-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
என் கணிப்பின் படி, 9 வீதத்துக்கும் குறைவாகவே சீமான் இந்த முறை பெறுவார். விஜையால் அதிகம் பாதிக்கப்படப் போவது சீமான். அதிக லாபமடையப் போவது ஸ்டாலின். எனக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருக்கும் பட்சத்தில், சீமானா விஜையா என இருவருக்கும் இடையில் மட்டும் போட்டி இருப்பின், கண்டிப்பாக சீமானுக்குத்தான் நான் வாக்களிப்பேன். தனிப்பட்ட ரீதியில் விஜைய் எனும் வெற்று நடிக விம்பத்தை மட்டுமே கொண்டுள்ள, எந்தவொரு தலைமைத்துவ மற்றும் ஆளுமை அற்ற தகர டப்பாவுக்கு வாக்களிக்க மாட்டேன்.
-
அதிமுகவில் இணைந்தார், நாம் தமிழர் கட்சி காளியம்மாள் - பழனிசாமி முன்னிலையில் ஐக்கியம்!
கொ.ப.செ : கொள்கைகளை பறக்கவிடும் செயலாளர்.
-
சித்திரமும் கைப்பழக்கம் - T. கோபிசங்கர்
சித்திரமும் கைப்பழக்கம் இன்று: Phone ஐ எடுத்து Tamil font ஐ தேடித்தேடி type பண்ணிக் கொண்டிருக்க வந்த பேத்தி போனைப் பறிச்சு “ஏன் இவ்வளவு கஸ்டப்படிறீங்கள் voice typing செய்யலாம்” எண்டு சொல்லத் தொடங்க, “பரவாயில்லை கொண்டா” எண்டு ஒவ்வொரு எழுத்தாத் தேடித்தேடி, தட்டித்தடவி எழுதத் தொடங்கினார் சந்திரன். குடும்பங்கள் busy ஆப் போனதால காலமை good morning இல இருந்து , பிறந்த நாள் வாழ்த்தெல்லாம் what’s app இல மட்டும் எழுத்தாய் மாறி, பிறகு அதுக்கும் பஞ்சி வர, voice message விடத்தொடங்கி, இப்ப என்னெண்டே விளங்காத emoji வந்து நிக்க, தானாவது ஏதாவது எழுதுவம் எண்டு போட்டு, கண்ணாடியை போட்ட படி type பண்ணத் தொடங்கினார். எண்டாலும் பேத்தி சொன்னதைக் கேட்டு ஒரு ஆர்வத்தில voice typing க்குப் போய்ப் பாத்துச் சரி வராம, ஒவ்வொரு எழுத்தா அடிக்க வெளிக்கிட, எழுதத் தொடங்க முதலே அடுத்த என்ன எண்டு googleம், யோசிக்க முதலே என்னெண்டு சொல்ல AI எண்டு எல்லாச் சொற்களும் வசதியும் இருந்தும் எங்கடை தமிழைக் காணாம திருப்பியும் type பண்ணத் தொடங்கினார். டைப் பண்ணிக் கை சோந்த போய் , typo mistake எல்லாம் correct பண்ணிக் களைச்சுப் போய் சாய்மனையில சாய்ஞ்சவரின்றை வீட்டு hall லை காட்சிக்கு மட்டும் வைச்சிருந்த, ஆச்சி பொங்கலுக்குப் பாவிச்ச பித்தளைக் குடத்துக்குப் பக்கத்திலை இருந்த…. Typewriter கண்ணில பட்டுது. அந்தக் காலத்தில இதுதான் தொழிலாயே இருந்திச்சுது , ஆனால் இப்ப கை நோகாம எழுதினாலும் ஐஞ்சு வரி எழுதவே கஸ்டமா இருக்குது எண்டு யோச்சபடி நித்திரையானார். அன்று: முதல் நாள் காலமை குண்டெறிந்தவனை ஓடவிட்டிட்டு, சாவகாசமா பின்னேரம் “ round up” எண்டு சனத்தைக் கூப்பிட்டிருத்தி வைச்சு கைக்கு அம்பிட்ட ஆக்களை அள்ளிக் கொண்டு