Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம்! நிலாந்தன். தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் ஒரு பேசுபொருள் என்ற கட்டத்தைக் கடந்து ஒரு செயலாக மாற்றமடையும் நிலைமைகள் படிப்படியாக வளர்ந்து வருகின்றன. கடந்த 22 ஆம் தேதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த ஒரு நிகழ்வில் ஏழு தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் “தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு ” என்று ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த மாதம் 29ம்தேதி வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.எனினும் அப்பொழுது கையெழுத்திடப்படவில்லை. கையெழுத்திடும் நிகழ்வை இம்மாதம் ஆறாம் தேதி ஒழுங்கு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.ஆனால் சம்பந்தரின் மறைவையொட்டி அந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அது கடந்த 22 ஆம் தேதி நடந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆகப் பிந்திய ஒரு பொதுக் கட்டமைப்பு அதுவாகும். இதற்கு முன் கட்சிகளின் கூட்டுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆனால் மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டெனப்படுவது இதுதான் முதல் தடவை.அதுவும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இணைவது என்பது இதுதான் முதல் தடவை. இந்தக் கட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தி உழைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அடுத்தடுத்த கட்டத்திற்கு கட்டமைப்பு ரீதியாக முன்னேறத் தொடங்கியுள்ளது என்று தெரிகிறது. ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராக இருந்தால் கட்சிகளும் மக்கள் அமைப்பும் ஒன்றாக உழைத்து அவருக்கு வாக்குத் திரட்டும் பொழுது என்ன நடக்கும்? தமிழ் பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை பெருமளவுக்கு பெறுவாராக இருந்தால் அது தென் இலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளை சவால்களுக்கு உள்ளாக்கும். எந்த ஒரு தென் இலங்கை வேட்பாளரும் பெருமைப்படக்கூடிய பெரும்பான்மையைப் பெற முடியாத ஒரு நிலைமை தோன்றக்கூடும். ஏனென்றால் கிடைக்கும் செய்திகளின்படி தென்னிலங்கையில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நிறுத்தப்படும் நிலமைகள் காணப்படுகின்றன. ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின் வெற்றி குறித்த நிச்சயமின்மைகளை அதிகமாகக் கொண்ட ஒரு தேர்தல் இது. ஒரு மேற்கத்திய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் கூறியதுபோல, தேர்தல் முடிவுகளை எதிர்வு கூற முடியாதிருக்கிறது என்பது மட்டுமல்ல, ஊகிக்கவும் முடியாத ஒரு நிலைமை காணப்படுகிறது என்பது சரியானதுதான். ஏனெனில் ஒப்பீட்டளவில் யாருமே மிகப்பெரிய பெரும்பான்மையோடு வெல்வார் என்று கூற முடியாத அளவுக்கு நிலைமை காணப்படுகிறது. இப்படிப்பட்ட நிச்சயமின்மைகள் அதிகமுடைய ஒரு தேர்தல்களத்தில் தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களின் அதிகப்படியான வாக்குகளை கவர்வாராக இருந்தால் நிலைமை என்னவாகும் ? தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டாலும் நிறுத்தப்படாவிட்டாலும் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்தான் ஜனாதிபதியாக வரப்போகிறார். ஆனால் தமிழ் வாக்குகள் அவருக்கு இல்லை என்றால் முதலாவதாக அவர் பெறும் வெற்றியின் அந்தஸ்து குறைந்து விடும். எவ்வாறெனில் தமிழ் மக்களின் ஆணை அவருக்கு இல்லை என்பது அவரை நாடு முழுவதுமான ஜனாதிபதி என்ற அந்தஸ்திலிருந்து தரமிறக்கும். இரண்டாவதாக தமிழ் மக்களின் வாக்குகள் பெருமளவுக்கு அவருக்கு கிடைக்காவிட்டால் அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் குறையும். அதுவும் அவருடைய அந்தஸ்தை, அங்கீகாரத்தை குறைக்கும். எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் அதிகளவு வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் இந்த ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்படப் போகும் எந்த ஒரு ஜனாதிபதியும் அங்கீகாரம் குறைந்த;அந்தஸ்து குறைந்த ஒரு ஜனாதிபதியாகத் தான் காணப்படுவார்.அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சிகள் பெறக்கூடிய வெற்றி தோல்விகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். எனவே ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை அதிகமாகக் கவர்ந்தால், தென்னிலங்கையில் பலம் குறைந்த ஒரு அரசுத் தலைவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்.அதேசமயம் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்படாவிட்டால் என்ன நடக்கும் ? தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறும். ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார், ஆங்கிலம் பேசும் படித்த தமிழ் நடுத்தர தர்க்கம் தன்னை ஆதரிக்கும் என்று. