Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அவர்கள்.... பழம் தின்று, கொட்டை போட்ட முதியோர்கள் ஐயா.... அதை பார்த்து ரசிக்க என்ன இருக்கு? 😂 உங்களின் அலப்பறை தாங்க முடியவில்லை. 🤣
  2. சாணக்கியனை விட சுமந்திரனுக்கு ஏன் காசு குறைய கிடைத்தது என யோசித்தேன். 100 கோடி என்று நீங்கள் சொன்னால், ஏற்றுக் கொள்ளக் கூடியதே. சாணக்கியன் இன்னும்... சுமந்திரனிடம் கற்க நிறைய உள்ளது.
  3. //லவ்லி கிறீம் ஹவுஸ் ஆறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்னிசை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் யாழ் சாவகச்சேரி லவ்லி கிரறீம் ஹவுஸ் நிறுவனத்தின் ஆறாமாண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி பரிசளிப்பு விழாவும் இன்னிசை நிகழ்வும் 10-09-2024 ( செவ்வாய்க்கிழமை ) மாலை 2 தொடக்கம் 4 மணி வரை யாழ் கொடிகாமம் நட்சத்திரமகால் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ஈழத்தின் பிரபல பாடகி கில்மிஷா மற்றும் சாந்தன் இசைக் குழுவினர் இணைந்து வழங்கும் இன்னிசை நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது. அனுமதி இலவசம்! அனைவரும் வாரீர்.// Kunalan Karunagaran தமிழரசு கட்சியின் (சுமந்திரன் அணி) அடுத்த பிரட்டு வெளிப்பட்டது. ஒரு ஐஸ் கிரீம் கடையின்... ஆறாவது ஆண்டு நிறைவுடன் நடந்த கில்மிஷாவின் இசை நிகழ்ச்சிக்கும், பரிசளிப்பு விழாவிற்கும் ... சஜித் பிரேமதாசாவை கூப்பிட்டு, தேர்தல் பிரசாரக் கூட்டம் என்று அங்கு வந்திருந்த மக்களை காட்டி ஏமாற்றியுள்ளார்கள். அந்த ஐஸ் கிரீம் கடை கொடுத்த விளம்பரத்தில், எந்த ஒரு இடத்திலும்... சஜித் பிரேமதாசாவின் தேர்தல் பிரச்சார கூட்டம் என்று குறிப்பிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  4. இதனை நீங்கள் சிரிக்காமல் சொன்னதுதான்.... சிறப்பு. "Go Home Gotha" அரகலய போராட்டத்தின் போதே... கிழவன்களை கூட நிர்வாணப்படுத்தி ரசிக்கும் கூட்டத்தையும் பார்த்தோமே.... 😂
  5. 25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது. நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள். அதில் ஒரு தம்பதியினரில்... மனைவி ''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்ற படி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார். கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கியது கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள் அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும், விட்டு கொடுத்தலும் நிறைந்திருந்தது. அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100 எல்லோருக்குமே தெரிந்து விட்டது அவர்கள் தான் ஜெயிக்கப் போகிறார்கள் என்று. எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்த பின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும் மிகக் குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள். பூஜ்ஜியம் வாங்கியது வேறு யாரும் இல்லை வரும் போதே சண்டை போட்டுக் கொண்டு வந்தார்களே அவர்கள் தான். இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள் ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றார்கள். எத்தனை குழந்தைகள் என்றதற்கு நான்கு என்றார்கள் திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு 35 வருடங்கள் என்று சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள். 35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள் அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள். ஆனால் போட்டியின் நடுவர் இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில் மிகச்சிறந்த தம்பதி இவர்கள் தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்! காரணம்... எல்லாவித மனப்பொருத்தத்தோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரிய விஷயம் கிடையாது எந்த ஒரு மன ஒற்றுமையும், புரிதலும் இல்லா விட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இது தான் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் என்று பாராட்டினார். இருவரும் ஆனந்தக் கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக் கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். எந்நிலையும் தன் கணவனை/மனைவியை விட்டும் பிரியாத இதுவும் ஒரு வகையான அன்பு தான். Sutha Lakshmi
  6. வீதி எல்லாம்... ஜனாதிபதி ஆகித்தான் அமைக்க வேண்டுமா. அமைச்சர் ஆக இருந்து, செய்ய முடியாதா?
