Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. யாழில் 69 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு! இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் கிளிநொச்சி வத்திராயன் கடற்கரைப் பகுதியில் நேற்று (04) மேற்கொண்ட விசேட தேடுதலின் போது 174 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகையானது கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 69 மில்லியன் ரூபாவை விட அதிகமானது என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த கேரள கஞ்சா தொகையானது மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1424043
  2. தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா! கணவரை கைது செய்த பொலிஸார் பிரபல பின்னணிப் பாடகியான கல்பனா தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான கல்பனா, ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ள நிலையில், அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார் எனவும், இதனையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்பனாவின் வீடு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளதால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் வீட்டின் கதவை திறக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கல்பனா தற்போது ஆபத்தான கட்டத்தை கடந்துள்ளார் எனவும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கல்பனாவின் கணவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424061
  3. பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்! வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தானிய அதிகாரிகளும், மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னுவில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்களுடன் தொடர்புடைய ஒரு குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் பல பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தாகவும் குழு கூறியது. எனினும், இராணுவம் உடனடியாக எந்த உயிரிழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை. இரண்டு தற்கொலை குண்டுதாரிகளும் பரந்த இராணுவப் பகுதியின் சுவருக்கு அருகில் தங்களை வெடிக்கச் செய்து, தாக்குதல் நடத்தியதாக பெயர் வெளியிட விரும்பாத ஒரு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் நடந்தது, அப்போது முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் மக்கள் தங்கள் நோன்பை முடித்துக் கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை ரமலான் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தானில் நடந்த மூன்றாவது தீவிரவாத தாக்குதல் இதுவாகும். தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகள், பாதுகாவலர்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட பின்னர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரண்டு வாகனங்களை வளாகத்தின் சுற்றளவுக்குள் செலுத்திச் சென்று, பாரிய வெடிப்புகளை ஏற்படுத்தியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பு படையினரின் விரைவான செயற்பாட்டினால் குறைந்தது ஆறு தாக்குதல்காரர்ககள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. https://athavannews.com/2025/1424063
  4. ட்ரம்பின் முன்மொழிவுக்கு மாறாக காசாவை கட்டியெழுப்ப அரபுத் தலைவர்களின் $53 பில்லியன் டொலர் திட்டம்! எகிப்திய தலைநகர் கெய்ரோவில் செவ்வாயன்று (04) நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் 53 பில்லியன் அமெரிக்க டொலர் (£41.4 பில்லியன்) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமெரிக்கா காசாவை “கையகப்படுத்தி” இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் யோசனைக்கு போட்டியாக இந்த ஒப்புதல் வந்துள்ளது. கெய்ரோவில் நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட 53 பில்லியன் டொலர் திட்டம், காசாவின் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசத்தில் தங்க அனுமதிக்கும். இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட அரபு லீக் தலைவர் அகமட் அபூல் கெய்ட், “எகிப்துத் திட்டம் இப்போது ஒரு அரபுத் திட்டமாகும்” என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி ட்ரம்பின் கருத்துக்களை குறிப்பிடாமல், “தன்னார்வமாகவோ அல்லது கட்டாயமாகவோ எந்தவொரு இடப்பெயர்ச்சியையும் நிராகரிப்பதே அரபு நிலைப்பாடு” என்றும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அத்துடன், இந்தத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எந்தவொரு முன்மொழிவுகள் அல்லது யோசனைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இது அமைதிக்கான ஒரு பெரிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும் வலியுறுத்தினார். அரபுத் திட்டம் என்றும் அழைக்கப்படும் எகிப்தின் திட்டம், 2030 ஆம் ஆண்டுக்குள் காசாவை அதன் மக்கள்தொகையை அகற்றாமல் மீண்டும் கட்டியெழுப்புவதை முன்னறிவிக்கிறது. முதல் கட்டத்தில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களால் எஞ்சியிருக்கும் 50 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான குப்பைகளை அகற்றுவதும், வெடிக்காத குண்டுகளை செயலிழக்கம் செய்வதைத் தொடங்குவதும் அடங்கும். இந்தத் திட்டம், அடுத்த ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் “நிலையான, பசுமையான மற்றும் நடக்கக்கூடிய” வீடுகள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளை முழுமையாக மறுவடிவமைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இது விவசாய நிலங்களைப் புதுப்பித்து, தொழில்துறை மண்டலங்கள் மற்றும் பெரிய பூங்கா பகுதிகளை உருவாக்குகிறது. இது ஒரு விமான நிலையம், ஒரு மீன்பிடி துறைமுகம் மற்றும் ஒரு வணிகத் துறைமுகத்தைத் திறக்கவும் அழைப்பு விடுக்கிறது. 