Everything posted by தமிழ் சிறி
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது! வெளியான முக்கிய தகவல். கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றிரவு 8 மணியளவில் அவரது கட்சி அலுவலத்திலேயே இவர் கைது செய்யப்பட்டார். கொழும்பில் நடைபெற்ற வருடாந்த மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி காணாமலாக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான பிள்ளையான் சுமார் 18 வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்துக்கான தலைவரான மு. பால சுகுமாரை கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி கடத்திய ஆயுதக் கும்பல், சிவசுப்ரமணியம் ரவீந்திரனாத்தை உபவேந்தர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு அச்சுறுத்தியது. அதற்கமைய, உபவேந்தர் ரவீந்திரநாத் தனது இராஜினாமா கடிதத்தை எழுத்துப்பூர்வமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தார். எனினும், அவரது இராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளாது அவரை கொழும்பில் இருந்து தமது கடமைகளை செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. உபவேந்தருக்கு உயிரச்சுறுத்தல் இருந்தமையால் கொழும்பு, தெஹிவளையில் உள்ள அவரது மகளின் வீட்டிலேயே வசித்து வந்ததுடன், சில தேவைகளுக்காக வெளியில் செல்வதாக இருந்தால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துவிட்டு வெளியில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எனினும், 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வருவதாகக் கூறியிருந்த உபவேந்தர் காணமலாக்கப்பட்டிருந்தார். பேராசிரியர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இது பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அன்றைய தினம் மாலை 7 மணியளவில் தெஹிவளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்ட போது, பிள்ளையானின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுவோரினாலேயே குறித்த பேராசிரியர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க, தொடர்;ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையிலேயே நேற்று இரவு பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமைக்கு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் பட்டாசு கொழுத்தி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்றிரவு பட்டாசு கொழுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1427995
-
காற்று, சோலார் மின் உற்பத்தியில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!
காற்று, சோலார் மின் உற்பத்தியில் 3ஆம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா! கடந்த 2024ம் ஆண்டில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஜெர்மனியை பின்னுக்கு உலகின் 3வது பெரிய நாடாக மாறியது. புவி வெப்பமயமாதல் கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக, காற்று மின்சாரம் சோலார் எனப்படும் சூரிய சக்தி மின்சாரம் ஆகியவற்றுக்கு உலகம் முழுவதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக சோலார் மின் உற்பத்திக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, பயன்பாடு குறித்து சர்வதேச ஆய்வு நிறுவனம் எம்பர், தகவல்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த நிறுவன அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளாவிய மின்சார உற்பத்தியில் 41 சதவீத மின்சாரம் கடந்த ஆண்டு அணு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறைகளில் உற்பத்தி செய்யப்பட்டது. 2024ல் இந்தியா காற்று மற்றும் சூரிய சக்தி மூலமாக 215 (TWH) டெராவாட் ஹவர்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. இந்த உற்பத்தித்திறன் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மிகவும் தாமதமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இறங்கினாலும் அதிவேகத்தில் மின் உற்பத்தி திறனை அதிகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் இருந்த ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி இந்தியா அந்த இடத்தை கைப்பற்றியுள்ளது. அதேநேரத்தில் முதல் இடத்தில் இருக்கும் சீனா 1826 (TWH டெராவாட் ஹவர்ஸ்யும், 2வது இடத்தில் இருக்கும் அமெரிக்கா 757 (TWH) டெராவாட் ஹவர்ஸ்யும் உற்பத்தி செய்துள்ளன.கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் 22 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அணு மின்சாரம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்த எம்பர் எரிசக்தி நிறுவன நிர்வாக இயக்குனர் மெக்டொனால்ட் கூறியதாவது: உலகளாவிய சூரிய மின் உற்பத்தி மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. உலக அளவில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் இது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1427921
-
சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு! சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 104 சதவீத வரிகள் நள்ளிரவுக்குப் பின்னர் விரைவில் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா செவ்வாயன்று (08) கூறியது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கடுமையான வரிகளால் இலக்காகக் கொண்ட பிற வர்த்தக பங்காளிகளுடன் விரைவாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்க நகர்வுகளை முன்னெடுக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதனிடையே, கடந்த வாரம் ட்ரம்பின் கட்டண அறிவிப்புக்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குகள் தொடர்ந்து நான்காவது வர்த்தக நாளாக சரிந்தன. கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் முதல் முறையாக S&P உலகளாவிய மதிப்பீடு அளவுகள் 5,000 க்குக் கீழே முடிந்தது. பெப்ரவரி 19 அன்று அதன் மிக அண்மைய உச்சத்தை விட குறியீட்டெண் இப்போது 18.9% குறைவாக உள்ளது. கடந்த புதன்கிழமை ட்ரம்பின் கட்டண அறிவிப்பிலிருந்து S&P 500 நிறுவனங்கள் பங்குச் சந்தை மதிப்பில் 5.8 டிரில்லியன் அமெரிக்க டொலர் இழப்பைச் சந்தித்துள்ளன. இது 1950 களில் அளவுகோல் உருவாக்கப்பட்டதிலிருந்து நான்கு நாட்களில் ஏற்பட்ட மிக ஆழமான இழப்பாகும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையைச் சுற்றி ட்ரம்ப் அமைத்து வரும் நாடு மற்றும் தயாரிப்பு சார்ந்த வர்த்தகத் தடைகளை பேச்சுவார்த்தை மூலம் குறைக்கத் தயாராக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் உலகளாவிய சந்தைகள் முன்பு இலாபத்தைப் பதிவு செய்தன. மேலும், வரிகள் அமலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே புதன்கிழமை (09) காலை ஜப்பானின் நிக்கேய் பங்குச் சந்தை பரந்த அளவில் விற்பனையைக் கண்டது. மேலும் பிற ஆசிய சந்தைகள் சரிவை எதிர்கொள்ளத் தயாராக இருந்தன. நெருங்கிய நட்பு நாடுகள் மற்றும் முக்கிய வர்த்தக பங்காளிகளான தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அடுத்த வாரம் அமெரிக்கா பயணம் செய்ய உள்ளார். திட்டமிட்டபடி, நாடுகள் சார்ந்த 50% வரையிலான கட்டணங்கள் கிழக்கு நேரப்படி (0401 GMT) நள்ளிரவு 12:01 மணிக்கு அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியது. கடந்த வாரம் பீஜிங் அறிவித்த எதிர் வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக ட்ரம்ப் அதன் இறக்குமதிகள் மீதான வரிகளை 104% ஆக உயர்த்தியுள்ளதால், அந்த வரிகள் சீனாவிற்கு மிகவும் கடுமையாக இருக்கும். அதேநேரம் சீனா, அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மறுத்து, இறுதிவரை போராடுவதாக சபதம் செய்துள்ளது. உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசுடன் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டோம் என்று நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1427982
-
கொங்கோவில் கனமழை; 33 பேர் உயிரிழப்பு
கொங்கோவில் கனமழை; 33 பேர் உயிரிழப்பு. கொங்கோவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இக் கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் 13 மாவட்டகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இதனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கினால் இது வரை 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பகுதிகளில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427955
-
பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
அனுர திசநாயகக்க… ஜானாதிபதி தேர்தலில் போட்டியிடும் போது, கிழக்கு மாகாணத்தில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில்… பிள்ளையானிடம் சட்ட விரோத ஆயுதங்கள் உள்ளதாகவும் அதனை வைத்து மற்றவர்களை அச்சுறுத்தி அரசியல் செய்கின்றார் என்றும், தாம் ஆட்சிக்கு வந்தால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவார் என்றும் முன்பே கடுமையான தொனியில் கூறி இருந்தார். அந்தச் செய்தி யாழ். களத்திலும் வந்திருந்தது. ஜனாதிபதி தேர்தலில் அனுர வென்ற பின்…. பிள்ளையான் தலைமறைவாகி இருந்தமையும், அவர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார் என்றும்… சில செய்திகள் வந்திருந்தது. பின் பிள்ளையான் அசட்டு துணிச்சலில் வெளியே தலை காட்ட ஆரம்பித்து, அண்மையில் “கிழக்கு மாகாண தமிழ் கூட்டமைப்பு” என்ற கட்சி ஒன்றை… கருணா, வியாழேந்திரன் ஆகியோருடன் ஆரம்பித்து உள்ளூராட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகி வந்த நிலையில் பிள்ளையான் கைது செய்யப் பட்டுள்ளார். வியாழேந்திரன் ஏற்கெனவே கைது செய்யப் பட்டு விளக்க மறியலில் உள்ளார். தொடர்ச்சியாக கருணாவும் கைது செய்யப்படலாம். இப்போ… பிள்ளையானுக்கு ஏழரை ஆரம்பித்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.
-
டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
அனுர… சிங்களவர். அவர் சிங்களத்தில் தான் மேலே கையெழுத்து வைத்துள்ளார். தமிழக, ஈழத் தமிழர்தான்… தாங்கள் பிரிட்டிஷ்காரர் என்ற நினைப்பில் ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடுவார்கள்.
