Everything posted by தமிழ் சிறி
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிரிக்கலாம் வாங்க
- தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
இந்தியா... சிங்கள அரசியல்வாதிகளை மதிக்கின்ற அளவிற்கு, தமிழ் அரசியல்வாதிகளை கால் தூசிற்கும் மதிப்பதில்லை. சும்மா... சம்பிரதாயத்துக்காக சந்தித்து, படம் எடுத்துவிட்டு போய் விடுவார்கள். பல வருடங்களாக இவர்கள் இந்தியாவை சந்தித்தும், இதனை உணர்ந்த மாதிரி தெரியவில்லை. இவர்களை இந்தியனை நம்பி மோசம் போனதைவிட சீனாகாரனை நம்பி இருந்தாலாவது, ஏதாவது பிரயோசனமாக இருந்திருக்கும். முட்டாள் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை படுகுழியில் தள்ளி விட்டார்கள். இதற்குள் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு... சுத்துமாத்து செய்து கொண்டு திரிகிறதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.- அமெரிக்க நகரங்களில் ஜனாதிபதி டரம்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்!
அமெரிக்க நகரங்களில் ஜனாதிபதி டரம்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்! வொஷிங்டன், டி.சி. மற்றும் அமெரிக்கா முழுவதும் சனிக்கிழமை (05)ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்று கூடி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பில்லியனர் கூட்டாளியான எலோன் மஸ்க் ஆகியோர் அரசாங்கத்தை மாற்றியமைக்கவும் ஜனாதிபதி அதிகாரத்தை விரிவுபடுத்தவும் விரைவான முயற்சியைத் தொடங்கியதிலிருந்து அவர்களுக்கு எதிராக ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போராட்டமாக இது அமைந்தது. சமூகப் பிரச்சினைகள் முதல் பொருளாதாரப் பிரச்சினைகள் வரை ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலில் உள்ள குறைகளை போராட்டக்காரர்கள் மேற்கோள் காட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர். உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது அமெரிக்கா இறக்குமதி வரிகளை விதிக்கும் என்று ட்ரம்ப் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர், லண்டன், பாரிஸ் மற்றும் பெர்லின் உட்பட அமெரிக்காவிற்கு வெளியேயும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ட்ரம்பின் ஆதரவுடன் பில்லியனர் எலோன் மஸ்க்கின் அரசாங்கத் துறையின் செயல்திறன் குழு, அமெரிக்க அரசாங்கத்தில் 2.3 மில்லியன் கூட்டாட்சி பணியாளர்களில் 200,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, உள்நாட்டு வருவாய் சேவையில் 20,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது. கடந்த ஜனவரி 20 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதியாக பெறுப்பேற்ற ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலின் பெரும்பகுதி, அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தல், குடியேறிகளை நாடு கடத்துதல், திருநங்கைகளின் உரிமைகளை மாற்றியமைத்தல் மற்றும் சர்வதேச நாடுகளுக்கான வரி விதிப்பு போன்றவற்றினால் பெரும் விமர்சனங்களையும், கண்டனங்களையும் சந்தித்து வருகின்றார். https://athavannews.com/2025/1427665- தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
நன்றி.- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
அனுராதபுரம்-மஹோ ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்து வைத்தார் பிரதமர் மோடி! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு திட்டமான அனுராதபுரம்-மஹோ ரயில் சமிக்ஞை அமைப்பையும், புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ-ஓமந்தை ரயில் பாதையையும் சற்று முன்னர் திறந்து வைத்தனர். இந்தத் திட்டம் வடக்குப் பாதையின் மஹோ-அனுராதபுரம் பிரிவில் மேம்பட்ட சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை நிறுவுவதை உள்ளடக்கியது. முன்னதாக, இந்தியப் பிரதமர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அனுராதபுரத்தில் உள்ள ஜய ஶ்ரீ மகா போதியில் ஜனாதிபதி திசாநாயக்க அவர்களுடன் இணைந்து வழிபாடுகளை மேற்கொண்டிருந்தேன். பௌத்தமதத்தின் அதி சிறப்புமிக்கதும் மதிப்புக்குரியதுமான ஸ்தலங்களில் ஒன்றான இத்தலத்தில் வழிபாட்டினை மேற்கொள்வது உண்மையில் மிகவும் பணிவுக்குரிய தருணமாகும். அமைதி, ஞானம் மற்றும் ஆன்மீக நீட்சியின் வாழும் குறியீடாக இத்தலம் திகழ்கின்றது. புத்தபெருமானின் போதனைகள் எப்போதும் எமக்கு வழிகாட்டட்டும் என்றார். மேலும் மற்றொரு பதிவல், அநுராதபுரத்தில், மாஹோ-ஓமந்தை இடையேயான தரமுயர்த்தப்பட்ட புகையிரதப் பாதையினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களும் நானும் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தோம். அதேபோல மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான தொகுதிக்குரிய நவீன சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் தொலைத் தொடர்பு பொறிமுறையினை ஸ்தாபித்தல் உள்ளிட்ட சமிக்ஞை தொகுதி திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையின் அபிவிருத்தி பயணத்தின் பல்வேறு அம்சங்களிலும் இலங்கைக்கான ஆதரவை நல்குவதில் இந்தியா பெருமிதம் கொள்கின்றது – என்றார். https://athavannews.com/2025/1427657- கைபேசிச் சாட்சி – நிலாந்தன்!
