Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இருவருக்கும் வயதும் அதிகம் இல்லை. கடலின் ஆழத்திற்கு செல்லும் போது, ஏற்படும் ஆபத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லைப் போலுள்ளது.
  2. இருந்த ஜனாதிபதிகளில், கோத்தாதான்… அல்லல் பட்டு, அவமானப் பட்டு கோவணத்தையும் விட்டுட்டு ஓடிய கேவலமான ஜனாதிபதி. 😂 🤣 ஒரு ஜனாதிபதியின் கோவணத்தை பார்க்கும் பாக்கியம்… உலகில் மற்ற நாட்டு மக்களுக்கு கிடைக்கவே கிடைக்காது. அது ஶ்ரீலங்கா மக்களுக்கு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். 😅
  3. நீரில்… 30 அடி ஆழத்திற்கு மேல் செல்லும் போதே, நீரின் அமுக்கம்.. இதயத்தையும் இரத்த ஓட்டத்தையும் பாதிக்கும் என்று கூறுவார்கள் என நினைக்கின்றேன். 100 அடி என்பது மிக மிக அதிகம். யாழ்ப்பாண கடல் 100 அடி ஆழம் உள்ளதா? அல்லது பத்திரிகை மிகைப்படுத்தி… தங்கள் பாட்டுக்கு குத்து மதிப்பாக அடித்து விடுகிறார்களா.
  4. மின்சாரம் கணக்கு எடுக்கிறவர் வரட்டும். ஒரே கொத்துத்தான்....
  5. வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து! வடக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையாற்றி வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”வவுனியா மன்னார் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் இலங்கையில் உயர்தர கல்வியில் சித்தியாகவில்லை. வட மாகாண சுகாதர திணைக்களத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வைத்தியர் ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவருக்கு அனுமதி கிடைத்திருக்க வேண்டும். அவர் எங்கு படித்தார் என்பது எமக்கு கவலையில்லை. அவர் படித்த கல்லூரி சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். உயர்தரம் இருந்ததோ இல்லையோ என்பது இங்கே கேள்வியல்ல. இவர்கள் தரமான கல்வி கற்றார்களா என்பதே முக்கியம்.உயர்தரம் என்பது எமது நாட்டில் ஒருவரின் வாழக்கையை திசை திருப்பும் ஒரு திருப்பு முனையாக காணப்படுகிறது. உயர்தரத்தில் 3 ஏ சித்தி பெற்றுள்ள கொழும்பு மாவட்ட பிள்ளைகள் பலர் மருத்துவம் படிக்க இயலாமல் காணப்படுகின்றனர். அவர்களுக்கு நாம் என்ன சொல்லப்போகின்றோம்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். https://athavannews.com/2024/1397398
  6. இனத் துவேசத்திலை... தகப்பன் எட்டு அடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயுது. 😂
  7. இவருடைய தலைவர் டக்ளஸ் தேவானந்தா மட்டும்... ஆட்சியில் அமரும்... சந்திரிகா, மகிந்த, மைத்திரி, கோத்தா, ரணில் என்று... குரங்கு மாதிரி தாவித் திரிவது, நிலையான கொள்கை என்று நினைகின்றார் போலுள்ளது. தங்களின் முதுகு முட்ட, அழுக்கை வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு உபதேசம் பண்ண வந்து விட்டார்கள்.
