Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஆதவன்.... இங்கிலாந்தை, "யுனைடெட் கிங்டத்தில்" என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளதை நீங்கள் இன்னும் கவனிக்கவில்லைப் போலுள்ளது. 😂
  2. 27 நாடுகளில் பரவிய புதியவகை கொரோனா. அடுத்த அதிர்ச்சியாக XEC variant என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளை ஆட்டுவிக்க ஆரம்பித்து உள்ளது. கிட்டத்தட்ட பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் பரவி இருக்கிறது. அதிக தாக்கம் கொண்ட இந்த புதிய வகை திரிபு குறித்து பிரிட்டனில் மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஜெர்மனியில் தான் இந்த திரிபு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் மற்ற நாடுகளுக்கு மேலும் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். காய்ச்சல், தொண்டை வலி, இடைவிடாத இருமல், வாசனை நுகர்வை இழத்தல், உடல் வலி போன்றவை காணப்படும். புதிய வகை கொரோனா திரிபின் தன்மையை, செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மருத்துவ நிபுணர்கள் கூறி இருக்கின்றனர். மறுபடியுமா..?! ராஜ ராஜன் இளவரசர்
  3. எங்கள் கைகளில் ரத்தம் இல்லை! நாங்கள் அப்பாவிகள்! – நாமல் ராஜபக்ச. ராஜபக்ஷ அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸதெரிவித்துள்ளார். கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ ‘நாம் ஏனோ தனோவென்று வீதிகளை அமைக்கவில்லை. அதேபோன்று குடியிருப்புகளையும் நிர்மாணிக்கவில்லை. முதலீட்டாளர்களும் கொண்டுவரப்படவில்லை. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டமும் தொலைநோக்கு பார்வையும் எங்களிடம் இருந்தது. செய்யப்படும் ஒவ்வொரு முதலீட்டிற்கும் நாங்கள் பொறுப்பு. வாங்கிய ஒவ்வொரு கடனும் இந்த பூமிக்கு ஒரு மதிப்பைக் கொடுத்திருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பெறப்பட்ட அனைத்து கடன்களுக்கும் நாமே பொறுப்பு. திருடிவிட்டோம் என்று யாராவது சொன்னால், உலகில் எந்த நீதிமன்றத்துக்கும் சென்று நிரபராதி என்பதை நிரூபிக்கத் தயார் என்று சவால் விடுகிறோம். போராட்டத்துக்குப் பிறகு இந்தத் தேர்தலை எதிர்கொள்ள பயப்படுகிறோமா? என்று சமீபத்தில் எங்களிடம் கேட்கப்பட்டது. எங்கள் கைகளில் ரத்தம் இல்லை. எந்த தவறும் செய்யப்படவில்லை. எங்களைப் பற்றி வேறுவிதமான புரிதல் இருக்கலாம், ஆனால் மக்கள் முன் வந்து வாக்கு கேட்கும் வலிமை எம்மிடம் உள்ளது. நாம் அப்பாவிகள் என்பதாலும், நாம் உருவான அரசியல் சூழலாலும் அந்த சுய பலம் நமக்காக கட்டமைக்கப்பட்டது. அதைத்தான் நான் சொல்கிறேன் நான் சவால்களை விரும்புகிறேன். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது மற்றும் உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பது போன்ற சவாலையும் நான் விரும்புகிறேன். அந்த சவாலை நான் வெல்வேன்’ இவ்வாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1400013
  4. பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ காலமானார்! பழம்பெரும் நடிகையான ‘சி.ஐ.டி சகுந்தலா மாரடைப்பு காரணமாக தனது 85 ஆவது வயதில் நேற்று உயிரிழந்தார். பின்னணி நடனக் கலைஞராக சினிமாவில் கால் பதித்த நடிகை சகுந்தலா,தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த நேதாஜி (1996), நான் வணங்கும் தெய்வம் (1963), கை கொடுத்த தெய்வம் (1964) உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399906
  5. வரலாறு காணாத வறட்சி – 700 உயிரினங்களை கொன்று மக்களுக்கு வழங்க திட்டம். தென் ஆப்பிரிக்காவின் பல பிரதேசங்களில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. அந்த நாடுகளின் தரவுப்படி கடந்த 40 ஆண்டுகளில் இது மாதிரியான வறட்சியை எதிர்கொண்டது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 83 யானைகள் உள்ளடங்கலாக சுமார் 700 வன உயிரினங்களை கொல்ல உள்ளதாக நமீபியா அறிவித்தது. இந்நிலையில், நமீபியாவை தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 50 யானைகள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 200 காட்டு யானைகளை கொன்று இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1399926
