Everything posted by தமிழ் சிறி
-
10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை-நீர்கொழும்பு மேல் நீதிமன்றம்!
10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை-நீர்கொழும்பு மேல் நீதிமன்றம்! 10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 146 கிலோகிராம் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியதற்காக இந்த 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது அதன்படி 9 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2024/1405370
-
இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
இலங்கையிலுள்ள தமது பிரஜைகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை! அறுகம்பை வளை குடாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எதிரான தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து, இலங்கையிலுள்ள ரஷ்ய பிரஜைகளை அவதானமாக இருக்குமாறும், அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கொழும்பில் அமைந்துள்ள ரஷ்ய தூதகரம் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில், ஐக்கிய இராச்சியம் அறுகம்பை வளைகுடா பகுதியில் சாத்தியமான அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க தூதரகத்தால் வெளியிடப்பட்ட அண்மைய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இலங்கையில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு, அறுகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவலை மேற்கோள் காட்டி, மறு அறிவிப்பு வரும் வரை அறுகம் வளைகுடா பகுதியை தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. அறுகம்பை வளைகுடா பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே ரஷ்ய தூதகரத்தின் மேற்கண்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://athavannews.com/2024/1405373
-
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
சும்முக்கு... மனித நேயமாவது, மண்ணாங்கட்டியாவது. 😎 சிங்களத்தின் அதிரடிப்படையுடன் ஊருக்குள் 32 பல்லையும் காட்டிக் கொண்டு வலம் வந்து பந்தா காட்டுவதற்காக, தன்னை கொல்ல சதி என்று.. ஊனமுற்ற முன்னாள் போராளிகளை மீண்டும் சிறையில் அடைக்க எந்த மனிதனாவது யோசிப்பானா? பெரும்பாலான கள்வர்கள்... சாகும் மட்டும் கள்ளக் குணத்துடனேயே இருப்பார்கள். 😂 அதுகள்... திருந்துறது எண்டால், கல்லில் நார் உரிக்கிறதுக்கு சமன். 🤣
-
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனிற்கு பிடியாணை
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது! முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2024/1405377
-
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
"கெடு குடி சொல் கேளாது." சுமந்திரனை... தமிழரசு கட்சியில் கொண்டு வந்து சேர்த்த, சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும் கூட... சுமந்திரனால் அவமானப்பட்டு நொந்து போனதுதான் மிச்சம். அதிலை ஒருத்தர் செத்துப் போனார், இன்னொருத்தர் ஆஸ்பத்திரியிலை படுத்து கிடக்கிறார். யமனை... பச்சடி போட்ட ஆள்தான், சுத்துமாத்து சுமந்திரன்.
-
கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
பிரிட்டிஷ் காலத்தில் இருந்து இன்று வரை... இலங்கையின் கடவுச்சீட்டு மாறிய விதம்.
-
கருத்து படங்கள்
- கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்!
- இலங்கையில் பிரபலமான சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம்-அமெரிக்க தூதரம் விசேட அறிவிப்பு! அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் எச்சரித்துள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளை அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது அத்துடன் அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. எனவே, ஏதேனும் சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் அல்லது அவசர நிலை குறித்து 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு தமது பிரஜைகளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது. எவ்வாறாயினும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளினது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மேலும் எந்தவொரு சுற்றுலாப் பயணியும் பாதுகாப்பு தொடர்பில் 1997 என்ற இலக்கத்துக்குத் தகவல் வழங்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1405325- ஈ. கோலை தொற்றை அடுத்து மெக்டொனால்ட்டின் பங்குகள் பெருமளவு சரிந்தன!
