Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

vanangaamudi

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1,909
 • Joined

 • Last visited

Everything posted by vanangaamudi

 1. முஸ்லிம்கள் தண்ணியடிப்பது யுயுப்பி... தமிழ்பேசும் முஸ்லிம்கள் ஓரிருவர் என்னுடன் யூனியில் படித்ததால் நட்பு கிடைத்தது. பன்றிக்கறி என்ன கறாம் இறைச்சி என்ன எல்லாம் சேர்ந்துதான் சமைத்தோம் சாப்பிட்டோம். அந்த காலத்தில் அவர்களுக்கு ஏற்ற மாமிசம் விற்பனைக்கு இல்லை என்பது வேறு கதை. காலம் செல்ல மேலும் முஸ்லிம்கள் வந்து எமது இடத்தில் குடியேற எனது தோஸ்துகள் உடனே கட்சி மாறி ஆசார சீலர்களாக மாறிவிட்டார்கள். என்னே உலகம் !!!
 2. தமிழர் தரப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வுநோக்கிய வெவ்வேறு வேலைத்திட்டங்களை எமது அரசியல்வாதிகள் முன்னெடுத்துவருவதாக தெரிகிறது ஆயினும் எவருக்கு எந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இதுவரை எந்த தமிழ் அரசியல்வாதியும் குறிப்பிட்டு சொல்லும்படியான நன்மைகளை தமிழினத்துக்கு பெற்றுத்தந்ததாக சரித்திரமும் இல்லை. இலங்கையில் கடந்த காலங்களில் இனப்படுகொலை ஒன்று நடந்தது என்பதுதான் தமிழர் தரப்பின் பொதுவான கருத்து. அதை அனுபவித்த பாதிக்கப்பட்ட இனத்துக்குதான் அது கண்கூடு. ஆனால் அதை வெளி உலகத்துக்கு சொல்வதற்குதான் எமக்கு ஆதாரங்கள் தேவை. இன அழிப்பை செய்தவன் அந்த ஆதாரங்களை விட்டுவைக்கபோவதும் இல்லை. தீர்வுக்கான கால இழுத்தடிப்புகளும் இந்த ஆதார அழிப்புகளுக்கு துணைபோகும் ஒரு அபாய அறிவிப்பு என்பதை எமது தலைமைகள் உணர்ந்ததாக தெரியவில்லை. ஆதாரங்கள் உண்டோ இல்லையோ இலங்கையில் இனப்படுகொலை நடந்தது உண்மை என்ற தமிழ் தரப்பின் நிலைப்பாட்டை மாற்ற எந்த அரசியல்வாதிக்கும் உரிமை கிடையாது. அதேவேளை இலங்கையில் இன்று தமிழர் மத்தியில் இராஜதந்திரிகள் என்று சொல்லும்படியாக எவரும் இல்லை. தமிழ் அரசியல்வாதிகள் தாமே வலிந்து தமது தகமைக்கும் அப்பாற்சென்று இராஜதந்திரிகள் போன்று செயற்பட முயற்சிக்கிறார்கள். கூடவே வேறொருவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பை அல்லது கடமையை தான் அவரிலும் நல்லபடியாக செய்வேன் என்று எண்ணும் மனப்பான்மையும் சில அரசியல்வாதிகளிடம் இருப்பது தெரிகிறது. தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பேசித்தீர்க்க எண்ணாமல் அதை கொண்டுவந்து திறந்த வெளியில் விமர்சிப்பதும் ஏட்டிக்கு போட்டியாக சவால் விடுவதும் நிறுத்தப்பட வேண்டும். இனத்துக்காக ஏதாவது செய்ய நினைத்தால் என்ன செய்தீர்கள் என்பதும் அதன் பெறுபேறுகள் என்ன என்பது மட்டும் தான் செய்திகளாக வெளியில் வரவேண்டுமே தவிர தங்கள் மத்தியில் உள்ள பூசல், போட்டி, புடுங்குப்பாடுகளை செய்தியாக்குவதையும் அறிக்கை விடுவதையும் எமது அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
 3. ஏற்கனவே இருந்தவற்றை கண்டுபிடிக்கவேண்டிய அவசியமில்லை. இது கோள்கள், கிரகங்கள், வால் நச்சத்திரங்களுக்கும் பொருந்தும். எனவே சனி கிரகத்தை முதலில் யார் கண்டறிந்தார் அல்லது அவதானித்தார் என கூறுவதுதான் சரியானதாக இருக்கும். விஞ்ஞானவியலில் ஒருவர் ஒரு பொருளை கண்டறிதல் (discover) என்பது அவர் ஏற்கனவே இருந்த ஒரு பொருளை முதலில் அவதானித்தார் என்றும், கண்டுபிடித்தல்(invention) என்பது புதிதாக ஒன்றை முதன்முதலாக அவர் உருவாக்கினார் என்பதும் ஆகும். இந்த மாறாட்டம் தமிழில் பொதுவாக உள்ள ஒன்றுதான். மேலே கிருபன் இணைத்த ஆங்கில பதிவில் இந்த இரண்டையும் சரியாக கையாண்டிருப்பதை அவதானிக்கமுடியும்.
