Everything posted by தமிழ் சிறி
-
செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!
செங்கடலில் சொந்த போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! செங்கடலில் தனது சொந்த போர் விமானம் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. அந் நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 03.00 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்ட F/A-18F போர் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. யேமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. எனினும், அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை அந்த நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானிகள் மேற்கொண்ட பணி என்ன என்பதை விவரிக்கவில்லை. 1200 பேரைக் கொன்று 250 பேரை பயணக் கைதிகளாகக் கைப்பற்றிய இஸ்ரேல் மீதான ஹமாஸின் திடீர் தாக்குதலுக்குப் பின்னர் 2023 ஒக்டோபரில் காசா பகுதியில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து சுமார் 100 வணிகக் கப்பல்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹவுத்திகள் குறிவைத்துள்ளனர். காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 45,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல், அமெரிக்கா அல்லது ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கப்பல்களை குறிவைப்பதாக ஹவுத்திகள் கூறுகின்றனர். இந்த நிலையில் ஹவுத்திகளை குறிவைத்து அமெரிக்கா செங்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தனது வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1413449
-
முன்னாள் எம்.பி திலீபன் கைது
ஈ.பி.டி.பி. க்கும் குற்றச் செயல்களுக்கும்…. அவ்வளவு நெருக்கம். ஒட்டுக் குழுவின் தலைவன் எவ்வளியோ…. தொண்டர்களும் அவ்வளி.
-
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
சிலகாலத்துக்கு முன்பு இலங்கையிலிருந்து…. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா நோக்கி பயணமாகிய கப்பல்கள் எல்லாம், இதே “கொண்டிஷனில்” தான் இருந்தது. ஆபிரிக்காவில் இருந்து… ஐரோப்பா வரும் அகதிக் கப்பல்களும் இதே நிலையில்தான் இருக்கும். நாட்டை விட்டு தப்பி ஓட நினைப்பவர்கள்… பெரும் சமுத்திரத்தை தாண்ட, தாங்கள் பயணிக்கும் கப்பலின் நிலைமையை யோசித்து பார்ப்பதில்லை. இப்படியான கப்பல்களில் பெரும்பாலவை கடலிலேயே ஆட்களுடன் சமாதி ஆகி விடும்.
-
இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உதவுங்கள்; கனடிய அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை
இதை வாசிக்கும்…. சுமந்திரன் குரூப்புக்கு, அடி வயிறு பத்தி எரியப் போகுது. 😂 🚒🧯தீயணைப்பு வண்டி தொலைபேசி இலக்கம்: 📞 ☎️ 112 🤣 🚒
-
பரம்பரை பரம்பரையாக நாங்கள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது - ஜீவன் தொண்டமான்
இவர்களைப் போலவே தமிழரசு கட்சியும்… இரண்டு முறை எதிர்க் கட்சி தலைவர்களாக இருந்து, பங்களாவில் வசித்து மேலே போய் சேர்ந்து விட்டார்கள். 😎
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இங்கும் இதே நிலைதான். முன்பு… போஞ்சி, காளான், தக்காளி போன்ற மரக்கறி வகைகளை 500 கிராம் பைகளில் பொதி செய்து கடைகளுக்கு அனுப்புவார்கள். கோவிட்டுக்குப் பிறகு 400 கிராம் பொதி ஆக்கி, விலையையும் கூட்டி விட்டார்கள்.
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் ஒருவர் இலங்கையில் தஞ்சம்!
ஶ்ரீலங்கா முஸ்லீம்கள்… இதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் “பம்மிக்” கொண்டு இருக்கிறார்கள். 😂 அனுர…. ஆட்சியில், அவ்வளவு பயம் இருக்குது போலை கிடக்கு. 🤣
-
அநுர – மோடி கூட்டறிக்கையில் ’13’ஏன் இல்லை; ‘ இந்து பத்திரிகை ‘கேள்வி
ராஜீவ் காந்தி… 13 ஒப்பந்தத்தில் கையெழுத்து வைக்க, ஶ்ரீலங்கா போய்… துவக்குப் பிடியால், பிடரியில் அடி வாங்கினது தான் கண்ட மிச்சம். 😂 🤣
-
சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்கு புதிய மதுபான வகை!
