Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இன்றைய திருமண நிகழ்வில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட பல இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோர்களுடன் இ.தொ.கா பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். https://athavannews.com/2025/1453641
  2. சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: நினைவு நாணயம், தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார் புட்டபர்த்தி, நவ. 19: புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக சத்ய சாய்பாபாவின் மகா சமாதியில் அவர் வழிபட்டு, தியானத்தில் ஈடுபட்டார். சாய்பாபாவின் நினைவு நாணயத்தையும், தபால் தலையையும் அவர் வெளியிட்டார். ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926ம் ஆண்டு நவம்பர் 23–ந்தேதி சத்யசாய் பாபா பிறந்தார். ஆன்மிக பணிகளுடன் ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்கினார். https://makkalkural.net/news/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/
  3. சீரற்ற காலநிலையினால் நாடு முழுவதும் 9 பேர் உயிரிழப்பு! நாடுமுழுவதும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடரும் மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் வீதிகளில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகக் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவைத்துள்ளார். இதனிடையே 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி, பதுளை, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1453616
  4. அமெரிக்காவின் அமைதி திட்டத்தை மறுத்தால், உக்ரைனின் மேலும் பல பகுதிகள் கைப்பற்றப்படும் – புடின் எச்சரிக்கை! ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை ஏற்க மறுத்தால் மேலும் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் 4 ஆண்டுகளை எட்ட உள்ள நிலையில் இப்போரை நிறுத்த உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடவில்லை. இதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரடியாக அழைத்து போரை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பல மாதங்கள் கழிந்தும், இந்த விவகாரம் எந்த முன்னேற்றமுமின்றி அப்படியே இருந்தது. இதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக ரஷ்யாவை பணிய வைக்க, அதனிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது கடுமையான வரியை அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் . இருப்பினும் ரஷ்யா மசிந்து அடிபணியவில்லை. இதன் தொடர்ச்சியாக, மேற்காசிய நாடான இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்துவதற்கு முன்மொழியப்பட்ட அமைதி திட்டம் போன்று, ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அமெரிக்கா முன்வைத்துள்ள, இந்த 28 அம்ச சமாதான திட்டத்தை போர் நிறுத்தத்திற்கான துவக்க புள்ளியாக ஏற்றுக் கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். ஆனால், உக்ரைன் இந்த சமாதான திட்டத்தை ஏற்க மறுத்தால், ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறும் எனவும், குபியான்ஸ்க் நகரை கைப்பற்றியது போல் ஏனைய முக்கிய பகுதிகளையும் கைப்பற்றுவோம் எனவும் புடின் வெளிப்படையாக அச்சுறுத்தியுள்ளார். இதேவேளை, டிரம்பின் குறித்த சமாதான திட்டத்தில் ரஷ்யாவின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளதால், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தன்னுடைய மதிப்பை இழக்க நேரிடும் எனவும், இந்த சமாதான ஒப்பந்தத்தை ஏற்க வலியுறுத்தினால், நீண்டகால நட்பை அமெரிக்கா இழக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் நலன்களுக்கு துரோகம் இழைக்காத மாற்று திட்டங்களை முன்வைக்க விரும்புவதாகவும் அவர் உறுதியளித்து உள்ளார். மேலும், இந்த முன்மொழிவு ஐரோப்பிய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாகவும், உக்ரைனின் இறையாண்மையையும், பரந்த பாதுகாப்பையும் பலவீனப்படுத்தக்கூடும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்நிலையில், இந்த சமாதான திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்குமாறு டிரம்ப் நிர்வாகம் உக்ரைனை வலியுறுத்திஉள்ளது. https://athavannews.com/2025/1453607
  5. வானத்தில் பறக்க வேண்டியதை… கீழே விழுத்தி, ஒரு அழகிய வாண வேடிக்கையே காட்டியதற்கு… பரிசு கொடுக்கத்தான் வேண்டும். பாரத் மாதாகீ ஜே….
  6. அந்த விமானம் புறப்படுவதற்கு முன், அதன் எரிபொருள் தாங்கியிலிருந்து எரிபொருள் வழிந்து கொண்டிருந்ததை… எவரும் பெரிதாக கவனத்தில் எடுக்கவில்லை என்கிறார்கள்.
  7. ஏன்டா…. மாணவர்களை கடத்துகின்றீர்கள். அதுகளின்… மனநிலை பாதிக்கப் படும் என்ற அடிப்படை அறிவே, உங்களுக்கு கிடையாதா.
  8. மாற்று அவயம் பொருத்திய பின்…. அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளில் எழுத முடியாது. அதன அனுபவித்தவர்களுக்கே தெரியும். இந்த புனிதப் பணியை மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.
