Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. யாருக்கு வாக்களிப்பது என்று வீட்டுக்குள் (தமிழரசு கட்சிக்குள்) அடிபிடி. 😂
  2. யாருக்கு வாக்களிப்பது என்று, வீட்டுக்குள் அடிபிடி. 😂
  3. எனது ஆட்சியில் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்! -அநுர திசாநாயக்க- “நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய வகையிலான புதிய அரசியலமைப்புச் சட்டமொன்று தமது அரசாங்கத்தில் உருவாக்கப்படுமென” தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அக்குறணையில் நேற்றிரவு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் கடந்த கால வரலாற்றில் ஒன்றுக்கொன்று எதிராக அரசாங்கங்களே மாறி மாறி ஆட்சி அமைத்திருந்தன. 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல் பிரசாங்களின் போது வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களுக்கு எதிரான கோசங்களையே பிரதானமாக முன்வைத்தனர். வடக்கிற்கு எதிரான அரசாங்கமாகவே தெற்கு அரசியல்வாதிகள் செயற்பட்டனர். அவ்வாறான அரசாங்கமே கடந்த காலத்தில் ஆட்சி பீடங்கள் ஏற்றியிருந்தன. 2019ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான அரசாங்கம் அமைக்கப்பட்டது. அளுத்கம, திகன ஆகிய சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. இதன் பின்னர் ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த காலத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரம் முழுக்க முழுக்க முஸ்லீம் மக்களுக்கு எதிரானதாகவே அமைந்தது. நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு எதிராக அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் ஒற்றுமையை உருவாக்க முடியாது. எனவே நாட்டில் முதன்முறையாக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை வழங்ககூடிய ஐக்கிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். சஜித்திடம் தற்போது சென்றவர்களில் பலர் எமது வாசற் கதவுகளையும் தட்டியிருந்தனர். ஆனால் நாங்கள் அவர்களை உள்ளே வருவதற்கு அனுமதிக்கவில்லை. எங்களுக்கு அவர்கள் எவரும் தேவையில்லை. எங்களிடம் கொள்கை ரீதியான அரசியல் உள்ளது. எங்கள் மேடையில் இருப்பவர்கள் அனைவரும் இந்த நாட்டை நேசிப்பவர்கள், ஒரு அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை எப்போதும் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். அலி சாஹிர் மவ்லானா, சுரேஷ் வடிவேல் ஆகியோருக்கு இப்போது அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன, ஆனால் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சர்களை மாத்திரமே உள்ளடக்கவுள்ளோம். கடந்த காலத்தில் அனைத்து அரசாங்களிலும் மாறி மாறி அங்கம் வகித்த எவருக்கும் எமது அரசாங்கத்தில் அனுமதி இல்லை” இவ்வாறு அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396749
  4. தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஏற்றப்பட்டது. தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் இன்று காலை 9.15க்கு அறிமுகம் செய்து வைத்து ஏற்றி வைத்துள்ளார். கட்சிகொடியின் மேலும் கீழும் சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சம் நிறமும் உள்ளது. கொடியின் நடுவில் வாகை மலர் இருக்க அதன் இருபுறமும் யானை உள்ளவாறு கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. கவிஞர் விவேக் எழுதி தமன் இசையமைத்து இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விழாவின் ஆரம்பத்தில் விஜய் உறுதிமொழி வாசிக்க கட்சி நிர்வாகிகள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். குறித்த உறுதிமொழியல் , இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என்றும், சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1396759
  5. இந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்குப் பிடித்த செய்தி இதுதான். 😂 இந்தப் படங்களை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் உள்ளது. 🤣 பொன்ஸ்சுக்கு.... இந்த இரண்டு கையையும் தூக்குற வியாதி, கனகாலமாக இருக்குது போலை. 😂 🤣
  6. கணவர் மகேஸ்வரனின்... அகால மரணத்தால், திடீரென்று அரசியலுக்கு வந்து அமைச்சர் ஆனவர்தான் விஜயகலா மகேஸ்வரன். பங்களாதேஷில் நடந்த விஷயத்தை... நியூஸ் பேப்பரில் அவ பார்க்கவில்லைப் போல் உள்ளது.😂 அவ சொன்னதையும்... நம்புறதுக்கு ஆக்கள் இருக்கினம் என்று நினைக்கின்றேன். 🤣