  6. டொலரை கைவிட்டு புதிய கட்டண முறைக்கு செல்லும் பிரிக்ஸ்! பிரிக்ஸ் அதன் வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை ஒருங்கிணைக்காமல் ஒரு புதிய கட்டண முறையை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உறுதிப்படுத்தினார். புதிய கட்டண முறையானது எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்படாது, இது முழுமையான நிதி அமைப்பாக செயல்படும் என்றும் அவர் மேலும் கூறினார். புதிய பிரிக்ஸ் கட்டண முறையானது உலகளாவிய நிதித்துறையில் ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு வழிவகுக்கும். அதேநேரம், டொலர் வர்த்தகம் நிறுத்தப்படுமானால் அது அமெரிக்காவில் பல துறைகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. பிரிக்ஸ் முன்னணி வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் குழுவாகும். முதலில் பிரிக்ஸானது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை கொண்டிருந்தது. 2024 இல், உறுப்பு நாடுகள் 10 நாடுகளாக விரிவடைந்தன. எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் புதிதாக இணைந்தவை ஆகும். https://athavannews.com/2024/1399962
  7. புதிய வகை கொரோனா தொற்று-27 நாடுகளில் பரவியுள்ளது! எக்ஸ். இ. சி. புதிய வகை கொரோனா தொற்று தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுகல், சீனா உள்ளிட்ட 27 நாடுகளைச் சேர்ந்த 500 மாதிரிகளில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் யுனைடெட் கிங்டத்தில் புதிய வகை கொரோனா மாறுபாடு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2024/1399981 @Kapithan , @ரசோதரன் 😂
  8. புட்டினின்... "மாஸ்ரர் பிளான்" நல்லாய் வேலை செய்துது போலை இருக்கு. 😂 இதற்காகத் தன்னும்... உக்ரைன் இராணுவத்தினர் போரை நிறுத்தி விட்டு புட்டின் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்ற அச்சம் செலென்ஸ்கிக்கு வரப் பார்க்கும்.
  9. அப்படி, ஆறறிவுள்ள மனுசர் யாராவது செய்வார்களா. இது... காந்தியை, பிடிக்காதவர்கள் காழ்ப்புணர்ச்சியில் கிளப்பி விட்ட புரளியாக இருக்கும். 🙂
  10. புட்டினின்... இனிப்பான செய்தியை பதிந்த 16 மணித்தியாலத்துக்கு இடையில்... 46 கருத்துக்களும், 1000 பார்வையாளர்களும் வந்து பிரித்து மேய்ந்து விட்டார்கள். 😂 ஜனாதிபதி தேர்தல்... அமளிக்குள், மக்களுக்கு கிளுகிளுப்பும் தேவைப்பட்டிருக்குது என்றால்... பாருங்கோவன். 🤣
  11. தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதாித்து கொழும்பில் பொதுக்கூட்டம்! ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனை ஆதரித்து கொழும்பில் இன்று பொதுக் கூட்டமொன்று நடத்துவதற்குத் தீர்மானிக்ப்பட்டுள்ளது. குறித்த பொதுக் கூட்டமானது பம்பலப்பிட்டியில் உள்ள ஹோட்டல் வெஸ்ற்றேனில் மாலை 05.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளையின் செயலாளா் மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் கௌரவ நீதியரசரரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன், சிரேஷ்ட சட்டத்தரணி வி. புவிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1399857
  12. வவுனியாவில் 9000 தேர்தல் பதாதைகள் நீக்கம். எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் இன்று(18). எனவே இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பாதைகள் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது அதனடிப்படையில் வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை நீக்கும் பணிகளை வவுனியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் இன்று (18) காலை 8.30 மணிதொடக்கம் இந்த பணிகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையிலான 20ற்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399868
  13. 1.4 மில்லியன் ரூபா கப்பம் வசூலித்த 4 பொலிஸார் கைது! கொழும்பு 15 இல் உள்ள குடியிருப்பு ஒன்றிற்குள் நுழைந்து அதில் வசிப்பவர்களை அச்சுறுத்தி 1.4 மில்லியன் ரூபாவை கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட் ஒருவரும், கொழும்பு வடக்கு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இது தொடர்பான மேலதிக விசாரணையினை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1399894
  14. மாவையின் மகன், முளைத்து மூன்று இலை விடவில்லை, இன்னும் அரசியலில் முழுமையாக கால் பாதிக்கவில்லை.... அதற்குள் 30 லட்சம் ரூபாய் பெறுகின்ற அளவிற்கு வளர்த்துள்ளார் என்றால்... அரசியலில், பலகாலமாக இருக்கும் பாரளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை கோடிகளை அமுக்கிக் கொண்டு இருப்பார்கள். இதை மறுத்து வெள்ளையடிக்கவும்... யாழ் களத்தில் ஆட்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் வேடிக்கை. முன்பெல்லாம்.... 1975களில் அருளம்பலம், தியாகராஜா போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச கட்சியில் சேர்ந்து இருந்து கொண்டு... அரச உத்தியோகம் எடுத்துக் கொடுக்க 5,000 ரூபாய் வாங்குவார்கள். அதனை இரு பக்கமும் பயன் பெறும் ஒரு சேவை என்று எடுத்துக் கொண்டு கடந்து சென்றாலும்... இப்போதைய அரசியல்வாதிகள்..... தமது வயிறு, வளர்ப்பதற்காக தமிழ் மக்களை சாட்டி.. அரசியல் செய்யும் ஈனச் செயலை எப்படி அழைப்பது?
