Everything posted by தமிழ் சிறி
-
வடக்கு கிழக்கு இணைக்கப்படாது;நாமல் உறுதி
அப்படி சொன்னால் நாமலுக்கு... மாட்டு சாணியும், மனுச சாணியும் கலந்து அடிப்பார்கள். 😂 🤣
-
ஜனாதிபதித் தேர்தல்-பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை!
இவங்கள் "மிக்ஸர்" சாப்பிட வாறாங்கள். 😂 நடந்து முடிந்த எத்தனையோ... தேர்தல்களுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் வந்துள்ளார்கள். எப்பவாது ஒரு முறைகேட்டை கண்டு பிடித்து அம்பலப்படுத்தி இருக்கிறார்களா...? அரசாங்கம் அவர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டேல் கொடுத்து... குட்டியும், புட்டியும் கொடுக்க... கும்மாளம் அடிக்கிற ஆட்களுக்கு... தேர்தலை குறை சொல்ல எப்படி மனம் வரும். இவங்களை கூப்பிடுகிற காசுக்கு... இரண்டு விகாரையை கட்டி விட்டு போகலாம். 🤣
-
ஜனாதிபதித் தேர்தல்-பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை!
ஜனாதிபதித் தேர்தல்-பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை! ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 9 நாடுகளில் இருந்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க அவர்கள் வருகை தந்துள்ளதாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி முதல் அவர்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். இதில் சார்க் வலய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ரஷ்ய கண்காணிப்பாளர்களும் இந்த கண்காணிப்பு குழுக்களில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399264
-
கிளிநொச்சியில் முஸ்லிம்களின் காணி அபகரிப்பு- கண்ணீர் விட்டு கதறும் தாய்
முஸ்லீமுக்கு வந்தால் இரத்தம், தமிழனுக்கு வந்தால்... தக்காளி சட்னி. 😂
-
வடக்கு கிழக்கு இணைக்கப்படாது;நாமல் உறுதி
ரசோதரன்.... நீங்கள் சொல்லி வாய்மூடவில்லை , நாமல் ராஜபக்க்ஷவின் சொந்த ஊரில் கல்லெறி விழுந்திருக்கு. 😂 🤣 மஹிந்தவின் கோட்டையில் நாமல் கூட்டத்தில் கல்லெறி; அச்சத்தில் ராஜபக்க்ஷ குடும்பம் இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ கலந்துள்ளவிருந்த கூட்டத்தில் கல்லஎறியப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் மீது கற்கள் வீசப்பட்ட நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் இந்த தாக்குதலால் அச்சமடைதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கூட்டத்தல் ஜனாதிபதி வேட்பாளர்களான நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்த போதிலும், சம்பவத்தின் பின்னர் அவர்கள் பங்கேற்கவில்லை. https://jvpnews.com/article/mahinda-s-fort-stoned-at-namal-crowd-hambantota-1726128961?itm_source=article ################# ################# ############# நாமல் ராஜபக்க்ஷவின் சொந்த ஊரில் கூட்டத்தில் கல்லெறி சம்பவத்தால் பரபரப்பு! ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ கலந்து கொள்ளவிருந்த கூட்டத்தில் கல் எறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்ட நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் இந்த தாக்குதலால் அச்சமடைதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கூட்டத்தால் ஜனாதிபதி வேட்பாளர்களான நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்த போதிலும், சம்பவத்தின் பின்னர் அவர்கள் பங்கேற்கவில்லை. அதேவேளை கூட்டத்தில் இடம்பெற்ற , கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த குழந்தை ஒன்று ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாமலின் தாயார் ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலைக்கு சென்று குழந்தையின் நலம் விசாரித்துள்ளார். அதேவேளை, முன்னொரு காலத்தில் மகிந்தவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டையில், தற்போது ராஜபக்க்ஷ குடும்ப கூட்டத்தில் கல்லெறியப்பட்ட சம்பவம் ராஜபக்க்ஷ குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://tamilvisions.com/Namal-Rajapaksas-home-town-rocked-by-stone-pelting-incident
-
கருத்து படங்கள்
இன்று 1003´வது கருத்துப் படத்தை இணைத்துள்ளேன். 🙂
-
கருத்து படங்கள்
- இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை- கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கைச்சாத்து
