Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை!
- அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்! 2025.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு: 01. கொலன்னாவ வெள்ளப்பெருக்கு நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கண்காணிப்புக் குழுவொன்றை நியமித்தல் 2024 ஜுன் மாதத்தில் வெள்ளப்பெருக்குக் காரணமாக கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விடயங்களை ஆராய்வதற்கும், அப்பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான மூலகாரணிகளைக் கண்டறிந்து, அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படாதிருப்பதைத் தடுப்பதற்குத் தேவையான விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்கும், கொலன்னாவ நகர மீள்கட்டமைப்புக்கான விரிவான அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பதற்கும், கொழும்பு மாவட்டச் செயலாளரின் தலைமையிலான குழுவொன்று 2024.06.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் விதந்துரைகளை முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் கண்காணிப்புக்காக கௌரவ பிரதமர் அவர்களின் தலைமையிலும், குறித்த விடயதான அமைச்சரின் பங்கேற்புடன், ஏற்புடைய ஏனைய அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. 02. சர்வதேச நீர் மாநாடு (IWC) மற்றும் 9 ஆவது ஆராய்ச்சி மாநாடு மற்றும் உலக நீர் தினக் கொண்டாட்டம் நீர் மாசடைதல் மற்றும் மனித சுகாதார சேவைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 2015 ஆம் ஆண்டில் முதலாவது ஆராய்ச்சி மாநாட்டை நடாத்தியுள்ளது. பின்னர், குறித்த மாநாடு 2022 ஆம் ஆண்டு வரை உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் நபர்களை உள்வாங்கி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால், நீர் மற்றும் துப்பரவேற்பாட்டுக்கான சிறப்பு மையம் (CEWAS) தாபிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நீர் மாநாடு – 2022 இல் 7 ஆவது ஆராய்ச்சி மாநாடு உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்களின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சர்வதேச நீர் மாநாடு மற்றும் 08வது ஆராய்ச்சி மாநாட்டில் 09 நாடுகள் பங்குபற்றியிருந்தன. ‘புத்தாக்க ஆராய்ச்சி டிஜிட்டல்மயப்படுத்தல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச நீர் மாநாடு – 2025 இல் 09 ஆவது ஆராய்ச்சி மாநாட்டை 2025 மார்ச் மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் நீர் மற்றும் துப்பரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தில் (CEWAS) நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச நீர் மாநாட்டுக்கு இணையாக மார்ச் மாதம் 22 ஆம் திகதியன்று உலக நீர் தினத்தையொட்டி தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் 50 ஆவது ஆண்டுநிறைவைக் கொண்டாடுமுகமாக மார்ச் மாதம் 21 ஆம் திகதி நிகழ்ச்சித்திட்டமொன்றும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாநாட்டில் கிட்டத்தட்ட 100 சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆய்வுகளை வெளியிடுவதற்கும், அதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 600 இற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றுவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி, கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 03. தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்தின் மூலம் புற்றுநோய் தொடர்பான அவதானிப்புக்களைப் பலப்படுத்தும் கருத்திட்டம் Bloomberg Philanthropies மற்றும் அவுஸ்திரேலியா அரசின் நிதியுதவியுடன் சுகாதாரத்திற்கான தரவுகள் (D4H) தொடக்க முயற்சி வேலைத்திட்டத்தின் மூலம் முக்கியமான பொதுச் சுகாதார தகவல்களைத் திரட்டுதல் மற்றும் பயன்பாட்டைப் பலப்படுத்துவதற்காக குறைந்த மற்றும் நடுத்தர வருமானங் கொண்ட 20 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தொழிநுட்ப ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றன. குறித்த வேலைத்திட்டத்துடன் ஒத்துழைப்புடன் இயங்கி வருகின்ற ஏவையட ளுவசயவநபநைள நிறுவனம், இலங்கையில் சுகாதாரத்திற்கான தரவுகள் தொடக்க முயற்சியில் முன்னணி தொழிநுட்பப் பங்காளராக இயங்கி வருவதுடன், தற்போது 03 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடுத்த நிகழ்ச்சித்திட்டமாக, இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்தின் மூலம் புற்றுநோய் தொடர்பான அவதானிப்புக்களைப் பலப்படுத்துவதற்காக தொழிநுட்ப ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஏவையட ளுவசயவநபநைள நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தின் கீழ், குறித்த நிறுவனத்தின் இலங்கையின் நிதி முகவரான இலங்கை சுகாதார தகவல் சங்கத்தின் மூலம் அடையாளங் காணப்பட்டுள்ள செயற்பாடுகளுக்கு 19.50 மில்லியன் ரூபாய்கள் நிதியை செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஏவையட ளுவசயவநபநைள நிறுவனமும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 04. திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) தாங்கிகளை அபிவிருத்தி செய்தல் இலங்கை அரசு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை இந்திய எண்ணெய் கம்பனி மற்றும் திருகோணமலை பெற்றோலிய முனைய கம்பனி ஆகியன சீனன்குடா துறைமுகத்தின் எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள பிரதேசத்தின் உரித்து, அபிவிருத்தி மற்றும் பயன்பாடுக்கான ஒப்பந்தத்தில் 2022.01.06 அன்று கையொப்பமிடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய்த் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற தினத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் கிடைத்துள்ளது. குறித்த எண்ணெய்த் தாங்கிகளை 03 ஆண்டுகளில் அபிவிருத்தி செய்து பூர்த்தி செய்யும் நோக்கில் மூன்றாண்டுக் கருத்திட்டமான்றைத் திட்டமிட்டு சாத்தியவளக் கற்கை உள்ளடங்கலாக ஆரம்பக் கருத்திட்ட நடவடிக்கைகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை புகையிரதத் திணைக்களம், சமுத்திரச் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட ஏற்புடைய தரப்பினர்களின் அனுமதிகளும் தற்போது பெறப்பட்டுள்ளன. அதற்கமைய, திறைசேரிக்கு செலவுச்சுமை ஏற்படாத வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்தி உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 05. சியம்பலாண்டுவ 100 மெகாவாற்று சூரிய மின்சக்திக் கருத்திட்டத்திற்குத் தேவையான காணியை இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபைக்கு நன்கொடையாக வழங்குதல் 2030 ஆம் ஆண்டாகும் போது நாட்டின் மின்சக்தித் தேவையின் 70மூ சதவீதமான மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றல்வளங்கள் மூலம் பூர்த்திசெய்து கொள்வதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது. இக்கொள்கைக்கமைய, சியம்பலாண்டுவ 100 மெகாவாற்று சூரிய மின்சக்திப் பூங்கா வசதியானது ஒரு முக்கிய கருத்திட்டமாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய நடவடிக்கைகள் அல்லது வேறெந்த பயிர்ச்செய்கைகள் செய்யப்படாத 219.7233 ஹெக்ரெயார் நிலப்பரப்புக்கள் அடையாளங் காணப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, துரிதமாக ஆரம்பிப்பதற்க இயலுமாகும் வகையில் 219.7233 ஹெக்ரெயார் காணியை அளிப்பாக இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபைக்கு வழங்குவதற்கு வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 06. சுகாதார முறைமையை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்திற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் தொகையின் அளிப்புக் காலவரையறையை நீடித்தல் மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் ஆரம்ப சுகாதார சேவை முறைமையின் வினைத்திறன், சமத்துவம் மற்றும் பதிலளிப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் மூலம் சுகாதார முறைமையை மேம்படுத்துவதற்கான கருத்திட்டமானது இரண்டு 02 கட்டங்களாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஆரம்ப நிதியிடல் 37.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொகையாகவும் மற்றும் 12.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அளிப்பாகவும் வழங்கப்படுகின்றது. மேலும், குறித்த கருத்திட்டத்தின் மேலதிக நிதியிடலாக 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொகையாகவும் மற்றும் 03 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளிப்பாகவும் பெறப்பட்டுள்ளது. கருத்திட்டத்திற்காக ஆரம்ப நிதியிடல் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன் தொகை மற்றும் நன்கொடையை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு, அதன் செல்லுபடியாகும் காலப்பகுதியை ஒரு வருடத்தால் நீடிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சுகாதார முறைமையை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் ஆரம்பக் கடன் தொகை மற்றும் அளிப்புத்தொகையின் செல்லுபடியாகும் காலவரையறையை 2025.11.30 வரைக்கும், கடன்தொகையின் கணக்குகளை ஈடுசெய்வதற்கான இறுதித் தினமாக 2026.05.31 வரைக்கும் நீடிப்பதற்காக சுகாதாரத்துறை மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்;ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 07. அரச சட்ட வரைவாக்க வேலைத்திட்டம் 2025 ஆம் ஆண்டில் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சு புதிதாக அறிமுகப்படுத்துவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள சட்டங்கள் மற்றும் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற, தற்போது வலுவிலுள்ள சட்டங்கள் அரச சட்ட வரைவாக்க வேலைத்திட்டம் – 2025 இல் உட்சேர்த்துக் கொள்வதற்காக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற புதிய சட்டங்கள் • தேசிய சமுதாய குடிநீர் அபிவிருத்திச் சட்டம் • இலங்கை ஆதன விற்பனை தொழில் வல்லுநர்களின் நிறுவனச் சட்டம் • சீனா – இலங்கை கூட்டு ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்க மையத்தை (துசுனுஊ) சட்டபூர்வமாக்குவதற்கான சட்டம் • 2018 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, இருப்பிடக்கூறு சொத்தாண்மை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் ஏற்பாடுகள் உள்ளடக்கி கூட்டாட்சி ஆதனங்களுக்கான வசதியளிப்புக்களுக்கான புதிய சட்டம் திருத்தங்கள் அறிமுகப்படுத்த வேண்டிய தற்போதைய சட்டங்கள் • 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டம் • 1974 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைச் சட்டம் • 1946 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, நகர மற்றும் கிராமிய நிர்மாணங்கள் கட்டளைச் சட்டம் • 1979 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, தேசிய வீடமைப்பு அதிகாரசபைச் சட்டம் • 2008 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, நகரக் குடியமர்த்தல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம் • 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க, நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம் • 2021 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன (திருத்தச்) சட்டம் • 1973 ஆம் ஆண்டின 11 ஆம் இலக்க, இருப்பிடக்கூறு சொத்தாண்மைச் சட்டம். • 1973 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, பொது வசதிகள் சபைச் சட்டம். 08. கலாச்சார வெளியீடுகளின் பல்வகைத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான யுனெஸ்கோ (2005) சமவாயத்தை இலங்கையில் ஏற்று அங்கீகரித்தல் யுனெஸ்கோ அமைப்பு தனது உறுப்பு நாடுகளில் உருவாக்கப்படுகின்ற கலாச்சார வெளியீடுகளின் பல்வகைத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சமவாயம் 2005.10.20 அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த சமவாயம் 2007.03.10 ஆம் திகதி தொடக்கம் வலுவிலுள்ளது. குறித்த சமவாயம் தற்போது 156 உறுப்பு நாடுகளில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குறித்த சமவாயத்தை இலங்கையில் ஏற்று அங்கீகரிப்பதற்காக 2024.09.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், இதுவரை சமவாயம் ஏற்று அங்கீகரிக்கப்படவில்லை. அதற்கமைய, கலாச்சார வெளியீடுகளின் பல்வகைத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான யுனெஸ்கோ (2005) சமவாயத்தை இலங்கை ஏற்று அங்கீகரிப்பதற்காக கொள்கை ரீதியான அங்கீகாரத்தை எதிர்பார்த்து புத்தசாசன, சமய, கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 09. பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல் தற்போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் திரு. எச்.எம்.யூ.ஹேரத் அவர்களின் ஒப்பந்த சேவைக்காலம் 2025.03.07 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது. அதற்கமைய, அன்று தொடக்கம் வெற்றிடமாகவுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயக பதவி வெற்றிடத்திற்கு ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் திரு. சம்பத் கொட்டுவேகொட அவர்களை ஒப்பந்த சேவை அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு (01) நியமிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 10. ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தை அரசின் தேசிய கொள்கைப் பணிச்சட்டகமாக ஏற்றுக்கொள்ளல் பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டாகும் போது 120 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்தத் தேசிய உற்பத்தி இலக்குடன் கூடியதாக நிலைதளராத பொருளாதார விருத்தி மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது பொருளாதார, சமூக, சுற்றாடல் மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில் கீழ்க்குறிப்பிட்ட பிரதான 04 துறைகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. • எளிமையான வாழ்க்கை – ஆரோக்கியமான நாடு • கண்ணியமான வாழ்க்கை – பாதுகாப்பான நாடு • நவீனமான வாழ்க்கை – வளமான நாடு • நன்மதிப்பான வாழ்க்கை – நிலைதளராத நாடு குறித்த 04 துறைகளின் கீழ் 40 உப துறைகள் அடையாளங் காணப்பட்டுள்ளன. அந்தந்தத் துறைகளுக்குரிய கொள்கைக் கோட்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வேறு வேறாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தை அரசின் தேசிய கொள்கைப் பணிச்சட்டகமாக ஏற்றுக் கொள்வதற்கும், அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் அவர்கள் தத்தமது பணிகளுக்கமைய திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://athavannews.com/2025/1423969- போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல்; ஐ.நா. தீர்மானங்களை மீண்டும் நிராகரித்த இலங்கை!
போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல்; ஐ.நா. தீர்மானங்களை மீண்டும் நிராகரித்த இலங்கை! மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலகா, அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமான மற்றும் சுயாதீனமான உள்நாட்டு செயல்முறைகள் மூலம் மனித உரிமைகள் சவால்களை எதிர்கொள்வதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நடத்துதல் மற்றும் அதன் பின்னர் நமது பல தசாப்த கால ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப கண்ணியமான மாற்றம் என்ற மாதிரியின்படி, கடந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றுத் தலைவராக அதிமேதகு அநுர குமார திசாநாயக்க பதவியேற்றார். அதைத் தொடர்ந்து 2024 நவம்பரில் புதிய நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கையில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் மற்றும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் வலுவான ஆணையுடன் முன்னேற முடிந்தது. கடந்த வாரம் இந்த சபையில் உரையாற்றிய இலங்கையின் வெளியுறவு அமைச்சர், வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த மக்களின் கூட்டு விருப்பத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத்துடன், இலங்கை ஒரு புதிய பாதையில் பயணித்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். பன்முகத்தன்மையை மதிக்கும், இனம், மதம், வர்க்கம் மற்றும் சாதி அடிப்படையிலான அனைத்து பிளவுகளையும் அகற்றுவதற்கும், நம் நாட்டில் இனவெறி அல்லது மத தீவிரவாதம் மீண்டும் எழுவதை அனுமதிப்பதற்கும் பாடுபடுவோருக்கு எதிரான ஒரு ஒருங்கிணைந்த இலங்கை தேசத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். அரசாங்கம் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளது, இது அனைத்து குடிமக்களும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தி, அதன் விளைவாக ஏற்படும் பலன்களை சமூகத்தின் அனைத்து அடுக்குகளும் நியாயமாகப் பெற அனுமதிக்கும் வகையில் நடைபெறும். நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் சமூக நல்வாழ்வை உறுதி செய்வதற்காக சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மேலோங்கும். அரசாங்கம் பின்வருவனவற்றிற்கு உறுதியளித்துள்ளது: – கடந்த கால பிரச்சினைகளைத் தீர்ப்பது உட்பட அனைத்து குடிமக்களின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல். – அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் தொடர்புடைய உள்நாட்டு செயல்முறைகள் நம்பகமானதாகவும் சுயாதீனமாகவும் இருப்பதை உறுதி செய்தல். – மேலும், இனவெறி மற்றும் மத தீவிரவாதத்தால் ஏற்படும் வன்முறைச் செயல்களை விசாரிக்க, முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பணிகளை கவனமாக ஆராய்ந்து விரிவுபடுத்துதல். கிராமப்புற வறுமையை ஒழித்தல், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை மறுமலர்ச்சியை ஊக்குவிப்பதற்கான “சுத்தமான இலங்கை” முயற்சியை செயல்படுத்துதல் மற்றும் புதுமை மற்றும் நிலையான வளர்ச்சியை வளர்ப்பதற்கு ஒரு வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை நிறுவுதல் ஆகியவை அரசாங்கத்தின் பொருளாதார முன்னுரிமைகளில் அடங்கும். நாட்டின் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலையான அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியை அடைவதற்கான உறுதிமொழிக்கு இணங்க, மோதலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் உதவியை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) பணிகள், இந்த கவுன்சிலை நாங்கள் தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம், இது மேம்பட்ட பொது நம்பிக்கை மற்றும் செயல்பாட்டு மற்றும் நிதி சுதந்திரத்துடன் தொடர்கிறது. OMP பிராந்திய அலுவலகங்கள் மக்களிடமிருந்து நேரடியாக புகார்களைப் பெறுகின்றன. OMP, ICRC மற்றும் UN நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் CSOக்கள் உள்ளிட்ட தேசிய, இருதரப்பு மற்றும் சர்வதேச கூட்டாளர்களுடன் ஒத்துழைக்கிறது. தேசிய அளவிலான வழிகாட்டுதல் குழு மூலம், OMP அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இது தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் அரசாங்க முகவர்களின் கீழ் செயல்படும் ஒரு தனி தேசிய CSO மன்றத்தையும் கொண்டுள்ளது. இழப்பீட்டு அலுவலகத்தின் பணி, பண இழப்பீட்டைத் தாண்டி, கூட்டு இழப்பீட்டு முயற்சிகளாக வாழ்வாதாரம் மற்றும் உளவியல் ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கியது. OR என்பது அனைத்து இலங்கையர்களின் உரிமைகளிலும் நங்கூரமிடப்பட்ட ஒரு விரிவான இழப்பீட்டுத் திட்டமாகும், மேலும் அனைத்து இலங்கையர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் ஒரு பயனுள்ள தீர்வாக செயல்படுகிறது. ஜனவரி 2024 நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் ஒரு சுயாதீன நிறுவனமாக நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் (ONUR) மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ONUR சமூக ஒற்றுமை, மத சகவாழ்வு மற்றும் மோதல் மாற்ற பட்டறைகளை மேம்படுத்துவதற்கான பயிற்சித் திட்டங்களை நடத்துகிறது, குறிப்பாக இளைஞர்களிடையே மதங்களுக்கு இடையேயான மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. மதகுருமார்கள், பெண்கள் குழுக்கள், இளைஞர் குழுக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் அடங்கிய அடிமட்ட அளவில் நிறுவப்பட்ட