Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நாளைக்கு... சஜித் பிரேமதாச வந்து, மாவையை அவரின் வீட்டில் வைத்து சந்தித்தால்.... "ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்று தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கை அபிவிருத்தி செய்வார் : இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை நம்பிக்கை ! என்று மரத்துக்கு மரம் கொப்பு தாவும் கொள்கையுடையவர்தான் மாவை. 😂 மாவை சேனாதிராஜா, வாழ்க்கையில்... ஒரு நாள் கூட, வேலைக்குப் போய் சம்பாதிக்காதவர் என்று, எத்தனை பேருக்கு தெரியும். 🤣
  2. அரச ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 57,500 ரூபாயாக உயர்த்துவோம். - சஜித்.-
  3. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்- 50 பேர் பலி. உக்ரைனின் பொல்டோவா மாகாணத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதேவேளை, இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் – ரஷியா இடையேயான போர் 925 நாளாக நீடித்து வரும்நிலையில், இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளமை குறிப்படத்தக்கது. https://athavannews.com/2024/1398592
  4. தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வந்துவிட்டது. அந்த அறிக்கையானது பின்வரும் விடயங்களை தெளிவாக முன் வைக்கின்றது. முதலாவதாக, அது தமிழ் மக்களை இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம் என்று கூறுகின்றது. அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பன்னாட்டுப் பொறிமுறையின் ஊடாக வெளிப்படுத்துவதற்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. இரண்டாவதாக, அந்த அறிக்கையானது ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வுகளை நிராகரிக்கின்றது. அதேசமயம் இலங்கைத் தீவின் பன்மை தேசிய பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் இலங்கை தீவின் புதிய யாப்பானது பன்மை தேசிய அரசாக கட்டமைக்கப்பட்ட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. மூன்றாவதாக, இன அழிப்புக்கு எதிரான பரிகார நீதியை அந்த அறிக்கை கோரி நிற்கின்றது. பரிகாரநீதி என்பது அதன் அதன் பிரயோக வடிவத்தில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பை உள்ளடக்கியதுதான் என்ற ஒரு வியாக்கியானம் உண்டு. அந்த அறிக்கை தொடர்பாக பல்வேறு வாத பிரதிவாதங்கள் நடக்கின்றன. அந்த அறிக்கையில் பன்மைத் தேசியம் என்ற பதம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. பன்மைத் தேசிய அரசு என்ற பதம் கடந்த தசாப்தங்களில் அறிமுகத்துக்கு வந்தது.1980 களின் தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்க நாடாகிய பொலிவியாவில் சுதேச மலைவாழ் மக்களின் போராட்டங்களை முன்னெடுத்தவர்களால் பிரயோகிக்கப்பட்ட வார்த்தை அது.பொலிவியாவின் புதிய யாப்பின்படி அங்கு இருப்பது பன்மை தேசிய அரசு என்று அழைக்கப்படுகிறது. ஆனால் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் எங்கேயும் பொலிவியா என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை. பன்மைத் தேசிய பண்புடைய ஒரு அரசைக் கட்டமைக்க வேண்டும் என்று கூறப்படுகிறதே தவிர பொலிவியாவைப்போல என்று கூறப்படவில்லை. பொலிவியாவில் இருப்பது போன்ற ஒரு தீர்வை இங்கு உருவாக்க வேண்டும் என்று அந்த தேர்தல் அறிக்கை எங்கேயும் கேட்கவில்லை. தேர்தல் அறிக்கையில் இருப்பது ஒரு கருத்துருவதைக் குறிக்கும் வார்த்தை.பொலிவியாவில் இருப்பது ஒரு கட்டமைப்பு.இரண்டையும் ஒன்றை மற்றத்துடன் மாறாட்டம் செய்யத் தேவையில்லை.மேலும்,கஜேந்திரக்குமார் 2020ஆம் ஆண்டு ஒகஸ்ற் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாரும்போது அந்த வார்தையைப் பயன்படுத்துகிறார்.அவர் தனது உரையில் “ஸ்ரீலங்கா ஒரு பன்மைத் \தேசிய நாடு”என்று கூறுகிறார்.அவர் அப்படிக் கூறியதற்காக, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையானது, அவருடைய கட்சியின் பகிஷ்கரிப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறது என்று பொருள் கொள்ளலாமா? அந்த தேர்தல் அறிக்கை மிகத் தெளிவாக ஈழத் தமிழர்கள் இறமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம்; தேசம் என்று கூறுகின்றது. ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வை அது நிராகரிக்கின்றது. அதுமட்டுமில்லை,அந்த தேர்தல் அறிக்கையானது நிலை மாறுகால நீதியை நிராகரித்து, பரிகார நீதியைக் கேட்கின்றது. பரிகார நீதி என்பது இனப்படுகொலைக்கு எதிராகத் தரப்படுவது. அது பெரும்பாலும் இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் தனக்கு என்ன தேவை என்பதனை அதன் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் கேட்பதற்கு உரிமை உடையது என்பதனை ஏற்றுக் கொள்கிறது.