Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சரி... சரி.., ரென்சன் ஆகாதேங்கோ. 😂 அடுத்தமுறை கவனமாக பார்த்து பதிகின்றேன். 🤣
  2. தனது மகளை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை கைது! தனது 10 வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 10 வயதான பாடசாலை மாணவியை , ஆசிரியரான அவரது தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1398184 @நிழலி
  3. 71 வயது டொமினிக்... பாவாடைக்குள் படம் பிடிக்கப் போய், அம்பிட்டதை நினைக்க சிரிப்பாக இருக்கு. 😂 "ஆனைக்கும் அடி சறுக்கும்." 🤣
  4. சம்பள உயர்வு தொடர்பில் பொதுமக்களை ஏமாற்ற முயற்சி – பெப்ரல் சுட்டிக்காட்டு. அரச ஊழியர்களிற்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பிற்கு முன்னதாக அரசாங்கம் பொதுமக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என பவ்ரல் தெரிவித்துள்ளது. அமைச்சரவை எதிர்வரும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூன்று தீர்மானங்களை எடுத்துள்ளது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம் குறித்து நான் முரண்படவில்லை,எனினும் இந்த மூன்று தீர்மானங்களும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் இவை பாரதூரமானவை என அவர் தெரிவித்துள்ளார். சில மாதங்களிற்கு முன்னரே அரசாங்கம் ஒருசதம் கூட சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் மூலம் அரசாங்கம் தெரிவித்திருந்தது. உத்தேச சம்பள அதிகரிப்பை வழங்குவது என்றால் அரசாங்கத்திற்கு மாதமொன்றிற்கு 20 மில்லியன் தேவை என தெரிவித்துள்ள ரோகண ஹெட்டியாராச்சி இவ்வாறான அறிவிப்புகள் மூலம் அரசாங்கம் அரசாங்க ஊழியர்களை ஏமாற்ற முயல்கின்றது என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1398214
  5. 2000ஆம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற மிருசுவில் படுகொலைக்கு, முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய பொது மன்னிப்பு வழங்கியதை மீண்டும் விசாரிக்க, 2025´ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி பரிசீலிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கண்கண்ட சாட்சிகள் இருந்தும், கொலையாளிக்கு தண்டனை ஏற்கெனவே விதிக்கப் பட்டும்... ஒரு ஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான செயலினால் இன்னும் நீதி கிடைக்க வில்லை. இதற்காக 25 வருடங்கள் உறவினர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சட்டத்துடன் போராட வேண்டியுள்ளது. இதுவே... ஒரு சிங்களவனுக்கோ, முஸ்லீமுக்கோ நடந்து இருந்தால் எப்போதோ நீதி கிடைத்திருக்கும்.
  6. மூன்றாவது முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழன். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இதுவரை பரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் , பரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில், மூன்றாவது முறையாகப் பராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1398204
  7. 2025´ல் அரச ஊழியர்களுக்கு வரலாறு காண முடியாத அளவிற்கு சம்பள உயர்வு. - ரணில். -
  8. பைலட் அண்ணே... கொஞ்சம் நிற்பாட்டுங்க. என்ரை பெட்டி, கீழை விழுந்திட்டுது. 😂
  9. முதலையாய் பிறந்தால்.. எவ்வளவு கஸ்ரப் பட வேண்டும் தெரியுமா. 😂 🤣
  10. வட கொரியாவில் 30 பேருக்கு மரண தண்டனை-கிம்ஜாங் உன் பிறப்பித்த உத்தரவு! வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் பலத்த மழை காரணமாக அந்நாட்டின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், 4 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.15 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர் இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் அவர்கள் கடமையை சரியாக செய்யாததால், பேரிழப்பு ஏற்பட்டு உள்ளதுடன் அவர்கள் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர். இன்னிலையில் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்படி கிம்ஜாங் உன் உத்தரவிட்டதுடன் இதனையடுத்து, உயர் அதிகாரிகள் உட்பட 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1398164
  11. இதுக்கும் பிறகும்... புகை பிடிப்பவனுக்கு, தடித்த தோலாக இருக்க வேண்டும். 😂
  12. ஒக்டோபர் முதல் நவீன கடவுச்சீட்டு – மக்களிடம் நெருக்கடி நிலைக்கு மன்னிப்பு கோரிய ஜனாதிபதி. கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள நெரிசலை விரைவில் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கடவுச்சீட்டு தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு விரைவில் நாம் மாறாவிட்டால், 2035 முதல் 2040 வரையான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மீண்டும் ஒரு நெருக்கடி நிலை ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இனம், சாதி, மதம் அன்றி நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில், தாம் மகிழ்ச்சியடைவதாக சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒக்டோபர் மாதம் முதல் நவீன கடவுச்சீட்டை குறைந்த கட்டணத்தில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1398069
