Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஜேர்மன் விமான நிலையத்தில் சுமார் 300 விமானங்கள் இரத்து! ஜெர்மனி முழுவதும் திங்கட்கிழமை (10) திட்டமிடப்பட்ட பரந்த வேலைநிறுத்தங்களுக்கு முன்னதாக தரைவழி ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததால், ஞாயிற்றுக்கிழமை (09) ஹாம்பர்க் விமான நிலையத்தில் சுமார் 300 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. ஜெர்மன் தொழிற்சங்கமான வெர்டி இந்த நடவடிக்கை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், காலையில் 10 விமானங்கள் சேவையை மேற்கொண்ட பின்னர், விமான நிலைய ஊழியர்கள் வெளிநடப்பு செய்ததால் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக ஹாம்பர்க் விமான நிலையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால் 144 வருகைகள் மற்றும் 139 புறப்பாடுகள் இரத்து செய்யப்பட்டன. இதனால் 40,000 க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விமான நிலைய தரைப் பணி ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெர்டி, வேலைநிறுத்தப் போராட்டம் திங்கட்கிழமை (10) தொடரும் என்று கூறியுள்ளது. இந்த நடவடிக்கை உள்ளூர் வசந்த விடுமுறை நாட்களில் பயணம் செய்ய முயற்சிக்கும் பயணிகளுக்கான திட்டங்களை கடுமையாக சீர்குலைக்கும் என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்கம் 8% ஊதிய உயர்வு அல்லது மாதத்திற்கு குறைந்தபட்சம் 350 யூரோக்கள் ($380) அதிகரிப்பு, அத்துடன் அதிக போனஸ் மற்றும் கூடுதல் விடுமுறை ஆகியவற்றைக் கோருகிறது. https://athavannews.com/2025/1424592
  2. அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு அடிபணியப்போவதில்லை – கனடாவின் புதிய பிரதமர் கனடா மீது 25 சதவீத வரி விதிப்பை அமுல்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அழுத்ததிற்கு ஒருபோதும் கனடா அடிபணியப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்த நிலையில் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார். லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் கனடாவின் பிரதமராகப் பதவி வகித்தார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 59 வயதான மார்க் கார்னி 1 இலட்சத்து 31ஆயிரத்து 674 வாக்குகள் பெற்று 85.9 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிறிஸ்டியா பிரீலாண்ட் 11,134 வாக்குகளையும், கரீனா கோல்ட் 4,785 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம் லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24ஆவது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கனேடிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் மார்க் கார்னி விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார். குறித்த உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது” டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும்வரை அமெரிக்கப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை கனடா அரசாங்கமும் கைவிடாது. கனேடிய அரசு சரியான பாதையிலேயே செல்கிறது. நமக்கு அமெரிக்கா உரிய மரியாதை கொடுத்து, நம்பகத்தன்மை வாய்ந்த, நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வரை, நாம் விதித்த வரி அமுலில்தான் இருக்கும்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1424603
  3. கனடாவின் பிரதமராகும் போட்டியில் மார்க் கார்னி வெற்றி! கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராவதற்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கியாளர் மார்க் கார்னி (Mark Carney) வெற்றி பெற்றுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின்னர் இவர், கனடாவின் புதிய பிரதமராகப் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வ முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை (09) தெரிவித்தன. கனடாவில் அரசியல் மற்றும் பொருளாதாரம் ஒரு கொந்தளிப்பான நேரத்தில் கார்னி பொறுப்பேற்பார். தற்சமயம் கனடா நீண்டகால நட்பு நாடான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகப் போரின் மத்தியில் உள்ளது மற்றும் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். 