும் முதல்லயிருந்தா? சரிதான் போங்க. சரி எப்ப செய்ய வசதி. அட போங்கப்பா இவ்வளவு நடந்திருக்கு சட்டம் படிச்ச M.A.S இக்கு தெரியாததா? இந்த சந்திப்புக்கு எழுத்துமூலம் பதிவு எங்காவது இருக்கா. ? சந்திப்பை உறுதிசெய்ய M.A. சுமந்திரன் என்ன நடவடிக்கை எடுத்தார். ? கூட்டம் வைத்து இணக்கம் கண்ட விடயங்களை உறுதிசெய்ய புறொட்டொகொல் (protocol) பதியப்பட்டுள்ளதா. புரிந்தால் சரிதான்.
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
ஓம் புரியுது, நல்லாய் புரியுது.
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
வசகா பீச் என்பது கடற்கரையா அல்லது குளக்கரையா. ஏன் கேட்கிறேன் என்றால் இது போன்ற காரியங்களை மக்கள் குளக்கரையிலும் வாய்க்கால் பக்கமாகவும் செய்வதைதான் நான் கண்டிருக்கிறேன். தண்ணீரில் அலைகள் இல்லாமல் அமைதியாய் இருந்தால் காரியத்தை கச்சிதமாக முடித்துவிடலாம் அல்லது அலை உள்ள இடமாயிருந்தால் தேவையில்லாமல் உடம்பு முழுக்க நனைந்துவிடும். அப்புறம் நம்மாளு கடலில் இறங்கி இஸ்ஞானம் செய்து தான் திரும்பணும்.
-
மண்ணித்தலை,புராதன இந்து ஆலயங்கள் அடுத்த மாதம் சீரமைப்பு!
இங்கேயும் தொல்லியல் திணைக்களம் தனது கைவரிசையை காட்ட புறப்பட்டுட்டு விட்டதா.? புத்தர் சிலையை ஆலய வீதியில் புதைத்துவிட்டு அதை காரணம் காட்டி இந்து கோவில்களை கையகப்படுத்தும் திட்டம் தெரிந்ததுதானே. இரண்டு இடங்களிலும் ஆதி சிவன் கோவில்களே இருப்பதாக தெரிகிறது. பிள்ளையார் கோவில் இருப்பது கெளதாரி முனைக்கு அருகாமையில் உள்ள கிராமம். https://www.google.com/maps/place/Manniththalai+Ancient+Lord+Shiva+Temple+மண்ணித்தலை+ஆதி+சிவன்+கோவில்/@9.5899824,80.094724,3a,75y,90t/data=!3m8!1e2!3m6!1sAF1QipPIlC0JYeXvgUoRjvAA29ODbBWZnvuNIxQsXqdF!2e10!3e12!6shttps:%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipPIlC0JYeXvgUoRjvAA29ODbBWZnvuNIxQsXqdF%3Dw92-h86-k-no!7i3236!8i3006!4m11!1m2!2m1!1smannithalai+sivan!3m7!1s0x3afe57fcf14fba79:0x7fc426f2d343fd6!8m2!3d9.5896462!4d80.0943979!10e5!15sChFtYW5uaXRoYWxhaSBzaXZhbloTIhFtYW5uaXRoYWxhaSBzaXZhbpIBDGhpbmR1X3RlbXBsZZoBJENoZERTVWhOTUc5blMwVkpRMEZuU1VOMWEyWjJYM05CUlJBQuABAA!16s%2Fg%2F11c52l1yvp?entry=ttu# https://www.google.com/maps/place/Kawtharimunai+Aathi+Sivan+Kovil/@9.5710781,80.1175347,3a,80.4y,90t/data=!3m8!1e2!3m6!1sAF1QipPtjl95mvs3N5Domo12EvmQg-wQAPBo9ZYJDrj4!2e10!3e12!6shttps:%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipPtjl95mvs3N5Domo12EvmQg-wQAPBo9ZYJDrj4%3Dw122-h86-k-no!7i969!8i683!4m7!3m6!1s0x3afef7113abd172f:0xa7f510f64a014f0d!8m2!3d9.5710781!4d80.1175347!10e5!16s%2Fg%2F11gmcb7pz6?entry=ttu#
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்.மாநகர சபையின் அறிவிப்பு!
