Everything posted by தமிழ் சிறி
-
தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
- கருத்து படங்கள்
- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
பொலிஸ் மா அதிபர் தேசபந்துவுக்கு பிணை! விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாத்தறை நீதவான், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பத்துலச்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணை வழங்கி விடுவித்துள்ளார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கடந்த 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன், 20 நாட்கள் கடந்து மார்ச் 19ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்து இன்று (10) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428199- 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் ஆலய மகா கும்பாபிசேகம்-பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு!
50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் ஆலய மகா கும்பாபிசேகம்-பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு! யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர் இன்னிலையில் ஆலயத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரியர் வருகை தரவுள்ளதாக தெரிவித்து, ஆலய சூழலில் பெருமளவான பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிபடையினர், பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிகாலை வேளையில் ஆலய வழிபாட்டிற்கு வருகை தந்த குருக்கள்மாரையும் பக்தர்களையும் கடுமையான உடற்சோதைனைக்கு உட்படுத்தியே ஆலய வளாகத்தினுள் அனுமதிக்கப்பட்டதுடன் ஆலயத்திற்கு செல்வோர் இன்னல்களை எதிர்கொண்டிருந்தனர் மேலும் கும்பாபிஷேக பெருவிழாவிற்கு வருகை தந்த தம்மை இவ்வாறு இன்னல் படுத்துவதற்கு பலரும் விசனங்களை தெரிவித்திருந்ததுடன் பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலில் நடமாடுவதையும் அவதானிக்க முடிந்ததுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428273- 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதே இலக்கு – சுற்றுலாப் பிரதி அமைச்சர்
3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதே இலக்கு – சுற்றுலாப் பிரதி அமைச்சர். சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09) நடைபெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார். சுற்றுலாக் கைத்தொழில் நாட்டில் முதன்மைக் கைத்தொழில் என்றும் இவ்வாண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிக்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் நிலைபேறான சுற்றுலாப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக சுற்றுலா அமைச்சு செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் காணப்பட்ட வீசா பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக விரைவாக செயல்பட்டதாகவும், எதிர்காலத்தில் சுற்றுலாத் துறையில் மாற்றங்கள் பலவற்றை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மாகாண சுற்றுலா நிறுவனங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். . சுற்றுலாக் கைத்தொழிலில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் இடையே 8000 பேரளவில் அரசாங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும், முறையற்ற விதத்தில் சுற்றுலாக் கைத்தொழிலில் தொடர்ந்தும் ஈடுபடும் நபர்களை புதிதாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வியாபார நோக்கங்களுக்காக வருகை தருவதனால் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தற்போது அப்பிரச்சனையை முறையாக தீர்த்து வருவதாகவும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், அமைச்சிடம் காணப்படும் காணிகளைப் பயன்படுத்தி சுற்றுலாக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார். எல்ல, காலி, சீகிரியா போன்ற பிரதான சுற்றுலாக் கவர்ச்சி மிகுந்த இடங்களின் அண்மையில் அவசர சிகிச்சைப் பிரிவுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், சுற்றுலாத் தளங்களின் அடிப்படை வசதிகளை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தெளிவுபடுத்தினார். https://athavannews.com/2025/1428213- கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்!
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் பலவற்றின் பணிகள் இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்பட உள்ளன. செயற்படுத்தப்படவுள்ள முன்மொழிவுகளை தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்காக அந்த திணைக்களத்தின் மாதிரிக்கு அமைவாக முன்மொழிவுகளை தயாரிப்பது தொடர்பில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்கான ஒரு நாள் செயலமர்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்ற நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது நாட்டில் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை உருவாக்கி சமூகத்தை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் நோக்கில், அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்படவுள்ள “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்திற்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர், உரிய வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பாகவும் அதற்கமைய துரிதமாக ஆரம்பிக்க வேண்டிய திட்டங்களை இம்மாத இறுதிக்குள் ஆரம்பிப்பது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டிருந்தது மேலும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் நோக்கங்கம் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இங்கு தெளிவுபடுத்தினார். https://athavannews.com/2025/1428285- மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்!
மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்! இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மாத்திரம் 74 மருத்துவ கல்லூரிகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் தற்போது 13 லட்சத்து 86 ஆயிரத்து 150 அலோபதி வைத்தியர்கள் பதிவு செய்துள்ளனர் எனவும், அதேபோல 7 லட்சத்து 51 ஆயிரத்து 768 ஆயுர்வேதம்,சித்தா, யுனானி, இயற்கை மருத்துவ வைத்தியர்கள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் 811 பேருக்கு ஒரு வைத்தியர் என்ற அடிப்படையில் வைத்தியர்கள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை தமிழகத்துக்கு அடுத்தபடியாக, 70 மருத்துவ கல்லூரிகளுடன் கர்நாடகா 2 ஆவது இடத்திலும், 68 மருத்துவ கல்லூரிகளுடன் உத்தரபிரதேசம் 3 ஆவது இடத்திலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428272- சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
சீனப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் 145% உயர்வு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனப் பொருட்கள் மீதான வரிகளை கடுமையாக உயர்த்தியதால், பெரும்பாலான பொருட்கள் மீதான வொஷிங்டனின் மேலதிக வரி விகிதம் 145 சதவீதமாக உயர்ந்துள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (10) உறுதிப்படுத்தியுள்ளது. புதன்கிழமை பல நாடுகள் மீதான புதிய வரிகளை 90 நாட்களுக்கு ட்ரம்ப் இடைநிறுத்தியிருந்தாலும், சீன இறக்குமதிகள் மீதான புதிய வரிகளை 125% ஆக உயர்த்தியதன் மூலமாக பீஜிங்கின் மீது அழுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 20% வரியை அடிப்படையாகக் கொண்டு இந்த எண்ணிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை சீனப் பொருட்களுக்கு 125 சதவீத வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார், ஆனால் பின்னர் வெள்ளை மாளிகை இது முந்தைய 20 சதவீத வரியுடன் கூடுதலாகும் என்று தெளிவுபடுத்தியது. இதற்கு பதிலடியாக, சீனா வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு 84% வரிகளை விதித்துள்ளது. இதற்கிடையில், வொஷிங்டனை வரிக் கொள்கையில் இருந்து பின்வாங்க கட்டாயப்படுத்தும் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்காகவும், பதிலடி கொடுக்கவும் சீனா சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. https://athavannews.com/2025/1428289- உக்ரேனுக்கு நன்கொடை அளித்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்த பெண் விடுதலை
உக்ரேனுக்கு நன்கொடை அளித்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்த பெண் விடுதலை. உக்ரேன் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளித்தமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பெண் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க-ரஷ்ய கைதிகள் பரிமாற்றத்தில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண் கடந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளார். யுக்ரேனுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடை வழங்கியமைக்காக இவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை அபுதாபியில் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. இதன்போது குறித்த பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலையீட்டின் பேரில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428254- டொமினிகன் குடியரசில் இரவு விடுதி ஒன்றில் கூரை இடிந்து வீழந்து ஏற்பட்ட 184 பேர் உயிரிழப்பு!
டொமினிகன் குடியரசில் ஏற்பட்ட அனர்த்தத்தில் 184 பேர் உயிரிழப்பு! டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (08) கூரை இடிந்து வீழந்ததில் குறைந்தது 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பேரழிவு தரும் இந்த அனர்த்தத்தில் குறைந்தது நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன் 300க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தின் போது குறித்த இரவு விடுத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், விபத்தில் 500 முதல் 1,000 பேர் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. Athavan Newsடொமினிகன் குடியரசில் ஏற்பட்ட அனர்த்தத்தில் 184 பேர் உயிரி...டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (08) கூரை இடிந்து வீழந்ததில் குறைந்தது 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பேரழிவு தரும் இந்த அனர்த்தத்தி...- யாழ். அச்சுவேலி கூட்டுறவுச் சங்க காணியும் விடுவிப்பு
அச்சுவேலி வாக்குகளும்… அனுரவுக்கு கொத்தாக விழப்போகுது. 😁- டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
ரீச்சரை ஒழுங்கு படுத்தி விட்டதற்கு, எனக்கு “புறோக்கர்” காசு தரத்தானே வேணும். 😂- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
கேரளா.- 26/11 மும்பை தாக்குதல்; அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா!
