Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஒன்று கூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டால் கைது-தேர்தல் ஆணைக்குழு! ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு பின்னர் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவ்வாறு ஒன்றுக்கூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டால் அவர்களை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது மேலும் அவசர நிலைமைகளில் முப்படையினர் அழைக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1400148
  2. ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும்-பிரதிப் பொலிஸ் மா அதிபர்! ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நேர்ந்தால், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும் என்றும் பொலிஸாருக்கோ பாதுகாப்பு பிரிவினருக்கோ அதுதொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதிலும் 63,000ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1400172
  3. துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை! நடத்தை விதிகளை மீறிய காரணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 52 வயதான சமரவீர, கிரிக்கெட் விக்டோரியா ஊழியராக இருந்த காலத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் நடத்தை விதிகளை கடுமையாக மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு 20 ஆண்டுகள் தடை உத்தரவை வழங்கியது. 1993 மற்றும் 1995 க்கு இடையில் இலங்கைக்காக ஏழு டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியா பெண்கள் மூத்த பயிற்சியாளர் பதவிக்கு தரம் உயர்த்தப்படுவதற்கு முன்பு, நீண்ட காலமாக விக்டோரியா பெண்கள் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் WBBL உதவி பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400198
  4. அமெரிக்க தேர்தலில் ஈரானின் செல்வாக்கு: ட்ரம்பின் தகவல்களைத் திருடிய ஹேக்கர்கள். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. குறித்த தேர்தலில் ஆரம்பத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய ஜனாதிபதியான பைடனும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவதாக அறிவித்தனர். எனினும் பின் நாட்களில் உடல் நலக்குறைவு காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவதாக பைடன் அறிவித்தார். இதனையடுத்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் போட்டியிடுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் ஈரானைச் சேர்ந்த ஹக்கர்கள், பைடன் வேட்பாளராக இருந்த வேளை, ட்ரம்பின் பிரச்சாரங்கள் தொடர்பான தகவல்களைத் திருடி, மின்னஞ்சல் ஊடான பைடனின் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்க உளவுத் துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன. எனினும் எந்தவொரு பெறுநர்களிடமிருந்தும் ஹேக்கர்கள் எந்தப் பதிலையும் பெற்றதற்கான எதுவிதமான ஆதாரமும் தற்போது இல்லை என்றும் உளவுத்துறை அமைப்புகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவமானது தற்போது அமெரிக்க அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400137
  5. இஸ்ரேல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம்! பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை 12 மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் 124 நாடுகளின் ஒப்பந்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு எதிராக 14 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், 43 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன. மேலும் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400194
  6. ஜனாதிபதி தேர்தலில் மூன்று நிலைப்பாட்டில் நிற்கும் தமிழரசு கட்சி.
  7. ஜனாதிபதி தேர்தலில் மூன்று நிலைப்பாட்டில் நிற்கும் தமிழரசு கட்சி.
  8. லெபனானில் இரண்டாவது நாளாக தொடர்பு சாதனங்களில் வெடிப்பு! லெபனானில் வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்களில் இரண்டாவது நாளாக பதிவான வெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும், 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக லெபான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை லெபனானில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பேஜர் கருவிகள் வெடித்து உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்த நிலையில், அடுத்த நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது மேலும் லெபனான் நாட்டின் பிரதான அரசியல் கட்சியாகவும் துணைராணுவப் படையாகவும் ஹிஸ்புல்லா செயல்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஹிஸ்புல்லாவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. அத்துடன் ஈரானின் கைப்பாவையாக செயல்படும் இந்த அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400105
  9. புலிகளுடன் சேர்ந்து ஜே.வி.பி. போரிட்டு இருந்தால்… இன்று நிச்சயம் ஊழலற்ற ஒரு சுபீட்சமான இரு நாடுகள் ஶ்ரீலங்காவில் தோன்றியிருக்கும் என நினைக்கின்றேன். இவரின் கொள்கையை சிங்கள மக்கள் எத்தனை பேர் ஆதரிக்கின்றார்கள், ஜனாதிபதி தேர்தலில் எத்தனை வீதமான வாக்குகளை எடுக்கின்றார் என்று அறிய ஆவலாக உள்ளது.
