Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. 2026´ம் ஆண்டில்... உலகையே ஆளும் சக்தி கொண்டவராக மாற இருக்கும், விளாடிமிர் புட்டின் அவர்களுக்கு முற் கூட்டிய வாழ்த்துக்கள்.
  2. தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙏 ❤️
  3. மீண்டும்... அகில இலங்கை தலைப்பு செய்தியாக, சாவகச்சேரியான்ஸ். @குமாரசாமி எங்கிருந்தாலும், உடனடியாக மேடைக்கு வரவும்.
  4. இணையவழி முதலீட்டுக்காக காதலனின் வீட்டில் நகை திருடிய யுவதி கைது! சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த இளைஞரும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் திருமண நாள் குறிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக காதலி காதலனின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி காதலனின் தாயார் வைத்திருந்த தாலிக்கொடி உட்பட சுமார் 8 பவுண் எடை கொண்ட தங்க நகைகள் காணாமல் போனதாக, 17 ஆம் திகதி காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், கிளிநொச்சியிலிருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த குறித்த யுவதியே அந்த நகைகளைத் திருடியது தெரியவந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் இரவு குறித்த யுவதி கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, தாலிக்கொடியை சாவகச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்ததாகவும், மீதமுள்ள நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்ததாகவும் விசாரணையில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அவர் டிக்டொக் சமூக வலைத்தளத்தில் தொடர்பு கொண்ட ஒரு நபரின் ஆலோசனையில் இணையவழி முதலீட்டுத் திட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், இதுவரை 27 இலட்சம் ரூபாய் செலுத்தியதும், மேலும் பணம் செலுத்துவதற்காகவே காதலன் வீட்டில் நகை திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1453908
  5. நேத்து ராத்திரி யம்மா… தூக்கம் போச்சுடி யம்மா….. 😂 🤣
  6. கரட் சாப்பிட்டால், கண் தெரியும். முருங்கைக்காய் சாப்பிட்டால்…….. 😂 🤣
  7. ரணிலுக்கு... ரவுசர் தைக்கின்ற, ரெய்லர்... யார் என்று அறிய ஆவல். 😂
  8. நான்கு வருடத்தை நெருங்குகின்ற இந்தப் போர்... ட்ரம்பின் பொதியுடன், முற்றுப் பெற்றால் மகிழ்ச்சி. 🙂
  9. தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப் பலகைகளை அகற்றியவர்களை கைது செய்ய நடவடிக்கை! கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று சபையில் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில், கடந்த 21ஆம் திகதி தொல்பொருள் திணைக்களம் பெயர்ப் பலகை ஒன்றை நாட்டியிருந்தது. மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 35ஆம் கிராமம் கண்ணபுரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. எனினும் பிரதேசசபை தவிசாளர் உப தவிசாளர் உறுப்பினர்கள், மற்றும் கிராம பொதுமக்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த 21ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன், மன்முணை தென்எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் வினோராஜ், போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேசசபையின் உறுப்பினர்கள் கிராமத்து பொதுமக்கள் என பலர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததுடன் எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தனர். குறிப்பாக தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொல்லியல் பகுதியென அடையாளப்படுத்தப்பட்டு பெயர் பலகை நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மக்களின் எதிர்ப்பினையும் மீறி பெயர்ப்பலகையை நடுவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது போரதீவுப்பற்று பிரதேசசபையினர் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த நிலையில் இரு பகுதியினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனை மீறி தொல்லியல்திணைக்களம் பெயர்பலகையினை நாட்டிச் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 22ஆம் திகதி மாலை பெயர்ப் பலகை பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட உறுப்பினர்களும் பொதுமக்களும் இணைந்து அகற்றியுள்ளனர். போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் உட்பட பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து அதனை