போக, மிச்சச் சனம் எல்லாம் வீட்டோட பதுங்க பகல்லயே ஊர் இருண்டிச்சுது. இந்தக் களோபரத்தில கடைகளைப் பூட்ட, தேத்தண்ணிக் கடைக்காரன் தானமாப் போட்ட வடைத் துண்டோட பறந்து போய் காகத்தார் வயர்கம்பீல இருந்தபடி நரி இல்லைத்தானே எண்டு வடையைச் சாப்பிடத்தொடங்க கேட்ட வெடிக்கு இந்தமுறையும் வடை கீழ விழ ஆலமரத்தடிக்குப் போய் தானும் அடங்கிக் கொண்டார் ஊரடங்கினது போல. இனி ஊருக்கு விடிஞ்சு தான் என்ன எண்டு போட்டுச் அடுத்த நாள் சூரியனும் சோம்பலோட பிந்தி எழும்ப, இன்னும் நித்திரையால எழும்பாமக் காக்கையார் நித்திரை கொள்ள, சந்திரன் சைக்கிளைக் கொண்டந்து நிறுத்தி “ குட் மோர்னிங்” சொல்ல, கழுத்தை நிமித்தி ஒரு கண்ணால பாத்திட்டு கொஞ்சம் தள்ளிப் போய் “ஆக்கள் எல்லாம் எழும்பீட்டினம் மானத்தை வாங்காம எழும்புங்கோ” எண்டு பிள்ளைகளைப் பாத்துக் கரையத் தொடங்கிச்சுது. சைக்கிளால இறங்கி stand இல விடுவம் எண்டு சந்திரன் இழுக்க , அது , பிள்ளை அங்கால படுத்திருக்கேக்க கையைப் போடேக்க முறண்டு பிடிக்கிற மனசி மாதிரி வர மாட்டன் எண்டு நிண்டிச்சுது. சைக்கிள் பாரம் கூடவா இல்லாட்டி உடம்பில பலமில்லையா எண்டு சந்தேகம் வர, இந்தா பார் இழுக்கிறன் எண்டு ஒருமாதிரி இழுத்து நிமித்தி சைக்கிளை விட்டிட்டு சந்திரன் நிமிர மூண்டு நாளா வருமானமில்லாத முன் சைக்கிள் கடைக்காரன் “ அண்ணை ஒருக்கா கழுவிப் பூட்டுங்கோவன் “ எண்டு சொன்னான். பாவம் தன்னிலும் பாக்க அவன்டை நிலமை மோசம் போல எண்டு நெச்சிட்டு அப்பிடியே மரத்ததடீல இருந்த தேத்தண்ணிக்கடைக்குப் பின்னால இருந்த மேசையையும் கதிரையையும் எடுத்துக்க கொண்டந்து போட்டிட்டு பேப்பரைத் துறந்தார். சந்திரன் மூக்குக் கண்ணாடியின்டை உடைஞ்ச காதுப்பிடியைக்( கைபிடி) விழாம rubber band ஐப் போட்டு ஆடிக்கொண்டிருந்த கைபிடியை இறுக்கிக் கட்டீட்டு பேப்பரைத் துறந்து நேத்தைக்கு நடந்த சம்பவத்தை பாத்திட்டு பாவப் பட்டாலும் எப்பிடியும் ஐஞ்சு பேராவது வருவினம் எண்ட உள்மனசு சொல்ல fileஐ எடுத்து பேப்பரை அடுக்கத் தொடங்கினார். கச்சேரிக்கு முன்னால ஆலமரத்தை குத்தகைக்கு எடுத்தமாதிரி சுத்திவரக் கடைகள். வெய்யிலுக்கு ஒதுக்கமா வடக்கை சைக்கிள் கடையும் தெற்க தேத்தண்ணிக்கடையும் வர, கிழக்க கச்சேரி வாசலுக்கு நேர முன்னுக்கு சந்திரன் ஐக்கியமானர். மரத்திற்கு மேற்கை ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்கிறதுக்கு எல்லாரும் பாவிச்சிச்சினம். ”your highness” எண்டு தொடங்கி பேர் தெரியாத ஒருத்தனுக்கு, (வாசிக்கத் தெரியுமா எண்டும் தெரியாது ) நாலு வரீல கடிதம் எழுதி “yours truly ” எண்டு முடிச்சு, பேருக்கும், விலாசத்துக்கும் எண்டு இடம் விட்டபடி நாலு பேப்பரை அடிச்சு