Everything posted by vanangaamudi
-
தேர்தலுக்கு பிறகு தமிழரசுக் கட்சி புத்துணர்வுடன் புதுப்பொலிவு பெறும் - அரியநேத்திரன்
நான் இலங்கை தமிழரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினர். கொஞ்சம் பொறுத்திருங்க நீங்க சொன்னது 100 % பலிச்சிடும். உங்க கட்சி உங்களை முந்திக்கொண்டு தன் ஆயுளை முடித்துக்கொள்ளும் காலம் விரைவிலேயே வரப்போகுது. இந்த தேர்தலுக்கு பிறகு நிச்சயமாக இலங்கை தமிழரசுக் கட்சி ஒரு புத்துணர்வுடன் ஒரு புது பொலிவுடன் அங்கே செல்ல இருக்கின்றது. அதிலே பல மாற்றங்களை இலங்கை தமிழர் கட்சியில் காண இருக்கின்றது. அதை தேர்தலுக்கு முன்னர் ஏன் செய்ய முடியாது. கட்சியின் பிரச்சனைகளை தீர்த்து அதை புதுப்பொலிவுடன் தேர்தலில் களமிறக்கியிருந்தால் மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்கு போடுவார்கள். இல்லையென்றால் தேர்தலுக்கு பிறகு கட்சியுடன் சேர்த்து உங்களையும் புத்துணர்வுடனும் புது பொலிவுடனும் வைத்திருப்பதிலேயே காலத்தை போக்கமாட்டீங்க என்று என்ன நிச்சயம்?
-
அநுரகுமார அலை என்ன செய்யும்?
நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கு கிழக்கின் தமிழ் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் அனுரவுடன் சேர்ந்து பயணிக்க உறுதியளித்துள்ளதாக அண்மைச் செய்தியொன்று கூறுகிறது. இரண்டில் மூன்று அறுதிப் பெரும்பான்மை பலத்தை அடைய முயற்சிக்கும் அனுர நாடாளுமன்றத்தில் எதை சாதிக்க விரும்புகிறார் என்பதை முதலில் தமிழ் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும். அனுரா சாதிக்க விரும்புவது பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை இல்லாதொழிப்பதா அல்லது ஸ்ரீ லங்காவில் மாகாண சபை முறைமையை நீக்குவதா அதற்கும் அப்பால் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதா என்பது அடுத்து வரும் தேர்தலின் பின் படிப்படியாக தெரியவரும். மொத்தத்தில் அடுத்ததாக நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆனால் மாகாண சபை தேர்தல் வராது என்பதை ஓரளவு கணிக்க முடியும். அனுரா தனது பதவிகாலத்தில் கணிசமான காலம் முடியும் தருவாயில் நாட்டில் ஜனாதிபதி முறைமையையும் ஒழிப்பார் என்பதையும் எதிர்பார்க்கலாம்.
-
இஸ்ரேலுக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா!
இரானில் உள்ள அணுசக்தி பயன்பாட்டு நிலையங்களை அல்லது ஆய்வுமையங்களையோ நாட்டின் எண்ணை கிணறுகள் மற்றும் பெட்ரோலிய உற்பத்தி நிலையங்களையோ தாங்கள் குறிவைத்து தாக்கபோவதில்லை என அமெரிக்க அரசுக்கு இஸ்ரேல் உறுதியளித்துள்ளதாக பிந்திக்கிடைத்த செய்திகள்வாயிலாக அறியமுடிகிறது.
-
ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
ஸ்ரீதர் திரை அரங்கத்தைக் கைப்பற்றி அதை அடாத்தாக கட்சி தலைமைச் செயலகமாக மாற்றிய டக்கியின் கொலைபாதக கோஷ்டி அந்த இடத்தை இன்னும் அதன் உரிமையாளரிடம் திருப்பி கொடுக்கவில்லையா?
-
தேர்தலில் போட்டியிட... ஏன் பலர் முன்வருகின்றனர்?
சிறிலங்கா அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் உத்தியோக பூர்வ சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் பற்றிய விபரங்களை இந்த இணயத்தளம் சொல்கிறது. https://www.parliament.lk/en/members-of-parliament/allowances-and-benefits
-
மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி
இந்த மறதி வியாதிக்கு இவர் தடுப்பூசி போட்டுகொண்டுவிட்டாராமா அல்லது இவர் தமிழரில்லையா?
-
தேர்தலில் போட்டியிட... ஏன் பலர் முன்வருகின்றனர்?