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை அவர் மீட்டிருப்பதாக ஆங்கிலம் பேசும் படித்த நடுத்தர வர்க்கத் தமிழர்கள் கருதுவார்களாக இருந்தால், அவர்கள் ரணிலுக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும். அதேபோல சஜித்தோடு ஏதாவது ஒரு உடன்படிக்கைக்கு வர விரும்பும் கட்சிகள் தனது வாக்காளர்களை சஜித்தை நோக்கி சாய்ப்பாபார்களாக இருந்தால், சஜித்துக்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும். தென்னிலங்கை வேட்பாளர்கள் தமது வாக்குறுதிகளை வெளிப்படையாக முன்வைத்தபின் அவர்களோடு பேசலாம் என்று காத்திருக்கும் கட்சிகள்,தமிழ் மக்களின் வாக்குகளை யாரோ ஒரு தென் இலங்கை வேட்பாளரை நோக்கித்தான் சாய்க்கப் போகின்றன.எனவே சஜித்,ரணில் போன்ற வேட்பாளர்கள் அவ்வாறான எதிர்பார்ப்புகளோடு இருக்க முடியும். அடுத்ததாக, அனுர.மாற்றத்தை விரும்புகிறவர்கள் முன்னைய தலைவர்களில் சலித்துப் போனவர்கள், அனுரவை எதிர்பார்ப்போடு பார்க்கக்கூடும். அதனால் அவருக்கும் ஒரு தொகுதி தமிழ் வாக்குகள் கிடைக்கலாம். இந்த மூன்று தென்னிலங்கை வேட்பாளர்களையும் தவிர பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்கின்றது.அதற்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கக்கூடும்.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்றால் தமிழ் வாக்குகள் மேற்கண்டவாறு சிதறும் நிலைமைகளை அதிகமாக ஏற்படும். இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக்கூட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தத் தவறினால் யாரோ ஒருவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று கூறிக்கொண்டு களமிறங்கத்தான் போகிறார். அவருக்கும் ஏதோ ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும்.இப்படிப்பார்த்தால் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்று சொன்னால்,தமிழ் வாக்குகள் முன்னெப்பொழுதையும்விட பல கூறாகச் சிதறும் ஆபத்தும் அதிகம் தெரிகிறது. அதாவது தமிழ்ப் பலம், தமிழ் அரசியல் சக்தி பல துண்டுகளாகச் சிதறப் போகின்றது. இது அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.ஜனாதிபதித் தேர்தலில் சிதறடிக்கப்பட்ட தமிழ் வாக்குகள் அடுத்தடுத்த கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் மேலும் சிதறடிக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குகளை ஒன்றுதிரட்டத் தவறினால்,தொடர்ந்து நடக்கக்கூடிய ஏனைய மூன்று தேர்தல்களிலும் தமிழ்மக்கள் மேலும் சிதறடிக்கப்படுவார்கள். இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தவிர வேறு புத்திசாலித்தனமான தீர்க்கதரிசனமான தெரிவு தமிழ்மக்களுக்கு உண்டா? அல்லது அதை மேலும் ஆழமான பொருளில் கேட்டால், ஐக்கியப்படுவதைத் தவிர வேறு உடனடி நிகழ்ச்சி நிரல் தமிழ் மக்களுக்கு உண்டா? ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் ஐக்கியம் நிரூபிக்கப்பட்டால்,அது அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்லப்படும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு பொதுநிலைப்பாட்டின் கீழ் ஒன்று திரட்டப்பட்டால், தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகம் பிறக்கும்; உத்வேகம் பிறக்கும். இது தமிழரசியலில் ஒரு புதிய ரத்தச் சுற்றோட்டத்தை ஏற்படுத்தும். கடந்த பல தசாப்தங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கும் ஓர் உண்மை எதுவென்றால், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வாக்களிப்பு அலை தோன்றும் போதுதான் அதிகப்படியான ஆசனங்கள் கிடைக்கின்றன.தமிழ் வாக்களிப்பு அலை எனப்படுவது அதன் பிரயோக அர்த்தத்தில் தமிழ்த் தேசிய அலைதான். தமிழ்த் தேசிய அலை என்பது அதை வேறு வார்த்தைகளில் சொன்னால் தமிழ் ஐக்கியம் தான். தேசியவாத அரசியல் எனப்படுவது அது எந்த தேசியவாதமாக இருந்தாலும், ஐக்கியம்தான்.எவ்வாறெனில்,தேசியவாத கட்சி அரசியல் எனப்படுவது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது.அதாவது ஆகக்கூடிய பெரும் திரளாக திரட்டுவது.அதை தேர்தல் வார்த்தைகளில் சொன்னால், வாக்காளர்களை ஆகக்கூடியபட்சம் திரட்டுவது.எனவே தமிழ்த்தேசிய வாக்களிப்பு அலை எனப்படுவது தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஐக்கியப் படுத்துவதுதான். அந்த அடிப்படையில்தான் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் சிந்திக்கப்படுகிறது.கடந்த திங்கட்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் எழுதப்பட்ட உடன்படிக்கையில் 7கட்சிகள் கையெழுத்திட்டன.உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி முடிவெடுக்க முடியாதபடி இரண்டாக நிற்கின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளரைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு அணிகள் உண்டு.சிறீதரன் அணி பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. சுமந்திரன் அணி எதிர்க்கின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட காணொளி ஊடகம் ஒன்று மாவை சேனாதிராஜாவை நேர்கண்ட பொழுது,அவர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகப் பதில் சொல்லியிருக்கிறார்.தமிழ்ப் பொது வேட்பாளரை நியாயப்படுத்தும் பொழுது, அவர் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டியுமிருக்கிறார்.மக்களிடம் ஆணை பெறுவது என்பதை விடவும்,மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும்; கட்சிகளை ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற பொருளில் அவருடைய பதில் அமைந்திருந்தது.