1990 களில் ஒஸ்லோ அமைதி ஒப்பந்தங்கள் காசாவில் ஒரு விமான நிலையம் மற்றும் ஒரு வணிகத் துறைமுகத்தைத் திறக்க அழைப்பு விடுத்தன, ஆனால் அமைதி செயல்முறை சரிந்ததால் திட்டங்கள் கைவிடப்பட்டன. காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசங்களிலிருந்து மாற்றுவதற்கான முயற்சிகளை அரபுத் தலைவர்கள் நிராகரிப்பதை மதிப்பதாகக் கூறி, ஹமாஸ் வரவேற்ற இந்தத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது. இதற்கிடையில், வெள்ளை மாளிகை அரபு நாடுகளின் உள்ளீடுகளை வரவேற்பதாகக் கூறியது, ஆனால் ஹமாஸ் பிரதேசத்தில் அதிகாரத்தில் இருக்க முடியாது என்றும் வலியுறுத்தியது. போருக்குப் பிந்தைய காசாவுக்கான தனது துணிச்சலான தொலைநோக்குப் பார்வையில் ஜனாதிபதி உறுதியாக நிற்கும் அதே வேளையில், பிராந்தியத்தில் உள்ள எங்கள் அரபு கூட்டாளிகளிடமிருந்து உள்ளீடுகளை அவர் வரவேற்கிறார். அவரது திட்டங்கள் இந்தப் பிரச்சினையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதற்குப் பதிலாக பிராந்தியத்தை பேச்சுவார்த்தைக்கு வரத் தூண்டியுள்ளன என்பது தெளிவாகிறது – என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் பிரையன் ஹியூஸ் கூறினார். அரபு நாடுகள் அங்கீகரித்த திட்டத்தில், சீர்திருத்தப்பட்ட பாலஸ்தீன ஆணையம் கட்டுப்பாட்டை ஏற்கும் வரை, ஹமாஸ் அரசியல் சுயேச்சைகளின் இடைக்கால நிர்வாகத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்கும். கடந்த மாதம், காசாவில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களை வேறு நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என்று ட்ரம்ப் முன்மொழிந்து, பிராந்தியத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ட்ரம்ப்பின் கூற்றுப்படி, அமெரிக்கா அந்த நிலத்தை மீட்டு மத்திய கிழக்கில் ஒரு “ரிவியரா”வாக மாற்றும். பாலஸ்தீனியர்கள், அரபு நாடுகள் மற்றும் மனித உரிமை நிபுணர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட அவரது திட்டம், இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானதாக இருக்கும் என்று கூறியது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவால் அங்கீகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424051
  5. சில வேளை… சுமந்திரனுக்கு, பாராளுமன்றம் போய்…. அமைச்சராகின்ற ஆசை, இன்னும் இருக்குதோ தெரியவில்லை. 😅 கிறுக்குத்தனமாக யோசிக்கின்றவருக்கு, அமைச்சர் ஆசையும் இன்னும் அடிமனதில் இருக்கும் என நினைக்கின்றேன். 😂 அதுக்குத்தான் ஆள்… பாராளுமன்றம் போக வேண்டும் என்று அடம் பிடிக்குது. 🤣 சிங்கனுக்கு.. “பெற்றோல் மக்ஸ்” லைட்டுத்தான் வேணுமாம். 😅 😂 🤣
  6. உச்சா.... போன மெத்தை என்றாலும், வீதியில் வைக்கப் பட்டுள்ள கமெராவை மறைக்க பயன்பட்டு இருக்கு. 😂
  7. கடவுளே... எனது பழைய உளவு இயந்திரத்தை, புதுசா மாற்றித்தா... 😂
  8. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் - அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் அவருடைய காதல் மனைவி வினிதா சமரசிங்க குணசேகர பற்றி நிசங்க கட்டுகம்பொல (Nissanka Katugampola) என்ற சிங்கள நண்பர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதிக்கு அண்மித்த நாளொன்றில் நடேசன் படுகொலை செய்யப்பட்டபோது வினிதா, நடேசன் மீது கொண்ட காதலுக்காகத் தன்னைத் தியாகம் செய்தாள் என்ற தொனியில் அவருடைய பதிவு அமைந்துள்ளது. இவர்களுடைய சிறந்த காதல் கதையை எதிர்காலச் சந்ததிக்கு எழுதி வைக்க வேண்டாமா என்று மற்றொரு சிங்கள நண்பரிடம் இவர் கேள்வி தொடுத்துள்ளார். தமிழ் மொழி பெயர்ப்பு வருமாறு... அற்புதமான, அன்பான இந்த காதல் ஜோடியை நாங்கள் முதன் முதலில் 1993 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சந்தித்தோம். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட நடேசன் (மகேந்திரன்) மற்றும் மாத்தறை கும்புறுபிட்டியவை பிறப்பிடமாகக் கொண்ட வினிதா சமரசிங்க குணசேகரவின் காதல் கதை நான் எனது வாழ்நாளில் படித்த சிறந்த காதல் கதைகளில் ஒன்றாகும். 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதிக்கு அண்மித்த திகதி ஒன்றில் வாயில் சுடப்பட்டு கொலை செய்யப்படும் போதும் அவள் அவனுடைய காதலுக்காக முன் நின்றாள். அவன் அவளுடைய காதலுக்காக நிபந்தனைகள் எதுவுமின்றி முன் நின்றான். தனது வாழ்நாள் முழுவதும் சிங்களவர்களுக்கு எதிராக போராடியவர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவருடைய சாப்பாட்டு மேசையில் வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் காணப்படும் முக்கியமான உணவு வேளையில் சிங்கள பெண் ஒருவர் இருப்பது எவ்வளவு விசித்திரமான ஒரு வழக்கம்? ஆக, வினிதாவும் நடேசனும் எங்களுக்கு கூறிய அவர்களுடைய காதல் கதையை எப்படியாவது எதிர்கால சந்ததியினருக்கு எழுதி வைக்க வேண்டாமா? (நந்தன வீரரத்ன) ---- என்று அப் பதிவு அமைந்துள்ளது. அதேநேரத்தில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தை மையமாகக் கொண்டும் நடசேன் பற்றிய கவிதை ஒன்றையும் இவர் மற்றொரு பதிவில் எழுதியுள்ளார். அ.நிக்ஸன் பத்திரிகையாளர் கொழும்பு -06 Monisha Kokul
  9. எல்லாம்... சிரியன், ஆப்கானிஸ்தான்காரரை பார்த்துப் பழகின பழக்கம். "பன்றியுடன் சேர்ந்த, கன்றும்.... பவ்வி தின்னும்."