கைபேசிச் சாட்சி – நிலாந்தன்! முல்லைத்தீவு, சின்னசாளம்பன் கிராமத்தில் ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கதறக் கதற அடிக்கிறார்.அதை ஒருவர் கைபேசியில் படம் பிடிக்கிறார்.அக்காட்சி சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.விளைவாக போலீசார் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.சமூகவலைத்தளங்கள் எந்தளவுக்கு இது போன்ற விடயங்களில் வினைத்திறனோடு செயல்பட முடியும் என்பதற்குத் தமிழ்ச் சமூகத்தில் இது ஆகப் பிந்திய எடுத்துக்காட்டு.இதுபோன்று சிறுவர்களைத் தாக்கும் காட்சிகள்,முதியவர்களைத் தாக்கும் காட்சிகள் இடைக்கிடை சமூகவலைத்தளங்களில் யாராலாவது பகிரப்படும். பெரும்பாலும் அவற்றுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது ஒரு நல்ல போக்கு.அதே சமயம் இந்த போக்குக்கு பின்னால் உள்ள உளவியலையும் சற்று ஆழமாக ஆராய வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிங்கள ஊடகவியலாளர் கொழும்பு டெலிகிராப் இணையதளத்தில் எழுதியிருந்தார் “மனிதன் இப்பொழுது நடமாடும் கமராவாக மாறிவிட்டான்” என்று.அது உண்மை. இதுபோன்ற அக்கிரமங்கள் நிகழும் போது மட்டுமல்ல ஒரு இனத்துக்கு எதிரான இன அழிப்புப் போரையும் கைபேசிக் கமராக்கள் வெளியே கொண்டு வருகின்றன.வேறு எங்குமல்ல. இலங்கையில்தான். முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில்,தமிழ்க் கமராக்கள் மிகச் சிலதான் இருந்தன. அவை படையினரின் பகுதிக்குள் போக முடியாத கமராக்கள். அவை தவிர செய்மதிக் கமராக்கள் இருந்தன. எனினும் சனல் நாலு போன்ற ஊடகங்களில் வெளிவந்த சான்றுகளில் பல தமிழ்க் கமராக்களால் பிடிக்கப்பட்டவை அல்ல. அவை அதிகமாக படைத்தரப்பினரின் கமராக்களால் கைப்பற்றப்பட்ட காட்சிகள்.வெற்றிக் களிப்பில் தன்னிலை பறந்து,தற்காப்பு உணர்வை இழந்து அந்த குற்றச்செயல்களை புரிந்த படைத்தரப்பே படம் பிடித்த காட்சிகள். அதனால் நாடு இப்பொழுது ஐநாவில் குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றது.அப்போரை வழிநடத்திய தளபதிகளுக்கு எதிராக இதுவரையிலும் மூன்று நாடுகள் தடைகளை அறிவித்துள்ளன. அண்மையில் பிரித்தானியா நான்கு பேருக்கு எதிராகத் தடைகளை அறிவித்தது.இப்படிப் பார்த்தால் தன் சொந்தக் கைபேசிகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட ஒரு நாடு இலங்கை எனலாம். அமெரிக்காவில் 2020இல் ஒரு கைபேசிக் கமராவில் படம் பிடிக்கப்பட்ட கொலைக் காட்சி கொல்லப்பட்ட கறுப்பினத்தவருக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தது.ஒரு கறுப்பினத்தவரை அமெரிக்கப் போலீசார் நிலத்தில் குப்புறக் கிடத்தி கழுத்தில் முழங்காலை வைத்து நெரித்துக் கொல்லும் காட்சியை அந்த இடத்தில் நின்ற Darnella Frazier- டார்நெலா ஃப்ரேசியர் என்ற 17 வயதுடைய பெண் படம் பிடித்தார்.அந்தக் காணொளி அமெரிக்கா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தக் காணொளிக்காக டார்நெலா ஃப்ரேசியர் புலிஸ்டர் விருது பெற்றார். எனவே தம் கண் முன்னே நிகழும் அநீதிகளை, அக்கிரமங்களை படம் பிடிக்கும் கமராக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பவை என்ற பொருளில் போற்றுதலுக்குரியவை. அதேசமயம் அந்தக் கமராக்களுக்கு பின்னால் உள்ள உளவியல் தொடர்பில் வேறு ஒரு வாசிப்பும் வாதப்பிரதிவாதங்களும் உண்டு.உலகப் பரப்பில் முக்கியமாக இரண்டு சம்பவங்கள் தொடர்பாக அவ்வாறான வாதப்பிரதிவாதங்கள் அதிகம் நிகழ்ந்தன. முதலாவது சம்பவம் வியட்நாமில்1972ல் இடம் பெற்றது.அங்கே அமெரிக்கக் குண்டு வீச்சு விமானங்கள் ஒரு கிராமத்தின் மீது தீக்குண்டுகளை வீசின. அக்குண்டுகளால் பற்றி எரிந்த கிராமத்திலிருந்து Phan Thi Kim Phuc -பான் தி கிம் என்ற சிறுமி நிர்வாணமாக ஓடி வருகிறார்.அதை அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தைச் சேர்ந்த Nick Ut – நிக் உட் படம் பிடிக்கிறார்.அந்தப் படம் உலகப் புகழ் பெற்றது. அது பின்னாளில் பல விருதுகளை வென்றது. வியட்நாமில் அமெரிக்கா நிகழ்த்திய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக ஒரு சான்றாக அது என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. அதே சமயம் அதில் சம்பந்தப்பட்ட சிறுமி பின்னாளில் ஐநாவின் சமாதானத்துக்கான தூதுவர்களில் ஒருவராக கௌரவிக்கப்பட்டார்.இது முதலாவது சம்பவம். இரண்டாவது சம்பவம் சோமாலியாவில் 1993இல் நிகழ்ந்தது.அங்கே பஞ்சத்தால் மெலிந்து எலும்புக்கூடாகிய ஒரு சிறுவன் ஐநாவின் நிவாரண மையம் ஒன்றை நோக்கி நடக்கச் சக்தி இல்லாமல் தவழ்ந்து போகிறான். அவன் எப்பொழுது இறப்பான், அந்த உடலை எப்பொழுது தூக்கிக்கொண்டு போகலாம் என்று ஆர்வத்தோடு அருகே ஒரு பிணந்தின்னிக் கழுகு காத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் காட்சியை. கெவின் கார்ட்டர் -kevin Carter என்ற ஒளிப்படக் கலைஞர் படம் எடுத்தார்.