 4. கடன்பொறி வைக்கும் சீனாவுடனான உறவுகளால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை உதாரணமாக வைத்து பங்களாதேஷ் தனது சீனக்கொள்கைகளை விழிப்புணர்வுடன் திட்டமிடுவது நல்லதுதான். அதுபோல பங்களாதேஷ் போன்ற வளர்முக நாடுகள் சிறுபான்மை மக்களின் மனித உரிமை விவகாரங்களை மதித்து செயல்படாத இலங்கையை போன்ற சிறிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் அதனால் ஏற்படும் தாக்கங்களையும் முன்னுதாரணமாக கொண்டு பாடம்கற்றுகொள்வது அவசியம். அண்மைய ஐ.நா வின் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக தனது வாக்கை வழங்கியதன் மூலம் இலங்கைக்கு ஆதரவளித்து இதுவிடயத்தில் இரு நாடுகளும் கைகோர்த்துள்ளன.
 5. கோவில் கோபுரத்தில் நிர்வாண சிலைகளும் இதர லீலா விநோதங்களும் வடித்திருந்தால் அதெல்லாம் இங்கே செய்யுங்கள் என்று அர்த்தமில்லை. வாலி நீங்கள் சொன்னது முற்றிலும் ஜதார்த்தம். இதற்குமேல் புரியும்படி எதையும் சொல்லமுடியாது.
 6. இந்தியாவின் இந்த நடவடிக்கை(abstain) அது நடுநிலை வகித்ததாக கொள்ளமுடியாது. வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தது என்றுதான் கொள்ளவேண்டும். மனித உரிமைகள் பற்றி வாய்கிழிய கத்தும் ஜப்பான் அடித்தட்டு நாடுகளுடன் கைகோர்த்துக் கொண்டதுதான் பெரிய கோமாளிக்கூத்து.
 7. நம்மில் பலர் எடுத்த எடுப்பில் அனைத்தையும் போராட்டம் என்று சொல்லிவிடுகிறோம். போராட்டம் என்று கேள்விப்பட்டவுடன் நமது உடன்பிறப்புகளும் கையில் கிடைத்த கொடியுடன் ரோட்டில் இறங்கிவிடுவதும் இன்று வழமையாகிவிட்டது. அனைத்தையும் கேலிக் கூத்தாக்கி பலர் வீதியில் நின்று கோஷமிட்டு நின்றதையும் கானொளியில் பதிவுசெய்திருந்தார்கள். அம்பிகை அன்னையின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத பல விடயங்கள் அவரின் கட்டுப்பாட்டையும் தாண்டி மேடைஏறுவதுபோல் ஒரு உணர்வு. அவர் இதுவரை பட்ட கஷ்டம் வேதனை எல்லாவற்றையும் சாக்கடையில் தூக்கி போட சிலர் களமிறக்கப்பட்டதாகவே இதை நான் பார்க்கிறேன். வயலில் நெல்மணி விதைத்து நீர்பாய்ச்சி உரியவன் காவலிருக்க வந்தவன் கதிர் அறுத்து கொண்டு சென்ற கதைகள் எமது சரித்திரத்தில் புதிதல்ல.
 8. அம்பிகையின் உண்ணாவிரத அமைதிவழி முறையீட்டு வேண்டுதல் வெற்றியடைந்ததற்கு வாழ்த்துக்கள்.
 9. கோடிட்ட இடங்களை அவரவர் இஷ்டபடி நிரப்பவும் எண்ணு சொல்லிதானே வழக்கமா திராவிட கட்சிகள் அவிங்கட தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிப்பாங்க. கட்சியின் கொள்கை என்ன என்பதிலும் அதன் பெயர் என்ன என்பதுதானே பாமரனுக்கு முக்கியம்.
 10. போர் முடிவுக்கு வந்து இத்தனை வருடங்களின் பின்னரும் போர் குற்றவிசாரணை வேண்டும் என்றால் உருப்படியான தடையங்களையும் சாட்சிகளையும் தயார்படுத்தவே இன்னும் 10 வருடங்கள் செல்லும். இதற்கு சமாந்தரமாகவே சிங்கள அரசாங்கங்களின் இனசுத்திகரிப்பு, இனவழிப்பு, இனபிரச்சினைக்கான தீர்வு இப்படி பன்முகப்பட்ட விடயங்களையும் ஐ.நா முன்னிலையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுதல் வேண்டும்.