  8. தமிழ்த் தலைமைகளிடம் உறுதியான நிலைப்பாடு இல்லை – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு! உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடத்தலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவா் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் சந்தர்ப்பவாதிகளாக கட்டமைப்பை உருவாக்குவதாக கூறியவர்களில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர். இது அரசியல் இலக்கற்ற சந்தர்ப்பவாத செயற்பாடு என ஏற்கனவே நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். அது இப்போது நடைமுறையில் அரங்கேறிவருகின்றது இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் மக்கள் உன்னிப்பாக அவதானித்துக்கொள்ள வேண்டும். பொதுக்கட்டமைப்பு என கூறிக்கொண்டவர்களில் ரெலோ அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார். இது தேர்தல் பித்தலாட்டமாகவே காணமுடிகின்றது என ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1397372
  9. தமிழ் மக்களைப் பாதுகாத்த இராணுவத்தை காட்டிக் கொடுக்கின்றனா் – நாமல்! நாட்டிலுள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். குருணாகல் – கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். கட்சி என்ற ரீதியில் தாங்கள் நாட்டுக்கு அபிவிருத்திகளைச் செய்துள்ளதாகவும், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருமித்த பொருளாதார கொள்கையைச் செயற்படுத்தியதாகவும் அவா் குறிப்பிட்டாா். மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிவதாகவும் நாமல் ராஜபக்ஷ தொிவித்தாா். அத்துடன், பிறிதொரு தரப்பினர் நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினர் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள் என்றும், அவா்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவா் குற்றம் சுமத்தியுள்ளாா். உலக நாடுகளில் தற்போது இடம்பெறும் போரினால் சிவில் பிரஜைகள் கொல்லப்படுவதைப்பற்றி எந்த நாடும் பேசுவதில்லை எனவும், தமிழர்களைப் பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளாா். https://athavannews.com/2024/1397380
  10. தமிழர் தெரு விழாவை பகிஷ்கரிக்கக் கோரியவர்கள்... அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில், தென்னிந்திய பின்னணி திரை இசை பாடகர் சிறிநிவாஸ் மீது முட்டை வீசியிருந்தால்.... மிக வன்மையாக கண்டிக்கப் பட வேண்டும். ஆனால்.. மேலே கூட்டத்திற்கு சென்றவர், அந்த நிகழ்வை மேடையின் முன் இருந்து பார்த்தவர்... கூறும் கூற்றுப் படி எவருமே... முட்டை வீசியதை காணவில்லை என்றும் அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்றே கூறுகின்றார். மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் பாடகர் சிறிநிவாசை அழைத்துச் செல்லும் காணொளியில்... அவரின் உடை மீது முட்டை பட்ட அறிகுறியும் இல்லை. அப்படியிருக்க நடக்காத ஒரு செயலுக்கு.. வன்மம் கக்குவது ஏற்புடையது அல்ல. மேடை நிகழ்வை படம் பிடித்துக் கொண்டு எத்தனையோ "யூ - ரியூப்"காரரும், அங்கு சமூகமளித்திருந்த பலரும்... கைத்தொலை பேசியுடன் படம் பிடித்துக் கொண்டு இருந்த நிலையில், முட்டை வீச்சு பதியப் படாமல் இருக்கும் போது... இல்லாத ஒன்றை நாம் ஏன் கற்பனையில் நினைத்து கருத்து எழுத வேண்டும். அத்துடன்... புலம் பெயர் தேசத்தில் தமிழர்களிடம் குழப்பம் ஏற்படுத்த என்றே.. ஸ்ரீலங்கா, இந்திய தூதரகங்கள் தமது புலனாய்வுப் பிரிவை அதிக அளவில் பிரான்ஸ், சுவிஸ், கனடா போன்ற நாடுகளில் ஊடுருவ விட்டுள்ளார்கள் என்பதை செய்தி ஊடகங்கள் வாயிலாகவும், சில சம்பவங்கள் மூலமும் கண்டு கொண்டோம். அதன் தொடார்ச்சியாகவும் இந்த அந்த அசம்பாவிதங்கள் தோற்றுவிக்கப் பட்டு இருக்கலாம் என்பதும் சாத்தியமே. முட்டை வீசியத்தைப் பற்றி எழுதுபவர்கள்... அதன் படத்தையும் போட்டு எழுதவும். அப்பதான்... நீங்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கும்.
