Everything posted by vanangaamudi
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் தரையில் நின்ற ஒரு சில மக்களும் இந்த விபத்தில் கொல்லப்பட்டிருக்கலாம்.
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
இலண்டனுக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது ஏர் இந்தியா விமானம்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. விமானத்தில் குறைந்தது 242 பேர் இருந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். விமான நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் புறப்படும் போது விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து படங்கள் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருப்பதைக் காட்டுகின்றன. தடுப்புகள் கொண்ட குடியிருப்புப் பகுதி போல தோற்றமளிக்கும் இடத்திலிருந்து எழும் புகையை அணைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு பல பொதுமக்கள் குவிந்துள்ளனர். மேற்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இதுவரை காயங்கள் அல்லது இறப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை. உள்ளூர் நேரப்படி பி.ப 13:10 மணிக்கு விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விமானத்திலிருந்து சிக்னல்களை இழந்ததாக ஃபிளைட்ரேடார் கூறுகிறது. அந்த நேரத்தில் தரையில் இருந்து சுமார் 190 மீட்டர் உயரத்தில் இருந்தது.
-
தந்தை செல்வாவின் 47வது நினைவேந்தலில் எம்.ஏ. சுமந்திரன் பேசிய உரை
முன்வரிசையில் காலியாக இருக்கும் ஒரு கதிரையில் "மாண்புமிகு கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்" என்று எழுதி ஒட்டியிருக்கே இது எப்போ எடுத்த படம்?
-
யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
பிரவுண் வீதி சந்திஎன்று மொட்டையாக குறிப்பிடாமல் அது எந்த சந்தி என்று சரியாக சொன்னால் இன்னும் நல்லது. நாங்களும் மிகுந்த அவதானமாக செல்லமுடியும்.
-
யாழ். கோப்பாயில் இடம்பெற்ற இறுதி ஊர்வலத்தில் வாகன விபத்து - ஒருவர் பலி, ஐவர் காயம்
நான் வாழும் நாட்டில் இறுதியாத்திரையில் இறந்த ஒருவரை வீட்டில் வைக்கவோ அல்லது ஊர்வலமாக வீதிவழியாக எடுத்து செல்லவோ அனுமதிக்கமாட்டார்கள். இறந்தவரின் பிரேதப் பெட்டியை வெளியே தெரியாதபடி வாகனமொன்றில் ஏற்றி உடலை வேண்டிய இடத்தில் கொண்டுவந்து கொடுப்பார்கள். தேவையெனில் நெருங்கிய உறவினர்கள் வேறு வாகனங்களில் அமரர் வாகனத்தைப் பின் தொடர்ந்து செல்லலாம். பெட்டியைக் காவிச் செல்லும் வாகனத்தின் கூரையில் ஒரு சிறிய சிலுவை பொருத்தப்பட்டிருக்கும். அதுவும் உறவினரின் சமய கோட்பாடுகளுக்கு இடைஞ்சலானதாக இருந்தால் அவர்களின் விருப்பத்திற்கமைய அந்த சிலுவை அகற்றப்படும் அல்லது மறைத்து மூடப்படும். ஊர்வலங்களில் மக்கள் திரளாக வீதியில் செல்வதற்கு பொலிசாரின் அனுமதி எல்லா சந்தர்ப்பங்களிலும் அவசியம். அப்போது வீதியில் ஓரமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு ஊர்வலம் தடையின்றி செல்வதற்கு வழிவிடவேண்டும். ஊர்வலத்திற்கு பின்புறமாக வரும் வாகனம் ஊர்வலத்துக்கு வேண்டிய இடைவெளி விட்டு அதை தொடர்ந்து குறைந்த வேகத்தில் செல்லவேண்டுமேயன்றி ஊர்வலத்தை முந்திச் செல்லமுடியாது. தீப் பந்தம் அல்லது நெருப்பு பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் தீயணைக்கும் படையினர் தேர்ந்தெடுக்கும் பாதையில் தான் ஊர்வலம் செல்லவேண்டும். அவசர வைத்திய உதவி, நோயாளர் காவும் வண்டிகள், தீயணைக்கும் வாகனங்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்கு உண்டு.
