மோடி அரசு வீட்டுக்கு போகும்முன் இந்த தமிழ்நாட்டு பொம்மை அரசை வைத்து தமிழ்நாட்டை சுடுகாடாக்கி விட்டு போவதில்லை என்பதில் குறியாக இருக்கிறார்கள் மத்தியில் உள்ளவர்கள் இதற்க்கு காரணம் ஓட்டுக்கு பணம் வாங்கி கொள்ளையர்களை ஆட்சியில் அமர்த்திய மக்களையும் சேரும் ஒரு வகையில் .
முன்பெல்லாம் இப்படியான திட்டம்களுக்கு எதிர்ப்பு எழும்போது ஒரு கட்டத்துக்கு மேல் மத்தியில் உள்ளவர்கள் விட்டுகொடுத்து போவார்கள் காரணம் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகள். தமிழ் நாட்டு அரசியலில் தேவை இல்லாமல் குழப்பம் பண்ணுவான் என்று அடங்குவார்கள் மத்தியில் உள்ளவர்கள் இப்ப எவன் சொல்லியும் கேட்க்காமல் முடிந்தால் இராணுவத்தை வைத்தும் தமிழ்நாட்டு மக்கள் விரோத திட்டம்களை நடைமுறைபடுத்த முயல்கிறார்கள் ஸ்டெரிலைட் ஆலை, நியுரினோ ,மிதேன்,அத்துமீறிய காஸ் லைன் பைப் ,கூடம்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கிளம்பும் மர்ம கதிர் வீச்சு , மணல் கொள்ளை எனும் பெயரில் நடக்கும் கனிம வள கொள்ளை . இப்படி அனுமான் வால் போல் நீண்டுகொண்டு போகுது .