மாவை சேனாதிராஜாதான் இப்பொழுதும் கட்சியின் தலைவர். எனவே அவருடைய கருத்துக்கு இங்கு அதிகம் முக்கியத்துவம் உண்டு. அது தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் சிறீதரன் அணியைப் பலப்படுத்தக் கூடியது. இப்பொழுது ஏழு கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கியிருக்கும் பொதுக் கட்டமைப்பானது ஏனைய கட்சிகளுக்காகத் திறக்கப்பட்டிருக்கும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.அதன்மூலம் ஆகக்கூடியபட்ச ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதுதான் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம் என்று கூறப்பட்டிருக்கிறது.இந்த ஐக்கியம் வெற்றி பெறுமாக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் அரசியலை அது புதிய வழியில் செலுத்துமா? https://athavannews.com/2024/1393877
  2. தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம்! நிலாந்தன். தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் ஒரு பேசுபொருள் என்ற கட்டத்தைக் கடந்து ஒரு செயலாக மாற்றமடையும் நிலைமைகள் படிப்படியாக வளர்ந்து வருகின்றன. கடந்த 22 ஆம் தேதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த ஒரு நிகழ்வில் ஏழு தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் “தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு ” என்று ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த மாதம் 29ம்தேதி வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.எனினும் அப்பொழுது கையெழுத்திடப்படவில்லை. கையெழுத்திடும் நிகழ்வை இம்மாதம் ஆறாம் தேதி ஒழுங்கு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.ஆனால் சம்பந்தரின் மறைவையொட்டி அந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அது கடந்த 22 ஆம் தேதி நடந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆகப் பிந்திய ஒரு பொதுக் கட்டமைப்பு அதுவாகும். இதற்கு முன் கட்சிகளின் கூட்டுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆனால் மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டெனப்படுவது இதுதான் முதல் தடவை.அதுவும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இணைவது என்பது இதுதான் முதல் தடவை. இந்தக் கட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தி உழைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அடுத்தடுத்த கட்டத்திற்கு கட்டமைப்பு ரீதியாக முன்னேறத் தொடங்கியுள்ளது என்று தெரிகிறது. ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராக இருந்தால் கட்சிகளும் மக்கள் அமைப்பும் ஒன்றாக உழைத்து அவருக்கு வாக்குத் திரட்டும் பொழுது என்ன நடக்கும்? தமிழ் பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை பெருமளவுக்கு பெறுவாராக இருந்தால் அது தென் இலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளை சவால்களுக்கு உள்ளாக்கும். எந்த ஒரு தென் இலங்கை வேட்பாளரும் பெருமைப்படக்கூடிய பெரும்பான்மையைப் பெற முடியாத ஒரு நிலைமை தோன்றக்கூடும். ஏனென்றால் கிடைக்கும் செய்திகளின்படி தென்னிலங்கையில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நிறுத்தப்படும் நிலமைகள் காணப்படுகின்றன. ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின் வெற்றி குறித்த நிச்சயமின்மைகளை அதிகமாகக் கொண்ட ஒரு தேர்தல் இது. ஒரு மேற்கத்திய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் கூறியதுபோல, தேர்தல் முடிவுகளை எதிர்வு கூற முடியாதிருக்கிறது என்பது மட்டுமல்ல, ஊகிக்கவும் முடியாத ஒரு நிலைமை காணப்படுகிறது என்பது சரியானதுதான். ஏனெனில் ஒப்பீட்டளவில் யாருமே மிகப்பெரிய பெரும்பான்மையோடு வெல்வார் என்று கூற முடியாத அளவுக்கு நிலைமை காணப்படுகிறது. இப்படிப்பட்ட நிச்சயமின்மைகள் அதிகமுடைய ஒரு தேர்தல்களத்தில் தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களின் அதிகப்படியான வாக்குகளை கவர்வாராக இருந்தால் நிலைமை என்னவாகும் ? தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டாலும் நிறுத்தப்படாவிட்டாலும் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்தான் ஜனாதிபதியாக வரப்போகிறார். ஆனால் தமிழ் வாக்குகள் அவருக்கு இல்லை என்றால் முதலாவதாக அவர் பெறும் வெற்றியின் அந்தஸ்து குறைந்து விடும். எவ்வாறெனில் தமிழ் மக்களின் ஆணை அவருக்கு இல்லை என்பது அவரை நாடு முழுவதுமான ஜனாதிபதி என்ற அந்தஸ்திலிருந்து தரமிறக்கும். இரண்டாவதாக தமிழ் மக்களின் வாக்குகள் பெருமளவுக்கு அவருக்கு கிடைக்காவிட்டால் அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் குறையும். அதுவும் அவருடைய அந்தஸ்தை, அங்கீகாரத்தை குறைக்கும். எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் அதிகளவு வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் இந்த ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்படப் போகும் எந்த ஒரு ஜனாதிபதியும் அங்கீகாரம் குறைந்த;அந்தஸ்து குறைந்த ஒரு ஜனாதிபதியாகத் தான் காணப்படுவார்.அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சிகள் பெறக்கூடிய வெற்றி தோல்விகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். எனவே ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை அதிகமாகக் கவர்ந்தால், தென்னிலங்கையில் பலம் குறைந்த ஒரு அரசுத் தலைவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்.