Everything posted by தமிழ் சிறி
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஜெலென்ஸ்கியை “சர்வாதிகாரி” என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்பீர்களா என்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தான் இப்படி கூறியதை நம்ப முடியவில்லை என்று கூறினார். அதேநேரம் அவர், ஜெலென்ஸ்கியை “மிகவும் துணிச்சலானவர்” என்றும் அழைத்தார். உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ட்ரம்ப் இந்த விடயங்களை பேசினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்த பின்னர், மொஸ்கோவுடன் முதல் உயர்மட்ட அமெரிக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி ட்ரம்ப் நிர்வாகம் அதன் மேற்கத்திய பங்காளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பின்னர் இந்த வார சந்திப்புகள் வந்துள்ளன. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி, போருக்கு ஜெலென்ஸ்கியைக் குற்றம் சாட்டியதுடன், முன்னதாக சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் தவறியதற்காக அவரைத் திட்டினார். இந்த நிலையில் ட்ரம்புக்கும், உக்ரேன் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (28) நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது, ஜெலென்ஸ்கி தனது நாட்டிற்கான சில வகையான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறுவார் என்று நம்புகிறார். அதேநேரம் வெள்ளியன்று வொஷிங்டனுக்கான தனது விஜயத்தில், உக்ரேனின் அரிய பூமி கனிம வளங்களை அமெரிக்கா அணுகும் ஒப்பந்தத்தில் ஜெலென்ஸ்கி கையெழுத்திடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1423446
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
இப்போ புரிந்து விட்டது. நன்றி ஏராளன்.
-
நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
செவ்வந்தியை கைது செய்து விட்டார்களா? மேலே உள்ள பந்தியில்.. ஐ.பி.சி. ….தேடப்பட்டு வரும் என்றும், கைது செய்யப்பட்டிருந்தமை என்றும் குளப்பமாக எழுதியுள்ளது போல் எனக்குத் தோன்றுகின்றது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவர் தொலைத்தது.... Adidas, Puma, Nike, Reebok ஆக இருக்குமோ. இப்பிடியான இடங்களுக்கு, அதுகளை ஏன் போட்டுக் கொண்டு வாறார்.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
மின்னல் விழும் போது... அதனை உடனே மண்ணை மூடி தாட்டு விட்டால், அவ்வளவும் வைரமாக மாறும். 😂
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
வயது முதிர்ந்த நாக பாம்புகளின் வாயில் பெறுமதி மிக்க... ஒளி வீசும் இரத்தினக் கற்கள் உள்ளது. அவை இரவில்... இரை தேடும் போது, அதனை கக்கி விட்டு அந்த ஒளி வெளிச்சத்தில் இரை தேடும். அப்போது.... மாட்டு சாணத்தை, அந்த இரத்தினக் கல்லின் மீது போட்டால்... பாம்புக்கு கண் தெரியாமல், இரத்தினைக் கல்லை விட்டுவிட்டு போய் விடும். பாம்பு போன பின்... அந்தக் கல்லை நாம் எடுக்கலாம். 😂 🤣
-
சிரிக்க மட்டும் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கலாம் வாங்க
- யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ.- இரசித்த.... புகைப்படங்கள்.
- பிரான்ஸை அவமதிக்கும் அமெரிக்கா?