சோமாலியாவின் பஞ்சத்தை அந்தளவுக்கு வேறு யாரும் ஒளிப்படமாக வெளியே கொண்டு வரவில்லை. அந்தப் படத்துக்கும் புலிஸ்டர் விருது கிடைத்தது. இந்த இரண்டு சம்பவங்களும் கைபேசி காலத்துக்கு முந்தியவை. அந்த இரண்டு சம்பவங்களின் மீதும் அறம் சார்ந்த ஒரு விவாதம் நடந்தது. என்னவெனில், வியட்நாமில் தீக்காயங்களோடு ஓடி வந்த அந்த சிறுமியை காப்பாற்றாமல் அந்த ஊடகவியலாளர் படம் எடுப்பதில் கவனமாக இருந்தது ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாக விவாதிக்கப்பட்டது.அதுபோலவே சோமாலியாவிலும் பிணந்தின்னிக் கழுகு ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனின் பசிக்கு உணவைக் கொடுக்காமல், பிணந்தின்னிக் கழுகைத் துரத்தாமல், நிதானமாக அதைப் படம் எடுத்த அந்த ஒளிப்படக் கலைஞரின் மனிதாபிமானம் பற்றிய கேள்வி. இந்த இரண்டு கேள்விகளிலும் நியாயம் உண்டு.ஆனால் கமராவை ஃபோகஸ் செய்வது ஒரு தேர்ந்த கலைஞருக்கு பல நிமிட வேலை அல்ல. அவர் அதனை மிகக் குறுகிய காலத்துக்குள் செய்து விடுவார். எனவே ஒளிப்படம் எடுப்பதில் செலவழித்த நேரத்தில் அந்தச் சிறு பிள்ளைகளுக்கு நிவாரணம் வழங்கியிருக்கலாம் என்ற விவாதம் ஏற்புடையது அல்ல.அதைவிட முக்கியமான வாதம் என்னவென்றால், அந்தப் படங்கள்தான் அந்தப் பிள்ளைகளுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்துக்கும் நீதியை, நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க உதவிய சான்றுகளாகும்.அந்த இடத்தில் ஒளிப்படக் கலைஞரின் தொழில் சார்ந்த தர்மம் என்று பார்க்கும்பொழுது அவர் அந்த படங்களை எடுத்தது சரி.அந்தப் படங்களை எடுத்த பின் அவர் அந்தச் சிறு பிள்ளைகளுக்கு உதவியிருக்கலாம். எனினும் இதில் இரண்டாவது சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒளிப்படக் கலைஞர் குற்ற உணர்ச்சியால் புலிஸ்டர் விருது கிடைத்த நான்கு மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு தகவல் உண்டு.அவர் குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்தாரா இல்லையா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். மேற்கூறிய இரண்டு சம்பவங்களையும் இப்பொழுது இக்கட்டுரையில் தொடக்கத்தில் கூறப்பட்ட சம்பவங்களோடு பொருத்திப் பார்க்கலாம். மூர்க்கமாகத் தாக்கப்படும் ஒரு பெண்ணைக் காப்பாற்றாமல் அந்தக் காட்சியைப் படம்பிடித்துக் கொண்டிருந்தது சரியா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படுகிறது. ஆனால் யாரோ ஒருவர் அதைப் படம் எடுத்ததால்தான் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைத்திருக்கிறது. படம் எடுப்பதும் அந்த அக்கிரமம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் எழுதுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு ஏதோ ஒரு விகிதமளவுக்கு உதவுகின்றன.அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.அதே சமயம் அது சமூக வலைத்தள உளவியலையும் பிரதிபலிக்கின்றது.படம் எடுப்பதோடும் அது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிர்வதோடும் தமது பொறுப்பு முடிந்து விட்டது என்று கருதும் ஒரு மனோநிலை. ஆனால் எல்லாச் சமூகங்களிலும் ஒரு பகுதியினர் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களால் முடிந்த நற்செயல் அவ்வளவுதான்.அதைக் குறை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஒரு சமூகத்தில் இருக்கும் எல்லாருமே சிறுமை கண்டு பொங்கும் போராளிகளாக இருப்பதில்லை.அதிகமானவர்கள் வாயால் பொங்கும் போராளிகள்தான்.பொதுவாக மனிதர்கள் தியாகம் செய்யாமல் எப்படி மற்றவர்களுக்கு உதவலாம் என்றுதான் சிந்திப்பார்கள். இங்கு ஒரு கூர்மையான உதாரணத்தைச் சொல்லலாம்.மோட்டார் சைக்கிள் ஓடும் பொழுது கவலையீனமாக ஸ்டாண்டைத் தட்ட மறந்தால் எதிர்ப்படும் யாராவது ஒருவர் ஏதோ ஒரு சமிக்ஞையைக் காட்டி ஸ்டாண்ட் தட்டப்படவில்லை என்பதனை தமக்கு உணர்த்துவார்கள். அதில் ஒரு மனிதாபிமானம் உண்டு. அந்த உதவியைச் செய்வதனால் அவர்களுக்கு எந்த நட்டமும்,இழப்பும் கிடையாது. ஆனால் அந்த உதவியினால் ஒர் உயிர் பாதுகாக்கப்படும். எனவே சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அவ்வாறான உதவிகளைச் செய்பவர்கள்தான்.அந்தப் பெண் தாக்கப்படுகையில் படம் எடுத்தவரையும் அப்படித்தான் பார்க்க வேண்டும்.இந்த இடத்தில் நீதியின் அளவுகோல்களையும் தர்மத்தின் அளவுகோல்களையும் வைத்துக்கொண்டு அந்த கைபேசிக்காரரை விமர்சிக்கத் தேவையில்லை.அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைப்பதற்கான தொடக்கமே அந்தக் காணொளிதான். மேலும் அந்த படம் எடுத்த நபர் மட்டுமல்ல அங்கு சூழ்ந்திருந்த அனேகமானவர்கள் அந்த அக்கிரமத்தைத் தடுக்க முயற்சிக்கவில்லை.எல்லாருமே பார்வையாளர்களாகத்தான் தோன்றுகிறார்கள். அவர்கள் ஏன் அந்த அக்கிரமத்தைத் தடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்? ஒரு மகத்தான போராட்டத்தை நடத்திய மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட அக்கிரமம் ஒன்று நிகழும் பொழுது, அந்தச் சிறுமை கண்டு பொங்கி எழ ஒருவர் கூட இருக்கவில்லையா? இதுபோன்ற விடயங்களில் சிறுமை கண்டு பொங்க வேண்டிய ஒரு மக்கள் கூட்டம் பார்வையாளராக நிற்பது எதைக் காட்டுகிறது? இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு கிளிநொச்சியில் ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வனை அவர் எழுதிய ஒரு செய்திக்காக சிலர் தாக்கினார்கள். கண்டி வீதியில் பலர் பார்த்திருக்க அவர் தாக்கப்பட்டார். தாக்கியவர்களை யாரும் தடுக்கவில்லை.