அதேசமயம் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்படாவிட்டால் என்ன நடக்கும் ? தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறும். ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார், ஆங்கிலம் பேசும் படித்த தமிழ் நடுத்தர தர்க்கம் தன்னை ஆதரிக்கும் என்று. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை அவர் மீட்டிருப்பதாக ஆங்கிலம் பேசும் படித்த நடுத்தர வர்க்கத் தமிழர்கள் கருதுவார்களாக இருந்தால், அவர்கள் ரணிலுக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும். அதேபோல சஜித்தோடு ஏதாவது ஒரு உடன்படிக்கைக்கு வர விரும்பும் கட்சிகள் தனது வாக்காளர்களை சஜித்தை நோக்கி சாய்ப்பாபார்களாக இருந்தால், சஜித்துக்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும். தென்னிலங்கை வேட்பாளர்கள் தமது வாக்குறுதிகளை வெளிப்படையாக முன்வைத்தபின் அவர்களோடு பேசலாம் என்று காத்திருக்கும் கட்சிகள்,தமிழ் மக்களின் வாக்குகளை யாரோ ஒரு தென் இலங்கை வேட்பாளரை நோக்கித்தான் சாய்க்கப் போகின்றன.எனவே சஜித்,ரணில் போன்ற வேட்பாளர்கள் அவ்வாறான எதிர்பார்ப்புகளோடு இருக்க முடியும். அடுத்ததாக, அனுர.மாற்றத்தை விரும்புகிறவர்கள் முன்னைய தலைவர்களில் சலித்துப் போனவர்கள், அனுரவை எதிர்பார்ப்போடு பார்க்கக்கூடும். அதனால் அவருக்கும் ஒரு தொகுதி தமிழ் வாக்குகள் கிடைக்கலாம். இந்த மூன்று தென்னிலங்கை வேட்பாளர்களையும் தவிர பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்கின்றது.அதற்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கக்கூடும்.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்றால் தமிழ் வாக்குகள் மேற்கண்டவாறு சிதறும் நிலைமைகளை அதிகமாக ஏற்படும். இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக்கூட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தத் தவறினால் யாரோ ஒருவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று கூறிக்கொண்டு களமிறங்கத்தான் போகிறார். அவருக்கும் ஏதோ ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும்.இப்படிப்பார்த்தால் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்று சொன்னால்,தமிழ் வாக்குகள் முன்னெப்பொழுதையும்விட பல கூறாகச் சிதறும் ஆபத்தும் அதிகம் தெரிகிறது. அதாவது தமிழ்ப் பலம், தமிழ் அரசியல் சக்தி பல துண்டுகளாகச் சிதறப் போகின்றது. இது அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.ஜனாதிபதித் தேர்தலில் சிதறடிக்கப்பட்ட தமிழ் வாக்குகள் அடுத்தடுத்த கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் மேலும் சிதறடிக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குகளை ஒன்றுதிரட்டத் தவறினால்,தொடர்ந்து நடக்கக்கூடிய ஏனைய மூன்று தேர்தல்களிலும் தமிழ்மக்கள் மேலும் சிதறடிக்கப்படுவார்கள். இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தவிர வேறு புத்திசாலித்தனமான தீர்க்கதரிசனமான தெரிவு தமிழ்மக்களுக்கு உண்டா? அல்லது அதை மேலும் ஆழமான பொருளில் கேட்டால், ஐக்கியப்படுவதைத் தவிர வேறு உடனடி நிகழ்ச்சி நிரல் தமிழ் மக்களுக்கு உண்டா? ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் ஐக்கியம் நிரூபிக்கப்பட்டால்,அது அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்லப்படும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு பொதுநிலைப்பாட்டின் கீழ் ஒன்று திரட்டப்பட்டால், தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகம் பிறக்கும்; உத்வேகம் பிறக்கும். இது தமிழரசியலில் ஒரு புதிய ரத்தச் சுற்றோட்டத்தை ஏற்படுத்தும். கடந்த பல தசாப்தங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கும் ஓர் உண்மை எதுவென்றால், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வாக்களிப்பு அலை தோன்றும் போதுதான் அதிகப்படியான ஆசனங்கள் கிடைக்கின்றன.தமிழ் வாக்களிப்பு அலை எனப்படுவது அதன் பிரயோக அர்த்தத்தில் தமிழ்த் தேசிய அலைதான். தமிழ்த் தேசிய அலை என்பது அதை வேறு வார்த்தைகளில் சொன்னால் தமிழ் ஐக்கியம் தான். தேசியவாத அரசியல் எனப்படுவது அது எந்த தேசியவாதமாக இருந்தாலும், ஐக்கியம்தான்.எவ்வாறெனில்,தேசியவாத கட்சி அரசியல் எனப்படுவது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது.அதாவது ஆகக்கூடிய பெரும் திரளாக திரட்டுவது.அதை தேர்தல் வார்த்தைகளில் சொன்னால், வாக்காளர்களை ஆகக்கூடியபட்சம் திரட்டுவது.எனவே தமிழ்த்தேசிய வாக்களிப்பு அலை எனப்படுவது தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஐக்கியப் படுத்துவதுதான். அந்த அடிப்படையில்தான் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் சிந்திக்கப்படுகிறது.கடந்த திங்கட்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் எழுதப்பட்ட உடன்படிக்கையில் 7கட்சிகள் கையெழுத்திட்டன.உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி முடிவெடுக்க முடியாதபடி இரண்டாக நிற்கின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளரைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு அணிகள் உண்டு.