  11. அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கைது! மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் சக்திவாய்ந்த அரசியல்வாதியை அவதூறாகப் பேசுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. கைது செய்யப்பட்ட சுமனரதன தேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1397307
  12. போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் நாடின் பாஷிக் கைது! போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாஷிக்கின் மகன் நாடின் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று டுபாய் நாட்டில் இருந்து நாடு திரும்பிய போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பின் தலைவர் எனக் கருதப்படும் ஷிரான் பாஷிக், இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகிக்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரராக அறியப்படுகிறார். இவர் பெப்ரவரி 16 ஆம் திகதி வெள்ளவத்தை வீடமைப்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின்னர் கைது செய்யப்பட்ட அவரது மகன் நாதின் பாஷிக் துபாயில் தலைமறைவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது http://athavannews.com/2024/1397287
  13. செப்டெம்பர் 2ஆம் திகதியன்று, விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கோரிக்கை! நல்லூர் தீர்த்த தினமான செப்டெம்பர் 2ஆம் திகதியன்று, விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரிடமே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை நாட்டில் இலங்கை வாழ் மக்கள் மட்டுமல்ல, உலக வாழ் இந்துக்களும் நல்லூர் திருவிழாவில் கலந்து தங்களது பக்திபூர்வமான வேண்டுதலைச் செய்து வருகின்றார்கள். இந்நிலையில் 25 நாட்களாக விரதம் இருந்து நல்லூர் முருகனை வேண்டி நிற்கும் பக்தர்கள் செப்டெம்பர் 2ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் தங்களது விரதத்தினை பூர்த்தி செய்து கொள்வார்கள். இன்னிலையில் இந்த விரத பூர்த்தி தினமான தீர்த்த தினத்தை யாழ். மாவட்டத்தினருக்கு, பாடசாலை உட்பட அரச ஊழியர்களுக்கு குறிப்பாக இந்துக்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்றே கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இந்த கோரிக்கையின் பிரதிகள் வடமாகாண தலைமைச் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ். கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிறஞ்சன், எம்.பிராதீபன் மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . மேலும், நல்லூர் திருவிழாவானது இலங்கை நாட்டின் ஒரு தேசிய திருவிழாவாகச் சகல இன மக்களாலும் பக்திபூர்வமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில், இந்த தீர்த்த திருவிழா அன்று புண்ணிய விருதத்தைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அத்தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தால் இந்து மக்கள் நன்றி உடையவர்களாக இருப்பார்கள் எனவும் குறித்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1397301