அந்த அடிப்படையில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் அந்த மக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தலாம் என்பதே பரிகாரநீதியின் பிரயோக யதார்த்தமாக காணப்படுகின்றது. ஆனால் தேர்தல் அறிக்கையில் பொதுஜனவாக்கடுப்பு வெளிப்படையாக கேட்கப்படவில்லை, பொலிவியாவைப்போல ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வு கேட்கப்படுகிறது என்றெல்லாம் வியாக்கியானங்கள் தரப்படுகின்றன. இந்த வியாக்கியானங்கள் உள்நோக்கமுடையவை. அந்த அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் மேலோட்டமாக வாசித்து விட்டு முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அவை. சுருக்கமாகச் சொன்னால் யானை பார்த்த குருடர்களின் விமர்சனங்கள். தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்பது கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 40 நாள் குழந்தை அது.ஒரு 40 நாள் வயதான ஒரு கட்டமைப்பானது ஒரு பொது முடிவுக்கு வருவதில் பல நெருக்கடிகள் இருக்கும். அந்த கட்டமைப்புக்குள் ஏழு மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் 7 கட்சித் தலைவர்களும் உண்டு. மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்குள்ளும் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்ட சிவில் சமூகங்கள் உண்டு. அதுபோல கட்சித் தலைவர்கள் மத்தியிலும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உண்டு. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னுறுத்தும் விடயத்தில் அவர்கள் ஒன்றுபட்டார்கள். அதற்காக எல்லா விடயங்களிலும் அவர்கள் உருகி பிணைந்த ஒரு கட்டமைப்பாக மாறிவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இது தமிழ் அரசியலில் ஒரு புதிய தோற்றப்பாடு. ஒரு புதிய பண்பாடு. இது இனிமேல் எப்படி வளரப்போகிறது என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபையில் உறுப்பாக உள்ள குடிமக்கள் சமூகம் ஒன்று அந்த அறிக்கையில் 13ஆவது திருத்தத்திற்கு எதிரான வாசகங்கள் வர வேண்டும் என்று கேட்டது. அதுபோல தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் சில பொது வாக்கெடுப்பை வெளிப்படையாக கேட்க வேண்டாம் என்று வலியுறுத்தின.மொத்தம் 14 பேர்களைக் கொண்ட அந்த கட்டமைப்புக்குள் ஒரு பொது முடிவை எட்ட வேண்டியிருந்தது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.அந்த பொது முடிவுதான் வெளிவந்திருக்கும் தேர்தல் அறிக்கையாகும். அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் அதை விமர்சிப்பவர்கள் பெருமளவுக்கு தாங்கள் எதிர்பார்த்த தீர்வு முன்மொழிவுகள் அங்கே இல்லை என்பதை ஒரு காரணமாக முன்வைக்கின்றார்கள்.ஒரு பகுதியினர் சமஸ்ரி என்பது தெளிவாக கூறப்பட்டிருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இன்னொரு பகுதியினர் ஒரு பொதுஜன வாக்கெடுப்பு என்ற விடயம் வெளிப்படையாக கூறப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தாங்கள் வசிக்கும் நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களோடு உரையாடும் பொழுது இந்த ஆவணத்தை முன்வைத்து உரையாட வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிடும் அவர்கள், இந்த ஆவணம் தமது செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அமையக்கூடிய எல்லா அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். எனினும் எல்லாருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து அந்த ஆவணத்தைத் தயாரிக்க முடியவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு பொது முடிவை எட்ட வேண்டியிருந்தபடியால் எல்லாரையும் திருப்திப்படுத்தும் ஒரு நிலைமை அங்கே இருக்கவில்லை என்பதனை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த அறிக்கை தொடர்பில் இதுவரையிலும் வெளிவந்த பிரதிபலிப்புகளை தொகுத்து பார்க்கும் பொழுது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அந்த அறிக்கை தாயகத்திலும் டயஸ்போறாவிலும் பரவலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதனை எல்லாரும் பரபரப்போடு எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். அந்த அறிக்கைக்குள் தங்களுடைய விருப்பங்கள் கோரிக்கைகள் இணைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்புகளிடமும் இருந்திருக்கிறது. இது எதைக் காட்டுகின்றது? அப்படி ஒரு அறிக்கை வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு,தவிப்போடு ஒருவிதத்தில் ஏக்கத்தோடு தமிழ்ச் சமூகம் களத்திலும் புலத்திலும் காத்திருந்தது என்பதை காட்டுகின்றதா? அதுதான் உண்மை. தமிழ் மக்கள் பேரவைக்குப் பின் கடந்த சுமார் எட்டு வருடங்களாக தமிழ் மக்கள் பேரவையை போல ஒரு கூட்டு வராதா ? அது மீண்டும் ஒருமித்த குரலில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தாதா? என்ற தவிப்போடு பெரும்பாலான தமிழ் மக்கள் காத்திருந்திருக்கிறார்கள் என்பதைத்தான் அது காட்டுகின்றது. அதாவது தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரள்வதற்கும் தவிப்போடு காத்திருக்கிறார்கள் என்று பொருள்.ஆயின் தமிழ் மக்கள் பொது வேட்பாளரை வெற்றி பெறச் செய்வார்களா? https://athavannews.com/2024/1398565