  7. அது என்ன மர்மம் என்று தெரியவில்லை.... தமிழ்ப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் /அதிபர்கள் தான்... தமிழ்ப் பிள்ளைகளைப் போட்டு மிருகங்கள் மாதிரி அடிக்கின்றார்கள். சிங்களப் பகுதிகளில் இப்படி நடப்பதாக எந்த ஒரு செய்தியையும் நான் வாசிக்கவில்லை. தமிழ் ஆசிரியர்களுக்கு, பிள்ளைகளை நடத்தும் முறை தெரியவில்லையோ...
  8. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு... ரணில் மதுபானசாலை அனுமதியுடன் பணமும் கொடுத்த விவகாரம் கடந்த மூன்று கிழமையாக இணையங்களில் பேசப்பட்டு வந்தவைதான். அந்த வகையில்... சாணக்கியனுக்கு... கல்லடியில் ஒரு மதுபானசாலை அனுமதியும், சுமந்திரனுக்கு.... மூன்று மதுபானசாலை அனுமதியும், அதில் ஒன்று வல்வெட்டித்துறையிலும் உள்ளதாம். ஸ்ரீதரனுக்கும்... கிளிநொச்சியில் ஒரு மதுபானசாலை அனுமதியும், அங்கஜனுக்கும் மதுபானசாலை அனுமதியும் கிடைத்ததுள்ளதாம். அங்கஜனின் தந்தை இராமநாதன், ஏற்கெனவே சாராய வியாபாரிதானாம். அது மட்டுமல்லாது.... சாணக்கியனுக்கு 60 கோடி ரூபாயும், சுமந்திரனுக்கு 55 கோடி ரூபாயும், ரணில் கொடுத்ததாக பலரும் பேசிக்கொள்கின்றார்கள். சாணக்கியனுக்கு கிடைத்த 60 கோடியை பற்றி... தமிழரசு கட்சியின் அவைத்தலைவர் சிவஞானமும் அறிந்து உள்ளார். சிவஞானம் அறிந்த... அதனை பற்றிய செய்தியை சில வாரங்களுக்கு முன் யாழ். களத்தில் இருந்தே நான் வாசித்து அறிந்து கொண்டேன்.
  9. சுமந்திரனின் குடும்ப உறுப்பினர்கள் கூட வரவில்லையா. 😂 🤣 Selvarajah Kalmunai
  10. இரட்டை கோபுர தாக்குதல்: 23வது ஆண்டு நினைவுதினம். உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 23 வருடங்கள் ஆகின்றன. உலகின் தூங்கா நகரம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயோக் நகரில் இதே திகதியில் (11/ 09/2001) காலை 8:46 மணியளவில் வானளவு உயரத்தில் இருக்கும் இரட்டை கோபுரங்கள் மீது அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று மோதியது. 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் வொஷிங்டனில் இருந்து லொஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு பயணிக்கவிருந்த விமானமே இவ்வாறு மோதியது. எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்ற இவ் விபத்தினால் அமெரிக்காவே அதிர்ந்துபோய் இருந்த நிலையில் தொடர்ந்து 18 நிமிடங்கள் இடைவெளியில்அதாவது காலை 9:03க்கு மற்றொரு விமானம் இரட்டை கோபுரத்தின் தெற்கு கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த விமானமும் அதே வாஷிங்டன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்ட விமானமாகும். இந்த தாக்குதலையடுத்து இரட்டை கோபுரக் கட்டிடங்கள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. நியூயோர் நகரம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. கட்டடங்கள் தெருக்களில் சரியத் தொடங்கின. ஆயிரக்கணக்கான மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். நகரம் முழுவதும் அழுகுரல் ஒலிக்க சில மணிநேர இடைவெளியில் அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் மீது அடுத்த தாக்குதல் இடம்பெற்றது. இத்தாக்குதலினால் அமெரிக்கா மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகமே உறைந்து போய் இருந்த நிலையில் குறித்த தாக்குதலுக்கு அல் கொய்தா அமைப்பு பொறுப்பேற்றது. இந்த நேரத்தில் 4வதாக மற்றொரு விமானம் கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எந்த இடத்தில் தாக்குதல் நடத்தும் என எதிர் பார்க்கப்பட்ட நேரத்தில் பென்சில்வேனியா மாகாணம் அருகே வெட்ட வெளியில் விழுந்து நொருங்கியது. இது குறித்து பின்நாளில்இ 4 வதாக கடத்தப்பட்ட விமானத்திலிருந்த தீவிரவாதிகளுடன்இ அதில் வந்த பயணிகள் சண்டையிட்டதன் காரணமாகவே வெட்ட வெளியில் விழுந்து நொறுங்கியது என அதிகாரிகள் கூறினர். இந்த விமானம் தாக்கச் சென்ற இடம் எது என விடை என்பது இப்போது வரை மர்மமாகவே உள்ளது. இத் தாக்குதலில் 19 பயங்கரவாதிகள் உட்பட மொத்தம் 2, 996 பேர் உயிரிழந்தனர். தாக்குதலால் இரட்டை கோபுரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்களில் 300 பேரும் உயிரிழந்தவர்களின் பட்டியலில் அடங்குவர். இந்த தாக்குதலால், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். அத்துடன் தாக்குதலின்போது ஏற்பட்ட புழுதி புகை காரணமாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போதும் அவதிப் பட்டு வருவதாக கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்கா தெரிவித்திருந்தது. இதற்கிடையில் குறித்த தாக்குதலுக்கு அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ் தான் காரணம் என அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் குற்றம் சாட்டினர். இது