தமிழ் நாட்டு அரசு நடத்தும் “டாஸ்மாக்” மதுபானக் கடையில்… குறைந்த விலையில் “வீரன்” என்ற மதுபானம் விற்பதாக வாசித்தேன். தமிழ் நாட்டு அரசின் 😎 புரட்சிகர திட்டங்களை, சிங்கள அரசு… “ஈயடிச்சான் கொப்பி” அடிக்குது போலுள்ளது. 😂 🤣
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
சும்முக்கு…. நத்தார் வாழ்த்து அனுப்புகின்ற ஆட்கள், @satan நின் கடிதத்தையும் வைத்து அனுப்பினால், வெளிநாட்டில் இருந்து காசு வந்திருக்குது என்று, கடிதத்தை உடனே திறந்து வாசிப்பார். 😂 🤣
-
இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!
தமிழரசு கட்சியை... சல்லி, சல்லியாய் நொருக்கி... சந்தி சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பவரும், தமிழரசு கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியவரும்... வெட்கம், ரோசம், மானம், சூடு, சுரணை இல்லாமல் படத்தில்... பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கிறார்.
-
கருத்து படங்கள்
- நாடு திரும்பினார் ஜனாதிபதி!
- இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி!
இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி! இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்த்துள்ள தந்தை செல்வா சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன் நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா,சி.வி.கே. சிவஞானம்,ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் இலங்கை தமிழரசுக் கட்சி 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி கொழும்பு மருதானை எழுதுவினைஞர் சங்க மண்டபத்தில் வைத்து தந்தை செல்வாவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412820- 2024 மூன்றாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.5% வளர்ச்சி!
2024 மூன்றாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.5% வளர்ச்சி! 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் நேர்மறை வளர்ச்சி விகிதத்தில் 5.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நிலையான விலையில் (2015) 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,987,544 மில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3,151,941 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 5.5 சதவீத நேர்மறையான வளர்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், விவசாய பொருளாதார நடவடிக்கைகள், தொழில்துறை பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சேவை பொருளாதார நடவடிக்கைகள் முறையே 3.0 சதவீதம், 10.8 சதவீதம் மற்றும் 2.6 சதவீதம் செல்வ வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1412734- நாடு திரும்பினார் ஜனாதிபதி!
நாடு திரும்பினார் ஜனாதிபதி! இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, இவர்கள் நேற்றிரவு (17) 10.00 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-196 மூலமாக அவர்கள் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 15 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டார். இந்தச் சுற்றுப் பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பில் முக்கிய விடயங்கள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கு இடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஸ்ரீ ஜக்தீப் தன்கர், (Vice President Of India Shri Jagdeep Dhankhar), இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் (Dr.S.Jayashankar – Minister of External Affairs of India), இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நந்தா (J.P. Nanda – Minister of Health), இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் (Shri Ajith Doval – National Security Advisor of India) உள்ளிட்ட இராஜதந்திரிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது, இருநாடுகளுக்கும் இடையில் முதலீடு, வணிகம், பாதுகாப்பு தொடர்புகளை பலப்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து நேற்யை தினம் புத்த காயாவிற்கான பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, உள்ளிட்ட குழுவினர் அங்கு வழிபாடுகளில் கலந்து கொண்டனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412754- நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையில்!
