Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைதியின்மை!
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைதியின்மை! கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கூட்டத்தில் அனுமதியின்றி நுழைந்த நபரொருவருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் உண்டான வாக்குவதாம் காரணமாக அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் சந்திரசேகரன் தலையீடு செய்து கூட்டத்தை அமைதி நிலைக்கு கொண்டு வந்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், வடமாகாண ஆளுநர் வேதநாயகன் இணைத் தலைமையில் இன்று காலை ஆரம்பமான குறித்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், இராமநாதன் அர்ச்சுனா, ரஜீவன், இளங்குமரன், பவானந்தராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். https://athavannews.com/2024/1414177- தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாணவனுக்கு வெள்ளி பதக்கம்
தேசிய மட்ட குத்துச்சண்டை போட்டியில் வவுனியா மாணவனுக்கு வெள்ளி பதக்கம். தேசிய மட்ட இளையோருக்கான குத்துச்சண்டை போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் T.தரனிதரன் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளான். இளையோருக்கான இவ் குத்துச்சண்டை போட்டியானது , 18,19 மற்றும் 20 ஆம் திகதிகளில் கண்டியில் நடைபெற்றது. இதன்போது 69 – 71 kg எடைப்பிரிவில் போட்டியிட்ட இம் மாணவன் இறுதிப்போட்டியில் கண்டி சென் சில்வஸ்ரார்ஸ் கல்லூரி மாணவனை எதிர்கொண்டு இரண்டாம் இடத்தினைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டான். இப் போட்டியில் கண்டி வித்தியார்த்த கல்லூரி மாணவனுடன் தெரிவு போட்டியில் வெற்றியீட்டி அரையிறுதிபோட்டிக்கு தெரிவாகிய தரனிதரன் அரை இறுதிப்போட்டியில் ,கொழும்பு ரோயல் கல்லூரி மாணவனுடன் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்தார். இம்மாணவனுக்கான முழுமையான பயிற்சியினையும் வழிகாட்டலினையும் குத்துச்சண்டையின் வடமாகாண தலைமை பயிற்றுவிப்பாளர் எம்.நிக்சன் வழங்கியிருந்தார். இவரது முழுமையான வழிகாட்டலில் வெற்றி பெற்ற இம் மாணவன் வவுனியா மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். https://athavannews.com/2024/1414114- அரிசி இறக்குமதிக்கான தடை இன்று முதல் நீக்கம்!
அரிசி இறக்குமதிக்கான தடை இன்று முதல் நீக்கம்! இடைநிறுத்தப்பட்டிருந்த அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையால் நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் தனியார் துறை வர்த்தகர்களுக்கு நேரடியாக அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அக்காலப் பகுதியில் மொத்தமாக 67,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவையில் அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதன்படி, இன்று முதல் அரிசி இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அரச வர்த்தக பல்வேறு சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 780 மெற்றிக் தொன் அரிசியின் முதலாவது தொகுதி நேற்று (25) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1414145- 2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை விஞ்சியது!
2024 இல் சுற்றுலா பயணிகளின் வருகை 2 மில்லியனை விஞ்சியது! 2024 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று (26) இரண்டு மில்லியனைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த தம்பதியரே அந்த இலக்கை அடைந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. டிசம்பர் முதல் பாதியில் மாத்திரம் மொத்தம் 97,115 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 6,474 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். https://athavannews.com/2024/1414160- கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
கஜகஸ்தான் விமான விபத்து; 38 பேர் மரணம், 29 பேர் உயிர் பிழைப்பு! 