Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் என்னும் கிறிஸ்தவரை சைவசமய மக்கள் தந்தை என்ற செல்லப் பெயர் வைத்து அவர் இறக்கும் வரை உயரிய மரியாதை கொடுத்தே வந்துள்ளார்கள். அவரை கிறிஸ்தவர் என்று ஒதுக்கி வைத்ததே இல்லை. இங்கு @Justin, @Kapithan இருவருக்கு மட்டும் …. ஆபிரகாம் சுமந்திரன் என்றவுடன் இல்லாத ஒன்றை கற்பனை பண்ணி மதப் பிரிவினைக்கு தூபம் போட முனைகிறார்கள். இவர்களின் உள் நோக்கம் என்னவென்று பலரும் அறிந்தே வைத்துள்ளார்கள். சுமந்திரனின் சுத்துமாத்துக்களை அம்பலப் படுத்த வெளிக்கிட்டால்… அதற்கு மதச்சாயம் பூசி பிரச்சினையை திசை திருப்பி வெள்ளை அடிக்க முனையும் தந்திரம் இனியும் பலிக்காது. ஆனபடியால்… இவர்களின் “பருப்பு” இங்கே அவியாது.
  2. ஒரு முட்டையில்... இரண்டு மஞ்சள் கரு.
  3. மாப்பிள்ளை என்ன செய்யுறார்? பார்லிமென்ட் எலக்சனுக்கு வேட்பு மனு தாக்கல் செய்திட்டு, வெற்றிக்கு வெயிட் பண்ணுகிறார். 😂 🤣
  4. @MEERA இணைக்க விரும்பிய படம் இதுவா. மான் சின்னத்தில் போட்டியிடும், முன்னாள் யாழ் நகரபிதா மணிவண்ணனும் மற்றைய வேட்பாளர்களும்.
  5. அவர்கள்... பிடிபடாமல் செய்வார்கள், இவர்கள்.... செய்துவிட்டு, பிடிபட்டு விடுவார்கள். 😂
  6. யாழில். பொலிஸ் அதிகாரியின் வீட்டில் கொள்ளை: ஒருவர் கைது! யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டினுள் புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நவாலி பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டினுள் கடந்த 12ஆம் திகதி உட்புகுந்த திருடர்கள் ஆறரை பவுண் நகை மற்றும் 29ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவரை கடந்த திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும்,அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://athavannews.com/2024/1404402
  7. எரிபொருள் தாங்கி வெடிப்பு – 94 பேர் சம்பவ இடத்திலேயே பலி. நைஜீரியாவின் வட பகுதியில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் சுமார் 94 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 70ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், எரிபொருள் பவுசர் விபத்துக்குள்ளான போது அதிலிருந்து பெட்றோலை எடுக்க சென்ற மக்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1404425
  8. நான் வசிப்பது, ஆப்கானிஸ்தான். 😂 நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாம் எனக்கு புதுசாய் இருக்குது. 🤣
  9. ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
  10. ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
  11. நாடாளுமன்ற தேர்தல்; வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கல் இன்று! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (16) பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களினதும் விருப்பப் பட்டியல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும், விருப்பப்பட்டியல்களை சரிபார்த்து மாவட்ட செயலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதேவ‍ேளை, நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகை இன்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளது. அதேநேரம், பொதுத் தேர்தல் தொடர்பான உத்தரவுகளை அமுல்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. https://athavannews.com/2024/1404283
  12. இணையத்தில் நிதி மோசடி; மேலும் பல வெளிநாட்டவர்கள் கைது! இணையத்தில் நிதி மோசடி தொடர்பில் மேலும் 10 வெளிநாட்டவர்கள் நேற்றிரவு (15) கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம், இரணைவில பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இவர்கள் தங்கியிருந்த வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது. 04 மலேசிய ஆண்களும், 03 எத்தியோப்பிய ஆண்களும் ஒரு பெண்ணும், ஒரு கென்யா பெண்ணும், ஒரு சீனா ஆணுமே இவ்வாறு கைதானவர்கள் ஆவர். இவர்களிடமிருந்து 20 கணனிகள், 03 ரவுட்டர்கள் மற்றும் 282 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1404290
  13. சீனாக்காரன்…. இந்திய எல்லைப் பகுதிகளில் புதிய குடியிருப்புக்களை அமைக்கின்றானாம். 😂 தனது கொல்லைப் புறத்தில் நடப்பதை தடுக்க வழி இல்லை, தாய்வான் பிரச்சினையில் அக்கறை செலுத்துது இந்தியா. 🤣
  14. சுமந்திரனிடம் எந்த ஒரு நிரந்தர கொள்கையும் இல்லை. தனது பெயர் தினமும் பத்திரிகைகளில் வர வேணும் என்பதற்காக தினமும் உளறிக் கொண்டிருக்கும் மனோ வியாதி கொண்ட ஆள். அவர் இருக்க வேண்டிய இடம் அங்கோடை வைத்தியசாலை. 😂
  15. நீங்கள்…. தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் இந்தியாவின் ஆதரவாளர்கள் என்று சொல்லி, சுமந்திரனின் தான் தோன்றித்தனமான செய்கைகளை நியாயப் படுத்தப் படுத்துவது… உங்களை நீங்களே ஏமாற்றுவதற்கு சமனானது. பிரிந்தவர்கள் எல்லோரும் இந்திய விசுவாசிகள் அல்ல. சுமந்திரனின் கடந்த கால செய்கைகளே… அவரை பலரும் எதிர்க்க முக்கிய காரணம். போர்க்குற்ற விசாரணை போன்ற விடயங்களில் இருந்து அவரின் பல செய்கைகள் அரசை காப்பாற்றுவதாகவே இருந்துள்ளதை யாழ்.கள செய்திகளை தேடி வாசித்தீர்களானால் சுமந்திரன் எப்படிப் பட்ட வஞ்சகர் என்பது புரியும். சிங்கள மக்கள் மத்தியில் வாழ்வதை… பெருமையாக பீத்திக் கொண்டு திரிந்தவர் தமிழரசு கட்சியிலேயே இருக்க லாயக்கு இல்லாதவர்தான் சுமந்திரன். தந்தை செல்வநாயகம் ஆரம்பித்த தமிழரசு கட்சியின் அடிப்படை கொள்கைகளை சிதைக்காமல், சிங்கள கட்சியில் இருப்பதே சுமந்திரனின் கொள்கைக்கு நல்லது.
  16. உண்மைதான் பாஞ்ச் அண்ணை. சீனாக்காரன் நோபல் பரிசு வென்றதாக நினைவு இல்லை. சில வேளை அவர்களின் வெளிப்படைத் தன்மையற்ற செயல்களும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த நோபல் பரிசு கொடுப்பதிலும்… முகமன் பார்த்து கொடுக்கின்றார்கள் என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. ஏனென்றால்…. பராக் ஒபாமா பதவிக்கு வந்து மூன்று மாதத்திற்குள் ஒன்றும் சாதிக்க முதலே, அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை கொடுத்து இருந்தார்கள்.
  17. அனுர அரசில் இந்த வெள்ளை வேட்டி கள்ளர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இல்லையேல்… எந்த அரசிலும் இவர்களுக்கு தண்டனை கிடைக்கப் போவதில்லை. கவிதைக்கு நன்றி கோபி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.