Everything posted by தமிழ் சிறி
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
13 பிளஸ், மைனஸ்... விளையாட்டு... சம்பந்தன், மகிந்த, ரணிலுடன் போயிட்டுது. இடைக்கிடை செல்வமும், விக்கியரும்தான் அதை ஞாபகப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். 😂
-
சிரிக்க மட்டும் வாங்க
மாப்பிள்ளை... எவ்வளவு சம்பாதிக்கிறாரு. தோராயமா பத்தாயிரம். மாசத்துக்கு எவ்வளவு செலவழிக்கிறாரு. சாராயமா ஒன்பதாயிரம்... 😂 🤣
-
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
அமைச்சர் சந்திரசேகரனையும் அழைத்துக் கொண்டு போயிருக்கலாம். மோடி அரசில் உள்ள அத்தனை தமிழ் அமைச்சர்களையும் (ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், வேல் முருகன்) அனுரவை சந்திக்க வைத்துள்ளார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
"கேக்"கில் உள்ள ஆண்டுகளை கவனிக்கவும். 😂- மக்களின் பணத்தை கொள்ளையடித்தோரின் தகவல் வெளியானது – 300 இலட்சம் பெற்று முதலிடத்தில் முன்னாள் பிரதமர்
மக்களின் பணத்தை கொள்ளையடித்தோரின் தகவல் வெளியானது – 300 இலட்சம் பெற்று முதலிடத்தில் முன்னாள் பிரதமர். வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் தங்களுக்கான மருத்துவ சிகிச்சைக்காகவும், மாணவர்கள் தங்களின் கல்வியறியை வளர்த்தெடுக்கவும் நிதியுதவிகள் தேவைப்பட்டால் நாடும் முதல் இடமாக ஜனாதிபதி நம்பிக்கை நிதியம் காணப்படுகிறது. ஆனால், இப்படியான இந்த நிதியத்திலிருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு முதல், 2024 ஆம் ஆண்டுவரை இலட்சக்கணக்கிலும், கோடிக் கணக்கிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது என்றால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆம். அவ்வாறு பாரிய நிதிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல் இன்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மறைந்த முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்தன 300 இலட்சம் ரூபாய் நிதியுதவியை பெற்றுக் கொண்டு முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் இன்று சபையில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ , ”எமது நாட்டிலுள்ள வறுமையானவர்களுக்கு உதவுவதற்காக 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி நம்பிக்கை நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த சட்டத்தைக் கொண்டுவரும்போது, உதவி செய்வதற்கான காரணிகளும் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில், முதலாவதாக காரணியாக வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க எனக் கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக கல்வியறிவை வளர்த்தெடுக்க. மூன்றாவதாக மதங்களை வளர்த்தெடுக்க. நான்காவது, தேசிய ரீதியாக ஏதேனும் சேவை செய்தவவர்களுக்கு உதவிகளை செய்ய என்று கூறப்பட்டுள்ளது. இறுதியாக ஜனாதிபதியினால், அல்லது நிதியத்தினால் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு உதவி செய்ய என்று காரணம் கூறப்பட்டுள்ளது. விசேடமாக வறுமை, கல்விக்காகத்தான் இந்த நிதியத்திடமிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். என்னிடம் இப்போது ஒரு ஆவணம் உள்ளது. இதில், 2005 முதல் 2024 ஆண்டு வரை ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தினால் பலனடைந்தவர்களின் பெயர் பட்டியல் உள்ளது. இதில் சிலரின் பெயர்களை நான் இங்கே வாசிக்கிறேன். பி. ஹரிசன் பியசேன கமகே சுமேதா ஜயசேன, இவருக்கு மெனராகலையில் அதிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. மனோஜ் சிறிசேன பி.தயாரத்ன எஸ்.சி. முத்துகுமாரன வாசுதேவ நாணயக்கார சரத் அமுனுகம எஸ்.பி.நாவின்ன ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தில் நிதியுதவிப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியலில் உள்ள சிலரது பெயர்களே இவை. இன்னும் சிலரது பெயர்களும் உள்ளன. எனினும் இவர்களை தேடிப்பிடிப்பது சற்று கடினமாகும். அந்தவகையில், குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.