  14. 'தமிழர் தெரு விழா' என்றொரு நிகழ்ச்சி 21./22.´ம் திகதி (சனி, ஞாயிறு) கனடாவிலுள்ள மார்கம் நாரில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக கனடியத் தமிழர் பேரவையால் (Canadian Tamil Congress - CTC) நடத்தப்பட்டு வருவது பலருக்கும் தெரிந்த விடயம். ஆனால், இம்முறை நடைபெறும் இந்நிகழ்வானது, கனடாவிலுள்ள தமிழர்களை கொதிநிலைக்கு இட்டுச்சென்று மேற்படி நிகழ்ச்சிக்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்க வைத்துள்ளது. இதற்கான காரணங்களை அறிந்துகொள்வதற்கு நாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றினை மேலோட்டமாகப் பார்ப்பது தகுந்தது. 2008ஆம் ஆண்டுக் காலப் பகுதிக்கு முன்னராக, கனடாவில் 'உலகத் தமிழர் அமைப்பு' (World Tamil Movement - WTM) செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், கனடாவிலுள்ள ஈழத் தமிழர்களுக்காக, உலகத் தமிழர் அமைப்பினால் தமிழீழ விடுதைப் புலிகளின் ஆலோசனைக்கிணங்க ஈழத் தமிழர்களுக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தேவையின்பொருட்டு உருவாக்கப்பட்டதே இந்தக் 'கனடியத் தமிழ்க் காங்கிரஸ்' எனும் கனடித் தமிழர் பேரவையாகும். வன்னித் தலைமையின் கட்டளைக்கமைய செயற்பட்டுவந்த இவ்வமைப்பானது, 2009 ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர், அதனை அப்போது பொறுப்பேற்று நடத்திவந்த நபர்களின் தன்னதிகார தலைமையின் கீழான நிர்வாகத்தில் இயங்க ஆரம்பித்தது. எனினும், இம்மாறுதலுக்குப் பின்னரான இவ்வமைப்பின் அவ்வப்போதான செயற்பாடுகள், கனடியத் தமிழர் பேரவையை தலைமை தாங்கும் குறிப்பிட்ட நபர்கள் தன்னதிகார நிர்வாக நிலைமையிலிருந்து, அதனை அவர்களின் தன்னிச்சையான நிர்வாக நிலைக்கு நகர்த்திச் செல்கின்றனரா என்னும் கேள்வியை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருந்தது; காரணம், ஏனைய உறுப்பினர்களின் ஒப்புதலின்றி அல்லது அவர்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படாமல் பல முடிவுகள் அவ்வமைப்பில் தன்னிச்சையாக எடுக்கப்படுட்டமை மற்றும் கூட்டங்களில் உறுப்பினர்களுக்கு கேள்வியெழுப்பும் உரிமைகள் முக்கப்பட்டமை போன்றன பொதுமக்களால் மட்டுமன்றி அமைப்பு உறுப்பினர்களாலேயே விமர்சனங்களுக்குள்ளாகியிருந்தன. இதனையும் தாண்டி இவ்வமைப்பின் அண்மைக் கால செயற்பாடுகள் இவ்வமைப்பின் கட்டுப்பாடும் அதன் தலைமைத்துவமும் தமிழர் விரோத இயக்குசக்திகளின் ஆளுமைக்குள் சென்றுவிட்டதா என்னும் வலுவான ஐயப்பாட்டை எழுப்பி நிற்கின்றது. நடைபெற்றுவரும் நிகழ்வுகளும் அதையே நிரூபிக்கின்றன. இங்குதான் இவ்வமைப்பு நடத்தும் நிகழ்வுக்கெதிரான பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இயங்கும் ஒருசில அமைப்புகள் சிறிலங்காவின் சிங்கள பெளத்த பிக்குகளின் தலைமையின் கீழ் 'இமயமலைப் பிரகடனம்' என்ற செயற்பாட்டு வரைவில் கைச்சாத்திட்டிருந்தன. இத்திடமானது சிறிலங்கா அரச, மற்றும் இந்திய கொள்கைவகுப்புத் தரப்பினரின் மறைமுக அனுசரணையுடன், புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள ஈழத் தமிழர்களின் கோரிக்கையான சிறிலங்கா அரசை இன அழிப்புக் குற்றங்களுக்காக பொறுப்புக்கூற வைப்பதற்கான நீதி கோரும் செயற்பாடுகளை முடக்குவதற்கும், தமிழீழ விடுதலைக்கான வீரியத்தை நீர்த்துப்போக வைப்பதற்குமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவே தமிழர்களால் பார்க்கப்பட்டது. இதில் கனடியத் தமிழர் பேரவை தன்னிச்சையாக எடுத்த அதன் முடிவும், 'இமாலயப் பிரகடனத்தில்' அதன் வகிபாகமும் கனடியத் தமிழர்களால் மட்டுமன்றி உலகெங்குமுள்ள தமிழர்களாலும் பரவலாக கண்டனத்துக்குள்ளாகியிருந்தன. தமிழ் மக்களும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கனடியத் தமிழர் பேரவையை விளக்கம் கோரியிருந்த போதிலும், கனடியத் தமிழர் பேரவையானது தக்க விளக்கமளிக்காது மழுப்பலாக பதில்களையே