Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தேசிய பூங்காவை ஆதரித்தது சுமந்திரன்தான் - முரளிதரன் குற்றச்சாட்டு! வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு, கேவில், சுண்டிக்குளம்வரையான மக்களின் காணிகள் தேசிய பூங்காவென பிரகடனப்படுத்தியமைக்கு தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்காமல் அன்றைய காலப்பகுதியில் அதனை ஆதரித்ததுதான் இன்று வடமராட்சி கிழக்கு மக்கள் படும் துன்பத்திற்கு காரணமென சமூக செயற்பாட்டாளர் முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்களின் காணிகளை தேசிய பூங்காவென கூறி வடமராட்சி கிழக்கில் வனஜீவராசி திணைக்களம் கையகப்படுத்தி வைத்துள்ளார்கள்.இதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர் இந்தப் பகுதி தேசிய பூங்காவென உறுதிப்படுத்துவதற்காக அவ்வப்போது யானைகளை கொண்டுவந்து விட்டு மக்களை அச்சப்படுத்துகின்றார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கடந்த கால ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தேசிய பூங்கா தொடர்பில் மக்களுடன் ஒரு கருத்தரங்கு இடம்பெற்றது குறித்த கருத்தரங்கில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் அபிவிருத்தி எங்களுக்கு வேண்டும் தேசிய பூங்கா கட்டாயம் எங்களுக்கு தேவை என்னும் கருத்தை முன்வைத்திருந்தார் அப்போது அந்தக் கருத்தரங்கில் இருந்த நான் உட்பட ஒரு சிலர் சுமந்திரனின் கருத்தை கடுமையாக எதிர்த்தோம் தேசிய பூங்காக்குள் மக்கள் குடியிருக்க முடியாது என்பதனை கூறும்போது சுமந்திரன் அவர்கள் அதுபற்றி சிந்திக்கவில்லை இன்று யானைகளை கொண்டுவந்து எமது பகுதிக்குள் விட்டு தேசிய பூங்காவென கூறி எமது மக்களை தமது காணிகளை விட்டு விரட்டியடிக்க பார்க்கின்றார்கள்.அன்று தமிழ் அரசுக் கட்சி இதனை எதிர்த்திருந்தால் இன்று இந்த நிலை மக்களுக்கு வந்திருக்காது அப்போதைய காலத்தில் இந்த வர்த்தமானியை நீக்குவதாக கூறினார்கள் அவர்களிடம் பெரும்பாண்மை இல்லாததால் அதனை செய்ய முடியவில்லை ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் பெரும்பான்மை இருக்கின்றது. தேசிய பூங்காவாக அடையாளப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியை அவர்களால் நீக்க முடியும் பெரும்பான்மையை கொண்டு நீக்குவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் https://athavannews.com/2026/1470248
  2. போன வாரம் ஈரானுடன், பேச்சு வார்த்தை நடந்து கொண்டுள்ளது என்று... தம்பர் சொன்னார். அவ்வளவும் பொய்யா.. கோபால்.
  3. அமெரிக்காவும், இஸ்ரேலும்... லண்டனில் குண்டு போட்டுவிட்டு, ஈரானில்.. பழி போடப் போகிறார்கள் போலுள்ளது. இவங்கள... அப்பிடி செய்யக் கூடிய ஆட்கள். லண்டன் உறவுகள்... பஞ்சியை பார்க்காமல், இப்பவே "பங்கர்" வெட்டி வைப்பது நல்லது.
