-
புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்!
முதலிடுவது சரி அங்கு வேலை செய்ய எங்கு ஆட்களை தேடுவது ?
-
சட்டவிரோத கரைவலைத் தொழிலுக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியோருக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கை தேவை - ரவிகரன் எம்.பி வலியுறுத்து
அவை எல்லாவற்றையும் விட மோசமான மீன்பிடி இந்திய இழுவை படகுகளின் ரோலிங் உலகெங்கும் தடை அவர்களுக்கு எதிராக மூச்சு காட்ட மாட்டார் உள்ளுரில் சண்டித்தனம் காட்டுகிறார் .
-
கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை
இன்னும் சில வருடங்களில் வங்குரோத்து தவிர்க்க முடியாது அதை சாதாரண சிங்கள சனத்துக்கு சொல்லி விளக்க எந்த சிங்கள கட்சியும் தயார் இல்லை அனுர உட்பட .சிங்கள சனத்தை பப்பாவில் ஏற்ற இருக்கவே இருக்கு புத்தர் சிலை தமிழர் பகுதியெங்கும் புத்தர் சிலையை எந்த சிங்கள கட்சி வைக்குதோ அந்த கட்சிதானே அடுத்தமுறை ஆட்சி இது இலங்கையின் சாபகேடு .
-
சீனாவிடமிருந்து இலங்கைக்கு 100 நவீன மின்சார பேருந்துகள்
ஓடுமா ? உர கதை போல் கழிவுகள் தான் சைனா வில் இருந்து லங்காவுக்கு வருகின்றன போல் உள்ளது . நவீன உலகின் குப்பை கூடையாகிட்டுது .
-
என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன்
இவரின் சொத்து மதிப்பை 2௦௦9 முன் பின் பார்க்கணும் எந்த ஒரு அரசியலும் தமிழ் மக்களுக்கு செய்யாமல் தனது குடும்பம் மட்டுமே வாழனும் எனும் ஈன பிறவி பார் ஸ்ரீதரன் சுமத்திரனுக்கு ஒன்றும் சளைத்தவர் இல்லை .
-
கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
ஐரோப்பிய நாடுகள் அலட்டிகொள்ளாமல் ஒரே ஒரு செக் மேட் மூவ் அவ்வளவுதான் ட்ரம் பல்டி அடிக்க காரணம் என்கிறார்கள் . அமெரிக்க கருவூல பத்திரங்களின் 12 டிரில்லியன் மதிப்பு மிக்கவை ஐரோப்பிய நாடுகளிடம் உள்ளன வெளியில் சந்தையில் இறக்கினால் டொலர் பெறுமதி ஆதால பாதாளத்துக்கு பாய்ந்து விடும் கடைசியில் Nauru island நிலைமைதான் அமெரிக்காவுக்கு மற்றைய நாடுகளின் கடனில் வாழும் அமெரிக்காவுக்கு இது ஓவர்தான் .
-
சிங்கத்தின் தோட்டத்தில் சிக்கிய தமிழ்ப் பட்டம்? - நிலாந்தன்
https://www.facebook.com/reel/898422819799568 StreamableWatch AQNNIg0l_g47wc8oNDh2OLKnxUgGNuqgpnMldVsAgY-mLngy6PX...
-
கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை
கொப்பிகடைக்குள் புத்தர் சிலையை வைத்து புத்த மடாலயம் ஆக்குவதை போல் வெறும் கல்லை ரெத்தின கல்லாக்கி பார்த்து இருக்கினம் புத்த மதவெறியால் கடைசியில் nauru தீவு மக்களை விட உலகில் மோசமான பஞ்ச பராரிகளாக மாற போகினம் சிங்களவர்கள் .
-
'நல்ல சம்பளம், போட்டி குறைவு' - கப்பல் வேலையில் சேர்வது எப்படி?
இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் களவாக தகுதி சான்றிதழ் பணத்தை கொடுத்தால் இலகுவாக எடுக்கலாம் அதன் பின் .கீல் உள்ளவாறு நிறைய செய்திகள் உலகிற்கு வரலாம் . "அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் மார்ச் 2024-ல், டாலி என்ற சரக்குக் கப்பல் சக்தி இழந்து பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் தூணில் மோதியதால், பாலம் இடிந்து விழுந்தது" அந்த டாலி சரக்கு கப்பலில் வேலை பார்த்த வட இந்தியர்களே .
