-
டிரம்பும் அவரது வம்பும் – கைமாறியதா நோபல் பரிசு? ஓர் பார்வை!
அல்பிரேட் நோபல் தனது சொந்த விருப்படி எழுதிவைத்த மரண சாசனத்தில் சொல்லப்பட்ட பரிசுகள் 5 (Physics, Chemistry, Physiology or Medicine, Literature, Peace) ஆனால் பின்நாளில் வந்தது அல்பிரேட் நோபல் நினைவுப்பரிசு எனப்படும் பொருளாதார(Economic Sciences) பரிசு. இதையும் நோபல் கமிட்டியே பொறுப்பேற்று வழங்குகிறது ஆனால் அதற்கான செலவை சுவீடன் நாட்டின் மத்திய வங்கி ஏற்றுக் கொள்கிறது. ஏனைய 5 பரிசுகளுக்கான செலவுகளுக்கு மறைந்த நோபலின் சொத்துக்களால் கிடைக்கும் வருமானம் பயன்படுத்தப்படுகிறது. பொருளாதாரத்துக்கான பரிசை நோபலின் நினைவுப்பரிசாக அவரின் உண்மையான 5 மரண சாசன பரிசுகளுடன் இணைத்துக்கொண்டதற்கு நோபலின் சந்ததியினர் கடும் விசனம் தெரிவித்து அதை மத்திய வங்கியின் ஒரு விளம்பர உத்தி என தமது அதிருப்தியை வெளியிட்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
-
தகுமோ… இது முறையோ! - கிரீன்லாந்து விவகாரம்
இந்த போர்மூலாவின்படி பார்த்தால் உலக ஒழுங்கு பிழைத்துவிடும்.
-
தகுமோ… இது முறையோ! - கிரீன்லாந்து விவகாரம்
கிரீன்லாந்தை டென்மார்க் நேரடியாக தனது காலனி ஆதிக்கத்துக்குள் வலிந்து கொண்டுவரவில்லை. நோர்வேயிலிருந்து புறப்பட்டு ஐஸ்லாந்து வழியாக சென்ற எரிக் ரௌட என்ற வீக்கிங் கொள்ளைக்காரத் தலைவன் 980-ஆண்டளவில் வேறும் பல நோர்வே குடியேறிகளுடன் கிரின்லாந்து நாட்டை முதன்முதலாக சென்றடைந்து ஆக்கிரமிப்பு செய்தான். அதற்கு முன்னர் அந்த நாட்டில் பூர்வீககுடிமக்களாக எஸ்கிமோவர்கள் என்று இன்று அழைக்கப்படும் இனுட் இனத்தை சேர்ந்த ஆதிவாசிகளே காணப்பட்டார்கள். சில நுற்றாண்டளவில் இஸ்கண்டிநேவியன் நாடுகள் தமக்குள் ஒப்பந்தங்கள் செய்து ஒரு டேனிஷ் நாட்டு அரசனின் தலைமையில் இணைந்தன. அந்த காலகட்டத்தில் நோர்வே நாட்டின் வீக்கிங் கொள்ளைகாரர்கள் Greenland, Iceland, Faroe island, Hebrides, Isle of Man, Orkney, Shetland ஆகிய பிரதேசங்களை படிப்படியாக கையகப்படுத்திவர அவற்றை நோர்வே நாடும் பல்வேறு காலங்களில் காலனிகளாக வைத்திருந்தது. ஐக்கிய நாடாக மாறிய டென்மார்க், நோர்வே மற்றும் சுவிடன் சில நூற்றாண்டுகள் (1536-1814) அதை நீடித்து பின் முரண்பட்டு சுவீடனும் நோர்வேயும் கூட்டாக பிரிந்தன. அப்போது டென்மார்க் நோர்வேக்கு சொந்தமான காலனிகள் சிலவற்றை பிரிந்து செல்லும் நோர்வே நாட்டுக்கே திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்தும் தனது கைவசமே வைத்துக்கொண்டது. டென்மார்க்குக்கு அப்படி கிடைத்ததுதான் கிரீன்லாந்து. இப்படி காலனியாக உள்வாங்கப்பட்ட கிரீன்லாந்து படிப்படியாக டென்மார்க்கின் முடியரசுக்கு கீழ் உள்ள ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய ஒரு சுயாதீன பிரதேசமாகவும் பின்னர் படிப்படியாக மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்பட்ட சுயாட்சியுள்ள டேனிஷ் முடியுரிமை கொண்ட நாடாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. இன்று நோர்வே நாட்டு மன்னரின் முடியாட்சிக்கு உட்பட்டு வடதுருவம் தொடக்கம் தென்துருவம் வரை அமைந்துள்ள Svalbard, Jan Mayen, Bouvet Island, Bouvet Island, Peter I Island, Queen Maud Land(South pole) ஆகிய பிரதேசங்கள் உள்ளன.
