Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு! இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மரியாதை நிமித்தமாகக் கொழும்பில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவை வழுப்படுத்துதல் மற்றும் சமூக பொருளாதார விடயங்களை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், தொழில் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397506
  2. தங்களின் இன்முகமான வரவேற்பிற்கு, நன்றி சுவியர். 🥰 நான் வரவில்லை. மகள் மட்டுமே வருகின்றார்.
  3. பரா ஒலிம்பிக் விளையாட்டுக்களை பார்ப்பதற்காக, வருகின்ற கிழமை எனது மகளும் பாரிஸ் செல்ல இருக்கின்றார்.
  4. போலீஸ்காரனும்... சரத்துக்கு, "டிக்கி"யை காட்டிக் கொண்டு நிற்கிறான். 😃 ஆட்கள் இல்லாத இடத்தில்... போலீஸ்காரன் ஏன் காவலுக்கு, நிற்கிறான். சிலவேளை... வெறும் கதிரையை தூக்கிக் கொண்டு போயிடுவார்கள் என்று நினைத்தார்களோ. 😂
  5. அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானால் 6 மாத காலம் தான் அந்தப் பதவியில் இருப்பார்-ஹிருணிகா! தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானால் அதிகபட்சமாக 6 மாத காலம் தான் அந்தப் பதவியில் இருப்பார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற சஜபா அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர மேற்கண்டவாறு தெரிவித்தார். 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த அநுர குமார திஸாநாயக்க மக்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காதவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட ஒருவரால் தற்போதைய இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என நம்ப முடியுமா?எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகபட்சமாக 2 வருடங்கள் பதவியில் இருப்பார் என்றும், அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள பல வழக்குகளை வாபஸ் பெறவே அவர் ஜனாதிபதியானார் என்றும் தாம் முன்னர் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1397483 @Maruthankerny
  6. அப்போ நடந்த சம்பவங்கள் எதற்கும்.... உங்கள் அபிமான கனடிய தமிழர் பேரவை பொறுப்பாளி அல்ல என்பதுதானே உங்கள் வாதம். இந்த தெருவிழா நடக்க முன்பே பல தமிழர் அமைப்புகள் பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வைத்ததாக அறிகின்றோம். அந்த நேரமாவது கனடிய தமிழர் பேரவை சம்பந்தப் பட்டவர்களை அணுகி என்ன பிரச்சினை என்பதனை பேசித் தீர்த்திருந்தால் இந்த அசம்பாவிதங்களை தவிர்த்து இருக்கலாமே. அதற்கு... அவர்களுக்கு தடையாக இருந்தது எது? ஒரு நகரத்தில் நடக்கும் நிகழ்வை ஓரிரு தமிழர் அமைப்புடன் கலந்து பேசி சுமூகமாக நடத்தி முடிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு கனடா தமிழர் பேரவைக்கு இல்லை என்றால்.... சிங்களவனுடன் "இமாலய பிரகடனம்" செய்வதில் ஏதாவது அர்த்தம் உண்டா.
  7. அப்படி யாரும் சொல்லவில்லை. தமிழர் நலன் சார்ந்து இருக்கின்ற கனடிய தமிழர் பேரவை... தனியே ஸ்ரீலங்கா போய்... "இமாலய பிரகடனம்" என்ற ஒப்பந்தத்தை செய்த பின் தான்.... தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற மக்களும்.. இமாலய பிரகடனம் என்றால்.. என்ன என்று தெரியாமல் விழித்தார்கள். தாயக மக்களுக்கே... தெரியாமல் புத்த பிக்குகளையும், பல்லாயிரம் மக்களை கொன்று போரை நடத்தியவர்களை சந்தித்ததைத்தான்.... தவறு என்றும், இவ்வளவு பிரச்சினை ஆரம்பமாக உள்ள முக்கிய காரணம் என்று குறிப்பிடுகின்றோம். உங்களுக்கு நடந்த பல விடயங்கள் தெரியும். ஆனால்... தெரியாத மாதிரி நடிக்கின்றீர்கள் அல்லது அதனை ஒத்துக் கொள்ள உங்கள் சுயமரியாதை இடம் தரவில்லை என்றே கருத வேண்டி உள்ளது. ஆரம்பமான முக்கிய பிரச்சினையை வசதியாக மறைத்துக் கொண்டு, திரும்பத் திரும்ப ஒரே கருத்தை சொல்லிக் கொண்டு இருப்பது உங்களுக்கே அலுப்பு அடிக்கவில்லையா. நன்றி, வணக்கம்.
