Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. உன் இனத்தின் சார்பாக போனவன் பதவியை இழந்த பின்பும், விதியை மீறி, எதிரி சலுகை கொடுக்கின்றான் என்றால்… உன் இனத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றான் என்று அர்த்தம். தமிழரசு கட்சியில் உள்ளதுகள், அதைத்தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். டக்ளஸ் வெளிப்படையாக செய்வதை… இவர்கள், பின் கதவால் செய்கிறார்கள்.
  2. ஆம்… அனைவரின் பெயர்களையும் வெளியிட வேண்டும். அத்துடன்…. கேரள கஞ்சா, ஆப்கானிஸ்தான் அபின், பாகிஸ்தான் பான்பராக்…. போன்ற போதை வஸ்துக்களை கடத்தி காவல் துறையிடம் பிடிபடும் சமூக விரோதிகள் சார்பில்…. நீதிமன்றம் சென்று வாதடி, அவர்களை வெளியே எடுத்துவிடும் வக்கீல்களின் பெயர்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். 😂 🤣 முதலில்…. உங்கள் முதுகில் உள்ள ஊத்தையையும் கழுவுங்கள். மல்லாக்கப் படுத்திருந்து துப்பினால்.. அந்த அசிங்கம் உங்கள் முகத்தில் தான் விழும்? 🧐 தான்… அவசரப் பட்டு அறிக்கை விட்டு… தன்னை சுற்றவாளி என காட்ட அந்தரப் படுகிறார்…. லோயர். 🤣 கூட்டத்தில்…. குசு விட்டவன், முதலில் மற்றவர்களை நோக்கித்தான், கை காட்டுவானாம். 😂 😁
  3. வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழர் மரபுரிமை கட்சி. நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் 2024 ல் வன்னி தேர்தல் தொகுதியில் சுயாதீனமாக போட்டியிடுவதற்கான கட்டுபணத்தை தமிழர் மரபுரிமை கட்சியினர் இன்றைய தினம் (02) வவுனியா தேர்தல்கள் ஆனைக்குழுவில் செலுத்தியிருந்தனர் அக்கட்சியின் தலைவர் நேசராசா சங்கீதன் தலைமையில் குறித்த கட்டுபணம் செலுத்தப்பட்டிருந்தது பணத்தை செலுத்துய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் , தாங்கள் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் முல்லைத்தீவில் சுயேட்சைக்குழுவாக போட்டியிட்டு பல பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சி என்றும், நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இளம் சமூதாயத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்றும், அதற்கான தளத்தை தாங்கள் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமது கட்சியானது வடக்கு மற்றும் கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். https://athavannews.com/2024/1402145
  4. சாத்தான்.... நான் சொல்வதை நினைவில் வைத்திருங்கள். பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையுடன், அடுத்து வரவிருக்கும் மாகாணசபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தலுக்கு மீண்டும் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடப் போகுது என்று சொல்லி, போனவர்களை மீண்டும் வெளியே அனுப்பி விடுவார். இது நிச்சயம் நடக்கும். மனது சுத்தம் இல்லாத மனிதன். வாயை திறந்தால்.... பொய்யும், பிரட்டும்தான் வெளியே வரும்.