முக்கியமான விசயம் பற்றி எவரும் கதைக்கயில்லை. ஆலயச் சூழலில் மாமிசம் பயன்படுத்துவதுபற்றி எந்த தடையும் இல்லையோ. அப்ப இந்த வருசம் திருவிழாவில் கொத்து ரொட்டி அமோகமாக விலைப்படும்.
-
பூமியை நெருங்கும் பாாிய ஆபத்து – எச்சாிக்கை விடுக்கும் இஸ்ரோ!
இதுவும் ஆச்சரியம் தான். விண்கலம் அல்ல விண்கல் என்றுதான் இங்கு குறிக்கப்பட்டிருக்கவேண்டும்.
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
இந்த பராமரிப்பு இல்லங்களை உடனடியாக இழுத்து மூடினால் அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும் சிறார்களின் கதி என்ன ?. அவர்களுக்கு தகுந்த தங்குவசதிகள் செய்துகொடுக்காமல் பராமரிப்பு இல்லங்களை பூட்டினால் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு அரசு உத்தரவாதம் வழங்குமா?இதுபோன்ற சிறுவர் இல்லங்களை தொடர்ச்சியான மேர்பார்வைக்குட்படுத்தி நிர்வாக சீர்கேடு ஏற்படாமல் தடுப்பது அரசின் கடமை.
-
சுன்னத் அறுவை சிகிச்சையின் போது 10 வயது சிறுவன் மரணம் - மயக்க மருந்து காரணமா?
இறந்த சிறுவனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். இஸ்லாமிய ஆண்களின் முக்கிய சடங்கான சுன்னத் என்பதை அறுவை சிகிச்சை என அழைப்பது சரியா பிழையா என்பது கேள்விக்கிடமானது. சுன்னத் என்பதை ஆங்கிலத்தில் Circumcision என்று தான் அழைப்பார்கள். இதற்கு தமிழில் சரியான மொழிபெயர்ப்பு "விருத்தசேதனம்" என சொல்கிறது கூகிள்.
- ஒரு பல்கலைக் கழகமும் ஒரு இசைநிகழ்ச்சியும்- நிலாந்தன்
- LTTE fishing boat.png
- boat
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இணையத்தில் வைரலாகும் காணொளிகளில் சிறிய ரக விமானம் ஒன்று நடுவானில் இருந்து விழுந்து தீப்பிடித்து எரியும் காட்சி பதிவாகியுள்ளது. விமானம் தரையை நோக்கி விழும் விதத்தை நோக்கும்போது ஆகாயத்தில் வைத்தே விமானம் தாக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டிருப்பதும் அதன் இறக்கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டபின் விமானிகளின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வீழ்வதையும் காணக்கூடியதாயுள்ளது. அண்மையில் புட்டினுக்கு எதிராக இராணுவக்கிளர்ச்சி செய்த பிரிகொஜினுடன் வாக்னரின் நிறுவனர் உற்கின் என்பவரும் விமானத்தில் பயணம் செய்ததாக ரஷ்யாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி உண்மையாகின் வாக்னர் கூலிப்படையின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டது ஊர்ஜிதமாகிறது. இருப்பினும் இந்த விமான விபத்தில் சிக்கி வாக்னர் தலைமைகள் இறந்துவிட்டதாக ஒரு செய்தியை வேண்டும் என்றே பரப்ப பொய் நாடகம் ஒன்று அரங்கேற்றப்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு என்று அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். வாக்னரின் தலைமைகள் சேர்ந்து ஒரே விமானத்தில் பயணம் செய்வது சாத்தியமில்லை என்றும் அப்படி செய்திருந்தால் தாங்கள் புட்டினின் சதிவலையில் இலகுவாக விழுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என்பதை முன் கூட்டியே கணிக்கத் தெரியாத முட்டாள்கள் இல்லை என்றும் வேறொரு இணையசெய்தி சந்தேகத்தை விதைக்கிறது. புட்டினுக்கு எதிரான கிளர்ச்சி தோல்வியில் முடிந்ததையடுத்து திரைக்குப்பின்னால் சமாதான ஒப்பந்தம் உருவானபோது வாக்னர் தலைவர்களுக்கு முடிவுகட்டும் இரகசிய ஏற்பாடுகளும் சமகாலத்தில் செய்யப்பட்டதாக இன்னொருதகவல் கூறுகிறது.