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை- கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கைச்சாத்து. தெற்காசியாவில் முதன் முறையாக இலங்கையில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் இன்று ஆளுநர் தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. திருகோணமலையில் உள்ள நிலாவெளி,மட்டக்களப்பில் உள்ள பாசிக்குடா, அம்பாறையில் உள்ள அருகம்பே போன்ற சுற்றுலா தளங்களின் இயற்கை அழகை ரசிக்கும் வகையிலும், பயணத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் பறக்கும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வேலைத்திட்டமானது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன் போது கருத்து தெரிவித்த சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச், இலங்கையில் உள்ள பல மாகாணங்களை ஒப்பிடும் போது,கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருடமாக ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதை அவதானிக்க முடிந்தது. ஆளுநர் Air- Ship சேவையை ஆரம்பிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு அமைய கடந்த ஒரு மாத காலமாக எமது நிறுவனத்தின் அதிகாரிகள் இங்கு இருந்து இவ்வேலைத்திட்டம் குறித்து ஆராய்ந்தனர். எங்களுடைய ஆய்வு அறிக்கை படி இவ்வேலைதிட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதை அறிந்து air ship வேலைத்த்திட்டத்திட்காக முழு முதலீடு செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1399191- பலத்காரம் செய்ய முயன்ற மருத்துவரின் ஆணுறுப்பை பிளேட்டால் அறுத்த தாதி.
பலத்காரம் செய்ய முயன்ற மருத்துவரின் ஆணுறுப்பை பிளேட்டால் அறுத்த தாதி. பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு, மருத்துவமனை நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து குடிபோதையில் அங்கு பணியாற்றி வந்த தாதியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய தாதி, மருத்துவர் சஞ்சய் குமாரின் பிறப்பு உறுப்பை கையில் கிடைத்த பிளேடால் அறுத்துவிட்டுள்ளார். அதன்பின் மருத்துவமனையில் இருந்து தப்பித்த தாதி, அருகில் இருந்த இடத்தில் மறைந்துகொண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைத்த பொலிஸார் தாதியை மீட்டு மருத்துவர் சஞ்சய் குமார் உட்பட அந்த மூவரையும் கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணை பலாத்காரம் செய்ய முடிவெடுத்ததும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை மருத்துவர் அணைத்துள்ளார் என்றும் சம்பவ இடத்தில் இருந்து அந்த உபயோகித்த பிளேட், இரத்தம் தோய்ந்த துணிகள், மூன்று கைபேசிகள், மதுபான போத்தல்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://athavannews.com/2024/1399232- சிரிக்கவும் சிந்திக்கவும் .
விடிய காலை ஆறு மணிக்கே... போண்டா, பஜ்ஜி, வடை என்று போடுகிறீர்களே... இதையெல்லாம் யார் சாப்பிடுவார்கள்? வேறை யார்... வாக்கிங் போறவங்கதான். 😂 🤣- நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த நாமல்
நல்லை ஆதீன முதல்வரை சந்தித்த நாமல். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகைதந்தநிலையில் நல்லை ஆதீனத்திற்குச் விஜயம் செய்தார். நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்த நாமல் ராஜபக்ஷ பொன்னாடை போர்த்து கௌரவித்தார். பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டநிலையில் நல்லை ஆதீன குரு முதல்வரால் நாமல் ராஜபக்ஷவுக்கு நினைவாக நந்திக் கொடி வழங்கப்பட்டது. https://athavannews.com/2024/1399182- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- என்னை எந்த பிரதான கட்சித் தலைவர்களும் பேசுவதற்காக அழைக்கவில்லை; அழைத்தாலும் நான் செல்வதாக இல்லை - அரியநேத்திரன்
தமிழ் மக்களுக்கு நான் ஒன்று கூறுகின்றேன். நீங்கள் குழப்பமடையத் தேவையில்லை. விருப்பு வாக்கு, விருப்பத் தேர்வு என்கின்ற விடயத்தில் பலர் மக்களை குழப்பமடையச் செய்து வருகின்றனர். மக்களாகிய நீங்கள் எனது சங்கு சின்னத்துக்கு மட்டும் ஒரு புள்ளடியிடுங்கள் அவ்வளவுதான்.- சிரிக்கலாம் வாங்க
என்ன.... சமையல்காரரே, உளுந்து வடையில்... ஒட்டை பெரிதாக இருக்கின்றது? ஆமாம் மன்னா... கைவிரலில் காயம், அதனால்... கால் கட்டை விரலை யூஸ் பண்ணிட்டேன். 😂 🤣- யாழ் மறை மாவட்ட ஆயருடன் நாமல் சந்திப்பு!
