Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. உங்களுக்கு, குடும்பத்துடன் சிறைத்தண்டனை கொடுப்பதுதான் சிறந்த பாடம். அதற்கு தயாராக இருங்கள்.
  2. ஹரினி அமரசூரிய மூன்றாவது பிரதமர் என்பதே சரி. சந்திரிகா.. 1994´ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை நான்கு மாதங்கள் பிரதமராக இருந்து ஜனாதிபதி ஆகியவுடன்... தான் வகித்த பிரதமர் பொறுப்பை, தாயார் ஸ்ரீமாவோவிடம் ஒப்படைக்க அவர் 1994 நவம்பர் மாதத்தில் இருந்து 2000´ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை தொடர்ந்தார். இலங்கையில் 18 வருடங்கள் பிரதமராக பதவி வகித்து சாதனை படைத்ததும் ஸ்ரீமாவோ தான். மனிசி பல சாதனைகளை படைத்து விட்டுத்தான் போயிருக்கு.
  3. சுமந்திரனின் சொந்த ஊர் பருத்தித்துறை மக்களே.... அரியநேத்திரனுக்குத்தான் அதிக வாக்குகளைப் போட்டுள்ளார்கள். இதற்குள் தான் சொல்லித்தான் தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்குப் போட்டது என்று பச்சைப் பொய் சொல்லி, தனக்குத்தானே... முதுகு சொறிந்து விடுகிறார் பித்தலாட்டக் காரன். 🤣 கூரை ஏறி... கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போனாராம். இந்தக் கதையைப் போய் முழு லூசுகளுக்கு சொன்னால் நம்புவார்கள். 😃 அதை விட்டுட்டு... சுமந்திரன் தான் செய்த முட்டாள் தனத்துக்கு... விளக்கமும், வியாக்கியானமும் சொல்லிக் கொண்டு இருக்கிறாராம். 😂
  4. இலங்கையின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்க தான் இலங்கையின் முதல் பெண் பிரதமர் அத்துடன் அவர்தான்.. உலகின் முதல் பெண் பிரதமர் என்ற சாதனையையும் பெற்று இருந்தார். சந்திரிக்கா காலத்தில் சிறிமாவோவுக்கு பதவி கொடுத்தது நினைவில் உள்ளது, ஆனால் என்ன பதவி என்று எனக்கும் தெரியவில்லை நிழலி.
  5. நல்லதொரு கவிதை பசுவூர்கோபி. உங்கள் கனவு பலிக்க வேண்டும் என்பதே.. எமது அனைவரதும் பிரார்த்தனை. இதிலும்... அவர்கள் இனவாத நோக்குடன் செயல் பட்டால், இருந்த கடைசி நம்பிக்கையும் போய் விடும்.
  6. இவர் இலங்கையின்... இரண்டாவது பெண் பிரதமர் என நினைக்கின்றேன். வாழ்த்துக்கள்.
  7. நிச்சயமாக இவர்கள் அரசியல் வாதிகளுக்கு நெருக்கமாக இருப்பவர்களின் உறவினர்களாக இருப்பார்கள். அதிலும் கூட்டுப் பாலியல் செய்பவர்களை…. அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்ல வேண்டும். நாலு பேர் சேர்ந்து கொஞ்சம் தண்ணியை போட்டு விட்டு… தன்னுடைய குடும்ப வறுமையை போக்க வேலை முடிந்து களைத்துப் போய் வீடு திரும்பும் பெண்ணை மறித்து கூட்டு பாலியல் செய்வது எவ்வளவு கொடுமையானது. இந்த நாய்களுக்கு சில நிமிட சந்தோசம்… அந்தக் குடும்பத்திற்கு வாழ் நாள் துன்பம்.
  8. இதுவரை வடமாநிலங்களில் நடந்தது... இப்போ தமிழ் நாட்டிலும் நடப்பதுதான் பெரும் சோகம்.
