Everything posted by தமிழ் சிறி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் தலைமறைவானால் சொத்துக்கள் முடக்கப்படும்!
பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் தலைமறைவானால் சொத்துக்கள் முடக்கப்படும்! பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்தால் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தடை செய்யும் உத்தரவை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விசேட சுற்றுநிரூபம் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்ட விதிகளின் பிரகாரம் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் பதில் பொலிஸ் மாஅதிபரினால் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரது சொத்துக்கள், தடை செய்யப்பட்ட நாள் முதல் ஒரு வருட காலப்பகுதிக்குள் நீதிமன்றத்தில் குறித்த நபர் ஆஜராகும் பட்சத்தில், சொத்துக்களை விற்பனை செய்ய அல்லது சொத்துக்களை விற்பனை செய்து பெறப்பட்ட வருமானத்தை அவருக்கே மீள வழங்குவதற்கான விதிமுறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் செயற்பட வேண்டுமென்பதுடன் இந்த நடவடிக்கைகளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமெனவும் சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1425999- யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை!
இராமநாதபுரம் கடல் பகுதியில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் தொடர்பான அப்டேட்! இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் ஒரு நாட்டிகள் தூரத்தில் நடுக்கடலில் பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்துச் வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று படகின் எஞ்சின் பழுது காரணமாக கடலில் தத்தளித்த ஞானராஜ் மற்றும் பூலோக தாசன் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மீனவர்கள் தத்தளித்த கடற்பகுதியில் ஒரு மூட்டையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் அவர்கள் இருவருக்கும் கஞ்சா பொட்டலங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது என்ற கோணத்தில் மரைன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றன. https://athavannews.com/2025/1426006- சிரிக்க மட்டும் வாங்க
- போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
யோவ் யாருயா நீயி? உள்ள இருந்து வர்ற? என் பேரு Butch Wilmore. நானும் சுனிதா கூட 9 மாதம் விண்வெளில தான்யா இருந்தேன். அப்படியா சரி போ... போ... Dinesh Kumar 😂 🤣 ஆம்பளை எல்லாம் எவன்யா ராக்கெட் லே ஏத்துனது.. 🤣 Sun Shun- சிரிக்கலாம் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு ஆட்டோ இருபது லட்சம் ரூபாய்.- எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஜெர்மனி, பெர்லினின் பிளான்டர்வால்ட் மற்றும் ஸ்டெக்லிட்ஸ் சுற்றுப்புறங்களில் நான்கு டெஸ்லா வாகனங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன. உலகம் பூராகவும் எலான் மஸ்குக்கு வலுக்கும் எதிர்ப்பு! Vaanam.lk- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மாட்டு சாணியால்... தனது Toyota Corolla காரை மெழுகிய பெண். மாட்டு சாணி - மாற்று யோசனை! 😂- சிம்பொனி என்றால் என்ன?
இசைஞானி இளையராஜாவை சந்தித்தது பெருமை மற்றும் மகிழ்ச்சி என இந்திய பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது.” Vaanam.lk- மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!
- இலங்கை மின் திட்டம்; வதந்திகளுக்கு அதானி நிறுவனம் முற்றுப்புள்ளி!
இலங்கை மின் திட்டம்; வதந்திகளுக்கு அதானி நிறுவனம் முற்றுப்புள்ளி! இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்திகளை இந்தியாவின் அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிலோவாட் மணி நேரத்திற்கு 7 காசுகளாக விலையை மாற்றியமைக்க தனது நிறுவனம் ஒப்புக்கொண்டதாக கூறுவது முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது என சுட்டிக்காட்டியுள்ளது. ஒப்பந்தம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் செய்துகொள்ளப்பட்ட அசல் உடன்படிக்கைக்கு நாங்கள் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளோம். மேலும் அதானி Green Energy SL Ltd இன் முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் திட்ட அளவுருக்களில் எந்த மாற்றமும் இல்லை என்பதை மேலும் தெரிவிக்கிறோம். முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டத்தில் இருந்து நிறுவனம் கெளரவத்துடன் விலகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் எப்போதாவது மறுபரிசீலனை செய்யும் பட்சத்தில் எந்தவொரு அபிவிருத்தி வாய்ப்பையும் எடுக்க எப்போதும் தயாராக இருப்பதாக அதானி குழுமம் மீண்டும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரியில் இலங்கையில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான காற்றாலை மின் உற்பத்தி முயற்சியில் இருந்து விலகுவதாக அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்நாட்டின் அதிகாரிகள் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முயன்றதைத் தொடர்ந்து இந்த முயற்சியில் இருந்து விலகுவதாக அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியது. 2023 பெப்ரவரியில் இலங்கையின் முதலீட்டு வாரியம் (BOI), அதானி கிரீன் எனர்ஜியின் $442 மில்லியன் காற்றாலை மின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதில் வடக்கு இலங்கையின் மன்னார் மற்றும் பூனேரினில் மின் நிலையங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபையின் 2023 அறிக்கையின்படி, மன்னார் காற்றாலை மின் நிலையம் 250 மெகாவாட் (மெகாவாட்) திறனில் இயங்க வேண்டும். அதேநேரத்தில், பூனாரியின் ஆலை 100 மெகாவாட்டிற்கு திட்டமிடப்பட்டது மற்றும் 2025 இல் தொடங்க திட்டமிடப்பட்டது. அப்போதிருந்து, இந்த திட்டம் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டது, அதன் விவரங்கள் உயர் நீதிமன்ற மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425967- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