59 வயதான கார்னி, முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்டை தோற்கடிக்க 86% வாக்குகளைப் பெற்றார், இதில் 152,000 க்கும் குறைவான கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர். வெற்றியின் பின்னர் கார்னி, டொனால்ட் ட்ரம்பை எதிர்கொள்ளவதாக சபதம் செய்துள்ளார், மேலும் அமெரிக்காவுடனான கடுமையான வர்த்தகப் போரின் போது, தனது நாட்டை ஒன்றிணைக்கவும் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நமது பொருளாதாரத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கும் ஒருவர் இருக்கிறார்,” என்று கார்னி, ட்ரம்பைப் சாடிக் கூறினார்,”அவர் கனேடிய தொழிலாளர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைத் தாக்குகிறார். அவர் வெற்றிபெற நாம் அனுமதிக்க முடியாது. அமெரிக்கர்கள் எங்களுக்கு மரியாதை காட்டும் வரை எனது அரசாங்கம் எங்கள் கட்டணங்களைத் தொடரும் – என்றார். அரசியல் ரீதியாகப் புதியவரான கார்னி, கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்கவும், கனடாவின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை முடக்கக்கூடிய மேலதிக வரிகளை அச்சுறுத்தும் ட்ரம்புடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மேற்பார்வையிடவும் தான் சிறந்த இடத்தில் இருப்பதாக வாதிட்டார். ட்ரம்ப் கனடா மீது விதித்த வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரூடோ அமெரிக்காவின் மீது 30 பில்லியன் கனேடிய டொலர்கள் மதிப்பிலான பழிவாங்கும் வரிகளை விதித்துள்ளார். கார்னியின் வெற்றி, உண்மையான அரசியல் பின்னணி இல்லாத வெளிநாட்டவர் கனடா பிரதமராக வந்த முதல் முறையாகும். இரண்டு G7 மத்திய வங்கிகளான கனடா மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றின் ஆளுநராகப் பணியாற்றிய முதல் நபராக தனது அனுபவம், ட்ரம்பை சமாளிக்க அவர் சிறந்த வேட்பாளர் என்று அவர் கூறியுள்ளார். கார்னியின் கீழ் லிபரல் கட்சிக்கு ஒரு புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பு, ட்ரம்பின் வரிவிதிப்புகளுடன், கனடாவை அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக இணைப்பதற்கான அவரது தொடர்ச்சியான அவதூறுகளுடன் இணைந்து, லிபரல் கட்சியின் குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது. எவ்வாறெனினும், கருத்துக் கணிப்புகள் லிபரல்களோ அல்லது கன்சர்வேடிவ்களோ பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பதைக் குறிக்கின்றன. எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். வரும் வாரங்களில் கார்னி ஒரு தேர்தலை அறிவிப்பார் என்றும், அதாவது தேர்தல் மிக விரைவில் நடக்கக்கூடும் என்றும் இரண்டு லிபரல் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கார்னி சட்டப்பூர்வமாக பொது மன்றத்தில் இடம் இல்லாமல் பிரதமராகப் பணியாற்ற முடியும், ஆனால் நாட்டின் பாரம்பரியம் அவர் விரைவில் தேர்தல் ஒன்றை வெல்ல முயற்சிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை (09) ஒட்டாவாவில் உள்ள கனடாவின் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில், நூற்றுக் கணக்கான கனடியர்கள் உள்நாட்டு அரசியலைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் ட்ரம்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஜனவரி மாதம் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்தார், ஏனெனில் அவரது செல்வாக்கு சரிந்தது, ஆளும் லிபரல் கட்சி அவரை மாற்றுவதற்கு விரைவான போட்டியை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424549
  4. சாத்தான்.... நீங்கள் கூறியது எனக்கு முன்பே புரிந்து விட்டது. ஆனாலும்... உங்களது வாயை கிளறி, அந்தச் சொல்லை எடுப்பதற்காக விளங்காத மாதிரி கேட்டேன். 😂
  5. போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்ட... @புலவர், @நீர்வேலியான், @நியாயம் ஆகியோருக்கும், போட்டியில் உற்சாமாக கலந்து கொண்டவர்களுக்கும், போட்டி நடந்து கொண்டிருந்த நிலையில்.... புதிய யாழ். களமாற்றம் வந்த போது ஏற்பட்ட சிரமங்களை திறமையாக சமாளித்து, போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன்ஜீ க்கும், போட்டியை... தொய்வில்லாமல், கலகலப்பாக வைத்திருந்த உறவுகளுக்கும்... பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். 🙂
  6. அது என்ன… 72 கிலோ மீற்றர் கணக்கு. சொர்க்கத்தில் கிடைக்கும் 72 கன்னியருக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா.
  7. இலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்! ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் ‘பராசக்தி’. இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் இத் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி மற்றும் மதுரையில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஇலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்!'அமரன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் 'பராசக்தி'. இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் இத் திரைப்படத்தின் முதற்கட...
  8. சாத்தான்…. தனிப்பட்ட இடம் என்பது, பாரளுமன்ற உறுப்பினரின் கதிரையா அல்லது ஒலி வாங்கியா?
  9. பாராளுமன்றத்திலேயே... தமிழ்ப் பகுதிகளில் செயல் படும் இணையம் நடத்துபவர்களைப் பற்றி கதைக்கும் அளவிற்கு இவர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகள் இருந்துள்ளதை நினைக்க வேதனையாக உள்ளது. எதற்கோ போராட வேண்டிய தமிழ் இனம்.. இப்போ இந்தப் புல்லுருவிகளை சமாளிக்க போராட வேண்டியுள்ளது பெரும் சோகம்.
