Everything posted by தமிழ் சிறி
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை, 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை, 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி ரத்து! பெருந்தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி;இரத்து செய்யப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்துக் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது இதனையடுத்து பெருந்தோட்ட;நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவைப்;பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் ;இரத்து செய்யப்படுவதாக அறிவித்து தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயத்தில் அரசாங்க தரப்பினருக்கும் ;பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே புதிய இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த நிலையில், முன்னதாக முன்மொழியப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் குறைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1393342
-
தேர்தலுக்குத் தேவையான நிதியினை விடுவிக்குமாறு நிதி அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை!
தேர்தலுக்குத் தேவையான நிதியினை விடுவிக்குமாறு நிதி அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை! ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியினை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியினை தாமதமின்றி விடுவிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது தேர்தல் செலவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக மதிப்பிடப்பட்ட நிதி தொடர்பாக 45 பொலிஸ் பிரிவுகளில் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டுள்ள அதேவேளை அதன் அறிக்கைகள் கிடைக்கபெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. கிடைத்துள்ள அறிக்கைகளின் அடிப்படையில் இறுதி செலவு மதிப்பீடு தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1393346
-
வரலாற்றில் மிக இருண்ட யுகம் – இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்கிறார் கனேடிய பிரதமர்
வரலாற்றில் மிக இருண்ட யுகம் – இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்கிறார் கனேடிய பிரதமர். பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என கனடா தொடர்ந்தும் கோருவதாகக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 41வது ஆண்டை நினைவுகூரும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 41 ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் தமிழ் பொது மக்களின் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் ஆரம்பமாகின. ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டதுடன், பல தமிழர்கள் காயமடைந்தனர். பலர் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். கறுப்பு ஜூலை எனப்படும் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம், பதற்றங்களை அதிகரித்தது. அது பின்னர் பல தசாப்தகால ஆயுதமோதலாகப் பரிணமித்தது. இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயமாக அது விளங்குகின்றது. இதனடிப்படையில் மே 18ஆம் திகதியைத் தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினமாக அங்கீகரிக்கும் தீர்மானத்தைக் கனடாவின் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியது. இது அர்த்தமற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களை நினைவுகூர்வதில் கனடாவின் அர்ப்பணிப்பை வெளிக்காட்டுவதாகக் கனேடிய பிரதமர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1393425
-
கறுப்பு ஜூலை கலவரம் : நீதிக்கான போராட்டம் தொடரும் என்கிறார் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமாரன்!
உங்கள் செயலை வரவேற்கின்றோம். ஏற்கெனவே பல வருடங்களை உள்ளூர் அரசியல்வாதிகள் வீணாக்கி விட்டார்கள். இனி, அவர்களை நம்பி பிரயோசனம் இல்லை. நீங்கள் தாமதிக்காமல் களத்தில் இறங்குங்கள்.
-
ஜனாஸா எரிப்புக்கும் கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் மன்னிப்பு கோருகிறோம் - நீதியமைச்சர்