குறித்த சில ஆவணப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேசமயம் அல் கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின் லேடனை பிடித்து கொடுப்பவர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை சன்மானமாக வழங்குவதாக ஓர் அறிவிப்பை எப்பிஐ அப்போது வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தலைமையில், கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி, அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானில் ஒரு சுரங்கத்தில் பதுங்கி இருப்பதை அறிந்து அமெரிக்கா அதிரடியாக விமானங்களின் மூலம் இராணுவத்தை அனுப்பி கொலை செய்தது. இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம்திகதி ‘பீனிக்ஸ்’ பறவைசாம்பலில் இருந்து எழும் ‘பீனிக்ஸ்’ பறவை போல இரட்டை கோபுரம் இருந்த இடத்தில், புதிய வர்த்தக மையக் கட்டிடமொன்று திறக்கப்பட்டது. அதேசமயம் பென்டகன் மற்றும் சாங்ஸ்வில் பகுதியில் இத் தாக்குதல் தொடர்பான நினைவு மையங்களும் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1398869
  11. யாகி புயல் தாக்கம் – 127 பேர் பலி. வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி சூறாவளி புயல் கடந்த சனிக்கிழமை வியட்நாமை மணித்தியாலத்துக்கு 149 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கியிருந்தது. வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கி.மீ. வேகத்துடன் புயல் கரையை கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் பல மணி நேரம் கனமழை பெய்தது. புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படதோடு, பலத்த காற்று வீசியதால் மரங்கள் வீதியில் சரிந்து வீழ்ந்தன. கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. புயல் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. மீட்புப் பணிகளில் இராணுவம், பொலிஸார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில், யாகி புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதோடு 176 பேர் காயம் அடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் அதிகமானோரை காணவில்லை. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. வியட்நாம் நாட்டில் பல தசாப்தங்களாக இல்லாத வகையில் யாகி புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1398894
  12. மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு ஜேவிபி சதி திட்டம்!- திஸ்ஸ குட்டியாராச்சி. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக் கொலை செய்வதற்கு சதி திட்டங்கள் தீட்டப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே திஸ்ஸ குட்டியாராச்சி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ தேசிய மக்கள் சக்தியினால் இந்த கொலைக்கான சதி முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அவரது பாதுகாப்பு என்பனவற்றை இல்லாமல் செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்க ஜேவிபி தாயாராகி வருகின்றது. இந்த சதித் திட்டத்தின் உண்மை நிலையை அம்பலப்படுத்துமாறு நான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கிறேன். ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வு பிரிவும் அறிவுறுத்தியுள்ளது. ஆகவே அவர்களது பாதுகாப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்பு தரப்புக்கு வலியுறுத்தியுள்ளோம்” இவ்வாறு திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1398811
  13. இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்த இலங்கை அணி! இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக இந்த தொடரின் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 219 ஓட்டங்கள் இலக்கை இலங்கை அணி வெற்றிகரமாக கைப்பற்றியது. இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை சேசிங் செய்த முதல் ஆசிய அணி என்ற மாபெரும் வரலாற்று சாதனையை இலங்கை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஹெடிங்லேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 180 ஓட்டங்களை சேசிங் செய்தமையே சாதனையாகக் கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1398841