67 பேருடன் பயணித்த அசர்பைஜான் விமானம் ஒன்று புதன்கிழமை (25) கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த குறைந்தது 38 பேர் உயிரிழந்ததாக கசாக் அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். ஒரு விரிவான மீட்பு நடவடிக்கையில், இரண்டு குழந்தைகள் உட்பட 29 உயிர் பிழைத்த நிலையில் மீட்க்கப்பட்டதாகவும் கஜகஸ்தானின் துணைப் பிரதமர் கனாட் போசும்பாயேவ் (Kanat Bozumbayev) தெரிவித்துள்ளார். அவர்களில் 11 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அசர்பைஜான் ஏர்லைன்ஸின் J2-8243 என் விமானம், அசர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்ய பிராந்தியமான செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு பயணம் செய்து கொண்டிருந்தது. எனினும், அது அக்டாவிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் (1.8 மைல்) தொலைவில் அவசரமாக தரையிறங்க முயற்சித்த போது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் உயிர் பிழைத்த அனைவரும் அவசர மீட்பு பணிகள் மூலமாக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று கசாக் அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர். உயிர் பிழைத்தவர்களில் எவரும் கசாக் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று துணைப் பிரதமர் கூறியுள்ளார். இந்த நிலையில், ஒரு தேடல் குழு விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்துள்ளதாக அசர்பைஜான் அரச செய்தி நிறுவனம் AZERTAC தெரிவித்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும் பயணிகளின் குடும்பங்களுக்கு உதவவும் கஜகஸ்தான் அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை அமைத்துள்ளது. விசாரணையில் அசர்பைஜானுடன் அரசாங்கம் ஒத்துழைக்கும் என்றும் அது கூறியது. விபத்து குறித்து வெளியோன வீடியோவில், விமானம் விபத்துக்கு முன் விமானநிலையத்தை தவறாக சுற்றி வந்தது. தரையில் மோதியவுடன், விமானம் தீப்பிடித்து எரிந்தது, சிறிது நேரத்தில் இடிபாடுகளில் இருந்து இரத்தம் தோய்ந்த பயணிகள் வெளியே வந்ததை காட்டுகின்றது. https://athavannews.com/2024/1414075- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
ஏற்கனவே பலரை மிரட்டி…. பாலியல் வன்கொடுமை செய்த திருட்டுப் பூனை தான் சிக்கியுள்ளது. மறியலில் இருந்து திருந்தாதவனுக்கு…. சவூதி அரேபியா தண்டனைதான் சரி வரும். பாக்கு வெட்டிக்கு, வேலை கொடுங்க….- 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.- இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரவில்லை: தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் - ஆளுநர் தெரிவிப்பு
தலைப்பையும்…. முதல் பந்தியையும் வாசித்து விட்டு கருத்து எழுதினால் இப்பிடியான பிழை வரத்தான் பார்க்கும். 😂 🤣 தவறுக்கு வருந்துகின்றேன் நியாயம் & சாத்தான். 🙂 உங்களுக்குத்தான்… பிரச்சினை சரியாக விளங்கியிருக்கு. 😁 😂 🤣- முள்ளிவாய்க்கால் செல்வதை தவிர்க்கும் மெல்கம் ரஞ்சித்
மெல்கம் ரஞ்சித்தின் செயல்பாடுகளுக்கும் இனவாதிகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இவர் ஒரு வெள்ளை உடை அணிந்த, மொட்டை அடிக்காத பிக்கு. 🤣 சிலகாலத்திற்கு முன்… தமிழர்களுக்கு தனியாக ஒரு கர்தினால் ஆண்டகை வேண்டும் என்று ஒரு கோரிக்கை வடக்கு, கிழக்கில் இருந்து முன்வைக்கப் பட்டதாக வாசித்த நினைவு.- இரசித்த.... புகைப்படங்கள்.
- கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
புலவர்.... தேர்தலுக்கு முன்பு இருந்து இன்றுவரை... கடந்த ஒரு வருடமாக, சுமந்திரனின் அல்லக்கைகள்... தமிழர்களுக்கு வேறு ஒரு பிரச்சினையும் இல்லை என்ற மாதிரி இதை வைத்தே அரசியல் செய்யலாம் என்று முட்டாள் தனமாக செயல் படுகின்றார்கள். இந்த அல்லக்கைகள் தான் சுமந்திரனை பப்பாவில் ஏற்றி விட்டு, தோல்வியை கொடுத்து இருக்கிறார்கள். அடுத்த தேர்தலிலும்... சுமந்திரனுக்கு ஆப்பு அடிக்கிறது என்றே முடிவு எடுத்து விட்டார்கள் போலுள்ளது. 😂- "உண்டியலில் விழுந்த ஐபோன் சாமிக்கே சொந்தம்" - திருப்போரூர் முருகன் கோவிலில் நடந்தது என்ன?
இந்தியரைப் போல் மோசமான சட்ட திட்டங்களை கதைக்கும் மனிதரை உலகத்தில் எங்கும் காண முடியாது. ஒருவனின்... ஐ - போன் உண்டியலில் தவறி விழுந்தால் அதை அவனுடையதா என சோதித்துப் பார்த்துவிட்டு, அவனிடம் திருப்பி கொடுப்பதுதானே மனிதாபிமானம். அதில் அவன்.. எத்தனை தரவுகளை சேமித்து வைத்தானோ... அவற்றை மீட்டு எடுக்க எவ்வளவு காலம் எடுக்குமோ. சில முக்கிய படங்கள் அவனுக்கு கிடைக்காமலே போகலாம். இப்படிச் செய்த கோவில் நிர்வாகம் கண்டனத்துக்குரியது.- தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான்
குரங்குகளுக்கு தனித்தீவு. புதிய வேலைத் திட்டம் ஆரம்பம்.- "உண்டியலில் விழுந்த ஐபோன் சாமிக்கே சொந்தம்" - திருப்போரூர் முருகன் கோவிலில் நடந்தது என்ன?
பேங்க் மேனேஜர் : கிரிடிட் கார்டு பில்லை, எப்ப சார் கட்டுவீங்க...? வாடிக்கையாளர்: கட்ட முடியாது சார். பில்லை முருகன் கோவில் உண்டியல போட்டுட்டேன்... இனிமே நீங்க, முருகன் கிட்ட தான் வசூல் பண்ணிக்கணும்....😂😂😂- "உண்டியலில் விழுந்த ஐபோன் சாமிக்கே சொந்தம்" - திருப்போரூர் முருகன் கோவிலில் நடந்தது என்ன?