நல்லிணக்கக் குழுக்களும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகத்தின் மிகக் குறைந்த மட்டமான அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இந்தக் குழுக்கள் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன. படிப்படியான சீர்திருத்தங்களுடன் கூடிய தேசிய உரிமை மட்டுமே மாற்றத்தை நோக்கி முன்னேற ஒரே நடைமுறை வழி என்ற எங்கள் நம்பிக்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கவுன்சிலின் பணியின் மூலம் மனித உரிமைகள் கொள்கைகளை தொடர்ந்து சீரற்ற முறையில் பயன்படுத்துவதற்கு நாங்கள் வருந்துகிறோம். இதன் விளைவாக மனித உரிமைகள் கட்டமைப்பின் மீதான நம்பிக்கை குறைந்து, நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் உருவாக்கப்பட்ட உன்னத நோக்கங்களை மதிக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது. சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதலைப் பெறாத குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டுமேயான தீர்மானங்களுக்கு எதிராக இலங்கை தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. 46/1, 51/1 மற்றும் 57/1 தீர்மானங்களையும், இந்தப் பிளவுபடுத்தும் மற்றும் ஊடுருவும் தீர்மானங்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட இலங்கை மீதான வெளிப்புற ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையையும் நாங்கள் நிராகரிப்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளோம். OHCHR-க்குள் இலங்கை தொடர்பான வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையானது, கவுன்சிலின் ஆணையின் முன்னோடியில்லாத மற்றும் தற்காலிக விரிவாக்கமாகும், மேலும் அதன் பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை ஆகிய அதன் ஸ்தாபகக் கொள்கைகளுக்கு முரணானது. எந்தவொரு இறையாண்மை கொண்ட அரசும் அதன் அரசியலமைப்பிற்கு முரணாகவும், அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் உறுதிப்பாட்டை முன்கூட்டியே தீர்மானிக்கும் ஒரு வெளிப்புற பொறிமுறையை மிகைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், இந்த வெளிப்புற பொறிமுறையின் பட்ஜெட் தாக்கங்கள் குறித்து பல நாடுகளால் கடுமையான கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. முந்தைய அமர்வுகளில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டபடி, உள்நாட்டு செயல்முறைகள் மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட மனித உரிமைகள் சவால்களை சமாளிக்க இலங்கை அரசாங்கம் உறுதியாக உள்ளது. இலங்கை மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் வழக்கமான மனித உரிமைகள் கருவிகளுடன் ஒத்துழைப்பு மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலின் உணர்வில் அதன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டைத் தொடரும், இது சமீபத்தில் இலங்கை எங்கள் 9வது காலமுறை அறிக்கையின் மதிப்பாய்வுக்காக CEDAW குழுவுடன் தீவிரமாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபட்டபோது செய்யப்பட்டது. அனைத்து மனித உரிமைகளையும் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதோடு, அமைதி, செழிப்பு மற்றும் நிலைத்தன்மையை அடைவதில் பலதரப்பு ஒத்துழைப்புக்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது – என்றார். https://athavannews.com/2025/1423918- யாழில் உழவு இயந்திரத்தின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
யாழில் உழவு இயந்திரத்தின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு! யாழ்ப்பாணம், சுன்னாகம், உடுவில் பகுதியில் நேற்று (03) நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற டிராக்டரின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணையில் சிறுவன், நெல் அறுவடை இயந்திரத்தில் ஏற முயன்று கீழே விழுந்ததாகவும், பின்னர் அவரது தந்தை ஓட்டி வந்த டிராக்டரின் பின் டயரில் சிக்கி பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1423934- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கணேமுல்ல சஞ்சீவ சம்பவ துப்பாக்கிதாரி மற்றொரு துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்பு! பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, கடந்த ஆண்டு டிசம்பரில் கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். 2024 டிசம்பர் 13 அன்று கந்தானையில் உள்ள ஒரு வீட்டில் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தானாராச்சி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளில், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வழிகாட்டலின் கீழ் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. கொழும்பு குற்றப்பிரிவு (CCD) சந்தேக நபரை 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரித்த பின்னர் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. 27 வயதான சந்தேக நபர் பெப்ரவரி மாதம் கொழும்பு நீதிமன்றத்திற்குள் இருந்தபோது ஒரு வழக்கறிஞராக மாறுவேடமிட்டு கணேமுல்ல சஞ்சீவா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். https://athavannews.com/2025/1423943- தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் மருத்துவமனையில் அனுமதி. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு ஏற்பட்ட திடீர் முச்சுத் திணறல் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423924- ஜெர்மனியில் பாதசாரிகள் மீது கார் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!