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன் அண்ணா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்.
-
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவிப்பு!
யார் கொடுத்த சாபமோ வட இந்தியர்கள் போற உலக நாடெல்லாம் வாங்கி கட்டுகிறார்கள் .
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
நீங்கள் சொல்வது சரிதான் உலக வரலாறும் அப்படித்தான் போகின்றது ஆனால் எதிர்கால சந்ததி என்பது ஒன்று இருக்குமா என்பது சந்தேகமே வடகிழக்கு எங்கும் தற்போதுள்ள அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் போதை கலாசாரம் வளர்தெடுக்க படுகிறதே .
-
வெனிசுவேலா மீதான தாக்குதல் அமெரிக்காவுக்கே பிரச்னையாக மாறுமா? உள்நாட்டிலேயே கிளம்பும் எதிர்ப்பு
டெல்லிக்கு பயம் பிடித்து கொண்டு விட்டது போல் உள்ளது .😆
-
ஏன் இந்தியர்களை குறி வைக்கிறார்கள்?
- சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்
அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… பகிரங்கமாக சவால் அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம். ஆனால் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்பதற்காக தேர்தலே நடத்தாமல் இருப்பது ஏற்க முடியாத ஒரு விடயம். அதனை அரசுக்கு சொல்லியிருக்கிறோம். அப்படி பார்த்தால் கடந்த இரு நாடாளுமன்ற தேர்தல்கள் நடாத்தியிருக்க முடியாது. எனவே தேர்தலை உரிய காலத்தில் நடாத்துவது அடிப்படையான விடயம். அரசானது தேர்தலுக்கு முகம் கொடுக்க பயந்துகொண்டு மாகாணசபை தேர்தலை காலவரையின்றி பிற்போட்டுக்கொண்டிருப்பதாக தெரிகின்றது. முடிந்தால் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடாத்துங்கள் என்று பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். வடகிழக்கில் அரசின் செல்வாக்கு பாரிய அளவு சரிவடைந்துள்ளது. மக்கள் தெளிவடைந்துள்ளனர். அதனை நடத்தினால் மண் கௌவ்வுவீர்கள் என சவாலாக கூறுகின்றோம். நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் அத்துடன் பயங்கரவாத தடுப்புச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்படவேண்டும். மாற்றீடாக எந்த சட்டமும் தேவையில்லை என்று எங்களை விட தீவிரமாக இருந்தவர்கள் இந்த ஜேவிபியினர். கடந்தகாலங்களில் மாற்று வரைபுகள் வந்தபோது இவர்கள் அந்த கூட்டங்களுக்கே வரமாட்டார்கள். அதனை நீக்குமாறு நாங்கள் நடாத்திய போராட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அவர்கள் சார்ந்த முக்கியமான ஒருவர் பங்கு கொண்டிருந்தார். எனவே ஆட்சிக்கு வந்தவுடன் இருப்பதை விட மோசமான ஒரு வரைபு தற்போது வெளிவந்துள்ளது. பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்காகவாம் என்று கூறப்படுகின்றது. இது ஒரு நகைப்பிற்குரிய விடயம். அவ்வாறு எனில் மக்களை பாதுகாப்பதற்காக இல்லை. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பாக கட்சி சில கலந்துரையாடல்களை நடாத்தும்.அந்த வரைபை முற்றாக எதிர்க்கிறோம். கட்சியில் இருந்து நீக்கம் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. சட்டத்தின் முன் குற்றம் நிரூபிக்கப்படும் வரைக்கும் அவர் நிரபராதியாக இருந்தாலும் கூட ஒரு பொறுப்பான அரசியல் கட்சி என்ற ரீதியிலே இந்த செயற்பாட்டிற்கு இடம்கொடுக்க கூடாது. எனவே உடனடியாக அவரை கட்சியில் இருந்து நீக்குவது என்ற தீர்மானம் எடுத்திருக்கிறோம். அரியநேந்திரன் அத்துடன் எங்களுடைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பாக பேசியிருக்கிறோம். குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அரியநேந்திரனை கட்சியின் நிகழ்வு ஒன்றில் முக்கியத்துவம் வழங்கியதான குற்றச்சாட்டு ஒன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் மீது இருந்தது. கட்சி தீர்மானத்திற்கு மாறாக செயற்ப்பட்டமையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரே அரியநேந்திரன். அந்த தீர்மானத்துடன் இணைந்து செயற்ப்படவேண்டியது கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.