  4. ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை! -அமெரிக்காவின் விசேட தூதூவர்.- ஈரான் இந்த வாரம் வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்று தான் நம்புவதாக அமெரிக்காவின் விசேட தூதூவர் ஸ்டீவ் விட்காஃப் ( Steve Witkoff )தெரிவித்துள்ளார். அதேவேளை, தெஹ்ரான் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ‘இந்த வாரம் சந்திப்புகள் நடைபெறும் என்று நாங்கள் நினைக்கிறோம், நிச்சயமாக அதற்காக நம்பிக்கையுடன் இருக்கிறோம்’ என்று விசேட தூதூவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு தெஹ்ரானிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், ‘எங்களிடம் 15 அம்சத் திட்டம் உள்ளதுடன், ஈரானியர்கள் அதற்குப் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அது அனைத்தையும் தீர்க்கக்கூடும்,’ என்று தெரிவித்தார். ஈரான் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ஹோர்முஸ் நீரிணை ஊடாக 10 எண்ணெய் தாங்கிக் கப்பல்களை அனுமதித்துள்ளதாக ட்ரம்ப் கூறியதை ஸ்டீவ் விட்காஃப் ( Steve Witkoff ) உறுதிப்படுத்தினார். ‘கப்பல்கள் கடந்து செல்கின்றன, இது ஒரு நல்ல அறிகுறியாகும்’ என்று அவர் மேலும் கூறினார். ஈரான் மீதான கடும் எச்சரிக்கைகளுக்கு மத்தியில், தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்திற்குத் தயாராக இருப்பதாகவும்,, வரும் வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்றும் ட்ரம்ப் கூறி வருகிறார் ஈரான் தற்போது அழிவைச் சந்தித்து வருகிறது. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் நாமும் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள விரும்புகிறார்கள், என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். https://athavannews.com/2026/1470260
  5. லண்டனை குறிவைக்கும் ஈரான்! மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் அமெரிக்கா. ஈரானின் ஏவுகணை வரம்பில் லண்டனும் இருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hexeth ) எச்சரித்துள்ளார். ஈரான் போரில் இணைமாறு பிரித்தானியா மீது ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டியாகோ கார்சியாவை நோக்கி இரண்டு இடைத்தூரப் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை அமைச்சரவைக் கூட்டத்தில் ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தலை பீட் ஹெக்செத் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.உண்மையில் அந்த ஏவுகணைகள் இலக்கை எட்டும் முன்னரே முறியடிக்கப்பட்டதுடன், அந்த ஏவுகணை தொடர்பில் ஈரான் தரப்பில் இருந்து பொறுப்பேற்றதாகவும் தகவல் இல்லை. இந்த நிலையில், ஏவுகணை வரம்பு தொடர்பில் ஈரான் இதுவரை கூறியதெல்லாம் பொய் என பீட் ஹெக்செத் (Pete Hexeth ) எச்சரித்துள்ளார். மேலும், ஈரானில் இருந்து லண்டன் 4, 000 கி.மீ எனவும் வெனிசுலாவில் இருந்து வாஷிங்டன் 3, 300 கி.மீ எனவும் குறிப்பிட்டுள்ள அவர், நல்வாய்ப்பாக ஈரானுடன் பல காலமாக கூட்டணியில் இருந்த ஒரு நாட்டை ஜனாதிபதி ட்ரம்ப் தமது கட்டுக்குள் கொண்டுவந்தார் என்றார். இதனால்,ஈரான் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலா இல்லையா என்பதை ஜனாதிபதி ட்ரம்ப் நன்கறிந்து வைத்திருக்கிறார் எனவும் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஜேர்மன் கடற்படையிடம் இருந்து போர் கப்பல் ஒன்றைக் கடனாக வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரித்தானியாவை மிக மோசமாக விமர்சித்த ட்ரம்ப், பிரித்தானிய போர்க்கப்பல் அனைத்தும் தங்களுடன் ஒப்பிடுகையில் வெறும் விளையாட்டு பொம்மைகள் என்றார். https://athavannews.com/2026/1470257
  6. தமிழ் நாட்டில் உள்ள... மணல் கொள்ளைக்காரர்களின், செயலை... யாழ்ப்பாணத்திலும் செய்கின்றார்கள். சிலகாலத்துக்கு முன்பும் மணல் லாரிகளால் சிலர் கொல்லப்பட்டு இருந்தார்கள். மணல் மாஃபியாக்களின் செயலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும், இல்லையேல், போதைக் கும்பல் மாதிரி... பலம் பெற்று விடுவார்கள்.