தேஷபந்து தென்னகோனிற்கு விளக்கமறியலில் நீடிப்பு! உயர் நீதிமன்றத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று பிற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டிருந்தார். அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தேஷபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்திறகு அழைத்து வரப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Athavan Newsதேஷபந்து தென்னகோனிற்கு விளக்கமறியலில் நீடிப்பு!உயர் நீதிமன்றத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது. உய...- மே மாதம் 06ஆம் திகதி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல். -தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு.-
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு! உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சற்று முன்னர் அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்காக இன்று பிற்பகல் 1.30 மணி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தாக தேர்தல்கள் ஆணைக்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1425971- உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
யாராய் இருக்கும்....- கருத்து படங்கள்
தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையிட்ட போது 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, இரண்டு ஆப்பிள் ரக தொலைபேசிகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
தேசபந்து தென்னக்கோனின் வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையிட்ட போது 1009 மதுபான போத்தல்கள், ஒரு துப்பாக்கி, இரண்டு ஆப்பிள் ரக தொலைபேசிகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.- “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ பிள்ளையான் வியாழேந்தின் வேட்பு மனுதாக்கல்!
“கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ பிள்ளையான் வியாழேந்தின் வேட்பு மனுதாக்கல்! தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் “கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக” போட்டியிடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலுpகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார் அதன்படி வேட்புமனுக்கள் கையளிக்கும் இறுதி நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் இராஜஙாக் அமைச்சர்களான சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் இதேபோன்று ஆளும் தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையிலும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தலைமையிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.நளீம் தலைமையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோன்று ஜனநாயக தமிழ் தேசிய முன்னணியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல்செய்யப்பட்டன. மேலும் ஈபிடிபியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தலைமையில் வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டதுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் 11உள்ளுராட்சிமன்றங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425925- முப்படையைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் கைது!
முப்படையைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் கைது! சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறாத மற்றும் கடமைக்கு சமூகமளிக்காத முப்படையைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் துய்யகொண்டாவின் உத்தரவின்படி, சேவையில் இருந்து விலகிச் சென்ற முப்படை அதிகாரிகளை சட்டரீதியாக கைது செய்யும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி நேற்று (19) வரை சேவையில் இருந்து தப்பிச் சென்ற முப்படையைச் சேர்ந்த 1,604 படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 1,444 பேரும், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 160 பேரும் கைது செய்யப்பட்டடுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 1,394 இராணுவத்தினர் அடங்குவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 138 விமானப்படை வீரர்களும், 72 கடற்படை வீரர்களும் அடங்குவர். https://athavannews.com/2025/1425866- இலங்கையில் சிஐஏயின் இரகசிய தளம்-கென்னடி கொலை குறித்த ஆவணங்களில் தகவல்
இலங்கையில் சிஐஏயின் இரகசிய தளம்-கென்னடி கொலை குறித்த ஆவணங்களில் தகவல். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஜோன்எவ் கென்னடி கொலைகுறித்த ஆவணங்கள் மூலம் இலங்கையில் சிஐஏ தளம் இயங்கியது குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 80 ஆயிரம் பக்க ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்த ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு காணக்கிடைக்கிறது. கோப்புகளில் உள்ளவற்றைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று வெள்ளை மாளிகையின் துணை ஊடகச் செயலாளர் ஹாரிசன் ஃபீல்ட்ஸ் கூறினார். ஆவணங்கள் எந்தவித திருத்தங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டிரம்பினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்களில் பனிப்போர் காலத்தில் சிஐஏயின் நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் காணப்படுகின்றன அதில் இலங்கை உட்பட பல நாடுகளில் சிஐஏயின் இரகசிய தளம் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது இது இலங்கை அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை தற்போது பேசும் பொருளாக ஊடகங்களிலும் நாடாளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் 1988 ம் ஆண்டு இயங்கிய பட்டலந்தை சித்திரவதை முகாம் தொடர்பிலும் பேசப்படுகின்றதுடன் 1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்தை முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றதுடன் உண்மைகளும் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425903- வாகன இறக்குமதி விதிமுறைகள் திருத்தம்; புதிய வர்த்தமானி வெளியீடு!
