-
அமெரிக்காவின் அரைவாசி இடத்தில் கொட்டப்போகும் பனி.
பனி குவியலை அகற்றுவதில் இருந்து கடைக்கு போவது வரை வீட்டில் இருந்தே செய்ய முடியாதே.
-
அமெரிக்காவின் அரைவாசி இடத்தில் கொட்டப்போகும் பனி.
இங்கும் இடைவெளி விடாது பனி கொட்டித் தள்ளுகின்றது. முடியல...
-
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் உலக கவனத்தை ஈர்த்த உரை
நான் கார்னிக்கு வேறு வழியின்றியே வாக்களித்து இருந்தேன். ஆனால் இப்போது அதற்காக பெருமைப்படுகின்றேன்.
-
🚨 புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா!
அப்ப அமெரிக்காவை, நேட்டோ நாடுகளை நம்பினால்...?
-
ஏழு கோடித் தமிழர்களுடனும் உறவைப் பேணத் தவறியது ஏன்?; கஜேந்திரகுமார் எம். பி. கேள்வி
மக்களை எந்தவிதத்திலாவது ஏமாற்றி கவர வேண்டும் எனும் நோக்கத்தின் அடையாளம் தான் இது. ஸ்ராலின் மோடிக்கு கடிதம் எழுதுவது, தமிழக முதலைமைச்சர்கள் தம் பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது எல்லாம் அடிக்கடி நிகழும் எந்த பயனும் அற்ற, எந்த பயனும் ஏற்படக் கூடாது எனும் நோக்கில் மக்களை ஏமாற்றச் செய்யும் விடயம் எனும் மிக அற்பமான உண்மையை இவர் அறியாதவராக இருக்க மாட்டார். ஆனால், அதனையே ஒரு சாதனையாக உருப்பெருக்கம் செய்து தம் வங்குரோத்து அரசியலை நிரப்ப பார்க்கின்றார். இவர்கள் இப்படியே படம் காட்டிக் கொண்டு இருந்தால், முழு வடக்கும் தேசியக் கட்சிகளிடம் சரணடைவதைத் தவிர வேறு எதுவும் நிகழ்ந்து விடாது.
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மிகவும் கவலையான தகவல். சின்ன வயதில் இருந்து அப்பா, அம்மா, எனக்கு படிப்பித்த நல் ஆசான்கள், வாசித்த இலக்கியங்கள், கடந்து சென்ற நல்ல மனிதர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்தது நல்லவர்களுக்கு பெரும் துயரமோ இழப்போ ஏற்படாது என்பதே. அறத்தின் வழி வாழ்கின்றவர்களுக்கு துன்பமும் இழப்பும் குறைவு என்பதே. ஆனால் வாழ்வில் நிகழ்வது அவ்வாறு இல்லை எனும் மிகவும் கசப்பான உண்மையைத் தான் நான் அடிக்கடி காண்கின்றேன். மோகனுக்கும், அவரது பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட இந்த இழப்பை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வாழ்வின் யதார்த்தம் முகத்தில் அறைந்து செல்கின்றது. முரண்பட்ட அறம் தான் இன்று கண் முன்னே விரிந்து செல்கின்றது. மோகன், உங்களைப் பார்த்து Be Strong, இந்த நேரத்தில் உறுதியாக இருங்கள் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதை கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உங்களை அவதானித்ததில் இருந்து நான் உணர்ந்த விடயம். ஏனெனில் உங்கள் துணை சுகவீனம் அடைந்ததில் இருந்து நீங்கள் காட்டிய உறுதி என்னால் நினைத்துப் பார்க்க முடியாதது. எல்லா வழிகளும் அடைபட்டு போன பின்பு கூட நீங்கள் மனதளவில் உறுதியாக இருந்ததை கண்டுள்ளேன். யாழை நிர்வகிப்பதில் கூட எந்த தளர்வையும் நீங்கள் காட்டவில்லை என்பது சாதாரண விடயம் அல்ல. எந்த நிலையிலும் தளராமல் இருக்கும் இந்த மனவுறுதி தான் உங்கள் பிள்ளைகள் இருவருக்கும் இருக்கும் என நம்புகின்றேன். அக்காவுக்கு எனதும் என் குடும்பத்தினரதும் கண்ணீர் அஞ்சலிகள்.
-
யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டில் தவறான தொழில் ; கைதானவர்கள் விளக்கமறியலில்
நீங்கள் சொல்வது சரிதான்.
-
யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டில் தவறான தொழில் ; கைதானவர்கள் விளக்கமறியலில்
ஊருக்கு போய் சொகுசு வீட்டை கட்டியபின் வெளி நாட்டில் இருந்து zoom மூலமும், CCTV மூலமும் சதா கண்காணித்து கொண்டிருக்கும் உரிமையாளர்களுக்கு இது பற்றி அறிய முடியாதா?
-
வட மாகாண முதலீட்டு மாநாடு யாழ்ப்பாணத்தில் ஜன. 21 ஆரம்பம்
நல்லதொரு முயற்சி. இந்த முனைப்பு வெற்றியளிக்க வேண்டும்.
-
சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி
யுத்தம் விட்டு வைத்தவர் எம்மவர்களை விபத்துகள் கொண்டு சொல்கின்றன...
-
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்
அமெரிக்கா மட்டுமல்ல நோட்டோ நாடுகள் அனைத்துமே ஏனைய நாடுகளை சீர்குழைத்து அதன் மூலம் தம் வளங்களை பெருக்கி லாபமடையும் நாடுகள். இந்த நேட்டோ அமைப்பே உடைந்து போகட்டும். அதுவும் தம் அமைப்பில் உள்ள நாட்டால் உடையுமெனில் மகிழ்ச்சி.
-
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
பகிர்வுக்கு நன்றி. நல்லதொரு ஆக்கம்.
-
Eko: வாழ்வை உணர வைக்கும் சிலிர்ப்பூட்டும் சாகசம் | ஓடிடி விரைவுப் பார்வை
மிக வித்தியாசமான ஒரு விறுவிறுப்பான திரைப்படம். கடைசி சில நிமிடங்கள் அல்லது வினாடிகள் வரைக்கும் முடிவை ஊகிக்க முடியாது. அந்த முடிவை புரிந்து கொள்வதற்கு கூட சில கணங்கள் எடுக்கலாம். ஏராளன் quote பண்ணியுள்ள வசனங்கள் தரும் அர்த்தம் தான் படம். இப்படியான சிக்கலான அதே நேரம் யதார்த்தமான உண்மையை திரைக்கதை ஆக்கும் கலை மலையாள இயக்குனர்களுக்கு கை வந்த கலை. படத்தில் வரும் நாய்கள் தான் உண்மையான கதா நாயகர்களோ என்று எண்ணத் தோன்றும். நேற்றிரவு பார்த்தேன்.. ஒரு போதும் இப் படம் நினைவில் அழியாது இருக்கும். வித்தியாசமான படங்களை விரும்புகின்றவர்களுக்கான சினிமா படம் இது.
-
ஐ.நா.சாசனத்தை மீறிச் செயற்பட முடியாது: ஹக்கீம் காட்டம்
Shoe lace சை மட்டும் அல்ல, கோவணத்தைக் கூட.
-
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
துளி துளியாய் பகுதியில் இதற்கென ஒரு தனித்திரி திறந்து விடுங்கள். அதனை pin பண்ணி விடுகின்றேன். திரி சரியான விதத்தில் சென்றால் முகப்பிலும் இணைப்பை கொடுக்க முடியும்.