  7. வாள் வெட்டு, கத்திக் குத்து… எல்லாம் பழகீட்டுது குமாரசாமி அண்ணை. பைத்தியர்தான்… கண்ட கண்ட இடத்தில், வாய் வைத்து… ஒரே அரியண்டமாய் இருக்கு. இதைத்தான்… ஐ.நா.விலை சொல்லி ஒரு முடிவு கட்ட வேணும். ஐ.நா.வுக்கும் வேலை வேணுமெல்லோ… 😂
  8. 75 மில்லியனை செலுத்துங்கள்! கெஹெலியவுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் எச்சரிக்கை! 2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவரது தனிப்பட்ட பணத்தில் இருந்து 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சுகாதார அமைச்சின் அன்றைய செயலாளர் ஜனக்க சந்திரகுப்த, மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயைச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்சன ஆகியோர் 50 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட இரு தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அறிவித்தது. https://athavannews.com/2026/1470218
  9. யாழ்ப்பாணத்தில் ஐ.நா உயரதிகாரியுடன் விசேட சந்திப்பு! ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தினருக்குமிடையே இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார். Marc Andre Franche மற்றும் அவரது குழுவினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜை சந்தித்து யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில் மனித உரிமைகள் உத்தியோகத்தர் சேவியர் குமுதினியும் கலந்துகொண்டார். https://athavannews.com/2026/1470236
  10. சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்! தி.மு.க., அளித்த தொகுதி எண்ணிக்கையில் திருப்தி அடையாத நிலையில், ‘சிரித்துக் கொண்டே அழுவதாக’ ம.தி.மு.க., தெரிவித்துள்ளது. தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இரட்டை இலக்கத்தில் தொகுதியை எதிர்பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த சட்டசபை தேர்தலை விட, ஒரு தொகுதியை குறைத்து தலா ஐந்து தொகுதிகள் தரப்பட்டுள்ளன. ம.தி.மு.க.,வுக்கு கடந்த முறை ஆறு தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தற்போது நான்கு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியதோடு, ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிடவும், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், புதிதாக கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க.,வுக்கு 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்பட்டுள்ளன. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சு, தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் துவங்கி உள்ளது. ம.தி.மு.க.,வுக்கான தொகுதிகள் விபரம் குறித்து, இரு தரப்பும் இடையே நேற்று பேச்சு நடத்தப்பட்டது. நேற்றைய பேச்சுக்கு பின், ம.தி.மு.க., அவைத்தலைவர் அர்ஜுனராஜிடம், தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ”சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம். எங்களின் தகுதிக்கு ஏற்ப தொகுதிகள் வழங்கப்படவில்லை,” என்றார். ம.தி.மு.க.,வை தொடர்ந்து, கொங்கு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் தி.மு.க., தரப்பில் பேச்சு நடந்தது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகி, தி.மு.க., கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு இணைந்தார். அவருக்கு தி.மு.க., தலைமை, ஒரு தொகுதியை உறுதி செய்ததாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள சங்ககிரி அல்லது பரமத்திவேலுார் தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால், சென்னை அறிவாலயத்தில் தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினரை, நேற்று முன்தினம் தனியரசு சந்தித்தபோது, ‘முதல்வர் ஸ்டாலின் தங்களுக்கு தொகுதி ஒதுக்க உத்தரவு தரவில்லை’ என கூறப்பட்டதால், அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில் தொடருவதா என்பது குறித்து, இன்று தன் முடிவை அறிவிக்க உள்ளார். https://athavannews.com/2026/1470233
  11. யாழில் முக்கிய கூட்டம்: குவிக்கப்பட்ட மேலதிக படையினர்! யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில் , மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் இணை தலைமையுடன் , நடைபெற்று வருகிறது. அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால் மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் , காணி விடுவிப்பு கோரி காணி உரிமையாளர்களும் மாவட்ட செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மாவட்ட செயலக சுற்று வட்ட பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1470146