-
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு
விசேல் வர்த்தமானி அறிவித்தல் தமிழில் https://documents.gov.lk/view/extra-gazettes/2025/2/2424-51_T.pdf
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
டிரம்பும் புட்டினை போல நாடு பிடிக்கும் திட்டத்தில் தான் இருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தில் தனக்கு சர்வதேசத்திடமிருந்து எதிர்ப்பு வரும்போது அதில் இருந்து விடுபட ஐ.நா வில் வீட்டோ உரிமையுள்ள நம்பிக்கைக்குரிய நண்பன் புட்டினை அணைத்து வைப்பது டிரம்பின் திட்டம் போல் தெரிகிறது. போதாக்குறைக்கு தனது truth social தளத்தில் உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்றும் குறிப்பிட்டு அமெரிக்கா வழங்கிய 200 பில்லியன் டாலர்களை ஏப்பம்விட்டு விட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
-
"சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய்" [எமது தந்தை / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11/06/1907-18/02/2000]]
தில்லை அண்ணா, கனத்த மனத்துடன் உங்கள் தந்தையின் 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலியில் நானும் பங்குகொள்கின்றேன்.
-
உண்மை தெரிந்தாகனும்
உருண்டு பிரண்டு சிரித்துக்கொண்டு 🤣
-
2024 YR4 சிறுகோள் பூமிய தாக்கும் வாய்ப்பு?
இந்தச் சிறுகோள் சூரியனை சுற்றி ஒரு நீள்வட்ட பாதையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்வரும்போது பூமியின் சுற்றுவட்ட பாதையையும் அது கடந்து செல்லும். எனவே இது அடுத்த முறை எதிர்வரும் 17 டிசெம்பர் 2028 அன்று பூமியை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச் சிறுகோள் மீண்டும் 22 டிசம்பர் 2032 பூமியை கடக்கும்போது அதன் பாதையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் அது பூமியின் ஈர்ப்பு வலயத்தினுள் பிரவேசிக்க சாத்தியம் உண்டு என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இச் சிறுகோளால் பூமிக்கு ஆபத்து உண்டா என்பதை ஆராய்வதற்கும் அதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இன்னும் 7 - 8 வருட அவகாசம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
-
தையிட்டி விகாரை விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளுக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை!
தையிட்டி விகாரை பிரச்சனை பற்றி வாசிக்கும்போது இந்தியாவின் பாபர் மசூதி தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. அதை இடிக்க 4 நூற்றாண்டுகள் சென்றது.
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
டிரம்பின் நடவடிக்கைகள் ரசியா, சீனா போன்ற இராணுவ பலம் கொண்ட நாடுகளும் சர்வதேச உலக ஒழுங்குக்கு எதிராக அவர்களும் சுயநலத்துடன் நடக்க முடியும் என்ற சமிக்ஞையையே கொடுக்கும். கிரின்லாண்டையும் கனடாவையும் அமெரிக்காவுடன் இணைப்பதும், பனாமா கால்வாயை ஆக்கிரமிப்பதுடன் காசாவிலிருந்து பலஸ்த்தீன் மக்களை விரட்டி அவர்களது நாட்டை கைப்பற்றும் திட்டத்தை அறிவிப்பதும் சர்வதேச ஒழுங்கில் எவ்வளவு பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அவர் அறியாததல்ல. உண்மையில் டிரம்ப் ஒரு அரசியல்வாதி அல்ல அவரின் சுற்றுவட்டத்தில் உள்ளவர்களும் அவருக்கு கொம்புசீவிவிட்டு தூபம்போடுவோராகவே உள்ளனர். ஒரு நாட்டை நிர்வகிக்க தேவையான கல்வியையோ அல்லது அரசியல் அனுபவத்தையோ கொண்டிராத ஒரு மனிதர். பதவிக்கு வந்தவுடனேயே கனடா, கிரின்லாந்து விடயங்களில் ஒரு காணி விற்பனை தரகர் போல செயற்பட்டதை இந்த உலகமே கண்டது. இனிவருங்காலங்களில் உள்நாட்டுக்குள்ளேயே டிரம்புக்கு எதிராக குரல்களும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்புகளும் அதிகரிக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். காசாவிலிருந்து அடாவடியாக பாலஸ்தீன் மக்களை டிரம்பால் விரட்டமுடியும் என்றால் உக்ரேனில் இருந்து உக்ரேனியர்களை புட்டினால் ஏன் விரட்ட முடியாது. டிரம்பின் நடவடிக்கைகளால் அமெரிக்கா இப்போது இருக்கும் மதிப்பு மரியாதையையும் இழந்து நடுத்தெருவுக்கு வரும்போது காலம் 4 வருடத்தைக் கடந்திருக்கும்.
-
செயற்கை கோள்களின் கல்லறையை அடைந்த இந்திய கடற்படை அதிகாரிகள்!
செய்மதிகள் மற்றும் விண்கலன்கள் என்பவை பழுதடைந்து அல்லது பாவனைக் காலம் காலாவதியாகி அவை செயலிழக்கும்போது இந்த கடல் பிரதேசத்தில் விழவைத்து இயற்கையையும் சுற்று சூழலையும் நாசம் செய்வார்கள் என்பதைத்தான் இங்கு நாசூக்காக சொல்ல வருகிறார்கள்.