  7. நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்- கழக கொடியும், பாடலும் நாளை அறிமுகம் – விஜய் அறிக்கை. நாளை காலை 9.15 மணிக்கு பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அக்கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்” என்று அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396702
  8. பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 4 வயது நிரம்பிய 2 சிறுமிகள் – 72 பேர் கைது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பத்லாப்பூரில் நான்கு வயதே நிரம்பிய 2 பாடசாலை சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் நடந்த மிகப் பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பாடசாலையில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் நேற்று பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பலர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டங்களில் 17 பொலிஸார் உட்பட 8 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். இந்தப் போராட்டம் தொடர்பாக 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நகரத்தில் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக கூடுதல் பொலிஸார் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். நகரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழலையர் பள்ளிச் சிறுமிகள் இரண்டு பேரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக பாடசாலையின் உதவியாளரை பொலிஸார் ஆகஸ்ட் 17-ம் திகதி கைது செய்தனர். பாடசாலையின் கழிவறையில் அவர் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியாதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலை நிர்வாகம் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், பெண் உதவியாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. அதேபோல் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்கும் பணியில் தவறியதாக மூத்த காவல் ஆய்வாளர் உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகளை மாநில அரசு நேற்று பணிநீக்கம் செய்துள்ளது. https://athavannews.com/2024/1396689
  9. சரி… சரி… எத்தனை பேர் திரும்பி ஊருக்கு போறாங்கள் என்று பார்ப்போம். 😂
  10. புத்தன் ஏமாந்தது காணாது என்று… “குளியலறையில்” என்ற தலைப்பை போட்டு எங்களையும் ஏமாற்றி விட்டார். 😂 🤣
  11. திரு ரணில் விக்ரமசிங்க அதிகாரத்திலிருந்த போது தான்... மாமனிதர் ரவிராஜ் படு*கொ*லை வழக்கின் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். திருகோணமலை குமரபுரத்தில் 24 பொதுமக்களை படு*கொ*லை வழக்கின் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட 6 இராணுவ அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். திருகோணமலை கடற்கரையில் படு*கொ*லை செய்யப்பட்ட 5 மாணவர்கள் தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட 13 இராணுவ அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். யாழ்ப்பாணத்தில் கூட்டு பலா*த்*காரத்தின் பின் கொ*லை செய்யப்பட்ட ரஜினி வேலாயுதம்பிள்ளை என்கிற 24 வயது பெண் தொடர்பான வழக்கின் குற்றவாளிகளான 2 இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டனர். அக்சன் பாம் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் படு*கொ*லை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீதான விசாரணைகள் முடக்கப்பட்டன. 1996 ஆம் ஆண்டு நாவற்குழிப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு வழக்கினை தாக்கல் செய்தவர்கள், அவர்களின் சார்பிலான ஆஜரான சட்டத்தரணிகள் புலனாய்வாளர்களால் நீதிமன்ற வளாகத்திலேயே அச்சுறுத்தப்பட்டு குறித்த வழக்கு முடக்கப்பட்டது. திருகோணமலை ஸ்ரீமலை நீலியம்மன் கோயில் தீயிடப்பட்டவழக்கில் அங்கு அத்துமீறி கட்டப்பட்டுள்ள பாசன பப்பாத ராஜமஹா விகாரையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்ட போதும் அவர் விடுவிக்கப்பட்டு வழக்கும் கை விடப்பட்டது. அதே போல தற்போது கொழும்பில் இருந்து கடத்தி திருகோணமலையில் வைத்து படு*கொ*லை செய்யப்பட்ட 11 தமிழ் மாணவர்கள் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கடற்படை