  13. யாழில் சர்வதேச விளையாட்டு மைதானம் – சஜித் வாக்குறுதி. ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மைதானத்துடன் யாழ்ப்பாண இளைஞர்களுக்கான விளையாட்டு மேம்பாட்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தின் போது கிரிக்கெட் மைதானம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதனைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த உரையாடல் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான யோசனைக்கு வழிவகுத்ததாக தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் தாம் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் ஆய்வு செய்ததாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் பாரிய காணி கையாளப்படுவதை அறிந்ததாக தெரிவித்த அவர், காணி ஒதுக்கப்பட்ட போதிலும், கிரிக்கெட் மைதானமாக அபிவிருத்தி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார். குறித்த காணி சர்வதேச கிரிக்கட் மைதானமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், விளையாட்டுப் பயிற்சி வசதிகளும் அப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1398084
  14. ரணிலையும், சஜித்தையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம் பெறுகின்றன! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவையும் ஒன்றிணைக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் மக்கள் கூட்டம் இன்று காலி, எல்பிட்டிய நகரில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு தொடர்பாக சிந்தித்திருந்தால் எவ்வளவோ வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்க முடியும்.ஆனால் அவர் அப்போது அதனை செய்யவில்லை. இன்று அவர் தேர்தல் தோல்விக்கு அஞ்சி வாக்குறுதிகளை வழங்கிவருகின்றார். மக்கள் பெரும்பான்மை தமக்கு இல்லை என்பதை ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க நன்கு அறிவார். ரணிலும் சஜித்தும் இன்று வெவ்வேறாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். இருவரும் தனித்து போட்டியிடுவதனால் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் வெற்றிபெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையும் அவர்கள் அறிவார்கள். எனவே தற்போது ரணிலும் சஜித்தும் ஒன்றிணைவதற்கு திட்டமிட்டுள்ளனர். ஒன்றிணைவது தொடர்பாக ரணிலும் சஜித்தும் இதுவரை கலந்துரையாடவில்லை. ஆனால் இரண்டாம் நிலையில் உள்ளவர்கள் அது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். நாட்டு மக்களின் ஆணை தேசிய மக்கள் சக்திக்கே உள்ளது. நாட்டில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காகவே நாம் மக்கள் ஆணையை கோருகின்றோம். நாடு தொடர்பாகவும் மக்கள் தொடர்பாகவும் சிந்திக்காதவர்களுக்கு மக்கள் ஒருபோது வாக்களிக்க மாட்டார்கள்” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1398027
  15. அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மு.க ஸ்டாலின்: 4,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு! அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையிலும் , தொழில் முதலீடுகளை மேம்படுத்தும் விதமாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 1,300 கோடி ரூபாய் முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1398059
  16. சாதனை நிகழ்த்தி பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி கிரின்ஹாம்! பாரிஸ் பராலிம்பிக்கில் பிரிட்டனைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனையான ஜொடீ கிரின்ஹாம், மகளிருக்கான வில்வித்தைப் போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 7 மாத கர்ப்பிணியான அவர்இ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருந்த சக நாட்டு வீராங்கனையான பேட்டர்சனை வீழ்த்தி வெண்கலம் வென்றார். இதன் மூலம் விளையாட்டுத்துறையில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி என்ற பெருமையை தொடரில் படைத்துள்ளாா். https://athavannews.com/2024/1398066
  17. உக்ரைனின் அமைச்சரவையில் இருந்து முக்கிய அமைச்சா்கள் இராஜினாமா! உக்ரைனின் ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து நான்கு முக்கிய அமைச்சா்கள் இராஜினாமா செய்துள்ளனர். ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய அமைச்சா் ஒலெக்சாண்ட்ர் கமிஷின் ஆகியோரே தமது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இதேவேளை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம், உடனடியாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனவும், பாராளுமன்றத்திற்கான கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் அமைச்சா்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக சண்டை நடைபெற்று வரும் நிலையில், இந்த இராஜினாமா விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரஷியா உக்ரைன் மீது போர் ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுதம் வழங்கி வருவதால் ரஷியாவின் தாக்குதலைஉக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையே ரஷியாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து வைத்து, ரஷியாவின் திட்டத்தை முறியடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1398052