  5. தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை – நிலாந்தன். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வந்துவிட்டது. அந்த அறிக்கையானது பின்வரும் விடயங்களை தெளிவாக முன் வைக்கின்றது. முதலாவதாக, அது தமிழ் மக்களை இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம் என்று கூறுகின்றது. அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பன்னாட்டுப் பொறிமுறையின் ஊடாக வெளிப்படுத்துவதற்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. இரண்டாவதாக, அந்த அறிக்கையானது ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வுகளை நிராகரிக்கின்றது. அதேசமயம் இலங்கைத் தீவின் பன்மை தேசிய பண்பை உறுதிப்படுத்தும் விதத்தில் இலங்கை தீவின் புதிய யாப்பானது பன்மை தேசிய அரசாக கட்டமைக்கப்பட்ட வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. மூன்றாவதாக, இன அழிப்புக்கு எதிரான பரிகார நீதியை அந்த அறிக்கை கோரி நிற்கின்றது. பரிகாரநீதி என்பது அதன் அதன் பிரயோக வடிவத்தில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பை உள்ளடக்கியதுதான் என்ற ஒரு வியாக்கியானம் உண்டு. அந்த அறிக்கை தொடர்பாக பல்வேறு வாத பிரதிவாதங்கள் நடக்கின்றன. அந்த அறிக்கையில் பன்மைத் தேசியம் என்ற பதம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. பன்மைத் தேசிய அரசு என்ற பதம் கடந்த தசாப்தங்களில் அறிமுகத்துக்கு வந்தது.1980 களின் தொடக்கத்தில் லத்தீன் அமெரிக்க நாடாகிய பொலிவியாவில் சுதேச மலைவாழ் மக்களின் போராட்டங்களை முன்னெடுத்தவர்களால் பிரயோகிக்கப்பட்ட வார்த்தை அது.பொலிவியாவின் புதிய யாப்பின்படி அங்கு இருப்பது பன்மை தேசிய அரசு என்று அழைக்கப்படுகிறது. ஆனால் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் எங்கேயும் பொலிவியா என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை. பன்மைத் தேசிய பண்புடைய ஒரு அரசைக் கட்டமைக்க வேண்டும் என்று கூறப்படுகிறதே தவிர பொலிவியாவைப்போல என்று கூறப்படவில்லை. பொலிவியாவில் இருப்பது போன்ற ஒரு தீர்வை இங்கு உருவாக்க வேண்டும் என்று அந்த தேர்தல் அறிக்கை எங்கேயும் கேட்கவில்லை. தேர்தல் அறிக்கையில் இருப்பது ஒரு கருத்துருவதைக் குறிக்கும் வார்த்தை.பொலிவியாவில் இருப்பது ஒரு கட்டமைப்பு.இரண்டையும் ஒன்றை மற்றத்துடன் மாறாட்டம் செய்யத் தேவையில்லை.மேலும்,கஜேந்திரக்குமார் 2020ஆம் ஆண்டு ஒகஸ்ற் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாரும்போது அந்த வார்தையைப் பயன்படுத்துகிறார்.அவர் தனது உரையில் “ஸ்ரீலங்கா ஒரு பன்மைத் \தேசிய நாடு”என்று கூறுகிறார்.அவர் அப்படிக் கூறியதற்காக, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையானது, அவருடைய கட்சியின் பகிஷ்கரிப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறது என்று பொருள் கொள்ளலாமா? அந்த தேர்தல் அறிக்கை மிகத் தெளிவாக ஈழத் தமிழர்கள் இறமையும் சுயநிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனம்; தேசம் என்று கூறுகின்றது. ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட தீர்வை அது நிராகரிக்கின்றது. அதுமட்டுமில்லை,அந்த தேர்தல் அறிக்கையானது நிலை மாறுகால நீதியை நிராகரித்து, பரிகார நீதியைக் கேட்கின்றது. பரிகார நீதி என்பது இனப்படுகொலைக்கு எதிராகத் தரப்படுவது. அது பெரும்பாலும் இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் தனக்கு என்ன தேவை என்பதனை அதன் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் கேட்பதற்கு உரிமை உடையது என்பதனை ஏற்றுக் கொள்கிறது.அந்த அடிப்படையில் ஒரு பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் அந்த மக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தலாம் என்பதே பரிகாரநீதியின் பிரயோக யதார்த்தமாக காணப்படுகின்றது. ஆனால் தேர்தல் அறிக்கையில் பொதுஜனவாக்கடுப்பு வெளிப்படையாக கேட்கப்படவில்லை, பொலிவியாவைப்போல ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வு கேட்கப்படுகிறது என்றெல்லாம் வியாக்கியானங்கள் தரப்படுகின்றன. இந்த வியாக்கியானங்கள் உள்நோக்கமுடையவை. அந்த அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் மேலோட்டமாக வாசித்து விட்டு முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அவை. சுருக்கமாகச் சொன்னால் யானை பார்த்த குருடர்களின் விமர்சனங்கள். தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்பது கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 40 நாள் குழந்தை அது.ஒரு 40 நாள் வயதான ஒரு கட்டமைப்பானது ஒரு பொது முடிவுக்கு வருவதில் பல நெருக்கடிகள் இருக்கும். அந்த கட்டமைப்புக்குள் ஏழு மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் 7 கட்சித் தலைவர்களும் உண்டு. மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்குள்ளும் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்ட சிவில் சமூகங்கள் உண்டு. அதுபோல கட்சித் தலைவர்கள் மத்தியிலும் வெவ்வேறு நிலைப்பாடுகள் உண்டு. ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை முன்னுறுத்தும் விடயத்தில் அவர்கள் ஒன்றுபட்டார்கள். அதற்காக எல்லா விடயங்களிலும் அவர்கள் உருகி பிணைந்த ஒரு கட்டமைப்பாக மாறிவிட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இது தமிழ் அரசியலில் ஒரு புதிய தோற்றப்பாடு. ஒரு புதிய பண்பாடு. இது இனிமேல் எப்படி வளரப்போகிறது என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கும். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபையில் உறுப்பாக உள்ள குடிமக்கள் சமூகம் ஒன்று அந்த அறிக்கையில் 13ஆவது திருத்தத்திற்கு எதிரான வாசகங்கள் வர வேண்டும் என்று கேட்டது. அதுபோல தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகள் சில பொது வாக்கெடுப்பை வெளிப்படையாக கேட்க வேண்டாம் என்று வலியுறுத்தின.மொத்தம் 14 பேர்களைக் கொண்ட அந்த கட்டமைப்புக்குள் ஒரு பொது முடிவை எட்ட வேண்டியிருந்தது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.அந்த பொது முடிவுதான் வெளிவந்திருக்கும் தேர்தல் அறிக்கையாகும். அதேசமயம் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் அதை விமர்சிப்பவர்கள் பெருமளவுக்கு தாங்கள் எதிர்பார்த்த தீர்வு முன்மொழிவுகள் அங்கே இல்லை என்பதை ஒரு காரணமாக முன்வைக்கின்றார்கள்.ஒரு பகுதியினர் சமஸ்ரி என்பது தெளிவாக கூறப்பட்டிருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். இன்னொரு பகுதியினர் ஒரு பொதுஜன வாக்கெடுப்பு என்ற விடயம் வெளிப்படையாக கூறப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தாங்கள் வசிக்கும் நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களோடு உரையாடும் பொழுது இந்த ஆவணத்தை முன்வைத்து உரையாட வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிடும் அவர்கள், இந்த ஆவணம் தமது செயற்பாடுகளுக்கு உறுதுணையாக அமையக்கூடிய எல்லா அம்சங்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். எனினும் எல்லாருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து அந்த ஆவணத்தைத் தயாரிக்க முடியவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு பொது முடிவை எட்ட வேண்டியிருந்தபடியால் எல்லாரையும் திருப்திப்படுத்தும் ஒரு நிலைமை அங்கே இருக்கவில்லை என்பதனை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த அறிக்கை தொடர்பில் இதுவரையிலும் வெளிவந்த பிரதிபலிப்புகளை தொகுத்து பார்க்கும் பொழுது ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அந்த அறிக்கை தாயகத்திலும் டயஸ்போறாவிலும் பரவலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதனை எல்லாரும் பரபரப்போடு எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். அந்த அறிக்கைக்குள் தங்களுடைய விருப்பங்கள் கோரிக்கைகள் இணைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்புகளிடமும் இருந்திருக்கிறது. இது எதைக் காட்டுகின்றது? அப்படி ஒரு அறிக்கை வரவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு,தவிப்போடு ஒருவிதத்தில் ஏக்கத்தோடு தமிழ்ச் சமூகம் களத்திலும் புலத்திலும் காத்திருந்தது என்பதை காட்டுகின்றதா? அதுதான் உண்மை. தமிழ் மக்கள் பேரவைக்குப் பின் கடந்த சுமார் எட்டு வருடங்களாக தமிழ் மக்கள் பேரவையை போல ஒரு கூட்டு வராதா ? அது மீண்டும் ஒருமித்த குரலில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தாதா? என்ற தவிப்போடு பெரும்பாலான தமிழ் மக்கள் காத்திருந்திருக்கிறார்கள் என்பதைத்தான் அது காட்டுகின்றது. அதாவது தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரள்வதற்கும் தவிப்போடு காத்திருக்கிறார்கள் என்று பொருள்.ஆயின் தமிழ் மக்கள் பொது வேட்பாளரை வெற்றி பெறச் செய்வார்களா? https://athavannews.com/2024/1398565
  6. கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று செம்மணி பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று செம்மணி பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது, செம்மணிப் படுகொலை நினைவேந்தல் பேரவையின் தலைவர் கிஷோர் தலைமையில், நடைபெற்ற நினைவேந்தலில் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் மயூரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1398568
  7. மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு மே 3 ஆம் திகதி குகி ஸோ பழங்குடியினர் மற்றும் மைத்தேயி சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக்கலவரம் ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தநிலையில் குறித்த மோதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. போராட்டாக்காரர்கள் இந்த முறை ட்ரோன்கள், ரொக்கெட்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால், மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற புதிய வன்முறையில் 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1398561
  8. மாவை… சும்மாவே அங்கும், இங்கும் பாய்வார். இனி… சொல்லி வேலை இல்லை. 😂
  9. கனநாள் பிக்குகளின் சேட்டைகளை காணவில்லையே... திருந்தி விட்டார்களாக்கும் என நினைத்தேன். நாய் வாலை நிமிர்த்த முடியுமா... 😂 இத்தாலி பொம்பிளை தப்பினது அருந்தப்பு. 😎 சுற்றுலா பயணிகள் செல்வதற்கு ஆபத்தான இடங்களில் விகாரையும் ஒன்று. 🤣
  10. நீங்கள், கைதடி தானே… அப்ப உங்களுக்கு… கமலா ஹரிஸ் உடைய அம்மம்மாவை தெரியுமா.