ஈ. கோலை தொற்றை அடுத்து மெக்டொனால்ட்டின் பங்குகள் பெருமளவு சரிந்தன! பல அமெரிக்க மாநிலங்களில் துரித உணவு உணவகமான மெக்டொனால்ட்டுடன் (McDonald’s Quarter Pounder hamburgers) தொடர்புடைய ஈ. கோலை (Escherichia coli ) உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் பலர் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அமரிக்க மத்திய சுகாதார அதிகாரிகள் செவ்வாயன்று (22) தெரிவித்தனர். இந்த நோய் தொற்று கடந்த செப்டம்பரில் தொடங்கியது – இதுவரை 10 மேற்கு மாநிலங்களில் குறைந்தது 49 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) தெரிவித்துள்ளது. கொலராடோ மற்றும் நெப்ராஸ்காவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அயோவா, கன்சாஸ், மிசோரி, மொன்டானா, ஓரிகான், உட்டா, விஸ்கான்சின் மற்றும் வயோமிங் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொற்று பரவலுக்கு காரணமான பொருட்கள் என்ன என்பதைக் கண்டறிய துரித உணவு உணவகம் புலனாய்வாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது. எவ்வாறெனினும், செவ்வாய்கிழமை வெளியான செய்தியை அடுத்து நியூயோர்க் பங்குச் சந்தையில் மெக்டொனால்டின் பங்குகள் சுமார் 9% சரிந்தன. Escherichia coli Escherichia coli (E. coli) என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் பொதுவாகக் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா ஆகும். ஈ. கோலையின் பெரும்பாலான திரிவுகள் பாதிப்பில்லாதவை மற்றும் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன, சில தீவிரமான உணவுப்பழக்க நோயை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப்போக்கு, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், செப்சிஸ், நிமோனியா மற்றும் பிற நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம். அசுத்தமான உணவு, தண்ணீர் அல்லது விலங்குகளுடன் தொடர்பு கொண்ட பிறகு இந்த நோயால் பாதிக்கப்படலாம். அதாவது வேகவைக்கப்படாத மாட்டிறைச்சி, பச்சை பால், அன்பேஸ்சுரைஸ்டு (unpasteurized) ஜூஸ் மற்றும் அசுத்தமான தண்ணீருடன் தொடர்பு கொண்ட அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வதன் மூலம் இந்த தொற்று அடிக்கடி ஏற்படுகிறது. https://athavannews.com/2024/1405344- இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
கண்ணீர் அஞ்சலிகள்.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
- வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
வீட்டிற்குள் விஷப் பாம்பு நுழைந்தால்... பெரிய கொட்டன் தடி எடுத்து... அடித்துக் கொன்று, மண்ணெண்ணை ஊற்றி கொழுத்த வேண்டும். 😂 மாறாக.... அதற்கு பால் ஊற்றி கொஞ்சிக் கொண்டு இருந்தால்... மற்ற ஆட்களையும் அந்த விஷப் பாம்பு கொத்தி, மனிதருக்கு மரணத்தை ஏற்படுத்தும். நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றால், விஷப் பாம்பை ஒழிக்க வேண்டும் ஆகவே, தாமதிக்காமல்... அந்தப் பாம்பை அடித்து விரட்டுங்கள். 🤣- மகாராணியால்... 10,000 பொற்காசுகளை இழந்த மன்னர்.
மகாராணியால்... 10,000 பொற்காசுகளை இழந்த மன்னர். ஏராளன்... மீனுக்கு, முதல் கொடுத்த 5,000 பொற்காசுதான் மனம் மகிழ்ந்து கொடுக்கப் பட்டது. மிகுதி 10, 000 பொற்காசும், முதலில் போன 5,000 பொற்காசை திருப்பி எடுக்க மகாராணி போட்ட திட்டத்தால் இழந்தவை. 😂- மகாராணியால்... 10,000 பொற்காசுகளை இழந்த மன்னர்.
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். 'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார். 'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் 'இது ஆணுமில்லை பெண்ணுமில்லை' இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன்.அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான். இந்தப் பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள். 'பேராசைக்காரன்...! கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விட்டானா பாருங்கள்' என்றாள் மன்னரிடம். அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான்...'நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால்கூட என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது' என்றான். இதனால் இன்னும் மனம் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். இப்பொழுது மகாராணி தனது வாயை மூடிக் கொண்டாள். வாய் உள்ள பிள்ளை.. எங்கும், எப்படியும் பிழைத்துக் கொள்ளும். தென்றல் கவி , Creativity பிருந்தாவனம்- 85 இந்தியர்களை இராணுவத்தில் இருந்து வெளியேற்றியது ரஷ்யா!
85 இந்தியர்களை இராணுவத்தில் இருந்து வெளியேற்றியது ரஷ்யா! ரஷ்ய இராணுவத்தில் இருந்து இதுவரை 85 இந்தியர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 இந்தியர்களை விடுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இந்தியா வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி திங்களன்று (21) தெரிவித்தார். ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் செவ்வாய்கிழமை இருதரப்பு சந்திப்பை நடத்துவார். இதன்போது, மீதமுள்ள இந்திய படையினரை வெளியேற்றுவது குறித்து இந்திய தரப்பில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய ஒன்பது இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் முதல், ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சகம், இந்தியா உட்பட பல வெளிநாடுகளின் குடிமக்களை இராணுவ சேவையில் சேர்ப்பதை நிறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1405191- மதம்பிடித்து ஆக்ரோஷமான யானை; முதுகில் சிக்கிக்கொண்ட சகோதரிகள் - நடந்தது என்ன?
