Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வக்கீல்... சேர்டிபிக்கட் எடுக்க, பேராசிரியர் பீரிஸை வைத்து குதிரை ஓடிய நாமல் ராஜபக்சவும், பத்தாம் வகுப்பு "பாஸ்" பண்ணாத, பசில் ராஜபக்ச... நிதி அமைச்சராகவும், அமெரிக்காவில் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்த, கோத்தா ராஜபக்ச ஜனாதிபதியாகவும்.... எந்த வித பிரச்சினையும் இல்லாமல்... நாட்டை ஆண்டு விட்டு போயிருக்கின்றார்கள். 😂 அனுரவுக்குத்தான்... ஆரம்பித்த இரண்டு மாதத்திலேயே... சேர்டிபிக்கட் பிரச்சினை வந்திட்டுது. அனுபவம் காணாது போலுள்ளது. 🤣
  2. எல்லா இடமும் கை ஏந்தி, கடைசியில் சுயத்தை இழக்க வேண்டி வந்துவிட்டது. 1948´ல் சுதந்திரம் கிடைத்த கையுடன்... தமிழருடன் ஒற்றுமையாக இருந்திருந்தால், ஸ்ரீலங்கா... இன்று சிங்கப்பூர் மாதிரி இருந்திருக்கும். இனவாதம் விடவில்லையே... போர் என்று தொடங்கியதால், முழு நாட்டையும் சீனன், இந்தியன், அமெரிக்கன் என்று பங்கு போட காத்து இருக்கின்றார்கள். பிக்குகளுக்கும், இனவாதிகளுக்கும் சமர்ப்பணம்.
  3. நீங்கள்... அவரின், சேர்டிபிக்கட் பார்த்தீங்களா? 😂
  4. அடுத்த மாதம்... அனுர, சீனா போகிறார். அங்கு என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்குது என்று பார்த்து விட்டு, ஹபரணை சந்தியில்... காந்தி சிலை வைக்கிறதா, இல்லையா... என்ற முடிவுக்கு வாங்கோ அண்ணை. 😂
  5. காலி சிறையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்! காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் (12) காலி மாவட்ட செயலகத்தில் தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது. கையடக்கத் தொலைபேசிகள் கடத்தலுக்கு சிறைச்சாலை அமைந்திருந்த இடம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக காலி சிறைச்சாலையின் பிரதி பிரதான சிறைச்சாலை அதிகாரி தனுஷ்க புஸ்பகுமார தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் பேசிய காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சேரம், சிறைச்சாலை மதில் சுவருக்கு மேல் பாதுகாப்பு வலை மற்றும் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். https://athavannews.com/2024/1412465
  6. எலிக்காய்ச்சலால் மற்றொருவர் உயிரழப்பு. யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு உள்ளான மற்றுமொருவர் நேற்று (15) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐந்து நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருஷாந்தன் என்ற 23 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட அவர், பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் கடந்த காலங்களில் நெல் வேலைக்கு உதவியவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கரவெட்டி பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். https://athavannews.com/2024/1412438
  7. ஜனாதிபதி அநுரவுக்கு ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாய வரவேற்பு! மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, இன்று திங்கட்கிழமை புது டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பவனில் வரவேற்றனர். இங்கு ஜனாதிபதி அநுரகுமார, ஒன்றிணைந்த இந்திய பாதுகாப்பு சேவையினரின் கௌரவிப்பு மரியாதையை பார்வையிட்டார். இதன்போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தத்தமது அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒருவரையொருவர் அறிமுகம் செய்து வைத்தனர். இலங்கை ஜனாதிபதி டிசம்பர் 15 முதல் டிசம்பர் 17 வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பரில் பதவியேற்ற பின்னர் அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, இலங்கை ஜனாதிபதியை டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் முருகன் வரவேற்றார். அவரது வருகையைத் தொடர்ந்து ஜனாதிபதி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். இந்திய-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலா மற்றும் முக்கிய துறைகளை முன்னேற்றுதல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாடு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. https://athavannews.com/2024/1412454
  8. இனி கனடாப் பக்கம் வர வேண்டாம்! சுமந்திரனிற்கு நடந்த கதி. முன்னொரு காலத்திலே.... சுத்துமாத்து சுமந்திரனும், சாணக்கியனும் கனடா போய்.... ஒட்டோவா பாராளுமன்றம் நடக்காத நாளில், அதற்கு முன், வெளியே நின்று படம் எடுத்துவிட்டு வந்து, கனடா எம்.பி. மாருடன் நம்ம நாட்டு பிரச்சினை பற்றி கதைத்ததாக "றீல்" விட்டதை நாம் அவ்வளவு எளிதில் மறக்கவில்லை. அதற்குப் பிறகு சுத்துமாத்து சுமந்திரன் கனடா பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. அந்தளவுக்கு மரியாதை கொடுத்து அனுப்பியிருந்தார்கள். சுத்துமாத்து செல்லும் இடம் எல்லாம்... வாங்கிக் கட்டிக் கொண்டு வருவது வழக்கமாகி விட்டது.