  10. உள்ளூராட்சி தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அப்டேட்! 2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும். இது தொடர்பான அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 336 பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு அஞ்சல் வாக்களிக்க தகமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலப் பகுதி 2025.03.03 ஆம் திகதியிலிருந்து 2025.03.12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியாகும். எவ் விதத்தில் இத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1424005
  11. வாழ நினைத்தால்... வாழலாம், வழியா இல்லை பூமியில்.
  12. இலண்டனைச் சேர்ந்த ஈழப்பற்றாளரும்.. மார்ஸல் ஆர்ட்ஸ் வீரருமான, கென் சுதாகரன் அண்மையில் ஐரோப்பாவில் நடைப்பெற்ற Fight Star Championship போட்டியின் இறுதி போட்டியில் மிகப் பலமாக விளையாடி வெற்றியீட்டி சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டார்! சகோதரருக்கு எமது வாழ்த்துகள் 👏 ஈழ மங்கை. -
  13. உங்களுக்கு தெரியுமா உலகின் மிகக் குறுகிய நதி எது? ஹுவாலை (Hualai) நதி. இந்த அற்புதமான நதி வடக்கு சீனாவின் மங்கோலியா பகுதியில் அமைந்துள்ளது. இதன் அகலம் 10-14 சென்டி மீட்டர் மட்டுமே. இருப்பினும், இது 17 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. TNPSC TAMIL
  14. கல்முனையில் சந்தேகிக்கப்படும் தீவிரவாதக் குழு; விசாரணைகள் தீவிரம்! கிழக்கின் கல்முனைப் பகுதியில் உருவாகியதாக சந்தேகிக்கப்படும் ஒரு தீவிரவாதக் குழு குறித்து புலனாய்வு அமைப்புகளும் பாதுகாப்புப் படையினரும் தற்போது விசாரணை நடத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்தக் குழு தொடர்பான முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், மேலும் விவரங்களை வெளிக்கொணர அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார். அந்தக் குழு அடையாளம் காணப்பட்டதா, தடை செய்யப்பட்டதா அல்லது கைது செய்யப்பட்டதா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் இதன்போது பதிலளித்தார். “இந்த நேரத்தில், கிழக்கு மாகாணத்தில் செயல்படும் அத்தகைய குழு பற்றிய தகவல்களை மட்டுமே நாங்கள் பெற்றுள்ளோம். புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த விடயத்தை சரிபார்த்து விசாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களின் போது தேசிய பாதுகாப்பு தொடர்பான சில கவலைகளையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார். பாதுகாப்புப் படையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்பதை இப்போது நாங்கள் உறுதிப்படுத்த முடியும்” என்று அமைச்சர் கூறினார். https://athavannews.com/2025/1423977
  15. அபுதாபியில் இந்தியப் பெண்ணிற்கு மரண தண்டனை நிறைவேற்றம்! ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 வயது குழந்தையொன்றை கொலை செய்த குற்றச்சாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பாண்டா நகரைச் சேர்ந்த ஷாஷாதி கான் என்ற பெண்ணுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பெண் கடந்த 2022-ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றி வந்துள்ளார் எனவும், இதன்போது தனது பராமரிப்பில் இருந்த 4 வயதுக் குழந்தைக்கு அவர் தடுப்பூசி செலுத்தியுள்ளார் எனவும், அப்போது துரதிஷ்டவசமாக அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தினையடுத்து அப்பெண் அபுதாபி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் , வழக்கை விசாரித்த நீதிமன்றம் , கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மரண தண்டனையைத் தடுத்து நிறுத்துமாறு வெளியுறவுத்துறையிடம் பல முறை மனு கொடுத்த ஷாஷாதி கானின் தந்தை, டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த மாதம் 15-ஆம் திகதி, ஷாஷாதி கானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423948
  16. பதவிகளுக்கு அரசியல் செய்வது தவிர்க்கப்படவேண்டும் என்று... சிறீதரன், நேரடியாகவே சுமந்திரனுக்கு சொல்லி விட்டார். 👍 💪 சுமந்திரனின்... ராஜதந்திரம் எல்லாம் வழக்கம் போல், மீண்டும் தோல்வியில் முடிந்தது. 😂 இனி... சத்தியமூர்த்திக்கு குழையடித்தது... பாராளுமன்றத்தை விட்டு வெளியே கிளப்பும் அலுவலை சுமந்திரன் செய்வார் என எதிர்பார்க்கலாம். 🤣 சத்தியமூர்த்தியும்... பாராளுமன்ற பதவிவியை விட்டு போக மாட்டேன் என்று சொன்னால்... கிழக்கு மாகாண எம்.பி.க்களைத்தான் கேட்டுப் பார்க்க வேண்டும். 😵 சுமந்திரனின் பதவி ஆசை படுத்தும் பாடு... எத்தனை பேரிடம் பல்லை காட்டிக் கொண்டு திரிய வேண்டிக் கிடக்குது. 😂 🤣