  11. தெற்கின் தேர்தல் வெற்றி தினம் தமிழர்களுக்கு கரி நாள் – அருட்தந்தை மா.சத்திவேல். தனியார் காணிகளில் புத்தர் சிலைகளை வைத்தல், விகாரைகளை கட்டுதல் போன்றவற்றிற்கு வருத்தமோ தடுத்து நிறுத்துவதாகவோ கருத்து கூற மறுத்துள்ளமை அவையெல்லாம் தமது காலத்திலும் தொடரும் என்பதையே உணர்த்துகிறது. இதுவும் ஒருவகையில் யுத்த பிரகடனமே என அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிக் கதிரையை தமதாக்க தமிழர்களை வெறும் கறிவேப்பிலையாகவும் ரம்பையாகவும் பாவித்து விட்டு தூக்கி எறியவே முற்படுகின்றனர்.சுயநல அரசியலுக்கு தம்மை இரையாக்கிக்கொண்ட தமிழ் தேசிய கட்சியினரும் அரியதரம் பூசிக்கொண்ட தமிழ் அரசியல் தரப்பினரும் தேர்தல் அரசியல் களத்தில் நின்று தமிழர்களை பலி கொடுக்கும் அரசியலை முன்னகர்த்துகின்றனர். சமாதானப்படையாக தமிழர் தாயகத்தில் காலடி வைத்த இந்திய இராணுவத்தையும், இந்தியாவின் முகத்தையும் இதற்கு அவர்கள் யார் என்பதையும் உலகிற்கு வெளிக்காட்டிய தியாகி திலீபனின் உயிர்தியாக மாதம் இதுவாகும். அவரின் உண்ணாவிரத போராட்டம் எமது அரசியலுக்கும் தேசியம் காக்கும் செயற்பாட்டுக்கும் உந்து சக்தியாக இருப்பதோடு எதிராளிகளில் முகத்திரையை கிழிக்க தேசமாக ஒன்று சேர வேண்டும் என தெரிவித்துள்ளார். தெற்கின் தேர்தல் வெற்றி தினம் என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம். அதுவே எமக்கான தேர்தல் வெற்றியாக அமையட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/2024/1398515
  12. அரியநேத்திரனுக்கு வாக்களிக்குமாறு தமிழ் சிவில் சமூக அமையம் கோரிக்கை. 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சங்கு சின்னத்தில் தமிழ் மக்களின் இன்னல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற அமைப்பொன்றை உருவாக்கித் தமிழ் பொது வேட்பாளராக அரியநேத்திரனை களமிறக்கியுள்ள நிலையில் , அவருக்கு வாக்களிக்குமாறு தமிழ் சிவில் சமூக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய குறித்த கோரிக்கையை அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளது. குறித்த அறிக்கை பின்வருமாறு, 21 செப்டம்பர் 2024 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலில் முதற் தடவையாக தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற அமைப்பொன்றை உருவாக்கித் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்காக சங்குச் சின்னத்தில் திரு பாக்கியசெல்வம் அரியநேத்திரனை தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். காலங்காலமாகச் சிங்களப் பேரினவாதத்தின் இனவழிப்பை எதிர்கொண்டு போராடி வருகின்ற தமிழ்த் தேசம் தனது உயிரினும் மேலாகக் கருதி வரும் தேசிய அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான ஒருவாய்ப்பாக வரவிருக்கின்ற தேர்தலைப் பயன்படுத்துவதற்காக தேர்தலில் எம்மால் முன்மொழியப்பட்டுள்ள திரு பா. அரியநேத்திரன் அவர்களுக்கு எமது வாக்குகளை வழங்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் பணிவன்புரிமையுடன் தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். 1982 முதல் இன்றுவரை இலங்கையில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தல்கள் எல்லாம் சிங்கள-பௌத்த பேரினவாதத் தலைவரைத் தேரந்தெடுப்பதாகவே அமைந்தன. இத் தேர்தல்களில் தமிழ் மக்கள் ஆதரவளித்த, தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளர்கள் கூட தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டதுமில்லை, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற சனாதிபதிகளும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டதுமில்லை. அதனால் இனிவரும் சனாதிபதித் தேர்தல்களிலும் வழமைபோல் தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதில் எமக்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே வரலாறு எமக்குத் தரும் வழிகாட்டலாகும். எனவேதான் இம்முறை நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலைத் தமிழ் தேசத்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பான தமிழ் மக்களின் தெளிவான ஆணை ஒன்றைச் சர்வதேசத்திற்கும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்தும் வகையிலான தேர்தலாக மாற்றிப் பயன்படுத்தும் நோக்கில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் கூட்டு முயற்சியில் தமிழ் சிவில் சமூக அமையமும் இணைந்து கொண்டது. சங்குச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்ப்பொது வேட்பாளரான திரு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஒரு தனி நபருக்கான