தளபதி Wasantha Karannagoda மீதான குற்றச்சாட்டை வாபஸ் பெற சட்டமா அதிபர் திணைக்களம் முயன்று வருகின்றது. இது போதாதென்று திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் அதிகாரத்தின் போது தான் யாழ்ப்பாண பல்கலை கழக துணைவேந்தர் காலம் சென்ற பேராசிரியர் விக்கினேஸ்வரன் இராணுவத்தினரின் வற்புறுத்தலில் பதவி பறிக்கப்பட்டார். இவ் விவகாரத்தில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் நீதிமன்றிற்கு வழங்கிய சத்தியக் கூற்றில் புலனாய்வு முறைப்பாட்டின் பேரிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறிய விளக்கத்தை ஏற்று நீதிமன்றம் பேராசிரியர் விக்கினேஸ்வரனின் பதவி நீக்கத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுவை தள்ளுபடி செய்திருந்தது. குருந்தூர் மலை பௌத்த ஆக்கிரமிப்பை கையாண்ட முல்லைத்தீவு நீதிவான் திரு சரவணராஜா அச்சறுத்தல் மூலம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையின் விகாராதிபதி கோலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய தீர்த்தக் கேணியில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. Nellai Nellaiyaan
  12. பொன்ஸ்... கொண்டு வந்த காரை பார்த்திட்டு... சனம் பயத்திலை கூட்டத்திற்கு வரவில்லையோ... சொந்த செலவிலை... சூனியம் வைத்த கதையாய் போய் விட்டது. 😂
  13. வட மாகாண வைத்தியசாலைகளுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர். வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாகாண சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், நோயாளர்களும், வைத்தியர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சேவையை பெற்றுக் கொள்வதில் தாமதம் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய உயர் அதிகாரிகளின் தொடர்பு இலக்கங்கள் ஆகியன குறித்த பதாதையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்ட, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் தொலைபேசி இலக்கங்கள் அறிவித்தல் பதாதையில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் எனவும், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார துறை உயர் அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண ஆளுநர் கூறியுள்ளார். அத்துடன் ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் “அபயம்” பிரிவின் தொலைபேசி இலக்கமும் அறிவித்தல் பதாதையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1396617 நோயாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு, அவர்களுக்கான சேவையை உறுதிப்படுத்த சுகாதார துறையினர் மேலும் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் சுட்டிகாட்டியுள்ளார். https://athavannews.com/2024/1396617
  14. புளொட் – ஸ்ரீ ரெலோ முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி ரணிலுடன் விசேட சந்திப்பு! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமான புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா நகர சபை தலைவராகவும் மாகாண சபை உறுப்பினராகவும் இருந்த ஜி.ரி.லிங்கநாதன் இன்று ஸ்ரீ டெலோ அணியினருடன் இணைந்து ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஸ்ரீ டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா உட்பட முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் புளொட் முக்கியஸ்தருமான ஜி. ரி. லிங்கநாதன் உள்ளிட்ட பல முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1396668
  15. மன்னாரில் இளம் தாய் மரணமடைந்த விவகாரம்: வைத்தியர் பணி இடை நீக்கம்! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனயீனத்தால் சிந்துஜா எனும் இளம்தாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் குழந்தையைப் பிரசவித்த 27 வயதான மரியராஜ் சிந்துஜா எனும் இளம் தாய், அதிக இரத்தப்போக்கு காரணமாக கடந்த மாதம் 28 ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது, அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்குரிய முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் வைத்தியர்களின் இந்த அசமந்த போக்கு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏற்கனவே, இரண்டு தாதியர்களுக்கும் இரண்டு குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் ஒருவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான கடிதம் மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396667