  12. 38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது! 8 அரிய வகை செல்லப்பிராணிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் இன்று (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கைகளின்படி, கண்டி, திகனவைச் சேர்ந்த 56 வயதான சந்தேக நபர் இன்று அதிகாலை பெங்கோக்கிலிருந்து வந்தடைந்தபோது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை வழிமறித்தனர். சோதனையின் போது, அவரது பயணப் பைகளில் கினி எலிகள், அணில்கள், புறாக்கள், சுகர் கிளைடர்ஸ் (Sugar Gliders) மற்றும் முள்ளம்பன்றிகள் ஆகியவை அவரிடமிருந்து இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து, சுங்கத்துறை சந்தேக நபருக்கு 2,50,000 ரூபா அபராதம் விதித்தது. பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகள் பின்னர் பங்கொக்கிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக தாய் ஏர்வேஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். https://athavannews.com/2026/1470157
  13. ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்! ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை ஏப்ரல் மாதம் வரை நிறுத்தி வைப்பதை நீட்டிப்பதாகவும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழனன்று (26) கூறினார். ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவு ஒருதலைப்பட்சமானதும் நியாயமற்றதும் என்று ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். நான்கு வாரங்களாக நீடித்த இந்தப் போர், மத்திய கிழக்கு முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளதுடன், விண்ணை முட்டும் எரிசக்தி விலைகளால் உலகப் பொருளாதாரத்தைப் பாதித்து, உலகளாவிய பணவீக்க அச்சங்களையும் தூண்டியுள்ளது. தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின. வெள்ளை வியாழக்கிழமை மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என்றால் அதன் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தினார். பின்னர் 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு ஈரானிய எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டார். எனினும், போரில் பல உயர் அதிகாரிகள் கொல்லப்பட்ட நிலையில், ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா யாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பதை ட்ரம்ப் வெளிப்படையாகக் கூறவில்லை. 2026 மார்ச் 23 அன்று, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார், ஆனால் இப்போது அதை 10 நாட்களுக்கு நீட்டித்துள்ளார். எனினும், வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்று ஈரான் கூறியுள்ளது. பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ள போர் இந்தப் போர், கப்பல் போக்குவரத்தைப் பெருமளவில் சீர்குலைத்துள்ளது. இதன் விளைவாக, மசகு எண்ணெய் விலை சுமார் 40% உயர்ந்துள்ளது, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விலை கடுமையாக அதிகரித்துள்ளது, மேலும் உணவு உற்பத்திக்கு இன்றியமையாத நைட்ரஜன் அடிப்படையிலான உரங்களின் விலை சுமார் 50% உயர்ந்துள்ளது. ட்ரம்ப்பின் நம்பிக்கையூட்டும் மதிப்பீட்டிற்கு மத்தியிலும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களைத் தாக்கித் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தது. அது வளைகுடா நாடுகளையும் தாக்கியதுடன், உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% கொண்டுசெல்லும் ஹார்முஸ் நீரிணை வழியாக மத்திய கிழக்கு எரிபொருள் ஏற்றுமதியையும் திறம்படத் தடுத்துள்ளது. 10,000 வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புவது குறித்து பென்டகன் பரிசீலனை பேச்சுவார்த்தைகளில் நல்லெண்ண நடவடிக்கையாக, பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட சில கப்பல்கள் உட்பட 10 எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்ல ஈரான் அனுமதித்ததாக ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார். அதேநேரம், மத்திய கிழக்குக்கு 10,000 வரையிலான மேலதிக தரைப்படை வீரர்களை அனுப்புவது குறித்து பென்டகன் பரிசீலித்து வருவதாக, அத்துறையின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டது. இந்த விடயம் தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையின் கருத்துக்கான கோரிக்கைக்கு பென்டகன் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ரோந்துப் பணிகளுக்காக ஆளில்லா ட்ரோன் வேகப் படகுகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது என்று பென்டகன் கூறியுள்ளது. ஒரு தீவிரமான மோதலில் இதுபோன்ற படகுகளைப் பயன்படுத்துவதை வொஷிங்டன் உறுதிப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவின் 15 அம்சத் திட்டம் நிராகரிப்பு பாகிஸ்தான் மூலம் தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்ட 15 அம்ச அமெரிக்க முன்மொழிவை, ஈரானின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஈரானின் உச்ச தலைவரின் பிரதிநிதி ஆகியோர் புதன்கிழமை விரிவாக ஆய்வு செய்ததாகவும், அது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களுக்கு மட்டுமே சேவை செய்வதாக அவர்கள் கருதியதாகவும் ஒரு ஈரானிய அதிகாரி கூறியுள்ளார். எனினும், ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார். ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கலைப்பது, அதன் ஏவுகணைகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் நீரிணையின் கட்டுப்பாட்டைத் திறம்பட ஒப்படைப்பது வரையிலான கோரிக்கைகளை அந்த முன்மொழிவு உள்ளடக்கியிருந்ததாக ஆதாரங்களும் அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. இஸ்லாமாபாத் மூலம் அனுப்பப்படும் செய்திகள் வழியாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே “மறைமுகப் பேச்சுவார்த்தைகள்” நடைபெற்று வருவதாகவும், துருக்கி மற்றும் எகிப்து உள்ளிட்ட பிற நாடுகளும் மத்தியஸ்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் கூறினார். போர் தொடங்கியதிலிருந்து ஈரான் தனது நிலைப்பாட்டைக் கடுமையாக்கியுள்ளது; எதிர்கால இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான உத்தரவாதங்கள், இழப்புகளுக்கான இழப்பீடு மற்றும் நீரிணையின் மீதான முறையான கட்டுப்பாடு ஆகியவற்றை அது கோரியுள்ளது என ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், எந்தவொரு போர்நிறுத்த ஒப்பந்தத்திலும் லெபனான் சேர்க்கப்பட வேண்டும் என்று அது இடைத்தரகர்களிடம் கூறியதாக பிராந்திய வட்டாரங்கள் தெரிவித்தன. இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை அலை வியாழக்கிழமையன்று, ஈரான் இஸ்ரேல் மீது பல அலைகளாக ஏவுகணைகளை ஏவியது. டெல் அவிவ், ஹைஃபா மற்றும் மத்திய இஸ்ரேலில் உள்ள ஒரு பாலஸ்தீனிய நகரம் உள்ளிட்ட பிற பகுதிகளையும் அது தாக்கியது. குறைந்தது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாவது டெல் அவிவ் மீது தாக்கியது, மற்றவை சிறிய வெடிபொருட்களை சிதறடிக்கும் கொத்து ஏவுகணைகளைக் கொண்டிருந்தன, அவை வீடுகளையும் கார்களையும் சேதப்படுத்தியதாக இஸ்ரேலின் இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளன. வடக்கு நகரமான நஹாரியா மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் அம்பியூலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. ஈரானில், தெற்கு நகரமான பந்தர் அப்பாஸ் மற்றும் தெற்கு நகரமான ஷிராஸின் புறநகரில் உள்ள ஒரு கிராமம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ஃபஹானில் உள்ள ஒரு பல்கலைக்கழக கட்டிடம் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. https://athavannews.com/2026/1470134
  14. போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை! விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் மோசடிச் செய்திகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். இந்த விளம்பரங்கள் தவறான தகவல்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணத்தைத் திருடும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்: சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்: தள்ளுபடிகளை விளம்பரப்படுத்தும், அறியப்படாத அல்லது சரிபார்க்கப்படாத இணையதள இணைப்புகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடப் பயன்படுத்தப்படலாம். வங்கி விவரங்களைப் பகிர வேண்டாம்: எந்தவொரு முறையான விமான நிறுவனமோ அல்லது நம்பகமான முகமையோ, அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் உங்கள் OTP-கள், கடவுச்சொற்கள் அல்லது முக்கியமான நிதித் தகவல்களைக் கோராது. அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் சரிபார்க்கவும்: சலுகைகளை எப்போதும் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் சரிபார்க்கவும். நம்பகமான முகவர்களை அணுகவும்: பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், பதிவுசெய்யப்பட்ட மற்றும் நற்பெயர் பெற்ற பயண முகவரிடம் விவரங்களை உறுதிப்படுத்திக்கொள்ளவும். எந்தவொரு முறையான விமான நிறுவனமோ அல்லது நம்பகமான முகமையோ, அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் முக்கியமான நிதித் தகவல்களைக் கோராது என்று பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பொதுமக்கள் மோசடிகளுக்குப் பலியாக வேண்டாம் என்றும், விழிப்புடன் இருக்குமாறும், மற்றவர்களைப் பாதுகாக்க விழிப்புணர்வைப் பரப்புமாறும் அவர்கள் வலியுறுத்தினர். https://athavannews.com/2026/1470040
  15. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை – ஈரான் அறிவிப்பு! மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரானிய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஆனால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqchi) தெரிவித்துள்ளார். அதன்படி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்றும், மூன்றாம் தரப்பினர் மூலம் அமெரிக்காவுடன் தொடர்பு கொள்வது என்பது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று அர்த்தமல்ல என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான எந்தவொரு போர்நிறுத்த ஒப்பந்தத்திலும் லெபனான் சேர்க்கப்பட வேண்டும் என்று ஈரான் இடைத்தரகர்களிடம் கூறியுள்ளது என, ஈரானின் நிலைப்பாட்டை அறிந்த ஆறு பிராந்திய