  8. நீங்கள், அடிமடியிலை... கை வைக்கிறீர்கள். 😂 🤣 அவர்களாக போய்... புத்த பிக்குகளிடம் குனிந்து ஆசிர்வாதம் வாங்கலாம். சஜித், சந்திரிக்கா, மகிந்த, கோத்தாவை... பின்கதவால் சந்திக்கலாம். அதை எல்லாம்.... நீங்கள் கண்டாலும், காணாத மாதிரி இருக்க வேண்டும் என நினைக்கின்றார்கள். இந்தப் பிரச்சினை தோன்றியதன் முக்கிய மூல காரணமே, கனடா தமிழ் பேரவையில் உள்ளவர்கள் செய்த செயல் என்பதை இவர்கள் தெரிந்தும்... தெரியாத மாதிரி கதை அளந்து கொண்டு இருப்பதை பார்க்க சகிக்க முடியவில்லை. 😡 அவர்கள்... இல்லாத முள்ளமாரித்தனம் எல்லாம் செய்தவனை கண்டிக்க வக்கில்லாமல், மற்றவனுக்கு... "வகுப்பு" எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். 😂
  9. பேசாமல் அனுரவுக்கு வோட் போட்டுட்டு... 10,000 சிலிண்டர் வாங்கி, கடை ஒன்று போடலாம் என்று இருக்கின்றேன்.
  10. காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்- ஆய்வில் தகவல். இந்தியாவில் காற்று மாசு தொடர்ந்து நீடித்து வந்தால் மக்கள் வாழும் தங்கள் வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்லைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2021-ம் ஆண்டின் காற்று மாசுப்பாட்டை காட்டிலும் 2022-ம் ஆண்டில் காற்று மாசுபாடு 19.3 சதவீதம் குறைந்துள்ளது. காற்று மாசுபாடு இதேபோன்று நிலைத்திருந்தால் இந்தியாவில் வாழும் மக்கள் சராசரியாக 3.4 வருட வாழ்நாளை இழக்க நேரிடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் அதிக மக்கள் தொகையின் காரணமாக காற்று மாசுபாட்டிற்கான சுமையை இந்தியா எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் மாசுபட்ட பகுதி வடக்கு பகுதி ஆகும். இது 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மற்றும் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வசிக்கும் பகுதியாகும். 2022-ம் ஆண்டில் இந்தப் பகுதியில் காற்று மாசின் தரநிலை அளவு 17.2% குறைந்தாலும், இந்த மாசு நிலைகள் நீடித்தால் மக்கள் வாழ்நாளில் 5.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதி தாண்டி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் அதிக காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளும் மாநிலங்களாக திகழ்கிறது. இங்கு சராசரியாக 29.23 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களுடைய ஆயுட்காலத்தில் 2.9 வருடங்களை இழக்க நேரிடும் என்றும், தெற்கு ஆசியாவை பொறுத்த வரைக்கும் கடந்த 20 ஆண்டுகளில் 2022-ல் காற்று மாசுபாடு 18 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1397434
  11. கந்தையா அண்ணை... பாடகர் சிறிநிவாஸ் அந்த மேடையில், இரண்டு பாடல்களை மட்டும் பாடியதாக அறிய முடிகின்றது. அவர் பாடும் படங்கள் மேலே இணைக்கப் பட்டுள்ளதுடன்... அவரை மேடையில் இருந்து காவல் அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காணொளி காட்சிகளும் பதிவாகி உள்ளது. இதில் உள்ள எந்தப் படத்திலும்... அவர் மீது முட்டை வீசியதற்கான அறிகுறிகள் அறவே இல்லை. அப்படி இருக்க... முட்டை கதையை கட்டி விடுபவர்கள் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் அல்லவா. இல்லாத ஒன்றை சொல்லும் போது... அவரின் அபிமானிகளான தென் இந்திய தமிழர்களின் மனதிலும் ஒரு காயத்தை ஏற்படுத்தி இரண்டு நாட்டு தமிழர்களிடமும் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்பதை இவர்கள் உணராமல் எழுதுவது ஆபத்தானது.