பிரான்ஸை அவமதிக்கும் அமெரிக்கா? ரஷ்யா – உக்ரேன் இடையே போர் நிறுத்தம் குறித்து ஆலோசனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மேக்ரோனை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியதோடு, ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவித்திருந்தனர். எனினும் குறித்த சந்திப்பின்போது, இரு நாட்டுத் தலைவர்களும் அவ்வளவாக நெருக்கம் காட்டவில்லை எனக் கூறப்படுகின்றது. ட்ரம்ப்பின் முந்தைய பதவிக்காலத்தில், இருவரும் சந்தித்தபோது, சுமார் 20 வினாடிகளுக்கும் மேலாக கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். ஆனால், தற்போது வெறும் 13 வினாடிகளுடன் கைகுலுக்கியதுடன், இருவரும் போலியான புன்முறுவலுடன் காணப்படுவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, வெள்ளை மாளிகைக்கு செல்லும் பிற நாட்டுத் தலைவர்கள் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். அதுபோல, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவரும் சமீபத்தில் தனித்தனியாக வெள்ளை மாளிகை பதிவேட்டில் கையெழுத்திடும் நிகழ்வும் நடந்தது. இவர்கள் இருவரும் கையெழுத்திடும்போது, அவர்கள் அமர்வதற்காக நாற்காலியை ட்ரம்ப் சரிசெய்து கொடுத்ததுடன், அவர்கள் பின்னாலேயே ட்ரம்ப் நின்றார். ஆனால், செவ்வாய்க்கிழமை மேக்ரானின் சந்திப்பின்போது, மேக்ரானின் முன்சென்ற ட்ரம்ப், இருக்கையில் அமர்ந்து கையெழுத்து போடுமாறு ‘ என்று சைகை காட்டினார். மேக்ரான் அமர்வதற்கான நாற்காலியை சரிசெய்யாததுடன், அவரின் பக்கவாட்டில் ட்ரம்ப் நின்றது சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மேலும், செய்தியாளர்களின் சந்திப்பின்போது, இருவரும் மாறுபட்ட கருத்துகளையே கூறினர். இந்த நிகழ்வுக்கு முன்னதாகவே, அமெரிக்கா மீது ஐரோப்பிய நாடுகள் அதிருப்தியில் இருந்ததாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது. போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியதுடன், அமெரிக்க மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சௌதி அரேபியாவில் சந்தித்து, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உயர்மட்ட குழுவை அமைக்க முடிவு செய்தனர். நேட்டோவில் பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன், கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, ரோமானியா, ஸ்பெயின், ஸ்வீடன், துருக்கி உட்பட பல நாடுகள் உள்ளன. ஆனால், இந்த பேச்சுவார்த்தையின்போது நேட்டோவில் இருக்கும் எந்த ஐரோப்பிய நாட்டுக்கும் அழைப்பு விடுக்காதது ஐரோப்பிய நாடுகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. போரில் சம்பந்தப்பட்ட உக்ரேனைக்கூட அழைக்கவில்லை என்பதுதான் பெருந்துயரம். இதுவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான அதிருப்திக்கு வித்திட்டுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423231- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
- கருத்து படங்கள்
- ஏலத்தில் விடப்படவுள்ள அரச வாகனங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
யாழ்.மாவட்ட பதில் செயலாளர் ம. பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம், திருத்த முடியாத அளவிற்கு விபத்துக்கு உள்ளானதால், அதற்கு பராமரிப்பு செலவு தேவையில்லை. 😂 இரும்பு விலைக்கு... விற்று, பேரீச்சம்பழம் வாங்கி சாப்பிடலாம். 🤣- ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின!
ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவு விபரங்கள் வெளியாகின! முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்தவகையில் மஹிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டு முதல் 2014 வரை – 3,572 மில்லியன் ரூபாயினையும், மைத்திரிபால சிறிசேன – 2015 ஆம் ஆண்டு முதல் 2019 வரை 384 மில்லியன் ரூபாயினையும், கோட்டாபய ராஜபக்ச – 2020 ஆம் ஆண்டு முதல் 2022 வரை 126 மில்லியன் ரூபாயினையும், ரணில் விக்ரமசிங்க – 2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் 533 மில்லியன் ரூபாயினையும், அநுர குமார திசாநாயக்க கடந்த செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி 2025 வரை 1.8 மில்லியன் ரூபாயினையும் செலவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் கடந்த 2013 ஆம் ஆண்டில் அதிக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது 1,144 மில்லியன் ரூபாய் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான செலவ...முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இது தொடர்பான தகவல்களை வெளியி...- ஏலத்தில் விடப்படவுள்ள அரச வாகனங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
ஏலத்தில் விடப்படவுள்ள அரச வாகனங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு! அதிக பராமரிப்பு செலவுகளைக் கொண்ட அமைச்சுகளுக்குச் சொந்தமான வாகனங்களை அடுத்த மார்ச் மாதத்தில் ஏலத்தில் விடத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது பொது சேவை செலவுகளைக் குறைக்க அனைத்து அரசு அலுவலகங்களையும் அரசு கட்டிடங்களுக்குள் கொண்டு வருவதன் அவசியம், பயன்படுத்தப்படாத அலுவலக உபகரணங்களை அகற்றுதல், மூடப்பட வேண்டிய, ஒன்றிணைக்கப்பட வேண்டிய மற்றும் தனியார் உரிமைக்கு மாற்றப்பட வேண்டிய நிறுவனங்களை அடையாளம் கண்டு, அதற்கான அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார். மேலும் வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியை, சம்பந்தப்பட்ட பணிகளுக்கு திறம்படவும் நியாயமாகவும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொது அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசியல் அதிகாரம் செலவுகளைக் குறைத்துள்ளதால், நிர்வாகச் செலவுகளைக் குறைத்து, அரசு நிறுவனங்களில் வீண்விரயங்களைக் குறைப்பது பொதுச் சேவையின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி கூறினார். மேலும் செலவினங்களை நிர்வகிப்பதில் அரச அதிகாரிகள் உரிய பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அத்துடன் பொது சேவை தொடர்பில் பொதுமக்களிடம் நல்ல அணுகுமுறை இல்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொது சேவையில் உள்ள திறமையின்மையே இதற்குக் காரணம் என்றும் சுட்டிக்காட்டினார். குறித்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜி.பி. சபுதன்த்ரீ மற்றும் அமைச்சு செயலாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423311- அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக ப.சத்தியலிங்கம் நியமனம்!
அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக ப.சத்தியலிங்கம் நியமனம்! நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் நியமனமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய விடயங்களை கையாள்வதற்கான குழு சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்தினவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார் சபாநாயகரை தவிசாளராக கொண்ட குறித்த குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், சட்டத்தரணி ஹர்ஷன நானயக்கார, மருத்துவர் நிஹால் அபேசிங்ஹ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423223- இன்று மகா சிவராத்திரி விரதமாகும்!
சிவராத்திரி பூஜை வழிபாடு- நல்லுார் சிவாலயம். நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இப் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1423251- வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி பூஜைகள் அமைதியாக இடம்பெற்றது
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள். நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது. அந்தவகையில் நேற்று மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றது. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை ஆலயத்தில் மாலை 6மணிவரை மாத்திரமே பூஜைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.அந்தவகையில் மாலை 6 மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர். இதேவேளை காலை முதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்களின் வழிபாட்டுசெயற்பாடுகளுக்கு எந்தவித தடைகளையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. https://athavannews.com/2025/1423270- இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம்
இந்தியத் துணைத் தூதரத்துக்கு முன்னால் பதற்றம்! இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ் தீவக மீனவ அமைப்புகள் இணைந்து இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் தமது போராட்டத்தினை ஆரம்பித்த போராட்டக்காரர்கள், யாழ் மாவட்ட கடற்தொழில்நீரியல் வள திணைக்களத்தின் உதவி ஆணையாளரிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளதோடு, அதனைத் தொடர்ந்து யாழ் இந்திய துணை தூதரகத்தினை சென்றடைந்தனர். மேலும் அங்கு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன்போது யாழ் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி, இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகளை சந்தித்து மகஜர் ஒன்றினை வழங்குவதற்கு போராட்டக்காரர்களுக்கு அனுமதி வழங்கியதாகவும், இதனையடுத்து போராட்டக்காரர்களில் சிலர் இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகளை சந்தித்து மகஜரொன்றை கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை போராட்டக்காரர்கள் வருகை தந்த பாதைக்கு போக்குவரத்து பொலிஸார் கடுமையான பாதுகாப்பினை வழங்கியதோடு பொதுமக்களை குறித்த பாதையில் பயணிக்க அனுமதி மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகள் சகிதம் வருகை தந்து இந்திய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பினை வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423289- கே.ஜே.யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதி – மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு
கே.ஜே.யேசுதாஸ் வைத்தியசாலையில் அனுமதி – மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு. பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் யேசுதாஸுக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு ரத்த வெள்ளை அணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களில் தகவல் வெளியாகின. பலரும் யேசுதாஸ் விரைவில் நலமடைய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் யேசுதாஸ் உடல்நிலை குறித்து வெளியான தகவலுக்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது தந்தை யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் அமெரிக்காவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 10 ஆம் திகதி அன்று யேசுதாஸ் தனது 85வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கடந்த 60 ஆண்டுகளாக தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை யேசுதாஸ் பாடியுள்ளார். 8 தேசிய விருதுகள் மற்றும் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மேற்கு வங்க மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு 1975-ல் பத்மஸ்ரீ, 2002ல் பத்ம பூஷண் மற்றும் 2017ல் பிரபு விபூஷண் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. https://athavannews.com/2025/1423306- ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் சந்திப்பை மேற்கொள்ளும் இங்கிலாந்து பிரதமர்!
ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் சந்திப்பை மேற்கொள்ளும் இங்கிலாந்து பிரதமர்! அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்புடன், இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (27) சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார். இரு தலைவர்களும் முன்னதாக சந்தித்திருந்த போதிலும், 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், டொனால்ட் ட்ரம்ப்பை இங்கிலாந்துப் பிரதமர் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும். டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வெள்ளை மாளிகைக்கு வருகை தரும் ஆறாவது தலைவர் ஸ்டார்மர் ஆவார். பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரேனின் வெள்ளை மாளிகை விஜயத்திற்கு சில நாட்களுக்குப் பின்னர் ஸ்டார்மரின் பயணம் அமையவுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா இடையேயான உறவை வடிவமைக்க இந்த சந்திப்பு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பா மீதான அமெரிக்கத் தலைவரின் கட்டண அச்சுறுத்தல்கள் மற்றும் உக்ரேனில் நடந்து வரும் மோதல்கள், இருதரப்பு வர்த்தக உறவுகள் தொடர்பில் இதன்போது பிரதானமாக கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ட்ரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் ரஷ்யாவுடன் உக்ரேனிய அல்லது பிற ஐரோப்பிய கூட்டாளிகள் பிரதிநிதித்துவம் இல்லாமல் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த வாரம் அமெரிக்கா உக்ரேன் போருக்கு ரஷ்யாவை குற்றம் சாட்டும் ஐ.நா.வின் தீர்மானங்களில் கையெழுத்திட மறுத்துவிட்டது. ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் உக்ரேன் போர் தொடர்பான வெள்ளை மாளிகையின் பார்வை அட்லாண்டிக் கடல்கடந்த உறவுகளில் மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. https://athavannews.com/2025/1423314- ட்ரம்ப் நிர்வாக வெளிநாட்டு உதவி; கூட்டாட்சி நீதிவானின் உத்தரவை இடைநிறுத்தும் உயர் நீதிமன்றின் தீர்ப்பு!
ட்ரம்ப் நிர்வாக வெளிநாட்டு உதவி; கூட்டாட்சி நீதிவானின் உத்தரவை இடைநிறுத்தும் உயர் நீதிமன்றின் தீர்ப்பு! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், வெளிநாட்டு உதவி நிதியை ஒப்பந்ததாரர்களுக்கும் மானியம் பெறுபவர்களுக்கும் செலுத்த வேண்டும் என்ற கூட்டாட்சி நீதிபதியின் உத்தரவை இடைநிறுத்தும் அறிவிப்பை அமெரிக்க உயர் நீதிமன்றின் தலைமை நீதிபதி ஜோன் ராபர்ட்ஸ் புதன்கிழமை (26) வெளியிட்டார். புதன்கிழமை இரவு 11:59 வரை காலக்கெடு விதித்த வொஷிங்டனை தளமாகக் கொண்ட அமெரிக்க மாவட்ட நீதிபதி அமீர் அலியின் உத்தரவை நிறுத்தி வைத்து ராபர்ட்ஸ் இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். நிர்வாகத் தடை என அழைக்கப்படும் இந்த உத்தரவுக்கு ராபர்ட்ஸ் எந்த காரணத்தையும் வழங்கவில்லை. இது அமீர் அலியின் தீர்ப்பைத் தடுக்க நிர்வாகத்தின் முறையான கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றத்திற்கு மேலதிக நேரத்தை வழங்கும். அலியின் நீதிமன்ற உத்தரவு காலக்கெடுவை பூர்த்தி செய்ய முடியாது என்று கூறி, பெரும்பாலான அமெரிக்க வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களை நிறுத்துவதற்கான இறுதி முடிவுகளை எடுத்துள்ளதாக ட்ரம்பின் நிர்வாகம் புதன்கிழமை (26) நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து இந்த உத்தரவு வந்தது. சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகவர் நிலையத்தின் (USAID) வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்களில் 90%க்கும் அதிகமான தொகையையும், உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 58 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க உதவிகளையும் நிர்வாகம் குறைத்து வருகிறது. இது ட்ரம்பின் “அமெரிக்கா முதல் நிகழ்ச்சி நிரலின்” ஒரு பகுதி என்று வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். https://athavannews.com/2025/1423273 - குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.