எனவே அவ்வாறு செயற்ப்பட இடமளிக்க முடியாது என்ற விடயத்தையும் வலியுறுத்தியுள்ளோம். சிறீதரன் மீது குற்றச்சாட்டு அத்துடன் தேசிய ரீதியில் ஒரு குற்றச்சாட்டு ஒன்று எமது நாடாளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் அரசுடன் இணைந்து அனைத்திற்கும் வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. விசேடமாக கணக்காளர் நாயகம் நியமனத்தில் ஒரு இராணுவ அதிகாரிக்கு சார்பாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டிற்கான அலுவலகத்திற்கும் இராணுவ அல்லது பாதுகாப்புத்தரப்பின் பின்புலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு சிறீதரன் சார்பாக வாக்களித்தமை மட்டுமல்லாமல் அவர்களை தெரிவுசெய்கின்ற நேர்முக பரீட்சையிலும் தேர்வுசெய்துள்ளார். என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தது.அதனை அவர் மறுத்திருந்தார். ஆனால் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த இருவரையும் நியமிக்கக்கூடாது என்று கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு எழுதிவைத்திருந்தோம். எனவே அது ஒரு தர்மசங்கடமான நிலைமையை கட்சிக்கு ஏற்ப்படுத்தியுள்ளது. இவர்களை நியமிக்க கூடாது என்று கட்சி கடிதம் எழுதியுள்ளது. ஆனால் கட்சியை சேர்ந்தவர் அவர்களை தெரிவுசெய்துள்ளார். அத்துடன் அதற்கு முன்னரும் கூட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக மத்தியகுழு கூட்டத்தில் அவரிடம் விளக்கம் கேட்டிருந்தோம். கூடிய புள்ளி எண்ணிக்கையை பெற்றவருக்கு அந்த பதவியை வழங்காமல் இரண்டாவதாக வந்தவருக்கு அரசாங்கம் கொடுத்தபோது அரசுடன் இணைந்து அவர் வாக்களித்ததாக சொல்லப்பட்டது. ஒழுக்காற்று விடயங்கள் அதற்கான நியாயப்பாடுகளை கட்சிக்கூட்டத்தில் அவர் சொல்லியிருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவி தொடர்பான வாக்கெடுப்பிலும் அப்படி செயற்ப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது. கணக்காளர் நாயகம் விடயத்தில் மூன்று தடவைகள் அவ்வாறு நடந்துள்ளது. இறுதியாகவே அந்த இராணுவ அதிகாரியும், அதற்கு முன்பு ஜனாதிபதி தனது நெருங்கிய நண்பரையும் பின்னர் இரண்டாம் நிலையில் இருக்கும் ஒருவரையும் பரிந்துரை செய்திருந்தார். இருப்பினும் அந்த மூன்றும் நிறைவேறவில்லை. ஏனெனில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருவரும் சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் சேர்ந்து அந்த பிரேரணைகளிற்கு எதிராக வாக்களித்திருந்தனர். அவர்களுக்கு சார்பாக சிறீதரனின் வாக்கு உட்பட நான்கு வாக்குகள் கிடைத்தது. எனவே அரசுடன் இணைந்து இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டது தொடர்பான குற்றச்சாட்டு அவருக்கு இருந்தது. ஏற்கனவே இது தொடர்பாக நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரச்சனையை எழுப்பியிருந்தார். சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்துவது பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த மற்றய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி. எனவே அப்படியாக இருப்பவர் எல்லா விடயங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு அரசுக்கு சார்பாக வாக்களிப்பது தொடர்பான குற்றச்சாட்டு எட்டாவது தடவையாக நடந்துள்ளது. எனவே கட்சியையும் சங்கடப்படுத்தாமல் அவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் இருப்பதற்காக அரசியலமைப்பு பேரவையில் இருந்து அவர் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதாக தீர்மானம் எடுத்துள்ளோம் என்றார். அத்துடன் கட்சியின் ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் உத்தரவு மீறப்படும் சந்தர்ப்பத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அவர்களுக்கு ஞாபகமூட்டப்பட்டிருக்கின்றது. https://tamilwin.com/ - சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.