-
டக்ளஸ் தேவானந்தாவின் கைதுக்கு பின்னால்…..!
டக்கி ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துவிட்டார் என்று நம்பவைத்து பாதாள சாக்கடையில் குதித்துவிட்டார் என்பதுதான் உண்மை. அரசியலில் இருந்தபோது எஜமானர்களின் ஏவல்நாயாகவும் சேவை செய்து தனக்காகவும் சிங்கள எஜமானருக்காகவும் அரங்கேற்றிய அராஜகங்களிலும் கொலை கடத்தல்கலிலும் சுமார் 60% வீதமான வேலையை பாதாள மாபியாக்களை வைத்தே முடித்துக்கொண்டார்.
-
ஹிட்லரின் ரத்தக்கறை படிந்த துணியை மரபணு ஆய்வு செய்ததில் கிடைத்த முடிவு என்ன?
DNA மூலம் ஒருவருக்கு யூத பின்னணி இருக்கிறதா என்பதை உறுதியாக அடையாளம் காண முடியாது. ஏனெனில் யூத மதம் என்பது ஒரு மதம் மற்றும் கலாச்சார அடையாளம் ஒரு மரபணு பண்பு அல்ல.
-
யாழ் . மாநகர சபையின் சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது
யாழ் மா நகரசபைக்குள் ஒரு கறுப்பாடு இல்லாமல் சபையின் பதிவேடுகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்க முடியாது. அது போக சிவஞானம் அவர்கள் உண்மையில் நடந்தது என்ன என்பதை விளக்கி இந்த விடயத்தில் தான் அறிந்தவற்றை தெட்ட தெளிவாக பொதுவெளியில் சொல்லவேண்டும். ஆதனத்தின் விலாசம், அந்த இடத்தில் இப்போது இருக்கும் வியாபார இஸ்தாபனத்தின் பெயர், கட்டிடத்தை கொள்வனவுசெய்த காலத்தில் நகரசபையில் யார் யார் பொறுப்பில் இருந்தார்கள் என்ற விபரம் துல்லியமாக குறிப்பிட வேண்டும். அதை விடுத்து கிழக்கு மேற்கு என்று குறிப்பிடுவது வேலைக்கு ஆகாது.
-
அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு
எதிரி நாட்டின் எல்லையில் ஒன்று அல்லது பல நட்பு நாடுகள் இருந்தால் எதிரியை அணு ஆயுதம் கொண்டு தாக்குவது சாத்தியமா என்பதும் சிந்திக்கவேண்டிய ஒரு விடயம். முந்திகொண்டால் ஓரளவுக்கு எதிரியை வெல்லலாம் ஆனாலும் மொத்தத்தில் சிக்கல்தான். எதிர்காலத்தில் அணு ஆயுத போர் வந்தால் அதில் பாதிக்கப்படுவோர் பலர் அந்த போரில் சம்பந்தப்படாத நாடுகளை சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். உலகின் மொத்த அணு ஆயுத கையிருப்பு அனைத்தும் பயன்படுத்தப்பட்டால் நாடுகளை மட்டுமல்ல இந்த உலகத்தையும் சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களையும் கூட அழிக்கலாம்.
-
வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!