ஜெர்மனியில் பாதசாரிகள் மீது கார் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு! மேற்கு ஜெர்மனியின் மன்ஹெய்ம் (Mannheim) நகரில், பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று மோதியதில் 83 வயது பெண் ஒருவரும் 54 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஐவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ஜெர்மனிய புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதான ஜெர்மன் நபரை பொலிஸார் கைது செய்தனர். விசாரணைகளில் அவர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்று கண்டறியப்படவில்லை. எனினும், “மனநோய்க்கான உறுதியான அறிகுறிகளைக்” கொண்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் திங்கட்கிழமை (03) ஜெர்மனிய நேரப்படி பிறப்கல் 12:15 மணிக்கு (GMT 11:15 மணிக்கு) நடந்ததாக மன்ஹெய்ம் பொலிஸார் தெரிவித்தனர். ஜெர்மனி முழுவதும் ஈஸ்டர் கொண்டாட்டங்களுடன் தொடர்புடைய வெளிப்புற திருவிழாக்கள் நடைபெறும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மன்ஹெய்ம் நகர மையத்தில் அணிவகுப்பு நடைபெற்றது, செவ்வாய்க்கிழமை முக்கிய நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தின் பின்னணியில், தற்போது ஒரு சந்தை மூடப்பட்டுள்ளது, மேலும் நகர மையத்தில் ஒரு தெரு திருவிழா நடைபெறாது. அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகளான ஃபியூடன்ஹெய்ம், நெக்கராவ் மற்றும் சாண்ட்ஹோஃபென் ஆகிய இடங்களில் திருவிழா நிகழ்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் ஜெர்மனி பல வன்முறைத் தாக்குதல்களைச் சந்தித்துள்ளது, இதில் பலர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423908- உக்ரேனுக்கான இராணுவ உதவியை இடைநிறுத்திய ட்ரம்ப்!
உக்ரேனுக்கான இராணுவ உதவியை இடைநிறுத்திய ட்ரம்ப்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உக்ரேனுக்கான இராணுவ உதவியை இடைநிறுத்தியுள்ளார். உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் கடந்த வாரம் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது, ஒரு காலத்தில் நட்பு நாடுகளாக இருந்த இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசலை மேலும் ஆழமாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட உதவியின் நோக்கம், அளவு மற்றும் இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து வெள்ளை மாளிகை உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கான ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையின் கோரிக்கைக்கு ஜெலென்ஸ்கியின் அலுவலகமோ அல்லது வொஷிங்டனில் உள்ள உக்ரேனிய தூதரகமோ உடனடியாக பதிலளிக்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதும், உக்ரேன் மற்றும் ரஷ்யா மீதான அமெரிக்கக் கொள்கையை ட்ரம்ப் மாற்றியமைத்து, மொஸ்கோவை நோக்கி மிகவும் இணக்கமான நிலைப்பாட்டை எட்டினார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் ஜெலென்ஸ்கியுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர், ரஷ்யாவுடனான போரில் வொஷிங்டனின் ஆதரவிற்கு போதுமான நன்றியுணர்வு உக்ரேனிய ஜனாதிபதிக்கு இல்லை என்று ட்ரம்ப் விமர்சித்தார். இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஐரோப்பியத் தலைவர்கள் ரஷ்யாவின் அண்டை நாடான அதன் போரில் ஒரு போர் நிறுத்தத்திற்கான திட்டங்களை முன்வைத்ததால், கியேவ் மீதான விரக்தி இருந்தபோதிலும், உக்ரேனின் கனிமங்களை அமெரிக்க முதலீட்டிற்குத் திறப்பதற்கான ஒப்பந்தத்தை இன்னும் ஒப்புக் கொள்ளலாம் என்றும் ட்ரம்ப் திங்களன்று (03) பரிந்துரைத்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து நிதி மற்றும் இராணுவ உதவியாக வழங்கிய பல்லாயிரக்கணக்கான பில்லியன் டொலர்களில் சிலவற்றை திரும்பப் பெறுவதற்கான ஒரு வழியாக கனிம ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது. இந்த ஒப்பந்தம் முடங்கிப் போய்விட்டதா கேட்டபோது, ”இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை” என வெள்ளை மாளிகையில் திங்களன்று ட்ரம்ப் கூறினார். வெள்ளை மாளிகை அதிகாரிகளின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் படையெடுப்பிலிருந்து உக்ரேனுக்கு மொத்த உதவியாக 175 பில்லியன் டொலர்களை அமெரிக்க காங்கிரஸ் அங்கீகரித்துள்ளது. டிசம்பரில், பதவியில் இருந்து விலகுவதற்கு சற்று முன்பு, ஜனாதிபதி ஜோ பைடன் பாதுகாப்பு மற்றும் பட்ஜெட் உதவியாக கூடுதலாக 5.9 பில்லியன் டொலர்களை அறிவித்தார். உக்ரேனுக்கான அமெரிக்க உதவியில் இராணுவ உதவி, பட்ஜெட் உதவி, பெரும்பாலும் உலக வங்கி அறக்கட்டளை நிதி மூலம் வழங்கப்படுகிறது மற்றும் ட்ரம்ப் வெள்ளை மாளிகையால் தடுக்கப்பட்ட அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID)மூலம் வழங்கப்பட்ட பிற நிதிகள் ஆகியவையும் அடங்கும். https://athavannews.com/2025/1423911- ட்ரம்பின் வர்த்தக வரிகளுக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி!