அகற்றியிருந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்றிருந்த தொல்பொருள் திணைக்களத்தினர் நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். இதன்போது திகிலிவெட்டை. சாராவெளி, பெண்டுகள் சேனை, முருங்கன் தீவு போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளும் அகற்றப்பட்டன. 22ஆம் திகதி இந்த செயற்பாடு மேற்கொள்ளும் போது இரவு நேரம் ஆனதை தொடர்ந்து பெயர்பலகைகள், அதற்றும்பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் நேற்றையதினம் அதாவது 23ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பிரதேச சபையின் அனுமதியின்றி இவை அமைக்கப்பட்டதாகவும் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் மொழியை முன்னுரிமைப்படுத்தாமல் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம் என்றும் தொல்லியல் என்று இடங்களை அடையாளப்படுத்திவிட்டு எதிர்காலத்தில் குறித்த பிரதேசங்களை தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தவிசாளர் குற்றம் சுமத்தியிருந்தார். இந்நிலையிலேயே இந்த சம்பவம் இன்றைய நாடாளுமன்றத்தின் வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் பேர்து பேசுபொருளாக விவாதிக்கப்பட்டிருந்தது. கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் அறிவித்தார். https://athavannews.com/2025/1453759
  10. இன்று முதல் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து டிக்கெட்டுகளை பெறலாம்! இன்று முதல் பயணிகள் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, இன்று (24) காலை கொட்டாவ, மகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்துக் கட்டணத்தைச் செலுத்திய பின்னர், மீதமுள்ள பணம் திரும்ப வராதது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக வங்கி அட்டைகள் மூலம் கட்டணத்தைச் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் அமைச்சும், போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து இந்த புதிய முறையை செயல்படுத்தும். மேலும், முதல் கட்டமாக சுமார் 20 வழித்தடங்களில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453670
  11. பாகிஸ்தான் துணை இராணுவ தலைமையகத்தில் தாக்குதல்! பாகிஸ்தானின் பெஷாவரில் அமைந்துள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தில் இன்று (24) காலை துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பாதுகாப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதேநேரம், பாதுகாப்பு வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலின் விளைவாக மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துணை இராணுவக் கட்டிடத்தின் பிரதான வாயிலில் இரண்டு குண்டுவெடிப்புகளுடன் தாக்குதல் தொடங்கியது. ஆயுதமேந்திய நபர்கள் வளாகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 8 மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. துணை இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகள் பதிலடி கொடுத்து, வளாகத்திற்குள் இருந்த மூன்று தாக்குதல்காரர்களை சுட்டுக் கொன்றனர். இதேவேளை பாதுகாப்பு நடவடிக்கைக்காக பெஷாவரில் உள்ள துணை இராணுவப் படை தலைமையகத்தை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453698
  12. உக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம்; அமெரிக்கா பாராட்டு! ரஷ்யா – உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க மற்றும் உக்ரேன் உயர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தனர். எனினும், அமைதியை அடைவதற்கான அமெரிக்க முன்மொழிவைப் பற்றி விவாதித்த பின்னர் மிகக் குறைந்த விவரங்களை மட்டுமே அவர்கள் வழங்கினர். இந்த திட்டம் மொஸ்கோவிற்கு மிகவும் இணக்கமானதாக இருப்பதாக வொஷிங்டனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் பலரிடையே கவலையைத் தூண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, ஜெனீவாவில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் பயனுள்ளதாக அமைந்ததாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறினார். ஆனால் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து மிகக் குறைந்த தகவல்களையே அவர் வழங்கினார். இந்தத் திட்டத்திற்கு உக்ரேன் பதிலளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை நிர்ணயித்த காலக்கெடுவையும் அவர் குறைத்து மதிப்பிட்டார். அதிகாரிகள் விரைவில் மோலை