26/11 மும்பை தாக்குதல்; அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா! 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான தஹாவ்வூர் ஹுசைன் ராணா (Tahawwur Hussain Rana), புதன்கிழமை (9) அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் விரைவில் இந்தியா திரும்பவுள்ளார். 64 வயதான அவர் சிறப்பு தனி விமானம் மூலம் இந்தியாவின் டெல்லிக்கு அழைத்து வரப்படவுள்ளார். அவர் விமான நிலையத்தில் தரையிறங்கிய உடனேயே, அவரை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) காவலில் எடுத்து விசாரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய-அமெரிக்கரான தஹாவூர் ராணா, லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் மற்றும் 166 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற 2008 மும்பை தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான டேவிட் கோல்மன் ஹெட்லியின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்தியாவில், ராணா மீது குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தல், கொலை, மோசடி மற்றும் சட்டவிரோத தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த நாடு கடத்தல் பிரதமர் நரேந்திர மோடியின் இராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார். https://athavannews.com/2025/1428144- தேசிய மக்கள் சக்தியின், யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் பதில் கூற வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் பதில் கூற வேண்டும்.. மெளனம் காத்தால் சம்மதமா !!!! பல நூறு மாணவர்களின் கல்வி சார்ந்த பொறுப்பை நடுத்தெருவில் விட்டுவிட்டு மாநகர பதவிக்காக ஜேவிபியின் பின்னால் அலையும் பல்கலைக்கழக விரிவுரையாளர். தற்போது ஜேவிபியின் பின்னால் அலையும் கபிலன் என்ற யாழ்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அவருக்கு வழங்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வி சார்ந்த பல பொறுப்புக்களை நட்டநடுத்தெருவில் விட்டு விட்டு ஜேவிபி காட்டிய பதவி ஆசையில் ஜேவிபியிற்கு பின்னால் திரிகிறார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத் தகவல்களின் படி கபிலன் என்ற நபர் அவருக்கு வழங்கப்பட்ட பல பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவுசெய்து கையளிக்காமல் நடுத்தெருவில் விட்டுவிட்டு தனது ராஜனாமா கடிதத்தினை துணைவேந்தரிடம் கையளித்துவிட்டு வெளியேறியதாக அறிய முடிகிறது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல மாணவஅணிகளின் பரீட்சை வினாத்தாள்களை திருத்தி கையழிக்கவில்லை என குற்றம் சாட்டடப்படடுகிறது. அது மட்டுமல்ல பல மாணவ அணிகளின் விரிவுரைகளை நிறைவுசெய்ய வில்லை எனவும் அவற்றை அரைகுறையாக விட்டு தேர்தலுக்காக பல்கலைக்கழகத்தினை விட்டு வெளியேறியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் மாணவர்களின் செய்முறை பயிற்சிகள் மற்றும் திட்டங்களையும் நிறைவுசெய்யாமல் பாதியில் விட்டுச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு இறுதிவருட மாணவர்களின் ஆய்வு மேற்பார்வை விடயங்களையும் அரைகுறையாக விட்டுச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பணிகளுக்காக மாதாந்தம் பல இலட்சம் ரூபா ஊதியமாகப்பெற்ற ஒருவிரிவுரையாளர் ஒரு பொறுப்புணர்வின்றி தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் கையளிக்காமல் மாநகர சபைப்பதவிக்காக ஜேவிபியின் காலில் விழுந்துள்ளார். பல்கலைக்கழக விடுப்பில் பல லட்சம் ரூபா மாதாந்த ஊதியத்துடன் உயர்படிப்பை படித்து நிறைவுசெய்த பின்னர் தனது கல்வி முன்னேற்றத்திற்கு அடித்தனமாக இருந்த பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்களையும் உரிய முறையில் கவனிக்க தவறிய ஒருவர் ஒரு பொறுப்புள்ள கல்விமானாக இருக்கமுடியாது. இத்தகையை பொறுப்பற்ற ஒருவர் இனவாத சக்தியான ஜேவிபியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு என்னத்தை கிழிக்க போகிறார் என்பது தான் தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள கேள்வி......... ஜேவிபியின் வாலில் தொங்கிக்கொண்டிருக்கும் கபிலன் மாநகர சபைத்தேர்தலில் வென்றாலும் சரி தோற்றாலும் சரி பதவியாசையில் தமிழினத்திற்கு துரோகம் இழைத்தவர்களின் பட்டியலில் இடம்பிடிப்பார் என்பது தான் ஜதார்த்தம்........ Sornalingam Varnan- தேர்தல்கள் நெருங்கும்போதுதான் வீதிகளை திறப்பீர்களா? பலாலி வீதி திறப்பு குறித்து சுமந்திரன் கேள்வி
கடந்த ஒக்ரோபர் மாதம்... அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்த போது.. சுமந்திரன் பொங்கல் சாப்பிட்ட காட்சி.- யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – கள ஆய்வில் ஈடுப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்!
யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – கள ஆய்வில் ஈடுப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்! யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரி, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதோடு, கள விஜயத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். மண்டைத்தீவு பகுதியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டது. வடக்கு பிராந்தியத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான ஆரம்ப திட்டங்கள் குறித்து விவாதித்தனர். இந்த முயற்சியினால் வடக்கு மாகாணத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கப்பெருவதோடு, கிரிக்கெட் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய அவர்கள் மைதானத்தின் கட்டுமானத்திற்காக நிதி உதவி வழங்குமாறு கடந்த வாரம் வருகை தந்த இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. https://athavannews.com/2025/1428183- டொமினிகன் குடியரசில் இரவு விடுதி ஒன்றில் கூரை இடிந்து வீழந்து ஏற்பட்ட 184 பேர் உயிரிழப்பு!
டொமினிகன் குடியரசில் இரவு விடுதி ஒன்றில் கூரை இடிந்து வீழந்து ஏற்பட்ட 184 பேர் உயிரிழப்பு! டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (08) கூரை இடிந்து வீழந்ததில் குறைந்தது 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பேரழிவு தரும் இந்த அனர்த்தத்தில் குறைந்தது நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன் 300க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தின் போது குறித்த இரவு விடுத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், விபத்தில் 500 முதல் 1,000 பேர் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. Athavan Newsடொமினிகன் குடியரசில் ஏற்பட்ட அனர்த்தத்தில் 184 பேர் உயிரி...டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (08) கூரை இடிந்து வீழந்ததில் குறைந்தது 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பேரழிவு தரும் இந்த அனர்த்தத்தி...- சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
அமெரிக்காவின் வரிகள்; சீனாவின் அழைப்பை நிராகரித்த அவுஸ்திரேலியா! அமெரிக்காவின் வரிகளை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவதற்கான பீஜிங்கின் முன்மொழிவை அவுஸ்திரேலியா இன்று (10) நிராகரித்தது. அதற்கு பதிலாக அதன் வர்த்தகத்தை தொடர்ந்து பன்முகப்படுத்துவதாகவும், அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவை நம்பியிருப்பதைக் குறைப்பதாகவும் அவுஸ்திரேலியா கூறியுள்ளது. உலகில் நடக்கும் எந்தவொரு போட்டியிலும் நாங்கள் சீனாவுடன் கைகோர்க்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, இந்தியா, பிரித்தானியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அவுஸ்திரேலியா தனது பொருளாதார மீள்தன்மையை உருவாக்கும் என்று அவர் கூறினார். எனினும் இந்த அறிவிப்பானது அவுஸ்திரேலியாவிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் அது தனது பொருட்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை சீனாவிற்கு அனுப்புகிறது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் அவுஸ்திரேலியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் 5% க்கும் குறைவாகவே உள்ளன. அமெரிக்காவிற்கும் பிற முக்கிய பொருளாதாரங்களுக்கும் இடையிலான வரிகள் மற்றும் பிற வர்த்தக கட்டுப்பாடுகள் குறித்த தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை, நாட்டில் வணிக முதலீடு மற்றும் வீட்டுச் செலவு முடிவுகளில் குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று அவுஸ்திரேலியாவின் மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இதனிடையே, அதிர்ச்சியூட்டும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (09), பல நாடுகள் மீதான அதிக வரிகளை தற்காலிகமாகக் குறைப்பதாகக் கூறினார். ஆனால் சீனாவை குறிவைத்து தொடர்ந்து வரிகளை உயர்த்தினார். அதன்படி 104% இலிருந்து 125% ஆக வரி உயர்த்தப்பட்டது. இது உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான வர்த்தகப் போரை மேலும் அதிகரித்தது. இதனிடையே, சீனா அனைத்து அமெரிக்க இறக்குமதிகளுக்கும் 84% பதிலடி வரிகளை விதித்துள்ளது, இது பீஜிங்கிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான வர்த்தகப் போரை ஆழப்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428170- யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி!