ட்ரம்பின் வர்த்தக வரிகளுக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி! மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய 25% வரிகள் செவ்வாய்க்கிழமை (04) முதல் அமலுக்கு வந்தன. அத்தோடு சீனப் பொருட்களுக்கான வரிகளை 20% ஆக இரட்டிப்பாக்கி, அமெரிக்காவின் முதல் மூன்று வர்த்தக பங்காளிகளுடன் புதிய வர்த்தக மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன. அமெரிக்க வருடாந்திர இருவழி வர்த்தகத்தில் கிட்டத்தட்ட $2.2 டிரில்லியன் உயர்த்தக்கூடிய இந்த வரி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு EST (0501 GMT) மணிக்கு நடைமுறைக்கு வந்தது. இந்த வரி விதிப்புக்கு பின்னர், அமெரிக்காவிற்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை சீனா, கனடா மற்றும் மெக்சிகோ அறிவித்துள்ளன. மார்ச் 10 முதல் சில அமெரிக்க இறக்குமதிகள் மீது 10%-15% கூடுதல் வரிகளை சீனா விதித்தது மற்றும் நியமிக்கப்பட்ட அமெரிக்க நிறுவனங்களுக்கு தொடர்ச்சியான புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அறிவித்தது. மூன்று தசாப்தங்களாக அமெரிக்காவுடன் கிட்டத்தட்ட வரி இல்லாத வர்த்தக உறவை அனுபவித்து வரும் கனடாவும் மெக்சிகோவும், தங்கள் நீண்டகால கூட்டாளிக்கு எதிராக உடனடியாக பதிலடி கொடுக்கத் தயாராக இருந்தன. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒட்டாவா, அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு உடனடியாக 25% வரிகளை விதிக்கும் என்றும், ட்ரம்பின் வரிகள் 21 நாட்களுக்குள் அமுலில் இருந்தால், மேலும் 125 பில்லியன் கனேடியன் டொலர் ($86.2 பில்லியன் டொலர்) வரிகளை விதிக்கும் என்றும் கூறினார். முன்னதாக கனடா, அமெரிக்க பீர், ஒயின், போர்பன், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் புளோரிடா ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றை குறிவைக்கும் என்று அவர் கூறினார். அதேநேரம், கட்டணங்கள் நம்பமுடியாத அளவிற்கு வெற்றிகரமான வர்த்தக உறவை சீர்குலைக்கும். அவை டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் கையெழுத்திட்ட அமெரிக்க-மெக்சிகோ-கனடா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மீறும் என்றுட் ட்ரூடோ குறிப்பிட்டார். இதேவேளை, அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிரான தமது பதிலை செவ்வாயன்று (04) காலை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின் போது மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டுவதாக அந் நாட்டு பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1423961- உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
சுவாசக் கோளாறுக்குப் பின் போப் பிரான்சிஸ் விழிப்புடன் – வத்திக்கான்! திங்கட்கிழமை (03) பிற்பகல் இரண்டு முறை “கடுமையான சுவாசக் கோளாறு” ஏற்பட்டதைத் தொடர்ந்து புனித போப் பிரான்சிஸ் விழிப்புடன் இருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான போப்பாண்டவர் தனது சுவாசத்திற்கு உதவ ஆக்ஸிஜன் முகக்கவசம் மற்றும் வென்டிலேட்டரைப் பயன்படுத்துவதை மீண்டும் தொடங்கியுள்ளார். எனினும், அவர் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் உள்ளதாக வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் 18 நாட்களுக்கு முன்பு நிமோனியாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து கடுமையான உடல் நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். வெள்ளிக்கிழமை, போப் பிரான்சிஸ் வாந்தியுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட சுவாசக் கோளாறுக்கு ஆளானார் என்றும் வத்திக்கான் தெரிவித்துள்ளது. உடல் நலப் பிரச்சினையால் ஈஸ்டருக்கு வழிவகுக்கும் ஆறு வார காலமான தவக்காலத்தின் முதல் நாளைக் குறிக்கும் இந்த புதன்கிழமை ஊர்வலம் மற்றும் திருப்பலியையும் அவர் தவறவிடுவார். இதனிடையே, திங்கட்கிழமை (03) மாலையில் நூற்றுக்கணக்கான கத்தோலிக்கர்கள் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் வெளியே கூடி போப்பின் உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்தனர். https://athavannews.com/2025/1423929- நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
சுமந்திரனின் பாராளுமன்ற கனவு கலைந்தது.- சிரிக்கலாம் வாங்க
- நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை. - சிறிதரன் எம்.பி. திட்டவட்டம். -- நாட்டில் எரிபொருளுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை!