நிறுத்தப்படுவதைக் காண விரும்புகிறார்கள் என்றும், அதிகாரிகள் திங்கள்கிழமை (24) மற்றும் அதற்குப் பிறகும் பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம் என்றும் கூறினார். உயர் மட்ட அதிகாரிகள் இறுதியில் இதில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார். இந்த நிலையில், சுமார் நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவால் வரையப்பட்ட 28-புள்ளி திட்டம் உக்ரேன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது. குறிப்பாக, தனது நாடு தனது இறையாண்மை உரிமைகளுக்காக எழுந்து நிற்பதற்கும் அதற்குத் தேவையான அமெரிக்க ஆதரவைப் பாதுகாப்பதற்கும் இடையே ஒரு கடுமையான தேர்வை எதிர்கொள்ளக்கூடும் என்று உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் அவர், தனது மக்கள் தங்கள் வீட்டை (நாட்டை) எப்போதும் பாதுகாப்பார்கள் என்றும் சபதம் செய்தார். ஜெலென்ஸ்கி பல சந்தர்ப்பங்களில் திட்டவட்டமாக நிராகரித்த பல ரஷ்ய கோரிக்கைகளை இந்த திட்டம் ஏற்றுக்கொள்கிறது, இதில் பெரிய பகுதிகளை விட்டுக்கொடுப்பதும் அடங்கும். அதேநேரம், முன்னதாக, உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு சமாதானத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு வியாழக்கிழமை காலக்கெடுவை ட்ரம்ப் நிர்ணயித்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை ரூபியோ அந்த காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது என்று கூறினார். இந்த விடயத்தை நன்கு அறிந்த வட்டாரங்களின்படி, திட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களைப் பற்றி விவாதிக்க ஜெலென்ஸ்கி இந்த வாரம் விரைவில் அமெரிக்காவுக்கு பயணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1453677
  13. தொண்டைமானுக்கு.... யாருடன் ஜாலியாக இருப்பது, யாரை திருமணம் செய்வது என்பதில்... கொஞ்சம் கவனமாகவே இருந்திருப்பார். ஏனென்றால்... அவர் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். வரும் வாரிசையும் சிந்தித்து இருப்பார். 😂
  14. தமிழ் மக்கள் ஓரளவு நிம்மதியாக வாழும் போதெல்லாம்... "கஸப்ப அந்த வெப்பன்ஸ எடு" Suhirtharaj Logarasa
  15. துபாயில்... பறந்து காட்டிய இந்தியாவின் தேஜஸ் விமானம் அனைத்து பார்வையாளர்களின் கண் முன்பாக விழுந்து நொறுங்கிஇருக்கிறது. வீடியோக்களைப் பார்க்கும்போது விமானம் விழுந்து நொறுங்கும்முன்பாக விமானி எஜக்ஷன் சீட்டின் மூலம் பாராசூட்டில் தப்பித்ததாக தெரியவில்லை. ஆக விமானியும் மரித்திருப்பார் என்பதே கணிப்பு.. உலகின் கண்களுக்கு முன் நடந்த ஆகப் பெரிய துயர மற்றும் அவமானகரமான சம்பவம் இது. இதே தேஜஸ் விமானம் இந்தியாவில் சென்ற ஆண்டு மார்ச் மாதம் விபத்துக்கு உள்ளானது. இதே போன்ற விபத்துதான்அது. அந்த விபத்தில் நல்வாய்ப்பாக அந்த விமானத்தின் விமானி எஜக்ஷன் சீட்டின் மூலம் பாராசூட்டில் குதித்து தப்பிவிட்டார். ஆனால் இன்று சற்று முன் நடந்த இந்த விபத்தில் விமானி தப்பித்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். என்ன கொடுமை என்றால் ஏர் ஷோவுக்கு முன்பாக விமானத்தின் எரிபொருள்டேங்க்கில் இருந்து எரிபொருள் கசிந்ததை கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் இந்த எரிபொருள் கசிவது ஓவர் ஃபில்லிங் எனப்படும் கொள்ளளவுக்கு மேல் எரிபொருளை ஊற்றியதால் நடந்தது என்று முடிவு செய்திருக்கிறார்கள். விமானத்தில் இருந்து கசிந்த எரிபொருளை அட்டைப் பெட்டிகள் வைத்து பிடித்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப் பட்ட விமானம் என்பதுதான் இதிலுள்ள ஹை லைட்டே.. தேச பக்தியை வைத்தே ஆட்சியைப் பிடித்த ஒரு கட்சியின்ஆட்சியில் போர் விமானங்கள் கூட ஊழலின் காரணமாக எவ்வளவு தரம் தாழ்ந்து தயாரிக்கப் படுகின்றன என்பதற்கான உதாரணம்தான் இந்த விபத்து. மேலே உள்ள படத்தில்... விமானத்தில் நடந்த எரிபொருள் லீக்கேஜை அட்டைப் பெட்டி வைத்து பிடித்த போட்டோக்களும் தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கிய வீடியோவும் கொடுத்திருக்கிறேன். முபாரக் அலி
  16. செய்தி - புத்தருக்கு சொந்தமான இலங்கையிலேயே தமிழர்களும், முஸ்லிம்களும் வசிப்பதாக ஞானசார தேரர் தெரிவிப்பு. ஞானசாரரின் கருத்துக்கு ஆதாரமான, கி.மு. 483 இல் கையொப்பமிடப்பட்ட காணி உறுதிப் பத்திரம். Suhirtharaj Logarasa
  17. ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி ரணில் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு.