 11. இந்த செய்தியில் சொல்லப்பட்ட முக்கால் வாசி விடயம் எனக்கு விளங்கலை. சொல்ல வந்ததை பிரட்டி பிரட்டி போட்டல் எப்படி புரியும்.
 12. ஏற்கனவே ஈழத்தமிழன் உள்ளூர் கட்சிகளின் தொல்லை தாங்கமுடியாமல் தெறிச்சு நிக்கிறான். விரல் விட்டு எண்ண பக்கத்திலை நிக்கிறவன்களின் கைகளையும் இரவல் கேட்கவேண்டியிருக்கு. இது போதாது என்று இறக்குமதி செய்த கட்சிகள் களத்தில் இறக்க வேண்டுமா? தென்னிலங்கை கட்சிகள் வடக்கில் செயல்படுவதே தமிழர் தரப்புக்கு பாரிய அரசியல் பின்னடைவு என்பதை புரியாதவனல்ல தமிழன். அப்படியிருக்க இந்திய கட்சி தமிழ் பிரதேசத்தில் கிளை அமைத்து காலூன்ற எண்ணுவது ஏற்புடையதல்ல. ஈழத்தமிழனின் சுய நிர்ணய உரிமை, சுயாட்சி, தமிழ் பிரதேசங்களின் கட்டுமானங்கள் பற்றி பா.ஜ.க தனது கொள்கைகள் என்ன என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தவேண்டும். கட்சி வேண்டுமா இல்லையா என்பது பற்றி பிறகு வேண்டுமானால் சிந்திக்கலாம். இதுபோன்ற அரசியல் உத்திகளை இந்தியா தமிழ் நாட்டுடன் நிறுத்திக்கொண்டால் எல்லா தரப்பினருக்கும் நல்லது. புதுடில்லியின் இந்த முட்டாள்தனமான நகர்வால் அதன் பூகோளஅரசியல் இராஜ தந்திரம் அடிமட்ட நிலைக்கு வந்துவிட்டது.
 13. தர்க்கரீதியாக கருத்து சொல்வதாக எண்ணிக்கொண்டு வார்த்தை பயன்பாட்டில் கவனம்செலுத்தாதுவிட்டால் அதன் அர்த்தமே மாறிப்போய்விடும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். விவாதம் செய்பவர் எதிராளிக்காக பேசுவதை விடுத்து தனக்காக மட்டுமே பேசவேண்டும். எனவே இங்கு தெளிவுபடுத்த என்பதை குழப்பியடிக்க என்று மாற்றி சொல்ல வேண்டும். புலிகளை காரணம் சொல்லி காரியத்தை முடக்க முயற்சிக்கிறார்கள் என்று எதிராளியின் மீது குற்றம் சுமத்தி விட்டு அதே உபாயத்தை எமக்கு சாதகமாக கையில் எடுத்து வியாக்கியானம் செய்ய வேண்டிய தேவை இல்லை. அது இராஜதந்திர நகர்வுமல்ல.
 14. எதை வைத்து இந்த சிற்பத்தை "பாம்பே லக்சுமி" என்று அழைக்கிறார்கள் என்பது புரியவில்லை. தோற்றத்தின் அடிப்படையில் வேண்டுமானால் "பாம்பே சிலுக்கு" என்று பெயரிடலாமே.
 15. ஜனாதிபதி சட்டதரணி என்பது பதவியல்ல இது அவர்களுக்கு வழங்கப்படும் தொழில்சார் பட்டம் மட்டுமே. குடியரசு ஆவதற்கு முன்பாக இருந்த King´s Counsel(KC), Queen´s Counsel(QC) என்ற வரிசையில் இன்று President´s Counsel(PC) என்ற கௌரவ பட்டம் இலங்கையில் சிரேஸ்ட சட்டதரணிகளுக்கு அவர்களின் துறைசார்ந்த தகமை, சேவை ஆகிய அடிப்படைகளில் வழங்கப்படுகிறது. ஜனாதிபதி சட்டதரணிகள் என பட்டம் பெற்றவர் ஜனாதிபதிக்கு சட்டதரணியாக பதவி வகிக்கிறார் என்று கொள்வது தவறு. இந்த பட்டம் பெற்றவர்கள் நீதிமன்றங்களில் நீதிபதிக்கு அருகே தனியாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமரவும் தமது சீருடைகளை பட்டு வஸ்திரத்தில் அணியவும் தகுதிபெற்றவர்கள் ஆவர். இங்கிலாந்தில் தோன்றிய இந்த வழமை அதன் பழைய காலனித்துவ /காமன்வெல்த் நாடுகளில் இன்றும் உள்ளது.
