Everything posted by தமிழ் சிறி
-
முல்லைத்தீவிற்கு இடம் மாற்றப்பட்ட ரோஹிங்யா அகதிகள்!
முல்லைத்தீவிற்கு இடம் மாற்றப்பட்ட ரோஹிங்யா அகதிகள்! திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் – ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டனர். பொலிஸாருக்கு சொந்தமான இரு பஸ்களில் குறித்த அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று (23) காலை 7.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மக்கள் மிரிஹானை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டிருந்த நிலையில் கேப்பாப்பிலவு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (19) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 115 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு கடந்த வெள்ளிக்கிழமை (20) திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், அன்றைய தினம் மாலை குறித்த பயணிகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது 12 மாலுமிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன் ஏனைய 103 பயணிகளும் திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்காக கடந்த சனிக்கிழமை (21) மியன்மார் அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். எனினும், குடிவரவு குடியகல்வு திணைக்களம் அனுமதி வழங்காததன் காரணமாக அவர்கள் மீள திருகோணமலைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413681
-
ஷரியா நீதிமன்றங்களின் மேற்கு தலைநகராக மாறும் ஐக்கிய இராஜ்ஜியம்!
இனியும்... வெள்ளைக்காரன் உசார் ஆகவில்லை என்றால், அவர்களின் மண்டைக்குள், களிமண் மட்டுமே இருக்குது என்று அர்த்தம்.
-
யாழ்.போதனா வைத்தியசாலை விவகாரம்! உண்மைகளை உடைக்கும் பணிப்பாளர்
சத்தியமூர்த்தி ஐயாவிற்கும்... அர்ச்சுனாவின் பழக்கம் தொற்றி விட்டது.
-
பங்களாதேஷிக்கு செல்லும் மின்சாரத்தை இலங்கைக்கு விற்பனை செய்யும் வழிகளை ஆராயும் அதானி நிறுவனம்!
பங்களாதேஷிக்கு செல்லும் மின்சாரத்தை இலங்கைக்கு விற்பனை செய்யும் வழிகளை ஆராயும் அதானி நிறுவனம்! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் அமைந்துள்ள தனது ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு பங்களாதேஷுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தை இலங்கை போன்ற அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கனா வழிகளை அதானி பவர் (Adani Power) நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. 2X800 மெகாவாட் திறன் கொண்ட ஜார்கண்ட் ஆலை, பங்களாதேஷுக்கு மின்சாரம் வழங்க அதானி பவரின் அர்ப்பணிப்பு திட்டமாகும். பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக சில சிக்கல்களுக்கு மத்தியில் ஆலையில் இருந்து பங்களாதேஷிற்கு மின்சாரம் வழங்கும் அளவை நிறுவனம் குறைத்துள்ளது. இந்தத் திட்டத்தைத் தக்கவைக்க, உள்நாட்டுச் சந்தையில் மின்சார விற்பனையை இந்திய அரசாங்கம் அண்மையில் அனுமதித்திருந்தாலும், இந்த விடயத்தில் ஒரு புதிய பரிமாற்ற வலையமைப்பு அவசியம் என்று தி இந்து பிசினஸ் லைன் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய விதிமுறைகளைப் பொருத்தவரை இலங்கைக்கு மின்சாரத்தை விற்பது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றாலும், அதற்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. பங்களாதேஷ் அரசாங்கம் ஆலையில் இருந்து வாங்கிய மின்சாரத்திற்காக அதானி குழுமத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தத் தவறிவிட்டது. இன்னும் பல நூறு மில்லியன் டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது. எனினும், அந்த சரியான தொகை தொடர்பில் இரு தரப்புக்கும் இடையே சர்ச்சை நிலையுள்ளது. இதற்கிடையில், பங்களாதேஷில் அதானி திட்டம் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது. இப்போது, அதானி திட்டத்தை உள்ளடக்கிய ஏழு திட்டங்களின் விரிவான விசாரணைக்கு அங்குள்ள மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1413655
-
ஷரியா நீதிமன்றங்களின் மேற்கு தலைநகராக மாறும் ஐக்கிய இராஜ்ஜியம்!