வைச்சிட்டு ஆக்களுக்காகப் பாத்துக்கொண்டிருந்தார் சந்திரன். காஞ்சு போன காபன் பேப்பரை வைச்சு தேய்ஞ்சு போனவிரலால இறுக்கி அடிச்சாத்தான் மற்றப் பேப்பரில ஏதாவது தெரியுது, அதிலேம் குண்டு செய்யிறாங்களோ எண்ட சந்தேகத்தில தடை விதிச்சதால இப்ப வாங்கிறதும் கஸ்டம் , எப்படியாவது அடுத்த முறை form எடுக்குப் கச்சேரிக்குள்ள போகேக்க CC ( Chief Clerk) ற்றை ரெண்டு பழசைக் கேட்டு வாங்கோணும் எண்டு யோசிச்சுக் கொண்டு இருக்க சனப்பிழக்கம் கூடத் தொடங்கிச்சுது. விடியாத காலையில ஊர்ச்சனம் எல்லாம் பிடிபட்டதை தேடினபடியும், பிடிச்சுவங்களைத் திட்டினபடியும் ஒவ்வொரு “campஆ” ஓடித்திரிஞ்சிட்டு ஒண்டும் சரிவராம கடைசியா GAக்கு ஒண்டு, ICRC க்கொண்டு, uniform போட்டபடி ஆமியே நடத்தின சிவில் நிர்வாகத்துக் கொண்டு எண்டு முறைப்பாட்டுக் கடிதம் கேட்டு வந்து நிக்க சைக்கிள் கடைக்காரன் சந்திரனைப் பொறாமையாய்ப் பாத்தான். எழுவதின்டை கடைசீல, அப்பரோட அதே தொழிலுக்குப் போகாம ஏதோ O/L ஐஞ்சு பாடம் திக்கிமுக்கிப் பாஸ் பண்ணி A/L பக்கம் எட்டிப்பாக்காம , “ விதி”ப்பட மோகன் மாதிரி பொம்பிளைப் பள்ளிக்கூட typing course க்குப் போனவர் சந்திரன். கச்சேரியடியில செஞ்சிலுவைச்சங்கம் பெண்களுக்கு மட்டும் எண்டு boardஐ வெளீல போட்டு உள்ளயே போகவிடாமத் தடுக்க , ஆரியகுளத்தடீல bond institute இல கடைசீல இடம் கிடைச்சுது. முதல் நாள் வகுப்பு எல்லா ரெட்டைப் பின்னலும் முன்னால இருக்க கடைசி வாங்கில சந்திரனும் முன்னுக்குப் படிப்பிச்ச கிழவனும் தான் அங்க trouser போட்ட ஆக்கள். வந்த கிழவன் அடிப்படையில இருந்து தொடங்கிறன் எண்டு அறுக்கத் தொடங்கிச்சுது. “ Ink ribbon ஐ load பண்ணுறது முக்கியமான வேலை கமராவிற்கு film roll போடிறது மாதிரித் தான் மேல மூடியைத் திறந்து வட்ட roller க்கால இழுத்து மற்றப் பக்க rollerஐக் கொண்டேச் சுத்தி lock பண்ணிறது முதல் வேலைஅடுத்தது paper load பண்ணிறது. Type பண்ணிற நல்ல பேப்பரைக் கடைசீல தலைகீழா வைச்சு பிறகு காபன் பேப்பரை வைச்சு அதுக்கு மேல copy பண்ணிற பழைய பேப்பரை வைச்சு மேல இருக்கிற வலப்பக்க குமிழை இழுத்தபடி அடுக்கின set ஐ உள்ள தள்ளீட்டு குமிழை உருட்ட சரியான பேப்பர் முன் பக்கம் வந்து நிக்கும்” எண்டு முடிச்சார் முதல் நாள் வகுப்பை. வாத்தியார் ஒவ்வொண்டா இது தான் key board , கடைசி வரீல நீட்டா இருக்கிறது space bar, இடது பக்கம் கீழ shift எண்டு சொல்லிக் கொண்டே போனார். அமெரிக்காரான் கண்டு பிடிச்சதால qwerty keyboard தான் type writerக்கும். எழுத்து அடிக்கிற இடமும் , எழுத்தும் சரியா எண்டு பாக்க hairpin நுனி மாதிரி ஒரு சின்ன வளை வொண்டிருக்கும் sniper point