பி.டி.பி.கே. ஜயசேகர. எச்.எம்.பி.என்.டி.சில்வா. இவர் யார் என்று தெரியுமா? இவர்தான் பியல் நிஸாந்த டி சில்வா. அடுத்து எஸ்.ஏ.டி.எஸ். பிரேமஜயந்த. யார் இவர்? ஆம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த. ஈ.ஏ.ஐ.டி.டி.பெரேரா? இவர் மேல்மாகாணத்தின் முன்னாள் முதல்வர் எனக் கூறப்பட்டுள்ளது. இவர் யார்? இசுறு தேவப்பிரிய பெரேரா. இன்னும் உள்ளார்கள். எஸ்.ஏ,ஜகத் குமார. 10 இலட்சம் ரூபாயை ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக பெற்றுக் கொண்டுள்ளார். கே.பி.எஸ். குமார சிறி, 9 இலட்சத்து 53, 430 ரூபாயை 2022 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். ஜயலத் ஜயவர்த்தன 10 இலட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளார். நாமல் குணவர்த்தன 10 இலட்சம் ரூபாய், தர்ததாஸ பண்டா 10 இலட்சம் ரூபாய், விதுர விக்ரமநாயக்க 15 இலட்சம் ரூபாய், விமலவீர திஸாநாயக்க 30 இலட்சம் ரூபாய், லக்கி ஜயவர்த்தன 16.2 இலட்சம் ரூபாய், சந்திரசேகரன் 14 இலட்சம் ரூபாய், 2014 ஆம் ஆண்டு ஜோன் அமரதுங்க 40 இலட்சம் ரூபாய், ஜோசப் மைக்கல் பெரேரா 27 இலட்சம் ரூபாய், டி.பி. ஏக்கநாயக்க 48 இலட்சம் ரூபாய் டபிள்யு.எம்.எஸ்.பொன்சேகா 55 இலட்சம் ரூபாய், 2022 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஸவின் சட்ட ஆலோசகரான ஜயந்த வீரசிங்க 90 இலட்சம் ரூபாய், எலிக் அலுவிகார 22 இலட்சம் ரூபாய், ரஞ்சித் அலுவிகார 8.6 இலட்சம் ரூபாய். இந்த அலுவிகார பரம்பரையே ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தின் பணத்தில்தான் மருந்து வாங்கியுள்ளார்கள். இன்னும் உள்ளது. ராஜித சேனாரத்ன 100 இலட்சம் ரூபாய், கெஹலிய ரம்புக்வல்ல 110 இலட்சம் ரூபாய்… எம்.கே.டி.எஸ். குணவர்த்தன 112 இலட்சம் ரூபாய், ரஞ்சித் சொய்சா 188 இலட்சம் ரூபாய், டி.எம்.ஜயரத்ன 300 இலட்சம் ரூபாய்… இவை எல்லாம் ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தின் பணமாகும். எமது கிராமங்களில் வாழும் மக்கள், இதய நோய் சிகிச்சைக்கோ அல்லது கிட்னி பாதிப்புக்கான சிகிச்சைக்கோ ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தை நாடினால், எவ்வளவு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும் என்பதை இங்கிருக்கும் அனைவரும் அறிவார்கள். ஒரு இலட்சம், இரண்டு இலட்சத்தை இங்கிருந்து பெற்றுக் கொள்ளவே அத்தனை சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்படும். ஆனால், இவர்களுக்கு எல்லாம் எந்த பிரிவின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளது? பாவம் இவர்கள் எல்லாம் வறுமையானவர்கள்தானே. இப்படித்தான் இவர்கள் ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்தை பயன்படுத்தியுள்ளார்கள். மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்கரமசிங்க காலத்தில்தான் இந்த சம்பங்கள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பாக மக்களுக்கு தெரியாது. நாடாளுமன்றுக்கும் தெரியாது. திறைச்சேரியில் இருந்துதான் இந்த நிதி வழங்கப்படுகிறது. 2022 முதல் 2024 பிரதமர் அலுவலகத்தின் வைத்திய பிரிவின் செலவு எவ்வளவு தெரியுமா? 121 இலட்சம் ரூபாய்… அதாவது இந்த இரண்டு வருடங்களில் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவின் வைத்திய செலவுகள். பிரதமர் அலுவலகத்திலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு எவ்வளவு தூரம் இருந்துவிடப் போகிறது? ஏன் அங்கே சென்று சிகிச்சைப் பெற முடியாதா? தனியார் வைத்தியசாலைகள் கூட அருகில் உள்ளபோது, 121 இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இவ்வாறான சம்பவங்களை நிறுத்ததான், மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள்” என தெரிவித்தார். https://athavannews.com/2024/1412727- முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்கள் வெளியீடு!
