Everything posted by பெருமாள்
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
மேல் உள்ளது உண்மையோ பொய்யோ என்று யோசிக்க முன் கொர்னோ தொத்து தொடங்கும் போது பக்கத்து வல்லரசு என்று தங்களுக்கு தாங்களே சொல்லி கொள்பவர்கள் தாரை தப்பட்டை மணி போன்றவற்றை அவர்களின் நாடு முழுக்க ஒரே நேரத்தில் அடித்து கொர்னோவை வெற்றி கரமாய் கலைத்தவர்கள்😁😁அதே போல் மந்திரித்த தண்ணியை இலங்கை ஆறுகளில் கலந்து கொர்னோவை ஒரேயடியாய் கலைத்த வீரர் கோத்தபாய ராஜபக்சா 😁இப்படியான முட்டாள்கள் இன்னமும் இருக்கிறார்கள் நம்மிடையே வாழ்கிறார்கள் அப்படியானவர்களுக்கு மேல் உள்ள ஆக்கம் நல்ல தீனி எங்களுக்கு பொழுது போக்கு .
-
குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா?
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்கூட “சாபம்“ என்கிறவொன்றின்மீது ஏதோவொரு அச்சம் இருந்துகொண்டேதானிருக்கும். அப்படி இலங்கையின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட ஓர் சாபம் அறிவியல் தாண்டியும் உண்மைதானோ என எண்ணும்வகையில், இன்றுவரையில் பலித்துக்கொண்டேதான் இருக்கின்றதென்றால் மிகையில்லை. ஆம், அது இலங்கையின் பூர்வகுடி பெண்ணான குவேனியின் சாபம்தான்! விஜயனின் வருகையோடு ஆரம்பிக்கும் இலங்கை வரலாற்றில் (கிமு 543 ) , அவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் பூர்வகுடி பெண்ணான குவேனிக்கும் விஜயனுக்கு ஏற்படும் காதலில் இரு குழந்தைகளும் பிறக்கின்றனர். எனினும் தாம் உருவாக்கியிருக்கும் புதிய நகரங்களுக்கு விஜயனை மன்னராகும்படி கோரும் அவனது எழுநூறு நண்பர்களினதும் கோரிக்கைக்கிணங்க, பாண்டிய இளவரசியை மணந்துகொள்ளும் விஜயன், தன்னுடைய இரு குழந்தைகளையும் அரண்மனையில் விட்டுவிட்டு குவேனியை எங்காவது சென்றுவிடும்படி கூறுகின்றான். இதனால் மனமுடைந்த குவேனி தன் இறுகுழந்தைகளையும் அழைத்துக்கொண்டு “லங்காபுர “எனும் இடத்திற்கு செல்ல, அங்கே அவளது குலத்தவர்களே அவளை கொலை செய்ய முயல்கின்றனர் அங்கிருந்து தப்பியோடும் குவேனியின் குழந்தைகளே இன்றைய இலங்கையின் ஆதிவாசிகளின் முன்னோர்கள் என கருதப்படுகின்றது. புகைப்பட உதவி: Facebook.com உண்மையில் விஜயனுக்காக பெரும் விலையைக் கொடுத்தவள் குவேனி. தனது இனத்தால் தனிமைப்படுத்தியதை ஏற்றுக் கொண்டது கூட விஜயனிடம் கொண்டிருந்த நம்பிக்கையால்தான். தனது இனத்தவர்களை (இயக்கர்களை) விஜயன் அழிக்க முடிவெடுத்தபோது அந்த அழித்தொழிப்புக்கு விஜயனுடன் ஒத்துழைத்தவள். விஜயன் தலைவனாவதற்கு உதவியவள். அப்படிப்பட்ட குவேனியால் விஜயனின் துரோகத்தை அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக்கொள்ள இயலுமா என்ன? அவள், தான் தற்கொலை செய்துகொள்ளும்முன் ஒன்பது சாபங்களை விடுகின்றாள், அந்த சாபங்கள்தான் இன்றுவரையில் இலங்கையை பாடாய்படுத்துகின்றது எனும் நம்பிக்கை சிங்கள மரபுவழி இன்றும் உள்ளது . அந்த ஒன்பது சாபங்கள் ” இலங்கைத் தீவு நான்கு