  9. வாட்ஸப்பில் கண்டது….. அனுராவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தமிழ் அதிகார வர்க்கத்தினர் பலர் சமூக வலைத்தளங்களின் பிதற்றுகின்றனர். உங்களுக்கு ரணில் நல்லவர் சஜித் நல்லவர், சரத் பொன்சேகா நல்லவர், சஜித்தோடு இருந்த G.L பீரிசு நல்லவர். ஆனால் அனுரா இனவாதி.வடக்கு கிழக்கை பிரித்த கட்சியைச் சேர்த்தவர். என்னங்கடா உங்கட நியாயம் . ரணில் சஜித்,சரத் பொன்சேகா, சஜித்தோடு இருந்த G.L பீரிசு எல்லோரும் வடக்கு கிழக்கிலே தேனும் பாலும் ஓடவிட்டவங்களா ? விடுதலை புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதை வைத்துக்கொண்டு, அது தவறு என்பதை புலிகள் ஏற்றுக்கொண்ட பின்பும் இன்றளவும் புலிகள் எங்களை இன சுத்திகரிப்பு செய்தவர்கள் பயங்கர வாதிகள் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது .உங்களுக்குள் யாரும் பிரதேச வாதிகள் இல்லையா ? சாதி வெறியர்கள் இல்லையா? ஸ்ரீலங்காவிலே முதல் தடவையாக இனவாதத்தை மூலதனமாக வைக்காமல் ஒருவர் தேர்தலிலே வென்றிருக்கிறார். சிங்கள இளைய தலை முறை மாற்றத்தை விரும்புகிறது . ஆனால் நீங்கள் ? மாறமாட்டோம் என்று அடம் பிடிக்கிறீர்கள் 1971 ல் நடத்திய ஆயுத போராடத்திலே அவர்கள் 13000 பேரை இழந்தார்கள். அதன் பின் மீண்டெழுந்து 1987-89 ல் நடத்திய ஆயுத போராட்ட த்திலே 60000 பேரை இழந்தார்கள் .அவர்களது தலைவர்கள் உயிருடன் எரிக்கப்படடார்கள்.அதன் பின்பும் அவர்கள் மீண்டுவந்தார்கள். ஆயினும் எங்களுக்குள் இருந்ததை போலச் சில புல்லுருவிகள் அவர்களுக்குள்ளும் ஆதிக்கம் பெற்றதால் தடம்புரண்டு விழுந்து எழும்பினார்கள் , பின்னர் தங்களது தவறுகளிலிருந்து படிப்பினைகளை பெற்று தங்களை மறுசீரமைத்துக்கொண்டு இன்று வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ....... நான் அவற்றை எழுத விரும்பவில்லை தற்போது அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியுள்ள கலாநிதி லயனல் போபகே தெரிவித்துள்ள கருத்துக்களை படித்துப் பாருங்கள். கலாநிதி லயனல் போபகே, ரோஹன விஜேவீர தலைமையிலான ஜேவிபி இன் முதலாவது பொதுச் செயலாளரக இருந்தவர் . இருவரும் சம காலத்தவர்கள் மற்றும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணியை கொண்டவர்கள். இவர்கள் இருவரும் 1947 பாராளுமன்றத் தேர்தலின்போது மாத்தறை மாவட்டத்தில் யுஎன்பி ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிப்புகளை எதிர்கொண்ட கம்யூனிஸ்ட் குடும்பங்களின் வாரிசுகள். 1960 களில் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் மாணவராக இருந்த போபகே ஜேவிபி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 1971 கிளர்ச்சியின்போது கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார் . பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் தோற்றுவதற்கென 1972 இல் கண்டி போகம்பரை சிறைச்சாலையிலிருந்து அவர் பேராதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மீண்டும் 1983 இல் 'தமிழர்களுக்கெதிரான வன்முறையைத் தூண்டினார்கள்' என்ற பொய் குற்றச்சாட்டின் பேரில் ஜே ஆர் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட 21 இடது சாரி செயற்பாட்டாளர்களில் அவரும் ஒருவர். "கறுப்பு ஜூலை அட்டூழியங்கள் தொடர்பாகச் சிரில் மத்தியூ மற்றும் காமினி திஸாநாயக்க போன்றவர்களைக் கைது செய்து, சிறையில் அடைக்காமல் எங்களைக் கைது செய்தது ஏன்? யுஎன்பி யைத்தடை செய்வதற்குப் பதிலாக, ஜேவிபியை தடை செய்தது ஏன்" எனக் கேட்டு, அச்சந்தர்ப்பத்தில் போலிஸாருடன் வாதிட்டதை நினைவு கூருகிறார் போபகே. ஆனால், இரண்டு முதன்மையான விடயங்களின் அடிப்படையில் ரோஹன விஜேவீரவுடன் முரண்பட்டுக் கொண்ட அவர் 1983 இல் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து, ஜேவிபி இலிருந்து வெளியேறினார். சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்தமை மற்றும் ஜேவிபி மீண்டும் வன்முறையை ஓர் அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்திருந்தமை ஆகிய இரண்டு நிலைப்பாடுகள் தொடர்பாக விஜேவீரவுக்கும், அவருக்குமிடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் தோன்றின. அந்த நிலையில், கட்சியிலிருந்து வெளியேறுவதைத் தவிர அவருக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை . அதன் பின்னர் தொடர்ந்து ஜேவிபி