-
sriLanka_eravur_courts.jpeg
From the album: eravurcourts
-
eravurcourts
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
பிரபா நீங்கள் ஊரில் எடுத்த அனைத்து புகைப்படங்களும் பிரமாதம். அதிலும் உங்கள் "உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக உயிர் கொடுத்த ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் தன் கண்களை மூடிவிட்டால் உலகம் இருண்டு விட்டதாக நினைத்து உறங்கும் பூனை.. " என்ற தலைப்பில் பதிந்த படமும் வர்ணனையும் எனது மனதுக்கு மிகவும் பிடித்தது. உங்களின் பல படங்கள் நல்ல தரமிக்கவையாக இருப்பதால் குறித்த படத்தையும் அதன் வர்ணனையும் சர்வதேச புகைப்பட போட்டிகளுக்கு அனுப்பிவைக்கலாம் என்பது எனது கருத்து.
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
புத்தரின் மரணத்தைச் சூழ இவ்வளவு சிக்கல் இருக்கிறதா? நிச்சயமாக அது ஓவர் டோஸ் கேசாக தான் இருக்கும்.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
- அந்த அற்புத தலைவனை திரும்பவும் பார்க்க வேணும்!!
போரையும் விடுதலை போராட்டத்தையும் காரணம் காட்டி நம்மாளு புலம்பெயர தொடங்கியதிலிருந்து தமிழனின் விடுதலை உணர்வுக்கு ரொம்ப பேரு சங்கு ஊதிட்டாங்க. இயக்கம் எதிரியுடன் ஆயுதம் கொண்டு போராடிய அதே வேளையில் விடுதலையில் பற்றுறுதியற்று தடுமாறும் தமிழ்மக்களின் மனோநிலையுடன் ஒரு தார்மீகப் போராட்டைத்தையும் நடாத்திக்கொண்டிருந்தனர் என்பதே உண்மை.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் ... படம்: சாரதா வெளியீடு: 1962 குரல்: P. சுசீலா - PB. ஸ்ரீநிவாஸ் வரிகள்: கவியரசு கண்ணதாசன் இசை: KV. மகாதேவன் அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன? அவன்: காதல் அவள்: அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால் அந்த உரிமைக்குப் பெயர் என்ன? அவன்: குடும்பம் அவள்: நினைத்தவன் அவளை மறந்துவிட்டால் அந்த நிலமையின் முடிவென்ன? அவன்: துயரம் அவள்: பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அங்கு பெண்மையின் நிலையென்ன? அவன்: மௌனம் அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன? அவன்: காதல் அவள்: இரவும் பகலும் உன் உருவம் அதில் இங்கும் அங்கும் உன் உருவம் அவன்: அடக்கம் என்பது பெண் உருவம் அதை அறிந்தால் மறையும் என் உருவம் அவள்: மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை அவன்: நினைக்கும் நிலையிலும் நான் இல்லை உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன? அவன்: காதல் அவள்: கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னைக் கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை அவன்: வாதம் செய்வது என் கடமை அதில் வழியைக் காண்பது உன் திறமை அவள்: கண்டேன் கண்டது நல்ல வழி அது காதலனுடனே செல்லும் வழி அவன்: சொன்னேன் பலமுறை யாசிக்கிறாய் நீ சொன்னதை நானும்.. யோசிக்கிறேன் அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயரென்ன? அவன்: காதல் - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.