திசைகளாலும் அழிக்கப்படட்டும் ” எனும் முதல் சாபத்தின் பிரகாரம் சுனாமி போன்ற பேரழிவினை சிங்களவர்கள் குறிப்பிடுகின்றனர். “சாபுர்ன” என்றழைக்கப்படுகிற இரண்டாவது சாபத்தின்படி இலங்கைக்கு யார் எல்லாம் தலைமை தாங்குகின்றார்களோ அவர்கள் அழிந்து போகட்டும் என்பதே. மூன்றாவது சாபமான அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு சிக்கட்டும்” என்பதன்படி போர்த்துக்கீசியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என ஆளப்பட்டு இன்று சீனா, இந்தியா, அமேரிக்கா என யாரின் பிடிக்குள் இருக்கின்றோம் என தெரியாமலே சிக்கியிருக்கும் சொப்பனசுந்தரி நிலையே இலங்கைக்கு. நான்காவதாக , ஹெல இனம் இரத்தத் தூய்மை இழந்து தனித்துவத்தை இழக்கட்டும் எனும் “பக்கி மவுரி” என்கிற சாபத்தின்படி இனத்தூய்மை இழந்து, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சாக்காட்டுங்கள் என்கிற சபிப்பு ( சிங்கள வரலாற்றில் ஆட்சிக்காக எழுந்த சகோதர சண்டை காசியப்பன் முதல் ராஜபக்ஷே வரை தொடர்கின்றதோ என்னவோ), ஹெல தீவு இரண்டாகப் பிளந்து கடலுக்குப் பலியாகட்டும் எனும் ‘நிமி மினிச” என்கிற ஐந்தாவது சாபமானது இலங்கை இரண்டாக உடைந்து இறுதியில் சமுத்திரத்தில் மூழ்கட்டும் என்பதே, “தக்னிகா” எனும் ஆறாவது சாபமானது இலங்கையில் அறிவீனமான இனம் தோன்றட்டும் என்பதாகும் , ஏழாவது சாபமானது சூரியன், மழை, காற்று, கடல் மற்றும் நீர் என்பவற்றால் அனர்த்தங்கள் ஏற்படவேண்டும் என்பதே, குணமடைய முடியாததும் விரைவாக பரவக் கூடியதுமான நோய்களுக்கு எப்போதும் இலங்கை ஆளாகிக்கொண்டிருக்கட்டும் எனும் எட்டாவது சாபம், குவேனியின் இறுதி சாபம் என்னவென்றால், கடலில் மிதக்கும் மரக் குச்சி அலைகளுக்கு அகப்பட்டு இங்குமங்குமாக எந்தக் இலக்குமில்லாமல் இறுதியில் மூழ்கிவிடுவது போல எந்தக் கொள்கையும் இல்லாத மக்கள் இலங்கையில் உருவாகட்டும், அவர்கள் சிக்கி சீரழியட்டும் என்பதேயாகும் . விஜயனின் வருகை – புகைப்பட உதவி- www.Alchetron.com இலங்கை வரலாற்றைப் படிப்பவர்களுக்கு குவேனியின் சாபம் இன்றுவரை பலித்து வருவது தெரிய வரும். இலங்கையை ஆண்ட எந்த மன்னரும் இடையூறின்றி, நிம்மதியாக ஆட்சி செய்துவிட்டு மாண்டதில்லை. அவர்கள் அனைவருமே பீதியுடனும், போர்களுடனும், சதிகளை எதிர்கொண்டும்தான் ஆட்சி புரிய நேர்ந்தது. அது பண்டைய மன்னர்கள் தொடக்கம் இன்றைய நவீன அரசாங்கங்கள் வரை நீடிக்கின்றன என்பது கண்கூடு! மகா வம்சத்தின் (கிமு 543 கிபி 275) சிங்கள அரசர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் பலவீனமானவர்களாகவும் திறமையற்றவர்களாகவும் இருந்ததை மகாவம்சத்திலிருந்தே காணலாம். இந்த வம்சத்தின் 54 மன்னர்களில், 15 பேர் ஓர் ஆண்டிற்கும் குறைவாகவும், 30 பேர் நான்கு ஆண்டுகளுக்கு குறைவாகவும், 11 பேர் அரியணையில் இருந்து நீக்கப்பட்டனர், ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டனர், 13 பேர் போரில் கொல்லப்பட்டனர் மற்றும் 22 