  9. எது தமிழ்த் தரப்பு? நிலாந்தன். என்பிபியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் வெளிவிவகார இணை அமைச்சரமாகிய அருண் ஹேமச்சந்திர வீரகேசரி யூரியூப் சனலுக்கு வழங்கிய நேர்காணலில்,ஓரிடத்தில் தமிழ்த் தரப்பு என்ற வார்த்தை தொடர்பாக கேள்வி எழுப்புகிறார். அவர் அங்கே என்ன கூற வருகிறார் என்றால், இப்பொழுது வடக்கு கிழக்கில் இருந்து ஏழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் உண்டு. வடக்கு கிழக்குக்கு வெளியேயும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. எனவே தமிழ்த் தரப்பு என்பது இப்பொழுது தமிழ் தேசியத் தரப்புமட்டும் அல்ல என்பதுதான். அரசாங்கத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் ஜேவிபியின் நீண்ட கால உறுப்பினராக இருந்தவர் அவர். மேலும் மூன்று இனங்களின் வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்துக்கு வந்தவர். அவர் கூற வருவது போல,இம்முறை தமிழ் தேசியத் தரப்பு மொத்தம் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களோடு காணப்படுகிறது. அதே சமயம் தமிழர் தாயக பகுதியில் இருந்து ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு உண்டு. எனவே தமிழ்த் தரப்பு என்று வரும் பொழுது தமிழ் தேசிய தரப்பு மட்டும் அல்ல. அரசாங்கத்தோடு நிற்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை.எனவே இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காண முற்படும்பொழுது வடக்குக் கிழக்கில் அரசாங்கத்திற்கு விழுந்த வாக்குகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதுதான். தமிழ் பிரதிநிதிகள் என்று பார்த்தால் இப்பொழுது அரசாங்கத்தில் மொத்தம் 28 பேர் உண்டு. அதில் வடக்கு கிழக்கில் மட்டும் ஏழு பேர் உண்டு. இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று வரும்போது அரசாங்கத்தோடு நிற்கும் ஏழு பேரின் நிலைப்பாட்டையும் எப்படிப் பார்ப்பது? இதில் அதிகம் விவாதத்துக்கு இடமில்லை. அவர்கள் ஏழு பேரும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள்தான். தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகள் அல்ல. அரசாங்கக் கொள்கையை அவர்கள் பிரதிபலிப்பார்கள். பேச்சுவார்த்தை மேசையில் அவர்கள் அரசாங்கத்தின் தரப்பாகத்தான் பங்குபற்றலாம். தமிழ்த் தேசியத் தரப்பாக அல்ல. ஆனால் தமிழ்த் தேசியத் தரப்பானது மொத்தம் பத்து உறுப்பினர்களாகச் சுருங்கி போய் இருப்பதனால், அருண் ஹேமச்சந்திர போன்றவர்கள் தமிழ்த் தரப்பு என்றால் தனிய தமிழ்த் தேசியத் தரப்பு மட்டும் அல்ல என்ற பொருள்பட கருத்துக் கூற முற்படுகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கம் பெற்ற வெற்றிகளை வைத்து அவ்வாறு கூறமுடிகிறது. ஆசனக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் தமிழ்த் தரப்பு நாடாளுமன்றத்தில் மிகவும் பலவீனமாகிவிட்டது. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துக் கூறக்கூடியவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்திருக்கிறது. இனப்பிரச்சினை அல்லாத ஏனைய பிரச்சினைகளும் தமிழ் மக்களுக்கு உண்டு என்று கூறி, இனப்பிரச்சினையை பத்தோடு பதினொன்றாக மாற்ற விரும்புகிறவர்களுக்கு அது வாய்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறது.தமிழ் மக்கள் ஒரு தேசமாக, பலமாக இல்லை. ஒரு திரட்சியாக இல்லை என்பதனை தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன. எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். வென்ற தலைவர்களும் தோல்வியுற்ற தலைவர்களும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். இந்தத் தோல்விகளின் பிதா சம்பந்தர்தான். சம்பந்தர் தொடக்கியதை சுமந்திரன் கச்சிதமாக முடித்து வைத்தார். முடிவில் தமிழ் ஐக்கியமும் சிதைந்து அவர்களுடைய சொந்தக் கட்சியும் சிதைந்து விட்டது. இப்பொழுதும் கட்சி நீதிமன்றத்தில் நிற்கின்றது. அதற்கு யார் தலைவர் என்பது தெளிவில்லை. நேற்று வவுனியாவில் நடந்த கட்சியின் மத்திய குழுக்கூட்டம் அதைக் காட்டுகின்றது. இதில் சுமந்திரன், சம்பந்தர் மட்டும் குற்றவாளிகள் இல்லை. மாவை முதற்கொண்டு கட்சியின் எல்லா மூத்த தலைவர்களுமே குற்றவாளிகள்தான். சுமந்திரனை பொருத்தமான விதங்களில் எதிர்த்து தன் தலைமைத்துவத்தை நிறுவத் தவறிய சிறீதரனும் குற்றவாளிதான். தமிழசுக் கட்சி மட்டுமல்ல, அக்கட்சியை எடுத்ததற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் குற்றவாளிதான். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியலானது ஒருவித எதிர்மறை அரசியலாகவே இருந்து வந்தது. ஏனைய கட்சிகளைக் குற்றம் காட்டுவதன் மூலம் தன்னைப் புனிதராகக் காட்டிய அக்கட்சியானது, தன்னைத் தமிழரசுக் கட்சியைத் தோற்கடிக்கும் ஒரு மாற்றுச் சக்தியாகக் கட்டி எழுப்பத் தவறிவிட்டது. தேசியவாத அரசியல் எனப்படுவது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதான் என்ற எளிமையான உண்மையை இரண்டு கட்சிகளுமே விளங்கி வைத்திருக்கவில்லை. தங்களைச் சுற்றி விசுவாசிகளைக் கட்டி எழுப்பிய அளவுக்கு தேசத்தைக் கட்டி எழுப்பத் தவறி விட்டார்கள். இரண்டு முக்கிய கட்சிகளுடையதும் தோல்விகளின் விளைவாகத்தான் இப்பொழுது தமிழ்த் தேசியத் தரப்பு மட்டும் நாடாளுமன்றத்தில் தனி ஒரு பலமான தமிழ்த் தரப்பாக இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இது பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தரப்பை பலவீனப்படுத்தும். தேசிய மக்கள் சக்தி இதுவரையிலும் இனப் பிரச்சினைக்கான தீர்வு எந்த அடிப்படையில் அமையும் என்பதனை அதற்குரிய அரசியல் அடர்த்திமிக்க வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி உரையாடும் பொழுது “சம உரிமை” என்ற வார்த்தையை அரசாங்கம் பயன்படுத்துகின்றது.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட வெளிவிவகார பிரதி அமைச்சரின் நேர்காணலிலும் அது கூறப்படுகிறது. சம உரிமை என்றால்,எல்லாரும் இலங்கையர்கள். ஒருவர் மற்றவருக்குச் சமம் என்பதா? அவ்வாறு நாட்டில் உள்ள எல்லா மதங்களும் சமமானவை என்று ஒரு நிலை தோன்ற வேண்டுமென்றால் இப்பொழுது அரசியலமைப்பில் தேரவாத பௌத்தத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரிமை அகற்றப்பட வேண்டும். அனுர அதைச் செய்ய மகா சங்கம் அனுமதிக்குமா? மேலும்,இனப்பிரச்சினை தொடர்பில் இங்கே சீனத் தலைவர் மாவோ சேதுங் கூறும் உதாரணம் ஒன்றைச் சுட்டிக் காட்டலாம். கடலில் பெரிய மீனும் சிறிய மீனும் வாழும் பொழுது, இரண்டுக்கும் சம உரிமை என்று சொன்னால், அது சிறிய மீனைப் பாதுகாக்காது. ஏனென்றால் பெரிய மீன் சிறிய மீனைச் சாப்பிட்டு விடும். ஆனால் சிறிய மீனால் பெரிய மீனைச் சாப்பிட முடியாது.எனவே பெரிய மீனால் வேட்டையாடப்படாத பாதுகாப்பு ஏற்பாடு சிறிய மீனுக்கு வேண்டும்.தமிழ் மக்கள் அதைத்தான் கேட்கிறார்கள். தமிழ் மக்களை இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக,தேசமாக ஏற்றுக்கொண்டு உருவாக்கப்படும் கூட்டாட்சியைத்தான் தமிழ் மக்கள் கேட்கின்றார்கள். இலங்கைத் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள், தேசங்கள் உண்டு என்ற பல்வகைமையை, ஒன்றுக்கு மேற்பட்ட மதங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் உண்டு என்ற பல்வகைமையை ஏற்றுக்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களுக்கு இடையில் இணக்கமான ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அவ்வாறான ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டுக்குரிய முன்மொழிவைத்தான் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்தது. இப்பொழுது அந்த முன் மொழியின் அடிப்படையில் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டு தமிழ்த் தேசியத் தரப்பாக பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது. தமிழ் மக்கள் நாடாளுமன்றத்தில் ஒரு தரப்பாகப் பலவீனமடைந்திருக்கும் ஒரு சூழலில், கஜேந்திரகுமாரின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்திருந்தால், இப்பொழுது நாடாளுமன்றத்தில் இப்படி ஒரு நிலை வந்திருக்காது. தமிழ் மக்களைத் தோற்கடித்துத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இன்னும் எத்தனை நந்திக் கடல்களை தமிழ் மக்கள் கடக்க வேண்டியிருக்கும்? https://athavannews.com/2024/1412357