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடந்தகால சம்பளம் இதிலும் அதிகம் என்பது நான் அறிந்த தகவல். மொத்தத்தில் கிம்பளம் அதிலும் பலமடங்கு அதிகம். கூடவே மது, மாது அனைத்தும் அடக்கம். சில பெண் முதலாளிகளும் பார் லைசென்ஸ் கேட்டு வருவார்கள்.
-
ஜனாதிபதி அநுரவுக்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம்!
பட்டியலில் இவரின் கடந்தகால அமைச்சின் அதிகாரத்துக்குட்பட்ட எத்தனையோ திட்டங்களை இவர் அமைச்சராக இருந்த காலத்தில் ஏன் செய்யவில்லை?. அனுர வருவார் அவருக்கும் கொஞ்சம் விட்டு வைத்து காத்திருந்தாரோ என்னவோ. இந்த கடிதத்தின் கபட உள் நோக்கம்: 1. அபிவிருத்தி என்ற போர்வையில் தீவக ஜனங்களை தனது வலையில் வீழ்த்தி தேர்தலில் வெல்வது. 2. இந்தியாவின் திட்டங்களை ஆதரிப்பதாக காட்டி அவர்களின் கரங்களை பற்றி பிடிப்பது. 3. தற்போது சிதறுண்டு கிடக்கும் தமிழ் தேசியக்கட்சிகளின் வெற்றிடத்தை நிரப்புதல் 4. அனுரவின் வருகையின்பின் கைகட்டி வாய்பொத்தி சத்தமில்லாமல் நிற்கும் இவரின் முந்திய காலத்தின் எஜமானர்களை மீண்டும் உயிர்ப்பித்தல். 5. கடந்த தேர்தலில் இனவாத அரசியலை எவரும் கையில் எடுக்காது போனதால் இவர்போன்ற ஒட்டுண்ணி அரசியல்வாதிக்களின் மீள்வருகைக்கு புதிய பாதை ஒன்று திறக்கப்பட வேண்டும். 6. இலங்கையின் இன்றைய பொருளாதார நிலையில் இதுபோன்ற திட்டங்கள், குறிப்பாக வடகிழக்கில் அபிவிருத்திக்காக வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வாய்ப்புகள் மிகவும் அரிது. 7. இவர் குறிப்பிடும் 13 ஆம் திருத்த சட்டம், வனஜீவராசிகள், வன வளங்கள், முப்படையினர், இந்தியன், சூரிய மின்சக்தி, சீமெந்து, சன் பவர், நெடுந்தீவு அனலைதீவு, எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி, நன்னீர் வேளாண்மை இப்படி அனைத்து பிரச்சினைகளுமே இவர் அமைச்சராக இருந்த காலத்திலேயே இருந்தன. இவற்றையெல்லாம் இப்போது இவர் தானே கண்டுபிடித்தது போலவும் தனது திட்டங்கள் போலவும் பேசுகிறார்.
-
சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!
கொசிறுத் தகவல்: சட்டவாளர்களின் கல்வி தராதர குறியீடுகளில் சட்டம் (Law) என்பதை ஒருமையில் L என்றும் சட்டங்கள் (Laws) என்று பன்மையில் LL என்றும் குறியிடப்படும். உதாரணமாக LLB (அல்லது LL.B) படிப்பை Bachelor of laws என்றும் LLM (அல்லது LL.M) படிப்பை Masters of laws என்றும் வழங்கப்படும். அதேவேளை Bachelor of Civil Law என்று ஒருமையில் குறிக்கப்படும்போது BCL (அல்லது B.C.L) என்றழைப்பது வழமை.
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
ரணில் ஆட்சியில் பார் லைசன்ஸ் பெற்றவர்களில் வெளி நாட்டில் வாழும் தமிழ் வர்த்தகர் ஒருவர் பெயரும் இருந்தது என்று ஆரம்பத்தில் செய்தி வந்தது. யார் அந்த தமிழ் வர்த்தகர்?
-
சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!
- புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
அப்படிப் பார்த்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொலைவில் இல்லை என்று நம்பலாமா.?- புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
சிறிலங்காவின் 10-ஆவது பிரதமராக 1994 இல் 85 நாட்கள் சந்திரிகா குமாரதுங்கா பதவி வகித்ததை கணக்கில் கொண்டால் நாட்டின் பெண் பிரதமர்கள் வரிசையில் ஹருணி அமரசூரியா 3-ஆம் இடத்தைப் பெறுகிறார்.- ஜனாதிபதி தேர்தலில் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் மாவை செய்த செயல்
சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் பல வேட்பாளர்களை தெரிவுசெய்து வாக்களிப்பதற்கு வாக்களர்களுக்கு அனுமதியுண்டுதானே.- இரண்டு மணிநேரமாக 20 கிலோ மலைப்பாம்பின் பிடியில் சிக்கியிருந்த தாய்லாந்து பெண் - போராடி மீட்ட பொலிஸார்
பாம்பின் நீளம் 4 அடி அல்ல 4 மீட்டர், 20 கிலோ எடையுள்ள பாம்பு.- மூன்று வேட்பாளர்களையும் அதிகாரப்பகிர்வு குறித்த வாக்குறுதியை வழங்கச்செய்திருக்கிறோம்; எந்த வேட்பாளர் வென்றாலும் தீர்வை முன்னிறுத்திப் பணியாற்றுவோம் - சுமந்திரன்
நீங்க இப்படி சொல்ல தமிழ் மக்களின் வாக்கு வங்கி உங்க கையிலயா இருக்கு அல்லது சிங்கள தலைமைகள் கொடுத்த வாக்குறுதிகள் கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் மீறப்பட்ட சரித்திரம் தெரியாதா. ரொம்பதான் எஜமானர்களை நம்பிட்டீங்க. ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் அதில் யார் வென்றாலும் உங்களுக்கு கைநிறைய வேலையிருக்கும் எண்டு தானே சொல்லவரீங்க.- இலங்கை தீவின் பொருளாதாரத்தை சிதைத்து விட்ட 16 மோசடிகள்.
What is Goverance Reforms, do you mean: "Governance reform"- வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!
As a perpetual turn-coat, Suren Raghavan is a specialist in public deception. He became a Budhhist to get a big Scholarship to Oxford, Became a Marxist to get closer to SLFP. Allegedly claimed refugee status in Canada and became a Canadian citizen to get the Ontario Studnet Assistance Program (OSAP) scholarship also contributed from the taxes of the Tamil Canadians who are now demanding clarifications from the Government of Onatario. More truth about this shady character will be unveiled soon. https://www.adaderana.lk/news/81922/suren-raghavan-stripped-of-his-positions-in-slfp தமிழாக்கம்: சுரேன் ராகவன் ஒரு சந்தர்ப்பவாதி. பொதுஜனங்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்துவதில் நிபுணர். ஒக்ஸ்போர்டில் பெரிய புலமைப்பரிசில் பெறுவதற்கு அவர் ஒரு பௌத்தரானார், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நெருங்கி வர மார்க்சிஸ்ட் ஆனார். கனடாவில் அகதி அந்தஸ்து கோரி அதன் மூலம் ஒன்டாறியோ மாணவர் உதவித் திட்டம் (OSAP) வழங்கிய புலமைப்பரிசில் உதவித்தொகையைப் பெறுவதற்காக கனேடியக் குடிமகனாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இந்த புலமைப்பரிசில் வழங்கிய உதவித்தொகைக்கு தமிழ் கனடியர்களின் வரிகளில் இருந்தும் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தது. இப்போது தமிழ் கனடியர்கள் ஒன்டாரியோ அரசாங்கத்திடம் இருந்து இதற்கு விளக்கம் கோரிவரும் நிலையில் இந்த ஏமாற்றுப் பேர்வழியின் கதாபாத்திரம் குறித்த கூடுதல் உண்மைகள் விரைவில் வெளியாகும்.- ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
2010 ஜனாதிபதி தேர்தலில் யாழ், வன்னி, திரிகோணமலை மற்றும் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்களின் அமோக வாக்குகளைப் பெற்று மகிந்தவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பிடித்தவர்.- தமிழ் உலகின் இசையமைப்பாளர்கள்