  17. அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்! 2025.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: 01. கொலன்னாவ வெள்ளப்பெருக்கு நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கண்காணிப்புக் குழுவொன்றை நியமித்தல் 2024 ஜுன் மாதத்தில் வெள்ளப்பெருக்குக் காரணமாக கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விடயங்களை ஆராய்வதற்கும், அப்பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான மூலகாரணிகளைக் கண்டறிந்து, அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படாதிருப்பதைத் தடுப்பதற்குத் தேவையான விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்கும், கொலன்னாவ நகர மீள்கட்டமைப்புக்கான விரிவான அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பதற்கும், கொழும்பு மாவட்டச் செயலாளரின் தலைமையிலான குழுவொன்று 2024.06.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் விதந்துரைகளை முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் கண்காணிப்புக்காக கௌரவ பிரதமர் அவர்களின் தலைமையிலும், குறித்த விடயதான அமைச்சரின் பங்கேற்புடன், ஏற்புடைய ஏனைய அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 02. சர்வதேச நீர் மாநாடு (IWC) மற்றும் 9 ஆவது ஆராய்ச்சி மாநாடு மற்றும் உலக நீர் தினக் கொண்டாட்டம் நீர் மாசடைதல் மற்றும் மனித சுகாதார சேவைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 2015 ஆம் ஆண்டில் முதலாவது ஆராய்ச்சி மாநாட்டை நடாத்தியுள்ளது. பின்னர், குறித்த மாநாடு 2022 ஆம் ஆண்டு வரை உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் நபர்களை உள்வாங்கி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால், நீர் மற்றும் துப்பரவேற்பாட்டுக்கான சிறப்பு மையம் (CEWAS) தாபிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நீர் மாநாடு – 2022 இல் 7 ஆவது ஆராய்ச்சி மாநாடு உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்களின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சர்வதேச நீர் மாநாடு மற்றும் 08வது ஆராய்ச்சி மாநாட்டில் 09 நாடுகள் பங்குபற்றியிருந்தன. ‘புத்தாக்க ஆராய்ச்சி டிஜிட்டல்மயப்படுத்தல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச நீர் மாநாடு – 2025 இல் 09 ஆவது ஆராய்ச்சி மாநாட்டை 2025 மார்ச் மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் நீர் மற்றும் துப்பரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தில் (CEWAS) நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச நீர் மாநாட்டுக்கு இணையாக மார்ச் மாதம் 22 ஆம் திகதியன்று உலக நீர் தினத்தையொட்டி தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் 50 ஆவது ஆண்டுநிறைவைக் கொண்டாடுமுகமாக மார்ச் மாதம் 21 ஆம் திகதி நிகழ்ச்சித்திட்டமொன்றும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாநாட்டில் கிட்டத்தட்ட 100 சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆய்வுகளை வெளியிடுவதற்கும், அதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 600 இற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றுவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி, கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 03. தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்தின் மூலம் புற்றுநோய் தொடர்பான அவதானிப்புக்களைப் பலப்படுத்தும் கருத்திட்டம் Bloomberg Philanthropies மற்றும் அவுஸ்திரேலியா அரசின் நிதியுதவியுடன் சுகாதாரத்திற்கான தரவுகள் (D4H) தொடக்க முயற்சி வேலைத்திட்டத்தின் மூலம் முக்கியமான பொதுச் சுகாதார தகவல்களைத் திரட்டுதல் மற்றும் பயன்பாட்டைப் பலப்படுத்துவதற்காக குறைந்த மற்றும் நடுத்தர வருமானங் கொண்ட 20 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தொழிநுட்ப ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றன. குறித்த வேலைத்திட்டத்துடன் ஒத்துழைப்புடன் இயங்கி வருகின்ற ஏவையட ளுவசயவநபநைள நிறுவனம், இலங்கையில் சுகாதாரத்திற்கான தரவுகள் தொடக்க முயற்சியில் முன்னணி தொழிநுட்பப் பங்காளராக இயங்கி வருவதுடன், தற்போது 03 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடுத்த நிகழ்ச்சித்திட்டமாக, இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்தின் மூலம் புற்றுநோய் தொடர்பான அவதானிப்புக்களைப் பலப்படுத்துவதற்காக தொழிநுட்ப ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஏவையட ளுவசயவநபநைள நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தின் கீழ், குறித்த நிறுவனத்தின் இலங்கையின் நிதி முகவரான இலங்கை சுகாதார தகவல் சங்கத்தின் மூலம் அடையாளங் காணப்பட்டுள்ள செயற்பாடுகளுக்கு 19.50 மில்லியன் ரூபாய்கள் நிதியை செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஏவையட ளுவசயவநபநைள நிறுவனமும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 04. திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) தாங்கிகளை அபிவிருத்தி செய்தல் இலங்கை அரசு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை இந்திய எண்ணெய் கம்பனி மற்றும் திருகோணமலை பெற்றோலிய முனைய கம்பனி ஆகியன சீனன்குடா துறைமுகத்தின் எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள பிரதேசத்தின் உரித்து, அபிவிருத்தி மற்றும் பயன்பாடுக்கான ஒப்பந்தத்தில் 2022.01.06 அன்று கையொப்பமிடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய்த் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற தினத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் கிடைத்துள்ளது. குறித்த எண்ணெய்த் தாங்கிகளை 03 ஆண்டுகளில் அபிவிருத்தி செய்து பூர்த்தி செய்யும் நோக்கில் மூன்றாண்டுக் கருத்திட்டமான்றைத் திட்டமிட்டு சாத்தியவளக் கற்கை உள்ளடங்கலாக ஆரம்பக் கருத்திட்ட