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையில்! கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மைய மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சாதகமற்ற நிலையில் உள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், பாதகமான காரணிகள் இருப்பின் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பரிசோதனைகளின் போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய அளவில் காற்றின் தரம் காணப்படுமாயின் அது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பொறிமுறையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த உமாசுகி நடராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சசி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. https://athavannews.com/2024/1412768- குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு
குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு. சத்தீஷ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. மருத்துவ பரிசோதனை செய்தபோதும், குழந்தைப்பேறு இல்லை என தெரிவித்துள்ளனர். மந்திர, தந்திரங்களில் ஆனந்த் யாதவ்க்கு அதிக நம்பிக்கை உண்டு. தந்தையாக வேண்டும் என்பதற்காக அடிக்கடி பரிகாரங்கள் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்தநிலையில் உள்ளூர் ஜோதிடர் ஒருவரை அணுகியபோது, ‘குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். எப்படியாவது தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற ஆவலில் இருந்த ஆனந்த் யாதவ், சம்பவத்தன்று உயிருடன் கோழிக்குஞ்சை விழுங்கினார். ஆனால் இது அவரது குடும்பத்தினருக்கு தெரியாது. கோழிக்குஞ்சை விழுங்கிய பின்னர், திடீரென மயங்கி விழுந்தார். உடனே குடும்பத்தினர் அவரை அம்பிகாபூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மூச்சுத்திணறலால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது தொண்டையில் ஒரு கோழிக்குஞ்சு சிக்கி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்து அதை மீட்டனர். அந்த கோழிக்குஞ்சு உயிருடன் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தைப் பேறுக்காக விபரீத முயற்சியில் ஈடுபட்டு வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. https://athavannews.com/2024/1412810- இலவச புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் ரஷ்யா!
இலவச புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் ரஷ்யா! 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ரஷ்ய நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்ய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மெஸ்கோவின் சுகாதார அமைச்சின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது பணிப்பாளரான Andrey Kaprin அண்மையில் ரஷ்ய வானொலியில் இந்த தகவலை வெளியிட்டதாக அந் நாடு அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் TASS செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது புற்றுநோயைத் தடுப்பதற்காக பொது மக்களுக்கு வழங்கப்படுவதற்குப் பதிலாக, புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும். மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்படும் புற்றுநோய் தடுப்பூசிகளைப் போலவே, ஒவ்வொரு நோயாளிக்கும் தடுப்பூசி தனிப்பயனாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தடுப்பூசி எந்த வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படும், எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும், அது எவ்வாறு வழங்கப்படும் என்பது போன்ற விடயங்கள் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. ரஷ்யாவில் புற்றுநோய் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. 2022 இல் மாத்திரம் 635,000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும் மனித பாப்பிலோமா வைரஸ்களுக்கு (HPV) எதிரான தடுப்பூசிகள் போன்ற புற்றுநோயைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட தடுப்பூசிகள் சந்தையில் ஏற்கனவே உள்ளன. அமெரிக்காவில், புளோரிடா பல்கலைக்கழகத்தில் உள்ள நரம்பியல் விஞ்ஞானிகள் மூளை புற்றுநோய்க்கான தனிப்பயனாக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசியை பரிசோதித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412741- இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை.
சும்மர்…. வெளியிலை இருக்கிற ஆட்களை தனக்கு குண்டு வைக்க வந்தவர்கள் என்று பொய் முறைப்பாடு கொடுத்து உள்ளே தூக்கி போடுகின்றவர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரானால்… 20 பேர் வரையான தமிழ் இளைஞர்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என ஒரு செய்தியில் வாசித்தேன். செய்த பாவம்தான்… ஆளை இப்பிடி, வீட்டிலை குந்த வைத்திருக்குது. 😂 🤣- ஊதாரி ஊடகங்கள்!
தற்போதைய ஊடகங்கள் பற்றி தாங்கள் கொண்ட கோபம் நியாயமானது. கவிதைக்கு நன்றி பசுவூர்கோபி. 👍🏽- இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை.
