Everything posted by தமிழ் சிறி
-
காற்றடைத்த சில்லின் (ரயர்) வரலாறு.
முதன் முதலில் 1845-ல் ராபர்ட் தாம்சன் என்பவர் காற்றடைத்த டியூப் மூலம் சிறிய சைக்கிளை ஓட்ட முடியும் என்று கண்டுபிடித்திருந்தார். ஆனால், அவரால் அது முழுமையானதாக இல்லை அது அந்த அளவு மேம்படுத்தப்படவில்லை மற்றும் பிரபலமாகவில்லை என்பது John Boyd dulop ஜான் பாய்டு டன்லப்புக்குத் தெரியாது. அவர் குதிரை வண்டிகள் மற்றும் சைக்கிள் போன்றவற்றில் இதுபோன்ற டியூபில் காற்றடைக்கும் தொழில்நுட்ப முறையை தனது மகனின் மரத்தாலான சைக்கிளுக்கு தான் சோதனை செய்தார். பிறகு காற்றடைக்கப்பட்ட இந்த டயரை மேலும் ஆராய்ந்து, பரிசோதனைகள் செய்து, மேம்படுத்தி 1888-ல் பிரிட்டனில் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். 1890-ல் அமெரிக்காவிலும் காப்புரிமை பெற்றார். பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற மிதிவண்டி ஓட்டும் ஒரு போட்டியில் இந்த மிதிவண்டியைப் பயன்படுத்திய போட்டியாளர் வெற்றி பெற்றதை அறிந்த டபிள்யு. ஹெச். டு கிராஸ் என்ற அயர்லாந்து தொழிலதிபருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டது. டன்லப்புடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அது டன்லப் ரப்பர் கம்பெனி என்று அழைக்கப்பட்டது. தனது கண்டுபிடிப்பால் இவர் பெரிதாக லாபமடைய வில்லை. தனது காப்புரிமையை 1896-ல் டு கிராசுக்கு விற்றுவிட்டு, ஊர் திரும்பிவிட்டார். ஆனால் அந்த நிறுவனம் டன்லப் ரப்பர் கம்பெனி என்று இவரது பெயராலேயே இயங்கிவந்தது. 1888-ல் காற்று அடைக்கப்பட்ட டயர்கள் அறிமுகமான பிறகு பழைய டயர்கள் வழக்கொழிந்து போய் விரைவில் இவை புழக்கத்திற்கு வந்துவிட்டன. இது மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. 1895-ல் முதல் மோட்டார் வாகனம் உருவானது. 1900-மாவது ஆண்டுக்குப் பின் சைக்கிள்களுக்கும் மோட்டார் வாகனங்களுக்கும் பயன்படுத்தப்படும் நீடித்து உழைக்கும் ரப்பர் பொருள்களின் தேவை அதிகரித்துக்கொண்டே போனது. இன்று இந்த உலகில் டியூப்லெஸ் டயர்கள் எனப்படும் டியூப் இல்லாத டயர்கள் வந்துவிட்டாலும் இன்றைய உலகின் அனைத்து போக்குவரத்து தொழிற்சாலை உற்பத்தி போன்றவற்றில் இவரது பங்களிப்பு மனிதகுலத்திற்கே உதவியது 🙏 படத்தில் 1945ல் வெளிவந்த ஒரு டன்லப் விளம்பரம். இராம ஸ்ரீநிவாஸன் இராம ஸ்ரீநிவாஸன்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஒரு 50 தேனீக்கு கிட்ட கிளம்பி வந்து, 5/6 தேனீ குத்திப் போட்டுது ஈழப்பிரியன். நகரசபையிடம் ஒருக்கால் சொல்லிப் பார்ப்போம். செய்வார்களோ தெரியாது.
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
- நமக்காக நாம்: திருகோணமலையில் அரியநேத்திரனின் பிரசாரம்!