  10. "யூ ரியூப்", "ரிக் ரொக்" காரருக்கு... இப்ப கஸ்ரகாலம் போலை இருக்கு. பின்னை.... கிடைத்த சுதந்திரத்தை அளவுக்கு மீறிப் பாவித்தால், இதனையும் அனுபவிக்கத்தான் வேண்டும். அவர்கள் தம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.
  11. அல்ஜசீராவில் ரணில்! ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,ரணில் விக்ரமசிங்கவை அல்ஜசீரா அம்பலப்படுத்தியிருக்கிறது. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதாவது நிலைமாறு கால நீதிக்கானது. இந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையாளராக செயல்பட்டது. அதாவது அரசாங்கமும் சேர்ந்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கு முன் நிறைவேற்றப்பட்ட எல்லாத் தீர்மானங்களும் அரசாங்கத்துக்கு எதிரானவை. இலங்கை அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவை.அதற்கு பின்வந்த தீர்மானங்களும் அத்தகையவைதான். 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியபொழுது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தார். அதாவது இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதிக்கான ஐநா தீர்மானத்திருகு ரணிலும் மைத்திரியும் பெற்றோர் ஆவர். ஆனால் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன அந்தத் தீர்மானத்தைக் காட்டிக்கொடுத்தார். மஹிந்தவோடு இணைந்து அதற்கு எதிராகத் திரும்பினார். அதனால் பழி அவர் மீதுதான் விழுந்தது. அதாவது நிலைமாறு கால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி தன் குழந்தையைக் குப்பைத் தொட்டிக்குள் வீசினார் என்று. ஆனால் இரண்டாயிரத்தி இருபத்தி நாலாம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பு,யாழ்ப்பாணம் உரும்பிராயில் சுமந்திரனைச் சந்தித்தபோது அவர் என்ன சொன்னார்? ரணில் விக்கிரமசிங்கதான் அதைக் குழப்பியவர் என்று சொன்னார். ரணில் விக்கிரமசிங்க நிலைமாறு கால நீதிக்கு விசுவாசமாக இருக்கவில்லை என்றும் சொன்னார். ஆனால் அவர் அதை உரும்பிராயில் வைத்துச் சொல்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு திருநெல்வேலியில்,யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட வளாகத்தில், ரணிலும் அமர்ந்திருந்த மேடையில் உரையாற்றும் பொழுது என்ன சொன்னார்? 2005 ஆம் ஆண்டு உங்களைத் தெரிவு செய்யாமல் விட்டதற்காக தமிழ் மக்கள் வருந்துகிறார்கள் என்ற பொருள்பட உரையாற்றினார். இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதி எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது. அதற்கு ரணிலும் பொறுப்பு; மைத்திரியும் பொறுப்பு. மட்டுமல்ல அவர்களோடு பங்காளிகளாக இருந்த தமிழ்த் தரப்பைச் சேர்ந்த சம்மந்தரும் பொறுப்பு ; சுமந்திரனும் பொறுப்பு. 2015இல் நிலைமாறு கால நீதிக்கான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ரணில் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட அல்ஜசீராவின் நேர்காணலில் என்ன கூறுகிறார்? பொறுப்புக் கூறல் தொடர்பில் பொறுப்பற்ற விதமாகப் பதிலளிக்கின்றார்.தன்னை நேர்கண்ட மஹ்தி ஹசனை மடக்குவதாக நினைத்துக் கொண்டு அவர் சொன்ன பதில்கள் அவர் பொறுப்புக் கூறலுக்கு உண்மையாக இல்லை என்பதை வெளியே கொண்டு வந்திருக்கின்றன. அல்ஜசீராவின் “ஹெட் டு ஹிட் “என்ற அந்த நிகழ்ச்சியை ஒரு பேட்டி என்று அழைப்பதை விடவும் குறுக்கு விசாரணை என்றுதான் அழைக்க வேண்டும். அரசியல்வாதிகளை பேட்டி காணச் செல்லும் ஊடகவியலாளர்கள் எப்படி எல்லாம் வீட்டு வேலை செய்திருக்க வேண்டும் என்பதற்கு அது ஒரு தரமான உதாரணம். வீட்டு வேலை செய்யாமல் கேள்வி கேட்கப் போகும் ஊடகவியலாளர்கள் மஹ்தி ஹசனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ரணிலைக் அவர் பல இடங்களில் திணறடிக்கிறார். ரணிலின் அரசியல் வாழ்வில் அவர் இந்த அளவுக்கு அவமதிக்கப்பட்ட அல்லது அம்பலப்படுத்தப்பட்ட ஒரு நேர்காணல் இருக்க முடியாது. அந்த நேர்காணலைக் குறித்து முகநூலில், ரணிலுக்கு எதிராக முஸ்லிம் நண்பர்கள் அதிகம் விமர்சனங்களைப் பதிவெற்றி வருகிறார்கள். ரணில் அந்த