தமிழ்ச்செல்வன் எழுதிய செய்தி யாருடைய பிள்ளைகளை போதைப் பொருட்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தை கொண்டதோ அதே மக்கள் அவர் தாக்கப்படுகையில் கையாலாகாத பார்வையாளர்களாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தச் சுயநலம் அல்லது கோழைத்தனம் அல்லது பார்வையாளர் மனோநிலை என்பது பாரதூரமானது.வீரமும் தியாகமும் நிறைந்த மகத்தான ஒரு போராட்டத்தை நடத்திய மக்கள் பார்வையாளர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்களா? மேலும்,தாக்கப்பட்ட பெண் வெடிப்பொருட்களை அகற்றும் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.அதாவது யுத்த களத்தோடு தொடர்புடைய ஒரு துறை.தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக அவர் ஏன் திருப்பித் தாக்க முயற்சிக்கவில்லை? மன்றாடாமல் திருப்பித் தாக்குவதில்தான் முன் உதாரணம் உண்டு.இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும்.எறும்புகூட தன்னை மிதிப்பவர்களைக் கடிக்கின்றது.இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் தம்மை தற்காத்துக் கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.சிறுமை கண்டு பொங்காது பார்வையாளர்களாக நிற்பவர்களின் தொகை அதிகரித்துவரும் ஒரு சமூகத்தில் பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டும். தாக்குபவனைக் கும்பிடக்கூடாது. https://athavannews.com/2025/1427623- கருத்து படங்கள்
- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
அனுராதபுரத்தை சென்றடைந்தார் பிரதமர் மோடி! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தின் இறுதி நாளான இன்று, சற்று நேரத்திற்கு முன்பாக அனுராதபுரத்தை சென்றடைந்துள்ளார். இந்தியப் பிரதமருடனான இந்த பயணத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார். இரு தலைவர்களும் அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு திட்டமான அனுராதபுரம் ரயில் நிலையத்தில் புதிய ரயில் சமிக்ஞை அமைப்பையும், புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ-ஓமந்தை ரயில் பாதையையும் அவர்கள் திறந்து வைப்பார்கள். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆகியோரின் வருகையை முன்னிட்டு இன்று அனுராதபுரத்தில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம் அமுலில் உள்ளது. https://athavannews.com/2025/1427633- பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழப்பு; சட்டத்தரணிகள் சங்கம் கவலை!
பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழப்பு; சட்டத்தரணிகள் சங்கம் கவலை! கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அதிகாலை அதிகாலை வெலிக்கடை சிறைச்சாலையின் தடுப்புக் காவலில் இருந்தபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. காவலில் இருந்தபோது அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான காயங்களை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், அவை குறித்த இளைஞன் தானே ஏற்படுத்திக் கொண்டதாகவும், அந்த நேரத்தில் அவர் சரியான மனநிலையில் இல்லை என்றும் வெலிக்கடை பொலிஸார் கூறுகின்றனர். எவ்வாறெனினும், கடுமையான காயங்களுக்கு உள்ளான இளைஞன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார். இந்த நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய, சம்பவம் அறிக்கையிடப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் சட்ட அமலாக்க பொறுப்புக்கூறல் மற்றும் பொது நம்பிக்கை மீதான பரந்த தாக்கங்கள் குறித்து சங்கத்தின் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், இந்த சம்பவம் குறித்து உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டுக் கொண்டார். இது தொடர்பான முன்னேற்றங்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கும், மேலும் உரிய நடைமுறை பின்பற்றப்படுவதையும் சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்படுவதையும் உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இலங்கை பொலிஸ் உட்பட சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்கள் மிகுந்த அக்கறையுடனும், எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று பல தசாப்தங்களாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தொடர்ந்து எச்சரித்து வருவதாக அவர் மேலும் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1427650- ராஜீவ்காந்தி மீது தாக்குதலை மேற்கொண்டதற்காக நான் வருத்தப்படவில்லை - விஜிதரோஹன விஜேமுனி
ராஜீவ் காந்தி மீது... தாக்குதலை மேற்கொண்டமைக்காக இன்று வரை உறுதியாக இருக்கும் விஜேமுனிக்கு நன்றி.- நாளை திறப்பு: பாம்பன் புதிய ரயில் பாலத்தின் சிறப்புகள் என்ன? கப்பலுக்கு எவ்வாறு வழிவிடும்?
இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலம் இன்று திறப்பு! ராம நவமியை முன்னிட்டு, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு செல்லும் செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு ரயில் பாலமானது இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இன்று மாலை இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு தமிழகம் செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைப்பார். இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பலமான இது 550 இந்திய ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புராணங்களில் வேரூன்றிய இந்தப் பாலம், ராமேஸ்வரத்திற்கு அருகிலுள்ள தனுஷ்கோடியில் இருந்து ராம சேது கட்டுமானத்தைத் தொடங்கியதை ராமாயணம் விவரிக்கையில், ஆழமான ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ராமேஸ்வரத்தை இந்திய பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் இந்தப் பாலம் 2.08 கி.மீ நீளமும், கடல் மட்டத்திலிருந்து 17 மீட்டர் உயரமும் கொண்டுள்ளதுடன், 143 தூண்களை கொண்டு அமைந்துள்ளது. இதனால் ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் பெரிய கப்பல்கள் சீராகச் செல்ல முடியும். https://athavannews.com/2025/1427653- தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
அர்ச்சுனாவில் பல விமர்சங்கள் இருந்தாலும், எந்த விடயத்தையும்... ஆழமாக கணித்து தரவுகளுடன் வெளியிடும் போது , எதிரியே அதற்கு மறுப்பு கருத்து தெரிவிக்காமல் வாய் மூடி இருப்பார்கள். சென்ற வரவு செலவு திட்டத்தில் தமிழ் பகுதிகளுக்கு, இழைத்த துரோகத்தை அர்ச்சுனா, புள்ளி விபரத்துடன் எடுத்து வைத்த போது அரச அமைச்சர்கள் எவருமே வாய் திறக்கவில்லை. இப்போ... மோடியை சந்தித்த இவர்களுக்கு, தமிழ் தரப்பு சார்பாக எதனையும்... சரியாக பேசும் அடிப்படை அரசியல் அறிவு கூட அற்றவர்கள். எல்லாத்துக்கும் தலை ஆட்டி விட்டு... வடையும், மிக்சரும் சாப்பிட்டு விட்டு வரத்தான் லாயக்கு. இப்போ... இவர்கள் மோடியை சந்தித்ததால்.... எந்த ஒரு பலனும் இல்லை. சம்பந்தன், மாவை காலத்தில் இருந்து படம் காட்டும் அரசியலைத்தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மக்களை பேய்க்காட்டும் அரதப் பழசான இவர்களின் அரசியல் இனி எடு படாது. தம்மைத்தானே இவர்கள் சுய பரிசோதனை செய்து, தமது அரசியல் நகர்வுகளை முன் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். இல்லையேல் விரைவில் அரசியல் அரங்கில் இருந்து காணாமல் போய் விடுவார்கள்.- தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
கிழக்கில்… நாலு பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்துத் தந்த சாணக்கியன், மோடிக்குப் பக்கத்தில் நிற்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால்… சுமந்திரன் தானும் தோற்று, தமிழரசு கட்சி தோற்பதற்கும் காரணமான ஆளுக்கு, இந்தச் சந்திப்பிற்கு போவதற்கே அருகதை இல்லை. வெட்கம் இல்லாமல் போய் பல்லை காட்டிக் கொண்டு நிற்கிது.- இராணுவத்தின் பிடியிலிருந்த பரந்தன் தொழிற்சாலையின் 15 ஏக்கர் காணி விடுவிப்பு
மற்றவர்களின் காணியை பிடிக்கும் போது, படைப்பிரிவு என்ன ஆவணத்தை வைத்திருந்து பிடித்தது.- தமிழ் தலைவர்களை சந்தித்த மோடி
வைத்தியர் அர்ச்சுனாவும் தமிழ்த் தலைவர்தானே… அவரை ஏன் அழைக்கவில்லை. சுமந்திரன், சிவஞானம் எல்லாத்துக்கும் அழைப்பு கொடுக்கும் போது… அர்ச்சுனாவுக்கு என்ன குறை. அர்ச்சுனா… போயிருந்தால்… இவர்கள் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு இருப்பார்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- இலங்கைப் பயணம். - கார்க்கி பாவா. -