கூறி வந்ததுடன், தமது அமைப்புக்கும் 'இமாலயப் பிரகடனத்துக்கும்' எவ்வித நேரடியான சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்து வந்தது. இது இப்படியிருக்க, கனடாவிலுள்ள சிறிலங்காவின் தூதர் துஷர றொட்றிக்கோவினால், மே 03, 2024 அன்று தேதியிடப்பட்டு, பிரம்டன் நகரமுதல்வர் பற்றிக் பிரவுண் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதமொன்று அண்மையில் ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அக்கடிதத்தில், பிரம்டன் நகரமுதல்வர் பற்றிக் பிரவுண் அவர்களால் பிரம்டன் நகரிலுள்ள சிங்கூசிப் பூங்காவில் அடிக்கல் நாட்டப்படவிருந்த தமிழின அழிப்பு நினைவுச் சின்னத்துக்கான அடிக்கல்நாட்டு விழாவை நிறுத்தும்படியும், இந்நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டால், அது இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுவரும் 'இமாலயப் பிரகடனத்தின்' அடிப்படையிலான இன நல்லிணக்கத்தினைச் சீர்குலைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது, 'இமாலயப் பிரகடனத்தில்' சிறிலங்காவின் பௌத்த பிக்குகளின் தலைமையில் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து செயற்பட்டு வருவதால், இன நல்லிணக்க முயற்சிகளுக்கான கனடாத் தமிழர்களின் ஆதரவை இழக்க இது வழிகோலும் எனவும் சிறிலங்காவின் தூதரால் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிலங்காத் தூதரின் இந்த உத்தியோகபூர்வ ஒப்புதல் வாக்குமூலமானது, கனடியத் தமிழர் பேரவையின் போலிமுகத்தையும், அது வெளியே தமிழ் மக்களுக்கு ஒன்றைக் கூறிக்கொண்டு, தொடர்ந்தும் சிறிலங்கா அரசுடன் அது திரைமறைவில் இணைந்து செயற்பட்டு வருவதை வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தது. அத்துடன், சிறிலங்கா அரசாங்கம் கனடிய உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதற்குக் கனடியத் தமிழர் பேரவையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்ற உண்மையையும் வெளிக்காட்டியிருந்தது. மேற்படிக் காரணிகளே கனடியத் தமிழ் மக்கள் கனடியத் தமிழர் பேரவை மீது கொதித்தெழுவதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தது. இதைவிட, நேற்றைய தினம் (சனிக்கிழமை) மக்களின் கவனத்தினைத் திசைதிருப்ப கனடியத் தமிழர் பேரவை அதன் மேடை நிகழ்ச்சி நிரலில் உட்புகுத்தியிருந்த பாடல் நிகழச்சியானது, மக்களைக் கடுங்கோபமுறச் செய்ததுடன், கனடியத் தமிழர் பேரவையை தலைமை தாங்கி நடத்துபவர்கள் தங்களின் அரசியலுக்காக எவ்வித கீழான இழிநிலைக்கும் இறங்கத் தயாராக உள்ளனர் என்பதைக் காட்டியது. அதாவது, வெளியில் மக்கள் நின்று போராட்டம் செய்துகொண்டிருந்த வேளையில், மக்களின் உணர்வுகளுடன் விளையாடும் வகையில், கரும்புலி வீரர்கள் தம் இலக்கை நோக்கிச் செல்லும்போது தாயகத்தின் எழிலை வர்ணித்து விடைபெற்றுப் பாடும் வகையில் அமைந்த பாடலான, 'பச்சை வயலே, பனங் கடல் வெளியே...' எனும் கரும்புலிகள் பாடல் உள்ளிட்ட பாடல்களை மேடைப் பாடகர்களைக்கொண்டு மேடையில் பாட வைத்திருந்தனர். கனடியத் தமிழர் பேரவையால் 'தமிழர் தெரு விழா' ஆரம்பித்த காலந்தொட்டு இற்றை வரைக்கும், அதன் மேடைகளில் தமிழீழத் தேசியப் பாடல்களையும் இணைத்துப் பாடும்படி பலராலும் முன்வைக்கப்பட்டுவந்த கோரிக்கைகள் அனைத்துமே அதன் தலைமைகளாலும், விழா அமைப்பாளர்களாலும் புறந்தள்ளப்பட்டு வந்தன. ஆனால், நேற்றைய நாளில் மக்களை முட்டாள்களாக்க எண்ணி இவர்கள் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதற்கு விலைமதிப்பற்ற விடுதலையின் உச்சங்களைக் கைள எத்தனித்தமையானது ஒன்றை மட்டும் தெளிவுபடுத்துகிறது: இவர்கள் ஆட்டுவிக்கப்படும் வெறும் நிழற் கதாபாத்திரர்களே. எனவே, அறியட்டும் இவர்கள் தாம் நிஜக் கதாநாயகர்களல்ல, வெறும் நாடகர்களே என்பதை மக்கள் அறிவரென்று. https://www.facebook.com/share/p/F6A3VQcZWiQoJzrY/?mibextid=oFDknk