நமக்காக நாம்: திருகோணமலையில் அரியநேத்திரனின் பிரசாரம்! நமக்காக நாம் என்ற தொனிப் பொருளிலான பிரசாரம், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனால் திருகோணமலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை சிவன் கோவில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளுடன் கலந்து கொண்ட பின்னர் பிரசார நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார். இதேவேளை இலங்கை தமிழ் அரசு கட்சியியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் தமக்கான பெரும்பான்மை ஆதரவினை வழங்கியிருப்பதாக அவர் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தார். மேலும் நாட்டின் பதவியேற்கவுள்ள 9வது ஜனாதிபதி இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான ஓர் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்றும் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன் வலியுறுத்தியிருந்தார். https://athavannews.com/2024/1398413 ############# ################## ################## ’நமக்காக நாம்’ பிரசார பயணம்- யாழில் ஆரம்பம்! பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர் இந்த நடவடிக்கையில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1398468- யாழில். முதியோர் இல்லங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர் – கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை
சேவை மனப்பான்மையுடன் இயங்கும் முதியோர் இல்லங்கள் இவரை சேர்ப்பதற்கு ஏன் தயங்குகின்றன. சிலவேளை குழப்படிகாரராக இருப்பாரோ.- இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த தேனீ, எமது தோட்டத்துக்குள் மறைவாய் எங்ககையோ கூடு கட்டியிருக்கு. சென்ற மாதம்.... மரங்களின் வளர்ந்த கொப்புக்களை வெட்டும் போது, அதன் கூடு, ஆடுப் பட்டு விட்டது போலிருக்கு. திடீரென்று ஊய்... என்ற படி ஒரு 50 தேனீ என்னை சுற்றி வளைத்து, 5,6 இடங்களில் குத்தி ஒரே நோ. அதுக்குப் பிறகு இதை கண்ணிலும் காட்டக் கூடாது. இதன் கூட்டை கலைக்க, ஏதாவது இலகுவான வழி இருக்கா. மிளகாய்த்தூள் தண்ணி, சவர்க்கார தண்ணி.... எல்லாம் கரைத்து ஊற்றியும் போகுது இல்லை. நெருப்பு வைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றபடியால்... என்ன செய்வது என்று தெரியவில்லை.- கருத்து படங்கள்
- “சங்கிற்கு“ வாக்களித்து வரலாற்று கடமையை நிறைவேற்றுங்கள் – தமிழர் விடுதலைக் கூட்டணி!
“சங்கிற்கு“ வாக்களித்து வரலாற்று கடமையை நிறைவேற்றுங்கள் – தமிழர் விடுதலைக் கூட்டணி! தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கே எமது ஆதரவு என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் பரமசிவம் சிறீதரன்,தமிழ் மக்கள் அனைவரும் ‘சங்கு’ச் சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், எம் அன்புக்கினிய தமிழ் மக்களே! ஈழத் தமிழர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் அனாதைகளாக அலைந்து திரிகிறார்கள். நாம் நம்பிய அனைவருமே தேர்தல்களின் பின்னர் எம்மை ஏமாற்றியே வருகிறார்கள். தேர்தலில் வாக்குறுதி கொடுத்த யாருமே அதன் பின்னர் எம்மை மதித்ததில்லை. இம்முறை எமக்கு ஒரு புதிய தெம்பு பிறந்துள்ளது. வெற்றி பெறப்போவதில்லை எனத் தெரிந்து கொண்டே நாம் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகிறோம். ஏன் தெரியுமா? நாம் நம்பிய அனைவரும் எம்மைக் கைவிட்ட போதும், நாம் எமது உரிமைகளுக்கான போராட்டத்தைக் கைவிடவில்லை என்பதையும், அதற்காகப் போராடும் எமது உணர்வுகளை இன்னும் இழந்து விடவில்லை என்பதையும் அத்துடன் எமது வலிகளையும் வேதனைகளையும் இந்த உலகுக்கு உரக்கச் சொல்லப் போகிறோம். வெற்றி பெறும்வரை எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடுத்த அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவது எமது வரலாற்றுக் கடமை. கடந்த காலங்களில் கூட்டணியின் தலைமை பல துரோகங்களுக்குத் துணைபோய் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை தமிழ் இனத்தின் வரலாற்றுக் கடமையைச் செய்யத் தயங்காது. எமது ஆதரவு தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்ப்பாளர் அரியநேந்திரன் அவர்களுக்கே. தமிழ் மக்கள் அனைவரும் ‘சங்கு’ச் சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம் – என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1398260 ##################### ################### ####################### நடை பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலின் வாக்குச் சீட்டு இதுதான். 😂- சஜித் இரட்டை வேட அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்!
