Everything posted by தமிழ் சிறி
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு! ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பொதுமக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான நிலையில் வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று ஜனநாயக கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தினத்தில் வன்முறைகள் மற்றும் சட்டமீறல்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. https://athavannews.com/2024/1400368
-
திருப்பதி கோவில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – சதி கொள்கைக்கு அனுமதிய முடியாது என்கிறது காங்கிரஸ்
திருப்பதி கோவில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – சதி கொள்கைக்கு அனுமதிய முடியாது என்கிறது காங்கிரஸ். ஆந்திர மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இருப்பினும், அதற்கான வாய்ப்பே கிடையாது என முன்னாள் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாமிச கொழுப்பு, மீன் எண்ணெய், பாமாயில் ஆகியவை கலந்திருந்தது உண்மைதான் என்பதற்கான ஆய்வக ஆதாரத்தை தெலுங்கு தேசம் கட்சி நேற்று மாலை வெளியிட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழுமலையானின் பக்தர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழுமலையான் கோவிலின் புனிதத் தன்மையை கெடுத்து விட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் பிரசாதம் தயாரிப்பில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு உடனடியாக தீர்வு எட்டப்படவில்லை என்றால், பாஜக-வின் பிரித்தாளும் சதி கொள்கைக்கு அனுமதிப்பது போன்றதாகிவிடும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1400311
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
- அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
நாங்கள் அமெரிக்கா போறோம். டாடா.... bye bye ஸ்ரீலங்கா. 😂 🤣- அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
ஊரடங்கு சட்டம் போடும் அதிகாரம் ரணிலிடம் உள்ளதாக அண்மையில் ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்து இருந்தார். இந்த அறிவிப்பின் பின்னால்... ரணில் தோற்கும் நிலை ஏற்பட்டால்... எதுகும் செய்ய தயாராக இருக்கின்றார்கள் போலுள்ளது. அப்படி நடந்தால்.... ஜே.வி.பி. சும்மா இருக்காது. ஒரு கலவரம் நடக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.- ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
- வல்லிபுர ஆழ்வார் தீர்த்தக்கடலில் காணாமல் போனவரை தேடும் பணி தீவிரம்!
- திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
பேஜர் – வாக்கி டாக்கிகளுடன் பயணிக்க தடை விதித்த கட்டார் ஏர்வேஸ்! பெய்ரூட் ராஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BEY) பயணிக்கும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை விமானங்களில் கொண்டு வருவதற்கு கட்டார் ஏர்வேஸ் தடை விதித்துள்ளது. லெபனானில் பல வாக்கி-டாக்கிகள் மற்றும் பேஜர்கள் வெடித்ததை அடுத்து, விமானங்களில் இதுபோன்ற விடயங்களைத் தடைசெய்யும் உத்தரவை நாடு பிறப்பித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை, விமான நிறுவனம், சமூக ஊடக தளமான எக்ஸில், மறு அறிவிப்பு வரும் வரை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என்று கூறியது. செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களில் லெபனான் முழுவதும் பதின பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 2,931 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் வியாழக்கிழமை தெரிவித்தார். இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல் நிலவி வரும் நிலையில் குறித்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400341- அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
தமிழரசு கட்சி…. யாருக்கு ஆதரவு கொடுக்கின்றதோ… அவர் தோற்பதுதான் வரலாறு என்று மாகாணசபை அவைத் தலைவரும் சஜித் பிரேமதாசவுக்காக சுமந்திரனுடன் பிரச்சாரம் செய்தவருமான சிவஞானம் சொல்லியுள்ளார். வரும் 22’ம் திகதி சஜித்துக்கு என்ன நடக்கிறது என பார்ப்போம். தமிழக தேர்தல்களில் கடைசியாக நடந்த தேர்தலைத் தவிர மற்றைய தேர்தல்களில் எல்லாம், வைகோ… யாருக்கு ஆதரவு கொடுக்கின்றாரோ அந்தக் கட்சி தோற்றதுதான் வரலாறு. அதனால்… வைகோவை ராசி இல்லாத தலைவர் என்றும் சொன்னார்கள். அந்த ராசி… தமிழரசுக் கட்சிக்கும் உள்ளதா என பார்ப்போம்.- அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
- அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
அப்ப... இவ்வளவு காலமும் ரணில் இவர்களை பாதுகாத்துக் கொண்டிருந்திருக்கின்றார். அனுர வந்தவுடந் கடுமையான தண்டனையுடன், கொள்ளையடித்த பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டி வரும் என்ற பயத்தில் ஓடுகின்றார்கள். அமெரிக்காவில் உள்ள இந்திய சாத்திரி ஒருவர், மகர ராசியை சேர்ந்த அனுர வருவார் என கணித்துள்ளார். 😂- கருத்து படங்கள்
- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
- ஹிஸ்புல்லா நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை!
ஹிஸ்புல்லா நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை! இஸ்ரேல் இராணுவம் தனது போர் விமானங்களைக் கொண்டு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா (Hezbollah )நிலைகளின் மீது நேற்றைய தினம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) அறிக்கைகளின்படி, ஹிஸ்புல்லா அமைப்புக்குச் சொந்தமான சுமார் 1,000 ரொக்கெட் லாஞ்சர் பீப்பாய்கள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், ”நாட்டைப் பாதுகாப்பதற்காக ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் உள்கட்டமைப்பு மற்றும் இலக்குகள் மீதான தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளன. எனினும் இத்தாக்குதலினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதேவேளை பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி, இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஒரு வார காலப் பதற்றத்திற்குப் பிறகு உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். அதேசமயம் இம் மோதல் நிலையானது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புக் காணப்படுவதாக அமெரிக்கா அச்சம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400249- வட மாகாணத்தில் 32 ஆயிரம் வீடுகளை நிர்மானிப்பதற்கான நிதி மூலத்திற்கு அங்கீகாரம்!