  18. யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவுகூற எவ்வித தடையும் இல்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க! நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறுவதற்கு அரசாங்கம் எந்த தடையினையும் விதிக்கவில்லை என்றும் நினைவுகூறும் நிகழ்வுகளை இராணுவத்தினர் தடுக்கமாட்டார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். எனினும் அண்மையில் கொழும்பில் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு அனுமதி இல்லை என குறிப்பிட்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்தனர். அது அவர்களின் ஜனநாயக உரிமையாகவே காணப்பட்டது. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றது. எனவே இறந்த உறவினர்களை சுகந்திரமாக நினைவு கூர முடியும் இதற்கு பாதுகாப்பு படையினரும் அதற்கு தடையாக இருக்கமாட்டார்கள் என்று கூறினார். https://athavannews.com/2025/1453624
  19. நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன். அந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. கடந்த 14 மாதங்களாக அமுங்கிக் கிடந்த எதிர்கட்சிகள் இனி தெம்போடு நடமாடும். 14 மாதங்களாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்கு தள்ளியிருந்தது. ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை திருப்பித் தாக்கும் நிலைக்கு படிப்படியாக முன்னேறி வருவதனை அந்த ஆர்ப்பாட்டம் காட்டியதா?. எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாதபடியால்தான் தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களில் பெரிய வெற்றிகளைப் பெறமுடிந்தது.தமிழ் பிரதேசங்களிலும் இதுதான் நடந்தது. எதிர்க்கட்சிகளுக்கு இடையே தலைமைப் போட்டி. அது இப்பொழுதும் உண்டு.ஆனால் ஊழலுக்கு எதிராகவும் போதைப்பொருள் கட்டமைப்புக்கு எதிராகவும் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிராகவும் அரசாங்கம் முன்னெடுத்த திட்டவட்டமான விட்டுக்கொடுப்பற்ற நடவடிக்கைகளின் விளைவாக எதிர்க்கட்சிகள் உஷாரடைந்து விட்டன. இது ஒரு கட்டத்தில் தங்களுடைய மடியில் கை வைக்கும் என்ற நிலை தோன்றிய போது அவர்கள் ஒன்றாகினார்கள்.ஏனென்றால் பாதாள உலகம், போதைப் பொருள் வாணிபம், ஊழல்வாதிகள் என்று எல்லாவிதமான குற்றச் செயல்களையும் செய்துவிட்டு இனவாதத்தின் பின் பதுங்கும் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிகம்.அதன் பொருள்,ஜேவிபி இனவாதம் இல்லாதது, பரிசுத்தமானது என்பது அல்ல. ஆனால் கடந்த பல தசாப்தங்களாக இலங்கைத் தீவை ஆட்சி செய்து வந்தது எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள்தான். தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியது கடந்த ஆண்டில்தான். எனவே ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் என்ற அடிப்படையில் இந்த ஆட்சிக்கு முன் நிகழ்த்த பல குற்றச் செயல்களுக்கும் எதிர்க்கட்சிகள்தான் அதிகமாகப் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.அரசாங்கத்தின் ஊழல் மற்றும் போதைப்பொருள் வாணிபத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை நெருங்கத் தொடங்கியதன் விளைவாகவும் முன்னாள் ஜனாதிபதியாகிய ரணிலைப் போன்றவர்கள் கைது செய்யப்படும் ஒரு நிலைமை தோன்றிய பின்னரும் எதிர்க்கட்சிகள் உஷாரடைந்தன.அதன் விளைவுதான் நுகேகொட பேரணி. பேரணி நடக்கவிருந்த பாதைகளில் மின்கம்பங்களில் ஆங்காங்கே புற் கட்டுக்கள் கட்டப்பட்டிருந்தன.அதன் பொருள் மாடுகள் அதாவது மந்தைகள் அந்த வழியாக வரப்போகின்றன என்பதுதான்.மேலும் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்கள் உயரத்தில் பொருத்தி வைத்திருந்த ஒலிபெருக்கிகளையும் போலீசார் அகற்றினார்கள்.