சஜித் இரட்டை வேட அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்! ”நாட்டில் இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சி பீடம் ஏறிய மொட்டு கட்சி இன்று சுக்குநூறாக பிளவு பட்டுள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சம்பிக்க ரணவக்க, ரிசாட் பதியூதீன் ஆகியோர் சஜித்துடன் இருக்கின்றனர். சஜித் பிரேமதாச வவுனியாவுக்கும் மன்னாருக்கும் வருகைதரும் போது சம்பிக்க ரணவக்கவை கூட்டிவரமாட்டார். ஆனால், காலிக்கு செல்லும்போது சம்பிக்கவை அழைத்துச்செல்வார். எனினும் அங்கு ரிசாட் பதியூதீனை அழைத்துச் செல்லமாட்டார். என்ன அரசியல் இது. இதுதான் இரட்டை வேட அரசியல். கொள்கை இருப்பது தேசிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே. நாங்கள் அனைத்து இன மக்களின் உரிமைகளை உறுதிசெய்யும் புதிய ஒரு அரசியலமைப்பை உருவாக்குவோம். பிரதேச சபைகளில் இருந்து அதிகாரப்பகிர்வை வழங்கும்படியான ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்படும். இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சியினை பெற்ற மொட்டு கட்சி இன்று சுக்குநூறாகிப்போயுள்ளது. இனவாதம் சாதிவாதத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் இடமில்லை. போதைப்பொருள் பின்புலத்தில் இருப்பது அரசியல்வாதிகளே. அது உங்கள் குழந்தைகளை பாதிக்கும். கிராமத்தை பாதிக்கும். அதனை முழுமையாக நாம் தடுத்து நிறுத்துவோம். ரணில் கடைசி நேரத்தில் தோல்வியடைவார். சத்தமில்லாமல் வீடு செல்வார். அது அவருக்கு பழக்கப்பட்ட ஒன்று” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1398398- பாரிஸ் 2024 பரா ஒலிம்பிக்
நான் வெறும் மாரியப்பன்.. தந்தை பெயரை சேர்த்து அழைக்காதீர்கள்.. ட்ரெண்டாகும் தமிழக வீரரின் பேட்டி! 2016 ரியோ பாராலிம்பிக்ஸ், 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் மற்றும் 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் என்று 3 தொடர்களிலும் மூன்று பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை தமிழ்நாட்டின் மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார். இந்த நிலையில் 2016ல் மாரியப்பன் அளித்துள்ள பேட்டி ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. பாரிஸில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் தொடரின் T63 பிரிவில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் அசத்தலாக செயல்பட்டுள்ளனர். 1.94 மீட்டர் தாண்டிய அமெரிக்காவின் ஏல்ரா தங்கப் பதக்கத்தையும், 1.88 மீட்டர் தாண்டிய இந்தியாவின் சரத் குமாருக்கு வெள்ளிப் பதக்கமும், 1.85 மீட்டர் தாண்டிய இந்தியாவின் மாரியப்பனுக்கு வெண்கலப் பதக்கமும் அளிக்கப்பட்டது. இதன் மூலமாக 3 பாராலிம்பிக்ஸ் தொடர்களில் பங்கேற்று மூன்றிலும் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றை தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார். இதன் காரணமாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ரசிகர்களும், நட்சத்திரங்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாரியப்பன் தங்கவேலு 2016ஆம் ஆண்டு கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. இவருக்கு 5 வயது இருக்கும் போது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக சென்ற பேருந்து மோதியதால், காலின் கட்டை விரல் தவிர்த்து மற்ற பகுதிகள் சிதைந்துள்ளது. இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். பள்ளிப் பருவத்திலேயே உயரம் தாண்டுதலில் அசத்தி வரும் மாரியப்பன் தங்கவேலு, உடற்கல்வி ஆசிரியரின் வழிகாட்டுதலை தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி சென்றுள்ளார். 