திருப்போரூர் கோவில் சம்பவம்.- இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரவில்லை: தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் - ஆளுநர் தெரிவிப்பு
என்ன... மெல்ல, சுருதி மாறுது. மகிந்த, மைத்திரி, கோத்தா, ரணில்... பரவாயில்லைப் போல இருக்கே. சிங்கள அரச அதிகாரிகளை விட... தமிழ் அரச அதிகாரிகள் மோசமானவர்கள் என்ற ஒரு கருத்து பொதுவாக உள்ளதை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது.- மகிந்தவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் - நாமல்
மகிந்தவின் பாதுகாப்பை ஏன் ஒரு தலைப்பட்சமாக புத்தரிடம் மட்டும் கொடுக்கின்றீர்கள். நீங்கள் தானே... அடிக்கடி திருப்பதிக்கும், ஸ்ரீரங்கத்திற்கும் சென்று வழிபடுகின்றனீர்கள். புத்தருடன்... பெருமாளையும் (யாழ்.கள @பெருமாள் அல்ல) துணைக்கு சேர்க்கிறது. 😂 பிற் குறிப்பு: இவர்கள் தான் மகிந்தவுக்கு சத்த வெடி வைத்து விட்டு... அனுதாபம் தேடப் போகிறார்கள் போலுள்ளது. கோத்தாவுக்கும்... சட்டையில் இரத்தம் பட, சத்த வெடி வைத்த ஆட்கள்தானே. 😂- போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடத் தயாராகி வரும் சுனிதா வில்லியம்ஸ்.- ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம்!
ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம்! மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று (25.12.2024) மாலை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன் சிறிநாத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1414044- கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
கஜகஸ்தான் விமான விபத்து; 28 பேர் உயிர் பிழைத்துள்ளதாக தகவல்! அசர்பைஜானில் இருந்து தெற்கு ரஷ்யாவிற்கு 67 பேருடன் சென்ற பயணிகள் விமானம் புதன்கிழமை (25) கசாக் நகரமான அக்டாவ் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், விபத்தில், இரு குழந்தைகள் உட்பட குறைந்தது 28 பேர் உயிர் பிழைத்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். அசர்பைஜான் ஏர்லைன்ஸ் ஜே2-8243 என்ற விமானம், அசர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்ய பிராந்தியமான செச்சினியாவில் உள்ள க்ரோஸ்னிக்கு பறந்து கொண்டிருந்தது. இதன்போது, அக்டோவிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் (1.8 மைல்) தொலைவில் அவசரமாக தரையிறக்க முற்பட்ட வேளையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தினை அடுத்து ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மீட்புப் பிரிவினர் ஈடுபட்டனர். தற்போது, பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்ட தகவல்களின்படி, உயிர் பிழைத்தவர்கள் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்கள் இருந்ததாக கஜகஸ்தானின் போக்குவரத்து அமைச்சின் ஆரம்பக்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயணிகளில் 37 பேர் அசர்பைஜானைச் சேர்ந்தவர்கள், ஆறு பேர் கசகஸ்தானைச் சேர்ந்தவர்கள், 3 பேர் கிர்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மற்றும் 16 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1414018- கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
நான் பார்த்த அளவில்.... சுமந்திரன் குரூப்தான், இங்கு நின்று கம்பு சுத்திக் கொண்டு நிற்கிறார்கள் போலுள்ளது. 😂 என்ன... இருந்தாலும், அனுரா அரசில்... ஒரு அமைச்சராக வருவேன் என நம்பி இருந்த சுமந்திரன் தோற்றுப் போன வேதனையை மறக்க, கனநாள் எடுக்கும்தானே.... 🤣 அது மட்டும், ஸ்ரீதரனுக்கு... "தடி, ஒட்டிக்" கொண்டு இருக்க வேண்டியதுதான்.- கருத்து படங்கள்
- கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
👇 👆 மேலே தமிழில் உள்ள செய்தியில்... ஸ்ரீதரன்... //மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.// என்று... வெளிப்படையாக அறிவித்த பின்பும், லூசுத் தனமாக எழுதிக் கொண்டு இருக்காமல்... அவர் சாராய அனுமதி பெற்றதை நிரூபித்து, அவரை அரசியலில் இருந்து விலக வைக்கின்ற அலுவலை பார்க்கவும். இனி.... உங்களுக்கு தெரிந்த ஆதாரங்களை, திரட்டிக் கொண்டு களத்தில் இறங்கவும். 👍 பைத்தியக்காரத்தனமாக.... சும்மா ஊளையிடுவதில், எந்த அர்த்தமும் இல்லை. மேலே எல்லாம் தமிழில்தான் எழுதப் பட்டுள்ளது. வாசித்து... விளங்கிக் கொள்வதில், எந்தப் பிரச்சினையும் இராது என நினைக்கின்றேன். திரும்பத் திரும்ப... ஒரு விடயத்தை, உங்களுக்கு விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை. போய் ஆதாரங்களை திரட்டவும். அதுதான்... இப்போ நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. இதற்குமேல்.... உங்களுக்கு, விளக்கமாக.. சொல்ல எதுவும் இல்லை. 🙂- நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு
நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்: 60 பேர் உயிரிழப்பு. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பங்களினால் 60 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 44 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1413909 - கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அமைதியின்மை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.