  5. அன்னம்... பாலையும் ,தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம். ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், அது தண்ணீர் கலந்த பாலை வைத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். நான் சில மிருகக்காட்சி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா? என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார். அன்னம் நீரில் உள்ள மீன்களையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார். எனக்கு ஒரு குழப்பம். நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று. சில நாட்கள் இதைப் பற்றியே சிந்தித்தேன். ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது அடடா, *அன்னம் என்பதற்கு* *அரிசிசாதம்* என்றும் ஒரு பொருள் உண்டே. *இதை* நாம் *சிந்திக்கவில்லையே* என்று யோசித்தேன். பிறகு கொஞ்சம் சுடு சோறு கொண்டு வரச்சொல்லி, அதில் கொஞ்சம் நீர் கலந்த பாலை ஊற்றினேன். அப்படியே வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்துப் பார்த்தபோது, என்ன *ஆச்சரியம்..!!* *பால்* முழுவதையும் *சாதம்* உறிஞ்சிக் கொண்டிருந்தது. *தெளிந்த நீர்* மட்டும் *சாதத்தைச்* சுற்றியிருந்த *இடத்தில்* வடிந்திருந்தது. உண்மையில் நான் கலந்த நீரை விட அதிகமாகவே வடிந்திருந்தது. சரி நாம் உபயோகித்த பாலில் ஏற்கெனவே எவ்வளவு தண்ணீர் இருந்ததோ என்று நினைத்தேன். *இதுதான்* அன்னம் *பாலையும்* தண்ணீரையும் *பிரிக்கும்* கதை. நீங்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் *உங்கள்* வீட்டிலேயே *செய்து* பார்க்கலாம். மறுபடி சிந்தித்தபோது தான் அடடா, *அன்னம்* என்று தான் *சொன்னார்களே* தவிர, *அன்னப்பறவை* என்று ஒரு இடத்திலும் *சொல்லவில்லை.* அது *நாமாக* செய்து *கொண்ட* *கற்பனைதான்* என்று புலனாயிற்று. அன்னம் பாலையும் தண்ணீரையும் இப்படித்தான் பிரிக்கும் *என* தெரிந்து கொண்டேன். *படித்ததில் உணர்ந்தது.... Jino Sivaji
  6. யுத்தத்தால் மரணித்தோருக்கு நினைவு துாபி – ஜனாதிபதிக்கு அங்கஜன் கடிதம். யுத்தத்தால் மரணித்தோருக்கான நினைவுத் தூபியை அமைப்பதோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் குறித்த கடிதத்தில்” யுத்தத்தினால் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் அனுபவித்த துன்பங்களை ஏற்று, அமைக்கப்படும் நினைவுத்தூபியானது முழு நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதோடு நினைவேந்தலுக்கான அடையாளமாகவும் மாறும் எனவும் குறிப்பிட்டுளு்ளார். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்கும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும் எனவும், இந்தச் சான்றிதழ்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களைத் தீர்க்க உதவுவதோடு, இழப்பீடு மற்றும் பிற வகையான ஆதரவை அணுகுவதற்கும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1402111
  7. வாழ்த்துக்கள் வினோ.... 👍 மாவை சேனாதிராசா, ஆபிரகாம் சுமந்திரன்.. ஆகியோரின் அறிவிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன். 😁 அவை இரண்டு பேரும் போனவுடன் தமிழரசு கட்சிக்கு... மஞ்சள் தண்ணி தெளித்து புனிதமாக்க வேண்டும். 😂 அதுக்குப் பிறகு தமிழரசு கட்சிக்கு ஏறுமுகம் தான். 📈 ⬆️ ✔️ இல்லையேல்... ஆறடி குழி தோண்டி, புதைத்து விட வேண்டியதுதான். 🤣
  8. ஈரான் ஏவுகணை தாக்குதல்; இஸ்ரேலுக்கு உதவிய அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள்! செவ்வாய்கிழமை (01) இரவு இஸ்ரேல் மீது ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் நடவடிக்கையில் ஐக்கிய இராச்சியத்தின் ஆயுதப்படைகள் ஈடுபட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி (John Healey) உறுதிப்படுத்தியுள்ளார். பிரிட்டிஷ் படைகள் இன்று மாலை (நேற்று) மத்திய கிழக்கில் மேலும் தீவிரமடையும் தடுக்கும் முயற்சிகளில் தங்கள் பங்கைக் கொண்டுள்ளன என்று ஹீலி ஒரு அறிக்கையில் கூறினார். பதில் தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பிரிட்டிஷ் பணியாளர்களுக்கும் அவர்களின் தைரியம் மற்றும் தொழில்முறைக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவ‍ேளை, செவ்வாயன்று இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணைகளின் சரமாரியான தாக்குதலின் மீது அமெரிக்கா பல இடைமறிப்பு தாக்குதல்களை நடத்தியது என்று பென்டகன் கூறுகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது வழிகாட்டுதலின் பேரில் இஸ்ரேலின் பாதுகாப்பை அமெரிக்கா “தீவிரமாக” ஆதரிப்பதாக கூறினார். இஸ்ரேல் மீதான ஈரானின் நேரடித் தாக்குதல் இரண்டு பிராந்திய சக்திகளுக்கு இடையிலான மோதலின் அண்மைய நடவடிக்கையாகும். இதற்கு பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்துள்ளார். https://athavannews.com/2024/1402121