இன் மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறார். தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் கலாநிதி லயனல் போபகே 'இலங்கையில் ஜனநாயகத்துக்கான குரல்' என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். இந்நாட்டில் வாழ்ந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலைச் சமூகங்கள் ஆகியோரின் அரசியல், கலாசார உரிமைகளுக்காக அந்த அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தற்போது நாடு திரும்பியிருக்கும் அவர் ஒரு யூடியூப் தளத்தில் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரியுடன் நடத்திய விரிவான உரையாடலொன்றில் இலங்கையின் இன்றைய அரசியல் நிலவரங்கள்குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். '' தேசிய இனப் பிரச்சினை தொடர்பான ஜேவிபி நிலைப்பாடு மற்றும் அதன் வன்முறைச் சாய்வு ஆகிய இரண்டு முக்கியமான விடயங்களின் அடிப்படையில் நீங்கள் 1983 ன் பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறி, அதன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், இன்று ஜேவிபி யின் புதிய அவதாரமான தேசிய மக்கள் சக்தியை (NPP) ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். இது ஏன் என விளக்க முடியுமா''? என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர் - ''தேசிய இனப் பிரச்சினை மற்றும் வன்முறை ஆகிய விடயங்கள் தொடர்பான என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் அவற்றுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற்று, சமத்துவமான பிரஜைகளாகக் கண்ணியத்துடன் வாழக்கூடிய ஒரு சூழல் நாட்டில் உருவாக வேண்டும் என்பதே எனது அவா." "2016 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் பிரச்சினைகள் தொடர்பான ஜேவிபி யின் அணுகுமுறையில் படிப்படியான ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதை அவதானித்திருக்கிறேன். இப்பொழுது அந்த அணி 'சுய நிர்ணய உரிமை' என்ற வார்த்தையை நேரடியாகக் கூறாவிட்டாலும் கூட, தமிழ் மக்களையும் உள்ளிட்ட இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன என்ற விடயத்தையும், அப்பிரச்சினைகள் ஒவ்வொன்றும் புறம்பான விதத்தில் கையாளப்பட வேண்டும் என்ற விடயத்தையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றது. "அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளை அவர்கள் விரிவாக விளக்கிக் கூறாவிட்டாலும் கூட அதுவே ஒரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றம் என நான் நினைக்கிறேன்". "மேலும் இன்று தேசிய மக்கள் சக்தி பல முற்போக்கு அமைப்புகளையும், குழுக்களையும், பன்முகப்பட்ட தொழில்வாண்மையாளர் கழகங்களையும் உள்வாங்கிய ஒரு பரந்த முன்னணியாக எழுச்சியடைந்திருக்கின்றது." "மாகாண சபைகள் தொடர்பாக NPP இன்னமும் ஒரு சில மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்த போதிலும், 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும் என்ற விடயத்தை அது ஏற்றுக் கொள்கின்றது. குறிப்பாக, தமிழ் தரப்புடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என்றும் அது கருதுகிறது." என்று கூறினார். " 'பழைய ஜேவிபி இப்பொழுது என்பிபி என்ற முகமூடியுடன் களமிறங்கியிருக்கிறது. அது எந்த ஒரு நேரத்திலும் மீண்டும் வன்முறையைக் கையில் எடுக்க முடியும்' என ஒரு சில விமர்சகர்கள் கூறி வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்" என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இலங்கை சமூகத்தின் அனைத்துத் தரப்புக்களையும் உள்வாங்கி ஒரு பாரிய மக்கள் இயக்கமாக எழுச்சியடைந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி இனிமேல் எந்தவொரு காரணத்திற்காகவும் வன்முறையை நாட வேண்டிய தேவை அறவே இருந்து வரவில்லை" என ஆணித்தரமாகக் கூறினார். "1987 - 1989 கிளர்ச்சியின்போது ஜேவிபி ஒரு தீவிர சிங்கள தேசியவாத நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அந்தப் பின்னணியிலேயே வன்முறைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன. "ஆனால், இன்றைய என்பிபி யில் அந்தக் கருத்தியலுக்கு இடமில்லை. என்கிறார் கலாநிதி போபகே. கடந்த 75 வருட நாடாளு மன்ற அரசியல் வரலாற்றில் தமிழினம் சந்தித்த இன்னல்களுக்குச் சிங்கள பெளத்தஇனவாத தலைவர்கள் மட்டுமல்ல அவர்களோடு திரை மறைவில் இரகசிய கூட்டு வைத்திருந்த தமிழ் தலைவர்களும் காரணமாகும். நன்றி: கிருபன் ஜீ.
