Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்!
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்! விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14-04-2025 அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர். தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளின்போது நாட்டில் துன்பம் நீங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428434- "விசுவாவசு" தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
"விசுவாவசு" தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2025 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று அதிகாலை 03:21 மணிக்கு சுப நேரத்தில் உதயமாகி உள்ளது தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு, தமிழ் வருடப் பிறப்பு, சித்திரை பிறப்பு, சங்கராந்தி என பல பெயர்களால் இது கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. சூரிய பகவான், மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு என்கிறோம். விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14/04/2025 அன்று அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் நுழையும் பொழுது பிறந்துள்ளது. https://athavannews.com/2025/1428423- நம்ம பரிமளம்
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙏- நம்ம பரிமளம்
தமிழ் புது வருசம் பிறக்கின்ற நேரம்…. ஆட்களை வம்பிலை மாட்டி விடாதேங்கோ. 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- 44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
👉 https://www.facebook.com/reel/978884160670215 👈 ஈழப்பிரியன், மேலே உள்ள காணொளியையா சொல்கிறீர்கள். Made in California. 😂 🤣- நம்ம பரிமளம்
ஐயையோ... நான் இந்த விளையாட்டுக்கு வரேல்லை. 😂- நம்ம பரிமளம்
ஈழத்திலும் சரி... தமிழகத்திலும் சரி... "பரிமளம்" என்ற பெயரில் இருப்பவர்கள் எல்லாம், புருசன்காரனுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றார்கள். 🤣 @ராசவன்னியன் , @சுப.சோமசுந்தரம், @புரட்சிகர தமிழ்தேசியன் 😂- நம்ம பரிமளம்
@குமாரசாமி அண்ணையை உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂- இந்த நேரம் இது தேவையா ?
இப்பவே... இப்பிடி என்றால், அப்ப எப்பிடி இருந்திருப்பா... 😂- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- ஊர் யாரோடு? நிலாந்தன்.
ஊர் யாரோடு? நிலாந்தன். பிரதமர் ஹரினி மாவிட்ட புரம் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.50 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேக வைபவத்தில் அவர் விருந்தினராக வரவேற்கப்பட்டுள்ளார். அங்கே தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் காண முடியவில்லை. மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குத் தமிழ் மக்களின் போராட்டத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. 1968 ஜூன் மாதம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி வெற்றி பெற்ற கோவில் அது. அந்தப் போராட்டத்திற்கு கலாநிதி சண்முகதாசன் தலைமையிலான சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது;வெற்றி பெற்றது. ஆனால் இங்குள்ள முரண் என்னவென்றால் அந்தப் போராட்டத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி போராடும் தரப்பின் பக்கம் நின்று தலைமை தாங்கியது.தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தராகிய சுந்தரலிங்கம் ஒடுக்கும் தரப்பின் பக்கம் நின்றார். குறிப்பிட்ட சில சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என்ற தரப்பின் பக்கம் சுந்தரலிங்கம் நின்றார். அவர் அடங்காத் தமிழன் என்று அழைக்கப்பட்டவர். எனினும் தேசிய விடுதலை என்பது சமூக விடுதலை இல்லாமல் முழுமை அடையாது என்ற அடிப்படை விளக்கம் அவரிடம் இருந்திருக்கவில்லை. ஆனால் இது நடந்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளின் பின் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுது சமூக விடுதலை இல்லாமல் தேசிய விடுதலை இல்லை என்ற கொள்கை விளக்கம் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் உருவாகியிருந்தது. எனினும் இப்பொழுதும்கூட தமிழ்த்தேசிய முகமூடி அணிந்திருக்கும் பலரிடம் இந்த விளக்கம் இல்லை. அல்லது அது அவர்களுடைய வாழ்க்கை