வாகன இறக்குமதி விதிமுறைகள் திருத்தம்; புதிய வர்த்தமானி வெளியீடு! இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வெளியிடுவதற்கு பரிசோதனை உறுதிபடுத்தல் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதித்தல் மற்றும் ஆவணங்களின் ஆன்லைன் அங்கீகாரத்தை அனுமதித்தல் உள்ளிட்ட முக்கிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2025 மார்ச் 19 ஆம் திகதியிட்ட வர்த்தமானி அறிவிப்பை, நிதி அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார். இலங்கை சுங்கத்திலிருந்து வாகனங்களை விடுவிப்பதில் வாகன இறக்குமதியாளர்களால் கூறப்படும் பல தடைகளைச் சுற்றியுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கை சுங்கத்தில் சிக்கிய ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிட்டத்தட்ட 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய வர்த்தமானியில் உள்ள திருத்தங்கள், அனைத்து நாடுகளிலிருந்தும் வாகன இறக்குமதிகளுக்கு Bureau Veritas ஆய்வுச் சான்றிதழ்கள் இப்போது ஏற்றுக்கொள்ளப்படும் என்று குறிப்பிடுகின்றன. புதிய விதிமுறைகளின்படி, மோட்டார் வாகனங்களை விடுவிக்கும் முன், இலங்கை சுங்கத்துறை ஆவணங்களின் நம்பகத்தன்மையை ஆன்லைனில் சரிபார்க்க வேண்டும். உரிமம் பெற்ற வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஆன்லைன் சரிபார்ப்பு மூலம் சான்றளிக்கப்படுவதை இலங்கை சுங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று வர்த்தமானி கூறுகிறது. சமீபத்தில், இறக்குமதி விதிமுறைகள் குறித்த தவறான முடிவின் விளைவாக சுமார் 400 வாகனங்கள் இலங்கை சுங்கத்தில் 20 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டினர். உற்பத்தி ஆண்டு அல்லது சரியான உற்பத்தி திகதியை குறிப்பிட வேண்டிய தேவை இணக்கத்தை கடினமாக்கியுள்ளது என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே குறிப்பிட்டிருந்தார். https://athavannews.com/2025/1425912- யாழில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை!
கடற்றொழிலுக்கு சென்று காணாமல்போயுள்ள இரு மீனவர்கள் தமிழகத்தில் கண்டுபிடிப்பு! யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற வேளை காணாமல் போன மீனவர்கள் ஐந்து நாட்களின் பின்னர் தமிழக கடலோர பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் தொண்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு சற்று தொலைவில் படகொன்று தத்தளித்துக்கொண்டிருந்ததை கண்ணுற்ற தமிழக கடலோர பொலிஸ் படையினர் அவர்களை படகுடன் மீட்டு கரை சேர்த்துள்ளனர். பின்னர், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், கடந்த 15 ஆம் திகதி கடற்தொழிலுக்கு சென்ற சமயம் படகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்து வந்ததாக கூறியுள்ளனர். இருவரையும் கைது செய்துள்ள தமிழக பொலிஸார், இவர்கள் கடத்தல் நோக்கத்துடன் தமிழக கடற்பரப்பினுள் நுழைந்தார்களா எனும் சந்தேகத்துடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1425933- அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீதும் போர்க் கப்பல் மீதும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீதும் போர்க் கப்பல் மீதும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்! செங்கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மீதும் போர்க் கப்பல் மீதும் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. கடந்த 48 மணி நேரத்தில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலைக் குறிவைத்து ஹூதிக்கள் மூன்றாவது தடவையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். வடக்கு செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஹாரி ட்ரூமன் எனும் விமானம் தாங்கிக் கப்பல் மீதே ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செங்கடல் பகுதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் தாக்குதல் போர்க் கப்பல் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெறும் போரில், ஹுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையிலேயே, இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட இரண்டு கப்பல்கள் மீது ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஸாவை இஸ்ரேல் தாக்கும் செயற்பாடு கைவிடப்படும் வரை, செங்கடலில் தங்கள் தாக்குதல் தொடரும் என்று ஹுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், செங்கடலில் ஹூதிக்களின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை, அவர்களுக்கு எதிராக அமெரிக்க தாக்குதல் நீடிக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு மத்தியில் யேமனில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர்களில் ஐந்து பேர் பெண்கள்; என்றும் 2 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்தத் தாக்குதலில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. அமெரிக்க தாக்குதலின் பரபரப்பு அடங்கும் முன்னரே, செங்கடலில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் ஹூதி கிளர்ச்சிப் படையினருக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2025/1425854- உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
இவ... சிரியன்காரன், கத்தியால் குத்துறான் என்று.. இலங்கையில் அகதிக்கு விண்ணப்பிக்க வேண்டியதுதான். 🤣 - பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் தலைமறைவானால் சொத்துக்கள் முடக்கப்படும்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.