  10. ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வேண்டும்.
  11. மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதே தற்போதைய தேவை – மஹிந்த தேசப்பிரிய! நாடாளுமன்ற தேர்தலை விடவும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே முக்கியத்துவமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார். இராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ஜனாதிபதியின் உரைக்கமைய நாடாளுமன்றம் ஓரிரு தினங்களுக்குள் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்ததன் பின்னர் 52 தொடக்கம் 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும். நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவிக்கும். வர்த்தமானியில் வேட்புமனு தாக்கலுக்கான தினத்தையும் தேர்தலுக்கான தினத்தையும் குறிப்பிட வேண்டியதில்லை. அதாவது இவ்வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்துக்குள் நிச்சயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போதுள்ள நாடாளுமன்றத்திற்கும் மக்கள் ஆணை கிடையாது. எனவே இந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும். அதேவேளை உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் நடத்தி மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டும். தற்போது மாகாண சபைகளும் காணாமலாக்கப்பட்டிருக்கின்றன. அவை தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக நாம் முன்னிற்போம். 13ஆவது திருத்தமா அல்லது 13 பிளஸா என்பது இரண்டாம் பட்சமாகும். ஆனால் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டாா். https://athavannews.com/2024/1400879
  12. நேபாளத்தில் தஞ்சமடைந்தாா் கோட்டா! புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கொழும்பில் நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நேபாளம் சென்றடைந்தார். 2019 தேர்தலில் 3 வீத வாக்குகளை மாத்திரம் பெற்ற திஸாநாயக்க தற்போது பெரும்பான்மையை பெற்று இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், 2022 அரகலய போராட்டத்தின் போது, வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பூட்டான் தலைநகர் திரும்பும் வழியாக கத்மாண்டு நகரை வந்தடைந்ததாக நோபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காத்மாண்டுவில், ராஜபக்சவுக்கு கோடீஸ்வர தொழிலதிபர் பினோத் சவுத்ரி ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை காலை (23) கத்மாண்டுவில் தரையிறங்கிய பின்னர், கோட்டபாய, ஜாம்சிகேலில் உள்ள மிவாண்டா ஹோட்டலில் தங்கியுள்ளார். 75 வயதான கோட்டபாய மற்றும் அவரது மனைவி ட்ரூக் ஏர் விமானம் KB 400 மூலமாக கத்மாண்டுவை அடைந்தனர். காத்மாண்டுவில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் அவர்கள், புதன்கிழமை பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1400806
  13. தாதியர் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு! தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் தாதியர் கல்வி பயிலும் மாணவி ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழகப் பொலிஸார் திங்கட்கிழமை (23) தெரிவித்தனர். நடந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் ரயில் நிலையப் பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். அந்த முறைப்பாட்டில், தன்னை நான்கு இளைஞர்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டார். இதனையடுத்து பொலிஸார் அந்த மாணவியை, திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் அந்த நான்கு சந்தேக நபர்களை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1400880