முன்பு யாழ். கோட்டையை சுற்றி, உரிமையாளர் அற்ற ஐந்தாறு குதிரைகள் மேய்ந்து கொண்டு திரியும். படிக்கும் காலங்களில் சில நண்பர்கள் சேர்ந்து... குதிரையை பிடித்து, தும்பு கயிறால் நாங்கள் செய்த கடிவாளத்தை போட்டு... ஏறி இருந்து சவாரி? (நடை பவனி) போவது வழக்கம். ஒரு முறை குதிரை... பின்னங்காலால் ஒரு உதை விட்டுது, வாழ்க்கையில் மறக்க முடியாது. அதன் பின் இன்று வரை... குதிரை ஏறும் ஆசையே போய் விட்டது. 😂- மதம்பிடித்து ஆக்ரோஷமான யானை; முதுகில் சிக்கிக்கொண்ட சகோதரிகள் - நடந்தது என்ன?
அவர்களுக்கு.... மீண்டும் யானைச் சவாரி செய்யும் ஆசை வருமா, வராதா. 🤣- கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்!
- கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்!
உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு கெலஉறுமய கட்சியின் தலைவருமான உதயகம்மன்பில நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது. உதயகம்மன்பில வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்திலுள்ள இரண்டு அதிகாரிகளிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை தனது மறுப்பினை உத்தியோகபூர்வமாக இன்று அறிவிக்கவுள்ளனர். அத்துடன் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு எதிராக உதயகம்மன்பில வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில்வழங்கவுள்ளதாக அருட்தந்தை சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையை எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுதவுள்ளதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில நேற்றையதினம் அறிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1405141- கருத்து படங்கள்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் நேற்று (21) வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.- கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்!
கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் நேற்று (21) வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை தற்போதைய பதவிகளில் இருந்து எக்காரணம் கொண்டும் நீக்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும் கூறினார். https://athavannews.com/2024/1405181- கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
புதிய நீல நிற கடவுச்சீட்டு அறிமுகம்! வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் அண்மைக்காலமாக நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய நீல நிற கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய கடவுச்சீட்டானது 64 பக்கங்களை கொண்டிருந்தது. குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளான புதிய கடவுச்சீட்டு இப்போது 48 பக்கங்களைக் கொண்டுள்ளது. மேலும், முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்த நிலையில் புதிய கடவுச்சீட்டில் P எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய கடவுச்சீட்டின் அனைத்து பக்கங்களிலும் அழகான இலங்கையின் சிறப்பு மிக்க மற்றும் வரலாற்று சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ். நல்லூர் ஆலயம், வரலாற்று சிறப்புமிக்க காலி ஒல்லாந்தர் கோட்டை, ஸ்ரீ தலதா மாளிகை, கொழும்பின் தாமரை கோபுரம், சிகிரியா, ஒன்பது வலைவு பாலம், பொலன்னறுவையின் வரலாற்று தளங்கள் உட்பட இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பாரம்பரிய தொழில்கள் ஆகியவை புதிய கடவுச்சீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு நாள் சேவையின் கீழ் 20,000 ரூபா கட்டணத்துடன் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். புதிய கடவுச்சீட்டுகள் போதுமான அளவு கையிருப்பு கிடைத்துள்ளதால், எதிர்காலத்தில் கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் நெரிசல் குறையலாம் என குடிவரவு குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1405109- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீ ரங்கா தலைமறைவு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா... பல்வேறு சர்ச்சைகளில் சிக்கும் நபர். தெரிந்து செய்கின்றாரோ, தெரியாமல் செய்கின்றாரோ... ஆண்டவனுகுத்தான் வெளிச்சம். வவுனியாவியிலும் ஒருவரை வாகனத்தால் விபத்து ஏற்படுத்திவிட்டு, தனது சாரதி செய்தது என்று சொல்லிய நினைவு.- பெய்ரூட் வைத்தியசாலையின் கீழ் ஹெஸ்புல்லாவின் மில்லியன் கணக்கான பணம், தங்கம்!
பெய்ரூட் வைத்தியசாலையின் கீழ் ஹெஸ்புல்லாவின் மில்லியன் கணக்கான பணம், தங்கம்! இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் திங்களன்று (21) ஹெஸ்புல்லா பயங்கரவாதக் குழுவின் நிதி மையம் தொடர்பான உளவுத்துறை தகவலை வெளிப்படுத்தியது. அதில், பெய்ரூட்டில் உள்ள ஒரு வைத்தியசாலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பதுங்கு குழியில் ஹெஸ்புல்லா நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் மற்றும் தங்கத்தை பதுக்கி வைத்துள்ளமை கண்டறியப்பட்டதாக கூறியது. ஹெஸ்புல்லாவின் நிதி சொத்துக்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த இலக்கு மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. ஒரு தொலைக்காட்சி அறிக்கையில், இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, இந்தக் கூற்றுக்கு வழிவகுக்கும் உளவுத்துறை தகவல்கள் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இஸ்ரேலின் இந்தக் கருத்துக்கு ஹெஸ்புல்லா உடனடியாக எந்தக் கருத்தினையும் தெரிவிக்கவில்லை. https://athavannews.com/2024/1405177 - கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.