பேர் அவர்களின் வாரிசுகளால் கொல்லப்பட்டனர். தொடக்ககால சிங்கள அரசர்களின் இருண்ட அவலமான பதிவு அரியணைக்கான இடைவிடாத போராட்டம், சகோதரக் கொலைகள், சதிகள் மற்றும் உள்நாட்டு சண்டைகள் ஆகியன இடம் பெற்றன. குவேனியையும் அவளது பிள்ளைகளையும் விபரிக்கும் ஓவியம் – புகைப்பட உதவி- www.erasmusu.com சுதந்திர இலங்கையின் இன்று 73 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் இலங்கைத் தீவு வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியாது ஒட்டாண்டி நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியாக ஆட்சி செய்த ராஜபக்ஷே வம்சம் அசிங்கப்பட்டு வரை நிற்கிறது. நெருக்கடிகள் ஒன்றா இரண்டா? அவை வரிசையாக எழுந்து நிற்கின்றன. நிதித் தட்டுப்பாடு, உற்பத்தி வீழ்ச்சி, பண வீக்கம், கோவிட், விலைவாசி ஏற்றம் , உயிர் காக்கும் மருந்துகள் , உணவுப்பொருட்கள் உற்பட அத்தியாவசிய பொருட்கள் இன்மை போன்ற நெருக்கடிகளை இலங்கை அரசாங்கம் எதிர் நோக்குகிறது. குவேனியின் சாபம் இலங்கை ஆட்சியாளர்களைத் துரத்துகிறதா என்ற கேள்வி எம்மை சிந்திக்கதான் வைக்கின்றது. https://archive.roar.media/tamil/main/history/kuwenis-curse
-
சகோதரருடன் திருமணம்... நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண் அரசியல்வாதி
பெண் அரசியல்வாதி இல்ஹான் ஓமர் குறித்து பரவும் சர்ச்சைக்குரிய விவகாரம் உண்மையானால், சிறை அல்லது நாடுகடத்தப்படும் சூழலை அவர் எதிர்கொள்ள நேரிடும் என செனட்டர் டெட் க்ரூஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெவ்வேறு சட்டங்களின் கீழ் முற்போக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினரான இல்ஹான் ஓமர், தனது சகோதரர் அமெரிக்கக் குடியுரிமை பெறும் பொருட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ள நிலையிலேயே செனட்டர் டெட் க்ரூஸ் கடுமையாக விமர்சனம் முன்வைத்துள்ளதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். சமூக ஊடகத்தில் ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ள க்ரூஸ், கூறப்படும் போலித் திருமணத்திற்காக ஓமரை குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வெளிவரும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், ஓமர் மூன்று வெவ்வேறு சட்டங்களின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடியேற்ற விதிகளைத் தவிர்ப்பதற்காக, தெரிந்தே திருமணத்தில் ஈடுபடுவதை எந்தவொரு அமெரிக்கருக்கும் ஃபெடரல் திருமண மோசடிச் சட்டம் தடை செய்கிறது. மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களின் சட்டங்களும் நெருங்கிய இரத்த உறவினர்களுக்கு இடையேயான திருமணத்தை தடை செய்கின்றன. மேலும், மினசோட்டா மாகாணம் இரத்த உறவுக்குள் பாலியல் உறவை ஒரு பெரும் குற்றமாகப் பட்டியலிட்டுள்ளது. அப்படியான குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன், சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளாத தம்பதிகள் கூட்டாக ஃபெடரல் வரித் தாக்கல் செய்வதைத் தடைசெய்யும் மற்றும் 100,000 டொலர் வரை அபராதம் விதிக்கக்கூடிய வரி மோசடிச் சட்டத்தை க்ரூஸ் குறிப்பிட்டுள்ளார். உண்மையில், ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக ஓமரை வாட்டி வதைத்து வருவதாகவே கூறப்படுகிறது. ஆனால், டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் நடந்த சமீபத்திய பேரணியில் பேசும்போது ஓமர் தொடர்பில் அந்த கருத்தைப் பரப்பிய பிறகு, அது மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது. குறித்த பேரணியில் பேசிய ட்ரம்ப், ஓமர் தமது சகோதரரை திருமணம் செய்துள்ளார். இதனால், ஓமர் இங்கே சட்டத்திற்கு புறம்பானவர், அவரை உரிய முறைப்படி வெளியேற்ற வேண்டும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். உறுதி செய்யவில்லை கடந்த 2020ல் முதல் முறையாக ஓமர் தொடர்பிலான இந்த குற்றச்சாட்டு வெளிச்சத்திற்கு வந்தது. சோமாலிய சமூகத் தலைவரான அப்திஹகிம் உஸ்மான், 43 வயதான ஓமர் தனது இரண்டாவது கணவரான அகமது எல்மி என்பவரை, அவர் அமெரிக்காவில் தங்குவதற்காகவே திருமணம் செய்துகொண்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதை எந்த ஊடகமும் உறுதி செய்யவில்லை என்றும், ஆனால் அவர்களது திருமணச் சான்றிதழ் 2021ல் வெளியாகும் வரையில் வெளியுலகிற்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஓமர் 2002 ஆம் ஆண்டில் முஸ்லிம் மதச் சடங்கின்படி அகமது ஹிரிசியை மணந்தார். இந்தத் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. விவாகரத்திற்கு பின்னர், ஓமர், அகமது எல்மியை மத அடிப்படையிலான சடங்குகள் ஏதுமின்றி திருமணம் செய்துகொண்டார், பின்னர் 2011-ல் இருவரும் பிரிந்துவிட்டனர். ஓமர் 2012-ல் ஹிரிசியுடன் மீண்டும் இணைந்தார், மேலும் 2017-ல் எல்மியை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்தார். ஓமரும் ஹிரிசியும் 2018-ல் சட்டப்பூர்வமாக மீண்டும் திருமணம் செய்துகொண்டனர். மீண்டும் 2019ல் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். ஓமர் தற்போது டிம் மைனெட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரான ஓமர் சோமாலியாவின் தலைநகரில் பிறந்தவர், நாட்டின் உள்நாட்டுப் போரின் போது தனது குடும்பத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றார். 12 வயதில் அமெரிக்காவில் தஞ்சம் கோருவதற்கு முன்பு, அவர் நான்கு ஆண்டுகள் அகதிகள் முகாமில் கழித்துள்ளார். ஓமர் தமது சகோதரரை திருமணம் செய்துகொண்டதாக உறுதி செய்யப்பட்ட எந்த உத்தியோகப்பூர்வ ஆதாரங்களும் இதுவரை எவரும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Lankasri Newsசகோதரருடன் திருமணம்... நாடுகடத்தப்படும் நெருக்கடியை எதிர்...பெண் அரசியல்வாதி இல்ஹான் ஓமர் குறித்து பரவும் சர்ச்சைக்குரிய விவகாரம் உண்மையானால், சிறை அல்லது நாடுகடத்தப்படும் சூழலை அவ...