  9. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு! கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து 50 பில்லியன் ரூபாவுக்கு ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை பறிமுதல் செய்வதோடு மாத்திரம் நிற்காமல், சட்டவிரோத இறக்குமதியில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறும் கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களில் 20 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்த உண்மைகளை ஆராய்ந்த நீதிபதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1402097
  10. உளவு குற்றச்சாட்டில் சீன பெண் ஜேர்மனியில் கைது! ஜேர்மனியின் லைப்சிக் (Leipzig) நகரில் சீன பெண் ஒருவர் வெளிநாட்டு முகவர் நடவடிக்கைகள் மற்றும் ஆயுத விநியோகம் தொடர்பான தகவல்களை அனுப்பியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். Yaqi X என பெயரிடப்பட்ட சந்தேக நபர், கிழக்கு ஜேர்மனியில் அமைந்துள்ள Leipzig/Halle விமான நிலையத்தில் தளவாட நிறுவனத்தில் பணிபுரிந்தபோது பெறப்பட்ட தகவல்களை சீன இரகசிய சேவையின் உறுப்பினருக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் மீது தனித்தனியாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த தகவலில் விமானங்கள், பொருட்கள் மற்றும் விமான நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் இராணுவ தளவாடங்களின் போக்குவரத்து பற்றிய விவரங்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2024/1402092
  11. ரஜினியின் உடல் நிலைக்கு என்ன நேர்ந்தது ? ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் அடைப்பு கண்டறியப்பட்ட நிலையில், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்ட நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் மருத்துவ கண்காணிப்பிற்கு பின் இன்று மாலை பொது வார்ட்க்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நாளை வெளியேற்றம் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. டாக்டர்கள் சாய் சதீஷ், விஜய் சந்திரன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெறும் நடிகர் ரஜினிகாந்த், கண்விழித்த பின்னர் தனக்கு சிகிச்சையளித்த டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தாகவும் கண்விழித்து பேசுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். செரிமானம் பிரச்சினை, சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. https://athavannews.com/2024/1402022 ஏதோ.. நம்மால் முடிந்தது. 😂 🤣
  12. இரத்தம் ஒழுகிக் கொண்டிருக்க, கூகிள்ளை கை வைத்தியம் பார்க்க தேடியிருக்கின்றான். இவனை நம்பி வந்த பிள்ளையை... மேல் உலகம் அனுப்பி விட்டு இருக்கின்றான் பைத்தியக்காரன்.
  13. உடலுறவின் பின்னரான இரத்த போக்கு – பரிதாபமாக உயிரிழந்த பெண். காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட 23 வயது பெண் காதலனால் பிறப்புறுப்பில் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சரி [Navsari] மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 23 வயது தாதியர் பட்டதாரி மாணவி ஒருவர் தனது 26 வயது காதலனுடன் ஹோட்டல் அறையில் கடந்த செப்டம்பர் 23 அன்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். உடலுறவுக்குப் பின்னர் பெண்ணின் பிறப்புறுப்பில் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பெண்ணும் அவரது காதலனும் என்ன செய்வது எனத் தெரியாமல் பயத்தில் திகைத்துள்ளனர். பதற்றமடைந்த பெண்ணின் காதலன் ஆம்புலன்சுக்கு போன் செய்வதற்குப் பதிலாக ரத்தத்தபோக்கை நிறுத்துவது எப்படி என்று ஆன்லைனில் தேடி பெண்ணின் உறுப்பில் ரத்தம் வராமல் இருக்க துணியை அழுத்தி ரத்தத்தை தடுக்க முயன்றுள்ளார். ஆனால் சிறிது நேர்த்திலேயே பெண் மயக்கமடைந்த நிலையில் காதலன் தனது நண்பனுக்கு போன் செய்து அவனை வரவைத்து அவனுடன் சேர்ந்து பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளான். ஆனால் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும்படி கூறியுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு அந்த பெண் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெற்றோர்களிடம் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் காதலன் முதலிலேயே ஆம்புலன்சுக்கு போன் செய்யாமல் ஆன்லைனில் உபாயம் தேடிக்கொண்டிருந்ததாலேயே பெண் உயிரிழந்துள்ளார். எனவே உயிரிழந்த பெண்ணின் காதலன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1402025
  14. தாமாகவே முன்வந்து, போட்டியிடவில்லை என அறிவிப்பதே நல்ல ஒரு முன் உதாரணம். விக்னேஸ்வரன், சாள்ஸ் நிர்மலநாதன் வரிசையில்... இன்னும் எத்தனை பேர் அறிவிக்கின்றார்கள் என பார்ப்போம்.