மாதிரி. “நாலு வரிசை key board இல ரெண்டாம் வரிசையில இருந்து தான் தொடங்கிறது. இடது கை நாலு விரல் , வலது கைநாலு விரல், தொடங்கேக்க நடுவில இருந்து தொடங்கி மேல கீழ side இல எண்டு விரலை நீட்டி ,அகட்டி மேல் வரிசை கீழ் வரிசை ஏறி இறங்கி , Capitalக்கு கீழ போய் shift ஐத் தேடிப்பிடிச்சு அமத்தி வைச்சு அடிக்கோணும். எப்பவும் line பாத்து paperஐ உருட்டி, மேல ஒட்டி இருக்கிற scale பாத்து alignment adjust பண்ணி இடைவெளி விடோணும்” எண்டு சொன்னது விளங்கின மாதிரி மண்டையை ஆட்டினார் சந்திரன். a, b, c, d பாத்துப் பாத்து அடிக்கிறது தானே சின்ன வேலை எண்டு நெச்சவர் ஒரு சொல் அடிக்கவே ஒரு நிமிசம் போச்சுது. அந்தாள் என்னெண்டா 50-60 words per minute எண்டாத் தான் வேலை கிடைக்கும் எண்டத்தான் விளங்கிச்சுது இதுகும் கஸ்டம் தான் எண்டு சந்திரனுக்கு. “ஒரு நாள் முழுக்க type பண்ணினால் விராலயே 3 மைல் நடக்கிற களை வரும்” எண்டு முதல் நாள் வாத்தி சொன்னது உண்மையோ எண்ட மாதிரி விரல் வீங்கி ஒரே நோ. விரலின்டை ரேகை எல்லாம் key board ஓட போச்சுது. நல்ல வேளை at least பெருவிரலை பயன்படுத்தாத படியால கைநாட்டுப் போட அதாவது மிஞ்சிச்சுதே எண்டு சந்தோசப்பட்டார். உத்தியோகம் தேடிற பொம்பிளைகள் O/L முடிய அப்ப தேடிப்போறது இந்த tutoryஐ தான். பழைய படங்கிளில வாறமாதிரி short hand & typing தெரிஞ்சாத் stenographer வேலை கிடைக்கும். கிளாக்கர் உத்தியோகம் தேடிக் களைச்சு கடைசீல typist ஆ இருந்து , முல்லைத்தீவுக்கு டிரான்ஸ்பர் வர, மனிசி சொன்னதைக் கேட்டு retire பண்ணீட்டு கச்சேரி வாசலில தஞ்சமடைஞ்சார் ஏற்கனவே இருந்த நாலுபேரோட ஐஞ்சாவதா போன சந்திரனை வாங்கோ எண்டு கூப்பிட்டது அந்த மரத்தைச்சுத்தி இருந்த நாலு பேர், என்ன எல்லாம் அவரிலும் பாக்கக் கிழடுகள் தான். பிறப்பு, இறப்பு, கலியாணம் , பென்சன் , பெட்டிசன் எண்டு எல்லாதுக்கும் formஓட, ஒரு கடிதம் இணைக்கோணும் எண்டதால சந்திரனுக்கும் சோத்துக்கு வழிசெஞ்சது இந்த type writer. அப்ப Town க்குள்ள ஆசுப்பத்திரிக்கு முன்னாலே இருக்கிற பாமசிகளுக்கு முன்னாலேம் ஆக்கள் இருக்கிறவை type writer ஓட. போயக் கொஞ்ச நாளிலியே எங்க போய் எந்த form வாங்கோணும் ,எத்தினை காபன் கொப்பி அடிக்கோணும், எங்க கையெழுத்துப் போடோணும், நிரப்பீட்டு எங்க போய் ஆரைச் சந்திக்கோணும், வேலை நடக்காட்டி எப்பிடி முடிக்கோணும் எண்டு எல்லாத்தையும் தெரிஞ்ச சந்திரன் சூரியனாய்ப் பிரகாசித்தார். ஏதோ பெருமாள் தாற பிச்சையில வாழ்க்கை போக புடிங்கித் திண்ண வந்த அனுமார் மாதிரி மினிபஸ்ஸால வந்திறங்கிறவயை மடக்கிப் பிடிச்சிக் கொண்டந்து விடத் தொடங்கினான் ஒருத்தன். முதல்ல வடை பிளேன்ரீக்கு