2015ஆம் ஆண்டு சர்வதேச பாரா போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய அவர், 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வென்றார். இதன்பின் மாரியப்பன் தங்கவேலு அளித்த பேட்டியில், எனது வெற்றிக்கு காரணம் சத்யநாராயணா சார் தான். இந்த வெற்றிக்கு பின் எனது தாயார் சொல்லும் தகவல்கள் என்னை சோகமாக்குகிறது. ஏனென்றால் கடந்த காலங்களில் எங்களை மதிக்காத பலரும், தாயாரை தேடி வந்து நெருக்குகிறார்கள் என்று கூறி கண்கலங்குகிறார். எனது தாயையும், 4 குழந்தைகளையும் தவிக்கவிட்டு சென்ற தந்தை, திடீரென உரிமை கோருவதாக கூறி அழுகிறார். சிறு வயதில் எனது தாயை எரித்து கொலை செய்ய முயற்சித்தவர் அவர். எனது அம்மாவுக்கு கொஞ்சம் கூட கருணையே காட்டியவில்லை. அவருக்கு என்றுமே என் மனதில் இடம் கிடையாது. என்னை அனைவரும் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதை கூட விரும்பவில்லை. என்னை மாரியப்பன் என்று மட்டும் அழைத்தாலே போதும் என்று தெரிவித்துள்ளார். Live Tamil News - தமிழ் செய்திகள்- தமிழ் மக்களுக்கான பொன்னான வாய்ப்பை ரணிலும் தமிழரசுக் கட்சியும் இல்லாமல் செய்துள்ளது - நாமல்
இலங்கை தமிழ் அரசு கட்சி. ஒரு தோணி... இரண்டு மாலுமிகள்.- யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
என்ன தண்டனை கொடுத்தார்கள். 😂- ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
நடை பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலின் வாக்குச் சீட்டு இதுதான். அரசாங்க ஊழியர் ஒருவர் தான் வாக்களித்ததை போட்டோ எடுத்து அனுப்பி இருக்கிறார். வாக்களித்ததை வெளியிடுவது சட்டப்படி பிழை என்றாலும், தமிழ் பொது வேட்பாளர் தோல்வி அடையகூடாது, அவர் வெற்றி பெறுவது தமிழ் இனத்தின் வெற்றி என்கிறதன் அடிப்படையில் தான் வாக்களித்ததை எனக்கு அனுப்பி இருக்கிறார். சங்கின் வெற்றி என்பது ஒவ்வொருவரின் உள்ளத்திலும் சுழன்று கொண்டிருக்கறது . வாக்களிக்கும் இறுதி நிமிடத்தில் நம் மக்கள் நமக்காகவே வாக்களிப்பார். Malaravan Uthayaseelan- ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி - 2024- 25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
சுவிஸ்கார அண்ணை, காட்டின கத்தியையும் அவர்கள் பார்த்து விட்டு, 47 இலட்சத்தையும் கறந்து போட்டு விட்டு விட்டார்கள். நாடு ரொம்ப மோசமப்பா... 😂 🤣- 25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
சுவிஸில் உள்ளவரும்... தனது படங்களை அனுப்பியுள்ளார் என்ற படியால், கணக்கு சரிதானே... விசுகர். 😂 அப்பிடி... என்ன படங்களை அனுப்பியிருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள். 🤣- அமெரிக்க ஜோர்ஜிஜா மாநிலத்தில் உயர்தர பாடசாலையில் துப்பாக்கி சூடு.
அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவின், ஜோர்ஜியா மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நிலை பாடசாலையில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறார்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில், அப்பலாஜி என்ற இடத்தில் அமைந்துள்ள உயர்நிலைப் பாடசாலையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 14 வயதுடைய கொல்ட் க்ரே எனும் மாணவன் என ஜோர்ஜியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் நடத்திய தாக்குதலில் இரண்டு மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். அந்தவகையில், 14 வயதுடைய மேஷன் செமர்ஹோர்ன், 14 வயதுடைய கிறிஸ்டியன் எங்குலு, 39 வயதுடைய ரிச்சட் எஸ்பின்வால், மற்றும் 53 வயதுடைய கிறிஸ்டினா இரிமி ஆகியோரே இதில் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில் 9 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை அடுத்து குறித்த பாடசாலையின் பாதுகாப்பை பலப்படுத்திய பொலிஸார், அங்கிருந்து மாணவர்களை விரைவாக வெளியேற்றியதோடு, துப்பாக்கி தாரியையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் தொடர்ச்சியாக பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் கலாசாரம் தொடர்ந்து வரும் நிலையிலேயே, இந்தத் தாக்குதலும் இடம்பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்காவின் 45 பாடசாலைகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஆனால், இந்த சம்பவமே மிகவும் மோசமானது என்றும் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜோர்ஜியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை அமெரிக்காவில் 385 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதோடு, 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1398303- கருத்து படங்கள்
இலங்கை தமிழ் அரசு கட்சி.- 25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது. இளம் பெண்ணின் டிக்டொக் வீடியோக்களைப் பார்த்து ஏமாந்த 52 வயதுடைய ஒருவர் 45 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் 52 வயதான நபரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார். இந்தநிலையில் 25 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் அவருடைய வட்ஸ் அப் கணக்குக்கு டிக்டொக் வீடியோக்கள் அனுப்பட்டுள்ளன. அதையடுத்து அவர்கள் இருவரும் தொடர்பாடல்களை ஆரம்பித்துள்ளனர். டிக்டொக் கணக்கில் பதிவேற்றப்பட்ட படங்களும் சுவிஸில் உள்ளவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவரும் தனது படங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார். இந்தத் தொடர்பாடல் இறுக்கமடைந்த பின்னர், அந்தப் பெண் பல்வேறு தேவைகளைக் கூறி சுவிஸில் உள்ளவரிடம் பணம் பெற்றிருக்கின்றார். டிக்டொக் கணக்கு உள்ள அதே பெயரைக்கொண்ட வங்கிக் கணக்குக்கே இந்தப் பணப் பறிமாற்றம் நடந்திருக்கின்றது. சுவிஸில் உள்ளவரும் சுமார் 47 லட்சம் ரூபா வரையில் கொடுத்திருக்கின்றார். அதன்பின்னர் அந்தப் பெண்ணின் தொடர்பாடல்கள் குறைய ஆரம்பித்துள்ளன. ஒரு கட்டத்தில் சுவிஸில் உள்ளவருக்கு சந்தேகம் ஏற்பட, அவர் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருக்கின்றார். யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸ் பொறுப்பதிகாரி குணறோஜன் தலைமையிலான பொலிஸ் குழு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் டிக்டொக்கில் உள்ள பெண்ணைக் கண்டுபிடித்து அவரிடம் விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில் அவருக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்திருக்கின்றது. அதையடுத்து வங்கிக் கணக்கு இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அரியாலையைச் சேர்ந்த பெண் ஒருவரைக் கைது செய்தனர். அந்தப் பெண்ணின் பெயரும், முதலெழுத்தும் டிக்டொக் கணக்கு வைத்திருக்கும் இளம்பெண்ணின் பெயர் முதலெழுத்தும் ஒன்றாக இருந்தன. அவரது வங்கிக்கணக்குக்கே