நடவடிக்கைகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை புகையிரதத் திணைக்களம், சமுத்திரச் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட ஏற்புடைய தரப்பினர்களின் அனுமதிகளும் தற்போது பெறப்பட்டுள்ளன. அதற்கமைய, திறைசேரிக்கு செலவுச்சுமை ஏற்படாத வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்தி உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 05. சியம்பலாண்டுவ 100 மெகாவாற்று சூரிய மின்சக்திக் கருத்திட்டத்திற்குத் தேவையான காணியை இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபைக்கு நன்கொடையாக வழங்குதல் 2030 ஆம் ஆண்டாகும் போது நாட்டின் மின்சக்தித் தேவையின் 70மூ சதவீதமான மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றல்வளங்கள் மூலம் பூர்த்திசெய்து கொள்வதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது. இக்கொள்கைக்கமைய, சியம்பலாண்டுவ 100 மெகாவாற்று சூரிய மின்சக்திப் பூங்கா வசதியானது ஒரு முக்கிய கருத்திட்டமாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய நடவடிக்கைகள் அல்லது வேறெந்த பயிர்ச்செய்கைகள் செய்யப்படாத 219.7233 ஹெக்ரெயார் நிலப்பரப்புக்கள் அடையாளங் காணப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, துரிதமாக ஆரம்பிப்பதற்க இயலுமாகும் வகையில் 219.7233 ஹெக்ரெயார் காணியை அளிப்பாக இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபைக்கு வழங்குவதற்கு வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 06. சுகாதார முறைமையை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்திற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் தொகையின் அளிப்புக் காலவரையறையை நீடித்தல் மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் ஆரம்ப சுகாதார சேவை முறைமையின் வினைத்திறன், சமத்துவம் மற்றும் பதிலளிப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் மூலம் சுகாதார முறைமையை மேம்படுத்துவதற்கான கருத்திட்டமானது இரண்டு 02 கட்டங்களாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஆரம்ப நிதியிடல் 37.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொகையாகவும் மற்றும் 12.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அளிப்பாகவும் வழங்கப்படுகின்றது. மேலும், குறித்த கருத்திட்டத்தின் மேலதிக நிதியிடலாக 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொகையாகவும் மற்றும் 03 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளிப்பாகவும் பெறப்பட்டுள்ளது. கருத்திட்டத்திற்காக ஆரம்ப நிதியிடல் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன் தொகை மற்றும் நன்கொடையை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு, அதன் செல்லுபடியாகும் காலப்பகுதியை ஒரு வருடத்தால் நீடிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சுகாதார முறைமையை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் ஆரம்பக் கடன் தொகை மற்றும் அளிப்புத்தொகையின் செல்லுபடியாகும் காலவரையறையை 2025.11.30 வரைக்கும், கடன்தொகையின் கணக்குகளை ஈடுசெய்வதற்கான இறுதித் தினமாக 2026.05.31 வரைக்கும் நீடிப்பதற்காக சுகாதாரத்துறை மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்;ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 07. அரச சட்ட வரைவாக்க வேலைத்திட்டம் 2025 ஆம் ஆண்டில் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சு புதிதாக அறிமுகப்படுத்துவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள சட்டங்கள் மற்றும் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற, தற்போது வலுவிலுள்ள சட்டங்கள் அரச சட்ட வரைவாக்க வேலைத்திட்டம் – 2025 இல் உட்சேர்த்துக் கொள்வதற்காக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற புதிய சட்டங்கள் • தேசிய சமுதாய குடிநீர் அபிவிருத்திச் சட்டம் • இலங்கை ஆதன விற்பனை தொழில் வல்லுநர்களின் நிறுவனச் சட்டம் • சீனா – இலங்கை கூட்டு ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்க மையத்தை (துசுனுஊ) சட்டபூர்வமாக்குவதற்கான சட்டம் • 2018 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, இருப்பிடக்கூறு சொத்தாண்மை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் ஏற்பாடுகள் உள்ளடக்கி கூட்டாட்சி ஆதனங்களுக்கான வசதியளிப்புக்களுக்கான புதிய சட்டம் திருத்தங்கள் அறிமுகப்படுத்த வேண்டிய தற்போதைய சட்டங்கள் • 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டம் • 1974 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைச் சட்டம் • 1946 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, நகர மற்றும் கிராமிய நிர்மாணங்கள் கட்டளைச் சட்டம் • 1979 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, தேசிய வீடமைப்பு அதிகாரசபைச் சட்டம் • 2008 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, நகரக் குடியமர்த்தல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம் • 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க, நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம் • 2021 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன (திருத்தச்) சட்டம் • 1973 ஆம் ஆண்டின 11 ஆம் இலக்க, இருப்பிடக்கூறு சொத்தாண்மைச் சட்டம். • 1973 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, பொது வசதிகள் சபைச் சட்டம். 