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்கள் வெளியீடு! முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து அரசாங்கம் 1,200 மில்லியன் ரூபா பணத்தை சேமிக்க எதிர்பார்ப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இந்த தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், இந்த நடவடிக்கையை எதிர்ப்பவர்களை விமர்சித்தார். அவர்கள் முதன்மையாக பொது நிதியை தனிப்பட்ட இலாபத்திற்காக பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார். நிதிப் பொறுப்பைப் பேணுவதன் மூலம் செயல்திறனை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து மீளாய்வு செய்யப்படும். செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விவரங்களில் இருந்து முப்படையினர் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந் நடவடிக்கையை நியாயப்படுத்திய அமைச்சர், 2024 ஆம் ஆண்டின் கடந்த 11 மாதங்களில், டிசம்பர் 15 ஆம் திகதி வரையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காகச் செய்யப்பட்ட செலவினங்களை வெளிப்படுத்தினார். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு செலவீனங்கள்: மஹிந்த ராஜபக்ஷ • முப்படை: ரூ. 328 மில்லியன் • பொலிஸ்: ரூ. 327 மில்லியன் • ஜனாதிபதி செயலகம்: ரூ. 55 மில்லியன் • மொத்தம்: ரூ. 710 மில்லியன் மைத்திரிபால சிறிசேன • முப்படை: ரூ. 06 மில்லியன் • பொலிஸ்: ரூ. 185 மில்லியன் • ஜனாதிபதி செயலகம்: ரூ. 16 மில்லியன் • மொத்தம்: ரூ. 207 மில்லியன் கோட்டபாய ராஜபக்ஷ • முப்படை: ரூ. 258 மில்லியன் • பொலிஸ்: ரூ. 39 மில்லியன் • ஜனாதிபதி செயலகம்: ரூ. 10 மில்லியன் • மொத்தம்: ரூ. 307 மில்லியன் ரணில் விக்ரமசிங்க • முப்படை: ரூ. 19 மில்லியன் • பொலிஸ்: ரூ. 60 மில்லியன் • ஜனாதிபதி செயலகம்: ரூ. 03 மில்லியன் • மொத்தம்: ரூ. 82 மில்லியன் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க • முப்படை: செலவுகள் இல்லை • பொலிஸ்: ரூ. 99 மில்லியன் • ஜனாதிபதி செயலகம்: ரூ. 12 மில்லியன் • மொத்தம்: ரூ. 110 மில்லியன் ஹேமா பிரேமதாச (முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி) • முப்படை: செலவுகள் இல்லை • பொலிஸ்: ரூ. 30 மில்லியன் • ஜனாதிபதி செயலகம்: ரூ. 03 மில்லியன் • மொத்தம்: ரூ. 32 மில்லியன் கடந்த 11 மாதங்களில் முன்னாள் குடியரசுத் தலைவர்களின் பாதுகாப்புக்கான ஒட்டுமொத்தச் செலவு ரூ. 1,448 மில்லியன் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் கூறினார். https://athavannews.com/2024/1412663- பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