4 நாள் பயணமா இலங்கைக்குப் போயிட்டு வந்தேன். கிரிக்கெட் டீம்ல தொடங்கி பொருளாதாரம் வரைக்கும் சமீபமா பலத்த அடி வாங்கிருந்தாலும் இயற்கை இந்த பூமிய இன்னும் கைவிடல. அவ்ளோ இதமான ஒரு நாடு இலங்கை. ஏர்போர்ட்ல இறங்கி கண்டிக்கு போற முதல் நாள் பயணத்துல இலங்கையும் தாயமும் ஒண்ணுன்னு புரிஞ்சது. ரெண்டுலயும் ஒரு டர்ன் அடிச்சா ஒரு மலை வருது. எந்தப் பக்கம் திரும்பினாலும் அழகு. டக்குன்னு கண்ண மூடிட்டு ஒரு க்ளிக் செஞ்சு வர்ற ஃபோட்டோவ வால்பேப்பரா வைச்சுக்கலாம். அப்படியொரு அழகு. கண்டிக்கு போற வழியெல்லாம் நிறைய அழகு கிராமங்கள். 20-25 கிராம, சிறு நகரங்கள கடந்திருப்போம். அதுல கவனிச்சது என்னன்னா, பெரும்பாலும் 40 வயதுக்கு மேல & 18 வயசுக்கு குறைவான ஆட்களே அந்த ஊர்ல இருக்காங்க. 18-25ல ஆட்கள் கண்ணுலயே படல. அதே கொழும்பு, கண்டி, காலில அவங்கள நிறைய பாக்க முடியுது. இது நிஜமான அவதானிப்புன்னா இலங்கை மாதிரி ஒரு நாட்டுக்கு இது ஒரு முக்கிய அபாயச்சங்குன்னு தோணுது. ஊரு நிறைய இருக்கிற அளவுக்கு பேருங்க நிறைய இல்லை போல. காலேஜ், கடைன்னு நான் பாத்த பேருல 90% இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பேருதான். மகானம, ரனதுங்க, ஜெய்வர்த்தனன்னு பழக்கப்பட்ட பேருங்க. தினத்தந்தில கிரிக்கெட் ஸ்கோர்போர்ட் பாக்குற காலத்துல அவங்கதான் பேர இப்படி முடிஞ்சும் முடியாம எழுதுறாங்கன்னு நினைச்சேன். ம்ஹூம். அங்க இருக்கிற போர்டுலயும் இப்படித்தான். மாத்துற, அல்ல, வாறிய, போறிய…ந்னு தான் பேரே இருக்கு. தமிழ்நாட்டுல ஒவ்வொரு 160கிமீக்கு ஒரு பெரிய நகரம் இருக்கும். சென்னைல இருந்து கிளம்பினா 160 கிமீல விழுப்புறம். அப்புறம் திருச்சி. அப்புறம் மதுரை. இலங்கைல அப்படி இல்ல. ஒரு ஊர் வந்தா அடுத்த 2 நிமிஷத்துல இன்னொரு ஊரு, அடுத்த 2 நிமிஷத்துல இன்னொரு ஊரு. ஆனா அந்த சீரிஸ் முடிஞ்சா அடுத்த ஊர் வர ரொம்ப தூரம் போகணும். தேசிய நெடுஞ்சாலைலாம் கம்மி. எல்லா NH ம் ரெண்டு பக்கமும் மூடப்பட்ட, பாதுகாப்பான சாலைகள். எல்லா சாலையும் ஸ்மூத்தா, நல்லாவே இருக்கு. ஆனா திடீர் திடீர்ன்னு ஹைவேவ மூடி ஊருக்குள்ள போகச் சொல்லிடறாங்க. என்னன்னு கேட்டா கரப்ஷனால முடிக்காம கிடக்கிற புராஜெக்ட்ன்னு சொல்றாங்க. மொழி மட்டுமில்ல, சாலைகளும் முடியாம தான் கிடக்கு இலங்கைல.லோக்கல் ரோடுலாம் அகலம் கம்மிதான். ஆனா கவனிச்ச வரைக்கும் குண்டு, குழிகள் இல்ல. ஹைதராபாத் பிட்ச் மாதிரி இருக்கு. இலங்கை கார் மாடல் எல்லாம் ஒரு தினுசா இருக்கு. சின்ன சைஸ் கார்னாலும் பெரிய சைஸ் டிக்கி இருக்கு. சுற்றுலா நாடுன்றதால லக்கேஜு வைக்க இடம் கொடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன். நம்ம ஊருல காரோட நீளம் தான் வரியை நிர்ணயிக்குது. இலங்கைல அப்படி இல்ல போல. Honda fitந்னு ஒரு மாடல் கார்ல போனோம். நல்ல லாரி கணக்கா நீளம் இருக்கு. உள்ள ஏறி உக்காந்தா மாருதி ஸென் கணக்கா அகலம் இருக்கு. நம்ம ஊர் காருங்க பெருசா கண்ணுல படல. அட, அது ஹேரியர்ன்னு பாத்தா அந்த நாட்டுல அது டொயொட்டா ஹேரியராம். சாப்பாடுலாம் குறை சொல்ல ஒண்ணும் இல்ல. நம்ம ஊருல வெங்காயம் அதிகமா போட்டு ஆம்லெட், பெப்பர் தூக்கலா ஹாஃபாயில்னு சொல்வோம்ல. அங்க எல்லாமே பில் அதிகமா போட்டுதான் செய்றாங்க. ரோட்டுக்கடைல கூட ஃப்ரைஸ் நம்ம ஊரு ரூ 600-700 சொல்றாங்க. சாப்பாடு மட்டுமில்ல. அங்க எல்லாமே டூயல் சிஸ்டம் தான். லோக்கல் ஒண்ணு, ஃபாரினர்ஸ்க்கு ஒண்ணு. கோயில்ல செருப்பு விடுறதுல இருந்து 250 மீட்டர் உயரமான லோட்டஸ் டவர் வரைக்கும் நமக்கு 10 மடங்கு விலைதான். மக்கள் பெரும்பாலும் நல்லவங்களா தெரிஞ்சாங்க. சுற்றுலா இடத்துக்கு அது ரொம்ப முக்கியம். ஆனா ஒண்ணு… பெங்களூருல இருக்கிற கன்னட மக்கள் 90% பேருக்கு தமிழ் தெரியும். மலேஷியால கூட அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா இலங்கைல நாங்க பேசின சிங்களர்கள் யாருக்கும் தமிழ் சுத்தமா தெரில. இதுக்கு பின்னாடியும் பல விஷயம் இருக்கு. கொழும்பு நகரம் மட்டும் இன்ஃப்ராஸ்டிரக்சர்ல துபாய் ரேஞ்சுக்கு இருக்கு. டிராஃபிக் போலீஸ கண்டா அலறுறாங்க. குக்கிராமத்துல கூட ஹெல்மெட் கட்டாயம். எல்லோரும் போட்டுக்கிறாங்க. அரவிந்த டி சில்வா ஒரு மாதிரி ஹெல்மெட் போடுவார்ல்ல. அப்படிலாம் ஏமாத்தாம நல்லா கவர் பண்ணி போடுறாங்க. ஸீப்ரா கிராஸீங்க மதிக்கிறாங்க. அழகா சிரிக்கிறாங்க. ஆனா ஃபாரினர்ன்னு தெரிஞ்சா ‘தொண்டைல ஆப்ரேஷன்… ஆயிர ரூபா கொடு’ந்னு மாறிடறாங்க. இன்னொரு தடவை இலங்கை போகணும். ஏன்னா இந்த தடவ கவர் பண்ணது தென் இலங்கையதான். வடக்கு பக்கம் தான் நாம் போக ஆசைப்படுற இலங்கை இருக்கு.- களவும் கற்று மற.