-
வேதனையில் நீதிபதி இளஞ்செழியன், புரியாத புதிராக நீதித்துறை வாழ்வு முடிவு
இளஞ்செழியன் ஐயா தனது நீதித்துறை பதவியை இழந்து நின்றாலும் அவர் அரசியலில் பிரவேசித்து மக்களுக்கு நல்ல தொண்டாற்றி சாதித்து காட்ட முடியும். அரசியல் அனுபவம் இல்லாதவர் என்றாலும் இனப்பற்றும் நீதி நேர்மைக்கு தலைவணங்கும் மனிதராகவும் இருந்து சாதிக்கும் மனப்பாங்கு ஐயாவிடம் நிறைய உண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
இராணுவ கெடுபிடி, வாள் வெட்டுகாரர்கள், மண்கொள்ளை, ஆள் கடத்தல், போதைவஸ்த்து பாவனை இப்படி எத்தனையோ ஆபத்துகள் எல்லா தனி மனிதர்களுக்கும் உண்டு. இவர்களின் உயிர்களுக்கு யார் பாதுகாப்பு? அனுரவின் ஆட்சியில் குற்ற செயல்கள் அதிகரித்து செல்லும் ஒரு போக்கே நாட்டில் பொதுவாக காணப்படுகிறது.
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
இங்கு பாதுகாப்பு கொடுத்தது முக்கியமில்லை, அதிலும் பார்க்க நாங்கள் அதிகம் கவலைப்படவேண்டியதும் தமிழனின் தலை போகும் வேறு விடயங்களுக்கும் சும் துணைபோவதை கோடிட்டு காட்ட முயன்றிருக்கிறேன்.
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
வடகிழக்கு தமிழ் மக்களால் வெறுக்கப்பட்ட செத்து போன கிளிக்கு பாதுகாப்பு கொடுத்து என்ன ஆவ போகுது ? "சும்" மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதி - அவர் செத்துபோன கிளி ஆக்கப்பட்டு தமிழ் அரசியல் பரப்பில் இருந்து உதறித் தள்ளப்பட்லும் அந்தக்கிளி ஒரு இலவு காத்த கிளியாக அடுத்த தேர்தலை எதிர்பார்த்து தனது எஞ்சிய நாட்களை கழிக்கும் என்று தமிழ் மக்கள் நம்பினால் அது தவறு. "சும்" சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் ஆட்டத்தை மாற்றி விளையாட தொடங்கி ரொம்ப நாளாயிற்று. அனுர அரசில் "சும்" பதவி எதையும் பெறாவிடினும் அவருக்கு பொறுப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டது. சிங்கள ஆட்சியாளர்கள் எவராயிருந்தாலும் "சும்" போன்ற "திறமையான" தமிழ் அரசியல்வாதிகளை இனங்கண்டு அவர்களுக்கு ஏற்ற "பதவிகளையும் பொறுப்புகளையும்" கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். "சும்"மின் தமிழர் விசுவாசத்தை நாங்கள் சந்தேகக் கண்ணுடன் பார்த்தாலும் சர்வதேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஏன் அனுர அரசுக்கும் கூட இலங்கையில் எஞ்சியுள்ள தமிழ் அரசியல்வாதிகளில் "சும்"மை மட்டும்தான் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டிய அவசியம் உண்டு. இனப்பிரச்சினையை சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி கொண்டுசெல்லவும் இந்தியா உட்பட வெளி நாட்டு சக்திகள் தாம் நினைக்கும் நேரங்களில் சிங்கள அரசுக்கு தமிழ்தரப்பில் இருந்து நெருக்கடியை உருவாக்கவும் தீர்வுக்கான பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ் இனத்தை ஒரு மாயைக்குள் வைத்திருப்பதற்கும் "சும்"மை நிலை நிறுத்தி வைத்தால் தான் சாத்தியமாகும். இதற்கான ஆளுமை மற்றைய தமிழ் அரசியல்வாதிகளிடம் இருப்பதாக தெரியவில்லை. அதாவது சுருக்கமாக சொன்னால் "சும்" என்ற நபரை தமிழ் இனம் அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தாலும் வல்லரசுகளுக்கும் சர்வதேசத்துக்கும் சிங்கள ஆட்சியாளர்களுக்கும் அவரின் சேவை அவசியம் தேவை.
- ஸ்ரீலங்காவை உண்மையாகவே ‘கிளீனாக’ வைத்திருக்க வேண்டுமானால்…?