  15. கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு! கனேடியத் தமிழர் பேரவை வருடந்தோறும் தமிழர் தெருவிழா எனும் நிகழ்வினை நடத்திவருகின்ற நிலையில், இதன் பத்தாவது வருடமாக இந்த மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இம்முறை இடம்பெற்ற கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என கனடாவில் உள்ள சில தமிழ் அமைப்புகளும் சில செயற்பாட்டாளர்களும் கனடா வாழ் தமிழ் மக்களைக் கோரியிருந்தனர். தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி வழமை போல அல்லாது இந்த வருடம் முதன்முதலாக மாபெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. தென்னிந்தியாவிலிருந்து பாடகராக இணைந்து கொண்ட பிரபல பின்னணி திரை இசை பாடகர் சிறிநிவாஸ் மீது பாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாளர்கள் முட்டைகளை வீசி எதிர்ப்பை வலுப்படுத்தினர். இதன் காரணமாக நிகழ்வு இடைநிறுத்தம் செய்யப்பட்டதுடன் அங்கிருந்த பொலிஸார் தென்னிந்திய பாடகரை பாதுகாப்பாக அழைத்து செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள அதேவேளை நிகழ்வுக்கு வந்திருந்த சிலர் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. https://canadamirror.com/article/amali-thumali-at-the-canada-tamil-street-festival-1724736677
  16. நந்தனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 🙏
  17. 🛑 ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறாவிடின் வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படும்? 🛑 2, 3 ஆம் விருப்பு வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படும்! ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வெற்றிபெறுவதற்கு, செல்லுபடியான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை கட்டாயம் பெற வேண்டும். சிலவேளை எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறாத சந்தர்ப்பத்தில் வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பது பற்றிய பதிவே இது. வேட்பாளர் எவரேனும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறாவிடின் ஜனாதிபதி தேர்தல் மறுபடியும் நடத்தப்படுமா என்ற கேள்வி சிலருக்கு இருக்கலாம். அவ்வாறு நடக்காது. ஏனெனில் வெற்றியை நிர்ணயிப்பதற்குரிய வழிமுறைகள் உள்ளன. 🛑 ஜனாதிபதி தேர்தலில் ரவி, ராஜா, ரோஜா, பூஜா மற்றும் அமல் உட்பட 39 பேர் போட்டியிடுகின்றனர் என வைத்துக்கொள்வோம். செல்லுபடியான மொத்த வாக்குகளில் (அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில், நிராகரிக்கப்பட்ட வாக்குகளை கழித்துவருவது) ரவி – 45 % ராஜா – 40 % ரோஜா – 05 % பூஜா – 03 % அமல் - 02 % வாக்குகளையும் பெற்றுள்ளனர் என எடுத்துக்கொள்வோம். அந்த வகையில் முதல் சுற்றில் எவரும் 50 % +1 வாக்குகளை பெறாததால் 2ஆம், 3ஆம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டே வெற்றி நிர்ணயிக்கப்படும். 🛑 தேர்தலில் முதல் இரு இடங்களைப்பிடித்த ரவி, ராஜா ஆகியோரை தவிர ஏனைய 37 பேரும் போட்டியிலிருந்து நீக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள். 