களவும் கற்று மற. என் பால்யத்தில் நடந்த சில சுவாரஸ்ய திருட்டுகளைப் பற்றியே இப்பதிவு. முதன் முதலில் வீட்டில் திருடிய அனைவருக்கும், நம் அம்மா காசு வைத்திருக்கும் கடுகு டப்பா ஏடிஎம்களை, எந்த பாஸ்வேர்டும் இன்றி திறந்து திருடியதோ அல்லது அசட்டையாக தொங்கும் அப்பாவின் சட்டைப் பைகளில் இருந்து பணம் எடுத்ததோ தான் முதல் திருட்டாக இருந்திருக்கும்! முதல் வெளிநாட்டுப் பயணமே அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு என்பது போல நானும் என் தம்பி பாலுவும் முதலில் திருடியது வீட்டு பீரோவின் லாக்கரில் இருந்து!அப்பாவின் தொழில் ஓட்டல் என்பதால் அன்றைய கலெக்ஷன்கள் நோட்டுக்கட்டுகளாக பீரோ லாக்கரில் குடியேறும். மறுநாள் வங்கியில் செலுத்தப்படும். கடை கேஷியர் ஒரு முறை அப்பாவிடம் 'அண்ணா பேங்கில் நாம செலுத்திய ரூபாய் கட்டுகளில் 2கட்டுளில் ஒவ்வொரு நோட்டு குறையுதுன்னு சொன்னாங்கண்ணா' என்னும் ஒரு சொல்லை வேதமாக பிடித்துக் கொண்டோம்! அதாவது எத்தனை கட்டுகள் இருந்தாலும் ரேண்டமாக ஏதாவது 2 கட்டில் இருந்து 1 நோட்டை மட்டும் உருவிக்கொள்வது! ஆரம்பத்தில் ₹10 & ₹20 கட்டுகளில் இருந்து தலா ஒவ்வொரு நோட்டு உருவிக் கொள்வோம். அப்போது முப்பது ரூபாய் இருந்தால் 10 நபர்கள் தியேட்டருக்கு போய் பாக்ஸ் டிக்கெட் எடுத்து படம் பார்க்கலாம் (₹1.75 ஒரு டிக்கெட்) 5நண்பர்களோடு நாங்க ஏழுபேர் போவோம் மீதி காசுக்கு அவ்ளோ ஸ்நாக்ஸ்! ஆரம்பத்தில் படு ஜாலியாக இருந்தது! உதயகீதம் படத்தில் கவுண்டமணி மரத்துக்கு மரம் உண்டியல் வைத்தது போல தினசரி திருடியதால் வீட்டில் யார் யார் மீதோ சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தனர்! 'நாம ஏன் 20 &10 என சில்லறையா திருட வேண்டும் நேரடியா ₹50 அல்லது ₹100க்கு போலாமே.! தினசரி திருட வேண்டாம் 3 நாளைக்கு ஒரு முறை திருடினாலே போதும் அல்லவா' என்றான் என் இளவல்! சரின்னேன்!! என்ன சிக்கல்ன்னா 30ரூபாயை ஈசியாக செலவழிக்க முடிந்த எங்களால் 100 ரூபாயை செலவழிக்க முடியவில்லை டிரவுசர் பைகளில் சில்லரை நிரம்பி நாங்கள் நடக்கும் போதெல்லாம் ஜல் ஜல்னு கொலுசொலி கேட்டது! ₹100 திருடி செலவழிக்கத் தெரியாமல் 50 கோலி குண்டுகள் 10 பம்பரங்கள் என சின்னம்மா’ போல வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கத் துவங்கினோம். எங்கள் வீட்டுக் கூரையின் கீழ் விளிம்பு சுவர் ஒன்று இருக்கு! வீட்டின் சைடு வழி சந்தில் ஏறி மிச்ச சில்லரைகளை அங்கு ஒளித்து வைக்க, அது வீட்டில் எலிகள் நடமாடும் எட்டுவழிச் சாலை என்பதை யூகிக்க மறந்தோம், எலிகள் ஓடியதில் கூரையில் நாங்கள் ஒளித்து வைத்திருந்த சில்லரைகள் வீட்டிற்குள் மழையாகப் பொழிந்தது! என்னடா! கொடுக்குற தெய்வம் கூரையை பிய்ச்சுகிட்டு கொடுக்குது என்று வியந்து, பிறகு அதிர்ந்து மண்டையை பிச்சிகிட்டு யோசித்து, வீட்டிற்குள் எங்கள் சொத்தான பம்பரம் கோலி போன்றவற்றின் வரவை மோப்பம் பிடித்து வருமான வரித்துறை போல பொறி வைக்க, 5வது 100 ரூபாயை திருடும் போது கையும் களவுமாக பிடிபட்டோம். கிரி படத்தில் வடிவேலு சொல்லுவது போல ஒரு 3மணிநேரம் அவய்ங்களால எவ்வளவு அடிக்க முடியுமோ அவ்வளவு அடிக்க அடி பொறுக்காது நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டு சடாரென்று அன்றே திருந்தி நல்லவனானோம்! இச்சம்பவம் நடைபெற்று ஒரு வருடத்திற்கு பின்பு வீட்டில் புதிய ₹5 நோட்டு ஒன்று கீழே கிடந்தது! அதற்கு நேர் மேல எங்கள் கைக்கு எட்டாத உயரத்தில்அப்பாவின் சட்டை காற்றில் அசைந்து கொண்டிருந்தது, பரபரவென அதை எடுத்துக் கொண்டு அப்பாவிடம் ஓடினோம் ‘அப்பா இது உங்க சட்டைக்கு கீழே கிடந்தது இந்தாங்க என்று தந்தோம்! அப்பா சட்டென எங்கள் முகத்தை சில நொடிகள் உற்றுப்பார்த்தார். 'சரி சரி நீங்க ரெண்டு பேரும் உங்க செலவுக்கு வச்சுக்கோ' என்றார்! எவ்வளவுன்னாலும் கேட்டு வாங்கிக்கோ ஆனா திருடவே திருடாதே’ என்று அன்றைக்கு அப்பா சொல்லாமல் சொல்லிக் கொடுத்தது இப்போ வரைக்கும் நாங்க ஃபாலோ பண்றோம். நன்றி தகப்பரே! வெங்கடேஷ் ஆறுமுகம்- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- இந்தியப் பிரதமரைச் சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்!