  14. ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு ஆலோகனை வழங்க தயார் – ஜெய்சங்கர் கருத்து. ரஷ்யா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்தார். இந்திய பிரதமர் மோடியின் ரஷ்யா, உக்ரைன் பயணத்துக்கு பிறகு புடின் இந்தக் கருத்தை தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார். இரு நாட்டு தலைவர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது. இந்நிலையில், ஜெர்மனியில் நடந்த வெளியுறவு அலுவலகத்தின் தூதர்கள் மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கருத்து தெரிவித்தார். அதற்கமைய , இந்த மோதல் போர்க்களத்தில் தீர்க்கப்படும் என நினைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கும். பேச்சுவார்த்தை நடக்கும்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் அந்தப் பேச்சுவார்த்தையில் இருக்கவேண்டும். போர்க்களத்தில் இருந்து நீங்கள் ஒரு தீர்வைப் பெறப் போகிறீர்கள் என நாங்கள் நினைக்கவில்லை. நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால், நாங்கள் எப்போதும் அதை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1398876
  15. ரத்த சோகைக்கு சித்த மருந்து கண்டுபிடித்த இந்திய நிறுவனம். ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் நாட்டின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு, தமிழ்நாடு சித்த மருந்து கலவையான அன்னபேதி செந்தூரம், பாவனக் கடுக்காய், மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றைக் கொண்ட ‘ஏ.பி.என்.எம்.’ மருந்து, ரத்த சோகை உள்ள வளர் இளம் பருவத்துப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் மற்றும் அதனுடன் கூடிய சத்துக்களின் அளவை மேம்படுத்தும் என ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளனர். ரத்த சோகையை குறைப்பதில் சித்த மருந்துகளை பிரதானமாக பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 2 ஆயிரத்து 648 சிறுமிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆய்வு முடிவுகளின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றி தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆர். மீனாகுமாரி இது குறித்து தெரிவிக்கையில், “ஆயுஷ் அமைச்சகத்தின் பொது சுகாதார முயற்சிகளில் சித்த மருத்துவம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இளம் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, உணவு ஆலோசனை, நோய்த்தடுப்பு பராமரிப்பு மற்றும் சித்த மருந்துகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகள் ரத்த சோகை நோயாளிகளுக்கு பலன்களை அளித்தன. எனவே ரத்த சோகைக்கான சித்த மருந்துகள் செலவு குறைந்த பங்கை பொது சுகாதாரத்துக்கு அளிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1398868
  16. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றிருந்தனர். குறித்த விவாதத்தின்போது இருவரும் தனது கருத்துகளை தெரிவித்தனர். கமலா ஹாரிஸ் “நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறார். மக்களின் பிரச்சனைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவே மாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். டிரம்பே ஒரு குற்றவாளிதான். அவர் குற்றவாளிகளை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் அவர் மீது உள்ள வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார். அமெரிக்காவின் சட்டத்தின் மீது டிரம்ப்-க்கு நம்பிக்கை இல்லை. இவர் மீண்டும் ஜனாதிபதியானால் நாடு தாங்காது என்று இவருடன் பணியாற்றிய அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். ப்ராஜெக்ட் 2025 என்ற ஆபத்தான திட்டத்தை டிரம்ப் வைத்துள்ளார். அனைவரையும் ஒன்றிணைக்கும் தலைவரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப் “கொரோனா தொற்றை மிக சிறப்பாக கையாண்டோம். அமெரிக்காவிற்கான மிக சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன். என்னுடைய ஆட்சியில் பண வீக்கம் மிக குறைவாக இருந்தது. சீன பொருட்கள் மீது அதிக வரி சுமத்தி வருவாய் ஈட்டினோம். பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. நான் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்” என்று குறிப்பிட்டார். மேலும் “கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவரிடம் எந்த திட்டமும் இல்லை. நமது பொருளாதாரத்தை கமலா சீர்குலைத்து விட்டார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது. வங்கி கடன் ரத்து என கூறி பைடன் ஏமாற்றினார். எனது பிரசாரக் கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும். நான் வித்தியாசமான ஒருவர். சரியாக பணி புரியாதவர்களை நான் பணி நீக்கம் செய்தேன். வெளியே சென்று அவர்கள் என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர். வரலாற்றில் யாருக்கும் இல்லாத ஆதரவு எனக்கு உள்ளது. எனக்கும் ப்ராஜெக்ட் 2025-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை நான் படித்தது கூட இல்லை. படிக்கவும் மாட்டேன். நான் திறந்த புத்தகம். வரிகளைக் குறைப்பேன். கமலா ஹாரிஸ் ஜனாதிஜபதியானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும். மேலும், எங்கள் கட்சி பேரணியில் பங்கேற்றவர்கள் சுடப்பட்டார்கள்” என்றும் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1398873