  16. ரணிலுக்கு வாக்களிக்காததே நெருக்கடிக்கு காரணம் – விஜயகலா! 2005ல் ரணிலுக்கு வாக்களிக்காததால் இத்தனை இழப்புக்களையும் சந்தித்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தெரிவிக்கையில், கொரோனா மற்றும் பொருளாதாரத்தினால் வீழ்ச்சியைடைந்திருந்த இந்த நாட்டை கடந்த இரண்டு வருடங்களில் எவ்வாறு நாட்டை மீட்டார் என்பதை இந்த நாடும் உலகமும் அறிந்த பெருமைக்குரிய நல்ல தலைவராக ரணில் விக்ரமசிங்க உள்ளார். அது மாத்திரமல்ல, ஆசியாவிலேயே சிறந்த தலைவராக ரணில் விக்கிரமசிங்க விளங்குவதாக அமெரிக்க தூதுவர் கூறியிருக்கின்றார். 2005ம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இன்றைய ஜனாதிபதிக்கு வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. அன்று மக்கள் வாக்களித்திருந்தால் இன்று எமது மக்கள் இழப்புக்களை சந்தித்திருக்கமாட்டார்கள். யுத்த இழப்புக்கள், உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்களை தடுத்திருக்கலாம். அந்த பிழையை இனியும் விடாது அனைத்து தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், மலையக மக்களும், சிங்கள மக்களும் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களித்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு யாருக்கும் இருக்கின்றது. அண்மையில் பங்களாதேசில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்த பிரதமரை நாட்டை விட்டே வெளிேயேற்றியிருக்கிறார்கள். அதே போல இந்த நாட்டின் ஜனாதிபதியையும் துரத்தி ரணில் விக்ரமசிங்கவை கொண்டு வந்தார்கள். அவ்வாறான நிலையில் நாட்டை மீட்டுத் தந்த பெருமை ரணில் விக்கிரமசிங்கவையே சாரும்” என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1396652
  17. 10 மணி நேர ரயில் பயணம் – உக்ரைன் , போலந்து செல்லும் மோடி இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக இன்று காலை டெல்லியில் இருந்து போலந்துக்கு விஜயம் செய்துள்ளார். சுமார் 45 வருடங்களுக்கு முன் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன்பின் போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார். போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன செல்ல இருக்கிறார். உக்ரைனுக்கு சுமார் 10 மணி ரெயில் பயணம் மூலமாக போலந்தில் இருந்து செல்லவிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசும் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடவுள்ளார். போலந்து- இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மோடி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிரதமரின் இந்த பயணத்தின்போது, புவிசார் அரசியல் பிரச்சினைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. https://athavannews.com/2024/1396653 @குமாரசாமி
  18. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! மைத்திரியின் அறிவிப்பு. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு செலுத்தப்பட வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடுத் தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய அவர் செலுத்த வேண்டியிருந்த எஞ்சிய தொகையான 12 மில்லியன் ரூபாவை அவர் 16.08.2024 அன்று செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1396556
  19. உண்மை. அண்மைய செய்திகளில் இதனை அதிகம் அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலானவை சிறிய தந்தை போன்ற நம்பிக்கையான உறவினர்களால் நடத்தப் பட்டுள்ளமை அருவருக்கத்தக்கதும் கொடுமையானதுமான செயல். அதுகும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையையும் மாதக் கணக்கில் செய்கின்றார்கள். 😡
  20. கடந்த பத்து நாட்களில்... மருத்துவத்துறை சம்பந்தப் இடத்தில் நடந்த மூன்றாவது பாலியல் வன்கொடுமை இது. வெளியில் தெரியாமல் எத்தனையோ...
  21. பாலியல் வன்புணர்வுக்கு... பெயர் பெற்ற நாடு இந்தியா. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா.
  22. சிலருக்கு ஆறு விரல் உள்ளது போல, இவருக்கு இரண்டு பொக்கிள். 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.