பணம் மாற்றப்பட்டுள்ளபோதும், சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் தொடர்பாடலை மேற்கொண்டவர் அவர் இல்லை என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டது. தொடர் விசாரணையில் 47 வயதுடைய மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார். அவரே சுவிஸ் நாட்டில் உள்ளவருடன் இளம் பெண் போன்று உரையாடிப் பணத்தைக் கறந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்தது. அத்துடன், இவர்களின் ‘அன்ரி’ (aunty) என்று அடையாளப்படுத்தப்பட்ட இன்னொருவருக்கும் பணம் அனுப்பப்பட்டுள்ளது. அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள். ரிக்ரொக் பெண்ணின் பெயரும், தனது நண்பியின் பெயரும் ஒன்றாக இருப்பதைப் பயன்படுத்தி 47 வயதுப் பெண் இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளார். சுவிஸ் நாட்டில் உள்ளவர் முன்னொரு தடவை யாழ்ப்பாணம் வந்தபோது, கிடைத்த அறிமுகத்தைக் கொண்டே அந்தப் பெண் திட்டம் தீட்டிப் பணத்தை கறந்துள்ளமையும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, பணத்தை மீள வழங்குவதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவர்களைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது. https://athavannews.com/2024/1398281- மதுபானசாலைக்கான அனுமதி விவகாரம்: உண்மையை ஒப்புக் கொண்டார் அங்கஜன்
மதுபானசாலைக்கான அனுமதி விவகாரம்: உண்மையை ஒப்புக் கொண்டார் அங்கஜன். ”மதுபான சாலைகளுக்கான அனுமதியினை தனது தந்தை புதிதாக பெறவில்லை எனவும், இருந்த அனுமதியினை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கும் முகமாக வழங்கிய ஆவணங்களே அவை எனவும் ” நாடளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். மதுபானசாலைக்கான அனுமதி விவகாரம் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” எனது அப்பா ஒரு தொழிலதிபர். நான் அரசியலுக்கு வர முன்னரே தொழிலதிபராக இருக்கிறார். 70 ஆண்டுகளில் இருந்து அவர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். கொழும்பில் 92ஆம் ஆண்டு காலங்களில் மதுபான சாலை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவரிடம் சில மதுபான சாலைகளின் அனுமதிகள் இருந்தன. அவற்றினை புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டார். புதிதாக அனுமதி பெறவில்லை. எங்களுக்கு புதிதாக யாரும் தர வேண்டிய தேவை இல்லை. எனது அப்பாவிடம் அனுமதிகள் ஏற்கனவே இருந்தன. அப்பா மீது குற்றம் சாட்டிய நபருக்கும் தெரியும் எனது அப்பாவிடம் மதுபான சாலைகளுக்கான அனுமதிகள் இருக்கின்றன என்ற விடயம். தெரிந்தே அவர் குற்றம் சாட்டியுள்ளார் ”இவ்வாறு அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1398280- அமெரிக்க ஜோர்ஜிஜா மாநிலத்தில் உயர்தர பாடசாலையில் துப்பாக்கி சூடு.
2024’ம் ஆண்டு ஆரம்பித்து இதுவரை 378 பாரிய துப்பாக்கி சூடுகள் அமெரிக்காவில் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி வைத்திருக்கும் அனுமதியை கடுமையாக்காவிடில் இது தொடர் கதைதான். 14 வயது சிறுவனின் கைக்கு துப்பாக்கி சென்றதை இட்டு… பெற்றோர் வெட்கப் படவேண்டும். அவர்களும் இக்கொலையின் பங்காளிகள் என்ற முறையில் கடுமையான தண்டனை வழங்கப் படவேண்டும்.- தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம் - அநுரகுமார
முன்னணியில் இருந்த ரணில் மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளதாக சொல்கிறார்கள். கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்பதும் மறுப்பதற்கு இல்லை.- ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
- மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் யாழில் கைது!
நிழலி, தகப்பனின் உத்தியோகத்தை கவனித்தீர்களா. ஆசிரியராம். எப்படியிருந்த சமூகம், தலைகீழாக மாறியிருக்கு.- அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்!
சரி... சரி.., ரென்சன் ஆகாதேங்கோ. 😂 அடுத்தமுறை கவனமாக பார்த்து பதிகின்றேன். 🤣 - நமக்காக நாம்: திருகோணமலையில் அரியநேத்திரனின் பிரசாரம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.