  17. சுமந்திரனின் வாய் அப்படி. பாவம் சஜித்துக்கு... கிடைக்க இருந்த வாக்கையும் இந்தாள் கெடுத்துப் போட்டுது. சுமந்திரன், சஜித்தின் ஜனாதிபதி கனவுக்கு ஆப்பு வைத்து விட்டார். +++++++ +++++++ +++++++ +++++++ "சிலர் வாயை திறந்து பேசினால்... வெள்ளி கொடுக்கலாம். சிலர் வாயை மூடிக் கொண்டிருந்தாலே... பவுண் கொடுக்கலாம்." 😂 👆- துருக்கிய பழமொழி -👆 சுமந்திரன் எந்த வகை.... என்பதை, உங்கள் தெரிவிற்கே விட்டு விடுகின்றேன். 🤣
  18. சம்பந்தன் இருந்திருந்தால்... நான்காவது அணியாக, பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து.... இருக்கின்ற குழப்பங்களுக்கு மணி மகுடம் வைத்திருப்பார். நீங்கள் சொன்ன மாதிரி... விரைவில் வடக்கில் இருந்து தேசியக் கட்சிகள் மூலமாக... சிங்களவனும், முஸ்லீமும் எம்.பி.யாகி வரப் போகும் காலம் வெகு விரைவில் நடக்கும். பிறகு... இவர்கள் உன்னாலை நான் கேட்டேன், என்னாலை நீ கெட்டாய் என்று, மாறி மாறி... முதுகு சொறிந்து கொண்டு இருக்க வேண்டியதுதான். இப்ப இவர்களுக்கு, சிங்களவனிடம் இருந்து... பெட்டியும், வரும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வாங்கும் போட்டியும் தான் நடக்குதே தவிர.. தமிழனின் நலன் சார்ந்து ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
  19. மாவைக்கு, வக்காலத்து வாங்கப் போய்.... மூக்கு, உடைபட்டது தான் மிச்சம். 😂 இவர்களுக்கு... மணி கட்டின மாடு சொன்னாலும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால்... அவர்களின் "டிசைன்" அப்படி. 🤣
  20. அப்புக்காத்து சுமந்திரன் என்பவர், முதலில்... சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பாராம். பிறகு... 10 நாள் கழித்து, சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடி மக்களுக்கு அறிவிப்பாராம். மக்களை இவர் முட்டாள் பயலுகள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாரா. நீங்கள், ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் 😂. கட்சி தலைமைக்கு கட்டுப் பட்டு, வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே போதும். 🤣
  21. இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட கூட்டம்! 15ஆம் திகதி முக்கிய அறிவிப்பு! இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றபோதும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற, உத்தியோகபூர்மான தீர்மானம் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவடைந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி மூன்று விதமான நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ள நிலையில் கட்சியாக ஒருமித்து தீர்மானம் எடுப்பதில் குழப்நிலை காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது. சுமந்திரன் தலைமையிலான அணியினர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளபோதும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள சி.சிறிதரன் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு என நேற்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இன்று வவுனியாவில் கட்சியின் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்தியர், ப.சத்தியலிங்கத்தின் வவுனியா இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றிருந்தது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றிருந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன் மற்றும் வடமகாண சபை அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சரவணபவன் இன்றைய தினம் கலந்துகொள்ள முடியாமையினால் ஆறு பேர் கொண்ட குழுவில் 5 பேர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1398853
  22. அந்த துணிக்கடையில் ஒரு பெண் உள்ளே நுழைந்தார்.. "ஏங்க, வன்னியர் குழந்தைக்கு ட்ரெஸ் கிடைக்குமா..?? என்றார்... . "இருக்குமா, அந்த செக்‌ஷனுக்கு போங்க.." என்றார்... . என்னடா பெரியாரு மண்ணுக்கு வந்த சோதனைனு பீதியில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த என்னை கடைக்காரரே சமாதானப்படுத்தினார்... . அவங்க கேட்டது One Year, குழந்தைக்கு Dress, நீங்க ஒன்னும் பதறாதீங்க... . அப்பாடா.. . ஓ.. இது சாதி பிரச்சனையோன்னு பார்த்தேன்.. நல்ல வேளை இது மொழியை ஸ்டைலா பேசற குந்தானிகளால வந்த பிரச்சனை.. . 24 மணி நேரமும் நம்ம பதட்டத்துலயே வச்சுருக்கானுங்க.... Venkat Bvk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.