வட்டாரங்கள் தெரிவித்தன. இ‍தேவேளை, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானியத் தலைவர்கள் அமெரிக்காவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அதை வெளிப்படையாகக் கூற விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வொஷிங்டனில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். அதேநேரம், பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்ட ட்ரம்பின் 15 அம்சத் திட்டம், ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அகற்றுதல், செறிவூட்டலை நிறுத்துதல், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பிராந்திய நட்பு நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது என, இத்திட்டம் குறித்து அறிந்த மூன்று இஸ்ரேலிய அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் வெள்ளை மாளிகை தனது 15 திட்டத்தின் குறிப்பிட்ட விவரங்களை வெளியிட மறுத்ததுடன், தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் அச்சுறுத்தியது. ஈரான் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளும் என்பதில் இஸ்ரேலுக்கு சந்தேகம் இருப்பதாகவும், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் சலுகைகளை வழங்கக்கூடும் என்று இஸ்ரேல் கவலைப்படுவதாகவும் ஒரு மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி கூறினார். மேலும், எந்தவொரு ஒப்பந்தமும் முன்னெச்சரிக்கை தாக்குதல்களை நடத்துவதற்கான தனது வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் விரும்புவதாக இரண்டாவது வட்டாரம் தெரிவித்தது. ஈரானின் 10,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை வழிநடத்தும் மத்திய கட்டளைத் தளபதியான அட்மிரல் பிராட் கூப்பர் ஒரு காணொளிக் கூட்டத்தில், அமெரிக்கா ஈரானுக்குள் 10,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாகவும், அதன் எல்லைகளுக்கு வெளியே ஈரான் தனது சக்தியை வெளிப்படுத்தும் திறனைக் கட்டுப்படுத்தும் பாதையில் முன்னேறி வருவதாகவும் கூறினார். ஈரானின் மிகப்பெரிய கடற்படைக் கப்பல்களில் 92% அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை ஏவுதல் விகிதங்கள் 90%-க்கும் மேல் குறைந்துவிட்டதாகவும் கூப்பர் கூறினார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் ஏவுகணை, ஆளில்லா விமானம் மற்றும் கடற்படை உற்பத்தி வசதிகள் மற்றும் கப்பல் கட்டும் தளங்களில் மூன்றில் இரண்டு பங்கை சேதப்படுத்தியுள்ளன அல்லது அழித்துள்ளன என்றும் கூப்பர் கூறினார். இருப்பினும், ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு எதிரான ஈரானிய ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களும் சற்றும் குறையாமல் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈரானின் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டுமானத்தின் மீதான தாக்குதல் உட்பட, அன்றைய தினம் ஈரான் மீது பல புதிய அலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை விவரித்தது. தெஹ்ரானில் ஒரு குடியிருப்புப் பகுதி தாக்கப்பட்டதாகவும், மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் தேடி வருவதாகவும் ஈரானின் அரை அதிகாரப்பூர்வ SNN செய்தி நிறுவனம் தெரிவித்தது. புதிய ஆளில்லா விமானத் தாக்குதல்களை முறியடித்ததாக குவைத்தும் சவுதி அரேபியாவும் தெரிவித்தன. பங்குச் சந்தைகள் ஓரளவு மீண்டன, எண்ணெய் விலைகள் சரிந்தன வொஷிங்டன் ஈரானுக்கு ஒரு முன்மொழிவை அனுப்பியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, புதன்கிழமையன்று உலகளாவிய பங்குச் சந்தைகள் ஓரளவு மீண்டன, அதே நேரத்தில் எண்ணெய் விலைகள் சரிந்தன. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை சீர்குலைத்து, பணவீக்கத்தைத் தூண்டும் அபாயம் உள்ள ஒரு போருக்கு முடிவு வரும் என்று முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இதற்கிடையில், தரைவழித் தாக்குதலுக்கு உத்தரவிட ட்ரம்பிற்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதற்காக, ஆயிரக்கணக்கான வான்வழிப் படைகளை வளைகுடாவிற்கு அனுப்ப பென்டகன் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது, ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் இரண்டு கடற்படைப் பிரிவுகளுடன் கூடுதலாக அமையும். தன் நாட்டுப் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், செங்கடல் முகத்துவாரத்தில் ஈரான் ஒரு புதிய போர்முனையைத் திறக்கக்கூடும் என்று, பெயர் குறிப்பிடப்படாத ஒரு இராணுவ வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஈரானின் அரை-அரசு தஸ்னிம் செய்தி நிறுவனம் புதன்கிழமை கூறியது. https://athavannews.com/2026/1470018
  16. மோதல் கட்டுப்பாட்டை மீறும் மட்டும், நீங்கள் "மிக்சர்" சாப்பிட்டுக் கொண்டு இருந்தீர்களா. முற் கூட்டியே... தடுக்கத் தெரியாத நீங்கள் எல்லாம்... வீணாய்ப் போன சபை. உலகில் எந்தப் போரையும், தடுக்கத் தெரியாத உங்களுக்கு... எதற்கு ஐக்கிய நாடுகள் சபை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.