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
சிறு பிள்ளை தனமாய் கேட்டு கொண்டு இருக்க முடியாது இனி உங்களுக்கு பதில் அளிப்பதை நிறுத்துவதை தவிர வேறு வழி இல்லை .
-
மன்னாரிற்கு வரவுள்ள ஜனாதிபதி – வடக்கு மீனவர்களின் பிரச்சினைக்கும் துரித நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
இதே இடத்தில் சிங்கள மீனவர்களின் வலைகள் அறுக்க பட்டால் சிங்கள கடல்படை பொங்கி எழுந்து இருக்கும் .
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
ஆதாரத்தை சொல்லுங்க இருந்தால் தானே சொல்ல முடியும் .😁
-
லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை பிரஜை!
இப்ப சிங்களவர்களுக்கு இலங்கையில் என்ன பிரச்சனை ? அகதி யாகனும் என்று ?
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
தனிப்பட்ட அவதூறு அதை சொல்லுங்க பார்ப்பம் .
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இதற்குள் இந்த திரிக்குள் தலைவரை தேவையில்லாமல் ஏன் இழுக்கிரியல் அவர் பேச்சுக்கு முன் செயல் இருக்கணும் என்று அதை செய்தும் காட்டியவர் . பின்கதவால் வந்த உங்கள் சுமத்து தான் மந்திரத்தால் மாங்காய் பறிப்பேன் தேங்காய் பறிப்பேன் ஒரு நாளில் உழுது நெல் சோறு பொங்கி சாப்பிடுவன் என்று நேரத்துக்கு ஒவ்வொரு கதை அறிக்கை விட்டுக்கொண்டு திரிகிறார். அந்த அண்டம் காக்கை ஒத்தை பனை கள்ளை குடித்து விட்டு கண்டபடி கரையுது எண்டால் உங்களுக்கு எங்கு போச்சு அறிவு ? சுமத்தை விட எவ்வளவே துடிப்பான இளையோர் அங்கு இருக்கினம் எங்கை வளர விடுகிரியல் போதைக்கு அடிமையாக்கி நான்கு தலைமுறையை நாசம் பண்ணி வைத்து இருக்கிறியள் .
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இப்படி ஒரேயடியாய் கட்சி மாறகூடாது சுமத்தினால் சானக்கியால் மாங்காயும் தேங்காயும் புடுங்க முடியாது என்று ஆரம்பம் முதலே சொல்வது இன்றுதான் உங்களுக்கு விளங்கி இருக்குது .😄
-
இந்திய தூதகரத்தை விரட்டி,சீன தூதரகம் திடீரென சுற்றிவளைத்த மக்களால் பரபரப்புl
யாழில் உள்ள இந்திய தூதரகம் யாருக்காக குந்தி இருக்கினம் ?
