Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அனுரவின் நம்பிக்கை தரும் அருமையான நன்றி உரை. அதற்கான காலம் கனிந்துள்ளது. எவ்வளவு தூரம் கைகூடும் என இனி வரும் காலங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
  2. // நான் இல்லை என்றாலும் இந்தத் தேசத்தில் அரசியல் என்றாலே கசப்பாக இருக்கு ஒரு தருணத்தில், எனது ஜே.வி.பி. சகோதரர் ஒருவர் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவார். அவர் பிறப்பில் செல்வந்தராகவோ, பணக்காரராகவோ இருக்க மாட்டார். // - ரோஹன விஜேவீர. - எப்படிப்பட்ட தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இன்று நிதர்சனமாகி உள்ளது.
  3. // நான் இல்லை என்றாலும் இந்தத் தேசத்தில் அரசியல் என்றாலே கசப்பாக இருக்கும் ஒரு தருணத்தில், எனது ஜே.வி.பி. சகோதரர் ஒருவர் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றுவார். அவர் பிறப்பில் செல்வந்தராகவோ, பணக்காரராகவோ இருக்க மாட்டார். // - ரோஹன விஜேவீர.- எப்படிப் பட்ட ஒரு தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இன்று நிஜமாகி உள்ளது.
  4. மற்றைய ஜனாதிபதிகள் போல் ஒரு பக்க சார்பாக நடக்காமல், தமிழ் இனத்தின் கோரிக்கைகளையும் செவிமடுத்து, புதிய பாதையில் அரசமைக்க…. அனுரவிற்கு வாழ்த்துக்கள்.
  5. இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள்! இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் சஜித் மற்றும் அநுரவை பிரதான வேட்பாளராக கருதி இரண்டாவது விருப்பு வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார். சில வாக்கு எண்ணும் மையங்களில் தமது கட்சியின் முகவர்கள் இன்றி இரண்டாவது எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முகவர்கள் முன்னிலையில் இரண்டாவது எண்ணிக்கை நடக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்ட போதிலும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைய எங்கள் முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1400688
  6. ஒம் பையன். தமது வயிற்றில் அடித்த ரணிலை சிங்கள மக்கள் மன்னிக்கத் தயார் இல்லை. அவர்களை பாதுகாத்த ரணிலை, பழி வாங்கி விட்டார்கள். ஆனால்… ரணிலுக்கும், பாராளுமன்றத்தில் அவர்களின் தயவு தேவைப் பட்டதால் அவாரால்… அவர்களை பகைத்துக் கொண்டு போக முடியவில்லை. ரணில் ஒற்றை ஆளாக இருந்து கொண்டு ஜனாதிபதியானது ஒரு சாதனை எனறாலும், “அரகலய” போராட்டக் காரர்கள் போட்ட பிச்சை அது.
  7. அத்துடன்... அரியநேத்திரன் தமிழர் அரசியலில் பிரபலமான ஆளும் இல்லை. தமிழ் அடையாளத்துக்காக நிறுத்தப் பட்ட ஆளே... மிகவும் எளிய முறையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் மூலம் இலங்கையின் நாலாவது இடத்தைப் பிடித்தது வெற்றிதான். 💪 அதை ஜீரணிக்க இங்குள்ள சிலருக்கு கஸ்ரமாக இருக்குது. அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய ஏலாது. புலம்பிப் போட்டு.. குப்புற படுக்க வேண்டியதுதான். 😂 🤣
  8. அனுரவின் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக தயார் செய்யப்பட்ட கேக்குகளுக்கு வேலை இல்லாமல் போய் விடுமோ... 😲 இருக்காது. தமிழரசு கட்சியின் சுமந்திரன் அணி... கைகாட்டின ஆள் வெல்ல சந்தர்ப்பமே இல்லை. 😂
  9. அதுகும் படித்தவர்கள் வாழும் யாழ்ப்பாணம் என்ற இடத்தில் இப்படி நடந்தது வெட்கமாக உள்ளது. இனி... அதைச் சொல்லிக்கூட பெருமைப் படமுடியாத அளவிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார்கள். 😢
  10. சிலவேளை... கைத்தொலைபேசி என நினைத்து விட்டார்களோ. என்றாலும்... பெயரை வாசிக்கவும் தெரியாமல் போய் விட்டதா. பள்ளிக்கூடம் போய் படியுங்கடா என்று சொன்னால்.. கேட்டால் தானே.... வாள் வெட்டு சண்டியனாக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்குதுகள். பியதாசவுக்கும், பிரேமதாசாவுக்கும் வித்தியாசம் தெரியாத கபோதிகள்.