  18. ஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீராங்கனை மீது பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்! உகாண்டா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி [Rebecca Cheptegei] மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 சதவீத தீக்காயங்களுடன் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ரெபேக்கா. கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா சமீபத்தில் நாடு திரும்பியிருந்தார். இதன்பின் கென்யா நாட்டில் மேற்கு Trans Nzoia மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது காதலன் டேனியலுக்கும் [Daniel Ndiema] இடையில் வாக்குவாதம் எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் டேனியல். இதனால் அவருக்கு 75 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, டேனியலுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உகாண்டா மற்றும் கென்ய நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2024/1398062
  19. மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி, ஒலிம்பிக் போட்டி நடந்த அதே பாரிஸ் நகரில் இப்போது நடந்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா எட்டுப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தியிருக்கிறது. இது இந்தியா 2024ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வென்ற மொத்தப் பதக்கங்களை விட அதிகம். அது மட்டுமல்ல, இப்போது பதக்கப் பட்டியலில் பதினைந்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. இது இன்னும் முன்னேறலாம். இந்தியா தனது 2024 ஒலிம்பிக்கை 71வது இடத்தில் நிறைவு செய்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். நமது பிள்ளைகளை ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கிறார்களோ இல்லையோ இந்தப் பாராலிம்பிக் போட்டிகளைப் பார்க்க நாம் ஊக்குவிக்க வேண்டும். அங்கே வலிக்கிறது, இங்கே வலிக்கிறது என்று சொல்லிவிட்டு சாதாரண உடற்பயிற்சிகளைக் கூட செய்யாமல் இருப்பவர்களுக்கு பாராலிம்பிக் வீரர்கள் மண்டையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து சொல்லித் தருகிறார்கள். ஏதேதோ பிரச்னைகள், அழுத்தங்கள் என்ற மனநிலையோடுதான் கால்களை மட்டுமே பயன்படுத்தி அம்பு எய்யும் ஷீத்தல் தேவியின் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு இரண்டு கைகளையும் பயன்படுத்தி அம்பு எய்பவர்களோடு சரி சமமாகப் போட்டி போடும் ஷீத்தலின் வயது வெறும் பதினேழுதான். ஆனால் 10, 9 என்ற புள்ளிகளை விட குறைவாக ஒரு அம்பு கூட செல்லவில்லை. பாராலிம்பிக் இருபாலருக்குமான அம்பு எய்தும் போட்டியில் ஷீத்தல் வெண்கலம் வென்றாள். அந்த அறிவிப்பு வந்தபோது அனைவரும் மகிழ்ந்து கொண்டாட அவள் கண்கள் கலங்குகின்றன. துடைத்துக் கொள்ள நீளும் கைகள் இல்லை அவளுக்கு. கலங்கத் தொடங்கிவிட்ட என் கண்களை துடைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். நானெல்லாம் பிரச்னை என்று சொல்லிக் கொள்ளவே தகுதியற்றவன் என்பதை ஷீத்தல் மட்டுமல்ல பாராலிம்பிக்கில் போட்டியிடும் ஒவ்வொரு வீரனும் வீராங்கனையும் எனக்கு உணர்த்தி விட்டார்கள். வீரம் என்பது முதலில் நம்மை வெல்வது. நம் மனம், உடல் தரும் தடங்கலைத் தாண்டி போட்டிக்கு வந்து நிற்பது. அதற்குப் பிறகுதான் வெற்றி தோல்வி எல்லாம். பாராலிம்பிக் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகிறது. தவறாமல் பாருங்கள். Shan Karuppusamy 03-09-24
  20. விசுகு... சரியாக சொன்னீர்கள். நாங்கள் செய்யவும் மாட்டம், செய்யுறவனையும்.. கேலியும், நையாண்டியும் சொல்லிக் கொண்டு இருப்பம்.
  21. பாரிஸ் பாரா ஒலிம்பிக் Badminton போட்டியில்... தமிழ் நாட்டை சேர்ந்த நித்திய ஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்றார். ஏற்கெனவே நடந்த Badminton போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த துளசிமதி வெள்ளியும், மணிஷா வெண்கலமும் வென்றுள்ளனர். இம்முறை நடக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில்... பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் தமிழர்களுக்கு பாராட்டுக்கள். 🙂
  22. அட... இஸ்ரேலுக்கு கோவம் வந்திட்டுது. 😂 பிரித்தானியாவின் உள்நாட்டு அலுவலில் தலையிடும் அளவுக்கு, இஸ்ரேல் செல்லப் பிள்ளை எண்டால் பாருங்கோவன். 🤣 எல்லாம்... ஸ்ரீலங்காவிடம் பழகின பழக்கமாக இருக்கும். 😃
  23. தமிழ் கார்டியன்... tribute என்ற சொல்லை ஏன் பாவித்தது என்று தெரியவில்லை. இத்தாலிய மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யும் போது ஏற்பட்ட தவறாகவும் இருக்கலாம். நமக்கு... குழம்பு ருசியாக இருந்தால், சரிதானே.... 😂 🤣
  24. இந்த மீம்ஸை தயாரிப்பவர்கள்... முஸ்லீம்கள். நான் பார்த்த அளவில், அவர்களில் பெரும்பாலானோர்... ரணிலையும், அனுரவையும் ஆதரிக்கின்றார்கள். சஜித்தை ஆதரித்து வந்த மீம்ஸ் ஒன்றையும் இதுவரை காணவில்லை. நம்ம @தனிக்காட்டு ராஜாவும் (முனிவர்) மீம்ஸ் தயாரிக்கின்றார். மேலுள்ளது தனிக்காட்டு ராஜா தயாரித்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.