Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    80008
  • Joined

  • Days Won

    856

Everything posted by தமிழ் சிறி

  1. நாடாளுமன்ற தேர்தல்; பிரச்சார நடவடிக்கைள் திங்கள் நள்ளிரவுடன் நிறைவு! 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது. நவம்பர் 11 ஆம் திகதி நள்ளிரவுடன் அமைதியான காலம் ஆரம்பாகிறது. அந்த நேரத்தில் எந்த பிரசாரமும் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலானது நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்றும் (07) நாளையும் (08) மேற்கொள்ளப்படவுள்ளன. ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிக்க முடியாத முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1407540
  2. மோடி உண்மையான நண்பன் – ட்ரமப்க்கு வாழ்த்திய மோடி. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குறித்த அழைப்பில் உலக அமைதிக்காக இரு தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவது என உறுதி மேற்கொண்டனர் என அரசியல் தகல்கள் தெரிவித்துள்ளன. ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை விரும்புகிறது. இந்தியா ஒரு பிரமிக்க வைக்கும் நாடு. பிரதமர் மோடி ஒரு உன்னதம் வாய்ந்த நபர். பிரதமர் மோடியையும், இந்தியாவையும் உண்மையான ஒரு நண்பராக கருதுகிறேன் என பிரதமர் மோடியிடம் டிரம்ப் கூறியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றி பெற்ற பின்பு முதன்முதலாக நான் பேசிய உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், 2-வது முறையாக பதவி வகிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407576
  3. தற்செயலாக இன்று கமலா வென்று இருந்தால்…இந்தியா கமறி இருக்கும். இப்ப இருந்த இடம் தெரியாமல், பம்மிக் கொண்டு இருக்கின்றார்கள். 😂
  4. பசுவூர்க்கோபி…. நீங்கள் இயற்றிய பாடல் வரிகளுக்கு, தேனிசை செல்லப்பா கணீர் குரலில் பாடியமை மிக இனிமையாக இருந்தது. இளங்கோவின் இசையமைப்பும் பிரமாதம்.
  5. அப்ப முதல் சந்திப்பு... கிரெம்ளினில் என்று சொல்கிறீர்கள். 😂
  6. ஆர் வெண்டாலும்... உங்களுக்கு ஒரு "பார் பெர்மிட்" எடுத்து தர வேணும் என்று, இப்பவே சொல்லி வையுங்கோ குமாரசாமி அண்ணை. 😂
  7. அடிப்படை அறிவு கூட இல்லாமல் அரசியல் விளக்கம் சொல்லிக் கொண்டும், தேவையில்லாத இடங்களில் எல்லாம் ஆங்கிலத்தையும் செருகுவதும், பிழையான உச்சரிப்புடான் ஆங்கில சொற்களை சொல்வதும் கேட்க கடுப்பாக இருக்கின்றது. நல்ல தமிழ் சொற்களை.. இவர்களே பேச்சு வழக்கில் இருந்து ஒழித்து விடுவார்கள் போலுள்ளது. காலத்துக்கு ஏற்ற கவிதைக்கு நன்றி உதயன்.
  8. எல்லாம்.... பம்மாத்து. நேரம் மினைக்கெட்ட வேலை. யாரோ ஒரு முதலாளியின் ஆசையை... பத்திரிகை நிறுவனம், மக்கள் மேல் திணித்து மக்களை குழப்புவார்கள்.
  9. பல அதிரடி மாற்றங்கள் செய்து கொண்டு இருக்கின்றார்கள். 1) லஞ்சம் வாங்கிய நான்கு சுங்க அதிகாரிகளுக்கு 35 வருட கடூழிய சிறை. 2) "இராஜதந்திர பதவிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளின் குடும்பத்தினரும் திருப்பி அழைப்பு" என்று நினைத்துப் பார்த்திருக்க முடியாத செயல்களை செய்வது வரவேற்கத் தக்கது.
  10. சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கு 35 வருட கடூழிய சிறை! இலங்கை சுங்கத்திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் 125 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்றமையே இதற்குக் காரணமாகும். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 125 மில்லியன் ரூபா அபராதம் விதித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407492
  11. இராஜதந்திர பதவிக்கு நியமிக்கப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளின் குடும்பத்தினரும் திருப்பி அழைப்பு! முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அரசியல் தொடர்புகள் ஊடாக வெளிநாட்டு இராஜதந்திரப் பணிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் 2024 டிசம்பர் 01 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னாள் அரசாங்கத்தினால் சில வெளிநாட்டு இராஜதந்திர பணிகளுக்கு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களாக சிலர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இன்று (06) ஊடகங்களுக்கு தெரிவித்தார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு சேவைகளில் அனுபவம் பெற்றவர்கள் அல்ல, அவர்கள் அனைவரையும் அரசியல் நியமனங்கள் என்று வகைப்படுத்த முடியாது. அவர்களில் சிலர் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் மற்றும் மனைவிகள் தூதுவர் பதவிக்கு கீழான பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1407496
  12. நண்பர் எனக் கூறி ட்ரம்புக்கு மோடி வாழ்த்து! 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டெனால்ட் டர்ம்பின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோசடி குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எக்ஸ் கணக்கில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ள நரேந்திர மோடி, ட்ரம்ப்பை நண்பர் என வர்ணித்துள்ளார். மோடியின் வாழ்த்துச் செய்தியானது அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அமெரிக்க-இந்தியா விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான உற்சாகத்தை வெளிப்படுத்தியது. அந்த செய்தியில், எனது நண்பர் டொனால்ட் ட்ரம்ப்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்கள் வரலாற்றுத் தேர்தல் வெற்றியில் உங்கள் முந்தைய பதவிக் காலத்தின் வெற்றிகளை நீங்கள் கட்டியெழுப்பும்போது, இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்கள் ஒத்துழைப்பைப் புதுப்பிக்க எதிர்பார்த்துள்ளோம். ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407480