வாக்குகள் எனக் கருதாமல், அவ்வாக்குகள் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான வாக்குகளே என்ற புரிதலின் அடிப்படையிலேயே பொது வேட்பாளர் எனும் இச்செயற்திட்டத்தில் நாம் இணைந்து கொண்டோம். எமது பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படும் வேளையில், ஒற்றையாட்சியைத் தமிழ் மக்களால் தீர்வாக ஆராயவும் முடியாது எனக்கூறியது போல, 13ம் திருத்தத்தையும் தீர்வொன்றின் அடிப்படையாகக்கூட ஏற்க முடியாது என வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் எப்போதும் போல உறுதியாகக் கோரியிருந்தோம். எனினும் பல்வேறு பங்கீடுபாட்டாளர்கள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் என்ற அடிப்படையில் எமது கருத்துக்கள் அனைத்தும் முழுமையாகவும், நாம் விரும்பிய மொழிப் பிரயோகத்திலும் உள்ளடக்கப் பட முடியாத யதார்த்த சூழ்நிலையையும் நாம் கருத்திற் கொள்கிறோம். இத்தகைய பின்னணியில், தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான எமது விரிவான வாசிப்பையும் நிலைப்பாட்டையும், பின்வரும் விடயங்கள் தொடர்பிற் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். அரசியற் தீர்வின் பகுதியாக உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பானது ஒரு புதிய கூட்டு அரசை இத்தீவில் உருவாக்குவதாக அமைய வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை ஆகியவற்றினை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் தேசங்களின் ஒன்றிணைவாக அமையும் அரசாக அது அமைய வேண்டும். அதாவது புதிய அரசானது ஒரு பன்மைத்தேசிய அரசு (Plurinational) என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும். ஒற்றையாட்சி அரசு முறைமையையும் அதனது ஒரு அங்கமான 13ம் திருத்தத்தையும் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிப்பதோடு, இவை அரசியற் தீர்வுப் பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட அமைய மாட்டாது என்பதே தமிழர்களின் நிலைப்பாடாகும். ஒற்றையாட்சி அரசுக்குட்பட்ட எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தமிழர் தரப்புப் பங்குபற்றக் கூடாது. தமிழர்களின் சுயநிர்ணய அலகானது, அவர்களின் தாயகமானது, ஒன்றிணைந்த (தற்போதைய) வடக்கு கிழக்கு மாகாணங்களை கொண்டதாக அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தத் தயாராக இருக்க வேண்டும். . பாதுகாப்பு, நாணயக் கொள்கை உட்பட ஒரு சில விடயங்கள் மாத்திரமே மத்திய அரசின் அதிகார எல்லைக்குள் இருப்பதோடு எஞ்சிய அதிகாரங்கள் (Residual Powers) மாநிலங்களிற்கு உரியவையாக அமைய வேண்டும். குறிப்பாக கல்வி, அரச காணி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, வரி இறுக்கும் அதிகாரம் ஆகியன நிச்சயமாக மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை விடயங்களை உள்ளடக்கி தமிழ் மக்கள் பேரவையால் தமிழ் மக்களின் கருத்துகளை உள்வாங்கி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு முன்மொழிவைத் தமிழ் மக்கள் தமது அரசியல் நிலைப்பாடாக முன்வைக்க வேண்டும். தொடரும் இனவழிப்பின் ஒரு பகுதியாக போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பன்னாட்டு குற்றவியல் விசாரணையை தமிழ் மக்கள் வேண்டுவதோடு, உண்மையைக் கண்டறிதல் உள்ளிட்ட உள்ளக செயன்முறைகள் மூலமாக பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் சாத்தியமற்றவை எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர். 2009ல் ஆயுதப்போர் முடிவடைந்த பின்பும் வழமைபோன்றும், பல்வேறு புதிய வழிகளிலும் முன்னரிலும் விட மூர்க்கமாகவும் வேகமாகவும் தமிழ் மக்களின் மேலாகக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைச் சிறீ லங்கா அரசுகள் தொடர்வதைத் தடுத்து நிறுத்த சர்வதேச தலையீடும், சர்வதேச அனுசரணையுடன் கூடிய பொறிமுறையும் கட்டாயமானதும் அவசரமானதுமான தேவைகளாகும். தமிழ் தேசம் தமக்குரித்தான சுயநிர்ணய உரிமையின்பாற்பட்டு சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறையான பொது வாக்கெடுப்பு (ஒப்பங் கோடல்) ஒன்றின் மூலம் தமது அரசியல் தெரிவை மேற்கொள்ளும் வகையில் ஐ.நா.வினால் மேற்பார்வை செய்யப்படும் ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றனர். ஆனால், 13ஆம் திருத்தத்தை நிராகரித்து தேர்தல் விஞ்ஞாபனமானது தெளிவாக நிலைப்பாடு எடுக்கவில்லை என நாம் கருதுகிறோம். ஆயுத மோதல்களுக்குப் பின்னர் இனப்பிரச்சனைக்கான தீர்வைப் 13ம் திருத்தத்திற்குள் முடக்குவதை நோக்கமாகக் கொண்டு உரையாடல்கள் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனுபவ ரீதியாக மாகாண சபை முறையானது எவ்விதத்திலும் எமது நாளாந்த பிரச்சனைகளைக்கூடக் கையாள்வதற்குப் போதுமானதன்று என்பது எமது பட்டறிவு. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிற் பெரும்பாலானவை ஒற்றையாட்சியை மறுப்பதாகத் தமிழ் மக்களுக்குச் சொன்னாலும், பிராந்திய மற்றும் பூகோள அரசியற் சக்திகளின் அழுத்தத்தின் காரணமாக நடைமுறையில் “13 அல்லது 13 பிளஸ்” என்ற வரையறைக்குள்ளேயே, அதாவது ஒற்றையாட்சி முறைமைக்கு உட்பட்டே, தமது நடைமுறை அரசியலைச் செய்து வருகின்றனர். இது தவறானது எனத் தமிழ் சிவில் சமூக அமையம் கடந்த 15 வருடங்களில் பல முறை சுட்டிக் காட்டியுள்ளது. ஆனாலும் இன்று எமது தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், 13ம் திருத்தம் தொடர்பில் வெளிப்படையான நிராகரித்தல் அற்ற ஒரு மௌனத்தொனியே வெளிப்பட்டுள்ளது.தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனம் ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றமையானது 13ஆவது திருத்தத்தை அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட தமிழ் மக்கள் கருத முடியாது என்று கூறுவதாகவே அர்த்தம் கொள்ளப்பட வேண்டும் என நாம் கருதுகிறோம். தமிழ் சிவில் சமூக அமையம் தனது நிலைப்பாடுகளாகவும், விஞ்ஞாபனம் தொடர்பான விரிவான வாசிப்பாகவும், பகிர்ந்து கொண்டவற்றில், இத் தேர்தல் விஞ்ஞாபனம், சில விடயங்களை வெளிப்படையாகவும், சில விடயங்களைப் பூடகமாகவும் வெளிப்படுத்துகிறது. இதனால் மக்கள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம். தமிழ் சிவில் சமூக அமையம் இந்நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலையும் கரிசனையும் கொள்கின்ற அதே வேளை தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற தமிழ்த் தேசிய அரசியல் முயற்சி வெற்றி பெற வேண்டும் என நாம் வலுவாக நம்புகின்றோம், விரும்புகின்றோம். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நாம் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோருகின்றோம். இத்தகைய அணுகுமுறையில் இருந்து – வாசிப்பிலிருந்து எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை நாம் வேண்டுகிறோம். தமிழ் அரசியல் நேர்மைப் பாதையில் தடம் பதிக்க நாம் உளச்சுத்தியுடன் தொடர்ந்து பயணிப்போம். தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு அத்தகைய பாதையில் செல்வதை உறுதி செய்ய எம்மாலான அனைத்தையும் நாம் தொடர்ந்து செய்வோம். 2009இன் பின்னர் நடைபெற்ற மூன்று சனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ் மக்கள், தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளருக்கே வாக்களித்தனர். எமது வாக்கைப் பெற்றவர்கள் தேர்தலில் வென்று பதவிக்கதிரை ஏறினாலும் அல்லது தோற்றாலும் ஒரு போதும் சிங்கள் பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலிலிருந்து அவர்கள் வெளியேறவில்லை என்பதே எமது அனுபவமாகும். இந்நிலையில் இம்முறை இனவாதிகளான சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை விட தமிழ் மக்களின் அபிலாசைகளை தனது தேர்தல் கோரிக்கைகளாக முன்வைத்துள்ள, தமிழ்ப் பொதுக்கட்டமைப்பால் முன்மொழியப்பட்டுள்ள திரு பா. அரியநேத்திரன் அவர்களுக்கு எமது வாக்குகளை வழங்கி எமது இலட்சிய உறுதியை வெளிப்படுத்துவோம் என தமிழ் மக்களைக் கோருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/2024/1398550
  13. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான நேரடி விவாதம் – ஒருவர் மட்டுமே பங்கேற்பு. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிகின்ற ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்குபற்கும் நேரடி விவாதம் இன்று நடைபெற்றிருந்தது. இருப்பினும் விவாதத்தில் ஒரு வேட்பாளர் மட்டுமே கலந்து கொண்டார். மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விவாதம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, மற்றும் நாமல் ராஜபக்ஷ, பா.அரியநேத்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் திலித் ஜயவீர மாத்திரமே இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டிருந்தார். இதேவேளை மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நேரடி விவாதத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் இன்றைய விவாதத்தில் 16 வேட்பாளர்கள் மாத்திரமே பங்கேற்பதாக உறுதியளித்திருந்தபோதும் இன்று ஒருவர் மட்டுமே கலந்து கொண்டதுடன் நாளையதினமும் நிகழ்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1398554