கோவிலுக்குப் போகும் போது... வேட்டியை அழகாக கட்டிக் கொண்டு போக வேண்டும். தவறணைக்கு போகும் போது... வேட்டியால், றோட்டு... கூட்டிக் கொண்டு போக வேணும். 😂 முன்னாள் பா.உ. சுமந்திரன்... சரியாய்த்தான் செய்திருக்கிறார். 🤣- காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
சில யூ ரியூப் காரர் கடைகளில் போய் சாப்பிட்டு அதனைப் பற்றி காணொளி தயாரிப்பார்கள். அப்படி அவர்கள் சாப்பிடுவதை கண் கொண்டு பார்க்க முடியாது. நாகரீகமாக சாப்பிட வேண்டும் என்ற பண்பு அறவே தெரியாது, அவர்கள் பிசைந்து சாப்பிடுவதையும்... மீசை, தாடியில் சாப்பாடு "அப்பி" இருப்பதையும் பார்க்க எங்களுக்கும் வயித்தை குமட்டிக் கொண்டு வரும். இதனைப் பார்க்கும் இளம் தலைமுறையும்.... இதுகளை பார்த்து பழக்க வழக்கம் இல்லாமல் திரியப் போகுதுகள். யாழ்ப்பாண எஞ்சினியர்மார் கண்டுபிடித்த "காவோலை ரெக்னிக்குக்கு" நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக, இங்கு பேசிக் கொள்கின்றார்கள். 😂- காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
என்ன இப்படி சொல்லிப் போட்டீங்கள். இலங்கையில்... இதன் மூலம், மாதம் 40 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறும் தமிழ் "யூ ரியூப்" நடத்துபவர்களும் இருக்கின்றார்கள். தமிழ் நாட்டில்... ஒரு கிராமிய சமையல் யூ ரியூப் நடத்துபவர்கள் இந்திய ரூபாயில் 80 லட்ச ரூபாய் வரை ஒரு காணொளிக்கு, வருமானம் பெறுவதாக சொன்னார்கள். அவர்கள் கிழமைக்கு ஒரு காணொளியை வெளியிடுவார்கள். வயல் வரப்பில் இருந்து சமைத்து ஒரு கிழமைக்கு 80 லட்ச ரூபாய் பெறுவது எவ்வளவு பெரிய வருமானம்.- காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
யாழ்ப்பாணத்தில்... குடிசை கைத்தொழில் மாதிரி, You Tube நடாத்தும் அன்பர்களே.... இந்த... "காவோலைகளுக்கு மேல் காப்பற் வீதியை" போட்ட... எஞ்சினியரையும், ஓவசியரையும் ஒருக்கால் பேட்டி எடுத்து போடுங்கோப்பா... 😀 உங்களுக்கு புண்ணியமாக போகும். அவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள் என்று எங்களுக்கும் கேட்க ஆசையாக உள்ளது. 😂 நீங்கள் அந்த "யூ ரியூப்" காணொளியை போட்டால்... நான் உங்களுக்கு... பெல் பட்டனை அமத்தி, சப்ஸ்கிரைப் பண்ணி, "லைக்".. பண்ணி விடுவன். 🤣- கருத்து படங்கள்
- ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
- மக்களவையில் இன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா‘ தாக்கல்!