கொரோனாவால் இறந்த சில முஸ்லீம்களின் உடல் எரிப்பு சம்பந்தமாக அமைச்சர் கேட்ட மன்னிப்பிற்கு, முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிர்வினை ஆற்றியுள்ளார். ஆனால்.... ஜூலை கலவரத்தில் தமிழர்கள் பல ஆயிரம் உயிர்களை இழந்தும், பல ஆயிரம் கோடி சொத்துக்களை இழந்த போதும்.. பொத்தாம் பொதுவாக விஜயதாச ராஜபக்ச கேட்ட மன்னிப்பிற்கு தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை ஒரு கண்டனமும் தெரிவிக்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளமை கண்டிக்கப் படவேண்டியது. உங்களால்... தமிழ் மக்களுக்கு அரசியல் செய்யும் யோக்கியதை இல்லா விட்டால், தயவு செய்து ஒதுங்கி இருங்கள். செய்யக் கூடிய திறமையானவர்கள் அதனை தொடர்வார்கள். அரசியல் என்பது... வேலை மாதிரி... சொத்து, புகழ் சேர்ப்பதற்குரிய இடம் அல்ல. அது ஒரு இனத்திற்கு செய்யும் சேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
-
ஜனாஸா எரிப்புக்கும் கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் மன்னிப்பு கோருகிறோம் - நீதியமைச்சர்
ஜனாஸா எரிப்பு – மன்னிப்பை விட தண்டனையே அவசியம் – அதாவுல்லா கோாிக்கை! ஜனாஸா எரிப்பு தொடா்பாக மன்னிப்புக் கெட்பதை விடுத்து அதற்குக் காரணமானவா்களுக்கத் தண்டனை பெற்றக்கொடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எல்.எம்.அதாவுல்லா வலியுறுத்தியுள்ளாா். இன்றைய நாடாளுமன்ற அமா்வில் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மீறி ஜனாஸாக்களை எரிக்க வர்த்தமானி ஒன்றை அப்போதைய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்டிருந்தாா். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஜனாஸாக்களை எாித்தமை குறித்து மன்னிப்பு கோாியமை நல்ல விடயம். ஆனால் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் மீறி ஜனாஸா எரிக்க வர்த்தமானி வெளியிடப்பட்டமையால் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டது. இவ்விடயம் தொடா்பாக நான் பல தடவை இந்தச் சபையில் கேள்வியெழுப்பியுள்ளேன். எனவே மன்னிப்புக் கேட்பதை விட அதற்கான தண்டனையை யாருக்கு வழங்குவது என்பதை இந்த நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எல்.எம்.அதாவுல்லா மேலும் குறிப்பிட்டுள்ளாா். https://athavannews.com/2024/1393408
-
சம்பந்தர் காலமானார்
கிழக்கு மாகாணத்தில்... தமிழனுக்கு கிடைக்க வேண்டிய முதலமைச்சர் பதவியை, சம்பந்தன் முஸ்லீம்களுக்கு தாரை வாரத்துக் கொடுத்ததன் மூலம், கிழக்கு மாகாண தமிழ் மக்கள், அரசியலில் பல பின்னடைவுகளை சந்தித்த போதும்... முஸ்லீம் சமூகம் சம்பந்தன் மேல் நன்றிக் கடன் இல்லாமல் இருக்குது என்றால்... சம்பந்தன் தன் வாழ்நாளில்... செய்த இராஜதந்திரம் அற்ற செயலால் எவரிடமும் நன்மதிப்பை சம்பாதிக்காமல், வீணாய் அரசியலில் இருந்து ஒருவருக்கும் பிரயோசனம் இல்லாமால்... செத்துப் போனதுதான் மிச்சம். சம்பந்தன், தோல்வியுற்ற தலைவர் என்பதை... மீண்டும், மீண்டும் பல இடங்களில் நிரூபித்த வண்ணம் உள்ளார். 🙂
-
சம்பந்தர் காலமானார்
சோனகனும், சிங்களவனும்…. சம்பந்தனை பாராட்ட விட்டால் தான் அதிசயம். அந்தளவுக்கு தமிழர்களை புறம்தள்ளி சோனகனுக்கும், சிங்களவனுக்கும் சேவை செய்துள்ளார். அதுசரி…. சம்பந்தன் செத்ததுக்கு நீங்கள் ஏன், காத்தான்குடியில் கறுப்புக் கொடி கட்டவில்லை. 😂
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
பாம்பின் கால் பாம்பு அறியும். 😂 வாஸ்து பார்க்கின்ற நல்ல அனுபவசாலிகள், எங்கு குழி தோண்ட வேண்டும் என்று வாசனையை வைத்தே கண்டு பிடித்து விடுவார்கள். இதில் இந்தியர்கள், பலே… கில்லாடிகள். 🤣
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
கடற்கரை என்றால்… மணல் தானே. கையாலையே குழி தோண்டலாம். 🤣
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
சிக்… வெட்கம் கெட்டவர்கள். போன நாட்டில் கூட ஒழுங்காக இருக்க வேண்டும் என்ற நடை முறை தெரியாதவர்கள். ஊரில்… தண்டவாளத்தில் கக்கூஸ் இருந்த புத்தி, கனடாவுக்கு வந்தும் விட்டுப் போகவில்லை.
-
"வேகாத வெயிலிலே விறகொடிக்கப் போறபொண்ணே..!" / நாட்டுப்புற எசப்பாட்டு
நாட்டுப்புற எசப் பாடல்கள்.... வாசிக்க நகைச் சுவையாக இருக்கும். பகிர்விற்கு நன்றி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்!