M.B. ஶ்ரீ நிவாசன் என்ற தெலுங்கு இசையமைப்பாளரும் 60 வது தொடக்கம் 89 வரை சில தமிழ் படங்களுக்கு இசையமைத்தார். இவரின் பெயரை பட்டியலில் காணவில்லை. இவரின் முதல் தமிழ் படம் ஜெயகாந்தனின் "பாதை தெரியுது பார்". இப்படி வேறு மாநிலங்களில் இருந்து வந்து தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்களும் ஒரு கணிசமான தொகை இருக்கலாம். பட்டியல் தொடங்கும் வருடத்தை திட்டவட்டமாக குறிப்பிடுவது அவசியம். அத்துடன் மறைந்த இசையமைப்பாளர்களின் காலத்தை "தற்போது" என்று குறிப்பிடுவதும் தவறு. உதாரணம் பவதாரிணி ராஜா.- ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
தமிழ்தரப்பின் ஜனாதிபதி பொதுவேட்பாளர் இந்த கோரிக்கையுடன் களமிறங்கி வடக்கு கிழக்கின் பெரும்பான்மை வாக்காளர்களின் ஆதரவை பெறுவாராயின் அதுவே தமிழர் உலகுக்கு சொல்லும் மறைமுகமான செய்தி. இதைவிட சமஸ்ட்டி தேவையா இல்லையா என்ற தனியான வாக்கெடுப்பு ஒன்றை, குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள அரசுகள் ஒருபோதும் நடத்த விடாது. தமிழர் பிரதேசங்களில் பல சிங்கள மக்களின் வலிந்த குடியேற்றமும் பேச்சுவார்த்தை என்று வரும்போது அதை குழப்பும் நோக்கத்துடன் முஸ்லிம் மக்களின் தலைமைகளை தமிழ் தரப்பிற்கு எதிராக திருப்பிவிடுவதும் இனவாத சிங்கள அரசுகள் தொடர்ந்து எமக்கு எதிராக செய்துவரும் சதி நடவடிக்கைகள். இது தொடரும் பட்சத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் எமது முயற்சியில் அனைத்து ஜனநாயக பாதைகளும் என்றோ ஒரு நாள் நிரந்தரமாக மூடப்படுவது சாத்தியம்.- எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : முதல் கட்ட நட்டஈடாக 10.2 மில்லியன் டொலர் கிடைத்தது !
இது நம்ப மச்சகாரன் டக்கி மாமாவின்றை அமைச்சு தானே. இன்னும் வழக்கே முடியல அதுக்குள்ள காசு செலவழிஞ்சுட்டுதா ? காசை ஆராரு ஆட்டையை போண்டாங்களோ.- தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
இது M.A. சுமந்திரனின் தனிப்பட்ட சந்திப்பு. நீங்களே சந்தித்து நீங்களே இணக்கம் கண்டு ஏற்பாடுகளும் செய்தயிற்றா. சொல்லவேஇல்ல. சிரிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றுவார்களா, அப்ப சரிதான். அட நாங்கல்லாம் அடி முட்டாளுங்களா. நம்பிட்டம். ஆமா ஆமா அரச தரப்பில் ஆதரவு கிட்டினால் ..... அப்புறம் பார்க்கலாம். பாயும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னே நீந்துவதால் பயனேது. சாவது நிஜமே நீ ஏன் வீணாய் சஞ்சலதின் வசம் ஆனாய், துணிந்தபின் மனமே துயரம்கொள்ளாதே, சோகம் கொள்ளாதே. தீர்மானம் எடுத்தாயிற்றா. யாராவது சொல்லுங்கப்பா? ஆமா. உறுதி கூறினார், இருக்கட்டும். திரும்பவும் முதல்லயிருந்தா? சரிதான் போங்க. சரி எப்ப செய்ய வசதி. அட போங்கப்பா இவ்வளவு நடந்திருக்கு சட்டம் படிச்ச M.A.S இக்கு தெரியாததா? இந்த சந்திப்புக்கு எழுத்துமூலம் பதிவு எங்காவது இருக்கா. ? சந்திப்பை உறுதிசெய்ய M.A. சுமந்திரன் என்ன நடவடிக்கை எடுத்தார். ? கூட்டம் வைத்து இணக்கம் கண்ட விடயங்களை உறுதிசெய்ய புறொட்டொகொல் (protocol) பதியப்பட்டுள்ளதா. புரிந்தால் சரிதான்.- கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
ஓம் புரியுது, நல்லாய் புரியுது.- கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
வசகா பீச் என்பது கடற்கரையா அல்லது குளக்கரையா. ஏன் கேட்கிறேன் என்றால் இது போன்ற காரியங்களை மக்கள் குளக்கரையிலும் வாய்க்கால் பக்கமாகவும் செய்வதைதான் நான் கண்டிருக்கிறேன். தண்ணீரில் அலைகள் இல்லாமல் அமைதியாய் இருந்தால் காரியத்தை கச்சிதமாக முடித்துவிடலாம் அல்லது அலை உள்ள இடமாயிருந்தால் தேவையில்லாமல் உடம்பு முழுக்க நனைந்துவிடும். அப்புறம் நம்மாளு கடலில் இறங்கி இஸ்ஞானம் செய்து தான் திரும்பணும். - புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.