08. கலாச்சார வெளியீடுகளின் பல்வகைத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான யுனெஸ்கோ (2005) சமவாயத்தை இலங்கையில் ஏற்று அங்கீகரித்தல் யுனெஸ்கோ அமைப்பு தனது உறுப்பு நாடுகளில் உருவாக்கப்படுகின்ற கலாச்சார வெளியீடுகளின் பல்வகைத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சமவாயம் 2005.10.20 அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த சமவாயம் 2007.03.10 ஆம் திகதி தொடக்கம் வலுவிலுள்ளது. குறித்த சமவாயம் தற்போது 156 உறுப்பு நாடுகளில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குறித்த சமவாயத்தை இலங்கையில் ஏற்று அங்கீகரிப்பதற்காக 2024.09.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், இதுவரை சமவாயம் ஏற்று அங்கீகரிக்கப்படவில்லை. அதற்கமைய, கலாச்சார வெளியீடுகளின் பல்வகைத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான யுனெஸ்கோ (2005) சமவாயத்தை இலங்கை ஏற்று அங்கீகரிப்பதற்காக கொள்கை ரீதியான அங்கீகாரத்தை எதிர்பார்த்து புத்தசாசன, சமய, கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 09. பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல் தற்போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் திரு. எச்.எம்.யூ.ஹேரத் அவர்களின் ஒப்பந்த சேவைக்காலம் 2025.03.07 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது. அதற்கமைய, அன்று தொடக்கம் வெற்றிடமாகவுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயக பதவி வெற்றிடத்திற்கு ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் திரு. சம்பத் கொட்டுவேகொட அவர்களை ஒப்பந்த சேவை அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு (01) நியமிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 10. ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தை அரசின் தேசிய கொள்கைப் பணிச்சட்டகமாக ஏற்றுக்கொள்ளல் பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டாகும் போது 120 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்தத் தேசிய உற்பத்தி இலக்குடன் கூடியதாக நிலைதளராத பொருளாதார விருத்தி மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது பொருளாதார, சமூக, சுற்றாடல் மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில் கீழ்க்குறிப்பிட்ட பிரதான 04 துறைகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. • எளிமையான வாழ்க்கை – ஆரோக்கியமான நாடு • கண்ணியமான வாழ்க்கை – பாதுகாப்பான நாடு • நவீனமான வாழ்க்கை – வளமான நாடு • நன்மதிப்பான வாழ்க்கை – நிலைதளராத நாடு குறித்த 04 துறைகளின் கீழ் 40 உப துறைகள் அடையாளங் காணப்பட்டுள்ளன. அந்தந்தத் துறைகளுக்குரிய கொள்கைக் கோட்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வேறு வேறாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தை அரசின் தேசிய கொள்கைப் பணிச்சட்டகமாக ஏற்றுக் கொள்வதற்கும், அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் அவர்கள் தத்தமது பணிகளுக்கமைய திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2025/1423969
  18. போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல்; ஐ.நா. தீர்மானங்களை மீண்டும் நிராகரித்த இலங்கை! மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலகா, அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமான மற்றும் சுயாதீனமான உள்நாட்டு செயல்முறைகள் மூலம் மனித உரிமைகள் சவால்களை எதிர்கொள்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நடத்துதல் மற்றும் அதன் பின்னர் நமது பல தசாப்த கால ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப கண்ணியமான மாற்றம் என்ற மாதிரியின்படி, கடந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றுத் தலைவராக அதிமேதகு அநுர குமார திசாநாயக்க பதவியேற்றார். அதைத் தொடர்ந்து 2024 நவம்பரில் புதிய நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கையில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் மற்றும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் வலுவான ஆணையுடன் முன்னேற முடிந்தது. கடந்த வாரம் இந்த சபையில் உரையாற்றிய இலங்கையின் வெளியுறவு அமைச்சர், வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த மக்களின் கூட்டு விருப்பத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத்துடன், இலங்கை ஒரு புதிய பாதையில் பயணித்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். பன்முகத்தன்மையை மதிக்கும், இனம், மதம், வர்க்கம் மற்றும் சாதி அடிப்படையிலான அனைத்து பிளவுகளையும் அகற்றுவதற்கும், நம் நாட்டில் இனவெறி அல்லது மத தீவிரவாதம் மீண்டும் எழுவதை அனுமதிப்பதற்கும் பாடுபடுவோருக்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த இலங்கை தேசத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். அரசாங்கம் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளது, இது அனைத்து குடிமக்களும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தி, அதன் விளைவாக