ஷரியா நீதிமன்றங்களின் மேற்கு தலைநகராக மாறும் ஐக்கிய இராஜ்ஜியம்! ஷரியா நீதிமன்றங்களின் மேற்கத்திய தலைநகராக தற்சமயம் ஐக்கிய இராஜ்ஜியம் மாறியுள்ளது. திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான குடும்ப விடயங்களில் தீர்ப்பளிக்கும் 85 ஷரியா நீதிமன்றங்கள் ஐக்கிய இராஜ்ஜியத்தில் இப்போது உள்ளன. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து முஸ்லிம்கள் இந்த இஸ்லாமிய சபைகளுக்கு மேல்முறையீடு செய்ய வருவதால், ஷரியா நீதிமன்றங்களின் “மேற்கு தலைநகராக” ஐக்கிய இராஜ்ஜியம் உருவாகி வருவதாக தெரிவிக்கின்றன. கிரேட் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் இஸ்லாமிய ஷரியா நீதிமன்றம், 1982 இல் உருவாக்கப்பட்டது மற்றும் கிழக்கு லண்டனில் உள்ள லெய்டனை தளமாகக் கொண்டது. மேலும் இது நிக்காஹ் (திருமணம்) சேவைகள், தலாக் (கணவரால் தொடங்கப்பட்டது) மற்றும் குலா (மனைவியால் தொடங்கப்பட்டது) விவாகரத்து நடைமுறைகளை வழங்கும் ஒரு பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வாழும் முஸ்லிம்களால் இஸ்லாமிய சட்டங்களை உருவாக்கக்கூடிய ஒரு பயன்பாடும் உள்ளது. பயன்பாட்டில், ஒரு கீழ்தோன்றும் விதியில் ஆண்கள் தங்களுக்கு எத்தனை மனைவிகள் உள்ளனர் என்பதைத் தேர்வு செய்யலாம். இது ஒன்று முதல் நான்கு வரை இருக்கும். இதை ஷரியா நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது என்று டைம்ஸ், பிரிட்டன் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்த ஷரியா நீதிமன்றங்கள் இஸ்லாமிய அறிஞர்களின் குழுவைக் கொண்டிருக்கின்றன அவர்கள் பெரும்பாலும் ஆண்களே. அவை முறைசாரா அமைப்புகளாக செயல்படுகின்றன மற்றும் விவாகரத்து மற்றும் திருமணம் தொடர்பான பிற விடயங்களில் மதத் தீர்ப்புகளை வழங்குகின்றன. தரவுகளின்படி, ஐக்கிய இராஜ்ஜியத்தில் சுமார் 100,000 இஸ்லாமிய திருமணங்கள் நடந்துள்ளன, இவற்றில் பல சிவில் அதிகாரிகளிடம் பதிவு செய்யப்படவில்லை. இந்த திருமணங்களுக்கு பெரும்பாலும் கலைக்க மதத் தீர்ப்புகள் தேவைப்படுகின்றன, குறிப்பாக விவாகரத்துக்காக ஷரியா நீதிமன்றிடம் ஒப்புதல் பெற வேண்டிய பெண்களைப் பாதிக்கிறது. பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் பாரம்பரிய ஷரியாவின் பல அம்சங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன, ஆனால் திருமணம் மற்றும் விவாகரத்து விடயங்களில் பாரம்பரிய தீர்ப்புகள் அடிக்கடி கடைபிடிக்கப்படுகின்றன. கணவன் விவாகரத்து வழங்க விரும்பவில்லை என்றால், மனைவியின் வேண்டுகோளின் பேரில் திருமணங்களை முடிக்க நீதிமன்றங்களுக்கு மத அதிகாரம் உள்ளது, இருப்பினும் இந்த செயல்முறை சிவில் நடவடிக்கைகளிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது. இஸ்லாமிய விவாகரத்து கோரும் ஆண்கள் மூன்று முறை “விவாகரத்து” என்று கூறி தங்கள் திருமணத்தை முடித்துக் கொள்ளலாம், இது பாலின அடிப்படையிலான மத நடைமுறைகளில் முற்றிலும் மாறுபட்டது. எவ்வாறெனினும் ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள இந்த சட்ட அமைப்புகள் குறித்து தேசிய மதச்சார்பற்ற சங்கம் குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்பியுள்ளது. சங்கத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் எவன்ஸ், இந்த நீதிமன்றம் “அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கொள்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது” மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை எதிர்மறையாக பாதிக்கிறது என்று விமர்சித்தார். https://athavannews.com/2024/1413567
-
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
அதிலும்... முதல் பிரயாணத்தை, @ஈழப்பிரியன் தானே தொடக்கி வைக்கின்றார். பிரயாணம் முடிந்து வந்த பின்... ஆண்மையில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டிருக்கோ... என்று, கேட்டு அறியலாம்தானே.