  10. விசுகு… நிழலி வந்திட்டார். குட் நைற். நாளை சந்திப்போம். 🤗
  11. நாங்கள் வித்தியாசமாக கதைக்கவில்லையே… 😂 கந்தையா அண்ணைக்கு, நட்பு ரீதியிலை அட்வைஸ் தானே பண்ணினாங்கள். 🤣
  12. ஆமா… ஆமா… இது நல்ல யோசனை. ஊரிலை நல்லாய் உழுதால்தான்… வெளியூர் போய், ஜாம்… ஜாம் என்று உழலாம். 🤣
  13. ரஷ்யா குளிருக்கு…. சும்மாவே „பவர்“ குறையத்தான் பார்க்கும். 😂 கந்தையா அண்ணை எப்பிடி, தாக்குப் பிடிக்கப் போறார் என்று தெரியவில்லை. 🤣
  14. அரியநேத்திரனுக்கு முன்பே... பொலிஸ், இராணுவம், அதிரடிப்படையின் பாதுகாப்போடு ஊருக்குள் பல்லைக்காட்டிக் கொண்டு வந்தவர்தான்.... சுமந்திரன். 😁 😂 இதுக்கெல்லாம் வழிகாட்டி அவர்தான். 🤣
  15. அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று முதல் பாதுகாப்பை வழங்கும் பணியை முன்னெடுத்துள்ளனர். அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் ஒன்பது உத்தியோகத்தர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அரியநேத்திரன் இருவரை மாத்திரம் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://athavannews.com/2024/1400077
  16. என்னைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப் படலாம்! -பா. அரியநேந்திரன். தமிழ் பொது வேட்பாளர் பற்றிய தவறான தகவல்களைப் பரப்ப பல்வேறு தரப்புகள் திட்டமிட்டு வருவதாகவும், எனவே மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள். சிலர் விருப்பு வாக்குகளை ஏனைய வேட்பாளர்களுக்கு அளிக்குமாறு கூறுகின்றார்கள். அவ்வாறு செய்யாது தனியே தமிழ் பொது வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களியுங்கள். அதான் ஒவ்வொரு தமிழ் மக்களின் வரலாற்று கடமையாகும். கடந்த 23ஆம் திகதி ‘நமக்காக நாம்’ என்ற பிரச்சார பணியை நாம் யாழ்ப்பாணத்தில் பொலி கண்டியில் ஆரம்பித்து ,எட்டு மாவட்டங்களிலும் பிரச்சார பணிகளை முன்னெடுத்தோம். அதனூடாக மக்கள் மத்தியில் பொது வேட்பாளருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகள் இன்றைய தினம் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது. அதன் பின்னர் பொது வேட்பாளர் பற்றி வதந்திகளை பொய்யான தகவல்களை பரப்ப சிலர் திட்டமிட்டுள்ளனர் என எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. AI தொழிநுட்பத்தை பயன்படுத்தி பொய்யான தகவல்களைப் பரப்பவுள்ளதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது. எனவே மக்கள் விழிப்பாக இருந்து 21ஆம் திகதி காலை வேளைகளிலையே வாக்கு சாவடிகளை சென்று சங்கு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1400036
  17. நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ரணிலுக்கு ஆதரவு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒரு தரப்பினர் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் வேட்பாளர் அரியநேத்திரத்துக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில், சுமந்திரன் தலைமையிலான மற்றைய தரப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவினை வழங்கியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இவரது இந்த அறிவிப்பின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தற்போது மூன்று பிரிவுகளாக பிளவடைந்துள்ளமை தமிழ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1400086

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.