முறையாக இல்லை. சண்முகதாசன் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் தொடர்பில் விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும் தெளிவான ஆதரவு நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். அவரிடமிருந்து 1964இல் பிரிந்து சென்றவர்தான் ஜேவிபியின் தலைவராகிய ரோகன விஜயவீர. இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது அதுதொடர்பாக சண்முகதாசன் பின்வருமாறு கூறியிருக்கிறார்… “பழைய இடதுசாரி கட்சிகள் இந்திய விஸ்தரிப்புவாதத்தை எதிர்க்கத் தவறியதால் வகுப்புவாத அரைப்பாசிச ஜேவிபி சிங்கள இனத்தின் இரட்சகராகத் தோன்றி இந்திய விஸ்தரிப்புவாதத்தை எதிர்த்தது. அரசாங்க எதிர்ப்பு,தமிழர் எதிர்ப்பு,இந்திய எதிர்ப்பு உணர்வுகளை ஜேவிபி நன்கு பயன்படுத்திக் கொண்டது” சண்முகதாசன் தலைமை தாங்கிய சீனச் சார்பு கொம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகிய ரோகன விஜயவீர 1965இல் ஜேவிபியை ஸ்தாபித்தார்.அதாவது மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. அந்த ஜேவிபியை அடித்தளமாக கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்பொழுது ஆட்சி செய்கின்றது. இப்படிப்பட்டதோர் பின்னணியில், அதன் பிரதமரான ஹரிணி மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு வந்தது. தற்செயலானதா ?அல்லது திட்டமிடப்பட்டதா? பிரதமர் ஹரிணி அவருடைய வடக்கு விஜயத்தின் போது அவர் எங்கெங்கே போகிறார் என்று பார்த்தால் தமிழ்த்தேசிய நிலைப்பாடு தொடர்பாக விமர்சனங்களை கொண்ட அல்லது தமிழ்த்தேசிய நிலைப்பாடு தொடர்பில் முழு உடன்பாடு இல்லாத இடங்கள், நபர்களைத் தேடிச் அவர் செல்வது தெரிகிறது. ஹரிணி மட்டுமல்ல அரசாங்கத்தின் பிரதானிகள் அடிக்கடி வடக்குக்கு வருகிறார்கள். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சபைகளை கைப்பற்றும் நோக்கத்தோடு தீயாக வேலை செய்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அவர்களுக்கு கொடுத்த வெற்றி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.அந்த வெற்றியை அவர்கள் வெளியரங்கில் குறிப்பாக டெல்லியிலும் ஐநாவிலும் ஒரு மக்கள் ஆணையாக காட்டி பேசுகிறார்கள். இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ் மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாக அதை வியாக்கியானப்படுத்துகிறார்கள்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ். தேர்தல் தொகுதியில் மட்டும் தமிழரசு கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்தது.ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனம்கூட கிடைக்கவில்லை.தேசிய மக்கள் சக்திக்கு மொத்தம் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. அந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு விஸ்தரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் ஆணை தமக்கே அதிகம் உண்டு என்று அவர்கள் நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின் தமிழ் தரப்பு எனப்படுவது தமிழ் தேசிய தரப்பு மட்டுமல்ல என்ற ஒரு வாதத்தை அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். அந்த வாதத்தை மேலும் பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு உள்ளூராட்சி சபைகளில் வெற்றி தேவைப்படுகிறது. அந்த வெற்றியை நோக்கி அவர்கள் தீயாக வேலை செய்கிறார்கள். பலாலி பெருஞ்சாலையை திறந்ததும் அந்த நோக்கத்தோடுதான்.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகளின் பின்னர் தான் ஒரு பெருஞ்சாலையை அதுவும் யாழ்குடா நாட்டின் நெஞ்சை ஊடறுத்துச் செல்லும் ஒரு பெருஞ்சாலையை திறக்க முடிகிறது என்றால் யுத்தத்தில் அவர்கள் பெற்ற வெற்றியின் பொருள் என்ன. போருக்கு பின்னரான அரசியல் என்பதன் பொருள் என்ன. நிலை மாற்றம் என்று ஐநா கூறுவதன் பொருள் என்ன? 15 ஆண்டுகளின் பின்னரும் கூட அந்தப் பாதையை முழுமையாக திறக்க முடியவில்லை என்பதைதான் அந்தப் பாதை வழியே நிறுத்தப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை காட்டுகின்றது.அந்தப் பலகையில் பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 6:00 மணியிலிருந்து பிற்பகல் 6:00 மணி வரையிலும் தான் அந்த பாதையைப் பயன்படுத்தலாம்.