சட்டத்தரணி தவராசாவும், இவரின் காலஞ்சென்ற மனைவியும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கௌரிசங்கரி தவராசாவும் பல ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்காக இலவசமாக வாதாடி வெளியே கொண்டு வந்துள்ளார்கள் என அறிந்தேன்.- யோஷித்த ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு
ஓம். யோஷித்த ராஜபக்ச ஒரு பெண்ணை காதலித்தவர். அந்தப் பெண் இவரை விரும்பாமல்... முஸ்லீம் பையன் ஒருவரில் காதல் கொண்ட போது, அந்த முஸ்லீம் பையனை கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. மேலதிக தகவல்களுக்கு.... @goshan_che, @குமாரசாமி, @Nathamuni ஆகியோரை அணுகவும். 😂- மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
கவி அருணாச்சலத்தைப் பற்றி.... வீரகேசரி பத்திரிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) அன்று.. //"மூனா" என்கிற தெட்சிணாமூர்த்தி செல்வகுமாரன். ஈழத்தின் கருத்தோவிய உலகில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்// எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வந்ததாக அறிகின்றேன். அதனை @ஏராளன், @கிருபன் அல்லது வேறு யாராவது தேடி எடுத்து இங்கு இணைத்து விடும்படி அன்புடன் வேண்டுகின்றேன். நன்றி. 🙂- இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை.
இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜை விடுதலை. பிரித்தானியாவிலிருந்து தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பிரித்தானிய தமிழ் பிரஜையை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயணத்தடை உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து குறித்த பிரித்தானிய பிரஜை பயங்கரவாத அமைப்பின் மீளுருவாக்கத்திற்கு நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் இலங்கைக்கு திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 30.11.2024 அன்று கைது செய்யப்பட்டிருந்தார் சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், “உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரஜையான குறித்த நபர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீள் உருவாக்கத்திற்காக நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது. பிரித்தானிய பிரஜையான விஜயசுந்தரம் சங்கர் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இலங்கை வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்ற புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்று கொழும்பு நீதவான் மன்றில் எடுத்தும் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் சங்கர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் இந்த சந்தேக நபரை கைது செய்தமை சட்டரீதியற்ற கைது என்றும் 2009 ஆண்டு யுத்தம் மௌனிக்கபட்ட பின்னர் பல நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கைது செய்யப்பட்ட பொழுது இந்த சந்தேக நபரும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமந்த முடியாத நிலையில் விடுதலை செய்யப்பட்டார் என்றும் கூறியுள்ளார். பிரித்தானியாவுக்கு பயணம் அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு பயணமாகிய இவர் பிரித்தானிய பிரஜாவுரிமையும் பெற்றுக்கொண்டார். பொலிஸார் 2012 இல் சந்தேக நபர் சங்கருக்கு எதிராக நிதி சேகரித்ததாக நீதி மன்றில் அறிக்கையை தாக்கல் செய்து விசாரணை செய்த போதிலும் 2024 ஆம் ஆண்டு கைது செய்யப்படும்வரை இவருக்கெதிராக பொலிஸ் விசாரணையில் நீதிமன்றில் எவ்வித சான்றுகளும் முன்வைக்கப்படவில்லை என்பதோடு சந்தேக நபர் எந்த குற்றதை புரிந்தார் என்பதை பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கைகளில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், 2010 ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு கைது செய்யப்படும் வரை சந்தேக நபர் இலங்கைக்கு எந்த விஜயமும் மேட்கொண்டிருக்கவில்லை என்பதை நீதி மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன் மேலும் தனது வாதத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா இவ்வாறான சட்டரீதியற்ற கைதுகளினால் புலப்பெயர் தமிழர்களின் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைவதுடன் சுற்றுலாத்துறையிலும் பாரிய பாதிப்புகள் ஏற்படுத்துவதுடன் இது இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தும் என்பதனையும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். https://tamilwin.com/article/court-order-regarding-british-citizen-1734428313 - நாடு திரும்பினார் ஜனாதிபதி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.