யாழ் மறை மாவட்ட ஆயருடன் நாமல் சந்திப்பு! ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் யாழ் மறை மாவட்ட ஆயரிற்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. யாழ் மறை மாவட்ட ஆயருடனான சந்திப்பில் நாமல் ராஜபக்ச மற்றும் அவர் தரப்பை சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் 15 நிமிடங்கள் குறித்த சந்திப்பு இடம் பெற்றது. https://athavannews.com/2024/1399120- புலம்பெயர் தொழிலாளர்களினால் அனுப்பப்படும் பணத்தொகையின் வீதம் அதிகரிப்பு!
புலம்பெயர் தொழிலாளர்களினால் அனுப்பப்படும் பணத்தொகையின் வீதம் அதிகரிப்பு! கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களினால் நாட்டுக்கு அனுப்பட்ட பணம் 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த ஓகஸ்ட் மாதம் புலம்பெயர் தொழிலாளர்களினால் மொத்தம் 577.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் நாட்டிற்கு 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளன. இதனிடையே, உத்தியோகபூர்வ பணம் அனுப்பும் முறைகளைப் பயன்படுத்தும் தொழிலாளர்களுக்கு மின்சார வாகன கொள்வனவில் குறைந்த வட்டி கடன் போன்ற சலுகைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399134- கருத்து படங்கள்
இலங்கை தமிழரசு கட்சியின் வீடு பிரிக்கப் படுகின்றது.- வட்டுக்கோட்டையில் மகாகவி பாரதியார் வீதி திறப்பு!
மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கும் ஸ்ரீலங்கா பிக்குகளுக்கும் என்ன சம்பந்தம். கண்ட இடங்களுக்கு எல்லாம் பிக்குகளை ஏன் கூப்பிடுகின்றார்கள். அவங்களுக்கு விகாரையில் வேறு வேலை இல்லையோ... கூப்பிட்டவுடன் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு வாறாங்கள். பார்க்க பத்திக் கொண்டு வருகுது. 😡 கூப்பிடுகிறவனும் பைத்தியக்காரன் வாறவனும் பைத்தியக்காரன்.- 15ஆம் திகதி பூமியை தாக்கவுள்ள இராட்சத கோள் – நாசா எச்சரிக்கை
15ஆம் திகதி பூமியை தாக்கவுள்ள இராட்சத கோள் – நாசா எச்சரிக்கை. பயங்கர வேகத்தில் பூமியை நோக்கி வரும் 2024 ON என்ற இராட்சத சிறுகோள், எதிர்வரும் 15ஆம் திகதி பூமிக்கு அருகில் செல்ல உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. 720 அடி விட்டம் கொண்ட இந்த ராட்சத சிறுகோள், இரண்டு கிரிக்கெட் மைதானங்களை விட பெரியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரம்மாண்டமான விண்வெளி பாறை வரும் 15ஆம் திகதி அன்று பூமிக்கு அருகில் செல்ல உள்ளது. இருப்பினும், இந்த சிறுகோள் சுமார் 620,000 மைல்கள் அல்லது தோராயமாக 2.6 மடங்கு பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் 25,000 மைல் வேகமானது வானியலாளர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள் கண்காணிப்பு திட்டத்தால் முதலில் அடையாளம் காணப்பட்ட இந்த ராட்சத சிறுகோள் 2024 ON, அதன் ஈர்க்கக்கூடிய அளவு மற்றும் விரைவான வேகம் காரணமாக கவனத்தை ஈர்த்துள்ளது. கலிபோர்னியாவின் பசடேனாவில்(Pasadena) உள்ள ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (The Jet Propulsion Laboratory), மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கி கருவிகளைப் பயன்படுத்தி சிறுகோளைக் கண்காணித்து வருகிறது. சிறுகோளின் அளவு, வடிவம் மற்றும் கலவை பற்றிய விரிவான பகுப்பாய்வுகள், ஏதேனும் சாத்தியமான அபாயங்களை மதிப்பிடுவதற்கும் உத்திகளை ஆராய்வதற்கும் நடத்தப்படுகின்றன. சிறுகோள் வலிமையான வேகம் மற்றும் பெரிய அளவில் உள்ளபோதிலும், அது பூமியுடன் மோதுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனினும், நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் (PDCO) தொடர்ந்து விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. கிரக பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் PDCO, விண்வெளியில் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களைத் திசைதிருப்ப அல்லது தணிக்க உத்திகளை அடையாளம் காணவும், கண்காணிக்கவும் உறுதிபூண்டுள்ளது. சிறுகோளின் கலவையை ஆய்வு செய்ய ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடனான ஆலோசனை நடந்து வருகிறது. NASA, ESA மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் விண்வெளி ஆய்வு மற்றும் கிரக பாதுகாப்பில் உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. நாசா தனது இணையதளம் மற்றும் சமூக ஊடக தளங்களில் வழக்கமான புதுப்பிப்புகள் மூலம் பொதுமக்களுக்கு தகவல் அளித்து வருகிறது. வட அரைக்கோளத்தில்(Northern Hemisphere) உள்ள ஆர்வலர்கள், விர்ச்சுவல் டெலஸ்கோப் வாயிலாக வழங்கப்படும் நேரடி ஒளிபரப்பு மூலம் சிறுகோளின் அணுகுமுறையை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1398938- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
ரீவீக்கு…. துவாயை போர்த்து, கமலாவின் முகத்தை மறைத்த ட்ரம்பின் தீவிர ரசிகர். 😂- 38 நாடுகளின் பயணிகளுக்கு விசா சலுகை; எங்களுக்கு இல்லையா? - பாகிஸ்தான் போர்க்கொடி
மாலைதீவுகாரனே… ஶ்ரீலங்காவுக்கு விசா இல்லாமல் வர அனுமதிக்கும் போது, பாக்கியை…. விசா எடுத்துக் கொண்டு வா… என்றால், பாக்கி சும்மா இருக்குமா.😂 இதை பார்த்து இந்தியா கொடுப்புக்குள்ளை சிரிக்குதாம். 🤣- நுவரெலியா - கந்தப்பளையில் அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்; அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!
விசுகர்… தனது பிள்ளைகளுக்கு “பெல்ற்”ரால் அடிக்கலாம். 😂 🤣- யாழ்ப்பாணத்தில் டிப்பர் மோதி பாடசாலை மாணவி பரிதாபமாக பலி
அது ஏன்…. யாழ்ப்பாணத்திற்கு அருகில் அடைப்புக் குறிக்குள் Jaffna என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள். வெள்ளைக்காரரும் இவர்களின் செய்தியை வாசிக்கின்றார்களா ? அல்லது இவர்களின் நிறுவனத்தில் முழு லூசுகளும் வேலை செய்கின்றார்களா…. ப்ளீஸ்… ரெல் மீ.- மனிதம் இன்னும் .....
நல்ல ஒரு காரியத்தை அவதானித்து, எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நிலாமதி அக்கா. இதனை வாசித்தவர்கள் அடுத்தமுறை இப்படியான சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது நிச்சயம் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.- கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்ய விரும்பவில்லை : இராஜாங்க அமைச்சு பதவி பறிபோனதிலும் கவலையில்லை - கீதா குமாரசிங்க!
எல்லாரும் நல்ல விபரமாகத்தான் இருக்கின்றார்கள். முதலில்...இந்த கட்சி தாவும் அரசியலை... அடியோடு ஒழிக்க வேண்டும். ஆசிய நாடுகளில்... இது ஒரு குரங்கு விளையாட்டு மாதிரி மக்களை முடடாளாக்கி கொண்டு இருக்கின்றார்கள்.... பைத்தியக்காரர்கள். சும்மாவே.... கண்ட இடமெல்லாம் கால் வைத்து குலைத்துக் கொண்டு இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தா... ஜனாதிபதி தேர்தல் நேரம் ஞானி போல் தவ நிலையில் இருக்கின்றார். தேர்தல் முடிந்து வெற்றி பெறும் கட்சியுடன் ஒட்டிக் கொண்டு, அடுத்த அமைச்சர் பதவி பெற்று, அடுத்த ரவுண்டு காசு அடிக்க... இந்தக் கள்ள மௌனம் அவருக்கு தேவைப்படுகின்றது. - இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை- கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கைச்சாத்து
Important Information
By using this site, you agree to our Terms of Use.