ஒமெண்டவன் கடைசீல ஐஞ்சு, பத்தெண்டு கையை நீட்ட, விட்டால் வாறதும் போயிடும் எண்டு அவனையும் கவனிச்சுக் கொண்டு ஓடவேண்டியதாப் போட்டுது எல்லா டைபிஸ்ட் மாருக்கும். தொண்ணூறுக்குப்பிறகு காணாமல் போனோர் கடிதங்கள் இல்லாமல் போக, அங்க பக்கத்திலயே வந்த புது நிர்வாகத்திட்டை “ pass” எடுக்க கேட்டுக் கடிதம் , கையெழுத்தெண்டு நிலமை மாற type பண்ணிக்கொண்டிருந்த ஐஞ்சு கடைசீல ரெண்டாக அதே மரத்தடி உறவுகள் எண்டு தொடர்ந்து கொண்டிருந்தார் சந்திரன் . 95 இல சனம் இடம்பெயரத் தொடங்க வீட்டை விட்டுப் போக விருப்பமில்லாத சந்திரன் கடைசீல வெளிக்கிட்டு வேலைக்குப் போக பயம் எண்டு வேலையை விட்ட ஊருக்கே போய்த் திரிஞ்சலைஞ்சு திரும்பி வந்தார். சந்ததிக்கெண்டு சேத்து வைச்சதுகள் எல்லாம் இழந்து போனாலும் அவரின்டை type writer எங்கயோ பக்கத்து வீட்டில இருந்து வந்து சேர திருப்பியும் தூக்கிக்கொண்டு போய்ப் பாத்தா மரத்தைச்சுத்தி மண்மூட்டையும் கச்சேரியடீல காவலும் வர வீட்டோட நிரந்தரமா ஐக்கியமானார். இன்று பேத்தி கேக்கிறாள் license எடுக்க வரச்சொல்லி எண்டு கச்சேரியடிக்கு வந்தவர் இடம் வலம் பிடிபடாமக் கஸ்டப்பட்டார். ஆலமரத்தடியில மோட்டச் சைக்கிளை விட்டு stand ஐத் தட்டத் தலைக்கு மேல கத்தின காகம் பழைய காகம் தானோ எண்டு நிமிந்து பாத்திட்டு, வாசலுக்க போக “ ஏதும் வேணுமா ?செய்தரலாம் form ஐ check பண்ணிக் கொண்டு போங்கோ எண்டு வந்த அனுமாரைத் தாண்டி” உள்ள வந்தார். முந்தி அடிக்கடி போன இடம் இப்ப அந்நியப்பட்டுப் போனதை உணர்ந்த படி அறையைத் தேடி formஐக் குடுக்க, ஐயா மூண்டு கொப்பி வேணும் போய்க் கொண்டு வாங்கோ எண்டவரை இழுத்துக் கொண்டந்த பேத்தி முன்னால இருந்த கடையில Photocopy க்கு குடுக்க , அங்க இருந்த ஒரு பிள்ளை computer இல எதையோ தேடி அழிச்சழிச்சு அடிக்கிறதை எட்டிப் பாத்திட்டு qwerty key ஆவது மாறாமல் இருக்கெண்டு ஆறுதலோட திரும்பி நடந்தார். Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம். பி.கு( எண்பதுகளில St. John’s இல steno ஒராள் இருந்ததாகவும் அவவைப் பாக்கிறதுக்கே பிரின்சிப்பலிட்டை அடி வாங்கப் பல அண்ணாமார் போனதாகவும் வரலாறு உண்டு)
-
வெற்றிலை மென்றுகொண்டு வெதுப்பக வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
நான் நினைக்கிறேன் பாணில், பணிசில் சின்ன வண்டு (கோதுமை மாவில் இருக்கும் வண்டு), பீடித் துண்டு போன்றவற்றை கண்டு அவற்றை அலாக்கா தூக்கி எறிந்து விட்டு மிச்ச பாணை சாப்பிட்ட கடைசி தலைமுறையும் நாங்கள் தான் போல...
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இன்றைய நிலையில் விஜய் 8 வீத வாக்குகள் கூட எடுக்க மாட்டார் என கணக்கின்றேன்.
