யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  7,158
 • Joined

 • Last visited

 • Days Won

  9

பெருமாள் last won the day on December 17 2018

பெருமாள் had the most liked content!

Community Reputation

1,653 நட்சத்திரம்

1 Follower

About பெருமாள்

 • Rank
  Advanced Member

Contact Methods

 • MSN
  perumaal1212@gmail.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 1. திருகோணமலை கன்னியாவில் தென்கயிலை ஆதீன குரு முதல்வர் மீது சுடுநீர் ஊற்றிய சம்பவத்தால் இந்து மக்கள் கடும் வேதனை கொண்டுள்ளனர். எனினும் இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கண்டனமோ கருத்தோ வெளியிடாமல் இருக்கிறது. இந்த நிலைமையைப் பார்க்கும்போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தன்னிலை இழந்து விட்டாரா என்று சந்தேகிக்கின்ற அளவில் நிலைமை உள்ளது. என்ன செய்வது, நம்பி வாக்களித்து தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிக் கொட்டியதாக தமிழ் மக்களின் கதை ஆகிவிட்டது. சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தான் பட்ட கடனுக்கு நன்றி செலுத்துகிறது என்றால், இந்த நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய மதத் தலைவர்கள் கூட தங்கள் கண்டனத்தை கருத்தைத் தெரிவிக்காமல் இருக்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரியது. ஆதீன குரு மீது சுடுநீர் ஊற்றுகின்ற அநாகரிகம் நடப்பதைக் கண்டும் காணாமல் இருப் பது போல ஏனைய மதத் தலைவர்கள் பேசாமலிருக்கின்றனர். பரவாயில்லை சைவ சமயத்துறவி ஒரு வருக்கு நடந்த அக்கிரமம் கண்டு இப்போது நீங்கள் பேசாமல் இருந்து சிங்களப் பேரின வாதத்துக்கு வால் பிடிக்கலாம். அல்லது பெளத்த பிக்குகளின் தலை தடவி வாழலாம். ஆனால் என்றோ ஒருநாள் உங்களுக்கும் பெளத்த சிங்களப் பேரினவாதம் சுடுநீர் வீசும். அப்போது அது சுடுநீரோ அல்லது கொதிக்க வைத்த மனிதக் கழிவு நீரோ என்ற கேள்வி எழும். இது நிச்சயம் நடக்கும். இதுவே இயற்கையின் நியதி. மதகுரு என்ற மரியாதைக்குரிய பதவியில் இருக்கின்றவர்கள் ஒருபோதும் இரட்டை வேடம் போடலாகாது. இறைவன் என்றொருவன் இருப்பது உண்மையானால், இந்த இரட்டை வேடம் தண்டனைக்குரியவையாக மாறும் என்பதுதான் உண்மை. எனவே ஒரு இனம் பாதிக்கப்படும்போது, ஒரு சமயத்தின் மதகுருவை இழிவுபடுத்தும்போது நமக்கென்ன என்று யாரும் இருந்துவிடாதீர்கள். பாதிக்கப்பட்ட மதகுருவுக்காகக் குரல் கொடுங்கள். இந்து, பெளத்தம், கத்தோலிக்கம், இஸ்லாம் என்று மதபேதமை பாராதீர்கள் என்பது நம் தயவான கோரிக்கை. இவை ஒருபுறமிருக்க, திருகோணமலை கன்னியா விவகாரத்தில் அமைச்சர் மனோ கணேசன் உடனடியாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவைச் சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறி தற்காலிகத் தீர்வைப் பெற்றுக் கொண்டதன்மூலம் அவர் ஒரு சிறந்த மக்கள் பிரதிநிதி என்பதை நிரூபித்துள்ளார். எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுங்கி நிற்க, மனோ கணேசன் துணிந்து நின்று செயலாற்றியமை பாராட்டுக்குரியது. - Valampuri https://www.tamilwin.com/articles/01/221039?ref=rightsidebar-article
 2. உறவுகள் வாழ்வதால் தான் இங்கு சொல்கிறம் இவ்வளவு கடனை வைத்துகொண்டு தமிழர் வாழ்ந்த பூமியை இடையில் வந்த சிங்களவர் ஆட்சி புரிகிரம் என்று தாங்களும் கடனாளியாகி தமிழரையும் கடனாளி ஆக்கி மதனமுத்தா கூத்து அடிக்கினம் எங்கையோ போகவேண்டிய நாட்டை இனதுவேசத்தால் சொறிலங்கா ஆக்கி வைத்திருக்கும் பெருமை இனவாத சிங்களவர்களையே சாரும் . இவ்வளவு பட்டும் திருந்துவதுக்கு எந்த வழி வகையும் இல்லாமல் தொடர்ந்து நாட்டை நாசம் பண்ணிக்கொண்டு இருக்கினம் அபிவிருத்தி என்பது துளியும் யோசிக்காது பானின் விலையை ஏத்தி போட்டு இப்போதைக்கு இறக்கி வைத்து இருக்கலாம் கிட்டடியில் ஒரேயடியா ஏத்த வேண்டி வரும் இதை பார்த்து விட்டு கொஞ்சம் பானின் விலை க்கும் கடனுக்கும் என்ன சம்பந்தம் என்று கம்பு சுழட்ட வருவினம் காத்து கொண்டு இருக்கிறன் .