சிறீதரன் அணி பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. சுமந்திரன் அணி எதிர்க்கின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட காணொளி ஊடகம் ஒன்று மாவை சேனாதிராஜாவை நேர்கண்ட பொழுது,அவர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகப் பதில் சொல்லியிருக்கிறார்.தமிழ்ப் பொது வேட்பாளரை நியாயப்படுத்தும் பொழுது, அவர் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டியுமிருக்கிறார்.மக்களிடம் ஆணை பெறுவது என்பதை விடவும்,மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும்; கட்சிகளை ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற பொருளில் அவருடைய பதில் அமைந்திருந்தது.மாவை சேனாதிராஜாதான் இப்பொழுதும் கட்சியின் தலைவர். எனவே அவருடைய கருத்துக்கு இங்கு அதிகம் முக்கியத்துவம் உண்டு. அது தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் சிறீதரன் அணியைப் பலப்படுத்தக் கூடியது. இப்பொழுது ஏழு கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கியிருக்கும் பொதுக் கட்டமைப்பானது ஏனைய கட்சிகளுக்காகத் திறக்கப்பட்டிருக்கும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.அதன்மூலம் ஆகக்கூடியபட்ச ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதுதான் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம் என்று கூறப்பட்டிருக்கிறது.இந்த ஐக்கியம் வெற்றி பெறுமாக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் அரசியலை அது புதிய வழியில் செலுத்துமா? https://athavannews.com/2024/1393877
  3. தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம்! நிலாந்தன். தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் ஒரு பேசுபொருள் என்ற கட்டத்தைக் கடந்து ஒரு செயலாக மாற்றமடையும் நிலைமைகள் படிப்படியாக வளர்ந்து வருகின்றன. கடந்த 22 ஆம் தேதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த ஒரு நிகழ்வில் ஏழு தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் “தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு ” என்று ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த மாதம் 29ம்தேதி வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.எனினும் அப்பொழுது கையெழுத்திடப்படவில்லை. கையெழுத்திடும் நிகழ்வை இம்மாதம் ஆறாம் தேதி ஒழுங்கு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.ஆனால் சம்பந்தரின் மறைவையொட்டி அந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அது கடந்த 22 ஆம் தேதி நடந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆகப் பிந்திய ஒரு பொதுக் கட்டமைப்பு அதுவாகும். இதற்கு முன் கட்சிகளின் கூட்டுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆனால் மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டெனப்படுவது இதுதான் முதல் தடவை.அதுவும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இணைவது என்பது இதுதான் முதல் தடவை. இந்தக் கட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தி உழைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அடுத்தடுத்த கட்டத்திற்கு கட்டமைப்பு ரீதியாக முன்னேறத் தொடங்கியுள்ளது என்று தெரிகிறது. ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராக இருந்தால் கட்சிகளும் மக்கள் அமைப்பும் ஒன்றாக உழைத்து அவருக்கு வாக்குத் திரட்டும் பொழுது என்ன நடக்கும்? தமிழ் பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை பெருமளவுக்கு பெறுவாராக இருந்தால் அது தென் இலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளை சவால்களுக்கு உள்ளாக்கும். எந்த ஒரு தென் இலங்கை வேட்பாளரும் பெருமைப்படக்கூடிய பெரும்பான்மையைப் பெற முடியாத ஒரு நிலைமை தோன்றக்கூடும். ஏனென்றால் கிடைக்கும் செய்திகளின்படி தென்னிலங்கையில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நிறுத்தப்படும் நிலமைகள் காணப்படுகின்றன. ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின் வெற்றி குறித்த நிச்சயமின்மைகளை அதிகமாகக் கொண்ட ஒரு தேர்தல் இது. ஒரு மேற்கத்திய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் கூறியதுபோல, தேர்தல் முடிவுகளை எதிர்வு கூற முடியாதிருக்கிறது என்பது மட்டுமல்ல, ஊகிக்கவும் முடியாத ஒரு நிலைமை காணப்படுகிறது என்பது சரியானதுதான். ஏனெனில் ஒப்பீட்டளவில் யாருமே மிகப்பெரிய பெரும்பான்மையோடு வெல்வார் என்று கூற முடியாத அளவுக்கு நிலைமை காணப்படுகிறது. இப்படிப்பட்ட நிச்சயமின்மைகள் அதிகமுடைய ஒரு தேர்தல்களத்தில் தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களின் அதிகப்படியான வாக்குகளை கவர்வாராக இருந்தால் நிலைமை என்னவாகும் ? தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டாலும் நிறுத்தப்படாவிட்டாலும் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்தான் ஜனாதிபதியாக வரப்போகிறார். ஆனால் தமிழ் வாக்குகள் அவருக்கு இல்லை என்றால் முதலாவதாக அவர் பெறும் வெற்றியின் அந்தஸ்து குறைந்து விடும். எவ்வாறெனில் தமிழ் மக்களின் ஆணை அவருக்கு இல்லை என்பது அவரை நாடு முழுவதுமான ஜனாதிபதி என்ற அந்தஸ்திலிருந்து தரமிறக்கும். இரண்டாவதாக தமிழ் மக்களின் வாக்குகள் பெருமளவுக்கு அவருக்கு கிடைக்காவிட்டால் அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் குறையும். அதுவும் அவருடைய அந்தஸ்தை, அங்கீகாரத்தை குறைக்கும். எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் அதிகளவு வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் இந்த ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்படப் போகும் எந்த ஒரு ஜனாதிபதியும் அங்கீகாரம் குறைந்த;அந்தஸ்து குறைந்த ஒரு ஜனாதிபதியாகத் தான் காணப்படுவார்.அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சிகள் பெறக்கூடிய வெற்றி தோல்விகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். எனவே ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை அதிகமாகக் கவர்ந்தால், தென்னிலங்கையில் பலம் குறைந்த ஒரு அரசுத் தலைவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்.அதேசமயம் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்படாவிட்டால் என்ன நடக்கும் ? தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறும். ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார், ஆங்கிலம் பேசும் படித்த தமிழ் நடுத்தர தர்க்கம் தன்னை ஆதரிக்கும் என்று. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை அவர் மீட்டிருப்பதாக ஆங்கிலம் பேசும் படித்த நடுத்தர வர்க்கத் தமிழர்கள் கருதுவார்களாக இருந்தால், அவர்கள் ரணிலுக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும். அதேபோல சஜித்தோடு ஏதாவது ஒரு உடன்படிக்கைக்கு வர விரும்பும் கட்சிகள் தனது வாக்காளர்களை சஜித்தை நோக்கி சாய்ப்பாபார்களாக இருந்தால், சஜித்துக்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும். தென்னிலங்கை வேட்பாளர்கள் தமது வாக்குறுதிகளை வெளிப்படையாக முன்வைத்தபின் அவர்களோடு பேசலாம் என்று காத்திருக்கும் கட்சிகள்,தமிழ் மக்களின் வாக்குகளை யாரோ ஒரு தென் இலங்கை வேட்பாளரை நோக்கித்தான் சாய்க்கப் போகின்றன.எனவே சஜித்,ரணில் போன்ற வேட்பாளர்கள் அவ்வாறான எதிர்பார்ப்புகளோடு இருக்க முடியும். அடுத்ததாக, அனுர.மாற்றத்தை விரும்புகிறவர்கள் முன்னைய தலைவர்களில் சலித்துப் போனவர்கள், அனுரவை எதிர்பார்ப்போடு பார்க்கக்கூடும். அதனால் அவருக்கும் ஒரு தொகுதி தமிழ் வாக்குகள் கிடைக்கலாம். இந்த மூன்று தென்னிலங்கை வேட்பாளர்களையும் தவிர பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்கின்றது.அதற்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கக்கூடும்.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்றால் தமிழ் வாக்குகள் மேற்கண்டவாறு சிதறும் நிலைமைகளை அதிகமாக ஏற்படும். இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக்கூட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தத் தவறினால் யாரோ ஒருவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று கூறிக்கொண்டு களமிறங்கத்தான் போகிறார். அவருக்கும் ஏதோ ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும்.இப்படிப்பார்த்தால் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்று சொன்னால்,தமிழ் வாக்குகள் முன்னெப்பொழுதையும்விட பல கூறாகச் சிதறும் ஆபத்தும் அதிகம் தெரிகிறது. அதாவது தமிழ்ப் பலம், தமிழ் அரசியல் சக்தி பல துண்டுகளாகச் சிதறப் போகின்றது. இது அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.ஜனாதிபதித் தேர்தலில் சிதறடிக்கப்பட்ட தமிழ் வாக்குகள் அடுத்தடுத்த கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் மேலும் சிதறடிக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குகளை ஒன்றுதிரட்டத் தவறினால்,தொடர்ந்து நடக்கக்கூடிய ஏனைய மூன்று தேர்தல்களிலும் தமிழ்மக்கள் மேலும் சிதறடிக்கப்படுவார்கள். இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தவிர வேறு புத்திசாலித்தனமான தீர்க்கதரிசனமான தெரிவு தமிழ்மக்களுக்கு உண்டா? அல்லது அதை மேலும் ஆழமான பொருளில் கேட்டால், ஐக்கியப்படுவதைத் தவிர வேறு உடனடி நிகழ்ச்சி நிரல் தமிழ் மக்களுக்கு உண்டா? ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் ஐக்கியம் நிரூபிக்கப்பட்டால்,அது அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்லப்படும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு பொதுநிலைப்பாட்டின் கீழ் ஒன்று திரட்டப்பட்டால், தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகம் பிறக்கும்; உத்வேகம் பிறக்கும். இது தமிழரசியலில் ஒரு புதிய ரத்தச் சுற்றோட்டத்தை ஏற்படுத்தும். கடந்த பல தசாப்தங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கும் ஓர் உண்மை எதுவென்றால், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வாக்களிப்பு அலை தோன்றும் போதுதான் அதிகப்படியான ஆசனங்கள் கிடைக்கின்றன.தமிழ் வாக்களிப்பு அலை எனப்படுவது அதன் பிரயோக அர்த்தத்தில் தமிழ்த் தேசிய அலைதான். தமிழ்த் தேசிய அலை என்பது அதை வேறு வார்த்தைகளில் சொன்னால் தமிழ் ஐக்கியம் தான். தேசியவாத அரசியல் எனப்படுவது அது எந்த தேசியவாதமாக இருந்தாலும், ஐக்கியம்தான்.எவ்வாறெனில்,தேசியவாத கட்சி அரசியல் எனப்படுவது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது.அதாவது ஆகக்கூடிய பெரும் திரளாக திரட்டுவது.அதை தேர்தல் வார்த்தைகளில் சொன்னால், வாக்காளர்களை ஆகக்கூடியபட்சம் திரட்டுவது.எனவே தமிழ்த்தேசிய வாக்களிப்பு அலை எனப்படுவது தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஐக்கியப் படுத்துவதுதான். அந்த அடிப்படையில்தான் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் சிந்திக்கப்படுகிறது.கடந்த திங்கட்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் எழுதப்பட்ட உடன்படிக்கையில் 7கட்சிகள் கையெழுத்திட்டன.உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி முடிவெடுக்க முடியாதபடி இரண்டாக நிற்கின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளரைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு அணிகள் உண்டு.சிறீதரன் அணி பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. சுமந்திரன் அணி எதிர்க்கின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட காணொளி ஊடகம் ஒன்று மாவை சேனாதிராஜாவை நேர்கண்ட பொழுது,அவர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகப் பதில் சொல்லியிருக்கிறார்.தமிழ்ப் பொது வேட்பாளரை நியாயப்படுத்தும் பொழுது, அவர் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டியுமிருக்கிறார்.மக்களிடம் ஆணை பெறுவது என்பதை விடவும்,மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும்; கட்சிகளை ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற பொருளில் அவருடைய பதில் அமைந்திருந்தது.மாவை சேனாதிராஜாதான் இப்பொழுதும் கட்சியின் தலைவர். எனவே அவருடைய கருத்துக்கு இங்கு அதிகம் முக்கியத்துவம் உண்டு. அது தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் சிறீதரன் அணியைப் பலப்படுத்தக் கூடியது. இப்பொழுது ஏழு கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கியிருக்கும் பொதுக் கட்டமைப்பானது ஏனைய கட்சிகளுக்காகத் திறக்கப்பட்டிருக்கும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.அதன்மூலம் ஆகக்கூடியபட்ச ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதுதான் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம் என்று கூறப்பட்டிருக்கிறது.இந்த ஐக்கியம் வெற்றி பெறுமாக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் அரசியலை அது புதிய வழியில் செலுத்துமா? https://athavannews.com/2024/1393877
  4. சம்பந்தனுக்கு, அஞ்சலி செலுத்தப் போகாதவர்கள்... கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவிற்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றார்கள். இதிலிருந்து.... சம்பந்தன் தமிழ் மக்களுக்கு, ஒரு உதவாக்கரை வெத்து வேட்டு என்று தெரிகின்றது.
  5. சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தப் போகாதவர்கள்... கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவிற்கு அஞ்சலி செலுத்தி இருக்கின்றார்கள். இதிலிருந்து கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கின்றார் என அறியலாம்.
  6. ட்ரம்ப் மீது... துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னணியில் ஈரான் இருக்குது என்று, CNN செய்தித்தளம் ஒரு செய்தியை கசிய விட்டுப் பார்த்தது. அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்றவுடன்... தனது சுருதியை மாற்றி விட்டது. 😂 நடு நிலையான செய்திகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் ஊடகங்கள் மிக அரிது. எல்லாம்... பணத்தை வாங்கிக் கொண்டு "ஜால்ரா" போடும் கூட்டங்கள்.
  7. சமைத்த நண்டை.. மணந்து பார்த்தாலும் போட்ட சரக்குத்தூளின் வாசனை தெரியும். 😂 சமைக்காத உயிர் நண்டை, ஏன் மணந்து பார்த்தவர் என்றுதான் தெரியவில்லை. 🤣
  8. செய்தியை... இணைக்கும் அவசரத்தில், நான் இதனை உற்றுக் கவனிக்கவில்லை. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி கந்தையா அண்ணை. 🙂 ஆதவன் செய்தி இணையம் விட்ட பிழையை... @Kapithan, @பெருமாள், @ரசோதரன் ஆகியோரின் காதில் போட்டு விட வேண்டும். அவர்களும்... ஆதவனில் பிழை பிடித்து, சந்தோசம் அடைகின்ற ஆட்கள். 🤣
  9. காசா பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்து – திட்டவட்டமாக மறுத்த இஸ்ரேல் பிரதமர். காசா பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ள நிலையில், அதனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்குப் விஜயம் செய்துள்ளார். இஸ்ரேல் பிரதமரின் அமெரிக்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வீதிகளில் ஆயிரக்கணக்கான பலஸ்தீன ஆதரவாளர்கள் திரண்டு அவரது உருவ பொம்மை மற்றும் அமெரிக்கக் கோடியை எரித்து போராட்டம் நடத்தியிருந்ததாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்த பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து காசா போர் குறித்து பேச்சுவார்த்தை நடந்தியுள்ளார். காசா விடயத்தில் அமைதி பேச்சுவார்த்தையை விரும்புவதாக அமெரிக்கா கூறி வந்தாலும் இஸ்ரேலுக்கு அதிகளவில் அமெரிக்கா நிதி வழங்கி வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்களுக்கான சாதக பாதகங்களைக் கணக்கில் வைத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டொனால்ட் ட்ரம்பையும் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், காசா பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருமாறு இஸ்ரேல் பிரதமரிடம், டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாகவும் ஆனால் அதனை இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393863