  12. யாழ் தேவி புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பதாக உறுதி- நாமல்! தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்திறன் இன்மை காரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பதாக உறுதியளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் 30 வருடகால யுத்தத்தை முடித்துக் கொண்டு எமது அரசாங்கம் வடமாகாணத்திற்கான யாழ் தேவி புகையிரத பாதைகளை வெற்றிகரமாக நிறுவியது என தெரிவித்தார் எனினும் தற்போதைய நிர்வாகத்தின் செயற்திறன் இன்மையினால் இந்த சேவைகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாத்தறை முதல் கதிர்காமம் வரையிலான 114 கிலோமீற்றர் நீளமான புகையிரத பாதையை தாமதமின்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார். http://athavannews.com/2024/1397410
  13. பழம் நழுவி, பாலில் விழுந்த மாதிரி..... அதுக்கு நேரே தான் அவர்கள் காத்திருக்கின்றார்கள். 😂
  14. உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள சைக்கிள். 😂
  15. வரி அனைத்தையும் நிறுத்தி, அனைத்து விலைகளையும் குறைத்து, வறுமையை ஒழித்து, நாட்டில் உள்ள கடன் அனைத்தையும் அடைத்து... நான் யார் என்பதனை காட்டுகின்றேன். - அனுர குமார திசாநாயக்க.- எங்கள் ஆட்சியில் திருகோணமலையில் இருந்து... உலக நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்வோம். - அனுர -
  16. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின், மகனை எதிர்த்து போட்டியிட்டு விட்டு உயிருடன் அங்கு யாரும் இருக்க முடியுமா? ஆனால்... ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தல் என்று உருட்டுவார்கள்.
  17. உண்மைதான்.. மற்ற இனத்தில் காணக் கிடைக்காத பழக்கம் எம் இனத்தில் அதிகமாக உள்ளது. பணத்திற்காக எதனையும் செய்யத் தயாராக உள்ள மனச் சாட்சி இல்லாத மனிதர்கள்.
  18. கெட்ட உலகம் இது. 😂 இரத்த தானம் செய்ய தயங்குபவர்கள்... விந்து தானம் செய்ய, பாய்ந்தடித்து ஓடுகின்றார்கள். 🤣 நாங்கள்.... இரத்ததானமும் செய்யவில்லை, விந்து தானமும் செய்யவில்லை. எல்லாம் சொந்த உபயோகத்திற்கே பொத்திப் பாதுகாத்துக் கொண்டோம். 😍
  19. சுரேன் ராகவன்... பிறப்பால் தமிழராக இருந்து கொண்டு, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் இனத்தையே கேவலப் படுத்தி, சிங்களவர்களை குளிர்விக்கும் ஒரு கீழ்த்தரமான சிந்தனை உடைய மனிதன். குறுகிய வழியில் பணம் சம்பாதிப்பதற்காக... இப்படிப் பட்டவர்கள் பலர் இப்போ திடீரென தோன்றியுள்ளார்கள்.
  20. இருவருக்கும் வயதும் அதிகம் இல்லை. கடலின் ஆழத்திற்கு செல்லும் போது, ஏற்படும் ஆபத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லைப் போலுள்ளது.
  21. இருந்த ஜனாதிபதிகளில், கோத்தாதான்… அல்லல் பட்டு, அவமானப் பட்டு கோவணத்தையும் விட்டுட்டு ஓடிய கேவலமான ஜனாதிபதி. 😂 🤣 ஒரு ஜனாதிபதியின் கோவணத்தை பார்க்கும் பாக்கியம்… உலகில் மற்ற நாட்டு மக்களுக்கு கிடைக்கவே கிடைக்காது. அது ஶ்ரீலங்கா மக்களுக்கு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். 😅
  22. நீரில்… 30 அடி ஆழத்திற்கு மேல் செல்லும் போதே, நீரின் அமுக்கம்.. இதயத்தையும் இரத்த ஓட்டத்தையும் பாதிக்கும் என்று கூறுவார்கள் என நினைக்கின்றேன். 100 அடி என்பது மிக மிக அதிகம். யாழ்ப்பாண கடல் 100 அடி ஆழம் உள்ளதா? அல்லது பத்திரிகை மிகைப்படுத்தி… தங்கள் பாட்டுக்கு குத்து மதிப்பாக அடித்து விடுகிறார்களா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.