-
நைஜீரியால் கூட்ட நெரிசலில் சிக்கி 67 பேர் உயிரிழப்பு!
நைஜீரியால் கூட்ட நெரிசலில் சிக்கி 67 பேர் உயிரிழப்பு! நைஜீரியால் நத்தார் பண்டிகையை முன்னிட்டு இலவசமாக வழங்கப்பட்ட உணவுகளை பெறுவதற்காக சென்ற 67 பேர் கூட்ட நெரிசலில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் கடந்த வாரம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த உணப்பொருட்களை பெற ஏராளமான மக்கள் அப் பகுதிகளுக்கு படையெடுத்ததால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் அதில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஓயோ மாநிலத்தில் கடந்த புதன் கிழமை ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 35 குழந்தைகள் வரை உயிரிழந்துள்ளனர் எனவும், தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், அந்நாட்டின் தலைநகர் அபுஜாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அந்நாட்டு ஜனாதிபதி அனைத்து கொண்டாட்டங்களையும் இரத்து செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு நாட்டில் நிலவும் அதிகப்படியான வறுமை, விலை அதிகரிப்பு மற்றும் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளே காரணம் எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413670
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
வைத்தியர் சத்தியமூர்த்திக்கு... இருக்கு, ஆப்பு. 😂 🤣
-
வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
இதனைத்தானே... "வைத்தியர் அர்ச்சுனா"வும் தட்டிக் கேட்க வெளிக்கிட, அவரை... "பைத்தியர் அர்ச்சுனா" என்று சில மக்கள் சொல்கிறார்கள். 😎 🤣
-
கருத்து படங்கள்
- பழைய கட்டிடங்களைப் புனரமைக்க யாழ் . மாநகர சபை தீர்மானம்!
பழைய கட்டிடங்களைப் புனரமைக்க யாழ் . மாநகர சபை தீர்மானம்! யாழ் மாநகர சபையினால் அடுத்த வருடம் முதல் பழைய கட்டடங்களைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையால் உள்ளூர் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 52.5 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பண்ணை மீன் சந்தைக் கட்டிடம் வட மாகாண ஆளுநரால் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மேற்பட்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” யாழ்ப்பாணம் கடந்த காலங்களில் மிகவும் தூய்மையான நகரமாக இருந்தது. எனினும் தற்போது மிகவும் மோசமாக காட்சியளிக்கின்றது. எனவே யாழ்ப்பாணத்தைத் தூய்மையான அழகான நகரமாக மாற்றியமைக்கும் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இந்த மீன் சந்தை மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டியதாகக் கூறினார்கள். இதை எப்படி நாங்கள் பயன்படுத்தப்போகின்றோம் என்பதில்தான் எமது வெற்றி தங்கியிருக்கின்றது. இது உங்களுக்குரிய கட்டிடம். இதை தூய்மையாக வைத்துப் பராமரிப்பது உங்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு. நீங்கள் அவ்வாறு பராமரிப்பீர்களாக இருந்தால் அதிகளவு நுகர்வோர்கள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்பும் இருக்கின்றது” இவ்வாறு ஆளுநர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் யாழ்ப்பாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413554- கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
சுப்பர் லூப் தொழில் நுட்பத்தில் சாத்தியம் என்று @goshan_che சொல்கிறார் புலவர்.- புது வருட சிரிப்புகள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
நவீன பயணிகள் விமானங்களே.... ஒரு மணித்தியாலத்திற்கு 1200 கிலோ மீற்றர் தூரம்தான் பயணிக்கின்றன. ரயில்... 4800 கிலோ மீற்றர் பயணிக்குமா என்பது கேள்விக்குறிதான்.- சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
தேர்தலில் தோல்வியுற்ற, “முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்” “சுத்துமாத்து சுமந்திரனுக்கு”, நோர்வே தூதரகத்தில் என்ன வேலை. 😂 கடந்த 15 வருசமாய் புடுங்கின ஆணி காணாது என்று, வெட்கம் இல்லாமல்… இப்பவும் புடுங்க நிற்கிறார். 🤣- சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
சுமந்திரன், சாணக்கியனை... "பாட்டா பாத்ரூம்" செருப்பு போட வைத்து, பழி வாங்கிவிட்டார். கட்சியாலும், மக்களாலும் நிராகரிக்கப் பட்ட ஒருவரை... அருகில் வைத்திருப்பதால், ஓட்டகத்துக்கு இடம் கொடுத்த நிலை... சாணக்கியனுக்கு ஏற்படப் போகுது.- கருத்து படங்கள்
- தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன். கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடியது. வழமைபோல குழப்பம். தேர்தல் முடிவுகளில் இருந்து அந்த கட்சி கற்றுக்கொள்ளவில்லை என்பதனை அந்த செயற்குழு கூட்டம் நிரூபித்தது. இது ஒரு புறமிருக்க, அந்தக் கூட்டத்தின் முடிவில் கூட்டத்தில் நடந்தவைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன் கூறிய ஒரு விடயத்தை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். “கடந்த காலத்தில் அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது. சில வரைவுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சில வரைவுகளோடு நாங்கள் இணங்கி இருக்கின்றோம். ஆகவே அது எங்களுடைய நிலைப்பாடு…. அதனைத் தொடர்ந்து கோத்தபாய ராஜபக்சவினுடைய காலத்தில் அவர் நியமித்த குழுவுக்கு முன்பாகவும் நாங்கள் சென்று எங்களுடைய நிலைப்பாட்டை எழுத்து மூலமாக கொடுத்திருக்கிறோம். ஆகவே அது எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடு. ஆகவே அவ்வாறான நிலைப்பாட்டோடு ஒத்து வருகின்றவர்கள் இருந்தால் எந்த ஆட்சேபனையும் கிடையாது….. ஆனால் வேறு சிலர் எங்களுடைய கட்சிக்கு போட்டியாக வேண்டுமென்றே வெவ்வேறு வரைவுகளை செய்து சில குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.அவ்வாறான குழப்பங்களை அந்த காலப்பகுதியில் செய்தவர்களோடு, அவர்களுடைய வரைவுக்கு இணங்கி செல்ல வேண்டிய அவசியம் நமக்கு கிடையாது…. தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி. வடக்கு கிழக்கில் சகல மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கின்ற ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி. ஆகவே மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி செயல்பட மாட்டோம். மற்றவர்கள் எங்களோடு எங்களுடைய நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” இவ்வாறு சுமந்திரன் தெரிவித்தார். அதாவது சுமந்திரன்... அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்க முயற்சித்தால் அது தொடர்பான தமிழரசு கட்சியின் நிலைப்பாட்டை அங்கே கூற முற்படுகிறார். அதன்படி தானும் பங்காளியாக இருந்து உருவாக்கிய எக்கிய ராஜ்ஜிய என்ற தீர்வுப் பொதியை அவர் கைவிடும் நிலையில் இல்லை.இது முதலாவது விடயம்.இரண்டாவது விடயம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனையாகிய தமிழ் மக்கள் பேரவையின் முன் மொழிவின் அடிப்படையில் புதிய யாப்புருவாக்க முயற்சியை எதிர்கொள்ளும் விடயத்தைப் பற்றியது என்று எடுத்துக் கொள்ளலாம்.. 2015 இல் இருந்து 18 வரையிலும் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகளில் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாக செயற்பட்டது. அந்த யாப்பு உருவாக்க முயற்சிகளில் சுமந்திரன் தமிழ் தரப்பில் ஒரு தீர்மானிக்கும் சக்தி போல செயல்பட்டார். “எக்கியயராஜ்ஜிய” என்று அழைக்கப்பட்ட அந்தத் தீர்வுப் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனாவின் யாப்புச் சதி முயற்சியோடு குழம்பி நின்றது. அந்த எக்கிய ராஜ்ய தீர்வு முயற்சிக்காக சேர்ந்து உழைத்தவர்களில் அனுரகுமாரவும் ஒருவர் என்று சுமந்திரன் கூறுவது உண்டு. இப்பொழுது ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அனுர அரசாங்கம் முன்பு தாங்களும் சேர்ந்து உருவாக்கிய எக்கிய ராஜ்யவை,விட்ட இடத்தில் இருந்து தொடருமாக இருந்தால் அதைத் தமிழ்த் தரப்பு எப்படி எதிர்கொள்வது? சுதந்திரனும் சம்பந்தரும் எக்கிய ராஜ்யவை ஒரு சமஸ்டித் தீர்வு என்று தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அது லேபல் இல்லாத சமஸ்ரி என்றும் சொன்னார்கள். ஆனால் கஜேந்திரக்குமார் அது ஒற்றை ஆட்சிக்கு உட்பட்டது என்று திரும்பத் திரும்பச் சொன்னார். இப்பொழுதும் சொல்கிறார். அனுர அரசாங்கம் எக்கிய ராஜ்யவை மீண்டும் கையில் எடுத்தால் அதை எதிர்க்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் கூறுகிறார்.