  11. அது கூட... எங்களுடைய சில புல்லுருவிகளுக்கு பிடிக்கவில்லை. ஒரே... வயித்தெரிச்சலில் புலம்பிக் கொண்டு திரிகிறார்கள். 😂
  12. NPP ANURA KUMARA DISSANAYAKE 2,459,99339.44% SJB SAJITH PREMADASA 2,124,29834.06% IND16 RANIL WICKREMESINGHE 1,094,42617.55% IND9 ARIYANETHIRAN PAKKIYASELVAM 210,3793.37% SLPP NAMAL RAJAPAKSA 142,5892.29% அரியநேத்திரன் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்திலும், நாமல் ராஜபக்சவை பின்தள்ளி, முன்னுக்கும் உள்ளார்.
  13. யார் இந்த அநுர குமார திஸாநாயக்க? கடந்து வந்த பாதை!! #முழு பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க. #பிறப்பு – 1968.11.24. #பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார். #ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம். #உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி. குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார். 1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார். #அரசியல் வாழ்க்கை! #1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். #1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். #1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார். #2000 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். #2004 இல் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசாய அமைச்சர் பதவியையும் வகித்தார். #2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார். #2010 இல் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு…. #2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது. #2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் செயற்பட்டார். #2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார். #ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும் 1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுநரான றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார். #அதன் பின்னர்,1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். ( தற்போது ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகிக்கின்றார். #2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது. #2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது. உண்மை உரைகல்
  14. மரத்தின் பெறுமதி தெரிந்தவர்களால் மட்டுமே... இப்படி செய்ய முடியும்.
  15. அனுர ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் எடுத்தவுடன்.... நிச்சயம் தற்போது இருக்கும் பாராளுமன்றை கலைத்து, புதிய பாரளுமன்றத்துக்கு தேர்தலை நடத்துவார் என்று எதிர் பார்க்கலாம். இப்ப இருக்கும் ஆட்களை வைத்துக் கொண்டு அவர் ஆட்சி நடத்துவதை மக்கள் கூட விரும்பமாட்டார்கள்.
  16. நிச்சயமாக அதுகும் ஒரு காரணம். பெற்றோலுக்கும், குழந்தையின் பால் மாவுக்கும், பாணுக்கும் தெருத்தெருவாக அலைய விட்ட மகிந்த கோஷ்டியை… ரணில் காப்பாற்றி வைத்து இருந்ததை சிங்கள மக்கள் மன்னிக்கத் தயார் இல்லை.
  17. பாவம் சரத். குண்டு வெடித்த கார், இரத்தம் தோய்ந்த சட்டை எல்லாத்தையும் மேடைக்கு மேடை கொண்டு போய் பிரச்சாரம் செய்தும் சிங்கள மக்கள் கணக்கெடுக்கவில்லை. ஓம். சிங்கள மக்கள் மத்தியில்… புதிய சிந்தனையுடன் மக்கள் உருவாகி உள்ளார்கள் போலுள்ளது. ஆனால்…. இந்தச் சிந்தனையை, குறுக்காலை போன புத்த பிக்குகள் மழுங்கடிக்காமல் இருக்க வேண்டுமே… இந்த நாட்டில் அவர்கள், வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.
  18. ரசோதரன்…. மகிந்த கோஷ்டிக்கு இந்தத் தேர்தலில் தோற்போம் என்று தெரியும். ஆனால் அவர்களின் கோட்டையே தகர்ந்து போகும் அளவிற்கு… இந்தளவு மரண அடி விழும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 😁 போரை வென்ற வெற்றி நாயகன் என்ற விம்பம் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது. இனி…. சிங்களவர் யாரும், ஈழப் போரை வைத்து அரசியல் செய்ய முடியாது என நினைக்கின்றேன். சரத் பொன்சேகா எத்தனை வீத வாக்கு எடுத்தார் என்று அறிய ஆவலாக உள்ளது. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.