  15. லெபனான் தலைநகர் பெய்ரூட் பகுதியில் குண்டு வெடிப்பு-09 பேர் உயிரிழப்பு! லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பம் பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்புச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்த சுமார் 200 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் செய்திப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட “பேஜர் மெசேஜ் எக்ஸ்சேஞ்ச்” இயந்திரங்கள் ஒரே நேரத்தில் வெடிக்க செய்ததாக கூறப்படுகிறது. இதன்போது சாலைகள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் இந்த வெடிப்புகள் நடந்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்தியதாக ஹிஸ்புல்லா போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குண்டுவெடிப்புகளில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1399831
  16. நாசாவின் முயற்சியால் விலகி சென்ற விண்கல் – 3035 இல் மீண்டும் மோதும் என எச்சரிக்கை. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் (ஜே.பி.எல்.) மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கிகளை பயன்படுத்தி ‘2024-ஓன்’ என்ற சிறுகோளை முதன்முதலில் கண்டறிந்துள்ளது. இதனுடைய அளவு, வடிவம் மற்றும் நகர்வு பற்றிய விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சிறுகோள் 720 அடி விட்டம் கொண்டது. பொதுவாக பூமிக்கு அருகில் செல்லும் பல சிறுகோள்களை விட இது பெரியது. 60 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டிருப்பதுடன், இதன் வேகம் மணிக்கு சுமார் 25 ஆயிரம் மைல்கள் (சுமார் 48 ஆயிரம் கிலோ மீட்டர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. சிறுகோளின் அளவு மற்றும் வேகம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் மைல் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும். பூமிக்கும், நிலவுக்கும் இடையில் உள்ள தொலைவைவிட 2.6 மடங்கு தூரமாகும். இந்த சிறுகோள் நேற்று பூமியை கடந்து சென்றது. இந்த சிறுகோளின் பாதையில் சிறிய விலகல் ஏற்பட்டால் கூட அது பூமியைப் பாதிக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து, டெல்லி விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரன் கூறும்போது, ‘விண்வெளியில் ‘2024 ஓஎன்’ சிறுகோள் பூமியை கடந்து சென்றது. இது 720 அடி பெரியது. அதாவது 2 கிரிக்கெட் மைதானத்தின் அளவு போன்றது. இந்த சிறுகோள் திட்டமிட்டப்படி நேற்று பகல் 3.49 மணிக்கு பூமிக்கும், நிலவிற்கும் நடுவில் பூமியில் இருந்து 10 லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து சென்றது. குறிப்பாக, பூமியுடன் ஒப்பிடும்போது வினாடிக்கு 8.88 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. அடுத்து இதே சிறுகோள் வருகிற 2035-ம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி மீண்டும் பூமியை கடந்து செல்ல இருப்பதாக முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1399861
  17. இதனை நம்மூரில்… “காய்ந்த மாடு, கம்பில் விழுந்த மாதிரி…” என்று சொல்வார்கள். 😂 🤣
  18. ஈழப்பிரியன்…. டாக்டர் காளிமுத்துவின் சிட்டுக்குருவி லேகியம் பாவிக்க… கூச்சம்… பஞ்சாய் பறந்து போய் விடும். 😜 😂
  19. இப்பிடி பொசுக்கெண்டு சொல்லிப் போட்டியள். 😂 எல்லாம் கேள்வி ஞானம் ஐயா. 🤣 நாளைக்கு… கந்தையா அண்ணை யாழ். களத்திற்கு வராவிட்டால், ஆள் மொஸ்கோவில் நிற்கிறார் என்று அர்த்தம். 🤣
  20. காரமான சாப்பாடு என்றால்… நீங்கள் பிலிப்பைன்ஸ் சுக்குத்தான் போக வேணும். 😂
  21. நாங்கள் இந்த விசயத்திலை பின்னுக்கு நின்றால்…. புட்டின்… அரேபியாகாரனையும், ஆபிரிக்கா காரனையும் வேலைக்கு எடுத்துப் போடுவார். நல்லாய் யோசித்து சொல்லுங்கோ. அவங்கள் வந்தால்… இலேசிலை விட்டிட்டு போகமாட்டாங்கள் என்று தெரியும் தானே… 😂 🤣
  22. நல்ல விசயத்துக்கு… சந்தோசமாக கிளம்பி போகேக்கை, அடி வயித்திலை, புளியை கரைக்கிறீங்களே…. 😂 🤣
  23. கந்தையர்…. அதுக்கு, குளிசை பாவிக்கிற ஆள். 😂 ரஸ்யாவிலை… அந்தக் குளிசை இருக்குதோ தெரியவில்லையே. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.