-
இந்திய தூதகரத்தை விரட்டி,சீன தூதரகம் திடீரென சுற்றிவளைத்த மக்களால் பரபரப்புl
- முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இறுதி சண்டையின் பின் வடகிழக்கு தமிழர்களுக்கு கிடைத்த சாபகேடுகளில் முதன்மையானது போரில் எந்த பக்கமும் சம்பந்தமில்லாமல் ஒளித்து கிடந்தவர்கள் கைகளில் தமிழர் களுக்கு தீர்வு பெற்றுத்தரும் அதிகார இயந்திரத்துக்கு பின்கதவால் உள்ளே கொண்டு வந்து தமிழர்களை நம்ப வைத்து மேலும் மேலும் சாணக்கிய சுமத்திர ரை தவிர வேறு ஒருத்தராலும் தமிழர் களுக்கு ஒரு மாங்காய் கூட பறிக்க முடியாது என்று நம்ப வைப்பது . இந்த கோதாவில் இங்கு களத்தில் ஒருத்தர் இருவரை தவிர மற்றைய தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் முக மூடியுடன் வந்து கருத்து மழை பொழிவதும் நீலி கண்ணீர் விடுவதும் சந்தடி சாக்கில் புலிகள் மீது விமர்சனம் செய்கிறோம் என்று அவதூறு பரப்புவதும் இங்கு நடைபெறுகிறது .- “பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
- “பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
இங்குள்ள பேர்மிங்கம் இந்த கூட்டம் வாழும் இடத்தில் போய் பார்த்தவர்களுக்கு புரியும் ஏன் பிரித்தானிய அகதிகளை அவசர அவசரமாய் தடுப்பதில் மும்முரம் காட்டுகிறது என்று .அவர்கள் இடத்தில் போக்குவரத்து விதிகள் வாகன தரிப்பிடங்கள் எவற்றையுமே மதிப்பதில்லை வாகன தண்டபனம் ரிக்கெட் வைப்பவர்கள் பலமுறை அடிவாங்கி உள்ளார்கள் .அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுப்பது என்றால் அரச உதவிகளில் தங்கியுள்ளவர்களுக்கே முன்னுரிமை .அந்த பகுதி கடைகளில் கார்ட் மிசின் என்பதே கிடையாது எல்லாமே பண புழக்கம் அதற்கே முன்னுரிமை . அதே போல் கிழக்கு லண்டனும் ஈஸ்ட் காம் தெருக்களும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருகிறது வெள்ளி கிழமைகளில் டபுள் மஞ்சள் கோட்டில் சர்வ சாதரணமாய் கார்கள் பார்க் பண்ணி விட்டு தொழுகைக்கு செல்வார்கள் கேட்ப்பார் பார்ப்பார் கிடையாது காரணம் அந்த பகுதி அரசியல்வாதி அவர்கள் இனமாய் இருப்பார் . அதே ஈஸ்ட் காம் தெருவில் மகாலட்சுமி கோவில் கோபுரம் கட்ட அதற்கு எதிராக அருகில் உள்ள மசூதிகளில் இருந்து எதிர்ப்பு பெட்டிசம் போக கவுன்சில் நீதி மன்றத்தை நாட பல காலம் இழுபட்டது கடைசியில் நீதிபதி சொன்ன தீர்ப்பு அனைவரும் அறிந்ததே .- “பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
இதே போன்ற சம்பவம் லங்காவில் நடந்து இருந்தால் இப்ப என்ன நடந்து இருக்கும் ?- பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை
இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவும் காற்றுச் சுழற்சி! எதிர்வரும் 3 தினங்களுக்கு தொடரவுள்ள மழை.. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் பரவலான மழை எதிர்வரும் மூன்று தினங்களுக்கு குறிப்பாக எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது என்று என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றுச் சுழற்சி இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவும் காற்றுச் சுழற்சி காரணமாகவும், இலங்கையின் தென்மேற்குப் பகுதியை மையம் கொண்டு நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாகவும், வடகீழ்ப் பருவக்காற்றுக் கொண்டு வரும் அதிக ஈரப்பதன் காரணமாக இவ்வாறு நடைபெற வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், குறிப்பாக நாளையும்(10.12.2025) நாளை மறுதினமும் (11.12.2025) நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் நிலப்பகுதிகள் அவற்றின் தரைக்கீழ் நீரை உறிஞ்சும் முழுக்கொள்ளளவை அடைந்து விட்டன. குளங்கள் அவற்றின் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. சில பெரிய குளங்களின் மேலதிக நீர் வெளியேற்றத்துக்கான கதவுகள் இன்று