-
யோஷித ராஜபக்ஷ கைது
இந்த பையனுக்கு 2006 இல் 17 அல்லது 18 வயதுதான் இருந்திருக்கும். ராஜபக்ச பிள்ளைகள் இந்த இளம் வயதிலேயே பணமோசடி, நில கொள்ளை செய்வதில் ஜாம்பவான்களாக இருந்திருக்கிறார்கள். இந்த சில்லறைகளில் காலத்தை கடத்தி மக்களை ஏமாற்றாமல் கடந்த 10 வருடங்களுக்குள் ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தபோது அந்த குடும்பத்தினர் செய்த பாரிய குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரங்கள் எதுவும் சட்டமா அதிபரிடம் இல்லையா? அல்லது விருப்பம் இல்லையா_
-
முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின்
ஆடு மாடு பட்டிகளில் கால்நடைகளை எண்ணிப்பார்ப்பது போல... சரியாக 3000 தானா? நம்பலாமா? இது தமிழ் நாட்டின் இன்னும் ஒரு அரசியல் சர்க்கஸ் என்று கடந்து போவோம்.
-
யாழ். சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!
இப்போது சுமாராக இயங்கிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாண விமான நிலையத்தின் நாளாந்த நடவடிக்கைகளை முழுமையாகவோ பகுதியாகவோ இஸ்தம்பிக்க செய்யாமல் அதை விஸ்தீரணம் செய்வதற்கான திட்டங்கள் தீட்டப்படவேண்டும். இல்லையேல் ஏற்கனவே இனவெறியில் குமுறிக்கொண்டிருக்கும் தெற்கு அரசியல்வாதிகளில் சிலர் இதையே சாட்டாக வைத்து ஓடுபாதையை தோண்டி குண்டும் குழியுமாக்கிவிட்டு இடை நடுவில் பல்வேறு காரணங்களை சொல்லி திட்டத்தை கிடப்பில் போட்டு விமான நிலையத்தை இயங்கவிடாமல் தடுத்துவிடுவார்கள்.
-
கிளாலியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வந்த டிப்பர் மடக்கிப் பிடிப்பு!
அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்றதற்காக city hardware மீது அண்மையில் பா.உ இளங்குமரன் செய்த பொலிஸ் முறைப்பாட்டை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட வந்த அமைச்சர் சந்திரசேகர் இதுபோன்ற மணல் திருட்டுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சென்ற நிலையில் இந்த விவகாரத்தில் எதுவித சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கான தகவல் உண்டா?
-
அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்?
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி தற்போது நாட்டில் உள்ள அரசியல் கைதிகள் எத்தனைபேர் என்பதை அரசாங்கத்தின் தரப்பில் இருந்து பெற்றுகொள்வது சாத்தியமா?
-
யாழில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்
கொட்டடி என்ன பருத்தித்துறையிலா இருக்கு? அப்படியானால் இரண்டும் வெவ்வேறு சம்பவங்களா ?
-
கந்த சஷ்டி கவசத்தை ஒலிப்பதிவு செய்ய... சூலமங்கலம் சகோதரிகள் பட்ட சிரமங்கள்.
இந்தியாவில் தொண்டை நாட்டில் வாழ்ந்த ஶ்ரீ தேவராய சுவாமிகள் என பிற்காலத்தில் அழைக்கப்பட்ட தேவராயபிள்ளை என்ற தமிழ்ப்புலவர் அருளிச்செய்த கந்த சஷ்டி கவச பாடலின் அருள் சொட்டும் இனிய வரிகளை சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் கேட்கும்போது அது தேனிலும் இனிமை. தேவராய சுவாமிகள் முருகனின் ஆறுபடை வீடுகள் அனைத்துக்கும் தனித்தனியாக கந்த சஷ்டி கவசங்களை இயற்றியிருந்தாலும் திருச்செந்தூர் வேலவன் மீது பாடப்பட்ட "சஷ்டியை நோக்க சரவணபவனார் ..." என்ற பாடல்தான் அதிக பிரசித்தமானது. புலவர் இந்தபாடலை சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அரங்கேற்றம் செய்தார். குறள் வெண்பா, காப்பு, சரணம் உள்ளடக்கிய 244 கவச வரிகளையும் முருகன் அடியார்களில் பலர் தாமாகவே மனனம் செய்துகொண்டு ஓதுவர். மூலப்பாடலின் வரும் ஒரு வரியை (வரி 84) சூலமங்கலம் சகோதரிகள் வேண்டுமென்றே மாற்றிபாடியதாகவும் சில பதிவுகள் குறிப்பிடுகின்றன. இந்த பாடல் ஐந்து இராகங்கள் அடங்கிய ஒரு இராக மாலிகையாக அமைந்திருப்பதும் இங்கு விசேடம்.