  14. வேட்பாளர்களின் நேரடி விவாதம் – இன்று மாலை. நாட்டை மீட்பது எவ்வாறு? என்ற தலைப்பில் மார்ச் 12 என்ற இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதம் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது. 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த விவாதத்தில் முதலாம் நாளான இன்றைய தினம் 6 வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோர் மாத்திரம் இதற்காகத் தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளனர். இந்த விவாதத்திற்கு சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அதில் பங்கேற்ற முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுத்துமூலம் அறிவித்துள்ளார். அத்துடன் அனுரகுமார திஸாநாயக்க நேற்று பிற்பகல் வரை இந்த விவாதத்தில் பங்கேற்பதை உறுதிப்படுத்தவில்லையெனப் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை இரண்டு மணித்தியாலங்களுக்கு இந்த விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு 6 கேள்விகள் முன்வைக்கப்படும் எனப் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். https://www.facebook.com/PoliticalCartoonsLKA/
  15. நாகபாம்புக்கு முத்தமிட்டு ரீல்ஸ் – இளைஞன் பலி. தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையை சேர்ந்தவர் சிவராஜ் என்ற 20 வயது நிரம்பிய பாம்பு பிடிக்கும் தொழிலாளி பல சாகசங்கள் செய்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமானார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் நாகப்பாம்பு புகுந்து விட்டதாக அவரது தந்தை கங்காதருக்கு தகவல் தெரிவித்தனர். கங்காதர் உள்ளூரில் இல்லாததால் அவரது மகன் சிவராஜ் பாம்பு பிடிக்க சென்றுள்ளார். வீட்டில் இருந்த நாகப்பாம்பை பிடித்த சிவராஜ் பாம்பை வைத்து அப்பகுதி மக்களுக்கு சிறிது நேரம் விளையாட்டு காட்டினார். பின்னர் பாம்புக்கு முத்தமிட்டபடி தனது செல்போனில் ரிலீஸ் எடுத்தார். அப்போது நாக பாம்பு சிவராஜின் நாக்கில் கொட்டியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் சிவராஜை மீட்டு பாண்சுவாடா அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிவராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1398547
  16. சாலையில் வன்புணர்வு செய்வதை... வீடியோ எடுக்கும் மக்கள் வசிக்கும் நாடு தான் இந்தியா.... த்தூதூ.... வெட்கம் கெட்டவங்கள். 😡
  17. முன்புள்ள ஓய்வு வயது என்ன? நான் அங்கு இருக்கும் போது ஆண்களின் ஒய்வு வயது 55. பெண்களின் ஒய்வு வயது 50 ஆக இருந்தது. இந்த ஓய்வு வயதுகளை ஜேர்மன்காரனுக்கு சொல்ல... விழுந்து, விழுந்து சிரிக்கிறான். இங்கே இப்போ... ஆண்களின் ஓய்வு வயது 67, பெண்களின் ஒய்வு வயதும் 67தான். போற போக்கில் 70´தில் கொண்டு வந்து விடுவார்கள் போலுள்ளது.
  18. அரசாங்க செலவில், சங்கிற்கு… அகில இலங்கை முழுவதும் நல்ல விளம்பரம் கிடைத்திருக்கு. 😂 சங்கே… முழங்கு. 😁
  19. அதுகும்… வளர்ப்பு மகளை திருமணம் செய்யும் துணிவு, பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கும் வருமா…. தந்தை பெரியாருக்கு வந்ததே… கெத்து சார். 😂
  20. திராவிட தந்தை பெரியார் 1949 ஆண்டு மணியம்மையை கலியாணம் கட்டும் போது…. ராமசாமிக்கு 72 வயது. மணியம்மைக்கு 26 வயது. நம்மாள்… 46 வயது வித்தியாசத்திலை கலியாணம் கட்டி... கின்னஸ் சாதனை படைத்திருக்கு. 😂 🤣
  21. மேலுள்ள காணொளியில் உள்ள தேனீ வளர்ப்பவரின் 100,0000 தேனீக்களை ஆசிய தேனீ கொன்று விட்டதாக கூறுகின்றார். இது ஒருவருக்கு நடந்தது. இப்படி எத்தனை சம்பவங்கள் நடந்திருக்கும் எனும் போது.. மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது.
  22. இங்கும் தேனீக்கள் பெருமளவில் குறைவதாக கவலை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றார்கள். சீனாவில் இருந்து எப்படியோ இங்கு வந்துள்ள ஆசிய தேனீ, இங்குள்ள சாதாரண தேனீக்களின் கூட்டிற்குள் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்தி கொல்வதால்... அவை பெருமளவில் அழிந்து விட்டதாக கூறுகின்றார்கள். முதன் முதலில்... 2004´ம் ஆண்டு இங்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் அடையாளம் காணப்பட்ட ஆசிய தேனீ, 2014´ம் ஆண்டில் பல்கிப் பெருகி... சென்ற ஆண்டு பெரும் சவால் கொடுக்கும் அளவிற்கு இனப் பெருக்கம் செய்துள்ளது. இப்போ ஆசிய தேனீயை எப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்று யோசித்துக் கொண்டுள்ளார்கள். இரண்டின் வித்தியாசங்களும்... கீழுள்ள படத்தில் காட்டப் பட்டுள்ளது. 👇
  23. உரும்பிராயை... பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதியாவது எமக்கெல்லாம் பெருமை தானே...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.