மக்களவையில் இன்று ‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா‘ தாக்கல்! ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் ஒரே நாடு ஒரே தேர்தல்‘ குறித்த மசோதாவுக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. குறித்த மசோதாவானது திங்ககிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என கடந்த வாரம் வெளியான அவை அலுவல் பட்டியலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அலுவல் பட்டியல் திருத்தி அமைக்கப்பட்ட போது மசோதா இடம்பெறவில்லை. இந்நிலையிலேயே இன்று நண்பகல் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு பரிந்துரைத்தபடி இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412564- ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு விஜயம்! இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) காலை பீகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு சென்றுள்ளார். பீகாரைச் சென்றடைந்த ஜனாதிபதியை, கயா விமான நிலையத்தில் வைத்து மூத்த அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அத்துடன், புத்த கயாவின் மகாபோதி ஆலய வளாகத்திற்குள் சென்ற ஜனாதிபதியை அநுரவை பௌத்த பிக்குகள் அன்புடன் வரவேற்றனர். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் விளங்கும் மகாபோதி கோயில், புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் இடத்தைக் குறிக்கும் வகையில், புத்த கயாவில் உள்ள ஒரு பழங்கால புத்த கோவில் இதுவாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே வலுவான பங்காளித்துவத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது என்று திங்கட்கிழமை விசேட மாநாட்டில் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். அநுரகுமார பதவியேற்றதன் பின்னர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் பன்முக உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அவர் வலியுறுத்தினார். இந்த விஜயத்தின் நோக்கம் இரு நாடுகளிடையிலான வலுவான பங்காளித்துவத்தை விரிவுபடுத்துவதையும் அதன் எல்லைகளை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தியதாக வெளிவிவகார செயலாளர் மேலும் தெரிவித்தார். முன்னதாக திங்கட்கிழமை, இலங்கைத் தூதுக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இது குறித்து எக்ஸில் பதிவிட்ட ஜனாதிபதி அநுரகுமார, ஜனாதிபதியாக எனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தது ஒரு பாக்கியம், பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளித்ததற்காகவும் கடன் மறுசீரமைப்பிற்கு உதவுவதற்காகவும். வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, BRICS, UNCLCS மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தலை நிறுத்துவது குறித்து இன்றைய சந்திப்பின் போது விவாதித்தோம். நான் பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன், மேலும் இலங்கையின் பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று இந்தியாவுக்கு உறுதியளித்தேன் என்று குறிப்பிட்டார். டிசம்பர் 15 முதல் 17 வரை மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். செப்டம்பரில் பதவியேற்ற பின்னர் அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும். https://athavannews.com/2024/1412636- பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
மானிப்பாயில்... "பார்" திறந்து வைத்த சுமந்திரனுக்கு, இதை சொல்ல, எந்த யோக்கியதையும் கிடையாது. முதலில்... உங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து கொள்ளவும். மக்களிடம் வாங்கிய அடி காணாது என்று, ஊருக்கு உபதேசம் பண்ண வந்திட்டார்கள்.- ரஷ்ய கதிரியக்க பாதுகாப்புப் படைத் தலைவர் ஒருவர் கொலை
மொஸ்கோ வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் மரணம்! மொஸ்கோவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மொஸ்கோவில் நடந்த வெடிப்பின் விளைவாக, ரஷ்ய ஆயுதப்படைகளின் கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்பு படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்டதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளதாக ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது. விசாரணையின்படி, செவ்வாயன்று (டிசம்பர் 17) காலை, ஒரு மெஸ்கோவின் ரியாசான்ஸ்கி ப்ராஸ்பெக்டில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, வீட்டின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் புலனாய்வு பணிகளை மேற்கொண்டனர், மருத்துவ மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நடவடிக்கைக்கு உதவ அழைக்கப்பட்டனர். குற்றவாளியை தேடும் பணி நடந்து வருகிறது என்று ரஷ்ய புலனாய்வு குழுவின் செய்தி சேவை தெரிவித்துள்ளது. இதேவேளை, ரஷ்ய பாதுகாப்புப் படைகள் தென்கிழக்கு மொஸ்கோவில் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்ட கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கமராக்களில் இருந்து வீடியோவை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன என்று தலைநகரின் அவசர சேவைகளின் பிரதிநிதி கூறியுள்ளார். https://athavannews.com/2024/1412628- சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்..!
முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... வழக்கமாக அணியும்.. கோட்டு, சூட்டு, கழுத்துப் பட்டி (Tie) எதுவும் இல்லாமல்... வெறும் சேர்ட்டுடன் போன படியால்.... சாணக்கியனின் வாகன சாரதியாக, "பைல்" தூக்கிக் கொண்டு, பின்னால் போயிருப்பார். படத்தைப் பார்க்க... "மிக்சர்" சாப்பிடப் போன ஆள் மாதிரித்தான் தெரியுது. 😂 🤣- சர்ச்சைக்குரிய புதிய ஆடைக் கட்டுப்பாடு சட்டத்தை இடைநிறுத்திய ஈரான்!