ஏற்படும் பலன்களை சமூகத்தின் அனைத்து அடுக்குகளும் நியாயமாகப் பெற அனுமதிக்கும் வகையில் நடைபெறும். நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் சமூக நல்வாழ்வை உறுதி செய்வதற்காக சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மேலோங்கும். அரசாங்கம் பின்வருவனவற்றிற்கு உறுதியளித்துள்ளது: – கடந்த கால பிரச்சினைகளைத் தீர்ப்பது உட்பட அனைத்து குடிமக்களின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல். – அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் தொடர்புடைய உள்நாட்டு செயல்முறைகள் நம்பகமானதாகவும் சுயாதீனமாகவும் இருப்பதை உறுதி செய்தல். – மேலும், இனவெறி மற்றும் மத தீவிரவாதத்தால் ஏற்படும் வன்முறைச் செயல்களை விசாரிக்க, முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பணிகளை கவனமாக ஆராய்ந்து விரிவுபடுத்துதல். கிராமப்புற வறுமையை ஒழித்தல், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை மறுமலர்ச்சியை ஊக்குவிப்பதற்கான “சுத்தமான இலங்கை” முயற்சியை செயல்படுத்துதல் மற்றும் புதுமை மற்றும் நிலையான வளர்ச்சியை வளர்ப்பதற்கு ஒரு வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை நிறுவுதல் ஆகியவை அரசாங்கத்தின் பொருளாதார முன்னுரிமைகளில் அடங்கும். நாட்டின் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலையான அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியை அடைவதற்கான உறுதிமொழிக்கு இணங்க, மோதலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் உதவியை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) பணிகள், இந்த கவுன்சிலை நாங்கள் தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம், இது மேம்பட்ட பொது நம்பிக்கை மற்றும் செயல்பாட்டு மற்றும் நிதி சுதந்திரத்துடன் தொடர்கிறது. OMP பிராந்திய அலுவலகங்கள் மக்களிடமிருந்து நேரடியாக புகார்களைப் பெறுகின்றன. OMP, ICRC மற்றும் UN நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் CSOக்கள் உள்ளிட்ட தேசிய, இருதரப்பு மற்றும் சர்வதேச கூட்டாளர்களுடன் ஒத்துழைக்கிறது. தேசிய அளவிலான வழிகாட்டுதல் குழு மூலம், OMP அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இது தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் அரசாங்க முகவர்களின் கீழ் செயல்படும் ஒரு தனி தேசிய CSO மன்றத்தையும் கொண்டுள்ளது. இழப்பீட்டு அலுவலகத்தின் பணி, பண இழப்பீட்டைத் தாண்டி, கூட்டு இழப்பீட்டு முயற்சிகளாக வாழ்வாதாரம் மற்றும் உளவியல் ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கியது. OR என்பது அனைத்து இலங்கையர்களின் உரிமைகளிலும் நங்கூரமிடப்பட்ட ஒரு விரிவான இழப்பீட்டுத் திட்டமாகும், மேலும் அனைத்து இலங்கையர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் ஒரு பயனுள்ள தீர்வாக செயல்படுகிறது. ஜனவரி 2024 நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஒரு சுயாதீன நிறுவனமாக நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் (ONUR) மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ONUR சமூக ஒற்றுமை, மத சகவாழ்வு மற்றும் மோதல் மாற்ற பட்டறைகளை மேம்படுத்துவதற்கான பயிற்சித் திட்டங்களை நடத்துகிறது, குறிப்பாக இளைஞர்களிடையே மதங்களுக்கு இடையேயான மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. மதகுருமார்கள், பெண்கள் குழுக்கள், இளைஞர் குழுக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் அடங்கிய அடிமட்ட அளவில் நிறுவப்பட்ட நல்லிணக்கக் குழுக்களும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகத்தின் மிகக் குறைந்த மட்டமான அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இந்தக் குழுக்கள் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன. படிப்படியான சீர்திருத்தங்களுடன் கூடிய தேசிய உரிமை மட்டுமே மாற்றத்தை நோக்கி முன்னேற ஒரே நடைமுறை வழி என்ற எங்கள் நம்பிக்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கவுன்சிலின் பணியின் மூலம் மனித உரிமைகள் கொள்கைகளை தொடர்ந்து சீரற்ற முறையில் பயன்படுத்துவதற்கு நாங்கள் வருந்துகிறோம். இதன் விளைவாக மனித உரிமைகள் கட்டமைப்பின் மீதான நம்பிக்கை குறைந்து, நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் உருவாக்கப்பட்ட உன்னத நோக்கங்களை மதிக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது. சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதலைப் பெறாத குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டுமேயான தீர்மானங்களுக்கு எதிராக இலங்கை தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. 