பயணிகள் பேருந்துகள் தவிர ஏனைய கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வாகனங்களை இடையில் நிறுத்தவோ திருப்பவோ கூடாது. வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில்தான் பயணம் செய்ய வேண்டும். வாகன சாரதிகள் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் கைவசம் வைத்திருக்க வேண்டும். அந்த வழியால் யாரும் நடந்து போக முடியாது. அந்த வழியில் இரு புறங்களிலும் உள்ள உயர் பாதுகாப்பு வலையத்தை யாரும் படம் எடுக்க முடியாது. இவைதான் விதிகள்.இந்த விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவித்தல் கூறுகின்றது. எந்த சட்டத்தின் அடிப்படையில் அந்த அறிவித்தல் பலகை அங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று சுமந்திரன் கேள்வி கேட்டிருக்கிறார். அந்த அறிவிப்பு ஏறக்குறைய போர்க்காலத்தை நினைவு படுத்துவது. ஒரு போர்க்காலத்தில் அப்படிப்பட்ட பாதையால் போகும்போது அவ்வாறான நிபந்தனைகள் விதிக்கப்படுவதுண்டு.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த15 ஆண்டுகளின் பின்னரும் அவ்வாறான நிபந்தனைகளை விதிப்பதன் பொருள் என்ன? நாடு யாருக்குப் பயப்படுகின்றது? உயர் பாதுகாப்பு வலையங்கள் இல்லாத பாதுகாப்பான ஒரு நாட்டை ஏன் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பால் கட்டி எழுப்ப முடியவில்லை? சிங்கள பௌத்த அரசு சிந்தனை அல்லது மகாவம்சம் மனோநிலை எனப்படுவது எப்பொழுதும் தற்காப்பு உணர்வோடு எதிரிக்கு எதிரான அச்சத்தோடு முள்ளுக் கம்பிகளுக்குள் இருப்பதுதானா? தேர்தல் காலத்தில் பாதை திறக்கப்பட்டமை தேர்தல் நோக்கங்களைக் கொண்டதா என்று வழக்கறிஞர் கே.எஸ்.ரட்னவேல் கேள்வி எழுப்பி உள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் அவ்வாறு கேட்டிருக்கிறார். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மதிப்புக்குரிய ஒரு சட்டச் செயற்பாட்டாளர் அவர். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்களை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளில் காணப்பட்ட சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதையும் வீதித் தடைகள் அகற்றப்பட்டதையும் குறிப்பாக பலாலி பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரமான ஒரு பகுதி விடுவிக்கப்பட்டதையும் இங்கு நினைவூட்ட வேண்டும். ஆனால் அவ்வாறு திறக்கப்பட்ட பெரும்பாலான வீதித் தடைகளும் சோதனைச் சாவடிகளும் பின்னர் மீண்டும் தேர்தல்கள் முடிந்ததும் முளைத்து விட்டன. குறிப்பாக ஆனையிறவு மண்டை தீவின் நுழைவாயில்,புங்குடு தீவின் நுழைவாயில், வன்னியில் உள்ள சோதனைச் சாவடிகள் போன்ற பல சோதனைச் சாவடிகள் அல்லது வீதித் தடைகள் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டன. சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியிடம் இது தொடர்பாக சிவில் சமூகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. தேர்தல் நோக்கங்களுக்காக அரசாங்கம் பாதைகளை திறக்கின்றது. தேர்தல் தேவைகளுக்காக அரச வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் வெற்றியை இலக்காக வைத்து அதாவது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மேலும் உறுதிப்படுத்தி பலப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் வடக்கு கிழக்கில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள். “வெற்றி நமதே ஊர் எமதே”என்பது தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான தமிழ்க் கோஷமாகக காணப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அது எதிர்பார்க்கும் வெற்றிகள் கிடைக்குமாக இருந்தால் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாக கருதவில்லை;தங்களை ஒரு தேசிய இனமாக கருதவில்லை என்று அரசாங்கம் வெளி உலகத்துக்குக் கூறப்போகிறது. தமிழ் மக்கள் இன அழிப்புக்கு எதிராக நீதியைக் கேட்கவில்லை; ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வைக் கேட்கவில்லை என்றும் கூறப்போகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் மீது கொண்ட வெறுப்பினால் ‘தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம்’ என்று வாக்களித்த தமிழ் மக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசமும் வேண்டாம் என்று வாக்களிக்கப் போகிறார்களா? அல்லது தேசமாகத் திரண்டு வாக்களிக்கப் போகிறார்களா? https://athavannews.com/2025/1428410- வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பு!
வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பு! வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை வரலாற்றில் வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டாவது அதிகளவு பணம் 2025 மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது. இந்தப் பணப் பரிமாற்றத்தின் பெறுமதி 693.3 மில்லியன் அமெரிக்க டொலராகும். இதேவேளை 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை பெற்ற மொத்த வெளிநாட்டுப் பணம் அனுப்புதல்கள் 1,814.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் பெறப்பட்ட 1,536.1 மில்லியன் டொலர் மதிப்போடு ஒப்பிடும்போது 18.1% அதிகமாகும். https://athavannews.com/2025/1428407- வட, கிழக்கு தமிழர்களை மையப்படுத்திய மூலோபயத்தை இந்தியா கைவிட்டுள்ளது : கலாநிதி தயான் ஜயத்திலக்க
தமிழ் அரசியல்வாதிகளுக்கு இது இன்னும் புரியவில்லை. இன்னும்... இந்தியா ஏதாவது செய்யும் என, வீணீர் வடிய பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். அரசியல் நகர்வுகளை எடுக்க... அடிப்படை அறிவு இல்லாதவர்களிடம், நாம் என்னத்தை எதிர்பார்க்க முடியும்.- கருத்து படங்கள்
- யாழில் எறும்புக்கடியால் பிறந்து 21 நாட்களேயான சிசு உயிரிழப்பு
ஒரு உயிர் பறிபோக காரணமாக இருந்த பெற்றோரை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளையை... கவனிக்கத் தெரியாதவர்கள் ஏன்... குழந்தை பெறுகின்றார்கள். 😡 ஜேர்மனியில் இப்படி ஒரு சம்பவம் நடை பெற்று இருக்குமானால்... பெற்றோர் பெரும் தண்டனையை பெற்று இருப்பார்கள்.- சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் மின்சார சபை கைச்சாத்து!
சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் மின்சார சபை கைச்சாத்து! சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்திற்கான மின் உற்பத்தி ஒப்பந்தத்தில் இலங்கை மின்சார சபை கைச்சாத்திட்டுள்ளது. சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையமானது சஹஸ்தனவி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றது. இந்த சஹஸ்தனவி மின்சார உற்பத்தி நிலையத்தின் உரிமமானது 25 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை மின்சார சபைக்கு பரிமாறப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு இலங்கை மின்சார சபை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 350 மெகாவாட் திறனுடைய சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையமானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையமாகும். இது திறந்த சுழற்சி செயற்பாட்டில் தேசிய மின்கட்டமைப்பிற்கு மின்சாரத்தை வழங்கும் எனவும் இந்த மின் நிலையம், குறிப்பாக இரவு நேரங்களிலும் குறைந்த காற்றழுத்த நேரங்களிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் Regasified Liquefied Natural Gas (R-LNG) மூலம் இயக்கப்படுவதால், இது கோரிக்கையின் அடிப்படையில் மின்சாரத்தை வழங்கும் திறனை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்தின் மின்உற்பத்தி செயற்பாடுகள், 2028 ஆம் ஆண்டு முதல் டீசலில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றமடைவதால், எரிபொருள் செலவுகளை 50 வீதம் குறைக்க முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது சூரிய மற்றும் காற்றாலை உற்பத்தி திறனை விரிவுபடுத்தும் எனவும் நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428381- சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
வரி கொள்கையில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறோம்-ட்ரம்ப்! அமெரிக்காவின் வரிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமெரிக்காவும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் ,”எங்கள் வரி கொள்கையில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறோம். இது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது! இந்த மாற்றம் வேகமாக முன்னேறி வருகிறது,” என்று தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்து வருகிறதுடன் சீன பொருட்களுக்கான வரியை அமெரிக்கா தற்போது 145% ஆக உயர்த்தி உளள நிலையில், பதிலுக்கு சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி உள்ளது. உலகின் முதல் இரண்டு பெரிய பொருளாதாரங்களாக அமெரிக்காவும் சீனாவும் இருந்து வரும் நிலையில், அவர்களுக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மோதல் குறிப்பாக இரு நாடுகளுக்கும் பரவலாக உலக நாடுகளுக்கும் சவால்களை ஏற்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428405- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்! குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சிவனேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளது இதேவேளை கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ‘பிள்ளையான்’ கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்த நிலையில், அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428392- சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி
சஜித் பிரேமதாச... ஒற்றைக்கண் சிவராசனை நினைவூட்டும் விதமாக, ஒற்றைக்கண் புலியின் படத்தை, நரேந்திர மோடிக்கு அன்பளிப்பு செய்ததற்கு விளக்கம் கேட்கப் போகிறார்கள் போலுள்ளது. 😂 ஒற்றைக்கண்... யானை, மான், குரங்கு, கழுகு, புறா எல்லாம் இருக்க, புலியை அன்பளிப்பு செய்தால்... கோவம் வரும்தானே. 🤣Important Information
By using this site, you agree to our Terms of Use.
- ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.