பகல் திறக்கப்பட்டன(இரணைமடு). இந்நிலையில் கிடைக்கும் மழை வீழ்ச்சி முழுவதும் தரை மேற்பரப்பில் தேங்குவதுடன் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தையும் உருவாக்கக்கூடும். எனவே வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள நிகழ்வுகள் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம். மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்களிலும் மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் கனமழை கிடைக்கும் என்பதனால் குருநாகல், கண்டி, மாத்தளை,நுவரெலியா, பதுளை, கேகாலை, மாவட்டங்களின் சில பகுதிகளில் மண்சரிவுக்கான வாய்ப்புக்களும் உண்டு. கனமழை காரணமாக.. நிலச்சரிவு நிகழ்வைப் பல காரணிகள் தூண்டினாலும் இலங்கையைப் பொறுத்தவரை தொடர்ச்சியான மற்றும் கன மழைவீழ்ச்சியே காரணம். இலங்கையின் தென்கிழக்கே காணப்படும் காற்றுச் சுழற்சியும், தென்மேற்கே நிலவும் வளிமண்டல தளம்பல் நிலையும் மேலே குறிப்பிட்ட குருநாகல், கண்டி, மாத்தளை,நுவரெலியா, பதுளை, கேகாலை, மாவட்டங்களுக்கு கன மழை கிடைக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் எதிர்வரும் 12.12.2025 இப்பிரதேசங்களில் வாழும் மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம். தற்போது நிலவும் வளிமண்டல நிலைமைகள் காரணமாக இலங்கை முழுவதுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் ஒரு சில தாழ் நிலப்பகுதிகளில் சிறிய அளவில் வெள்ள அனர்த்தம் நிகழுக் கூடும். உண்மையில் வழமையான பருவ மழைக் காலங்களில் இவ்வாறான மழை என்பது சாதாரணமானது. ஆனால் டிட்வா புயலின் காரணமாக இலங்கை முழுவதும் மிகக் கனமழை கிடைத்துள்ளதனால் இனி வரும் நாட்களில் கிடைக்கும் கனமான மழை கூட (75 மி.மீ முதல் 125 மி.மீ) சில பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது சிறந்தது. எங்கள் மத்திய மலை நாட்டில் இன்றும் கூட சில சில பகுதிகளில் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் இடம்பெறுகின்றன. பல பிரதேசங்களில் கிடைத்த கனமழை காரணமாக மண்ணியல் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதிகளிலும் சற்று கனமான மழை கிடைத்தாலே அது நிலச்சரிவு நிகழ்வைத் தூண்டும். அத்தோடு எதிர்வரும் 15ம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச்சுழற்சி ஒன்று உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதனை அடுத்த சில நாட்களிலேயே உறுதிப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். Tamilwinஇலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவும் காற்றுச் சுழற்சி!...வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் பரவலான மழை எதிர்வரும் மூன்று...- முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
சுமத்திரன் கடைசி சண்டையின் பின் தமிழர்களுக்காக அல்லும் பகலும் பாடு பட்டவர் சிங்களவர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் என்று அவரின் அடிவருடிகளுக்கு சொன்னால் தான் நிம்மதியாய் இருக்கும்கள் . இங்கு வடகிழக்கு தமிழர்களுக்கு தீர்வு முக்கியமல்ல சுமத்திரன் தலைவராகனும் அதுதான் சுமத்திர விசுவாசிகளுக்கு முக்கியம் .- இலங்கையை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது
இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் பல்கலைக்கழக பேராசிரியர், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கச்செயலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற குற்ற வரலாறு இவருக்கு இருப்பதால், இவரைக் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக பணியிலிருந்து நீக்கம் சுமித் குணசேகர என்ற சந்தேகநபர் 1998 ஆம் ஆண்டில் கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர் என்றும், அதில் ஒரு சிறுவருடன் தொடர்புடைய பாலியல் குற்றத்தை புரிந்ததாக அவரே ஒப்புக்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், 2004 ஆம் ஆண்டிலும் ஒழுங்கீனமான நடத்தைக்காக அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். குணசேகர மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருந்தபோதிலும், கனடாவில் செய்த குற்றங்களால், அமெரிக்காவில் சட்டப்படி இருக்க இவருக்கு உரிமை இல்லை என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தத் தகவல் தெரியவந்தவுடன், ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகம் அவரை உடனடியாகப் பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. "பாலியல் குற்றவாளி ஒருவர் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றியது மிகவும் வேதனை அளிக்கிறது" என்று அமெரிக்க அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். Tamilwinஇலங்கையை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது...இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் பல்கலைக்கழக பேராசிரியர், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்கச்செயலாக்க அதிகாரிகளால்...- அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு
இமயமலை கடலுக்குள் அமிழ்ந்து விட்டது என்று சொன்னாலும் நம்பலாம் .சிங்களவர்களின் தமிழர் எதிர்ப்பு இனவாதம் மறந்து விட்டார்கள் என்று சொன்னால் நம்பவே நம்ப கூடாது . இது புலம்பெயர் தமிழர்களிடம் புயல் அழிவுக்கு பணம் கறக்க நடிக்கும் நடிப்பு .எம் தமிழரிடமே பணத்தை வாங்கி வடகிழக்கில் இன்னும் 1௦௦ புத்த விகாரை கட்ட தொடங்குவார்கள் இனவாத சிங்களவர்கள் . அனுரா அரசு என்பது பொருளாதார வங்குரோத்து போன இலங்கைக்கு மற்றொரு முகமூடி அவ்வளவே கொஞ்ச பணம் சேர்ந்தவுடன் வடகிழக்கில் காலாவதியான சிங்கள கோப்பி கடையில் சிங்கள இனவாத புத்தர் சிலை வைத்து புதிய கற்பனை மகாவம்சம் எழுதுவார்கள் சொல்லி வைத்தது போல் கொஞ்ச சிங்கள அரசியல் வாதிகள் தமிழ்நாட்டில் இந்து கோவில் வழிபாடு செய்வார்கள் தமிழ் நாட்டு தமிழரை முட்டாள்கள் ஆக்க .- முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
ராஜ பக்சா கூட்டத்தை சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்ப வைக்க அண்டம் காக்கை பனம் கள்ளு அருந்தி விட்டு கரைவது போல் தமிழர் இனவழிப்பு நடைபெற வில்லை அப்படி நடந்து இருந்தாலும் நிரூபிக்க ஆதரம்கள் இல்லை என்று உள்ள வெளிநாடுகளுக்கு தனியே பறந்து பறந்து பரப்புரை தமிழருக்கு எதிராக பிரசாரம் செய்தவர் இப்ப என்ன சொல்லுகிறார் என்று கேட்டு சொல்லுங்க அவரின் வால்பிடிகளே.................- போலித் தகவல்களை நிறுத்துங்கள்! பாகிஸ்தான் காலாவதியான பொருட்களை வழங்கியதா ?
மொத்தத்தில் இலங்கை தீவு உலகின் குப்பை கூடையாகி விட்டது .- முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
நாக பாம்பை கூட நம்பலாம் இந்த சுமத்திரன் சாணக்கியனை நம்பினால் அங்கிருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழருக்கும் விஷம் வைத்து விடுவார்கள் .- பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை
சுனாமியின் போதும் தமிழர்களின் அழிவின் பின்னும் இலங்கை வங்கு ரோத்து நிலையின் பின்பும் சிங்களத்தின் தமிழர் எதிர்ப்பு இனவாதம் எள்ளளவும் குறையவில்லை இனியும் குறையும் என்று நம்புவது அடி முட்டாள் தனத்தையே குறிக்கும் . இங்கு அனுரா அரசு என்ன எந்த அரசை நம்பி பணம் அனுப்பினாலும் பணத்தை வாங்கி தின்று விட்டு கொழுப்பெடுத்து இன்னும் நாலு புத்தர் சிலையை தமிழர் பகுதிகளில் வைத்து இனவாத விசர் ஆடுவினம்.- பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை
சுனாமி நேரம் சிங்களம் நடந்து கொண்ட முறை நினைவுக்கு வருவதை தடுக்க முடியல . - முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.