-
"ஒற்றை வீடியோவால் வீழ்ந்த தர்பூசணி விலை" - 2 ரூபாய்க்கு கேட்பதாக விவசாயிகள் வேதனை
ஒரு அதிகாரியின் தவறான செயலால், பல ஏழை விவசாயிகள் பாதிக்கப் பட்டமை பெரும் சோகம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
தேஷபந்து தென்னகோன் தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு! ”கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென” முன்வைக்கப்பட்ட யோசனை நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் சமர்ப்பிக்கப்பட்டது. அதனை, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சமர்ப்பித்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தும்பற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மாத்தறை வெலிகம ஹோட்டலொன்றுக்கு அருகில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரியொருவர் உயிரிழந்த மற்றும் மற்றுமொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் தேஷபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427961 ################### #################### ######################## Update :தேஷபந்து தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்! தேசபந்து தென்னகோனை, பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. Athavan NewsUpdate :தேஷபந்து தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை பெரும்பான...தேசபந்து தென்னகோனை, பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணை இன்று நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது! தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1427973- யாழ். உடுப்பிட்டியில் மூன்று கன்றுகளை ஈன்ற பசு!
தவிடும், புண்ணாக்கும் கொண்டு போய் கொடுக்கலாம். பசு… சந்தோசப் படும். 😂 🤣 இலங்கையிலேயே மூன்று கன்று ஈன்ற… தமிழ்ப் பசுவிற்கு வாழ்த்துக்கள். 👍🏼 🐄 🥰- சிறைக்கே மீண்டும் சென்றார் வியாழேந்திரன்
வியாழேந்திரனுக்கு… சனி மாற்றம் போட்டு, சிப்பிலி ஆட்டுது போலை. 😂 கையுக்கு எட்டினது, வாய்க்கு எட்டவில்லை. பிள்ளையான், கருணாவுடன் கூட்டுச் சேர்ந்த நேரம் சரியில்லை. 🤣- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
புத்தன்… சரியாக சொன்னீர்கள். எந்த விடயத்தையும் சூட்டோடு செய்யாமல் ஆறப் போட்டதால் வந்த வினை.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அட…. ஆமா. நானும் இப்போதான் முகத்தை கவனித்தேன்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குருநாகல் எரிவாயு விற்பனை நிலையத்தில் தீ விபத்து-நால்வர் உயிரிழப்பு!
- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்கலாம் வாங்க
- பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன். சென்னை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக திமுக மாநிலங்களவை எம்பியும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஏப். 4) அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. துணை வேந்தர் நியமனம், கைதிகளுக்கான தண்டனை குறைப்பு, டிஎன்பிஎஸ்சி பணி நியமனம் உள்பட எந்த மசோதாவை அனுப்பினாலும் அவற்றுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இதை எதிர்த்துதான் வழக்கு தொடரப்பட்டது. இப்படி ஒரு வழக்கை தொடர எங்கள் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார். அவர் வழங்கிய ஆலோசனையின் படி தொடரப்பட்ட இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதன்மூலம், அனைத்து மாநிலங்களின் சுயாட்சியை முதல்வர் ஸ்டாலின் நிலைநாட்டி இருக்கிறார். நாங்கள் 2023-ல் வழக்கு தாக்கல் செய்தோம். அதற்கு முன்பே 2 ஆண்டுகாலமாக 10 மசோதாக்கள் நிலுவையில் இருந்ததால், உச்ச நீதிமன்றமே 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, அந்த மசோதாக்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இனி இதற்கு ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை. மேலும், இனி எந்த ஒரு ஆளுநரும் அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதை மீறி நடந்துகொள்ளக்கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த கட்டத்தில் ஆளுநர் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்கலாம் என்பதையும் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்கள். மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு கால நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டால், அதன் மீது அவர் 30 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். அந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கும் முடிவை ஆளுநர் எடுத்தால் அதனை 3 மாத காலத்துக்குள் அனுப்பிவைக்க வேண்டும். பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதாவுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. எனவே, இன்று முதல் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிக்கப்படுகிறார். இனி தமிழ்நாடு அரசு யாரை முன்மொழிகிறதோ அவர்தான் வேந்தராக இருப்பார்" என தெரிவித்தார். https://www.hindutamil.in/news/tamilnadu/1357391-governor-ceases-to-be-the-chancellor-of-state-universities-in-tamil-nadu-wilson-1.html- சீனா மீது புதிய 50% வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!