  15. ஓம்... பையன், அநேகமாக இந்தக் கிழமைக்குள் வந்து விடும் என எதிர் பார்க்கின்றார்கள். இல்லையேல்... மது அனுமதி பாத்திரம் பெற்றவர்கள், பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தபின்.... அவர்களின் வாக்கு வீதத்தில் சரிவை ஏற்படுத்தி அந்த வாக்குகளை தமக்கு அறுவடை செய்ய NPP காத்திருக்கலாம். தமிழரசு கட்சி இதோடை... நடையை கட்ட வேண்டியதுதான். தேர்தலுக்குப் பின்... அவர்கள் வேறு தொழில் தேட வேண்டி வரும். 😂
  16. கண்ட கண்ட இடங்களிலும் தாய் மொழியையே... "டமில்" என்று கொச்சைப் படுத்தி, கதைக்கும் உங்களிடம் நான் அதிகம் எதிர் பார்த்து விட்டேன் போலுள்ளது. மற்ற இனத்தவன்... தனது தாய் மொழியை இப்படி இழிவு படுத்த மாட்டான். நீங்கள், உங்கள் கச்சேரியை... நடத்துங்கள். நன்றி. 🙏
  17. தமிழில் தானே வடிவாய் சொன்னனான். அது… விளங்கவில்லையா. பிறகு ஏன், பிலாக்காய் பால் மாதிரி, இழு படுறியள்.
  18. ரசோதரன்…. உண்மையில் இந்தியாவிலேயே அதிக சினிமா பைத்தியங்கள் உள்ள மாநிலம் தமிழ் நாடுதான். இந்த வியாதி இப்போ தொலைக்காட்சிகளின் புண்ணியத்தில் ஈழத்திலும் பரவி விட்டது சோகம்.
  19. நான்… யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பது என் உரிமை. அதில் பிறர் மூக்கை நுழைப்பதை விரும்புவதில்லை. அத்துடன்… விமல் வீரவன்ச, பட்டாசு போன்ற உங்களின் கற்பனை கதைகளுக்கு எல்லாம் பதில் சொல்லி…. உக்களுடன் லாவணி பாடிக் கொண்டிருக்க விரும்பவில்லை. அதற்கு வேறு ஆட்களை பார்க்கவும்.
  20. மூஞ்சூறு தான் போக வழியை காணவில்லை. விளக்குமாத்தையும் காவிக் கொண்டு போன மாதிரி மற்றவர்களையும் அழைக்கின்றாராம். நல்ல பகிடியாய் இருக்கு. 😂 சிலரின் நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கிறது. 🤣
  21. ஓ…. ரஜனியின் படம் வேறை வருகுதா….? அது தானே… எலி ஏன் ஜட்டி போட்டுக் கொண்டு ஓடுது என நினைத்தேன். இவங்கள்…. அந்தக் காலத்தில் இருந்து, இப்ப மட்டும் படத்தை ஓட வைக்க எவ்வளவு கஸ்ரப் பட வேண்டி இருக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.