நேர்காணல் முழுவதிலும் தன்னை ஒரு சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் பாதுகாவலனாகவே காட்டிக்கொள்கிறார். அவருடைய லிப்ரல் முகமூடியை மஹ்தி ஹசன் அவமானகரமான விதங்களில் கிழித்தெறிந்து விடுகிறார். அந்த நேர்காணல் முழுவதிலும் ரணில் ராஜபக்சக்களை பாதுகாக்க முயல்கிறார். ஆனால் அதை அதைவிடச் சரியான வார்த்தைகளை சொன்னால் அவர் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலை நியாயப்படுத்துகிறார் என்பதே பொருத்தமானது. அவ்வாறு நியாயப்படுத்த முற்படுகையில் அவர் போர்க் குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்குத் தயாரற்றவராகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார். முஸ்லிம்களுக்கு பொறுப்பு கூறத் தயாரற்றவராகத் தன்னை காட்டிக் கொள்கிறார்.சிங்கள கத்தோலிக்கர்களையும் அவர் அங்கே அவமதிக்கிறார். முழுக்க முழுக்க ஒரு சிங்கள பௌத்த பெருந்தேசியவாதியாக அந்த இடத்தில் தோற்றம் தருகிறார்.ஆனால் அவர்தான் 2015 ஆம் ஆண்டு நிலைமாற கால நீதிக்கான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கத்தின் பிரதமராக இருந்திருக்கிறார். எனவே அந்த நேர்காணல் ரணிலை அம்பலப்படுத்தியது என்பதை விடவும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்தியிருக்கிறது. லிபரல் முகமூடி அணிந்த தலைவரும் சரி அவ்வாறு முகமூடி அணிந்திராத தலைவர்களும் சரி, இடதுசாரி முகமூடி அணிந்த தலைவர்களும் சரி எல்லாருமே இறுதியிலும் இறுதியாக சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பை பாதுகாப்பவர்கள்தான்.இதில் இப்பொழுது கடைசியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியும் அடங்கும். ரணில் அல்ஜசிராவில் அம்பலப்படுத்தப்படுவதற்கு முன்னரே கடந்த 25 ஆம் திகதி ஜெனிவாவில் புதிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையில் என்ன சொல்லியிருக்கிறார்?. அதன் பின் கடந்த மூன்றாம் திகதி ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்ட பின் அதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கிய பதிலில் என்ன கூறப்பட்டுள்ளது? தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புக்கு கூறத் தயாராக இல்லை என்பதே ஐநாவில் அவர்கள் வெளிப்படுத்திய செய்தியின் சாரம்.அதாவது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு என்றைக்குமே பொறுப்புக்கூறாது.அது ராஜபக்சக்களாக இருந்தாலும் சரி,ரணிலாக இருந்தாலும் சரி,சந்திரிகாவாக இருந்தாலும் சரி, மைத்திரியாக இருந்தாலும் சரி, அனுராவாக இருந்தாலும் சரி,யாருமே பொறுப்புக் கூற மாட்டார்கள். இதில் இங்கே தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் உண்டு. ஐநா கூட்டத் தொடர்களின் போதுதான் சனல் நாலு வீடியோக்கள் வெளிவந்தன.ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான ஒப்புதல் வாக்கு மூலங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள் வெளிவந்தன. இப்பொழுதும் ஐநா கூட்டத் தொடரின் போதுதான் ரணிலை அம்பலப்படுத்தும் அல்ஜஸீராவின் வீடியோவும் வெளிவந்திருக்கிறது. அது ரணிலை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு பொறுப்புக்கூறும் பண்பு இல்லாதது என்பதையும் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றது.ஐநா கூட்டத் தொடர் நடக்கும் காலங்களில் இலங்கை அரசாங்கங்களின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் உத்திகளா இவை? ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த அழுத்தங்கள் தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்தன? அதேசமயம் மேற்கு நாடுகளுக்கு எதைப் பெற்றுக் கொடுத்தன? https://athavannews.com/2025/1424473
  12. முன்னாள் போலீஸ் மா அதிபரை இலங்கை போலீசார் தேடிய போது... 😂 Prashanthan Navaratnam
  13. பறிமுதல் செய்யப்படுமா தேசபந்துவின் சொத்துக்கள்? பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். இன்று (09) முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424506
  14. சத்தியமூர்த்தி கலந்து கொள்ளவில்லைப் போலுள்ளது.