 3. ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை என்பது போல் போட்டிக்காரர்கள் வெளிநாடு ஓடிவர இருந்த இலுப்பை பூக்களின் சாயம் வெளுக்குது அந்த அதிபரின் கடந்தகால பரீட்ச்சை தாள்கள் முதல் கொண்டு திரும்பவும் மறு பரிசோதனை நேர்முக தேர்வுகள் நடாத்தனும் அந்த பரீட்சையில் தோல்வி என்றால் நேரே தூக்கி ஜெயிலில் ஆயுள்தண்டனை குடுக்கணும் . ஒரு சந்ததியையே முட்டாள்கள் ஆக்கும் வேலையை செய்து இருக்கிறார் .
 4. எங்கடா மேட்டிலை எலி ஓடவில்லைஎன்று பார்த்துகொண்டு இருந்தன் .
 5. மறைந்த அற்புதன் தினமுரசு பத்திரிகையில் இந்திய தேர்தல் ஒன்றில் கணிப்பீடுகளை துல்லியமாக தினமுரசுவில் அறிவித்து இருந்தார் தேர்தல் முடிந்தபின் ஒரு வாசகர் கேள்வி கேட்கிறார் எப்படி உங்களால் இவ்வளவு துல்லியமாக நான்கு மாதம்களுக்கு முன்பே சொல்ல முடிந்தது பதில் எனக்கு பிடிக்காதா ஆட்களின் வெற்றி தோல்வி நிலவரம்களை வெளியில் நின்று அலசி ஆராய்ந்து முடிவுகளை அறிவித்தன் அதாவது பிடிக்காத ஆளை வெல்லும் உண்மையான சந்தர்பங்களை பார்த்தார் பிடித்த வைகோ போன்றவர்களின் பலவீனமான பக்கம்களையும் சேர்த்தார் விளைவு துல்லியமான எதிர்வு கூறல் செய்ய அவரால் முடிந்தது . ஆனால் இங்கு இலங்கையரசு கடனில் மிதக்குது என்றவுடன் ஈழப்பிரியன் உங்களை அல்ல வல்லரசு நாடுகளும் கடன் வாங்குது என்று அறிவிருந்தும் தங்கள் மனசின் விருப்பத்தை பூர்த்தி செய்ய சிலர் விளைகின்றனர் முடிவு எப்படி என்று இப்ப உங்களுக்கு புரிந்து இருக்கும் .
 6. அரசாங்கம் கடன் முகாமைத்துவ விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்பரால் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மீட்க முடியாத அளவிற்கு நாடு அபாய நிலைமையை நோக்கி நகர்ந்து செல்கின்றது. வெகு விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாடு பாரிய கடன் பொறியில் சிக்குவதனை தவிர்க்க முடியாது. கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் கடன் தொகை 7 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடன் முகாமைத்துவத்தை சீரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். https://www.tamilwin.com/community/01/220933?ref=home-top-trending
 7. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதங்கம் வெளியிடுகின்றனர். நேற்று (19) இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பு நேற்று பிற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த லீலாதேவி ஆனந்தநடராஜா கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று 879 நாளாக எமது தொடர் போராட்டம் இடம்பெற்ற வருகின்றது. இன்றுவரை எமது நிலை தொடர்பில் தீர்வு வழங்குவதற்கு எவரும் முன்வரவில்லை. இதுவரை 30 பேர்வரை தமது பிள்ளைகளை காணாதவர்களாக உயிரை மாய்த்துள்ளனர். இந்த நிலையில் எமது அமைதிவழி போராட்டங்களை குழப்பும் வகையில் எமது கோவில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்து வருகின்றது. இவை திட்டமிட்டு எம்மீது திணிக்கப்படுகின்றமையை உணர்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். எமது அரசியல் தலைமைகள் அரசாங்கத்துடன் ஒத்து செயற்படுவதனாலேயே அவர்கள் மனோகணேசன் அவர்கள் அழைத்தபோது சென்றிருக்கவில்லை. உண்மையில் அவர்கள் அங்கு சென்றிருந்தால் அவர்களிற்கு சங்கடமான நிலை ஏற்பட்டிருக்கும் எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படுகின்றமை தொடர்பிலும் அவர் குறிப்பிட்டிருந்தார். வடக்கில் உள்ள தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரே அணியாக தேர்தலில் களம் இறங்க வேண்டும் எனவும், விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை ஏமாற்றிவிட்டது. அவர்கள் தமது சுயநலம் சார்ந்து செயற்படுகின்றனர். இந்த நிலையில் எமது பிள்ளைகளின் விடிவிற்காகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசுவதற்கு ஓர் பொது அணி தேவைப்படுகின்றது. அவ்வாறு அனைத்து தரப்பும் ஓரணியில் திரண்டு செயற்படுவதே பொருத்தமானது எனவும் அவர் தெரிவித்தார். எமது அரசியல் தலைமைகள் சொத்துக்களை சேர்கின்றார்களோ தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திற்கும், காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்படுவதற்கும் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தனர். அவ்வாறு அவர்கள் தமது சுயநலத்தினை கருத்தில்கொண்டு செயற்பட்டமையால் அவர்களிற்கு வரபிரசாதங்கள் பல வழங்கப்பட்டிருக்கும். ஆகவே அவ்வாறு கிடைத்த அனைத்தையும் அவர்கள் சொத்தாக்கியிருப்பார்கள். அவர்கள் மக்கள் நலன் சார்ந்து செயற்படவில்லை எனவும் தெரிவித்தார். அவர்கள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். http://www.pagetamil.com/65886/
 8. யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர் ஒருவரின் தலையில் மிளகாய் அரைத்து, அவரிடமிருந்து 92,000 ரூபாயை சுருட்டியுள்ளனர் தொலைபேசியில் ஏமாற்றும் திருடர்கள். தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளும் எமகாதகர்கள், அதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளது என கூறி பண மோசடியில் ஈடுபடுவது நீண்டகாலமாக நடந்து வருகிறது. எனினும், ஏமாற்றுக்காரர்களின் வலையில் சிக்குவதற்கு ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி வலையில் சிக்கி ஏமாந்துள்ளார் யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர். கரணவாய் பகுதியை சேர்ந்த இந்த அதிபரிடம் 8 கோடி ரூபா அதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளதாக கூறி, 92,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் அவருக்கு 8 கோடி ரூபா கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மெய்மறந்த அதிபரை, உடனடியாக தமக்கு 92,000 ரூபாய் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறி நம்ப வைத்தனர். இதையடுத்து நெல்லியடியிலுள்ள கொமர்ஷல் வங்கி கிளையில் 92,000 ரூபாய் பணத்தை செலுத்தினார். பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர், மேலும் இரண்டரை இலட்சம் ரூபாவை செலுத்தும்படி கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அதிபர், மீளவும் அந்த இலக்கத்தை தொடர்புகொள்ள முயன்றபோது, அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர்தான் தனது தலையில் மிளகாய் அரைக்கப்பட்டதை உணர்ந்த அதிபர், நேற்று நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். http://www.pagetamil.com/65899/
 9. எனகென்னவோ இந்த 5g பிரச்சனையை விட அதிக முக்கியத்துவம் உள்ள பிரச்சனைகளை மக்கள் ஏன் எட்டிபார்க்காமல் நேரே போராட்டம் பண்ணுகினம் ? ஸ்ரீலங்கன் டெலிகொம் பாதி பங்குகள் வைத்திருக்கும் ஆனந்த கிருஸ்ணன் வாழும் நாட்டிலும் 5g உள்ளது இலங்கையை விட குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகள் தொலை தொடர்பில் விட்டுகொடுப்பு உள்ளது ஆனால் இலங்கையில் இன்னும் இணைய தொலைபேசி பாவனை தடையில் உள்ளது அல்லது மறைமுகமாக தடையில் உள்ளது இங்கு vonage எனப்படும் இணையவலை தொலைபேசி பெட்டி அதற்கு விரும்பிய நாட்டின் நம்பர் எடுக்கலாம் லண்டன் நம்பர் உடன் வந்த பாக்ஸ் ஒன்றை அனுப்ப அங்குள்ள சுங்கம் திருப்பி அனுப்பி விட்டார்கள் பின் அதே பொருளை வேறு பெயரில் நண்பனின் வீட்டுக்கு அனுப்பி தற்போது லண்டன் லோக்கல் நம்பர் யாழில் வேலை செய்கிறது அதே போல் அவர்களும் 45 நாட்டுக்கு இலவசமாக யாழில் இருந்து எடுக்கலாம் இணையவலை போன் என்று நேரே போனால் ஏன் அங்குள்ள கஸ்டம்ஸ் திருப்பி அனுப்புகின்றது ? மற்றைய சிறு நாடுகள் கூட இணையவலை உலகில் இலவச சேவைக்கு வந்து கோல் சென்டர் போன்றவற்றில் பணம் பார்க்கின்றனர் இவ்வளவு இருந்தும் சிலோனுக்கு மாத்திரம் தொலைபேசி எங்களின் காசில் பெரிதாக குறையவில்லை ஏன் ? இந்த கேள்விகளுக்கு விடை தேடினால் 5g க்கு ஏன் குத்தி முறியினம் என்றதுக்கு விடை கிடைக்கும் .