  13. ட்ரம்பின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி! டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியை ஏற்க மறுத்த முன்னாள் ஜனாதிபதியின் அசாதாரண மறுபிரவேசமாக இது அமைந்துள்ளது. இரண்டு படுகொலை முயற்சிகள் மற்றும் 34 குற்றச் செயல்களுக்கு மத்தியில் ட்ரம்பின் இந்த வெற்றி வந்துள்ளது. விஸ்கான்சினில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளர், ஜனாதிபதி பதவிக்கு தேவையான 270 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றார். அலாஸ்கா, விஸ்கான்சினின் அண்மைய மற்றும் முக்கியமான முடிவுகளுடன் டொனால்ட் ட்ரம்ப் இப்போது 279 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனிடையே கமலா ஹாரிஸ், நியூ ஹாம்ப்ஷயரில் வெற்றி பெற்ற நிலையில் 223 தேர்தல் கல்லூரி வாக்குகளை பெற்றுள்ளார். ட்ரம்பின் வெற்றியானது அமெரிக்காவின் பணவீக்கம் மற்றும் குடியேற்றத்தைச் சுற்றியுள்ள பொது மக்களின் விரக்திகள் எவ்வளவு ஆழமாக இருந்தன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. க்ரோவர் க்ளீவ்லேண்டிற்குப் (Grover Cleveland) பின்னர், இரண்டு சந்தர்ப்பங்களில் பதவி வகிக்கும் இரண்டாவது ஜனாதிபதியாக ட்ரம்ப் ஆவார். க்ரோவர் க்ளீவ்லேண்ட் அமெரிக்காவின் 22 ஆவது ஜனாதிபதியாக 1885 முதல் 1889 வரையும் 24 ஆவது ஜனாதிபதியாக 1893 முதல் 1897 வரையும் இருந்தார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக முதல் முறையாக 2016 முதல் 2020 க்கு இடையில் இருந்தார். எனினும், 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்த பிறகு அவர் இரண்டாவது முறையாக வெற்றிபெறத் தவறினார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக ட்ரம்ப் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் 78 வயதில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மிக வயதான நபர் ட்ரம்ப் ஆவார். https://athavannews.com/2024/1407512
  14. ட்ரம்ப் ஐயா அவர்கள், ஜனாதிபதியாக பதவியேற்ற உடன்... வெள்ளை மாளிகையில் முதல் சந்திப்பு... புட்டினுடன் இருக்க வேண்டும். அந்தப் படத்தை பார்த்து... செலன்ஸ்கிக்கு வயிறு பத்தி எரிய வேணும். 💪 😂
  15. சாத்தான்.... இதில் குறை கூறும் பலர், புலிகளின் போராட்ட காலத்திலேயே... சிங்களத்துக்கும், ஓட்டுக்கு குழுக்களுக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்த ஆட்கள் என்பதால்.... இவர்களின் கருத்தை மினைக்கெட்டு வாசித்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இவர்களை பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. "மூக்கு இருக்கும் மட்டும்... சளியும் இருக்கும் என்பது போல்", இவர்களை, சகித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂 🤣
  16. எத்தனை முறை கேட்டாலும்.... மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். காணொளியின் தரம் குறைவு என்றாலும்... நடிப்பு, பாடல் வரிகள் மிக அருமை.
  17. கமலா…. முன்னுக்கு வாற மாதிரி இருந்தால்… டக்கெண்டு ட்ரம்ப், சுமந்திரனிடம் ஆலோசனை கேட்டு… திருமதி ரவிராஜின் வாக்குகளை திருடி, அவர் பின்கதவால் சுத்துமாத்து செய்து பாராளுமன்றம் போன மாதிரியான ரெக்னிக்கை கேட்க சொல்லுங்கோ. 😂 🤣
  18. உங்கள் சித்தப்பனை... ஜனாதிபதி பதவியில் இருந்து ஓட ஓட விரட்டியமைக்கு புலிகள் காரணம் என்று ஒத்துக் கொண்டமைக்கு நன்றி நாமல் தம்பி. 😂 🤣
  19. பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு! பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் என்பவற்றை மீண்டும் சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி தலைமையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது அத்தியாவசியமற்ற செலவுகளை குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கமைய இந்த பிரிவிடம் காணப்பட்ட மனிதவள மற்றும் பௌதீக வளங்கள் சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவை பொதுமக்களின் சுகாதார தேவைகளுக்கென பயன்படுத்தப்படவுள்ளன.. இதன்போது பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி அவர்களினால் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவிடம் அதற்கான ஆவணங்கள் மற்றும் திறப்புகள் இதன்போது கையளிக்கப்பட்டிருந்தன. https://athavannews.com/2024/1407406
  20. வைத்தியர் மொஹமட் ஷாபி விடுதலை-குருநாகல் நீதிமன்றம் உத்தரவு! குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபியை விடுதலை செய்து குருநாகல் பிரதான நீதவான் பந்துல குணரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார். மருத்துவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதைக் கருத்தில் கொண்டு, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதவான் அறிவித்துள்ளார் இது தொடர்பாக நடத்தப்பட்டமருத்துவ அறிக்கைகளின்படி, குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரின் அறுவை சிகிச்சையால் குறித்த பெண்கள் மலட்டுத்தன்மைக்கு ஆளானார்கள் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என நீதவான் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407419
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.