சஜித்துக்கும்... ஜனாதிபதி ஆகிற ஆசை இருக்கும் தானே... 🤣- மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல்
👉 https://www.facebook.com/theivigan.panchalingam/videos/1539574740779215 👈 செலென்ஸ்கி, ட்றம்ப்... சந்திப்பு, யாழ் வலம்புரி ஹோட்டலில் இடம் பெற்று இருந்தால்…. 😂- நடுக்கடலில் தத்தளித்த நாகை-இலங்கை கப்பல்!
கால நிலையை முன் கூட்டியே அறியாமல் கப்பல் புறப்பட்டதா. பயணிகளின் உயிருடன் விளையாடலாமா. கப்பல் நிறுவனத்தின் பொறுப்பற்ற செயலை என்னவென்பது.- நடுக்கடலில் தத்தளித்த நாகை-இலங்கை கப்பல்!
நடுக்கடலில் தத்தளித்த நாகை-இலங்கை கப்பல்! இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணித்த பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது கப்பலில் 17 ஊழியர்கள் உள்பட 95 பேர் பயணம் செய்துள்ள நிலையில் பயணிகள் கூச்சலிட்டதால் கப்பல் பாதியிலேயே நாகை துறைமுகத்திற்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை வானிலை மாற்றம், சர்வதேச தொழில்நுட்ப அனுமதி உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு நவம்பர் 18ம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து கடந்த மாதம் 22ம் திகதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் கடல் காற்று அதிகமாக வீசுவதால் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வானிலை மாற்றம் சீரடைந்ததும் மீண்டும் மார்ச் 1ஆம் திகதி முதல் நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு 78 பயணிகளுடன் புறப்பட்டது. வேளாங்கண்ணிக்கு தென்கிழக்கே 15 மைல்கல் தொலைவில் கப்பல் சென்றபோது கடல் சீற்றம் அதிகமான நிலையில் கப்பல் கடலில் தத்தளிக்க ஆரம்பித்ததால் பயணிகள் கூச்சளிட்டுள்ளனர். வானிலை மோசமானதை தொடர்ந்து கப்பலை அவசரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பலின் கெப்டன் திருப்பியுள்ளார். இதை தொடர்ந்து நேற்றும்(02) இன்றும்(03) கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1423882- இரசித்த.... புகைப்படங்கள்.
யானையின் குடும்பம் ஒன்று, நித்திரை கொள்கின்றது.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் ரசிக்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
- போராட்டம் குறித்து சுகாதார தொழிற் சங்கங்கள் எச்சரிக்கை!
போராட்டம் குறித்து சுகாதார தொழிற் சங்கங்கள் எச்சரிக்கை! எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக 20 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சுகாதாரத் துறையுடன் இன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள கலந்துரையாடல் தோல்வியுற்றால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சுகாதார தொழிற்சங்கத் தலைவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். சுகாதார நிபுணர்களின் கொடுப்பனவுகளை மீளாய்வு செய்வதற்கு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர். அடையாள வேலைநிறுத்தத்திற்கு மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும், சிறுவர் மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக மருத்துவமனைகளில் வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படாது என மருத்துவமனைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர். தாதி ஒருவரின் சம்பளம் தொடர்பில் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றில் தெரிவித்த கருத்து தவறானது என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு (HTUA) அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். சுகாதார நிபுணர்களை பாதிக்கும் கணிசமான சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய 2025 வரவுசெலவுத் திட்டத்தில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1423812- மார்ச் 5 அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!
மார்ச் 5 அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்! வைத்தியர்களின் கொடுப்பனவுகளை குறைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்ச் 5 ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. 2025 வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் கணிசமான குறைப்புக்கள் உள்ளதாகவும், இது மருத்துவ நிபுணர்களை பாதிக்கும் என்றும் GMOA தெரிவித்துள்ளது. வேலைநிறுத்தம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளின் சேவைகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரத் துறையில் இடையூறுகளைத் தவிர்ப்பதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு GMOA அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1423844 - தேசபந்து தென்னகோனுக்கு பயணத் தடை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.