இந்தியப் பிரதமரைச் சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்! இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7 பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் ”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது X தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில் ”இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும் எனவும், பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான திரு இரா. சம்பந்தன் மற்றும் திரு மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் தான் அனுதாபம் தெரிவிப்பதாகவும், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் தனக்கு நன்கு தெரிந்தவர்கள் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இச்சந்திப்பின் மூலம், ”ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது எனவும், தனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் தமிழர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1427606- சிரிக்கலாம் வாங்க
- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு! இந்தியா மற்றும் இலங்கையின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பிரதமர் மோடி மேற்கொண்ட விதிவிலக்கான முயற்சிகளை கௌரவிக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தினால் பிரதமர் மோடிக்கு மதிப்புமிக்க ஸ்ரீலங்கா மித்ர விபூஷண பதக்கம் வழங்கப்பட்டது. வெளிநாடு சார்பில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 22வது சர்வதேச விருதாகும். உலகளாவிய நட்புகளை அங்கீகரிப்பதற்காக சிறப்பாக நிறுவப்பட்ட இந்த பதக்கம்,இந்தியா-இலங்கை உறவுகளின் ஆழத்தையும் அரவணைப்பையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இதேவேளை பிரதமர் குறித்த விருதினைப் பெற்றுக் கொண்ட பின்னர், செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு எனும் நட்பின் பெருமையை உணர்த்தும் திருக்குறள் ஒன்றைக் கூறி தனது நன்றியை தெரிவித்தார். குறித்த திருக்குறளின் பொருளானது ” நட்பு கொள்வது போன்ற அரிய செயல் வேறு எதுவும் இல்லை எனவும், அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றுமில்லை என்றும் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தமையை அவர் இங்கு நினைவு கூர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது X தளத்தில் தமிழ் மொழி மூலம் பதிவொன்றினையும் வெளியிட்டுள்ளார். குறித்த பதிவானது தற்போது இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மித்ர விபூஷண பதக்கத்தின் சிறப்பம்சங்கள் தர்ம சக்கரம் இரு நாடுகளின் கலாச்சார மரபுகளை வடிவமைத்த பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தை குறிக்கிறது. அரிசி கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சடங்கு பானையான பொன் கலசம், செழிப்பு மற்றும் புதுப்பித்தலை குறிக்கிறது. நவரத்தினம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த நட்பைக் குறிக்கிறது, இது தூய தாமரை இதழ்களால் சூழப்பட்ட ஒரு பூகோளத்திற்குள் சித்தரிக்கப்பட்டுள்ளது. சூரியனும் சந்திரனும் இந்த உறவின் காலமற்ற தன்மையை மேலும் பிரதிபலிக்கின்றன, இது பண்டைய வரலாற்றிலிருந்து எல்லையற்ற எதிர்காலம் வரை நீண்டுள்ளது. இந்த விருது, பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமைத்துவத்திற்கும், பிராந்திய ஒத்துழைப்புஇ கலாச்சார மறுமலர்ச்சி மற்றும் ஆன்மீக ராஜதந்திரத்திற்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பிற்கும் ஒரு ஒளிரும் அஞ்சலியாக நிற்கிறது. பிராந்தியம் முழுவதும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தை வளர்ப்பதில் இந்தியாவின் முக்கிய பங்கை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. https://athavannews.com/2025/1427588- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
ஜனாதிபதி செயலகத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
இந்திய-இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்! இந்தியா-இலங்கை கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான உத்தியோகபூர்வ அரசு விழா ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது வலுசக்தி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் இதன்போது பரிமாறிக்கொள்ளப்பட்டன. அத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் தலைமையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணி இணையவழியாகத் தொடங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427580 - சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.