எக்கிய ராஜ்ய தீர்வை நோக்கி உழைத்த காலகட்டங்களில் அனுரவின் கட்சியாகிய ஜேவிபி யாப்புருவாக்கக் குழுவுக்கு வழங்கிய பரிந்துரைகளில் மூன்று விடயங்கள் முக்கியமானவை என்று கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டுகிறார். முதலாவதாக, ஆளுநரின் அதிகாரம். இப்பொழுது இருப்பதைப் போலவே ஆளுநருக்கு அதிகாரம் இருக்க வேண்டும். அதாவது ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் ஓர் ஆளுநருக்கு இருக்கக்கூடிய அதி உயர் அதிகாரங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். இரண்டாவது, வடக்கையும் கிழக்கையும் இணைக்கக்கூடாது. மூன்றாவது, போலீஸ் அதிகாரங்களை வழங்கக்கூடாது. இந்த மூன்று பரிந்துரைகளையும் ஜேவிபி யாப்புருவாக்கக் குழுவின் முன் பரிந்துரைகளாக முன்வைத்ததாக கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டுகிறார். அவ்வாறு அனுர அரசாங்கம் எக்கிய ராஜ்ஜிய என்ற தீர்வுப் பொதியை மீண்டும் தூசு தட்டி எடுக்குமாக இருந்தால், அதை எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கஜேந்திரகுமார் அழைப்பு விடுத்திருந்தார்.அவருடைய அழைப்பின் அடிப்படையில் சிறீதரனையும் செல்வம் அடைக்கலநாதனையும் அவர்களுடைய இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று அவர் சந்தித்தார்.இந்த மூன்று தரப்புக்களும் தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த தீர்வு முன் மொழிவிவின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். தமிழ் மக்கள் பேரவையின் முன்மொழிவு எனப்படுவது சமஸ்டியைத் தீர்வாக முன்வைக்கின்றது. எனவே தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் ஒரு சமஸ்ரித் தீர்வை முன்வைத்து பேச்சுவார்த்தை மேசையில் அமர வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்பார்க்கின்றது. கஜனின் அழைப்புக்கு சிறீதரனும் செல்வமும் இணங்குவார்களாக இருந்தால் அது ஒரு புதிய யாப்புருவாக முயற்சியை எதிர் கொள்ளும் நோக்கிலான தமிழ் ஐக்கிய முயற்சியாக அமையக்கூடும். இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சிக்குள் தொடர்ந்து புகைந்து கொண்டிருக்கும் உட்கட்சி மோதல்களுக்கும் ஒரு பங்கிருக்கும். சிறீதரன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதனை அது தீர்மானிக்கக் கூடும். அதேசமயம் சுமந்திரன் அணி இந்த விடயத்தில் என்ன முடிவெடுக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.ஏனென்றால், கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடந்த மத்திய செயற்குழு கூட்டத்தின் பின் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களின்படி அந்த ஐக்கிய முயற்சிக்குள் தமிழரசுக் கட்சி இணைவதை கட்சியின் மத்திய குழு அனுமதிக்குமா என்ற கேள்வி பலமாக எழுகின்றது. கட்சியின் மத்திய குழுவில் இப்பொழுதும் சுமந்திரனின் ஆதிக்கம் அதிகம். அதேசமயம் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் சாணக்கியன் சத்தியலிங்கம் ஆகிய இருவரும் சுமந்திரனின் செல்வாக்கு உட்பட்டவர்கள் என்று கருதப்படுகின்றது. ரவிகரன் முன்பு சுமந்திரனுக்கு நெருக்கமானவராக பார்க்கப்பட்டவர். ஆனால் இப்பொழுது அவர் அவ்வாறில்லை என்றும் கருதப்படுகின்றது. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிறீரீநேசன் சுமந்திரனின் செல்வாக்குக்குள் வரக்கூடியவர் அல்ல. புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிறீநாத் பெரும்பாலும் சுமந்திரனின் பக்கம் போக மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்பாறையில் கோடீஸ்வரனும் சுமந்திரனின் பக்கம் போக மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருகோணமலையில் குகதாசன் இரண்டு அணிகளுக்கும் இடையே தெளிவான நிலைப்பாட்டை எடுக்க மாட்டார். என்று நம்பப்படுகிறது. இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் அழுத்தம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இருக்கும். அதுவும் இந்த அணிச்சேர்க்கைகளைத் தீர்மானிக்கும். எனவே புதிய அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கினால், அதை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் ஐக்கியமாக எதிர்கொள்ளுமா இல்லையா என்பது பெருமளவுக்கு தமிழரசு கட்சியின் முடிவில்தான் தங்கியிருக்கிறது என்று தெரிகிறது. தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் ஒருமித்து முடிவெடுக்குமா? அல்லது ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டதுபோல இரண்டு அணிகளாக பிளவுண்டு நிற்குமா? இந்த விடயத்தில் சிறீதரன் மத்திய குழுவை மீறி, சுமந்திரனின் செல்வாக்கை மீறி முன்கை எடுப்பாரா? தமிழரசுக் கட்சி ஒருமித்து முடிவெடுக்க முடியாமல் குழுக்களாகப் பிரிந்து நிற்பதும் நீதிமன்றத்தில் நிற்பதும் அந்தக் கட்சியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் அரசியலையும் பாதித்து வருகிறது.நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்ததை வைத்துக் கொண்டு, இறுமாப்போடு ஐக்கிய முயற்சிகளை அணுகுவார்களாக இருந்தால்,அவர்கள் இறுதியிலும் இறுதியாக தாங்களும் தோற்று தமிழ் மக்களையும் தோற்கடிக்கப் போகிறார்கள் என்று பொருள். இம்மாதம் 18 ஆம் திகதியோடு தமிழரசு கட்சிக்கு 75 வயதாகிறது. 75 வயது என்பது ஒரு முதியவரின் வயது. ஆனால் தமிழரசுக் கட்சி ஒரு முதியவரை போலவா முடிவெடுக்கின்றது? நடப்பு நிலைமைகளைப் பார்த்தால் அது ஒரு அறளை பெயர்ந்த முதியவரைப்போல முடிவெடுப்பதாக அல்லவா தெரிகிறது ? https://athavannews.com/2024/1413390- ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அண்மைய இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ சுற்றுப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வாரம் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் சம்மேளன (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங்கை (Qin Boyong) சந்தித்து, உயரிய முன்னேற்றத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய சில நாட்களுக்குப் பின் சீன விஜயம் தொடர்பான அறிவிப்பு வந்துள்ளது. கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது ஜனாதிபதி, எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப் பகுதியில் தான் சீனாவுக்கு செல்லவுள்ளதாக கூறினார். கடந்த வாரம் அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம், செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பயணமாக அமைந்தது. இந்திய விஜயத்தின் பின்னர் நாடு திரும்பிய ஜனாதிபதியை சீனவின் மூத்த அதிகாரி சந்தித்து உரையாற்றியதுடன், அவரது பீஜிங் விஜயத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தினார். சீனா இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், சர்வதேச கடனை மறுசீரமைக்க சீனா அளித்த ஆதரவுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்திருந்தார். https://athavannews.com/2024/1413398- கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!
கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்! சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் ‘பீஸ் ஆர்க்’ (Peace Ark) என்ற மருத்துவக் கப்பல் நேற்றைய தினம் சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். ‘பீஸ் ஆர்க்’ என்பது 178 மீட்டர் நீளமுள்ள மருத்துவ வசதிக் கப்பல், கேப்டன் டெங் கியாங்கின் தலைமையில் 310 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, குறித்த கப்பல், இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்துடன் இணைந்து மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கிளினிக்குகளை கப்பலில் ஏற்பாடு செய்யும். அவை ‘பீஸ் ஆர்க்’ மற்றும் இலங்கை கடற்படை மருத்துவ திணைக்களத்தின் மருத்துவ பணியாளர்களால் நடத்தப்படும். கூடுதலாக, கப்பலின் பணியாளர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் போது, நாட்டின் சில சுற்றுலாத் தலங்களை ஆராய்வார்கள். இரு கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்படும் சில நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்பார்கள். மேலும், இலங்கை கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் கல்விக்கூடம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பயிற்சியாளர்களின் கீழ் உள்ள அதிகாரிகளும் கப்பல்களின் செயல்பாட்டு செயல்பாடுகள் பற்றிய விளக்கக்காட்சிகளில் பங்கேற்க வாய்ப்பைப் பெறுவார்கள். உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் ‘பீஸ் ஆர்க்’ கப்பல் டிசம்பர் 28 அன்று நாட்டை விட்டுப் புறப்படும். https://athavannews.com/2024/1413406- சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
நோர்வே தூதுவருடனான ஒரு சந்திப்பு... அலுவலகத்திலும், மற்றது... குசினி கொல்லைப்புறத்திலும் நடந்ததாக, ஊர்க்கிழவி சொல்லுது. 😂 🤣- சாணக்கியன், சுமந்திரன் நோர்வே தூதுவருடன் கலந்துரையாடல்!
நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு! இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹெச்.இ.மே-எலின் ஸ்டெனர் (H.E.May-Elin Stener) உடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பானது நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சந்திப்பின் போது, வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள், வரிச் சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய விடயங்களுடன் இரு நாடுகளுக்கும் இடையே கூட்டுப் பங்காளித்துவ மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது பிரதமர் கலாநிதி அமரசூரிய, இலங்கையின் கல்வி முறையை மாற்றியமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், மேம்பட்ட பொதுச் சேவை வழங்கலுக்காக ஆட்சியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்தார். பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி.சகரிகா போகஹவத்த மற்றும் பணிப்பாளர் நாயகம் திருமதி ஷோபினி குணசேகர உட்பட நோர்வே தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். https://athavannews.com/2024/1413421- கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்!
கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க எலான் மஸ்க் திட்டம்! அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 60 நிமிடங்களுக்குள் பயணம் செய்யும் வகையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையொன்றை அமைக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் எலான் மஸ்குக்கு சொந்தமான தி போரிங் கம்பெனி சார்பாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதைகளை அமைத்து போக்குவரத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுரங்க பாதையானது 3,000 மைல்கள் அதாவது 4800 கிலோமீற்றர் நீளம் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு அதில் அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என்பதே எலான் மஸ்கின் கனவாகும். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையினான பயண நேரத்தை 1 மணிநேரமாகக் குறைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமெரிக்காவிலிருந்து பிரித்தானியாவுக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்றால் 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. . இதற்கு முன்பு இது போன்ற சுரங்கப்பாதைகளை அமைப்பதற்கான தொழில் நுட்பங்கள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் இந்த திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டிருந்தார். ஆனால் தற்போது அவருக்கு சொந்தமான போரிங் கம்பெனி சுரங்கப்பாதை அமைப்பதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளதால் தனது கனவை நனவாக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1413381- ஜேர்மனியில் நத்தார் கடைகளுள் வாகனம் புகுந்ததால் பலர் படுகாயம்.
ஜேர்மனியின் கிறிஸ்துமஸ் சந்தையில் கார் தாக்குதல்! ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் உள்ள மாக்டேபர்க் (Magdeburg) நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் ஒன்பது வயது மற்றும் நான்கு வயோதிபர்கள் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை (20) மாலை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அவர்களில் குறைந்தது 41 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலையடுத்து வெள்ளிக்கிழமை அந் நாட்டு நேரப்படி இரவு 07:00 மணிக்குப் பின்னர் சுமார் 100 பொலிஸார், வைத்தியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயதுடையவர் என்றும் அவர் 2006 ஆம் ஆண்டு முதல் ஜேர்மனியில் வசித்து வருவதாகவும் அருகிலுள்ள நகரமொன்றில் வைத்தியராக பணியாற்றி வருவதாகவும் ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஒரு மனநல மருத்துவர் ஆவார், அவர் மாக்டேபர்க்கிற்கு தெற்கே 40 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பர்க்கில் வசித்து வந்தார். 2006 இல் ஜெர்மனிக்கு வருதை கதந்த அவர் 2016 இல் அகதியாக அங்கீகரிக்கப்பட்டார். மேலும், ஜேர்மன் அதிகாரிகளின் கூற்றுப்படி சந்தேக நபர் தனியாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். எனினும், தாக்குதலின் பின்னணியில் உள்ள சாத்தியமான நோக்கம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும், அவருக்கு இஸ்லாமிய தீவிரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லை எனவும், அவர் கடந்த காலத்தில் சமூக ஊடகங்களில் இஸ்லாத்தை விமர்சித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1413409 - பழைய கட்டிடங்களைப் புனரமைக்க யாழ் . மாநகர சபை தீர்மானம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.