  10. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்... சுமந்திரன், இந்த வருட ஆரம்பத்தில்.... தமிழரசு கட்சியின் தலைவர் போட்டியில், தனது சொந்தக் கட்சிக்காரர்களாலேயே தோற்கடிக்கப்பட்டவர். சென்ற மாதம் நடந்த தேர்தலில்.... சுயேட்சை வேட்பாளர்களான... அர்ஜுனா, கௌசல்யா போன்றவர்கள் எடுத்த வாக்குகளை விட குறைவான வாக்குகளை எடுத்து தாயக மக்களால் நிராகரிக்கப் பட்டவர்தான்... முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்... சுமந்திரனின், வாய்க் கொழுப்புக்குத்தான்... அவரை மக்களும், கட்சியும் சேர்ந்து தோற்கடித்து உள்ளார்கள் என்பதை உலகமே அறியும். மூஞ்சூறு தான்போக வழியை காணேல்லை... விளக்குமாத்தை காவின கதையாய் இருக்கு. இப்படியே... தொடர்ந்தால்... இன்னும் நிறைய அவமானங்கள் காத்திருக்கு சென்ற தேர்தல் வாக்கு நிலவரம்: சிவஞானம் சிறீதரன் - 32,833 வாக்குகள். அர்ச்சுனா ராமநாதன் 20,487 வாக்குகள். கௌசல்யா 15,800 வாக்குகள். ஆபிரகாம் சுமந்திரன் 15,039 வாக்குகள். (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.) இந்த லட்சணத்திலை மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றார். இனியாவது... பெற்ற தோல்விகளில் இருந்து உங்களை திருத்திக் கொள்ளப் பாருங்கள். நெடுகவும்... வாய்ச் சவடால், கைகொடுக்காது. திருந்தவில்லை என்றால்... மக்கள் தகுந்த பாடம் படிப்பிப்பார்கள் மறவாதீர்கள்.
  11. உண்மைதான்... தெலுங்கர்களை நம்ப முடியாது. செத்த மாதிரி நடித்து, அனுதாபம் தேடக்கூடிய ஆட்கள். செந்தமிழன் சீமானுக்கும் அந்தச் சந்தேகம் வந்ததில் வியப்பு இல்லை. 😂 🤣
  12. இளங்கோவன் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய சீமான். 😎 . . . . ஸ்ரார்ட் மியூசிக். 😂 🤣
  13. இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில், வலு அவதானமாக இருக்க வேண்டும். ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 அத்துடன்... எல்லாத்தையும், வலு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருந்து... சவுண்டு குடுக்கிற நேரத்தையும், சரியாக கணித்து பக்காவாக செய்யும் போது தான்... எதிராளி சமாளிக்க முடியாமல், சித்தம் கலங்கி.. தலை தெறிக்க ஓடுவான். 🤣 எல்லா நேரமும், "சவுண்டு" கொடுத்துக் கொண்டு இருந்தால்... சொல்லும் விஷயம் சப்பெண்டு போயிடும். 😂 இது... தான், தொழில் ரகசியம்.
  14. தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு. இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படவுள்ளதோடு, சிலர் இடைநிறுத்தப்படவுள்ளனர் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் நாட்களில் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயல்பட்டமை தொடர்பில் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடை நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுது்துள்ளது எனவும், தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி எனவும், மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி தாம் செயற்படப்போவதில்லை எனவும், தமது நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2024/1412326
  15. யாழில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்- கடற்றொழில் அமைச்சர். யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் ‘தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும் எனவும், அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” குறிப்பிட்டுள்ளார். மேலும் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1412323
  16. பனை ஓலையின் அடிப் பகுதிதான் கருக்கு மட்டை.
  17. அடேங்கப்பா… படத்தை பார்க்க பகீரென்று இருக்குது. மன்னர் ஆட்சியில் நடப்பது போல், மக்களின் வரிப் பணத்தில் ராஜ வாழ்க்கை நடத்தி உள்ளார்கள். மகிந்தவுக்கு பல வாகனங்கள், இரண்டு நோயாளர் வண்டி என்றும் வைத்திருந்தவர். அங்காலை ரணிலுக்கு… 16 சமையல்காரர் தேவையாம். நாடு இருக்கும் நிலையில் அதனைப் பார்த்தாவது திருந்தி இருக்க வேண்டாமோ… இதற்குள்…. மக்களின் சேவகர்கள் என்று, அந்த மக்களின் தலையிலேயே சம்பல் அரைத்திருக்கின்றார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.