 16. நல்ல காரியங்களில் எதிர்பாராத தடங்கல் வரும்போது சிவபூசையில் கரடி நுழைந்தது என்கிறோம். கரடிகை (அல்லது காடிகை) என்பது பண்டைய தமிழரின் தோல் இசைக்கருவிகளில் ஒன்று. பழைய காலத்தில் சிவபூசையில் தீபாராதனை வேளையில் இந்த இசைக்கருவியை கோவிலுக்குள் ஒலிப்பார்கள். கரடிகை ஒலிக்கும்போது உள்ளே இப்போது தீபாராதனை நடைபெறுகின்றது என்பதை கோவிலுக்குள்ளே செல்லமுடியாமல் வெளியில் நின்று வழிபாடு செய்வோருக்கு அறிவிக்கவும் இந்த வாத்தியம் முழங்கும்போது மக்கள் அமைதியாக நின்று தரிசனம் செய்யவும் அவர்களின் கவனத்தை வழிபாட்டில் திசை திருப்பவும் ஒலிக்கப்பட்டது. இந்த வாத்தியத்துக்கு பதிலாக கோவில்களில் இப்போது நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கருவிகளை உரத்து வாசிப்பதை காணலாம். கரடிகை என்பது நாளடைவில் மருவி கரடி ஆனதுடன்பிற்காலத்தில் சிவ பூஜையில் வேண்டப்படாத ஒருபொருளாகவும் மாறிவிட்டது. இதுதான் சிவபூஜையில் கரடி நுழைந்த கதை.
 17. தான் எழுதிய தேசிய கீதத்தின் "நமோ நமோ மாதா" என்ற முதலடியை தனது அனுமதியில்லாமல் இலங்கை அரசு "ஶ்ரீ லங்கா மாதா" என்று மாற்றியதற்காக 1962 இல் தனது எதிர்ப்பை விபரமாக கடிதமொன்றில் எழுதி வைத்தபின் தற்கொலை செய்து கொண்டார் ஆனந்த சமரக்கோன். சுதந்திரத்துக்கு முன்னர் இங்கிலாந்து தேசத்தின் தேசிய கீதத்தை ஒலிப்பதே இலங்கையில் வழமையாக இருந்த அக்கால கட்டத்தில் இந்திய கவிஞர் இரவீந்திர நாத் தாகூரின் மாணவரான ஆனந்த சமரக்கோன் தனது ஆசானின் உதவியுடன் ஒரு தேசிய கீதத்தை இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பாகவே எழுதி வைத்திருந்தார். பல இழுபறிகளுக்கு மத்தியில் சமரக்கோனின் படைப்பு இலங்கையின் தேசியகீதமாக 1951 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த ஆண்டில் சுதந்திரதின விழாவில் இசைக்கப்பட்டது. இதே கவிஞர் இரவீந்திர நாத் தாகூர் தான் இந்தியாவின் தேசிய கீதத்தை வங்க மொழியில் எழுதினார் என்பதும் வங்க மொழி இந்தியாவின் சிறுபான்மை மொழி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 18. அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களும் அஞ்சலியும்.
 19. மேயர் பதவி பெறுவதன்மூலம் தனிப்பட்ட அரசியல், பொருளாதார நலன்களை குறிவைக்கும் ஒரு நபர் தான் இதுபோன்ற ஒரு நன்றிதெரிவிப்பை அறிவிப்பார்.
 20. பிரபல அரசியல்வாதி R. இராஜவரோதயம் சம்பந்தனின் உறவுமுறை எனினும் அவரது தந்தை இல்லை. சம்பந்தனின் தந்தை A. இராஜவரோதயம் இலங்கை சிவில் நிர்வாகத்தில் தொழில்புரிந்தார். எனவே இரண்டு நபர்களுக்கும் இடையில் பெயர் ஒற்றுமை காரணமாக தவறான புரிதலுக்கு வாய்ப்புண்டு.
 21. பிரித்தானிய காலனியாயிருந்த சிங்கப்பூர் 1963 இல் மலேசியாவுடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1965 இல் மலேசிய கூட்டுறவிலிருந்து ஏகமனதாக வெளியேற்றப்பட்டு சுதந்திர நாடாகியது. ஆக இரண்டு வருடங்கள் மட்டும் சிங்கப்பூர் மலேசிய கூட்டு ஒப்பந்ததில் இணைந்திருந்தது.
 22. சிவாஜி எரி சக்தி என்கிறார் அது புதிப்பிக்கது (renewable) என்றும் சொல்கிறார், புரியவில்லை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.