46/1, 51/1 மற்றும் 57/1 தீர்மானங்களையும், இந்தப் பிளவுபடுத்தும் மற்றும் ஊடுருவும் தீர்மானங்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட இலங்கை மீதான வெளிப்புற ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையையும் நாங்கள் நிராகரிப்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளோம். OHCHR-க்குள் இலங்கை தொடர்பான வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையானது, கவுன்சிலின் ஆணையின் முன்னோடியில்லாத மற்றும் தற்காலிக விரிவாக்கமாகும், மேலும் அதன் பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை ஆகிய அதன் ஸ்தாபகக் கொள்கைகளுக்கு முரணானது. எந்தவொரு இறையாண்மை கொண்ட அரசும் அதன் அரசியலமைப்பிற்கு முரணாகவும், அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் உறுதிப்பாட்டை முன்கூட்டியே தீர்மானிக்கும் ஒரு வெளிப்புற பொறிமுறையை மிகைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், இந்த வெளிப்புற பொறிமுறையின் பட்ஜெட் தாக்கங்கள் குறித்து பல நாடுகளால் கடுமையான கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. முந்தைய அமர்வுகளில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டபடி, உள்நாட்டு செயல்முறைகள் மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட மனித உரிமைகள் சவால்களை சமாளிக்க இலங்கை அரசாங்கம் உறுதியாக உள்ளது. இலங்கை மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் வழக்கமான மனித உரிமைகள் கருவிகளுடன் ஒத்துழைப்பு மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலின் உணர்வில் அதன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டைத் தொடரும், இது சமீபத்தில் இலங்கை எங்கள் 9வது காலமுறை அறிக்கையின் மதிப்பாய்வுக்காக CEDAW குழுவுடன் தீவிரமாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபட்டபோது செய்யப்பட்டது. அனைத்து மனித உரிமைகளையும் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதோடு, அமைதி, செழிப்பு மற்றும் நிலைத்தன்மையை அடைவதில் பலதரப்பு ஒத்துழைப்புக்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது – என்றார். https://athavannews.com/2025/1423918
  19. யாழில் உழவு இயந்திரத்தின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு! யாழ்ப்பாணம், சுன்னாகம், உடுவில் பகுதியில் நேற்று (03) நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற டிராக்டரின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணையில் சிறுவன், நெல் அறுவடை இயந்திரத்தில் ஏற முயன்று கீழே விழுந்ததாகவும், பின்னர் அவரது தந்தை ஓட்டி வந்த டிராக்டரின் பின் டயரில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1423934
  20. கணேமுல்ல சஞ்சீவ சம்பவ துப்பாக்கிதாரி மற்றொரு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்பு! பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, கடந்த ஆண்டு டிசம்பரில் கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 2024 டிசம்பர் 13 அன்று கந்தானையில் உள்ள ஒரு வீட்டில் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தானாராச்சி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளில், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வழிகாட்டலின் கீழ் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. கொழும்பு குற்றப்பிரிவு (CCD) சந்தேக நபரை 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரித்த பின்னர் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. 27 வயதான சந்தேக நபர் பெப்ரவரி மாதம் கொழும்பு நீதிமன்றத்திற்குள் இருந்தபோது ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு கணேமுல்ல சஞ்சீவா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். https://athavannews.com/2025/1423943
  21. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு ஏற்பட்ட திடீர் முச்சுத் திணறல் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423924
  22. ஜெர்மனியில் பாதசாரிகள் மீது கார் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு! மேற்கு ஜெர்மனியின் மன்ஹெய்ம் (Mannheim) நகரில், பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று மோதியதில் 83 வயது பெண் ஒருவரும் 54 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஐவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஜெர்மனிய புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதான ஜெர்மன் நபரை பொலிஸார் கைது செய்தனர். விசாரணைகளில் அவர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்று கண்டறியப்படவில்லை. எனினும், “மனநோய்க்கான உறுதியான அறிகுறிகளைக்” கொண்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் திங்கட்கிழமை (03) ஜெர்மனிய நேரப்படி பிறப்கல் 12:15 மணிக்கு (GMT 11:15 மணிக்கு) நடந்ததாக மன்ஹெய்ம் பொலிஸார் தெரிவித்தனர். ஜெர்மனி முழுவதும் ஈஸ்டர் கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய வெளிப்புற திருவிழாக்கள் நடைபெறும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மன்ஹெய்ம் நகர மையத்தில் அணிவகுப்பு நடைபெற்றது, செவ்வாய்க்கிழமை முக்கிய நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தின் பின்னணியில், தற்போது ஒரு சந்தை மூடப்பட்டுள்ளது, மேலும் நகர மையத்தில் ஒரு தெரு திருவிழா நடைபெறாது. அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகளான ஃபியூடன்ஹெய்ம், நெக்கராவ் மற்றும் சாண்ட்ஹோஃபென் ஆகிய இடங்களில் திருவிழா நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் ஜெர்மனி பல வன்முறைத் தாக்குதல்களைச் சந்தித்துள்ளது, இதில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423908

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.