  15. இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம்! இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணியளவில், வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது. தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் எம்.எ சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்.சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1424494
  16. வடக்கின் பெரும் சமரில் வெற்றி வாகை சூடிய பரி யோவான் கல்லூரி. வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் பரி யோவான் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பரி யோவான் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதலாவது இன்னிங்ஸில் 131 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து, துடுப்பெடுத்தாடிய பரி யோவான் கல்லூரி தமது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது இன்னிங்ஸில் யாழ். மத்திய கல்லூரி 142 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து, 93 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பரி யோவான் கல்லூரி,5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. https://athavannews.com/2025/1424491
  17. அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி – டொனால்ட் டஸ்க் அதிரடி அறிவிப்பு! போலந்தில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக அந் நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். போர் நிலைமை ஏற்படுமாயின் ஒவ்வொரு ஆணும் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் எனவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான மாதிரி திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ,இதன் மூலம் நாட்டு இராணுவத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளின் தற்போது 1.3 மில்லியன் இராணுவ வீரர்கள் இருக்கின்றனர் எனவும் ஆனால் போலந்தில் 2 இலட்சம் இராணுவ வீரர்களே உள்ளனர் எனவும், தற்போதுள்ள இரண்டு இலட்சம் வீரர்களை 5 இலட்சமாக அதிகரிப்பதற்காகவே இத்தீர்மானத்தின் நோக்கம் எனவும் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1424501
  18. கனடாவில் துப்பாக்கிச்சூடு – 12 பேர் காயம். கனடாவின் டொராண்டோவின் கிழக்கே உள்ள ஸ்கார்பரோ நகரிலுள்ள கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் 20 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு இரண்டு நபர்களால் நடத்தப்பட்டதாகவும் சந்தேக நபர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, தப்பியோடிய சந்தேகநபர்களை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர். https://athavannews.com/2025/1424461
  19. அர்ச்சுனாவில்… மற்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இல்லாத நிறைய விடயம் உள்ளதை மறுப்பதற்கு இல்லை. ஆனால்… தமிழரின் உணர்வு பூர்வமான விடயங்களில்… “சேம் சைட் கோல் அடித்து” சிங்களவனை காப்பாற்றும் வேலையையும் செய்து விடுகின்றார். இதனை அவர் தெரிந்துதான் செய்கின்றாரா… அல்லது, முந்திரி பருப்பு மாதிரி… எல்லாத்துக்கும் முந்திக் கொண்டு நிற்கும் அவசரக்குடுக்கை தனத்தால் ஏற்பட்டதா என தெரியவில்லை. பின்னையதை… கட்டுப்படுத்தினால், தற்போது இருக்கும் அரசியல்வாதிகளில் சிறந்த ஒருவர் என சொல்லலாம்.
  20. இன்றைய தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில்… எத்தனை பேரின் மண்டை உடைந்தது ? எத்தனை பேரின் வேட்டி அவிழ்ந்தது ? தகவல் அறிய, ஆர்வமுடன் காத்து இருக்கின்றேன். 😂
  21. சென்ற கிழமை பிரிந்து சென்ற கட்சிகளை, தங்களுடன் இணைந்து போட்டியிடுமாறு சுமந்திரனும், சி.வி.கே. சிவஞானமும் அழைப்பு விடுத்து இருந்தவர்கள். சுமந்திரனை நம்பி… ஒருவரும் இணைய முன்வரவில்லை என்றவுடன், இப்போ… “மீசையில் மண்படவில்லை” என்ற கணக்காக தனித்துப் போட்டி என்று சுமந்திரன் அறிவிக்கின்றார். சில மாதங்களிற்கு முன்…. உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட தமிழரசு கட்சியில் வேட்பாளர்கள் இல்லை என்றும்… இளைஞர்களை கட்சியில் வந்து இணையுமாறு சிவஞானம் அழைப்பு விடுத்திருந்தார். இவர்களை நம்பி யாராவது போவார்களா. சென்ற பாரளுமன்ற தேர்தலில்… கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி சார்பில், மன்னாரில் போட்டியிட இருந்த பெண்ணை, அவர்களின் கட்சிப் பதாகையும் தயாரிக்கப் பட்டு வெளிவந்த நிலையில்… அந்தப் பெண்ணை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட வைத்த கேவலத்தையும் நாம் பார்த்தோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.