அப்பொழுது உயர்தரப் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கடந்த திங்கட்கிழமைதான் அந்த பரீட்சை முடிந்தது. எனவே பரீட்சையில் படிக்கும் பிள்ளைகளுக்கு அந்த ஒலி பெருக்கிகள் தொந்தரவாக இருக்கும் என்ற ஒரு பொருத்தமான காரணத்தை போலீசார் கூறினார்கள். எனினும்,எல்லாவற்றையும் தாண்டி எதிர்க் கட்சிகள் ஆயிரக்கணக்கானவர்களை அந்த இடத்துக்கு கொண்டுவந்தன.கடந்த 14 மாதங்களிலும் எதிர்க் கட்சிகள் தங்களை அவ்வாறு ஒருங்கிணைத்தது இதுதான் முதல் தடவை.ரணில் விக்கிரமசிங்க அங்கே இருக்கவில்லை. அவர் ஆர்ப்பாட்டம் நடந்த அன்று இந்தியாவிற்குச் சென்று விட்டார்.ஆனால் அவருடைய கட்சிக்காரர்கள் கலந்து கொண்டார்கள். மஹிந்த வரவில்லை. அவர்களுடைய எதிர்கால வாரிசு நாமல் முன்னணியில் நின்றார். ஒரு வகையில் அது நாமலின் எழுச்சியைக் காட்டிய கூட்டம். அதை மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் “சஜித் பலத்தைக் காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சித் தலைவர்” என்று எழுதியிருந்தார். எதிர்க்கட்சிகள் மத்தியில் தலைமைத்துவப் போட்டி உண்டு. அதுதான் கடந்த ஆண்டு தேசிய மக்கள் சக்தி பெற்ற பிரம்மாண்டமான வெற்றிகளுக்கு ஒரு காரணம். இப்பொழுதும் அதே போட்டி உண்டு. நுகேகொட பேரணியில் நாமல் முன்னிலைக்கு வந்து விட்டார்.அவருடைய தோற்றம்,நடை உடை பாவனை எல்லாவற்றிலும் அவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்கும் ஆர்வம் தெரிந்தது. ஆனால் தகப்பனைப் போல தோற்ற மிடுக்கும் சன்னமான குரலும் அவருக்கு இல்லை. அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவர்களை ஒன்று திரளுமாறு நிர்பந்தித்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஒரு பலமான அணியாகத் திரள வேண்டும் என்று திட்டமிட்டு இதைச் செய்யவில்லை. ஏனென்றால் இப்பொழுதும் அங்கே தலைமைப் பிரச்சினை உண்டு. யாரை யார் தலைவராக ஏற்றுக்கொள்வது என்ற “ஈகோ”க்கள் உண்டு. அரசாங்கத்துக்கு எதிரான தற்காப்புக் கூட்டுத்தான் அது.எதிர்காலத்தில் ஒன்றாக நின்று ஆட்சி அமைக்கும் கூட்டு என்று கூற முடியாது. திருகோணமலை புத்தர் சிலையை வைத்து இனவாதத்தைக் கிளப்பி சேகரித்த சனத்தொகையும் அங்கே உண்டு.அந்தப் புத்தர் சிலை விடயத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கக்கின.அதில் சஜித் முக்கியமானவர்.அந்தச் சிலை விடயம் எதிர்க்கட்சிகளை தமிழ் மக்களுக்கு அம்பலப்படுத்தி விட்டது. ஆனால் திருகோணமலை புத்தர் எதிர்க்கட்சிகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. அரசாங்கத்தையும் சேர்த்து அம்பலப்படுத்தி விட்டார். சட்டவிரோதமாக நிறுவப்பட்ட ஒரு ரெஸ்ரோரண்டை அகற்றாமல் விடுவதற்காக உள்ளே கொண்டுவரப்பட்ட புத்தரை அரசாங்கம் முதலில் தெளிவான முடிவெடுத்து அகற்றியது.ஆனால் இனவாதத்துக்கு பயந்து பின்வாங்கியது.அந்த விடயத்தில் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்ததன்மூலம் அரசாங்கமும் தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்டது. நுகேகொட பேரணியில் தென்பகுதியில் உள்ள தமிழர்கள் உதிரிகளாகக் கலந்து கொண்டார்கள்.ஆனால் வடக்குக் கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் அங்கே போகவில்லை. தமிழ் மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை தங்களுக்கு உரியதாகக் கருதவில்லை என்பதைத்தான் அது காட்டியது. நாமல் ராஜபக்ச சில வாரங்களுக்கு முன் சுமந்திரனை சந்தித்து தமது ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டிருந்தார். ஆனால் தமிழரசுக் கட்சி அதற்கு மறுத்துவிட்டது.மறுக்கத்தான் வேண்டும். ஏனென்றால் திருமலைச் சிலை விவகாரம் நாமலையும் ஏனைய எதிர்க்கட்சிகளையும் அம்பலப்படுத்தியிருந்த ஒரு பின்னணியில்,அந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக் கட்சி கலந்து கொண்டு இருந்திருந்தால் அது தமிழ் மக்களைக் காட்டிக் கொடுப்பதாக இருந்திருக்கும். நுகேகொட பேரணியில் தமிழ் மக்கள் கலந்து கொள்ளாமல் விட்டதற்கு காரணம் அரசாங்கத்தை தமிழ் மக்கள் எதிர்க்க விரும்பவில்லை என்பதனால் அல்ல.தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்க விரும்பவில்லை என்பதனால்தான். இதில் எதிர்க்கட்சிகளுக்கு கூர்மையான ஒரு செய்தி உண்டு. திருமலை புத்தர் சிலையின் பின்னணியில் தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகளின் மீது கோபமாக இருக்கிறார்கள். ஆனால் இதே எதிர்க்கட்சிகளில் ஒன்று ஆகிய ஐக்கிய மக்கள் சக்திக்கு அதாவது சஜித்துக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சுமந்திரன் கேட்டிருந்தார். இப்பொழுது சஜித் யார் என்பதை திருமலைப் புத்தர் காட்டிவிட்டார்.தமிழ் வாக்குகளை சஜித்துக்குச் சாய்த்துக் கொடுத்த சுமந்திரனையும் அவர் அம்பலப்படுத்தி விட்டார். கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்த சுமந்திரன் கிட்டத்தட்ட 14 மாத கால இடைவெளிக்குள் நுகேகொட பேரணியில் சஜித்தை ஆதரிக்கவில்லை. நுகேகொட ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்த ஒரு காலச் சூழலில்,கடந்த புதன்கிழமை, தமிழரசுக் கட்சி ஜனாதிபதியை சந்தித்தது. அந்த சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சிதான்.அந்தச் சந்திப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் உட்பட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் ஏற்கனவே 2015ல் இருந்து தொடங்கி 2019வரையிலும் உரையாடப்பட்ட இடைக்கால வரைபை முழுமைப்படுத்துவது என்று அங்கே உரையாடப்பட்டிருக்கிறது. சுமந்திரன் தனது “எக்ஸ்” பக்கத்தில் அதுதொடர்பாகப் பதிவிட்டிருந்தார்.அதாவது ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட “எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற அந்த இடைக்கால வரைபை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் சென்று ஒரு புதிய யாப்பைத் தயாரிப்பதுதான் சுமந்திரனின் நோக்கமாகத் தெரிகிறது. ஆனால், கஜேந்திரகுமார் அது ஒற்றை ஆட்சிப் பண்புடைய ஒரு தீர்வு என்று விமர்சிக்கின்றார். அனுர அரசாங்கத்தோடு தமிழரசுக் கட்சி பேசவிருக்கும் தீர்வுத் திட்டம் அதுதானா என்ற கேள்வி இப்பொழுது வலிமையாக மேலெழுகிறது. அவ்வாறு பேசப்பட்ட காலம் எதுவென்று பார்த்தால், நுகேகொட ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்.அதன்மூலம் தமிழரசுக் கட்சி எதிர்க்கட்சிகளை நோக்கி தான் வரவில்லை என்பதனை சூசகமாக தெரிவிக்க முற்பட்டதா? அந்தச் சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சி. ஆனால் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கியது அரசாங்கம்.நுகேகொட ஆர்ப்பாட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்னதாக அவ்வாறு நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து,அந்தச் சந்திப்பின் மூலம்,அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாக ஒரு செய்தியை வெளிப்படுத்த விரும்பியிருக்கலாம். தமிழரசுக் கட்சியும் அவ்வாறு விரும்பியதா? கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்ட அதே சுமந்திரன் இப்பொழுது அனுரவோடு சேர்ந்து தீர்வுக்கான பேச்சுக்களில் இறங்கப் போகிறாரா?கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டது தவறு என்பதனை திருமலை புத்தர் நிரூபித்து விட்டார்.அன்றைக்கு சஜித்துக்கு வாக்களித்த தமிழ் மக்களை சஜித் திருமலை புத்தர் விடயத்தில் ஏமாற்றி விட்டார். நுகேகொட பேரணியில் தமிழ்மக்கள் விலகி நின்றமை அரசாங்கத்திற்குச் சாதகமானது.ஆனால் அதனை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசாங்கத்தின் முயற்சிகளை அல்லது திருமலை புத்தர் சிலை விடயத்தில் அரசாங்கத்தின் தளம்பலான முடிவுகளை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதாக வியாக்கியானம் செய்ய முடியாது. https://athavannews.com/2025/1453627

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.