  10. சிங்கள மக்கள் மத்தியில்... பெரிய செல்வாக்குடன், இருந்த மொட்டுக் கட்சியை இறங்கு முகத்திற்கு அனுப்பிய பெருமை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவையே சேரும். அவருடன்... இருந்த, அல்லக்கைகளின் சொல்லைக் கேட்டு... நடந்ததால் வந்த வினை. அரசியலில் அனுபவம் இல்லாத ஒருவரை.. உயர்ந்த பதவியில் இருத்தி, சொந்தச் செலவிலேயே... தமக்கு, சூனியம் வைத்து விட்டார்கள். 😂
  11. உங்களுடைய அப்பா கண்டிப்பானவர் என்று முன்பு கூறிய ஞாபகம். அப்படி இருந்தும்… சுழித்துக் கொண்டு காதலித்து ஜெயித்து உள்ளீர்கள். 🥰
  12. 74 தமிழ் நாட்டு மீனவர்களா ….. ? உள்ளூர் ஆட்களை விட.. இவர்கள் அதிகம் சிறையில் உள்ளார்கள் போலுள்ளது. 🤣
  13. எங்கள் காலத்திலேயே… காதலிப்பது என்றால் “தில்” வேண்டும். அந்தக் காலத்தில்… பெரும்பாலான காதல்களை பெற்றோர் அங்கீகரிப்பதில்லை. ஒருவர் காதலிப்பது ஊருக்குத் தெரிந்தால் அது பேசு பொருளாக பலராலும் குசுகுசுப்பாக கதைக்கப் படும். சில இடங்களில் பொறாமை பிடித்தவர்கள் காதலர்கள் இருக்கும் தெருவில் உள்ள மதில்களில்… கரிகட்டியால் காதலர்களின் பெயரை எழுதி வம்பில் மாட்டி விடுவதும் உண்டு. 😂 கரிக்கட்டியால்…. கருகிய காதல்கள் ஏராளம். 🤣 இப்போ… அது சாதாரண விடயமாக மாறியதும், எங்கள் கண் முன்னால் நடந்த ஒரு பெரிய மாற்றம்தான். 😁
  14. பெற்றோர் பேச்சுத் தட்டாத பிள்ளை என்பதனை விட… காதலில் ஈடுபடும் விசயம் அப்பாவுக்குத் தெரிந்தால், அடி பின்னி எடுத்து… கையை, காலை முறித்து விடுவார். மாலை 6 மணிக்குள் வீட்டிற்கு வந்து விட வேண்டும். பிந்தினால்… அதுக்கும் காரணம் சொல்ல வேண்டும் என்று நிறைய கட்டுப் பாடுகள். 😂 வேறொருவனின் காதலுக்கு தூது போய்… பெண் பகுதி வீட்டிற்கு சொல்லி அடி விழுந்த சம்பவமும் நடந்திருக்கு. 🤣
  15. எனக்கும் காதலுக்கும் வெகுதூரம் சாத்தான். நண்பர்கள் வட்டத்தில் நிறைய காதல் சமாச்சாரங்கள் இருந்தது. அதுகளை பார்த்த, அனுபவம்தான்.
  16. கமலா ஹரிசின்… இந்தியாவில் உள்ள மூதாதையர்கள் ஐயங்கார் என நினைக்கின்றேன்.
  17. பையா.... சின்ன விஷயங்களுக்கும் வாழை தூக்கும் இப்போதைய சமுதாயத்தை நினைக்க எரிச்சல் தான் வருகின்றது. சிங்கள, முஸ்லீம்களில் இப்படியான செய்திகளை கேள்விப்படுபடுவது அரிது. தமிழ் மக்களின் சனத்தொகையை குறைக்க இதற்குப் பின் பொலிஸ், இராணுவம் போன்றவை மறைமுக ஊக்கம் கொடுக்கின்றார்கள் போலுள்ளது.
  18. பண்டி இறைச்சி பொரிக்கும்... கமலா ஹாரிஸ். 😂 இந்திய மக்களுக்கு... இந்தப் படத்தை காட்டிப் போடாதேங்கோ. பாவங்கள்... நொந்து போடுவாங்கள். 🤣
  19. மாரடைப்பு வராமல் தடுக்க மூன்று வழிகள். 😂 🤣
  20. இந்தியாவுக்கு... இப்ப சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகவேண்டிய தேவை உள்ளது போலுள்ளது. அதுதான்... றோவின் கணக்கெடுப்பு அறிக்கை என்று, சைகை காட்டுகின்றார்கள். தங்கடை நாட்டு அலுவலை பார்க்கிறதை விட்டுட்டு... மற்றவனின் நாட்டுக்குள் தலையை ஓட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.
  21. உலக வரலாற்றில் முதன் முதலில் ஜனாதிபதி தேர்தலில் AI தொழில்நுட்பம் – AKD இணையதளம் AKD இணையதளம் (akd.lk), தேசிய மக்கள் சக்தியின் கொள்கை நிலையம் மற்றும் தேர்தல் அவதானிப்பு நிலையம் ஆகியன மெய்நிகர் உண்மை அனுபவத்தின் (virtual reality experience) ஊடாக உத்தியோகபூர்வமாக இன்று (27) பிற்பகல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. உலகில் ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளரொருவர் தனது கொள்கையை மக்கள் மயப்படுத்துவதற்காக AI ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அத்துடன், ஆசியாவில் அரசியல் தலைவரொருவர் தனது கொள்கையை முன்வைப்பதற்காக AI தொழினுட்பத்தை பயன்படுத்திய முதல் சந்தர்ப்பமும் இதுவாகும். நாட்டின் பிரஜைகளுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் AKD இணையதளத்தில் தமக்கிருக்கும் சந்தேகங்களை கேட்டு அறிந்துகொள்வதற்கான AI Chat Bot உம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த தளத்தின் விசேட அம்சமாகும். தேசிய மக்கள் சக்தியின் கொள்கை நிலையமானது கொள்கை உருவாக்கத்திற்காக பிரஜைகளுக்கு பன்முக அணுகுமுறையை பெற்றுக்கொடுப்பதோடு, தேர்தல் அவதானிப்பு நிலையம் தேர்தல் செயன்முறைக்குள் இடம்பெறக்கூடிய அத்துமீறல்கள் தொடர்பாக முறையிடுவதற்கும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும் பிரஜைகளுக்கு திறந்த களத்தை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393821
  22. சுமந்திரன் பயணித்த வாகனம் விபத்து. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டை பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சுமந்திரனின் சொகுசு வாகனம் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. https://athavannews.com/2024/1393818

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.