🛑 அதேபோல ரவி, ராஜா ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குகளிலுள்ள 2, 3 ஆம் விருப்பு வாக்குகள் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. ஏனைய 37 வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளே கருத்திற்கொள்ளப்படும். அந்த வேட்பாளர்களுக்கு ஒரு வாக்கு மட்டும் அளிக்கப்பட்டிருந்தால் அந்த வாக்கும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. (அதாவது 1 அல்ல புள்ளடி இடப்பட்டிருந்தால்) 🛑 பூஜா என்பவருக்கு வாக்களித்தவர் தமது 2 ஆம் விருப்பு வாக்கை ரவி என்பவருக்கு வழங்கி இருந்தால் அந்த வாக்கு ரவி என்பவருக்கும், அவ்வாறு இல்லாது 2 ஆவது விருப்பு வாக்கை ராஜா என்பவருக்கு வழங்கியிருந்தால் அந்த வாக்கு ராஜா என்பவருக்கும் வழங்கப்படும். பூஜா என்பவருக்கு வாக்களித்தவர் தமது 2 ஆவது விருப்பு வாக்கை அமல் என்பவருக்கு வழங்கி இருந்தால், 3 ஆவது விருப்பு வாக்கு கவனத்தில் கொள்ளப்படும். மூன்றாவது விருப்பு வாக்கை ரவிக்கு வழங்கி இருந்தால் அந்த வாக்கு ரவிக்கு வழங்கப்படும். மாறாக 3ஆவது விருப்பு வாக்கை ராஜாவுக்கு வழங்கி இருந்தால் அது ராஜாவுக்கு வழங்கப்படும். இவ்வாறு 37 வேட்பாளர்களினதும் 2 ஆம் 3 ஆம் வாக்குகள் கவனத்தில்கொள்ளப்பட்டு எண்ணப்பட்ட பிறகு, 🛑 ரவி 47 சதவீத வாக்குகளையும், ராஜா 43 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர் என வைத்துக்கொள்வோம். இருவர் பெற்ற வாக்குகளையும் கூட்டி, அதில் 50 வீதத்துக்கும் மேல் பெற்றவர் வெற்றியாளராகக் கருதப்படும். அதாவது (47% + 43% ) 90 சதவீத வாக்குகளில் 45 சதவீதத்துக்கும் மேல் பெற்றவர் வெற்றிபெறுவார். அந்தவகையில் 47 சதவீத வாக்குகளைப் பெற்ற ரவி வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். 🛑 சிலவேளை 2ஆவது வாக்கெண்ணும் பணியின்போது ராஜாவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கப்பெற்றால் அவர் வெற்றியாளராகக் கருதப்படுவார். 🛑 ஏனைய 37 வேட்பாளர்களுக்கு முதல் வாக்கை பயன்படுத்திய வாக்காளர்கள், ரவி மற்றும் ராஜா ஆகியோருக்கு 2 ஆம் 3 ஆம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்தி இருக்காவிட்டாலும் ரவியே வெற்றிபெற்றவராகக் கருதப்படுவார். 🛑 2 ஆம் 3 ஆம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் ரவி மற்றும் ராஜா ஆகியோர் சமனான வாக்குகளைப் பெற்றிருந்தால் திருவுளச் சீட்டுமூலம் வெற்றி நிர்ணயிக்கப்படும். ஆர்.சனத் Malaravan Uthayaseelan
  18. ஊழல் பெருச்சாளிகள் கட்டிய சிலை கீழே விழாமல் என்ன செய்யும். இவர்கள்தான்... இந்தியாவில் ஒலிம்பிக் நடத்தப் போகின்றார்களாம்.
  19. நல்ல தமாசாக இருக்கு. 😂 சாரதி அந்த வைத்தியருக்கு... தனது வீட்டிற்கு போவதாக சொல்லி விட்டு வாகனத்தை திருப்பியிருக்கலாமே... இப்ப , தவறான புரிந்து கொள்ளலால் வைத்தியருக்கு காயம், சாரதிக்கு தர்ம அடி என்று எத்தனை பிரச்சினைகள்.
  20. ########### ############### ############# ############ இரண்டு நாளில்.... அரியம் பின் தங்கி விட்டார். அவர் தனது பிரச்சாரத்தை முடுக்கி விட வேணும். 💪 நாலாவது இடத்தில் இருந்த சஜித், இரண்டாவது இடம். மூன்றாவது இடத்தில் இருந்த அனுரா, நான்காவது இடம். நாமலுக்கு கஸ்ரகாலம்... மேலை எழும்ப முடியாமல் இருக்கு. எல்லாம்... தகப்பனும், சித்தப்பனும் செய்த பாவம்.. பெடியனைப் போட்டு சிப்பிலி ஆட்டுது. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.