-
பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத அறையில் என் நண்பர் ஒருவரின் இறந்த உடலை பார்க்க போன போது அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்கள், இறந்த இளம் மற்றும் நடுத்தர பெண்களின் இறந்த உடலுடன் உறவு கொள்வதற்கு என்றே சிலர் உள்ளதாகவும், அதனால் அதை தடுக்க பல கட்டுப்பாடுகள் உள்ளன என்றும் கூறினர். நான் லஞ்சம் கொடுத்து தான் என் நண்பரின் உடலை பார்க்க சென்றேன். பண்டைய காலத்தில் அரச குடும்பத்தை சேர்ந்த இளம் பெண்கள் இறந்த பின் அவ் உடலை காக்க காவலாளிகளை நியமிக்கும் வழக்கம் பல நாடுகளில் வழக்கத்தில் இருந்தன. இங்கு ரொரண்டோவில் பல ஆண்களை ஏமாற்றி (Gays களை) பின் பாலியல் வல்லறவாக்கி கொன்ற சீரியல் கொலையாளி, இறந்த ஆணின் உடலுடன் உறவு கொள்ளும் வழக்கத்தை கொண்டவராக இருந்தார் என அங்கு கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை வைத்து கண்டு பிடித்தனர்.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இது விபத்துக்குள்ளாகவில்லை. அமெரிக்க நீர் மூழ்கி கப்பலில் இருந்து torpedo தாக்குதலின் மூலம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எந்த அரசியல் கட்சியினதும் பிரச்சார தளங்களில இருந்தோ, பிரச்சார YouTube channel களில் இருந்தோ - அது இலங்கையை சார்ந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, இந்தியாவை சார்ந்த கட்சியாக இருந்தாலும் சரி - பதிவுகள், காணொளிகள் இணைக்கப்படல் ஆகாது என்பது கள விதி. ஆனால் இதனை கொஞ்சமும் மதிக்காது, பல நூறு முறை இவ்வாறான தளங்களில் இருந்து நீங்கள் இணைத்துள்ளீர்கள். இவ்வாறு இணைக்கப்பட்டவற்றில் எம்மால் அவதானிக்கப்பட்ட அனைத்தும் நீக்கப்பட்டன. எதிர்காலத்திலும் அவை கண்டிப்பாக நீக்கப்படும். மீண்டும் மீண்டும் இவ்வாறான விதிகளை மீறும் செயல் தொடருமாயின் உங்கள் கருத்துக்களை மட்டுறுத்துனரின் பார்வைக்கு உட்படுத்திய பின்பே அனுமதிக்கப்படும். யாழில் எவரும் வேறு எந்த கட்சி சார்பாகவும் இவ்வாறு பதிவுகளை இடுவதில்லை. சீமான் ஆதரவாளர்களாக தம்மை வெளிப்படுத்துகின்றவர்கள் மட்டுமே இவ்வாறு விதிகளை கொஞ்சமும் மதிக்காது பதிவுகளை பகிர்வதையும் அவதானித்துள்ளோம். இதில் நீங்கள் ஒரு படி மேலே போய் ஒரு முறை தேவடியாள் எனும் மிகவும் ஆபசமான, அநாகரீகமான, பண்பட்ட பொருள் தருகின்ற ஒரு சொல்லை பயன்படுத்தி இருந்த ஒரு பதிவையும் யாழில் பகிர்ந்து அது என்னால் நீக்கப்பட்டது என்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன். கருத்துக்களத்தில் சீமானை மட்டுமல்ல எந்த அரசியல்வாதியையும் நாகரீகமாக விமர்சிக்கும் உரிமை கள உறவுகளுக்கு உள்ளது. சுமந்திரனை, அனுரவை, சாணக்கியனை, மோடியை, கருணாநிதி போன்றவர்களை விமர்சிப்பது போல சீமான் எனும் அரசியல்வாதியையும் விமர்சிக்கும் உரிமை எல்லாருக்கும் உள்ளது. அது தேவையற்ற இடத்தில் வலிந்து செய்த செயலாக உங்களுக்கு தோன்றினால், report செய்து முறையிடவும். நன்றி
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானிய அதிபர் கொல்லப்பட்டு விட்டார் ட்ரம் அறிவித்துள்ளார்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