திரும்பவும் கற்காலத்துக்கே போறமா? கடைகாரர்களுக்கு சாப்பாட்டுக் கோப்பையை ஒழுங்கா சுத்தமா கழுவி பயன்படுத்தணும் என்று அறிவுறுத்தலுடன் அதை செய்ய கற்றுகுடுங்கப்பா. வாழை இலையை அறுத்து எடுத்துவந்து சுத்தம் பண்ணும் செலவுக்கு ஒரு சாப்பாட்டுக் கோப்பையை சுகாதராமான முறையில் இலகுவாக சுத்தம்பண்ணி மீண்டும் பயன்படுத்தலாம். இந்த லஞ்ச் சீற் ஒரே கோப்பையை திரும்ப திரும்ப பலர் பாவிக்கும் போது சுகாதார பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவதாக எண்ணுகிறேன். நான் படித்த காலத்தில் வாழை இலையைப் பயன்படுத்தி சாப்பிட்டதாக ஞாபகம்.
-
பொலிஸுக்குள் நுழைந்த திருடர்கள்; கொழும்பில் சம்பவம்!
அண்ணே நல்லா தேடி பாருங்க. ஏதாவது கோப்பு புத்தகங்கள், அத்தாட்சி கடிதங்கள், புலனாய்வு குறிப்புகள் மற்றும் குற்றவியல் தடையங்களைத்தான் இந்த கள்வர்கள் எடுத்து சென்றிருப்பார்கள். ராசபக்சாக்கள், பாதல் உலக கோஸ்டிகள் இப்படி செய்திகளில் போய்க்கிட்டு இருக்கிற இந்த நேரத்தில மின்சார கம்பியை திருட என்று திருடன் போலிஸ் நிலையத்தில், அதுவும் போலிஸ் மா அதிபரின் காரியாலத்தில் கதைவை உடைத்து ஒருபோதும் நுழைய மாட்டான்.
-
சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இஸ்லாமியர்களா, மூர்களா, சுன்னியா அல்லது சியா இனத்தவர்களா. அரேபிய குடியேறிகளின் வழித்தோன்றலா, தமிழரா அல்லது சிங்களவர்களா? இல்லை இந்திய கண்டத்திலிருந்து வந்த குடியேறிகளா? இவர்கள் தனி தனியான தமக்குள் ஒன்றுசேரமுடியாத குழுக்கள் என்றால் எப்படி ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்வது? எப்படி இவர்களை அடையாளப்படுத்துவது?
-
தமிழீழத்தில் பாவிக்கப்பட்ட கொடிகளும் அவற்றின் வரலாறுகளும் | ஆவணம்
பல நாடுகள் தமது கொடிகளில் வாள், ஈட்டி, கோடரி, கேடயம் மற்றும் சூலம் போன்ற பழங்காலத்து ஆயுதங்களை கொண்டிருந்தாலும் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள மொசாம்பிக் நாடு மட்டுமே உலகத்திலேயே தனது தேசியக்கொடியில் துப்பாக்கியின் படத்தை பயன்படுத்தி அமைத்துள்ளது. தமிழ் ஈழத்தின் புலிகொடி ஒரு விடுதலை இயக்கத்தின் அடையாளக்கொடி. காலப்போக்கில் அதுவே தேசியக்கொடியாக மாற்றப்பட்டது குறித்தும் அக்கொடி எதிர்கால நடைமுறைகளுக்கு சாத்தியப்படுமா என்பதிலும் பல சாராரால் சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்பட்டது. தமிழீழக் கொடி ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் கொடியாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் கொடி முன்மொழியப்பட்ட தமிழீழ அரசின் விருப்பத்தின் அடையாளமாகவும், பிற நாடுகளில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோரால் பரவலாகப் பயன்படுத்தப்படும் அதே வேளையில், அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசைஅன்றி, அரசியல் இலக்கைக்கை மட்டுமே குறிக்கிறது. இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படாததற்கான காரணம்: தமிழ் ஈழம் ஒரு இறையாண்மை கொண்ட அரசு இல்லை தமிழ் ஈழம் ஒரு இயற்பியல் அரசாக இல்லை, மேலும் அந்தக் கொடி அதற்கான அரசியல் விருப்பத்தை மட்டுமே குறிக்கிறது. அது ஒரு அரசியல் இயக்கத்தின் சின்னம். கொடி என்பது உலகளவில் தமிழர்களுக்கான கலாச்சார மற்றும் அடையாள சின்னமாகும், இது பெரும்பாலும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் அரசியல் பேரணிகளில் காட்டப்படும், ஆனால் அது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கொடியின் அந்தஸ்தைப் பெறவில்லை. கொடி 1990 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்மொழியப்பட்ட அரசின் தேசியக் கொடியாக நியமிக்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளால் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது, இது அதன் பரந்த சர்வதேச ஏற்றுக்கொள்ளலை சிக்கலாக்குகிறது. சுருக்கமாக, தமிழீழக் கொடி புலம்பெயர்ந்தோருக்கு ஒரு குறிப்பிடத்தக்க சின்னமாகவும் அவர்களின் அரசியல் அபிலாஷைகளின் காட்சி பிரதிநிதித்துவமாகவும் உள்ளது, ஆனால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசின் கொடியாக அதற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை.