கடந்த ஒக்ரோபர் மாதம்... சுமந்திரன், அச்சுவேலி – வசாவிளான் வீதியை.. தான் சொல்லித்தான் திறந்தது என்று "பீலா" விட்டு.. பொங்கல் பொங்கி தின்ற மாதிரி, இன்று திறக்கப் பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதியும் தன்னால் தான் திறக்கப் பட்டது என்று "பீலா" விடவில்லையா. 😂 அல்லது தனது சுத்துமாத்துகள் எல்லாம், இனி வேலைக்கு ஆகாது என்று சுமந்திரன் அமைதியாக இருக்கின்றாரா. 🤣- நாவற்குழியில் பாலியல் விடுதி; மூன்று பெண்கள் கைது
எல்லோரும் “பென்சன்” எடுக்கின்ற வயதில் உள்ளவர்கள் போலுள்ளது.- யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி!
யாழில் பாதை திறப்பு! யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை- பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி (T சந்தி) வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதி மக்களின் பாவனைக்காக 35 ஆண்டுகளின் பின்னர் இன்றைய தினம் (10) ஆம் திகதி அதிகாலை 6 மணிமுதல் இராணுவத்தினரால் கட்டுப்பாடுகளுடன் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 1 ஆம் திகதி இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தியூடாக அச்சுவேலி செல்லும் வீதி திறக்கப்பட்டது. இன்று இரண்டாம் கட்டமாக வசாவிளான் சந்தியிலிருந்து- பலாலி T சந்திவரை திறக்கப்பட்டதையடுத்து பலாலி வீதி இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக மீண்டுள்ளது. Vaanam.lk- சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
சீனாவுக்கு 125% வரி; ஏனைய நாடுகளுக்கான கட்டணம் இடைநிறுத்தம் – ட்ரம்ப் உத்தரவு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (10) பல நாடுகளுக்கான தனது பரஸ்பர கட்டணத்தை 90 நாள் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார். இந்த 90 நாள் காலகட்டத்தில், கணிசமாகக் குறைக்கப்பட்ட 10 சதவீத பரஸ்பர கட்டணம் மட்டுமே அமுலில் இருக்கும் என்று அவர் கூறினார். எனினும், சீனா மீதான வரிகளை உடனடியாக 125 சதவீதமாக அதிகரிப்பதாக அவர் அறிவித்தார். இது முன்னர் அறிவிக்கப்பட்ட 104 சதவீதத்திலிருந்து அதிகமாகும். இந்த அறிவிப்பானது உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான உயர்மட்ட மோதலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ட்ரம்பின் பரஸ்பரக் கட்டணங்கள் நடைமுறைக்கு வந்த 24 மணி நேரத்துக்குப் பின்னர், ஒரு பெரிய வர்த்தகப் போர் குறித்த அச்சங்களைத் தூண்டியதுடன், மந்தநிலை குறித்த கவலைகளையையும் எழுப்பியது. இந்த எழுச்சி சர்வதேச பங்குச் சந்தைகளில் இருந்து டிரில்லியன் கணக்கான டொலர்களை அழித்தது மற்றும் ட்ரம்பின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தோன்றிய அமெரிக்க அரசாங்க திறைசேரி வருவாயில் கொந்தளிப்புக்கு வழிவகுத்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428138- கனடிய விமான நிலையத்தில் மகனை கடத்திய பெண் கைது
கனடிய விமான நிலையத்தில் மகனை கடத்திய பெண் கைது. டொரொண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தனது சிறிய மகனை நாட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்ல முயற்சித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனது மனைவி ஆறு வயது மகனை கனடாவை விட்டு வெளியே அழைத்துச் செல்லலாம் என சந்தேகம் தெரிவித்து புகார் செய்ததைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. பீல் பிராந்திய காவல்துறை மற்றும் கனடா எல்லைப் பாதுகாப்பு சேவையின் உதவியுடன், அந்த பெண்ணும், குழந்தையும் பியர்சன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். 36 வயதுடைய குறித்த பெண் குழந்தையை கடத்தினார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை தந்தையிடம் பாதுகாப்பாக மீளவளிக்கப்பட்டதாகவும், சந்தேகநபர் ஒன்டாரியோவில் உள்ள பெர்த் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது. https://athavannews.com/2025/1428137 - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.