சர்ச்சைக்குரிய புதிய ஆடைக் கட்டுப்பாடு சட்டத்தை இடைநிறுத்திய ஈரான்! எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நடைமுறைக்கு வரவிருந்த மிகவும் சர்ச்சைக்குரிய “ஹிஜாப் மற்றும் கற்பு சட்டம்” அமலாக்கத்தை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) இடைநிறுத்தியுள்ளது. சட்டத்திற்கு எதிராக உள்நாட்டு, சர்வதேச கண்டனங்கள் மற்றும் விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த திடீர் இடைநிறுத்தம் வந்துள்ளது. சட்டம் தெளிவற்ற நிலையில் உள்ளதாக கூறியுள்ள ஈரானிய ஜனாதிபதி சூத் பெசெஸ்கியன் (Masoud Pezeshkian), அதை நடைமுறைப்படுத்துவதற்கு சீர்திருத்தம் அவசியம் என்றும் விவரித்தார். இதன் விளைவாக குறித்த சட்டமூலம் மறுபரிசீலனைக்கு உட்படவுள்ளது. பொது வெளியில் தலைமுடி, முன்கைகள் அல்லது கீழ் கால்களை முழுமையாக மறைக்கத் தவறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அபராதம், 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை குறித்த சட்டமானது முன்மொழிந்தது. அதேநேரம், இது மனித உரிமை ஆர்வலர்களால் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. பல தசாப்தங்களாக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆட்சியாளர்களால் தேசிய பாதுகாப்பு முன்னுரிமையாகக் கருதப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு விதிக்கப்பட்ட கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் முன்பு எதிர்ப்புகளைத் தூண்டின. புதிய சட்டத்தின் கீழ் அந்த கட்டுப்பாடுகளானது மேலும் இறுக்கம்மாக்கப்படுவதுடன், அதனை மீறும் நபர்களுக்கு எதிராக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராத விதிப்பினையும் கட்டாயப்படுத்தும். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ஹிஜாப் விவகாரத்தில் ஈரானியப் பெண்களை நடத்துவதை அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான பெஜேஷ்கியன் வெளிப்படையாக விமர்சித்தார். ஹிஜாப் விவகாரத்தில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்திருந்தார். 2022 ஆம் ஆண்டிலிருந்து ஈரானில் ஹிஜாபைச் சுற்றியுள்ள பதட்டங்கள் அதிகமாகவே உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், பல இளம் ஈரானியப் பெண்கள், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில், பொது இடங்களில் தங்கள் ஹிஜாப்களை மீறி அகற்றியுள்ளனர். ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமான கடும்போக்கு பிரிவுகளின் அழுத்தம் இருந்தபோதிலும், கடந்த வாரம், 300 க்கும் மேற்பட்ட ஈரானிய உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் புதிய ஹிஜாப் சட்டத்தை “சட்டவிரோதமானது மற்றும் செயல்படுத்த முடியாதது” என்று பகிரங்கமாக கண்டித்தனர். மேலும், ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளை மதிக்குமாறும் பெசேஷ்கியனை வலியுறுத்தியுள்ளனர். https://athavannews.com/2024/1412619- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
- வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம் ; பாதிக்கப்பட்டவரின் முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார்
- புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
கல்வித் தகைமைகள் பிரத்தியேகமாக தேவை இல்லை. சபையை கொண்டு நடத்தக் கூடிய ஆற்றலும், ஆளுமையும், மிதமான பொது அறிவும் போதும் என நினைக்கின்றேன். முன்னைய சபாநாயகர் இடைச் செருகலாக போலியான கலாநிதி பட்டம் போட்டதுதான் பிரச்சினையாகி விட்டது.- இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இலங்கை மண்ணை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை - மோடியிடம் ஜனாதிபதி அநுர உறுதி
இவர்களின் ஒப்பந்தங்கள் எல்லாம்… தமது சுய நலத்துக்காகவும், காலத்தை கடத்துவதற்கும் போடப் படுகின்றவை.- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
- புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
நீங்கள் சொல்லாவிட்டாலும்…. எங்களுக்கு யார், யார் எந்த குரூப் என்று தெரியும். 🤣 - சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.