-
வட்டுக்கோட்டையில் புதுப்பொலிவு பெறும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்!
நாட்டின் புராதன சைவ சமய சின்னங்களை பராமரிக்கவும் அதில் புனரமைப்பு கட்டுமானம் என்பவற்றை மேற்கொள்ளவும் உரிய முறையில் அரச மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதிகளை முன்கூட்டியே பெற்றுக்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் பணிகள் நடைபெற என் வாழ்த்துக்கள்.
-
இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள்.... விபத்துக்கு உள்ளாகுவது ஏன்.
அனைவருக்கும் புரியும்படியாக இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது. இந்திய கார்களுக்கு மட்டுமல்ல அனைத்து சிறிய மலிவான வாகனங்களுக்கும் இது பொருந்தும். ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில் வாகன உற்பத்தியாளர்கள் புதிய கார்களை உருவாக்கும்போது அவற்றின் வடிவமைப்பில் aerodynamics (காற்றியக்கவியல்) என்னென்ன தாக்கங்களை உருவாக்கும் என்பதை பல்வேறு கட்டங்களாக ஆய்வுகூடங்களில் வைத்து பரிசோதித்து பார்த்தபின் உரிய மாற்றங்களை செய்வார்கள். இந்திய தயாரிப்புகளில் இந்த பரிசோதனைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதற்கு நம்பிக்கையான சான்றுகள் உண்டா என்பது தெரியவில்லை. காற்றியக்கவியலுக்கு இசைவாக வடிவமைக்காப்படாத வாகனங்கள்வேகமாக செலுத்தப்படும்போது அதை ஒரு விமானம் ஓடுபாதையில் ஓடி வேகமெடுத்து தரையைவிட்டு உயர்ந்து கிளம்ப தயாராவதை ஒப்பிடலாம். வேகமாக செலுத்தப்படும் மேற்சொன்ன வாகனங்களின் சக்கரங்கள் காற்றியக்கவியல் காரணமாக படிப்படியாக உயர்த்தப்பட்டு தரையில் முட்டாமல் அந்தரத்தில் செல்லவேண்டி ஏற்படலாம். இதனால் வேகமாக செல்லும் இந்த வாகனங்களில் உள்ள பிரேக் இயங்காமல்போக வாகனம் விபத்துக்குள்ளாவதையும் சாரதியால் தவிர்க்கமுடியாமல் போகலாம். வாகனங்களில் உள்ள பிரேக் சிறப்பாக இயங்குவதற்கு சில்லுகள் எப்போதும் தரையை இறுக்கமாக தொட்டு நிற்கவேண்டியது அவசியம்.
-
நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறம் முருகனுக்கு வந்தமைந்த வரலாறு.
செய்தியில் தெளிவில்லை, இங்கு சொல்ல வந்தது இலண்டன் அருங்காட்சியகமா (London museum) அல்லது இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமா(British museum)
-
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
வைத்தியர் சுதர்சன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது உறவினர் நண்பர்கள் பயனாளிகள் அனவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். வைத்தியர் சுதர்சன் பல காலம் இலைமறை காயாய் இருந்து சேவை செய்துள்ளார் போல் தெரிகிறது. எமது கலச்சாரத்தில் மனிதர்களை வாழும்போதே போற்றுவதற்கு பழக்கப்பட்டவர்களுமில்லை. இப்படி எத்தனை நல்ல மனிதர்கள் எங்கள் சமூகத்தில் இன்னும் எமது இனத்துக்காக சேவைசெய்கிறார்களோ தெரியவில்லை.