  9. அண்ணே.... டிகிரியில, என் பெயர் அடிக்கணும்ணே... 😂
  10. பாத்திமா... பெயரைப் பார்க்க, முஸ்லீம் பெண் மாதிரி உள்ளது. இப்ப, பாய்மார் எல்லாரும்... மொட்டாக்கு போடவில்லை என்று பொங்கி எழப் போகிறார்களே. இரண்டு கிழமைக்கு "என்ரரெயின்மென்ட்" இருக்கு. 😂 🤣
  11. இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - சென்னை ஐகோர்ட் சென்னை: 'யு டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக வலைதளங்களில், இசையமைப்பாளர் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில், தன் புகைப் படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இளையராஜா மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், 'என்னை அடையாளப்படுத்தும் வகையில், என் புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என, எதையும் பயன்படுத்தக் கூடாது. 'சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி புகைப்படத்தை பயன்படுத்தியதன் வாயிலாக கிடைத்த வருமான விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். https://www.dinamalar.comஇளையராஜா புகைப்படம் சமூக வலைதளங்களில் பயன்படுத்த ஐகோர்ட் தடைசென்னை: யு டியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில், இசையமைப்பாளர் இளையராஜா
  12. திங்கள் முதல் வங்கி அட்டைகள் மூலமாக பேருந்து கட்டணங்கள்! வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் தொடங்கும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொட்டாவையில் அமைந்துள்ள மகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் அட்டை கட்டண முறை நிகழ்வு ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சு கூறியுள்ளது. இதன்படி, காலி, மாத்தறை மற்றும் பதுளைக்கு செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து கட்டணங்களுக்கான வங்கி அட்டைகள் மூலமாக பயணிகள் செலுத்தலாம். அரசு, தனியார் உட்பட மொத்தம் 05 வங்கிகள் இந்த முயற்சியில் இணைந்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு மேலும் கூறியுள்ளது. https://athavannews.com/2025/1453456
  13. இங்கிலாந்தில் பூப்பெய்தலை தடுக்கும் மருந்துகள் குறித்த சோதனைக்கு அனுமதி! இங்கிலாந்தில் சமீபத்தில் பாலின மருத்துவமனைகளில் பூப்பெய்தலைத் தடுக்கும் மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவர்களில் இந்த மருந்துகளின் பயன்பாடு குறித்த முதல் மருத்துவப் பரிசோதனைகளுக்கு கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கிங்ஸ் கல்லூரி லண்டன் (KCL) தலைமையிலான இந்தப் புதிய சோதனைகள், இந்த மருந்துகளின் ஆபத்துகள் மற்றும் நன்மைகள் இரண்டையும் ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக வைத்தியர் Hilary Cass) ஹிலாரி காஸ் தலைமையிலான முந்தைய ஆய்வு, ஹார்மோன் சிகிச்சைகளுக்கான ஆதாரங்கள் பலவீனமாக இருப்பதாகக் கண்டறிந்த பின்னர் இந்த சோதனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதேவேளை, சுமார் 250 குழந்தைகளை சேர்த்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ள “பாத்வேஸ்” எனப்படும் இந்த சோதனையானது, மருந்து மற்றும் மருத்துவமற்ற கவனிப்பைப் பெறும் குழுவுடன், மருத்துவமற்ற கவனிப்பை மட்டும் பெறும் குழுவை ஒப்பிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களைப் பின்தொடரும். இந்த மருந்துகள் குறித்து சில மருத்துவர் குழுக்கள் கவலைகள் தெரிவித்திருந்தாலும், பாலின மாற்று அறுவை சிகிச்சை ஆதரவு குழுக்கள், பாலின உறுதிப்படுத்தல் சிகிச்சையின் நன்மைகளை மருத்துவ அமைப்பு குறைத்து மதிப்பிடுவதாக வாதிடுகின்றன. மேலும் இந்த ஆய்வு முடிவுகளைப் பெற நான்கு ஆண்டுகள் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1453546
  14. பாகிஸ்தானுக்கு சீன உதவி இல்லாவிடினும், பாகிஸ்தான் வென்றுதான் இருக்கும். இந்தியாவுக்கு…. பெரிய வாய். வடை சுடத்தான் லாயக்கு.
  15. புதிய மொந்தையில் பழைய கள். 😂 தாத்தா காலத்திலிருந்து… வட்டமான போத்தலில் சாராயம் விற்றால், வாங்குறவனுக்கும் அலுப்பு அடிக்கும் என்ற படியால்…. “ஜொனி வாக்கர்” மாதிரியான போத்தலில் சாராயம் விற்கிறார்கள் என்பது எனது ஊகம். 🤣
  16. ¼ kg சிறு பயறு ¾ kg அச்சு வெல்லம் 150 ஜவ்வரிசி 20 திராட்சை 10 முந்திரி ¼ kg ரவை ½ kg சீனி 50 g நெய்.
  17. நுகேகொட கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப் பட்ட பாண், பருப்புக் கறி, சாராய போத்தல்கள். ஒரு படத்தில்.. பெரிய வாளும் உள்ளது.
  18. "கண்ணியத்தை இழப்பதா? அல்லது கூட்டாளியை இழப்பதா?" அமெரிக்காவின் திட்டங்களால் கடும் வேதனையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி! Sun News Tamil
  19. இந்தப் படத்தில்... வைத்தியசாலையில் உள்ள பொலிசாருடன் மல்லுக்கட்டிய, துவேச பிக்குகளுடன், துலார குணதிலக்க... பச்சை சேர்ட்டுடன் காணப்படுகின்றார். இந்தப் பட ஆதாரங்களே... இவனை கைது செய்ய போதுமானது.
  20. தெற்கில் தொடரும் போதை படகுகள்: சிக்கிய சஜித் கட்சி உறுப்பினர்! தென் கடற்பரப்பில் இன்று (20) போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பன்னல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படை குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வந்துள்ளது. இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட கூட்டு செயல்பாட்டின்போது இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது. படகிலிருந்து போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 300 கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ், துப்பாக்கிகள், ரிவோல்வர்கள் இருப்பதாகவும் தெரிய வருகின்றது. யாழ்ப்பாணம்.com
  21. போதைப்பொருள் கடத்தல்: கட்சி உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை! -சஜித் பிரேமதாச- தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது தொடர்பில் எக்ஸில் பதவிட்ட எதிர்க்கட்சித் தலைவர், நேற்று போதைப்பொருள் தொடர்பான கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் பொருத்தமான நடவடிக்கை எடுக்க தனி விசாரணை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பன்னாலையைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ள நிலையில் சஜித் பிரேமதாச இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்தக் கப்பலில் இருந்து சுமார் 4 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ அடங்கிய 376 கிலோ விற்கும் அதிகமான போதைப்பொருட்களை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. https://athavannews.com/2025/1453436

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.