என்னை கூப்பிட்டீர்களா சார்?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். 65 ஆவது வயதை அடைந்தமையை கொண்டாட சுமந்திரன் தலைமையில் கேக் வெட்டும் நிகழ்வை விரைவில் நடாத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.- இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
சில நாட்களுக்கு முன் டி.ராஜேந்தர் பேசிய ஒரு காணொலி வைரலாயிட்டு இருந்துச்சு. அதில அவர் விரக்தியான புன்னகையுடன் கூறியது... “என்னுடைய மியூசிக்ல உயிருள்ளவரை உஷா படத்தில் வந்த பாடல்களை ஏ.வி.எம் ஆடியோ நிறுவனத்துக்கு ராயல்டி பேஸிஸ்ல கொடுத்தோம். இது வரைக்கும் சிங்கிள் பைசா எனக்கு கொடுக்கல. இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி, வைகைக்கறை காத்தே நில்லு பாடல்கள் எல்லாம் எவ்வளவு வியூவ்ஸ் வந்து நிறைய காசு பார்த்திருப்பாங்க. இந்த ராயல்டி வருமானத்தை ஏ.வி.எம் எங்களுக்கு எதுவுமே கொடுக்காம வேற யாருக்கோ வித்துட்டாங்க. இப்ப நான் உயிருள்ளவரை உஷா பட பாடல்களை என்னுடைய யூ டியூபில் அப்லோட் பண்ணினால் காப்பிரைட்னு வருது. இப்ப தான் எனக்கு ஒரு உணர்வு வருது. என்னுடைய பாடல்களின் காப்பிரைட்டை நான் எப்படி காப்பாத்தி வெக்கணும்னு” ஒரு இசையை படைத்த ஒரு படைப்பாளிக்கே அந்த பாடலை பயன்படுத்த உரிமை இல்லையாம்... ஆனால் இடைத்தரகராக அதை வாங்கி இன்னொருவருக்கு வித்தவர் அவரும் சம்பாரிச்சு அதை வாங்கிய கார்பரேட் நிறுவனமும் கொள்ளை லாபம் சம்பாதிப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுமை... இது தான் சமீபத்திய சரிகம நிறுவனம் பற்றிய சம்பவமும்... ஒரு விவசாயி தன்னுடைய விளைச்சலை நேரடியாக சந்தையில் விற்பதற்கும், அதையே கார்பரேட் கம்பெனிகள் விற்பதற்கும் உண்டான வித்தியாச அளவுகோல் தான் இந்த சம்பவத்தின் விபரீதமான எதிரொலி. இசைஞானி மட்டும் தன்னுடைய பாடல்களுக்கு காசு வாங்குவதாகவும், அதை கார்பரேட் கம்பெனிகள் என்னமோ சும்மா தூக்கி இலவசமாக மக்களுக்கு தாரை வார்த்து கொடுக்கிற மாதிரியும் பேசறாங்க... இதில வேற காப்பிரைட்டுக்கும் ராயல்டிக்கும் உண்டான வித்தியாசம் கூட தெரியாம கம்பு சுத்தறது தான் காலத்தின் கொடுமைன்னு சொல்லனும்.... அதாகப்பட்டது பார்த்தீங்கன்னா, 134 படங்களின் இசை மற்றும் பாடல்களுக்கு இசைஞானி உரிமை கோரவோ அல்லது நியாயமான பணத்தை கேட்கவோ வாங்கவோ முடியாது.. ஆனால் அந்த 134 படங்களுக்குமான காப்பிரைட் வாயிலாக கார்பரேட் நிறுவனம் மக்களிடம் யூடியூப் உள்ளிட்டவற்றின் வாயிலாக பணம் சம்பாதித்து கொள்ளலாம் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம் கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக இந்த போராளிகள் கம்பு சுத்தவோ அல்லது அட்டகத்தியை வெச்சிகிட்டு ஆட்டவோ முடியாது... காரணம் கார்பரேட் நிறுவனங்கள் எல்லாம் இசைஞானி போல் ஏமாளிகள் அல்ல... அவர்களது நோக்கங்கள் முழுக்க வணிகமும் பணமும் தானே தவிர கலையோ கலாச்சார முன்னெடுப்போ அல்ல என்பதை புரிந்து கொண்டால் நலம்.... இதில ஒரு சேனல்காரர் கொடுத்த தலைப்பை பார்த்தவுடன் நிஜமாகவே என் இதயம் இனித்தது கண்கள் பனித்தது... நன்றி: சமூக வலைத்தளங்களில் பரவும் ஒரு பதிவு- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
செத்த பிறகு அவரை மாவீரர் என்றெல்லாம் போட்டு அஞ்சலி செலுத்தி என்னை வெறுப்பேற்றினார்கள்.- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
Current அடித்து செத்தவரா? - ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.