Everything posted by தமிழ் சிறி
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
ஆதவனுக்கு சாதாரண நாட்களிலேயே தடுமாற்றம். தேர்தல் நேரம் என்றால்… சொல்லத் தேவையில்லை. 😂
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
சஜித் — ரெலிபோன். அனுர — திசைகாட்டி. ரணில் - காஸ் சிலிண்டர். நாமலுக்கு என்ன சின்னம் என்று தெரியவில்லை.
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
எனது பதிலும் முதலாவதுதான். 🙂
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
எங்க, அமெரிக்காவுல இருந்தா.. Mohamed Sanoos
-
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்!
அரகலய போராடடத்தின் போது... உங்கள் அப்பா, திருகோணமலை கடற்படை தளத்திலும், உங்கள் சித்தப்பா கோத்தா... டுபாய், சிங்கப்பூர், மாலதீவு என்று ஒளித்துத் திரிந்தும்... ஒரு நாடு தங்குவதற்கு விசா கொடுக்காமல் அலைக்கழித்ததும்... பின்... ரணில் வந்தவுடன், நைசாக நாட்டுக்கு வந்ததையும்... அந்த நேரம் ... உங்கள் மனைவி, பிள்ளைகளுடன் நாட்டை விட்டு ஓடியவர்கள் என்பதையும் நாம் மறக்கவில்லை.
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
அம்பாறைதான் சரி. ஆதவன் இணையம் பிழை விட்டிட்டுது.
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
கந்தையா அண்ணை... என்ன சந்தேகம்.? 😂
-
தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு!
யாழில் வாக்கெண்ணும் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள். வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையமான யாழ். மத்திய கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களிருந்து, வாக்குப்பெட்டிகள் பேரூந்துகள் மூலம் பி.ப 05.00 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினை வந்தடைந்தது. அதேவேளை நெடுந்தீவில் இருந்து உலங்கு வானூர்தி மூலமாக வாக்குப்பெட்டி யாழ் மத்திய கல்லூரி மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400500
-
தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு!
இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட முடியும்! – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம். பெரும்பாலும் இரவு 10 மணியளவில் முதலாவது பொறுபேற்றினை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளோம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நள்ளிரவுக்கு முன்னதாக பிரதேச மட்டத்திலான தேர்தல் பெறுபேறுகளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளோம். அமைதியான முறையில் சுமூகமாக வாக்களிப்பு இடம்பெற்றது. தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மீட்டியாகொட பகுதியில் வாக்காளர் ஒருவர் நிழற்படம் எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அட்டையினை தம்வசம் எடுத்துவந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் வாக்காளர் ஒருவர் வாக்குஅட்டையினை கிழித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1400510
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
கீழுள்ள விடைகளில்... ஒன்றை தெரிவு செய்யவும். 😂 அனுரகுமார திசாநாயக்க ஆகிய நான்..... A) இந்த நாட்டின் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்கின்றேன். B) இனி தேர்தல் பக்கமே வர மாட்டேன். C) உங்களுக்காக மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வருகிறேன்.
-
தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு!
தேர்தல் முடிவுகள் வரமுன்பே... அனுரவின் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக, கேக் தயார் நிலையில் உள்ளது. 🙂
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
வாக்களிக்க செல்லும் முதியவர்கள்.
-
தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு!
தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு! தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் உள்ள வாக்குப்பெட்டிகள் கிடைக்கப் பெற்றதன் பின்னர், வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். அத்துடன், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்காளர்களிப்புக்கு 712,318 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், அவர்களில் 6,200 ஐத் தவிர ஏனைய அனைவரும் தமது வாக்குகளை அளித்துள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். நாட்டிலுள்ள 429 வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நடவடிக்கை மாலை 4.00 மணிக்குத் தொடங்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கூறினார். https://athavannews.com/2024/1400450
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 50 வீதமான வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ள-தேர்தல் ஆணைக்குழு! ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒன்றரை மணித்தியாலங்கள் உள்ளன என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 50 வீதமான வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, கொழும்பு, கம்பஹா, பொலன்னறுவை, திருகோணமலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் 50 வீதத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வன்னி, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 40 வீதத்தை தாண்டியுள்ளது. இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 20 வீதத்தை தாண்டியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1400443
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் 2 மணி நிலவரம்! நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் 2 மணி நிலவரப்படி வாக்காளர்களின் வீதம் கம்பஹா – 52%, யாழ்ப்பாணம் – 35%, முல்லைத்தீவு – 46%, வவுனியா – 51%, மன்னார் – 40%, பதுளை – 40%, இரத்தினபுரி – 58%, கேகாலை – 49%, மட்டக்களப்பு – 23%, திருகோணமலை – 51% https://athavannews.com/2024/1400437
-
தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்
வாக்குப் பெட்டியில்... "கோல்மால்" பண்ண திட்டம் போடுகிறார்களோ....
-
வாக்குச் சீட்டு பொதிகளுடன் நபர் ஒருவர் கைது!
வாக்குச் சீட்டு பொதிகளுடன் நபர் ஒருவர் கைது! சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு பொதி யின் எடை மூன்று கிலோ 325 கிராம் எனவும் மற்றைய பொதியின் எடை மூன்று கிலோ 495 கிராம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் சம்பூர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1400439
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
அம்பாறையில் தேர்தல் நிலவரம்! அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அம்பாறை மாவட்டத்தில் 5,55,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளாகவும் பல சுயேட்சைகளாகவும் களமிறங்கி உள்ளனர். இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1,84,653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது” இவ்வாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது வாக்கினை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400420
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
பின்னாலை... ரணில், காஸ் சிலிண்டருடன் சத்தமே இல்லாமல் போறார். . 😂
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
வாக்கு சீட்டை கிழித்த இளைஞன் யாழ்ப்பாணத்தில் கைது! யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞன் ஒருவர் வாக்கு சீட்டை கிழித்ததை அடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை வாக்களிக்க சென்ற இளைஞன் ,தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி , வாக்கு சீட்டினை கைகளில் பெற்ற பின்னர் , வாக்களிக்காது ,அதனை கிழித்துள்ளார். அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையின் போது , இளைஞன் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிற்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1400407
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்! ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும் இருந்த நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது இதேவேளை இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது களுத்துறை – 32% கம்பஹா – 25% கேகாலை – 15% நுவரெலியா – 30% இரத்தினபுரி – 20% அம்பாறை- 30% மன்னார்- 29% முல்லைத்தீவு – 25% வவுனியா – 30% கொழும்பு – 20% கண்டி – 20% காலி – 18% மாத்தறை – 30% மட்டக்களப்பு – 17% குருநாகல் – 30% பொலனறுவை – 38% மொனராகலை – 21% பதுளை – 21% https://athavannews.com/2024/1400397
-
ஜனாதிபதி தேர்தல்-யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலைவரம்! ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலிற்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 07.00 மணி முதல் ஆரம்பமாகி சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றது. வவுனியா மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன், இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தியிருந்தார். https://athavannews.com/2024/1400351 ################## ################## ################### மலையக பெருந்தோட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு! இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதன்படி நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.aகொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் 90,990 வாக்காளர்கள் வலப்பனை தேர்தல் தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 78,437 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1400359 ################# ################## ################### மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் ஆரம்பம்! மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. இன்னிலையில் வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400362
- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.