அணு ஆயுதம் வைத்துள்ள இஸ்லாமிய நாடு பிரித்தானியா – ஜேடி வேன்ஸ் அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு பிரித்தானியா என, அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக 39 வயதுடைய ஜே.டி.வேன்ஸ் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கூட்டமொன்றில் உரையாற்றிய ஜேடி வேன்ஸ், அணு ஆயுதம் பெறும் முதல் இஸ்லாமிய நாடு எது என்பது குறித்து தனது நண்பர் ஒருவருடன் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன்போது, முதலில் ஈரான் அல்லது பாகிஸ்தானாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால், உண்மையில், தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்த பிரித்தானியா தான் அணு ஆயுதம் பெறும் இஸ்லாமிய நாடு என முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக பிரித்தானியா இருந்து வரும் நிலையில் ஜேடி வேன்ஸின் இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரித்தானியாவின் துணை பிரதமர் ஏஞ்சலா ராய்னர் (Angela Rayner), இது போன்று குற்றச்சாட்டுகளை சுமத்துவது வேன்சுக்கு வழக்கம் என விமர்ச்சித்துள்ளார். https://athavannews.com/2024/1392693 😂 🤣- ஜனாஸா எரிப்புக்கும் கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் மன்னிப்பு கோருகிறோம் - நீதியமைச்சர்
இரண்டு வெவ்வேறு சம்பவங்களையும் ஒன்றாக்கி… போனால் போகுது என்ற ரீதியில் மன்னிப்பு கேட்டதன் மூலம் தமிழ் மக்களை மேலும் காயப் படுத்தி விட்டார் விஜயதாச ராஜபக்ச. இதிலும் பார்க்க மன்னிப்பு கேட்காமலே இருந்திருக்கலாம்.- என்னை படுகொலை செய்ய இராஜாங்க அமைச்சர் சதி உரிய விசாரணைகளை முன்னெடுங்கள் - சாணக்கியன் சபையில் வலியுறுத்தல்!
இலங்கையில் இப்படியானவற்றை உடனே மூடி மறைத்து விடுவார்கள். கிளற வெளிக்கிட்டால்… பல முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் எல்லோரின் சாயமும் வெளுக்கும் என்று அவர்களுக்கு தெரியும். ஆசிய நாட்டின் சாபங்களில் இதுகளும் ஒன்று. அட… ஆமால்லே… 😂 பங்காளி சண்டை போலுள்ளது. 🤣- என்னை படுகொலை செய்ய இராஜாங்க அமைச்சர் சதி உரிய விசாரணைகளை முன்னெடுங்கள் - சாணக்கியன் சபையில் வலியுறுத்தல்!
மகிந்தவின் செல்லப் பிள்ளை… பிள்ளையான்… கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை எல்லாம் செய்த ஆள் என்று செய்திகள் அவ்வப் போது வருவதுண்டு. எதற்கும் சாணக்கியன் பாதுகாப்பாக இருப்பது நல்லது.- என்னை படுகொலை செய்ய இராஜாங்க அமைச்சர் சதி உரிய விசாரணைகளை முன்னெடுங்கள் - சாணக்கியன் சபையில் வலியுறுத்தல்!
சாணக்கியன் குறிப்பிடுகின்ற இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் போல கிடக்கு.- கனடாவில் இந்து கோயில் சேதம்: விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்.
கூப்பிடு தொலைவில் உள்ள இலங்கையில் எத்தனையோ இந்துக் கோவில்கள் சேதப் படுத்தப் பட்டு, இல்லாது ஒழிக்கப் பட்ட போது இந்த விஸ்வ இந்து பருஷத் கண்டனம் தெரிவிக்கவில்லையே. ஏன்…???- ஜனாஸா எரிப்புக்கும் கறுப்பு ஜூலை சம்பவத்துக்கும் மன்னிப்பு கோருகிறோம் - நீதியமைச்சர்
ஆயிரக் கணக்கான தமிழர் கொலையையும், சொத்துக்கள் சேதத்தையும்…. ஜனாசா எரிப்புடன் ஒரே தராசில் வைத்து மன்னிப்பு கேட்டிருக்கின்றார் நீதி அமைச்சர்.- கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிணையில் விடுதலை!
ஓம். வெக்கைக்கு… குளிர்ச்சியாக இருக்க ஒரு ஏரிக்கரையில் இடம் பார்த்து வைத்திருக்கிறார். ஹிருணிக்கா…. புருசனையும், மூன்று பிள்ளைகளையும் ஊரில் விட்டுட்டு அமெரிக்கா போக சம்மதிப்பா என்று நான் நினைக்கவில்லை. 😂 @Maruthankerny யின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். 🤣- பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்!
குமாரசாமி அண்ணை…. இதைப் பார்த்து @nedukkalapoovan க்கு பிரசர் ஏறப் போகுது. 😂 🤣- பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்!
சில காலத்திற்கு முன் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கிக் கொண்டு வள்ளத்தில் ஏஜென்சி அனுப்பி வைத்த மாதிரி இலங்கையிலிருந்தும் வள்ளம் பிரித்தானியா நோக்கி புறப்படலாம். சோமாலியா விளம்பரத்தில் 2500 பவுன்ஸ் கட்டினால் காணுமாம். 😂- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிர்வாகத்தினருக்கு மிக்க நன்றி. 🙏- இரசித்த.... புகைப்படங்கள்.
- பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.