  14. லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 492 பேர் உயிரிழப்பு! லெபனானில் ஹெஸ்பொல்லாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தீவிரமான மற்றும் பரந்த அளவிலான வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 492 பேர் உயிரிழந்துள்ளனர் இதேவேளை நேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் குறைந்தது 35 சிறுவர்கள், 58 பெண்கள் மற்றும் இரண்டு மருத்துவர்களும் அடங்குகின்றனர். தாக்குதலினால் பல்லாயிரக்கணக்கான லெபனானியர்கள் தெற்கிலிருந்து வெளியேறினர், மேலும் 2006 மோதலுக்கு பிறகு மிகப்பெரிய மக்கள் வெளியேற்றத்தை நாடு எதிர்கொள்ளும் நிலையில் பெய்ரூட் நோக்கிச் செல்லும் வாகனங்கள் தெற்கு துறைமுக நகரமான சிடோனின் முக்கிய நெடுஞ்சாலையில் கடுமையான நெரிசலுக்கு முகங்கொடுத்துள்ளது இதற்கிடையில், ஹிஸ்புல்லா 200 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வடக்கு இஸ்ரேலில் ஏவியது என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. http://athavannews.com/2024/1400828
  15. அமெரிக்காவின் ஃபீனிக்ஸை தாக்கிய வெப்ப அலை; நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு. அரிசோனாவின் ஃபீனிக்ஸ் என்ற பாலைவன நகரத்தில் கடந்த 113 நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் (38 டிகிரி செல்சியஸ்) அதிகமான வெப்பநிலை நிலவி வருகின்றது. அதிரகரித்த வெப்பநிலை காரணமாக இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதனால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை குறித்த பகுதியில் பரவியுள்ள காட்டுத் தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளதாகவும் இதனால் பல பிராணிகள் உயிரிழந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஃபீனிக்ஸ் மரிகோபா கவுண்டியில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெப்ப அலை காரணமாக 256 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400846
  16. ரசோதரன், பிரேமகுமார் குணரத்தினம்… முன்பு அவுஸ்திரேலியாவில் வசித்தவரா? அத்துடன்…. “அரகலய” போராட்டத்தையும் பின்னுக்கு நின்று இயக்கியவர் என நினைக்கின்றேன். எனது கணிப்பு தவறாகவும் இருக்கலாம்.
  17. சஜித்தையும்…. “அமுல் பேபி” என்றுதான் சொல்கிறார்கள் ரசோதரன். 😂 முடியல…. 🤣
  18. வரும் மாவீரர் தினத்திற்குப் பின்…. பாராளுமன்ற தேர்தல் நடக்குமாக இருந்தால், மாவீரர் தின நிகழ்வுகளை கண்டும் காணாமல் அடக்கி வாசிப்பார்கள். பாராளுமன்ற தேர்தலின் போது… தமிழ் வாக்குகளும் அவர்களுக்கு தேவை படுகின்றது. ஜே.வி.பி. கிளர்ச்சிகளின் போது… அவர்களின் போராளிகளும் கொல்லப் பட்டமையால்… அவர்களுக்கு அந்த வலி தெரியும் என நினைக்கின்றேன். ஆனால்…. இனவாதம் கண்ணை மறைத்தால், சிங்கள சுய ரூபத்தை காட்டலாம்.
  19. கஷ்ட காலம்… ஜெயலலிதாவுக்கும் வாரிசு இல்லாமல் போயிட்டுது. இருந்திருந்தால்… கட்டுமரம் கோஷ்டி நிறைய போராட வேண்டி வந்திருக்கும்.
  20. இவர்கள் தாமாக பதவி விலகாவிடில்… புதிய அரசு, அழுத்தம் கொடுத்து விலக வைப்பார்கள். அதானால் தாமாகவே மரியாதையாக விலகிச் செல்கிறார்கள். அதுகும் நல்லதுதான்.
  21. த.தே.கூ. வுக்கு… ராஜதந்திரமா? வாய்ப்பில்லை ராஜா…. 😂 🤣
  22. அவர்களை அமெரிக்காவில் வைத்தாவது கைது பண்ணி நாட்டுக்கு கொண்டு வந்தால்தான்… அனுர தனது விம்பத்தை உயர்த்திக் கொள்ள முடியும். ஆனால் இந்த நடைமுறைகள் ஒப்பேற சில / பல வருடங்களாவது எடுக்கும். அதற்குள்…. அடுத்த பிரச்சினை கதவை தட்டும். 😂
  23. பசிலும், கோத்தாவும்…. சுழியன்கள். 🤣 அனுர தான் அடுத்த ஜனாதிபதி என்று மோப்பம் பிடித்து… தேர்தல் நடப்பதற்கு முதல் நாளே… அமெரிக்காவுக்கு ஓடித் தப்பி விட்டார்கள். 😂 இளனி குடித்தவன் யாரோ இருக்க…. கோம்பை சூப்பினவனை கைது பண்ண போகிறார்கள். 😁 😃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.