இந்தியா கட்டித் தந்த... 55,000 வீடுகளே, குடியேற ஆட்கள் இல்லாமல் பூட்டிக் கிடக்குது. அதற்குள் இவர்களும் 32, 000 வீடுகள் கட்டித்தர ஆசைப்படுகிறார்கள். அவர்களின் ஆசையை... நாம ஏன் தடுப்பான். வடிவாய் கட்டட்டும்.- வட மாகாணத்தில் 32 ஆயிரம் வீடுகளை நிர்மானிப்பதற்கான நிதி மூலத்திற்கு அங்கீகாரம்!
வட மாகாணத்தில் 32 ஆயிரம் வீடுகளை நிர்மானிப்பதற்கான நிதி மூலத்திற்கு அங்கீகாரம்! வடக்கு மாகாணத்தில் சன் பவர் குழுமத்தினால் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 32 ஆயிரம் வீடுகளுக்கான நிதி மூலத்திற்குரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட வங்கி ஒன்றின் ஊடாக இந்த திட்டத்திற்கான நிதி வழங்கப்படவுள்ளது. தலா 50 இலட்சம் ரூபா செலவில் முற்றுமுழுதாக இலவசமாக பயனாளர்களுக்கு இந்த வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன. வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ள சன் பவர் குழுமத்தினால் சுமார் நான்காயிரம் ஏக்கர் காணியில் சூரிய மின்கல பூங்கா (Solar Park) நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான முழுமையான காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை கடன் விடுவிப்பு தொடர்பான சான்றுபடுத்தல் பெறப்படவுள்ளது. இந்த இரண்டு செயற்பாடுகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இலவச வீட்டு திட்டத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தலா ஐம்பது இலட்சம் ரூபா செலவில் 32 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. வீட்டு நிர்மாணப்பணிகள் அனைத்தும் சன் பவர் குழுமத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளன. வீடு முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட பின்னரே பயனாளர்களிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்குரிய முன்மொழிவிற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400220- மாவையும் மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் - தம்பி ராசா குற்றசாட்டு!
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில்… இவர்களின் கடிபாடு உச்சத்தை தொடும். அதோடு இவர்கள் காணாமல் போவார்கள். அந்த இடத்தை @நிழலி சொன்ன மாதிரி சிங்கள கட்சிகள் எடுக்கும். 2009’ல் இருபத்தி இரண்டு (22) பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தவர்கள். இப்போ 12 பேர்தான் உள்ளார்கள். வருகின்ற தேர்தலில், தமிழரசு கட்சி 5 இடத்துக்குள் குறுகி விடக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.- மாவையும் மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் - தம்பி ராசா குற்றசாட்டு!
இப்ப வேலை செய்யுது புலவர். சிவஞானம், சுமந்திரனை பிசாசு என்று பேசிப் போட்டு… சஜித்தின்ரை பிரச்சாரக் கூட்டத்துக்கு… சுமந்திரனுடன், சிவஞானம் மட்டும் தானே ஒன்றாய் போனவர். 😂- வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
சினை மாடுகளுக்கு… பாதுகாப்பு உறை பாவிப்பதில்லைத்தானே….. 🤣- வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
ரஷ்யாவுக்கு போறதுக்கு வின்ரர் உடுப்புகள் வாங்க C & A யில் நிற்கிறன். 😂- மாமியாரின் அன்புப் பரிசு.
ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை பரிசோதிக்க மாமியார் விரும்பினார். அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி முதலாவது மகள் மற்றும் மருமகனுடன் ஒரு ஏரியில் படகு சவாரி செய்தார். தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார். இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தது. இதே போல் இரண்டாவது மருமகனையும் சோதித்தார். அவரும் முதல் மருமகனைப் போலவே செய்ததால் அவருக்கும் ஒரு மாருதி desire கார் பரிசாக வழங்கினார். முன்றாவது மருமனுக்கும் இதே சோதனை. திட்டமிட்டபடி தண்ணீரில் விழுந்து தவித்தார். மாப்பிள்ளை கண்டுகொள்ளவேயில்லை. மாமியார் கெஞ்சினார். ம் ஹும். பார்க்காதது போல் இருந்தார். மாப்பிள்ளை காப்பாற்றுங்கள்.. இன்னோவா கார் வாங்கித் தருகிறேன் என்று சொன்னார். காரும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.. பொண்ண வளக்க சொன்னா பேயை வளர்த்திருக்கிற... சாகுன்னு சொல்லிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு வந்துவிட்டார். மாமியார் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்து பார்த்தால்.... ஒரு புத்தம் புதிய BMW கார் வாசலில் நின்றது. அருகில் சென்று பார்த்தால்.. ............. மாமனாரின் அன்புப் பரிசு என்றவாசகம் காரில் தொங்கியது. 😂 Mohan Muthuram- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- மாவையும் மகனும் வடிவேல் பாணியில் செயல்படுகின்றனர் - தம்பி ராசா குற்றசாட்டு!
புலவர், காணொளி இரண்டும் வேலை செய்யவில்லை.- சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.