 10. யாழில் போராட எவ்வளவோ வேறு அத்தியாவசிய விடயங்கள் இருக்க உலகம் முழுக்க அதிவேகத்தில் பரவும் நாளைய தொழில் நுடப்பத்தை உள்வாங்கி ஒண்டும் புதிதாக செய்யபோவ தில்லை அங்கு ஆனால் இவ்வளவு மூர்க்கத்தனமாக எதிர்க்கும் அளவுக்கு அங்குள்ள சனத்தை உருக்கொள்ள வைத்த அந்த பெருமகனுக்கு கை கொடுக்கணும் .இங்கு மக்களின் விருப்பத்துக்கு விட்டுபிடிப்பது நல்லது பின்பு கொழும்பில் 5g செயல்படும் விதத்தை அறிந்து ஆறுதலா உள்வரட்டுக்கும் வளரும் உலகில் ஐந்தாவது தலைமுறை தொடர்பாடல் முக்கியமானது இன்றியமையாதது அப்படியே அந்த போராட்டத்தில் இருப்பவர்கள் மழை நீர் சேகரிப்புக்கு குளத்தை தூர் வார கூப்பிட்டால் உண்மை நிலை தெரியும் .
 11. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றியது போல் கன்னியா விவகாரத்தில் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முயற்சி எடுக்க வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரசாங்கத்தை காப்பாற்றுவதில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும் அக்கறை தனது சொந்த தொகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக பிக்குமார் முன்னெடுத்திருக்கும் ஆர்ப்பாட்டத்தில் காட்டாமல் இருப்பது சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இன்று நாட்டில் முக்கியமான பிரச்சினையாக திகழ்ந்து கொண்டிருக்கும் கன்னியா விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். இல்லாவிடில் இது ஒரு இனக்கலவரத்தை நோக்கி நகரக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே இது சம்பந்தமாக அரசாங்கத்துடன் பேசி முடிவெடுக்க வேண்டிய தேவை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உள்ளது. குறிப்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சம்பந்தனுக்கு பாரிய கடப்பாடு உள்ளது. கடந்த சில வருட காலமாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றி வரும் இவர் இந்த பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க தவறுவாராயின் வரலாறு இவரை மன்னிக்காது. குறைந்த பட்சம் இந்து கலாச்சார அமைச்சரிடம் கூட இவர் இது சம்பந்தமாக கலந்துரையாடவில்லை என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி இப்பிரச்சினையில் நேர்மையான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த பிக்குமார்கள் களத்தில் இறங்கிய பொழுது அதனை தமிழர்கள் ஆதரித்தால், அது தமிழ் மக்களுக்கு எதிராக நிச்சயம் திரும்பும் என்று நான் ஊடகங்கள் வாயிலாக எச்சரிக்கை விடுத்திருந்தேன். இன்று அது இடம்பெற்று வருகின்றது. ஆகவே அரசியலில் பௌத்த பிக்குமார்களின் தலையீட்டை நிறுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும் சரி, எதிர்க்கட்சியும் சரி சிங்கள பௌத்த வாக்குகளுக்கு பயந்து நேர்மையான முறையில் செயல்படுவதற்கு தயங்குகின்றார்கள். அதே நேரம் ஆட்சியில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை காப்பாற்றியது போல் இந்த கன்னியா விவகாரத்தில் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் முயற்சி எடுக்க வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/statements/01/220749?ref=home-latesthttps://w
 12. கடன் வெள்ளம் தலைக்கு மேலால் ஓடுது இப்பத்தான் ஒண்டு நித்திரையால் எழும்பி அறிக்கை விடுது .
 13. புதினபலகைகாரர் இன்னும் கால் வைத்துகொண்டு இருக்கினம் அவன் ரோடு போட்டு ஓடிக்கொண்டு இருக்கிறான்.
 14. சொப்ன சுந்தரியின் காரை இப்ப யார் வைத்து இருக்கிறார்கள் ? சைனாவா ? அமெரிக்காவா ?