அமெரிக்க பொருட்களுக்கு சீனா விதித்த வரியை நீக்காவிடில், மேலும் 50 சதவீத வரி விதிப்பு - ட்ரம்ப் எச்சரிக்கை!- நட்டத்தில் இயக்கும் இ.போ.ச.வின் 55 டிப்போக்கள்!
நட்டத்தில் இயக்கும் இ.போ.ச.வின் 55 டிப்போக்கள்! இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) மொத்தம் 55 டிப்போக்கள் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 54 இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மட்டுமே செயல்பாடுகள் மூலம் இலாபம் ஈட்டுவதாகவும் குறிப்பிட்டார். நஷ்டத்தில் இயங்கும் 55 டிப்போக்களுக்கு பல புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது விளக்கினார். திறமையற்ற முகாமையாளர்களை திறமையான முகாமையாளராக மாற்றுதல், பேருந்து அட்டவணைகளை திருத்துதல், பேருந்து பயணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், பயணிகளுக்கு கல்வி கற்பிப்பதன் மூலம் மோசடி நடவடிக்கைகளைக் குறைத்தல், ஊழியர்களை ஊக்குவிக்க ஊழியர்களின் சம்பளத்தை திருத்துதல், தொழிலாளர்களுக்கு பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்தல், ஒவ்வொரு டிப்போவிற்கும் தினசரி இலக்குகளை நிர்ணயித்தல், பேருந்துகளில் எரிபொருள் நிர்வாகத்தை மேம்படுத்துதல், விநியோகங்களின் தரத்தை தொடர்ந்து ஆய்வு செய்தல், டிப்போ செலவுகளைக் கட்டுப்படுத்த தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குதல், எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட மாதாந்திர நிதிக் கணக்குகளை மதிப்பாய்வு செய்தல் மற்றும் டிப்போக்களில் கூடுதல் வருமானம் ஈட்டும் செயல்பாடுகளை ஆராய்தல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும். இலங்கை போக்குவரத்து சபையில் 7,137 பேருந்துகள் உள்ளன, ஆனால் அவற்றில் 5,182 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன என்று அமைச்சர் மேலும் கூறினார். அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 1,955 பேருந்துகள் தற்போது சேவையில் இல்லை. இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது மொத்தம் 25,384 பேர் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1427930- கொழும்பு மேற்கு சர்வதேச முனைய பணிகள் ஆரம்பம்
கொழும்பு முனைய செயல்பாடுகள் தொடங்கியவுடன் அதானி பங்குகள் உயர்ந்தன! அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ), இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள அதன் புதிய கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தில் (CWIT) அதிகாரப்பூர்வமாக செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. அதானி குழுமம் துறைமுக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பின்னர், 2022 முதல் இந்த முனையம் கட்டுமானத்தில் உள்ளது. 35 ஆண்டுகால கட்டமைத்தல், இயக்குதல் மற்றும் பரிமாற்றம் (BOT) ஒப்பந்தத்தின் கீழ், APSEZ, இலங்கை கூட்டு நிறுவனமான ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA) ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டமைப்பால் CWIT உருவாக்கப்பட்டது. $800 மில்லியன் செலவில் தொடங்கப்பட்ட இந்த CWIT திட்டம் 1,400 மீட்டர் நீளமும் 20 மீட்டர் ஆழமும் கொண்டது. இதனால் முனையம் ஆண்டுதோறும் சுமார் 3.2 மில்லியன் கொள்கலன்களை கையாள முடியும். இந்த திறன் தெற்காசியாவின் முக்கிய டிரான்ஷிப்மென்ட் மையமாக கொழும்பு துறைமுகத்தின் நிலையை உயர்த்தும். APSEZ இன் படி, CWIT என்பது கொழும்பில் முழுமையாக தானியங்கிமயமாக்கப்பட்ட முதல் ஆழ்கடல் முனையமாகும், இது பொருட்கள் கையாளுதல் மற்றும் கப்பல் திரும்பும் நேரத்தை மேம்படுத்துகிறது. இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, CWIT-ல் செயல்பாடுகள் தொடங்குவது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பிராந்திய ஒத்துழைப்பில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. இந்தத் திறப்பு விழா இலங்கைக்கு பெருமை சேர்க்கும் தருணமாகும், இது உலக கடல்சார் வரைபடத்தில் உறுதியாக இடம்பிடித்துள்ளது – என்றார். கடந்த ஆண்டு, அமெரிக்க சட்டத்தரணிகள், கௌதம் அதானி மீது இலஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டியதை அடுத்து, CWIT திட்டம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதானி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஆனால் கென்யா உட்பட சில நாடுகள் அவரது நிறுவனங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தங்களை இரத்து செய்ய வேண்டியிருந்தது. CWIT திட்டம் முன்னேறிய போதிலும், அது அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து $500 மில்லியன் கடன் உத்தரவாதம் இல்லாமல் தொடர்ந்தது. 2023 நவம்பரில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனம், CWIT திட்டத்திற்கு ஆதரவளிக்கும் கடனை அறிவித்தது. டிசம்பரில் அதானி குழுமம் கடன் ஒப்பந்தத்திலிருந்து விலகிய நேரத்தில் நிதியுதவி செயல்படுத்தப்படவில்லை. அந்த நேரத்தில், நிறுவனத்தின் உள் திரட்டல்கள் மற்றும் மூலதன மேலாண்மைத் திட்டத்தின் மூலம் முனையத்திற்கு நிதியளிப்பதாக அதானி குழுமம் கூறியது. CWIT இப்போது திறக்கப்பட்டுள்ளதால், கொழும்பில் உள்ள பிற முக்கிய முனையங்களுடன் பொருட்கள் வணிகத்திற்காக அது போட்டியிட வேண்டியுள்ளது. சீனாவின் ஆதரவு பெற்ற கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (CICT) துறைமுகம் வழியாக செல்லும் கொள்கலன்களில் மிகப்பெரிய பங்கைக் கட்டுப்படுத்துகிறது. கடந்த ஆண்டு, CICT 3.3 மில்லியன் கொள்கலன்களை கையாண்டது. இலங்கை துறைமுக அதிகார சபையின் இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட முனையங்களான ஜெய் கொள்கலன் முனையம் மற்றும் ஆழமான நீர் கிழக்கு கொள்கலன் முனையம் 2.4 மில்லியன் கொள்கலன்களை கையாண்டன. ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸால் இயக்கப்படும் தெற்காசிய கேட்வே முனையம் (SAGT) 2 மில்லியன் கொள்கலன்களை கையாண்டது. மொத்தத்தில், கொழும்பு துறைமுகம் 7.7 மில்லியன் கொள்கலன்களை கையாண்டது. இது 2023 உடன் ஒப்பிடும்போது 12.3 சதவீதம் அதிகம். இதனிடையே, CWIT செயல்பாடுகளைத் தொடங்குவதாக APSEZ நிறுவனம் திங்களன்று அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் வலுவான மீட்சியைக் கண்டன. அமர்வின் தொடக்கத்தில் சரிந்த இந்தப் பங்கு, குறைந்த விலையிலிருந்து 6.5 சதவீதம் உயர்ந்து, இறுதியில் 3.30 சதவீதம் நிறைவடைந்து 1,110 கோடி இந்த ரூபாவில் முடிவடைந்தது. https://athavannews.com/2025/1427889- கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி!
கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி! கனடாவின் பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பஞ்சாபிகளை பின்தள்ளி குஜராத் வம்சாவளியினர் வேட்பாளர்களாக களத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளனர். கனடாவில் 2025ம் ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பிரதமராக பதவியில் இருந்த ஜெஸ்டின் ட்ரூடோவுக்கு ஆளும் லிபரல் கட்சியில் கடும் எதிர்ப்பு எழவே அரசியல் காட்சிகள் மாறின. தனது பதவியை ஜெஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்துவிட பெரும்பான்மை ஆதரவுடன் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்த அவர், ஏப்ரல் 28ல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் வேகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்க, மறுபக்கம் வேட்பாளர்கள் பற்றிய விவரங்களும் வெளியாகி வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக வழக்கத்தை விட இம்முறை கனடா தேர்தலில் பஞ்சாபிகளை பின்தள்ளி குஜராத் வம்சாவளியினர் அதிகம் பேர் போட்டியிடுகின்றனர். பல ஆண்டுகளாக தெற்காசிய நாடுகளின் அரசியல் களத்தில் பஞ்சாப்-கனடா அரசியல்வாதிகள் அறிமுக முகங்களாக இருந்த நிலையில் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த குஜராத்தியர்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தும் இத்தகைய நிகழ்வு ஒரு புதிய அம்சமாக பார்க்கப்படுகிறது. பிராம்ப்டன் தொகுதி முதல் கால்கரி வரை, 4 குஜராத் வம்சாவளி வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இவர்கள் முதல் தலைமுறை குடியேறியவர்கள், முதல்முறையாக பாராளுமன்ற தேர்தல் களத்தில் நுழைகின்றனர். https://athavannews.com/2025/1427912 - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.